Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காரசரமான இலங்கை தொடர்பான ஆய்வு

Featured Replies

தமிழக்த்தில் உள்ள பிரபலமான மக்கள் தொலைக்காட்சி இல்ங்கைதமிழர் தொடர்பாக தமது விசேட கவனத்தை செலுத்துவது வழமை

அந்த வகையில் சில புத்திஜீவிகளுடன் தமிழீழம் சாத்தியமா ? அல்லது இல்லையா என ஒரு ஆய்வை செய்துள்ளது அதை இங்கே காணொளியில் தருகின்றோம் இங்கே அவை ஐந்து பகுதிகளாக இணைக்கப்பட்டுள்ளன. தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்ப்பது நீங்கள்.

http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54

பல தொல்லைக்காட்சிகள் வருது மக்கள் தொலைக்காட்சியில் இருந்து ஒரு சில நிகழ்சிகளைத்தன்னும் கொண்டுவாரார்கள் இல்லையே.

தமிழ் தேசியம் அது இது என்று கோசம் போடுபவர்கள் இந்த விடயத்தில் ஏன் கவனம் செலுத்துவது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் மக்கள் தொலைக்காட்சியை வக்தா மூலம்; நேரடியாக ஒளிபரப்ப முயற்சிசெய்கிறோம். உங்கள் ஒத்துளைப்பு இஐந்தால் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பல தொல்லைக்காட்சிகள் வருது மக்கள் தொலைக்காட்சியில் இருந்து ஒரு சில நிகழ்சிகளைத்தன்னும் கொண்டுவாரார்கள் இல்லையே.

தமிழ் தேசியம் அது இது என்று கோசம் போடுபவர்கள் இந்த விடயத்தில் ஏன் கவனம் செலுத்துவது இல்லை.

உங்களைப் போலவே நானும் பல காலமாக ஆதங்கப்பட்டுள்ளேன். ஆனால் இறுதியில் ஆராய்ந்து பார்த்த போது தமிழ் தேசியம் என்பதை பலர் தங்களின் வியாபாரத்துக்காகப் பயன்படுத்துகின்றனரே தவிர அதில் அவர்களிடம் பற்றுறுதியோ.. நீதியான செயற்பாடோ இல்லை என்பதை அறிந்து கொண்டு இவர்களிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்துவது வீண் என்று தீர்மானித்துவிட்டேன்..!

இந்தத் தொலைக்காட்சிகள் எதனையும் நான் கிரமமாகப் பார்ப்பதில்லை. அல்ஜசீராவை பார்க்கலாம்.. இவர்களை பார்க்கிற நேரத்திற்கு. 1000 மக்கள் இறந்த போதும்.. சினிமாப் படம் போட்டுக் குதூகலிக்கும் தொலைக்காட்சிகளே செய்திகளில் ஒரு 30 நிமிசத்துக்கு ஒப்பாரி வைக்கின்றன. சனல் 4 காரன் பூந்து போய் செய்தி கொண்டு வந்து போடுறான்.. வெட்டி வீரம் காட்டும் எங்கட செய்தியாளர்கள்.. தொலைக்காட்சிகள்.. சொந்த மக்கள் வாழும் இடத்திலிருந்து தகவலை ஆதாரத்துடன் கொண்டு வர முயல்வதும் இல்லை. முடிவதும் இல்லை. அப்படி இருக்கு இவர்களின் தமிழ் தேசியமும்.. அதன் மீதான பற்றும்..! மக்களின் இறப்புக்கு அஞ்சலி செய்யக் கூட மனசில்ல..! இவங்க.. எல்லாம் ஈழத்தமிழங்கள்..! இவங்க போய் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை திட்டுறதுதான் வினோதமாக இருக்கிறது.! :(:lol:

Edited by nedukkalapoovan

மக்கள் நலன் பேணும்ஊடகம் என்பது, தன் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த கருத்துருவாக்கதத்திற்கு திட்டமிட்டு செயற்படவேண்டும். ஆனால் எமது ஊடகங்கள் வெற்றி என்றால் வெற்றிக்கூச்சல் போடுவது, துக்கம் என்றால் ஒப்பாரி வைப்பதுதான் தமது தேசியக்கடமை என அறிவு கெட்டதனமாக செயல்படுகின்றார்கள்.

மக்கள் உணர்வுள்ள மக்களாகத்தான் இருக்கின்றார்கள். மக்களிடம் உள்ள பலயீனத்தை பாவித்து எமது ஊடகங்கள் தப்பித்துக்கொள்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழரின் ஏகோபத்திய குரலாக ஒளிக்க விரும்பும் ஊடகங்கள் உங்கள் தொடர்நாடக நிகழ்ச்சி நேரத்திற்கும் மற்றும் குத்தியாட்ட நிகழ்ச்சி நேரத்திற்கும் பதிலாக இப்படியான நல்ல முன்னுதாரண நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாமே.

ஏனெனில் இங்கே எல்லாம் கட்டணதொலைக்காட்சிகள்தான்.

அப்படியிருக்கும் போது ஒருசில தொலைக்காட்சிகளினது எம்மவர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்யலாம்தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.