Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் அறிந்தாலென்ன.....?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதுகள் ஒரு புறம் கிடக்க ...... கம்போடியா அன்று கம்பூச்சியா என்றழைக்கப்பட்ட நாட்டில் 70களில் சீன ஆதரவுடன் பொல்பொட் எனும் இயக்கம் போராட்டத்தை ஆரம்பித்தது. அது நாட்டை கைப்பற்றி எல்லாம் பிழையாகிப் போய்இ இறுதியில் உள்ளுக்குள்இ வெளியில் என்று தொடங்கி வியட்னாமும் உள்ளட்டு முடிக்கபட்டது!! ஏறக்குறைய பல மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்!! சன இறப்பிற்கு சீனாஇ வியட்னாம்இ அமெரிக்கா ....... உட்பட பொல்பொட்டும் காரணமாக இருந்தது!!! ....... இப்போ எல்லா சாவுகளையும் பொல்பொட்டினது தலையில் உலகம் போட்டது மட்டுமல்லாதுஇ அங்குள்ள சந்ததியினரும் பொல்பொட்டையே வெறுக்க வேண்டிய சூழ்நிலை!!!

உலகில் உள்ள பல அடக்கப்பட்ட மக்களின் விடுதலை அமைப்புகள் சிறிய இராணுவ அமைப்பையும்இ பலமான அரசியல் அமைப்பையும் கொண்டிருந்தன. அது அயலாந்து விடுதலை இராணுவமாக இருக்கட்டும்இ கொசோவோ விடுதலை அமைப்பாக இருக்கட்டும்இ ஈஸ்தீமோர் இ....... என ஏராலமானதுகளை கூறலாம். உதாரணத்துக்கு பிரித்தானியாவில் அயலாந்து விடுதலை அமைப்பை தடை செய்திருந்தாலும்இ அவர்களதுஅரசியல் பிரிவான சின்பெயின் உறுதியான தளத்தை கொண்டிருந்ததனால் .... எதோ ஒரு அம்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமையை பெற உலகு வழி வகுத்தது.

சில தினங்களுக்கு முன்னம் எனது நண்பனுடன் வேலை செய்யும் ஓர் கறுப்பினத்தவன் கூறினானாம் ........

............"உங்களின் அழிவுஇ உலகில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்கு ஓர் பிழையான உதாரணமாக வந்து விட்டது. ஒடுக்கப்படும் மக்களால் முன்னெடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள் அடக்கி ஒடுக்கலாம் என்பது மட்டுமல்ல அழித்தே விடலாம் என்ற செய்தியை கூறி இருக்கிறது. நீங்கள் உலகிலுள்ள அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சிக்கு குந்தகம் விளைவித்து விட்டீர்கள் மட்டுமல்ல துரோகம் இழைத்து விட்டீர்கள்" ......

அக்கறுப்பின மனிதன் கூறியது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!!! நாங்கள் எம்மக்களுக்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லைஇ உலகில் அடிமை விலங்குடைக்க காத்திருக்கும் அத்தனை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சேர்த்துத்தான் துரோகம் இழைத்துள்ளோம்!!!!!!!

இவ்வளவு பெரிய ஓட்டை இருக்கிறது என்பதைஇ எல்லாம் நன்றாக இருக்கும்போது யாராவது வெளிக்காட்டினார்களாஇ (நீங்கள் உட்பட)? காலம் கடந்தபின்பு விரல்களை நீட்டுவதால் என்ன பயன்?

இப்போது ஏற்கிறோமோஇ இல்லையோ எமது போராட்டம் அழிக்கப்பட்டு விட்டது! இக்காலத்தில் எம் பிழைகளை மீளாய்வு செய்ய தவறுவோமாயின் அழிவு முழுமை பெற்று விடும்!!!

கடந்த காலங்களில் சரியோ பிழையோ ............. எல்லாம் நேராக செல்லும் என்றார்கள்! வேறு கருத்துக்கள் இருந்தாலும் எல்லோரும் ஆதரித்தோம்!! தலைமை விழுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மீளுவோம் என்றார்கள்இ நம்பிக்கை இல்லா விடினும் அள்ளிக்கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்!!! .............. ஆனால் இதற்கு மேல் வேண்டாம்!!!!!!!!!!!!!!!!!

உங்களின் உலக அறிவு இதுதான் என்றால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். கோசோவா கிழக்கு தீமோர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள நிறை உண்டு என்றாலும். றுவாண்டா இனபடுகொலைபற்றி நீங்கள் தெரிந்துகொள் முயற்சி செய்தால் பல விடயங்களை தெரிந்துகொள்ளலாம்.

