Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். குடாநாட்டிலும் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி : காரைநகர் கூட்டத்தில் பசில் ராஜபக்ச அறிவிப்பு

வீரகேசரி இணையம் 6/19/2009 4:46:18 PM -

வடபகுதியில் யாழ். குடாநாட்டு கடற்பரப்பிலும் 24 மணி நேரமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கலாம் என்றும் இதுவரையில் மீன்பிடிப்பதற்கு அங்கு அமுலில் இருந்து வந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் தியாகாராஜா மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் மீன்பிடித்துறை அமைச்சின் பிரதி அமைச்சர், மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் பியசேன, சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடபகுதி கடற்படைத் தளபதி, யாழ். மாவட்ட ஆயுதபடைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக்க சமரசிங்க, யாழ். அரச அதிபர் கே.கணேஷ், யாழ். மாவட்ட மீன்பிடித்துறை அதிகாரிகள், வடபகுதி கடற்தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாரத்தில் முழு நாட்களும் 24 மணிநேரமும் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இயந்திரம் இணைக்கப்பட்ட படகுகளில் சென்று மீன்பிடிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த வடபகுதி மீனவர்களுக்குத் தேவையான படகுகள், உபகரணங்கள் என்பவற்றை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் இந்தக் கூட்டத்தி்ல் உறுதியளிக்கப்பட்டிருப்பதாக மீனவர் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறினார்

மண்ணுக்குள்ளே புதைச்சு புதைச்சு அலுத்துட்டுது போல கிடக்கு. இனி, கல்லைக்கட்டி கடலுக்குள்ள போடப் போறாங்கள்.

கொலைவெறி, இனவெறி நாய்கள் எதைச் செய்தாலும் ஏதாவது வில்லங்கமா இருக்கும்.

பார்த்துப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!! :unsure:

டக்கிளஸ் தன்ர பாதுகாப்புக்காக காரைநகரில கொண்டே கூட்டம் வைச்சிருக்கிறான் போலும்.

அங்க நாலு . ஜந்து சனம் தான் இருக்கிண்டு கேள்வி

ஒர் வேளை கனடா ரேடியோ இளையபாரதி யும் போனாரோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை கடல்ல நாங்கள் மீன் பிடிக்கிறதுக்கு இவங்களட்டை அனுமதி வாங்க வேண்டிக்கிடக்கு

இனி என்ன.. ஒட்டி, ஓரா, திரளி, முரல், வெடி முரல், (சிச்சா பெய்யும்) கலவாய், செவ்விளை, வெள்ளை விளை, சூடை, கீரி, கெளுத்தி (முட்டை உள்ளது), நகரை, பால் சுறா, சூவார, பாரை, கட்டா பாரை, அறுக்குளா, கொடுவா, கொய், விரால்,பேய்ச் சால, கொச்சால, வரிக் கீழி, கருந்திரளி, பாலை மீன், கிளி மீன், மணலை,கயல் மீன், அகழி மீன், இறால், சிங்க இறால், கூனி இறால், கணவாய், சாக்கு கணவாய், கடலாமை, நீர்க் காக்கா, நண்டு, பெருங் கால் நண்டு என்பன எல்லாம் அந்த மாதிரி கிடைக்கும்.

சின்னக் கடை, பாசையூர், கொழும்புத் துறை (ஜெட்டி), நாவாந்துறை, பண்ணை, காக்கை தீவு என எல்லா மீன் கடைகளும் வெளுத்து வாங்கும்....

உது கிடைக்கத் தானே நாங்கள் 28,000 போராளிகளையிம் 1.5 இலட்சம் தமிழ் உறவுகளையும் இழந்து போராடினோம்

புலம் பெயர் நாடுகளில் நாம் மேற்சொன்ன மீன்வகை எல்லாம் தின்று விட்டு ஏப்பம் விடும் போது side dish ஆக தமிழீழம் பற்றி கதைப்பதை போல் யாழ் மக்களும் இனி கதைப்பார்கள் போல

Edited by நிழலி

ஆஹா இவ்வளவுவிதமான கடல் உணவுகள் குடாக்கடலில கிடைக்கிதோ? தகவலுக்கு நன்றி நிழலி.

ஏன் ஐயா எல்லாரும் போக்கிரித்தனமாக சிந்தித்து கருத்து எழுதுறீங்கள். உதை வைச்சு வாழ்க்கையில முன்னேறுகிற வழியைப் பாருங்கோ. உந்த கடல் உணவுகளை நீங்கள் இருக்கின்ற வெளிநாடுகளில சந்தைப்படுத்தி காசு பண்ண இயலுமோ என்று பாருங்கோ.

