Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிக்கைகளின் அரசியல்: இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கத்தின் அவசர வேண்டுகோள்!

Featured Replies

இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்

http://www.tamilseythi.com/tamilnaadu/ilam...2009-06-24.html

தோழமையுடன்,

க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்

உது யாருங்கோ. இன்னொரு வருகை? நான் உட்பட ஓவ்வொருத்தரும் தங்கட ஜனநாயக உரிமைகளை அனுபவிக்கிறீனம். இதனால விதம்விதமாக எழுதித் தள்ளுறீனம். இந்தவகையில நீங்களும் உங்கள் செய்தியை சொல்லி இருக்கிறீங்கள். மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்க ஏற்கனவே மக்களினால் நன்கு அறியப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைமை வாய்திறந்து பேசவேண்டும். அவர்கள் வாய்திறக்காதவரை புதிய வரவுகளின் அறிக்கைகளை - அது கேபியாக இருந்தால் என்ன வெற்றிக்குமரனாக இருந்தால் என்ன சனம் நம்பப்போவது இல்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு பெயரில, ஓவ்வொரு அமைப்பின், ஒவ்வொரு பொறுப்பின் பெயரினை எழுதி அறிக்கைகளை விடுவதால் சனம் இன்னமும் குழம்புவது தவிர வேறு ஒன்றும் நடக்கப்போவது இல்லை. ஆகக்குறைந்தது ஓர் ஒலிப்பதிவையாவது வெளிவிட முடியாத நிலமையில் விடுதலைப் புலிகளின் தலைமை இருக்கின்றது என்றால் சனம் நாலுவிதமாக கதைக்கத்தானே செய்யும்?

ஒருத்தர் சொல்லுறார் புதினம் இணையத்தில எழுதுறவர் துரோகியாம். இன்னொருத்தர் சொல்லுறார் தயாமோகன் துரோகியாம். இன்னொருத்தருக்கு கேபி துரோகி. ஆகமொத்தத்தில இப்ப யார் சொல்லிறது உண்மை யார் சொல்லிறது பொய்... என்றுகூட தெரியவில்லை. என்னமோ நடக்கிது நடக்கட்டுமே. இருட்டினில் உண்மைகள் ஒளிக்கட்டுமே!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா இயக்கங்கள் அதுகள் இதுகள் எண்டு தொகை தான் கூடிக்கொண்டே போகுதே தவிர ஒருத்தருக்கும் ஒரு குடைக்குக் கீழ வந்து இயங்கிற நோக்கமில்லை

எனது தனிப்பட்ட கருத்து

அதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு உதவியா இருக்கும்

ஆனால் சேர்ந்து இயங்கிறதுக்கு எத்தினை பேர் தயார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப இளந்தமிழர் இயக்கம்.. கொஞ்ச நாளிலை வளர்ந்த தமிழர் இயக்கம்..

பிறகு சிறுவர் இயக்கம்.. குழந்தைகள் இயக்கம்..

உங்களுக்கு ஒரு அளவு தமிழ் எழுத தெரிஞ்சால் சரி, நீங்களும் ஒரு இயக்கம் தொடங்கலாம்..

ஒரே இயக்கம்... ஒரே தலைவன்.. ஒரே தலைமை.. என்று இருந்த தமிழினம் எப்பிடி சிதைஞ்சுபோச்சு..

பாவப்பட்ட இனமாகிப் போயிட்டோம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

க.அருணபாரதி அவர்கள்,

சொல்ல வந்த கருத்தினை மட்டும் புரிந்துகொள்ளுங்களேன்.

தேவையில்லாத அறிக்கைகளினால் மனதைப்போட்டு அலைக்கழிக்காது உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பயணிப்போம் என்பதுதான் அங்கு சொல்லப்பட்ட கருத்து.

அதைப்புரிந்து செயற்படுங்கள். இப்போது தேவையானது அதுமட்டுமே அன்றி வேறெதுவும் அல்ல.

