Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹர்பஜன் சிங் உறவினர் ஆஸ்திரேலியாவில் கொலை - ஒரு மாதத்தில் இந்திய மாணவர்கள் மீது 20 தாக்குதல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் மாணவர்கள் மீது கடந்த சிலவாரங்களாக இனவெறி தாக்குதல் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு கல்வி கற்க சென்ற பஞ்சாப் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் உப்கார்சிங் பப்பால் (வயது 26). இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கின் உறவினர்.

கடந்த 2004 ம் ஆண்டு விருந்தோம்பல் குறித்த நிர்வாகவியல் கல்வி பயில ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு சென்றார். கடந்த 7 ந் தேதி இவர் மெல்பர்னில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீ சார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

ஆனால் தங்களது மகன் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று அவரது பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். இனவெறி காரணமாக டாக்சி டிரைவர் ஒருவர் உப்கார்சிங் பப்பாலை அடித்துக் கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியுள்ளார் என்று அவரது தந்தை அஜித்சிங் கூறியுள்ளார்.

நன்றி நக்கீரன் .

தொடர்புடைய செய்திகள் ........

ஆஸ்திரேலியா: ஒரு மாதத்தில் இந்திய மாணவர்கள் மீது 20 தாக்குதல்கள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக, இந்திய மாணவர்கள் பாதுகாப்பு கமிட்டியின் தலைவரும், இருதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் யாது சிங் தெரிவித்துள்ளார்.

மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கடந்த 4 ஆண்டுகளாகவே இனவெறி தாக்குதல் நடைபெற்று வருகிறது. தாக்குதல்கள் எதுவுமே திட்டமிட்டு நடைபெறுவதில்லை. எனினும், இந்தியர்கள் தான் அவர்களுடைய இலக்காக இருக்கிறது. இந்திய மாணவர்கள் தான், நள்ளிரவு நேரங்களில் தனியாக வீடு திரும்புகின்றனர். எனவே, அவர்களை தாக்குவது எளிதாக இருப்பதாக தெரிகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய மாணவர்களுக்கு எதிராக 20 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஓராண்டில், சுமார் 100 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

********

ஆஸ்திரேலியா: இந்திய மாணவர்கள் சங்கம் பேரணி

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆஸ்திரேலிய வாழ் இந்திய மாணவர்கள் சங்கம் பிரமாண்டமான பேரணி நடத்தினர்.

இந்த மே மாதத்தில் மட்டும் 5 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பயங்கரமாகத் தாக்கப்பட்டுள்ளனர், இதில் 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் இனி இந்திய மாணவர்கள் வர வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவர் பல்ஜிந்தர் சிங் தாழ்மையான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், தனக்கு ஆஸி., பல்கலைக்கழகம் அளிக்கவிருந்த டாக்டர் பட்டத்தை இந்த காரணத்தினால் நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆஸ்திரேலியா வாழ் இந்திய மாணவர்கள் மெர்போர்னில் உள்ள விக்டோரியன் பார்லிமென்டில் இருந்து அமைதி பேரணி நடத்தினர். ஆஸ்திரேலிய அரசுக்கு எதிரான சுலோகங்களை கூறிக் கொண்டு இந்தியர்கள் அமைதி பேரணியில் ஈடுபட்டனர்.

********

இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்: பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப பா.ஜ. முடிவு

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல் குறித்து பாராளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பப் போவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்,

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது இனவெறி கும்பல் நடத்திய இனவெறி தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இது மிகவும் சீரியசான விஷயம். இத்தாக்குதல் அனைவருக்கும் கவலை அளிக்கிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மனதில் அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இத்தகைய தாக்குதல்கள் குறித்து விசாரிக்க, வெளியுறவு அமைச்சகத்தில் தனிப்பிரிவு அமைக்க வேண்டும். இது இனவெறியுடன் நடத்தப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என்று விசாரிக்க வேண்டும். இந்த நடவடிக்கை மூலம், இந்திய மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான சூழ்நிலை உருவாகும். இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, இந்திய அரசின் கடமை.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கூட, இத்தகைய இனவெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனவெறி மனோபாவம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அவற்றை இந்திய மாணவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும்போது, இந்திய மாணவர்கள் மீதான இனவெறி தாக்குதல் பற்றி பிரச்சினை எழுப்புவோம்.

பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறும். அதில், கட்சியின் மக்களவை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மேலும், டெல்லி மேல் சபை துணைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றியும் விவாதிக்கப்படும் என்றார்.

