Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியாவின் 73 நாட்கள் அறவழிப் போராட்டம் -10 மில்லியன் பவுண்ஸ் செலவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28/06/2009, 11:26 மணி தமிழீழம் [செய்தியாளர் சுடர்விழி]

பிரித்தானியாவின் 73 நாட்கள் அறவழிப் போராட்டம் -10 மில்லியன் பவுண்ஸ் செலவு

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தமிழ் மக்கள் நடத்திய 73 நாட்கள் தொடர் போராட்டம் காரணமாக 10 மில்லியன் பவுண்ஸ் செலவு பிரித்தானிய காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் போராட்டத்தின்போது லண்டன் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால், லண்டனின் புறகர்ப் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமான போராட்டங்கள் இடம்பெறும்போது ஒரு நாளைக்கு 616 காவல்துறை உறுப்பினர்கள் தமக்கு தேவைப்பட்டிருப்பதாக, காவல்துறை உயரதிகாரி அலிசன் டொலெறி தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்த தமிழ் மக்களின் அறவழிப் போராட்டங்கள் கடந்த வாரம்வரை 73 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அவ்வப்பொழுது மிகப் பிரமாண்டமான பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பதிவு

28/06/2009, 11:26 மணி தமிழீழம் [செய்தியாளர் சுடர்விழி]

பிரித்தானியாவின் 73 நாட்கள் அறவழிப் போராட்டம் -10 மில்லியன் பவுண்ஸ் செலவு

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தமிழ் மக்கள் நடத்திய 73 நாட்கள் தொடர் போராட்டம் காரணமாக 10 மில்லியன் பவுண்ஸ் செலவு பிரித்தானிய காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களின் போராட்டத்தின்போது லண்டன் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால், லண்டனின் புறகர்ப் பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமான போராட்டங்கள் இடம்பெறும்போது ஒரு நாளைக்கு 616 காவல்துறை உறுப்பினர்கள் தமக்கு தேவைப்பட்டிருப்பதாக, காவல்துறை உயரதிகாரி அலிசன் டொலெறி தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆரம்பித்த தமிழ் மக்களின் அறவழிப் போராட்டங்கள் கடந்த வாரம்வரை 73 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றதுடன், அவ்வப்பொழுது மிகப் பிரமாண்டமான பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பதிவு

சிங்களவனுக்கு ஆயுதம் வித்து வந்த ஏற்றுமதி வருமானம் எவ்வளவு எண்டு சொல்லல்லே?

உங்கட ஆயுதத்தால செத்த அப்பாவி தமிழர் எத்தனை பேர் அதையும் கணக்கு வையுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் 73 நாட்கள் அறவழிப் போராட்டம் -10 மில்லியன் பவுண்ஸ் செலவு

உதை மட்டும் செலவு எண்டு கூக்குரல் இடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த 73 நாள் போராட்டங்களால் ஏற்பட்ட செலவை கணக்கிடும் அரசாங்கம் எவ்வலவு வருமானம் என்று சொல்ல மறந்து விட்டாதே? எங்கள் புத்தி ஜீவிகளும் இதை அரசாங்க அதிகாரிகளிடம் சொல்ல முயல்வதில்லை...!

கடைசிப் பதினைந்து நாட்கள் தவிர ஏனைய அனைத்து நாட்களும் ஆகக்குறைந்ததாக பார்த்தாலே சராசரியாக சில ஆயிரம் மக்கள் underground oneday pass or oyster card, conjession charge, food and drink around London area, car park charges even the pay toilets and so on...என்றெல்லாம் பார்க்கப்போனால் அவர்களுக்குத்தான் லாபமே தவிர நட்டமில்லை குறிப்பாக இந்தப்போராட்டங்களுக்கு வந்த மக்களாலேயே, அதிலும் மிக முக்கியமான 3 கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் முதலாவதில் 1 லட்சத்துக்கு மேல், 2 வதில் இரண்டரை லட்சத்துக்கு மேல் மூன்றாவதில் 1 லட்சம் மக்கள் எல்லாவற்றிற்குமான எங்கள் மக்கள் போக்குவரத்துக்கு, லண்டனை அண்டிய பகுதிகளில் சாப்பாடு குடி நீர் போன்றவற்றிற்கான செலவீனம் என்று பார்க்கப்போனால் லண்டன் பொருளாதாரத்தில் எங்களின் பங்கு எவ்வளவு என்று கணக்குப்பார்க்க முடியாமல் போய்விடும்....

இதே கணக்கு மற்ற நாடுகளுக்கும் பொருந்தும், எனவே நட்டத்தை மட்டுமே சொல்லும் அரசுகளுக்கு தரவுகளின் அடிப்படையில் மக்கள் கேள்வி கேட்க தகுதி இருக்கல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

10 மில்லியன் பவுண்ஸ் செலவு

என்ன செலவு? பொலிசாரின் குடும்பத்துக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டது. பொலிசார் என்ன வேற்றுலக ஆட்களோ? அவர்களும் லண்டன் பிரஜைகள் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

கழிப்பிடத்திற்கு கொடுத்த காசைக் கண்க்கு காட்டவில்லையே இளங்கவி.