நானறிந்தவரை புலிகள் இயக்கம் மிகக்குறுகிய காலத்தில் இத்தனை அறிக்கைகளை வெளியிட்டதே இல்லை அதுவும் ஒவ்வொருவரும் தங்களைப்புலனாய்வுப்போராளி என்று அடையாளம் காட்டிக்கொள்கின்றார்கள். எந்தப்புலனாய்வுப்போராளியும

Visit My Website இந்த அமைப்புதான் இளந்தமிழர் இயக்கமாய் வீரத்த்தமிழ்மகன்" முத்துக்குமாரின் தியாகத்துக்கு பின் பெயர் மாற்றம் கண்டுள்ளது.

Edited by N.SENTHIL

  • கருத்துக்கள உறவுகள்

க.அருணபாரதி அவர்கள்,

சொல்ல வந்த கருத்தினை மட்டும் புரிந்துகொள்ளுங்களேன்.

தேவையில்லாத அறிக்கைகளினால் மனதைப்போட்டு அலைக்கழிக்காது உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பயணிப்போம் என்பதுதான் அங்கு சொல்லப்பட்ட கருத்து.

அதைப்புரிந்து செயற்படுங்கள். இப்போது தேவையானது அதுமட்டுமே அன்றி வேறெதுவும் அல்ல.

நானறிந்தவரை புலிகள் இயக்கம் மிகக்குறுகிய காலத்தில் இத்தனை அறிக்கைகளை வெளியிட்டதே இல்லை அதுவும் ஒவ்வொருவரும் தங்களைப்புலனாய்வுப்போராளி என்று அடையாளம் காட்டிக்கொள்கின்றார்கள். எந்தப்புலனாய்வுப்போராளியும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் தங்கை உங்கள் அறிவுரைகளை யார் கேட்க போகிறார்கள்? எழுந்தமாட்டில் நீங்களும் ஒரு கற்பனை இல்லது குதர்க்க கருத்தை முன்வைத்துவிட்டு போவியாளம் என்றால் அறிவுரைகளை வீசி நேரத்தை வீணடிக்கின்றீர்கள்.

தமிழ்தங்கை அக்கா. மேலே உள்ளதை வாசித்து விளங்கிவிட்டு இவர்கள் கருத்து எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமை. ஏதோ நாலு வரி எல்லா இடத்திலும் எழுதிவிட வேண்டும் என்பதே இவர்கள் குறி. அதை இவர்களின் கருத்துகளின் உதவியுடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எழுதியவர் யாராக இருந்தால் என்ன எதை எழுதி இருக்கிறார் என்று நின்று கிரகிக்கும் அளவிற்கு இவர்களுக்கு அறிவு இருப்பதாகவும் எனக்கு படவில்லை நேரம் இல்லை என்பதற்கு கருத்துக்களே ஆதாரம். சிங்களவனும் றோவும் போடும் தாளத்திற்கு ஆடிய தீருவோம் என்று கிளம்பிவிட்டார்கள். இனி அவர்களாக தாளத்தை நேரம் இன்றி நிறுத்தினால் தவிர இவர்கள் ஆடுவதை நிறுத்தபோவதில்லை என்பதே திண்ணம்.

அதுதான் வருத்தமாக இருக்கின்றது ஐயா. எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே அறிவு"...

முத்துக்குமார் இயக்கத்தில் இருப்பவர் க.அருணபாரதி அவர்கள். அதைப்பொருட்படுத்தாது அவரை வீணே சீண்டி வம்பிழுப்பது வேதனை அளிக்கிறது. இப்படித்தான் எமக்கானவர்களை நாமே இழித்து இழந்து போகின்றோம் என்பது வேதனைக்குரிய வெளிப்படை உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நம்புகிறோம் இவை எல்லாம் பொய்யென. புலிகள் மே 15 வரை எதுவித பலவீனங்களுமோ ஊடுருவல் பிரச்சனைகளோ இல்லாமல் இருந்தார்கள். பின் ஏதோ மந்திரமோ மாயமோ நடந்து 3 நாட்களில் எல்லாம் கையைவிட்டுப் போய் விட்டது.