********

ஆஸ்திரேலியாவுக்கு நடிகர் அபிதாப்பச்சன் கண்டனம்

ஆஸ்திரேலிய நாடான குயின்லாந்து அரசு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் திரைஉலக சேவைக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமிதாப், ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் இந்த டாக்டர் பட்டத்தை ஏற்க தான் விரும்பவில்லை எனவும், இந்திய மாணவர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலை தடுக்க ஆஸ்திரேலிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

’இது என் கண்டனம் ’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

********

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சொறி நாய்யல எங்கை இருந்தாளும் செருப்பால அடிச்சு கலைக்கனும் ..

  • கருத்துக்கள உறவுகள்

:o:o:o அவுஸ்ரேலியாவில அதுவும் நம்ம இந்திய சகோதரர்கள் மீது தாக்குதலா? ஒருவர் பலி? 20க்கு மேற்ப்பட்ட தாக்குதல்கள் நடந்திருக்கா? அட நம்பவே முடியல்ல? அண்மைக்காலமாக ஏன் இந்த நூற்றாண்டில் நடந்த மிக்க பெரிய கொடூரமய்ய இது, தட்டி கேட்க எவருமே இல்லையா??

வன்மையாக கண்டிக்கிறேன், புலம்பெயர் தமிழர்கள், குறிப்பாக சிட்னி தமிழர்கள் இவர்களூக்காக குரல் குடுக்கவேண்டும். :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என கங்காரு படை அறிவித்துள்ளது. :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000 கணக்கில் மற்றைய நாடுகளில் இந்தியர் கொல்லப்பட்டால் ஈழவர் பட்ட துன்பத்தை இந்திய அரசு உணருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிடா அடி

இதைசாக்காக வைத்து நம்மவரும் ஏதும் செய்யலாமே.... :lol: இருட்டடி கொடுக்கலாமே :(:D

இந்தியனையும் (தமிழைவிடுக) சீனுவாவையும் கண்டால் இழுத்துசாத்தத்தான் ஆத்திரம்வருது இப்ப... :lol::(

Edited by Netfriend

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக அவுஸ்த்திரேலிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்பேணில் "இந்திய மாணவர்களுக்கெதிரான தாக்குதல்கள்" என்ற செய்தியை பலரும் கேட்டிருப்போம். ஆனால் இந்திய தேசியம் என்ற வட்டத்திற்குள் இருந்து இந்தப் பிரச்சனையை அணுகுவதால்த்தான் இவ்வாறான சம்பவங்கள் இந்தியர்களை மட்டுமே குறிவைத்து நடப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. உண்மையிலேயே இவ்வாறான சம்பவங்கள் எந்தப் பிண்ணணியில் நடக்கின்றன என்று ஆராய்வது மிகவும் அவசியமானதாகும்.

நான் கடந்த 6, 7 ஆண்டுகளாக சிட்னியில் வசித்து வருகிறேன். சிட்னியில் நான் வசிக்கும் வெஸ்ட்மீட் மற்றும் கரீஸ்பாக் போன்ற பகுதிகள் 80 வீதமான இந்தியரைக் கொண்டவை. மேலும் இன்றுவரை, இந்தியாவிலிருந்து வந்து குடியேறும் அனைத்து இந்தியர்களுமே இந்த இரு பகுதிகளையும் குறிவைத்தே வருகின்றனர். முன்னர், பல்லினத்தவரையும் கொண்ட நகர்களாகக் காட்சியளித்த இந்த இரு பகுதிகளும் இன்று கிட்டத்தட்ட முழு இந்திய குடியேற்றங்களாக மாறி வருகின்றன. இப்பகுதியில் முன்னர் குடியிருந்த வெள்ளையர், சீனர், இத்தாலி நாட்டுக்காரர், இலங்கையின் தமிழீழப் பகுதிகளைச் சேர்ந்த தமிழர் போன்றவர்கள் சிறிது சிறிதாக இப்பகுதிகளை விட்டு வெளியேறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான பிண்ணனியிலேயே இந்தத் தாக்குதல்கள் பற்றி நாம் ஆராய வேண்டும்.

