Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்கா இராணுவத்திற்கு பிரித்தானியா விற்பனை செய்த ஆயுதங்களும் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவியது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் உபயோகப்படுத்துவதற்கு பலமில்லியன் பவுண்கள் பெறுமதியான ஆயுததளபாடங்களை வழங்கியுள்ளது.

பிரித்தானியா 13.6 மில்லியன் பவுண்கள் பெறுமதியான வர்த்தக ஆயுத விற்பனையில் கனரக வாகனங்கள் உட்பட பல ஆயுததளபாடங்கள், இயந்திரத்துப்பாக்கிகுரிய உபகரணங்கள், தானியங்கிய கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கியுள்ளதாகவும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை செலவாக்கியா 1.1 மில்லியன் பெறுமதியான 10 000 றொக்கட்டுகளை வழங்கியுள்ளதாகவும் பல்கொரியா 1.75 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி மற்றும் அதற்குரிய மருந்துப்பொருட்கள் ஆகியவனவும் வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அலுவலக ஆவணங்கள் மூலம்தெரியவந்தள்ளது.

இவ் ஆயுதவிற்பனையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதை வேறுபடுத்தி அறியமுடியாதுள்ளதாகவும் சிலவாக்கிய மட்டுமே தாம் றொக்கட்களை வழங்கியதை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐநாவின் அலுவலர்களினால் அண்ணளவாக 20000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள சிறீலங்காவின் 26 வருட யுத்தத்தில் கடைசி ஐந்து மாதங்களிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டுள்ளனவா என கேள்விகள் எழும்பியுள்ளன.

வெளிவிவாகாரசிறப்புக்குழுவி

பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில் இன்று (June 2, 2009 ): பிரித்தானியா இலங்கைக்கு £13.6 மில்லியனுக்கு ராணவ ஆயுதத் தளபாடங்களை விற்பனை செய்ததாக The Times செய்தி விளியிட்டுள்ளது.

தயவு செய்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

The Times

  • கருத்துக்கள உறவுகள்

போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான புதிய வழிமுறையை வல்லாதிக்க உலகமும் ஆதிக்க சக்திகளும் இணைந்து பரீட்சித்துப் பார்த்ததன் விளைவே எமது போராட்டத்தின் துர்ப்பாக்கிய முடிவு. நாம் தந்திரமாக இந்த நகர்வில் இருந்து விலகி இருந்திருக்க வேண்டும். புலிகள் அதற்காக முயன்றும் சிக்க வைக்கப்பட்டு விட்டனர். எனினும் எம்மிடம் இன்னும் இந்தச் சக்திகளை எதிர்க்கக் கூடிய பல வழிமுறைகள் இருக்கின்றன. அது ஆயுத ரீதியற்ற வழிமுறையாக அமையவதே சிறப்பு.

தமிழர்கள் மீது பிரயோகிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்ட அதே உக்தி இப்போ பாகிஸ்தானில் நடைமுறையில் இருக்கிறது. அங்கும் மக்களை இடம்பெயர வைத்து முகாம்களில் அடைத்து வைத்து தலிபானை அழிக்கின்றோம் என்று ஒரு கூட்டம் சகட்டு மேனிக்கு மனித உரிமைகளை மீறி வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகள் வலுவாக இருந்து செயற்பட்டு வருகின்றன.

மேற்குலகின் வல்லாதிக்க நலன்களுக்கு பாதகமாக இருக்கக் கூடிய போராட்டங்களை நசுக்குவதே அவர்களின் இன்றைய நிலைப்பாடு. அதனை நாம் எந்த வகையிலும் தடுத்திருக்க முடியாது. ஆனால் நிச்சயம் வல்லாதிக்க சக்திகளின் நலங்களை நோக்கிய இந்த நகர்வுகள் தோற்பது உறுதி.. என்று மட்டும் சொல்லலாம். காலம் அதற்கான பதிலை உலகிற்கு அளிக்கும்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நாம் கேட்பது "எய்தவன் இருக்க அம்பை நோகும்" கதைதான். சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்காக குரல்வழை இறுக்குப்பட்டுவரும் இந்நிலையில் தன்மேல் போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பகிர்ந்தளிக்கும் யுத்தியுடன் செயற்பட்டு அதன் வலிமையைக்குறைக்கும் முயற்சிகளில் அரச பிரச்சார இயந்திரங்களும் அதன் ஊடகங்களும் இறங்கிவிட்டன.