உண்மையில் அந்தப் புலனாய்வுப் போராளியின் கடிதம் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்லிச் சென்றிருக்கிறது. எத்தகையதொரு பலம்வாய்ந்த இயக்கம் ஏன் இப்படியானதொரு அவல நிலைக்கு வந்ததென்பதை அச்சொட்டாக எடுத்துரைத்த ஒரே ஒரு ஆக்கம் அது தான். ஏனோ உண்மைகள் பலருக்கு கசக்குகின்றன?

Edited by காட்டாறு

தோழமையுடன்,

க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்

உது யாருங்கோ. இன்னொரு வருகை?

p5.JPG

க.அருணபாரதி

Age : 23

புதுச்சேரி

http://arunabharathi.blogspot.com/

இது அவரின் வலைத்தளம். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கும்,

கொடுத்துக்கொண்டிருக்கும் தோழர்களின் அமைப்பு இளந்தமிழர் இயக்கம்.

அவர் எழுதிய (சற்றே நீண்டாலும்) சாட்டைவரிகள்... எழுதியது 2006 நவம்பர்

சற்றே நில் தோழா…...

தோழா… தோழா…

சற்றே நில்…

எங்கே செல்கிறாய் வேகமாக ?

எம் மண்ணில்

பிறந்த தமிழனே !

கரைவேட்டி வேடம் போட்டு

சகத் தமிழனை ஏமாற்றி ஓட்டு

பிச்சைக் கேட்க செல்கிறாயா ?

இல்லை

திரை மறைவில் இருந்து

ஒட்டு போட்டு மீண்டுமொரு

திருடனை தேர்ந் தெடுத்து

நீயாகவே ஏமாற போகிறாயா ?

இரண்டுக்கும் தானோ ?

‘ஓ’ சனநாயக கடமையல்லவா ?

ஏமாறுவதும் ஏமாற்றுவதும் கூட

சனநாயக கடமையா ? சொல்..

அண்டம் முழுக்க தாமே

ஆள்வது போல் எண்ணி

குண்டர் களைக் கொண்டு

‘சனநாயக கடமை’ நிறைவேற்றிய

ஒட்டுப் பொறுக்கும் கட்சிகளின்

வெறி யாட்டத்தை பார்த்த பிறகும்

ஓட்டுப் போடத் துடிக்கிறாயா ?

புரிகிறது உனது துடிப்பு !

இருள் நிறைந்த உன் வாழ்வில்

இனியாவது ஒளியேறும் என்று

சனநாயகம் காக்க செல்லும்

சகத் தமிழனே

இனியும் ஏமாறாதே

‘சனநாயகம்’ என்று

சதி அரசியல் நடத்தும்

சதிகார கும்பல்களிடம்…

அதிகாரப் பசிக்காக

அடித்துக் கொள்ளும்

அற்பமான அரசியல் கட்சிகள்

சதிகார கும்பல் ஆட்சியேற

எச்சரிக்கும் ஆரம்ப காட்சிகள் !

சாதி இன்றி வாழ்ந்து சாதிக்கலாம்

மதம் இன்றி மகத்துவமாய் வாழலாம்

ஆதி மனிதன் காலந் தொட்டே

மொழி யின்றி எவரேனும் வாழந்ததுண்டா ?

நாதி கெட்ட அரசியல் வாதிகளால்

நீதி மறந்து தெருவில் நாமும்

மோதிக் கொள்வது ஏனென்று

என்றாவது எண்ணிய துண்டா ?

கருத்து வேறுபாடுகள் கொண்ட

கட்சிகளில் பிரிந்து கிடந்தாலும்

இருப்பது நாம் அனைவரும்

இதே தமிழ் மண்ணில் தானே ?

உனக்கும் எனக்கும் எவருக்கும்

உறவும் உயிரும் தமிழ் தானே !