முதலாவதாக, இன்றைய பொருளாதார தேக்க நிலையில் அவுஸ்த்திரேலியாவின் வேலை வாய்ப்பிண்மை 4 % இலிருந்து சடுதியாக 8% ஆக அதிகரித்திருக்கிறது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்று வேலையிழந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றன. பல தொழிலதிபர்கள் தமது செலவினைக் குறைக்கும் முகமாக பல தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்கின்றனர். அவ்வாறான இடங்களுக்கு பகுதிநேர தொழிலாளர்கள் என்ற பெயரில் இந்திய மாணவர்களை அமர்த்த இந்த தொழில் அதிபர்கள் விரும்புகின்றனர். சராசரியாக 22 டால மணித்தியாலத்துக்கு கொடுக்க வேண்டிய இடத்தில் வெறும் 7 அல்லது 8 டாலருக்கு இந்திய மாணவர்கள் வேலை செய்ய விரும்புவதால் இவ்வாறான வேலை வாய்ப்பிண்மை அதிகரித்துக்கொண்டு போகிறது. இங்கு பலர் வாதாடலாம், இந்திய மாணவர்கள் மட்டும்தானா இங்கு வருகிறார்கள் என்று, உண்மையிலேயே இன்றைய நிலவரப்படி படிக்கவென்று அவுஸ்த்திரேலியாவை நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களில் 90 வீதமானவர்கள் வட இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என்பது புள்ளிவிபரப்படி உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவுஸ்த்திரேலிய அரசு மீது பல சமூக வியல் அமைப்புகள் இவ்வாறான வீசா அனுமதிகளைக் குறைக்குமாறும், முழுவதுமாக ரத்துச் செய்யுமாறும் அழுத்தம் கொடுத்து வருகிறன. இதன் வெளிப்பாடுதான் அண்மையில் அரசு முன்மொழிந்திருக்கும் ""தொழில்சார் வீசாக்களுக்கான கட்டுப்பாடு" என்ற தீர்மானத்தைப் பார்க்கலாம். ஆகவே தமது வேலை வாய்ப்பிண்மைக்குக் காரணம் இந்த வட இந்தியர்கள் தான் என்கிற மனநிலை சாதாரண அவுஸ்த்திரேலியக் குடிமகனிடம் காணப்படுகிறது. ஆகவே இதுவே இந்திய மாண்வர்கள் மீதான தாக்குதலை உக்குவித்திருக்கலாம்.

ரெண்டாவது, இந்தியர்கள் செறிந்துவாழும் நகரங்களில் வீட்டு விலைகளும், வாடகையும் மற்ற இடங்களிலும் பார்க்க மிக அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால், 3 அல்லது 4 பேர் மட்டுமே வசிக்கக் கூடிய இரு அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டில் 8 முதல் 10 வரையான இந்திய மாணவர்கள் வசிப்பது. 300 டாலர் மட்டுமே வாராந்த வாடகையாகச் செலுத்தக் கூடிய இந்த வீடுகளை இந்திய மானவர்கள் 400 டாலருக்கு ஏலம் எடுக்கின்றனர்.இதனால் இங்கு வாழ என்று வரும் குடும்பங்கள் அதிக வாடகை கொடுக்க முடியாமல் திண்டாடுவதையும், வேறு நகர்கள் நோக்கிச் செல்வதையும் காணமுடிகிறது. 8 அல்லது 10 இந்திய மாணவர்களால் போட்டி மூலம் ஏலம் எடுக்கப்படும் இந்த வீட்டு வாடகையை இவர்கள் தமக்குள் பகிர்ந்துகொள்வதால் ஒருவருக்கு வெறும் 40 அல்லது 50 டாலர்கள் தான் வாரத்துக்கு செலவாகிறது. இவ்வாறே வீடுகள் வாங்கும்போது நடக்கிறது. ரெண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து ஒரு வீட்டைக் கொள்வனவ்யு செய்வதால் வீடுகளின் விலையும் இப்பகுதிகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இவ்வாறான விலையேற்றங்கள் மற்ற அவுஸ்த்திரேலியர்களை இப்பகுதிகலை விட்டு போகச் செய்வதுடன், அவர்களின் வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இதுவும் ஒரு காரனம் இந்த வட இந்திய மாணவர்கள் மீதான் தாக்குதல்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது வட இந்திய மாணவர்கள் இங்குநடந்து கொள்ளும் விதம் பற்றியது. இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் என்னவென்றால், பொது இடங்களிலோ அல்லது புகையிரதம், பேரூந்து போன்ற மக்கள் அதிகமாக பயணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இந்திய மாணவர்களின் செயல் எவ்வாறான முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிறதென்பது. பொது இடங்களில் கூடும் இந்தியர்கள், குறிப்பாக இந்திய மாணவர்கள் மிகவும் உச்ச தொணியில் தமக்குல் பேசிக்கொள்வதும், தொலைபேசியில் உரையாடுவதுமான நிகழ்வுகள். காலை மற்றும் மாலை நேரங்களில் வெலை நிமித்தம் புகையிரதங்களில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான அவுஸ்த்திரேலியர்கள் தினமும் சந்திக்கும் இந்த "இந்திக் கூச்சல்கள்". நூற்றுக்கணக்கான பயணிகள் அமைதியாக மர்ந்திருக்கும் ஒரு புகையிரதப் பெட்டியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அந்தப் பெட்டி முழுவதற்குமே கேட்குமளவிற்கு உச்ச ஸ்த்தானியில் பேசும் இரு இந்தியர்கள், அல்லது தொலைபேசியில் காதலியுடனோ அல்லது காதலனுடனோ ரசித்து உரையாடும் இந்திய இளைஞர்கள். தம்மைச் சுற்றி எத்தனை பேர் இருக்கிறார்கள், எத்தனை பேருக்கு நாம் சங்கடமாக இருக்கிறோம் என்ற யோசனை கொஞ்சம் கூட இல்லாமல் தனது வீட்டில் இந்தியாவில் இருப்பது போன்ற பிரமையில் தம்மையறியாது கூக்குரலிடும் வட இந்திய மாணவர்கள். இவ்வலவிற்கும் அந்த மாணவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களில்லை. ஆனால் வேண்டுமென்றே தமது வட இந்திய மொழியில் சத்தமாக மற்றவர்கள் முன்னால் சத்தமாகப் பேசுவதை கவுரவமாக நினைப்பதால் இது நடக்கிறது. எவரும் இதைத் தட்டிக் கேட்டாலோ அல்லது சத்தம் போட வேண்டாம் என்று சொன்னாலோ அவரை நோக்கி இரு வாரத்தைகலை வீசிவிட்டு மீண்டும் தமது பேச்சைத் தொடர்வார்கள்.