தற்போதைய அமெரிக்க அரசுகளால் ஈராக்கியாலும்விட பாதிக்கபடுபவர்கள் அமெரிக்கநாட்டவர்களே என்று சொன்னால் உங்களால் எளிதாக புரிய முடியாது. அதற்காக உண்மை அதுவன்றி ஆகாது. தற்கால உலக அரசியலை உற்றுபார்த்தால்தான் நாம் தோற்றோமா வென்றோமா என்பது தெரியும். உலகை யார் ஆட்டுகிறார்கள் யார் ஆளுகிறார்கள் என்ற பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு தேவை.

மிகவும் நிதர்சனமான உண்மை

ஆகக் குறைந்தது சக கருத்தாளரை கூட மதிக்கத் தெரியாமல் பன்றி என்றும் சாக்கடை என்றும்இ சரணடைந்த போராளிகளை விபச்சாரிகள் என்றும் சொல்லித் திரிகின்ற மக்களை கொண்ட எம் ஈனச் சமூகத்திற்கு என்ன இழவுக்கு தேசம் என்ற ஒன்று தேவை?

என்னைக் கேட்டால்இ பிரபாகரன் செய்த மாபெரும் தவறு...இந்த கேடு கெட்ட சமூகத்திற்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து போராட வெளிக்கிட்டது

தமிழனாய் பிறந்ததிற்காய் வெட்கித் தலை குனிகின்றேன்

பானையில் உள்ளதே அகப்பையில் வரும் என்றதுபோல் இந்த மனோபாவம் முரண்பாடுகளில் இருந்து புலிகள் இயக்கமும் மீளவில்லை. இது புலிகளின் குற்றம் என்பதை விட இனத்தின் இயல்பு என்பதே பொருத்தமானது.

உன்னத தலைவனை கொண்ட தியாகத்தின் எல்லை கடந்து சென்ற போராட்டம் சிலரின் மேலாண்மைக் கனவுகளால் அழிந்தது என்பதே உண்மையானது. ஒருகாலத்தில் சிறந்த படையணிகளை கொண்ட மன்னார் மாவட்டம் ஓரிரு நாட்களில் ஒன்றுமே இல்லாமல் போனது. தளபதிகள் சிறைக்குச் சென்றனர் காசுப்பிரச்சனை என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு மன்னார் மாவட்டமே ஒத்திசைந்து துடித்துக்கொண்டிருந்த நிலையில் இருந்து விலகிப்போனது. இவ்வாறுதான் பின்னாளில் கிழக்கிலும் நடந்தது. இன்று காவியமாகிப்போன பல்வேறு தளபதில் நேற்று ஒரு நாள் அல்லது பல நாள் பல மாதங்கள் சிறையில் இருந்தது உண்மை. அப்போதும் ஏதோ ஒன்று விடுபட்டுப்போனது. நேற்றும் தீபன் நீட்டிய கைகளை தொட மறுத்த கணங்கள் உண்டு.றி

எம்மில் பிளவுகள் இருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் அமெரிக்காவுக்கு எதிரான போரில் வியட்னாம் இரண்டு பட்டு தான் இருந்தது. வியட்னாமின் ஒரு பகுதியினர் அமெரிகாவுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு ரஸ்யா எனும் வல்லரசு பின்னணியாக இருந்தது. ஆனால் எமக்கு எல்லா வல்லரசுகளும் இலங்கை அரசுடன் இருந்ததாலும் இ ஐ. நா சபையின் பாராமுகமும் தான் எம்மை தோல்வி அடைய செய்தன என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இனி எல்லாம் வரும்

வர்க்க வேறு பாடுஇ ஏழை பணக்காரன் வித்தியாசம்இ மதம்இ மாற்றுக் கருத்து மாணிக்கங்களைத் தலையில் தூக்கி வைக்காமை..இப்படி எல்லாக் காரணமும் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணங்களாக வெளி வரும். இது நல்லது செய்யும் "எங்களுக்கு". முன் செல்லாமல் ஒரே இடத்தில் மல்லுப் பிடிச்சுக் கொண்டு நிற்க இந்தக் காரணங்களின் கண்டு பிடிப்பு "எமக்கு" உதவும்.

அதனால் கொஞ்ச நாளைக்கு ஒரு 2 வருசத்துக்காவது பேசாமல் இருந்த நல்லது தானே!...