ஏனடா பிறகு சண்டை ?

ஏறுவதில் யார் முன்னணி என்றா ?

ஏமாற்றுவதில் யார் முன்னணி என்றா ?

உனக்கும் இங்கு யாவருக்கும்

உணவைப் படைத்த விவசாயி

தஞ்சை தமிழ் மண்ணில்

உணவின்றி தவித்த போது

உதவநீ அடித்துக் கொண்டாயா ?

காவிரி ஆற்றின் கரையில்

கண்ணீர் வடித்து துடித்த

விவசாயத் தோழர் களின்

வாழ்வு நிலை உயர

விரக்தியில் நீ சண்டை போட்டாயா ?

நம்மின மக்கள் ஈழநாட்டில்

சிங்களக் காடை யரால்

நசுங்கி சாகிற போதும்

நரகாசுரன் பெயரால் நீயோ

பட்டாசு வெடித்து அல்லவா

கொண்டாடிக் கொண்டி ருந்தாய் !

இந்திய நாட்டின் முதற் குடியாய்

தமிழன் வீற்றிருக்கும் போதே

இலங்கைத் தீவில் நம்மினம்

அழிவதை தடுக்க முடிந்ததா ?

உடலை உழைப்பால் வருத்தி

உணவுக் காகவே நெசவு

செய்து பிழைத்து வந்த

நெசவாளர் படைத்த துணிகளை

வாங்கவே மனமில்லை உனக்கு !

பாவம் !

உனக்கெங்கே நேரமிருக்கிறது ?

அந்நிய மோகத்தால் சீரழிந்து

அவர்தம் கழிசடைப் பொருட்களை

‘ஜீன்ஸ் டீ-சர்ட்’ எனத் தேடவே

நேரம் சரியாக இருக்கிறது !

தண்ணீரைத் தர மறுத்து பேசும்

கன்னடர் களுக்கு சொரனையே

நமது வேதாரண் யத்திலிருந்து

போகும் உப்பால் தான் பிறக்கிறது!

காலங் காலமாய் அதை

சுவைத்து உண்ட தமிழா

உனக்கது பிறக்கப் போவது

எப்போது ?

நிலத்தை சுரண்டி சுரண்டி

நிலக்கரி எடுத்து கொடுத்து

நீர்தர மறுக்கும் மாநிலங்களுக்கே

மின்சாரம் தருவது தான்

தமிழனின் வாழ்வியல் பண்பு !

வெறும் பண்பை மட்டும்

வைத்துக் கொண்டு

நீரில்லாமல் தவித்த நிலங்களுக்கு

பாசனம் செய்ய முடியாது !

பண்பை போற்றி வளர்த்துவிட்டு

பசியில் தவிப்பது தகுமா தமிழா ?

மற்றவர் உண்ண

சோறு படைத்தவன்

பெற்றது என்னவோ

வெறும் வறுமையை தான்…

வரி என்ற பெயரில்

இந்திய மைய அரசுக்கு

வாரிக் கொடுக்கும் தமிழனே

அந்நியன் வந்த போது

எதற்காக அவனை எதிர்த்தாய் ?

உரிமை பற்றி பேசினால்

ஊமையாகும் மைய அரசுக்கு

அடிமையாகி போனாயே இன்று !

சுதந்திரம் உனக்கு எதற்கு ?

இந்தியம் பேசும் தமிழனே

இங்கிருப்பதை சுரண்ட வரும்

மற்ற மாநில மக்களை

என்றாவது கவனித்ததுண்டா ?

அடகுக்கடை மார்வாடியிடம்

அடிமைப்பட்டது தமிழனின்

பணமும் பொருளும் மட்டுமல்ல

மானமும் மரியாதையும் கூட…

எங்கிருந்தோ புறப்பட்டு

இந்தியன் என்று சொல்லி

இங்கு வந்த மார்வாடிகளை

எந்த தமிழனாவது போவென

விரட்டியடித் திருப்பானா ?