LONDON, June 2 (UPI) -- Britain and other European Union nations sold military equipment to Sri Lanka in the last years of its war against Tamil rebels, documents indicate.

The sales, including $22 million worth of armored vehicles, machine gun parts and semiautomatic pistols from Britain, raise questions of whether the EU-approved weapons were used during the final months of Sri Lanka's war when U.N. officials estimate 20,000 civilians were killed, The Times of London reported.

"I think we need answers about what these were used for," Mike Gapes, a Labor Party member of Parliament who chairs the Commons Foreign Affairs Select Committee told the newspaper.

"The EU had an obligation not to supply these things," added MP Malcolm Bruce, a Liberal Democrat. "There were too many unanswered questions. With hindsight, Britain's sales did violate the EU code of conduct."

The arms sales show the need for the EU to strengthen its code of conduct on such sales to make it consistent and transparent across all 27 member states, several British MPs and members of the European Parliament told The Times.

மூலம் : UPI.com

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரித்தானிய ஆயுதம்?

இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக பிரித்தானிய டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்காக 13.6 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கக் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்திருப்பதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைவிட, ஸ்லோவாக்கியா இலங்கைக்கு 1.1 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான 10,000 ரொக்கட்டுக்களை விற்பனை செய்ததுடன், 1.75 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வழங்க பல்கேரியா அனுமதி வழங்கியிருந்ததாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும், அனுமதியளிக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தமுடியாது போனதாகக் குறிப்பிட்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகை, ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கியதை உறுதிப்படுத்த முடிந்தது எனத் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடந்த ஐந்து மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மோதல்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்தும் டைம்ஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

“இந்த ஆயுதங்கள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு நாம் பதில் வழங்கவேண்டும்” என தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும், பொது வெளிவிவகாரங்களுக்கான தெரிவுக்குழுவின் தலைவரும், ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான மைக் கபேஸ் கூறினார்.

பிரித்தானியாவின் இராஜதந்திரம்

இலங்கையின் வடபகுதியில் அரசாங்கம் முன்னெடுத்துவந்த இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாகப் பலமுயற்சிகளை முன்னெடுத்திருந்தது.

இலங்கையில் மோதல்கள் உக்கிரமடைந்து, பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்தமையைத் தொடர்ந்து மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டுமெனப் பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிரவுண் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அதுமாத்திரமன்றி இலங்கை விடயம் குறித்து ஆராய்ந்து தீர்வொன்றை முன்வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு டெஸ் பிரவுணைத் தனது விசேட பிரதிநிதியாகவும் நியமித்திருந்தார். எனினும், டெஸ் பிரவுணின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவை நேரடியாகத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென வலியுறுத்தி வந்ததுடன், பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சருடன் இணைந்து இலங்கைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தார்.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னரும் மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமெனவே டேவிட் மிலிபான்ட் வலியுறுத்தி வந்தார். எனினும், பிரித்தானியாவின் வேண்டுகோளை செவிமடுக்காத இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து அவர்களைத் தோற்கடித்து மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் அறிவித்தது.

இந்த அறிவிப்பின் பின்னரும் இலங்கைக்கு எதிராக உரிமை மீறல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனப் பிரித்தானியா வலியுறுத்தியது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வொன்றைக் கூட்டியிருந்ததுடன், இலங்கைக்கு எதிரான அறிக்கையொன்றையும் முன்வைத்தது.

இவ்வாறானதொரு நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்குப் பிரித்தானியாவும் ஆயுதங்களை வழங்கியிருப்பதாகப் பிரித்தானிய ஊடகமான டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியானது மோதல்களை நிறுத்த பிரித்தானியா முன்னெடுத்த நடவடிக்கைகளிலும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

-டைம்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.