இதேபோல் தாம் குடியிருக்கும் பகுதிகளில் இரவு வேளைகளில் மதுபோதையில் இவர்கள் அடிக்கும் கும்மாளம். சில வேளைகளில் காலை 2 அல்லது 3 மணிவரை இந்தியில் உச்ச ஸ்த்தானியில் பாடலும், கூச்சல்களும் தொடரும். அவுஸ்த்திரேலியர்கள் மது அருந்துவதென்றால் மதுக்கடைகளுக்கே செல்வது வழமை. எவரும் வீடுகளில் மது அருந்திக்கொண்டு மற்றவர்களைக் குழப்புவதில்லை.இரவு 10 மணிக்குப் பின்னர் எவரும் கூச்சல் போடக்கூடாதென்று ஒரு விதியிருக்கு. அயலவர்கள் பொலீசிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு. அப்படியிருந்தும் இவர்களின் அட்டகாசம் குறைவதில்லை. எனது மாடியினருகிலுள்ள எல்லா வீடுகளிலும் இந்தியர்களே வசிக்கிறார்கள். இரவு நேரங்களில் குறிப்பாக வெள்ளி மற்று வார விடுமுறை நாட்களில் இந்தப் பிரதேசம் அவுஸ்த்திரேலியாதானா அல்லது இந்தியாவின் மும்பாயா என்கிற சந்தேகம் வந்திவிடும் எனக்கு. இதனால் பலமுறை போலீசார் இங்கு வந்து போவதும் மற்ற இனத்தாருடன் இந்தியர்கள் தர்க்கத்தில் ஈடுபடுவது இங்கு சர்வ சாதாரணம். இந்திய தேசியவாதத்துக்குள் இருந்து பார்க்குமொருவருக்கு இவர்கள் இங்கே செய்யும் செயல்கள் கண்ணுக்குத் தெரியாது. ஏதோ அப்பாவிகளை இனவாதிகள் அடிப்பதாகத்தான் நினைத்து விடுகிறார்கள்.