மகாராஷ்டிர மண்ணில்

கூலி வேலைக்கு

பிழைக்கச் சென்ற

தமிழர்களை விரட்டினர்…

காரணம்

மண்ணின் மக்களுக்கே

உரிமையாம்…

அதே வார்த்தையை

நம் தமிழ் மண்ணில்

உரக்கச் சொன்னால்

நாம் ‘தேசத் துரோகி’

‘பிரிவினைவாதி’…

இல்லாத இந்திய தேசியம் பேசி

இன்னும் உன்னை சுரண்டுவதை

இனியாவது சற்று யோசி !

அந்நியர் நம்மை ஆண்ட போது

மண்ணின் மானம் வீரம் காக்க

தன்னுயிர் மறந்து போராடி வென்று

இன்னுயிர் நீத்த மூதாதையர் போட்ட

விதையில் முளைத்த தமிழா !

தண்ணீர் ஊற்ற தானாய் வளர

தமிழா நீ தாவரச் செடியல்ல !

செந்நீர் சிந்தி முன்னோர் வளர்த்த

நிழல் தரும் விருட்சம் !

நிழலை மட்டும் தந்துவிட்டு

காய் கனிகளை பக்கத்து

தோட்டத்தில் விழும்படி ஏனோ

போட்டுக் கொண்டி ருக்கிறாய் !

உன்னை தாங்கி நிற்கும்

தமிழ் நிலத்திற்கு நீ

என்ன செய்தாய் ? சொல்…

புல்கூட மிதிபட்டால் தானாய்

எழுந்து நிற்க முயலும் !

தமிழா நீ புல் அல்ல

புலியென

என்று உன் மனம் உணரும் ?

இந்திராவை சுட்டு கொன்ற

சீக்கிய இனத்தை சேர்ந்தவர்

இந்தியாவின் பிரதமராக கூட வரலாம்…

ஆனால்

ராசிவ் காந்திக் கொலையுடன்

சம்பந்தப் பட்ட தமிழர்கள்;

சமஉரிமைக்கு போராடினால் கூட

அது தீவிரவாதமாம்…

சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்கள்

என்ற ஏளனமெ அதற்கு காரணம் !

இந்திரா காந்தி இறந்த போது

துக்கம் தாளா முடியாமல்

தற்கொலை செய்து கொண்டவர்கள்

அத்தனை பேரும் தமிழர்களே !

பச்சைத் தமிழனையே

யார் அவரெனக் கேட்டு

கொச்சை படுத்தியவரைக் கூட

கொண்டாடி மகிழ்ந்தது தான்

எங்கள் தமிழ்மண்…

இந்திராவை பெற்ற

மாநில மக்களுக்கே

இல்லாத உணர்ச்சி பெருக்கு

உனக்கெப்படி வந்தது தமிழா ?

காலங் காலமாய் பிறருக்கு

அடிமைப் பட்டே பழகிவிட்டது போலும் !

பிஜித் தீவு கரும்புத் தோட்டத்தில்

பிதுங்கிய விழியோடு உழைத்து

பொட்டல் காடு கழனி யெல்லாம்

பொன் விளைய செய்தவர்கள் தமிழர்கள்…

வெள்ள நீரைத் தேக்கி நிறுத்தி

வெற்றுக் குளங்களை நீரால் நிரப்பி

உலகுக்கே பாசன வழி காட்டிய

கல்லனை கட்டியவர்கள் தமிழர்கள்…

கடாரம், சாவகம், சிங்களம், சீயமென

கண்டம் கடந்து படை யெடுத்து

வெற்றி பெற்று தமிழ் கொடி

கட்டி ஆண்ட மக்கள் தமிழர்கள்…

எட்டி எவன் உதைத் தாலும்

எதிர்த்து நின்று போர் செய்து

வெற்றி பெறு வானேத் தவிர

எவரையும் அடிமை படுத்தாத தமிழர்கள்…

கண்டம் கடந்து வெற்றி பெற்ற

வரலாற்றை நீ மறந்தாயோ ?