முதலில் இந்த அறிவிப்புக்கள் எல்லாம் எவ்வளவுதூரம் நடைமுறையில் பின்பற்றப்படப் போகின்றன என்று கூறமுடியாது. சும்மா ஆசை காட்டுவதற்கு இப்படி அறிவிப்புக்கள் வெளிவிடப்பட்டு இருக்கலாம். நடுக்கடலில் வைத்து மீனவர்களுடன் சிறீ லங்கா கடற்படை என்னென்ன விதமான கூத்துக்கள் ஆடும் என்று சொல்லமுடியாது.

ஆனால்.. தாயக மீனவர்கள் வாழ்வில் ஓர் விடிவு கிடைப்பது சந்தோசம். தாயக பிரச்சனை காரணமாக அதிக இழப்புக்களை சந்தித்தவர்கள் எங்கள் மீனவர்கள். இவர்கள் இனியாவது நிம்மதியாக தாயக கடலில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளலாம் என்றால் சந்தோசம்.

தாயக மக்களின் அவலங்களை எவர் தீர்த்தாலும்... தாயகத்தில் மக்கள்படும் அவலங்களை குறைப்பதற்கு எவர் இதயசுத்தியுடன் உழைத்தாலும் - அது யாராக இருந்தாலும் அதற்கு எமது ஆதரவு இருக்கின்றது.

ஆஹா இவ்வளவுவிதமான கடல் உணவுகள் குடாக்கடலில கிடைக்கிதோ? தகவலுக்கு நன்றி நிழலி.

உதை வைச்சு வாழ்க்கையில முன்னேறுகிற வழியைப் பாருங்கோ. உந்த கடல் உணவுகளை நீங்கள் இருக்கின்ற வெளிநாடுகளில சந்தைப்படுத்தி காசு பண்ண இயலுமோ என்று பாருங்கோ.

தாயக மக்களின் அவலங்களை எவர் தீர்த்தாலும்... தாயகத்தில் மக்கள்படும் அவலங்களை குறைப்பதற்கு எவர் இதயசுத்தியுடன் உழைத்தாலும் - அது யாராக இருந்தாலும் அதற்கு எமது ஆதரவு இருக்கின்றது.

நடைமுறையில் சாத்தியமா என்று பார்ப்போம்,அப்படி சரி வந்தால் நீங்கள் சொல்வது போல் வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வசதிகளை செய்து கொடுப்போம்,அதற்கு புறநிலை அமைப்பு முலம் சில வசதிகளை செய்வோம்.product of nortern lanka,product of eastern lanka என்ற பெயரில் வர்த்தகம் செய்வோம் எம்மரை நல்ல முதலாளியாக மாற்றுவோம்

நல்லதோர் சிந்தனை. நம்மவர்களின் உந்த புறநிலை அரசு இங்கு இருக்கும் மக்களை சும்மா உசுப்பேத்தாமல் இப்படி தாயகத்தில் உள்ள மக்களின் நலன்களில் அதிக கவனம் எடுத்தால், தாயக மக்களின் அவலங்களை போக்குவதில் அதிக கவனம் எடுத்தால் சந்தோசம்.

ஆனாலும் வணங்காமண்ணையே திருப்பி அனுப்பிய சிறீ லங்கா அரசு இங்கு நம்மவர்கள் ஏற்படுத்தப்போகும் புறநிலை அரசுமூலம் நடைபெறும் விடயங்களை எப்படி அனுமதிக்கும் என்று கூறுவது கடினமாக இருக்கின்றது.

இந்த வகையில் பார்க்கும்போது சில விடயங்களை புறநிலை அரசு செய்யும்போது அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

இந்த வகையில் பார்க்கும்போது சில விடயங்களை புறநிலை அரசு செய்யும்போது அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

அரசு ,தமிழ் போன்ற சொற்பதங்கள் சிங்களத்திற்க்கு கொஞ்சம் கசப்பாய்தான் இருக்கும் அதற்கு ஏற்றால் போல் காய்நகர்த்த வேண்டும்.

மாகாண சபையை மாகாண அரசு என்று சொல்லக்கூடாதாம்.அப்படி சொன்னால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடித்துக் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடு என்பது பழமொழி

ஐரோப்பிய நாடுகளில் நாம் எமது உறவுகளுக்கு சந்தை ஏற்hடுத்திக்கொடுப்பதை கதைத்துக் கொண்டிருக்கும்போதே iரோப்பிய சந்தையின் வலிமைமிக்கவர்கள் எமது வளமான கடலை ஆக்கிரமித்து விடுவார்கள்.