நான்காவது, வேலை செய்யுமிடங்களில் அவர்கள் நடந்துகொள்ளும் விதம். எங்கு ரெண்டு இந்தியர்கள் கூடிவிடுகிறார்களோ அங்கு உடனேயே கிந்தியில் சத்தமாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள். தம்மைச் சுற்றி அந்த அலுவலகத்தில் கிந்தி தெரியாத மற்ற மொழிக்காரர்களும் இருக்கிறார்களே என்கிற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல் இவர்கள் தம்பாட்டிற்கு சத்தமாக பெசுவார்கள். இதனால் இவர்களுடன் ஒரே மேசையிலிருந்தோ அல்லது ஒரே அறையிலிருந்தோ வேலைபார்க்கும் வேற்று மொழிக்காரர் சங்கடப்பட்டு நெழிவதும், என்ன பேசுகிறார்கள் என்று தெரியாமல் முளிப்பதும் இங்கு சர்வ சாதாரனம். எவரும் தட்டிக்கேட்டால், "எமக்கு கிந்தியில் ம்பேசுவதுதான் சுலபம், ஆகவே நீங்கள் வேண்டுமான நாங்கள் பேசி முடியும்வரை வெளியே இருந்து விட்டு வாருங்கள்" என்று மிக அலட்சியமாகச் சொல்லி விடுகிறார்கள். "இங்கு பல இந்தி பேசும் இந்தியர்கள் இருக்கிறார்கள், ஏன் நீங்களும் இந்தி கற்கக் கூடாது" என்று என்னிடம் அடிக்கடி இவர்கள் கேட்பதுண்டு. பலமுறை இதனால் என்னுடன் இவர்கள் தர்க்கித்திருக்கிறார்கள். அவுஸ்த்திரேலியர்களும் சில வேளைகளில் இவர்களது தொல்லை தாங்க முடியாது இவர்களுடன் தர்கிப்பார்கள். அப்போதெல்லாம்" இந்த நாடு சரியில்லை, இங்கிருக்க எமக்குப் பிடிக்கவில்லை, உங்கள் கலாச்சாரம் கேவலமானது" என்று அவுஸ்திரேலியர்களிடம் ஆவேசமாக இவர்கள் கூறும்போது "அப்படியானால் உங்கள் நாட்டிற்குச் சென்று வாழ்வதுதானே? எதற்கு எங்கள் வரிப்பணத்தில் இருந்துகொண்டு எங்களைச் சாகடிக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு அவுஸ்த்திரேலியர்கள் சொல்வதையும் பலமுறை கண்டிருக்கிறேன். இங்கிருக்கும்வரை உழைக்க முடியுமானதை உழைத்துவிட்டு இறுதியில் உங்களுக்கு நாகரீகம் தெரியாது, உங்கள் கலாச்சாரத்தில் வாழ எங்கலுக்குப் பிடிக்கவில்லை என்று கூறிவரும் இந்தியர்களை வெள்ளைக்காரர்கள் எதிர்க்கிறார்கள். இந்தியா தரமான நாடென்றால் அங்கேயே இருந்திருக்க வேண்டியதுதானே, எதற்கு இங்கே வந்தீர்கள் என்று அவர்கள் கேட்கும் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.

இறுதியாக, மெல்பேணில் அண்மையில் ஒரு இந்தியர் தாக்கப்பட்டது அவர் இந்தியர் என்பதற்காக அல்ல. மாறாக இனவெறி பிடித்த சிங்களவர் கூட்டமொன்று வழியில் செல்லும் திராவிடர் போன்ற தோற்றமளித்த வட இந்தியரைத் தமிழர் என்று நினைத்து விட்டதனால்த்தான். அடி வாங்கி முடியும் தறுவாயில், அடித்தவர்களில் ஒருவர் "நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்" என்று கேட்கும்போது தான் வட இந்தியர் என்று சொல்லியதால் அவரை விட்டார்கள். ஆனால் இதையும் வெள்ளைக்காரர் செய்ததாக பலர் காட்ட முனைதது வெதனைக்குரியது.

இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் என கங்காரு படை அறிவித்துள்ளது.

கங்காரு படையொட எங்கட சங்கிலியன் படையும் கூட்டணி வைத்து இந்த பொரம்போக்கு பரதேசிகளை ஒரு வாங்கு வாங்கலாமே...அப்படியே முடிஞ்சா எங்கட விஜயன் துட்டகைமுனு பரம்பரையினருக்கும் ஒரு போடு போடவும். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

1000 கணக்கில் மற்றைய நாடுகளில் இந்தியர் கொல்லப்பட்டால் ஈழவர் பட்ட துன்பத்தை இந்திய அரசு உணருமா?

இந்திய அரசு என்பது இத்தாலிய அரசுதானே..! அதனால் உணர மாட்டார்கள்..! தமிழனுக்கு எப்பிடி பாதுகாப்பு இல்லையோ அதேமாதிரி வட இந்தியனும் நடுரோட்டில் நிற்க வேண்டி வரலாம்..!

நாங்கள் செய்யவேண்டியதை அவுஸ்ரேலிய கங்காறு படை செய்யுது

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.