அண்டம் முழுதும் சிதறியதால்

தமிழின் வீரம் இழந் தாயோ ?

இந்திய தேசியம் பேசி

இன்னும் எதனை இழக்க

காத்திருக்கிறாய் தமிழா ?

கடாரம், சாவகம் என

கண்டம் தாண்டி பறந்த

தமிழர்க் கொடியை

தாயகத் தமிழகத்தில்

பறக்கவைக்க முடியாமல்

வலுவற்ற தமிழா

வென்று விட்டோம்

என்ற திமிறா ?

விழுவது என்பது

எழுவதற்கான சந்தர்ப்பம்…

எழுவது என்பது

வழுவதற்கான சந்தர்ப்பம்…

வழுவாத பாதையில்

வளமோடு நடைபோட

பின்தங்கி நின்றது போதும்

பிடரியை குலுக்கும் சிங்கமாய்

எழுந்திடு தமிழா ! எழுந்திடு !

தமிழை கடவுளென தொழுதிடு !

செயற்கை இந்திய தேசியம் பேசி

தமிழனை ஏறும் ஏணி யாக்கி

மத்திய பதவி பெறத் துடிக்கும்

மதி கெட்ட அரசியல் கட்சிகள்…

சோறு இன்றி பசியில் வாடும்

தமிழனை மேலும் மயக்கி நிரந்தர

சோம்பேறி ஆக்க முட்டி முயலும்

ஆபாச வக்கிரம் நிறைந்த சினிமா…

அந்நிய இந்திய மோகத் தாலே

மண்ணின் வீரம் மகிமை மறந்து

தனித்த தன்மை மேலும் இழந்து

பணிந்து வாழ்வதை பண்பாய் நினைத்து

குனிந்து குறுகி தன்மானம் இழந்து

சினமா போற்றி சிதைந்து போன

சீற்றம் மறந்த தமிழ் இளைஞர்கள்…

தாய் மொழியை பேசாதே

என தான் பெற்ற பிள்ளையை

தானேக் கெடுக்கும் பெற்றோர்கள்…

தமிழினச் சமூகத்தின்

இன்றைய இழிநிலை போக்க

விடிவு வரும் ஒருநாள்…

தமிழ் தேசியத் திருநாள்…

‘தமிழ் தேசியம்’;

காலத்தின் கட்டாயம்…

உணர்வோம் இதனை

ஒருநாள் நிச்சயம்…

அதுவரை நமக்கு

அதுவே லட்சியம்… ‘

November 2006

http://arunabharathi.blogspot.com/2006/11/...-post_3556.html

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

மருதன்கெர்னி! தவறை தவறு என்று சுட்டிகாட்டும் உங்கள் நேர்மையப்பாராட்டுகிறேன்! தமிழனின் இன்றைய இழி நிலைக்கு காரணம் எதிரிக்கு உலகமெல்லாம் உதவியது காரணமல்ல தமிழனில் இருந்த தமிழனின் துரோகத்தனமே காரணம் அவர்கள் பாம்பு என்று தாண்டவோ பளுதை என்று மிதிக்கவோ முடியாது அவர்களை கண்டு கொள்ளாதிருப்பதே அதற்கு ஒரே வழி

ஆட்டு மந்தையின் முன்னே போகும் ஆட்டை வழி மறித்து தடி ஒன்றை நீட்டினால் முன்னால் போகும் ஆடு அதை தாண்டி பாய்ந்து செல்லும் ,தடியை எடுத்து விட்டால் கூட பின்னால் வரும் ஆடுகள் தேவையே இல்லாமல் பாய்ந்து செல்லும்.