இதை விட்டுட்டு நாம் போய் மீன்பிடிப்போம் எமது கடலில.; இதைப்போல் கௌரவமான தொழில் எதுவுமில்லை கடலில் யாரும் சிறியவன் பெரியவன் பாகுபாடு இல்லை. மற்றவர்களுக்கு கை கட்டிச்சேவகம் செய்யாத தொழில் உழவும் கடற்தொழிலும்தான். எம்மிடம் சேமிப்பிருக்கின்றது. புதியதொழில் நுட்பங்களை பாவிக்கும் திறனைப்பெறும் வசதி இருக்கின்றது. இதைவிட எது வேண்டும். புறப்படுவோம் நாம் மாத்திரமே எமது கடலை மாசுபடாமல் பாதுகாக்கும் திறனுடையோர் காரணம் நாம் மண்ணின் மைந்தர்கள். காரணம் எதுவும் கூறவேணடாம் புறப்படுவோம். புலம்பெயர் தேசத்தில் இருந்து கனவுகள் மட:டுமே காணமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீன்பிடித்தடை நீக்கம் என்ற பகிரங்க அறிவிப்பு களத்தில் செயற்படுத்தப்படும் அளவில் தான் மீனவ மக்களின் வாழ்வாதாரம் வளம் பெறுவதில் செல்வாக்குச் செலுத்தும். அதுமட்டுமன்றி..

கிழக்குக் கரை வடக்குக் கரை எங்கனும் இப்போ மீன்பிடித்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில்.. சிங்கள மீனவர்களை இங்கு அதிகளவில் நவீன மீன்பிடி முறைகளோடு அனுமதிப்பதன் மூலம் சிறீலங்கா அரசு சிங்கள மீனவர்களின் பொருளாதாரத்தையே வளப்படுத்தவும் முயலும். சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிக்கவும் முயலும்.

தமிழ் முஸ்லீம் மீனவர்கள் பாரம்பரிய அல்லது மட்டுப்படுத்திய மீன் பிடி வளங்களோடு பல ஆண்டுகளாக கட்டி வளர்க்கப்பட்ட சிங்கள மீன்பிடி துறையோடு போட்டி போடுவது என்பது இயலாத காரியம்.

வெறும் மீன்பிடித்தடை நீக்கம் தமிழ் முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை போதுமானதல்ல. இவ்வாறான அறிவிப்புக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையே அன்றி மக்களின் வாழ்வாதாரம் கருதி என்று கூறிட முடியாது.

மீனவர்களின் மீன் பிடி வலு நிலையை அதிகரிக்காமல் தடைகளை நீக்கி சிங்கள மீனவர்களை லோறர்கள் மூலம் இப்பிரதேசங்களில் மீன்பிடிக்க அனுமதிப்பது எமது மீன் வளத்தை திருடும் செயலே ஆகும். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்தெடுக்கும் செயலே ஆகும்.

இது தொடர்பில் வடக்கு கிழக்கு அறிவியல் சமூகம்.. மக்களை அரசியல் வாதிகளை விழிப்புணர்வூட்ட வேண்டும். எமது வளத்தை கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. அதுமட்டுமன்றி கட்டுப்பாடற்ற மீன்பிடியை ஊக்குவித்து எமது வளச்சிதைவை ஊக்குவிக்கக் கூடாது. மீன் வளப் பிரச்சனை இன்று உலக அளவில் பேசப்படும் முக்கிய பிரச்சனையாக உள்ள நிலையில் எமது பெறுமதி மிக்க மீன்வளம் வீணடிக்கப்படவோ விரையப்படுத்தப்படவோ அல்லது அதன் sustainability ஐ இழக்க பயன்படுத்தப்படுவதையோ அரசியல் நோக்கங்களுக்காக அனுமதிப்பது மிகுந்த ஆபத்தானதாகும்.

டக்கிளஸ் தேவானந்தா.. முரளிதரன்.. போன்ற அறிவிலிகள்.. இவற்றை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயலலாம். ஆனால் இவ்வாறான அறிவிப்புக்களின் பின்னால் உள்ள ஆபத்துக்களை மக்களுக்கு ஆராய்ந்து சொல்ல வேண்டிய பொறுப்பு வடக்குக் கிழக்கு கல்வி சார் சமூகத்தைச் சார்ந்ததாகும்.

எனியும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல்.. அவர்களின் வெற்றிடத்தை.. நிரப்பும் வகையில் சிங்கள அரசின் ஒவ்வொரு நகர்வுகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அபாயங்களை மக்களுக்கு சரிவர விளக்கி அவற்றில் இருந்து தமிழீழ தேசத்தையும் அதன் வளங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் கல்விசார் சமூகங்கள் எடுக்க முன் வர வேண்டும். :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் மீன் பிடிப்பதற்கும் பயன் நுகர்வதற்கும் மக்கள் வேண்டுமே? முதலில் இடம்பெயர்ந்த மக்களைக் குடியேற்றுவதை விட்டு வி;ட்டு தடையை நீக்கி விட்டோம் என்றால் எமது மக்கள் இனித்தான் படகு வலை என்பவற்றைக் கொள்முதல் செய்து ஆரம்பிக்க வேண்டும். அதுக்குள்ளே அங்குள்ள மீன் வளத்தை எல்லாம் சிங்கள மீனவர்கள் அபகரித்து விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.