அது சரிதான் காலனித்துவ காலத்தில் தமீழத்தில் இருந்து சுரண்டிய வளங்களில் இருந்து இந்தச் செலவு போக மிகுதியையும் தந்து எங்கள் நாட்டையும் முன்பிருந்தது போல பிரித்து தந்து விடடால் நாங்கள் என் இங்கு இருந்து அவர்களுக்கு தொல்லை கொடுக்கப் போறம்.நாங்கள்தான் இஞ்ச வந்திருக்கிறம் எங்கள் பாட்டன் கொப்பாட்டனிடமிருந்து வறுகின பணத்தை அவர்களிடம் வாங்கவே நாங்கள் வந்திருக்கிறம்.

........ அன்று இரவு 9 மணி வரும் ஒரு தொலைபேசி அழைப்பு .... "அண்ணை, நேரமிருக்குமோ, .......லில் 10 மணியளவில் ஒரு முக்கிய கூட்டம்" ... மறுக்கவில்லை, அடுத்த நாள் வேலை என்றாலும் ........ போனால் ......... சில மணி நேரங்களின் பின் மேடையில் ஆறேழு பிரமுகர்கள் ........ ஒன்றன் பின் ஒன்றாக ... "மேற்குலகம் ஒன்றும் செய்யவில்லை, இன்றைய நிலைக்கு காரணம் பிரித்தானியா!! பிரித்தானியாவிற்கு பாரிய பொறுப்பிருக்கிறது! ஆகவே நாளை முதல் ........., வாருங்கள்" ....... என்னுள் ஒரு கேள்வி ... மாவிலாற்றில் யுத்தம் தொடங்கி ஏறக்குறைய வருடங்கள் ஆகின்றது, சம்பூர் ஈறாக வாகரையில் பல ஆயிரம் பொதுமக்கள் இறந்த போதும் என்ன பின் மட்டக்களப்பு போய் மன்னார் வந்து மடு ஈறாக கிளினொச்சி தாண்டி விசுவமடு, முள்ளியவளை, முல்லைத்தீவு போய் புதுக்குடியிருப்பு தாண்டும் மட்டும் நாம் ஏன் வீதியில் இறங்கவில்லை??????????? மக்கள் அதுவரை இறக்கவில்லையா??????? இல்லை அதுவரை பிரித்தானியாவிற்கு தார்மீக பொறுப்பிருக்கிறது என்பது எமக்கு தெரியவில்லையா???????????? .... என்ன இருந்தாலும் எம்மக்களுக்காக ........

அடுத்த நாள் வெஸ்மினிஸ்ரர் பாலத்தை மறித்து, விடிய அடி வாங்கியதிலிருந்து .......... ஏறக்குறைய ஒவ்வொரு நாளும், வேலைகள் போகிறது என்று இருக்கும் இக்காலத்திலும் சுகவீன விடுமுறைகள் அடித்தும், வேலையால் வந்தும் ஒவ்வொரு நாளும் போய் வந்தேன். என்னத்தை கண்டோம்????

நாம் எங்கெங்கெல்லாம் தப்புக்கணக்கு போட்டோமொ, இறுதியாக இங்கும் போட்டோம்!!!! வீதிகளை மறித்து மிரட்டினால். எம் சொல்லை கேட்பார்கள்?????????? .... நாம் இங்கு 0.0001%மானவர்கள் இல்லை!! ஆனாலும் மிரட்டினோம் என்ன மிரட்டினால் அடி பணிவார்கள் என்றார்கள் நாமும் அப்படியே செய்தோம்!!

உது என்ன கணக்கு!!!!!!!!!!??????????? உலகை ஆண்ட வல்லரசை நாம் மிரட்டலாம்?????????

என்ன நடந்தது??????????

இனியும் இப்படியானவர்கள் எம்மை வழி நடத்த தேவையா???????????...........

Edited by Nellaiyan

இன்று பிரித்தானியாவில் 73 நாட்கள் சாதனை படைத்த பூசாரிகளின் ஸ்பொன்ஸரில் கீரைக்கடைக்கு எதிர்கடை தேடுகிறார்கள்!!!! இதுவரை காலமும் பிரித்தானியா தமிழர் அமைப்பை அழித்தொழிக்க வேண்டும் என செயற்பட்ட, பிரித்தானியா பூசாரிகள், இன்று இவர்களை வைத்து இன்னொரு புலம்பெயர் அரசமைக்க கூட்டம் கூட்டியிருக்கிறதாம். இதற்கு சில ஊடகங்களின் ஆதரவையும் பெற்று இக்குதர்க்க கூத்தை இன்று ரொட்னம் பகுதியில் அரங்கேற்றியிருக்கிரார்களாம

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.