நல்ல விளக்கங்கள். போறவன் வாறவன் எல்லாம் இந்திய றோவும், சிங்கள புலனாய்வாளர்களும், பாகிஸ்தான் புலனாய்வாளர்களும் என்று சனங்களுக்கு பூச்சாண்டி காட்டிக் காட்டியே, போறவன், வாறவன் எல்லாரையும் உளவாளிகள் என்று பேதிகாட்டிக் காட்டியே கடைசியில இப்ப புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் என்ன ஆனார் என்று சனங்கள் குழம்பிப்போய் இருப்பதுதான் கடைசியில் நடந்தது.

இனியாவது கருத்துக்களை சொல்லவிடுவோம். அதை நாங்கள் காதுகொடுத்து கேட்காவிட்டாலும்.. பல்வேறுவிதமான கருத்துக்கள் வரட்டும். உண்மைகள் உண்மைகள்தான். பொய் பொய்தான். ஆனால்... அதை நாங்கள் திணிப்பதன்மூலம் சனங்கள் நம்பப்போவது இல்லை.

ஒருவர் தனது கருத்தை சொல்லிறது எண்டால்.. ஓர் இயக்கத்தின் பெயரைச்சொல்லி அதன்பின்னால் நிலையெடுத்துத்தான் சொல்லமுடியும் என்றால்.. பெரும்பாலான சமயங்களில் அவர் எதையோ சனம்மீது திணிக்கின்றார் என்று பொருள்கொள்ள வேண்டி இருக்கின்றது அல்லது சனங்கள் பெயர்ப்பட்டியலுக்கும், பதவிகளுக்கும் மனம் பறிபோனவகள் ஒழிய சுயமாக சிந்திக்க முடியாதவர்கள் என்று பொருள்கொள்ள வேண்டி இருக்கின்றது.

த.வி.பு அமைப்பை பொறுத்தவரையில் இனி தலைமையில் இருந்த ஏற்கனவே எங்கள் சனங்களுக்கு நன்கு பரீட்சயமான தலைவர்கள் வாய்திறந்தால் ஒழிய மேலே கூறிய அருணாபாரதியும், சீமானும், வை.கோவும், நெடுமாறனும் இவர்களின் பேச்சு ஆக தமிழ்நாட்டில் மாத்திரமே எடுபடமுடியும் (அது கூட கேள்விக்குறிதான்).

இன்னமும் எவ்வளவு காலத்திற்கு த.வி.புவின் தலைமை சாதாரண சனங்களை வழமையான ஒளி, ஒலிப்பதிவுகள், மூலம் தொடர்புகொள்ளாமல் இருக்கின்றதோ அவ்வளவிற்கு தினமும் த.வி.பு அமைப்பிற்கான ஆதரவு குறைந்தே செல்லும். சனங்கள் இனிவரும் காலங்களில் கவனயீர்ப்புக்களில் பங்குபற்றுவதுகூட குறைந்தே செல்லும்.

இந்த தொடர்பாடல் அமைப்பில் ஏற்பட்ட வெற்றிடங்களை சீமான் மூலமோ அல்லது வை.கோ மூலமோ அல்லது நெடுமாறன் மூலமோ நிரப்பமுடியாது. ஏன் கே.பி வந்தால் என்ன அறிவழகன், எழிலழகன் என்று ஆட்கள் புதிய, புதிய பொறுப்புக்களை, பதவிகளைக்கூறி அதன்பின்னால் நிலையெடுத்து அறிக்கைகள் விட்டால் என்ன... சனங்களின் மனநிலைகளில் பழைய தலைமை - சூசை போன்றவர்கள் வராதவரை இன்னமும் குழப்பம் நீடிக்கத்தான் போகின்றது.

அதுவரை ஆளையாள் துரோகி என்றும்... அவனை நம்பாதே இவனை நம்பாதே அவன் உளவாளி, இவன் உளவாளி என்று என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டும் இருக்கவேண்டியதுதான்.

Edited by கலைஞன்

என்ன... சனங்களின் மனநிலைகளில் பழைய தலைமை - சூசை போன்றவர்கள் வராதவரை இன்னமும் குழப்பம் நீடிக்கத்தான் போகின்றது.

தேவை கருதி வரமாட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.