அதுக்குள்ள சரி...பிழை... தவறுகள் எல்லாம் தீர்க்கப்பட்டு விடும்....

நாங்கள் ஏன் அழிந்தோம்? ஏன் எம் மண் பறி போனது? என்பதை பேசாமல் ..................!!!!!!!!!!!!!!!????????????

மீண்டும் பூறூஸுகளையும் வானவேடிக்கைகளையும் விட்டுக் கொண்டிருப்போம்!! ..... எம்மக்களுக்கு விடிவு வரும்! நாம் மீண்டும் தாயகம் சேல்வோம்!!! .... தமிழீழமும் கிடைக்கும்!!!!

முடிவாக ஒன்று மாத்திரம் தெளிவா தெரியுது. நீங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வரமாட்டியல்

உங்களால எவருக்கு ஒரு நன்மையும் வரப்போறாதுமில்லை.

சும்மா கத்தி கத்தி கத்தி காலத்தை ஓட்டாமல் போய் சிங்களவனுக்கு குழூழூழூழூ கழுவுங்கோ.

தலைவர் வந்தாப்பிறகு விடிவைப்பற்றி யோசிக்கலாம்.

வன்னியில் மக்கள் ஆயிரமாயிரமாக கொல்லப்பட்ட போது எத்தனையோ புத்திஜீவித மேலாண்மை வாதிகள் புலிகளின் அழிவை நாறல் மீனை புனை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தனர். இதே நிலை பிரதேசவாதமாகவும் கணிசமானளவு நிலவியது. இங்கே மக்கள் குறித்த பொதுவான நேசிப்பு என்பது பரிதாபகரமாக இருந்தது. அடிப்படை மனித நேயத்தையே தொலைத்துவிட்டு சாதி மதம் பிரதேசவாதம் வர்க்கம் என்றதில் நாம் தொங்கிக் கொண்டிருக்கின்றறோம்.

எமக்கு ஒரு அரசு வேண்டும் என்பதில் குறியாய் இருக்கின்றோம். அகநிலையில் இல்லாவிட்டால் புறநிலையில் என்கின்றோம். இதை மறுப்பது அல்ல நோக்கம். இந்த ஆசை கோபுரத்தில் மேலிருக்கும் கலசத்தைப்போன்றது. ஆனால் கோபுரத்துக்கான அத்திவாரங்களை தகர்க்கும் உள்ளக முரண்பாடுகள் குறித்தே நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனுபவம் எமக்கு உணர்த்துகின்றது

ஒரு இலச்சியத்துக்கா வாழ்ந்து வீழந்த வீரர்களை வைத்து கருத்து விபச்சாரம் செய்வதை விடுத்து

நக்கி பிழைக்கலாம்.

மீண்டும் சொல்வேன் எங்களைப்போன்ற ஒரு இனத்துக்கு எதிரியை சிங்களத்த்தில் தேடவேண்டியதில்லை. நாமே போதும்.

இனி ஒரு தலைவன் எங்களுக்கு வரப்போவதில்லை. அப்படி ஒருவனும் இனியும் தன்னை இழக்கவேண்டியதுமில்லை.

எங்கள் மாசற்ற தேசத்தின் விடிவெள்ளிக்கே கருத்தென்றபோர்வையில் களங்கப்படுத்தி விட்டோம்இ இனி யார்தான் மிச்சம்? என்னதான் முடிவு?

பேசாமல் போய் வழும் வழியை பாருங்கள். எவனாவது காலை நக்கி பிறவிக்கடலை கடவுங்கள்.

ஊரில எத்தனையோ கோயிலுக்கு கும்பாபிசேகமாம்இ காசனுப்புங்கள் முடிந்தால் போய் தேரிழுங்கள்

உங்களுக்கு இதுக்கு விடுதலை தேவை இல்லை.

சென்றவாரம்தான் யூதர்களை பற்றி ஆராய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை பற்றி பல ஆய்வுகளை தேடி தேடி வாசித்தேன் அவர்களின் ஆரம்ப நிலையும் இப்படித்தான் இருந்திரக்கின்றது. துரோகத்தின் உச்சத்தால்தான் அவர்கள் நாடுளந்து அங்கே இருந்து வெளியேறுகிறார்கள். பின்பும் வந்த இடங்களிலும் அது தொடர்கின்றது..... பின்பு அடுத்த அடுத்த தலைமுறைதான் அதை புரிந்து கொண்டு யூதர்கள் எனும் வட்டத்திற்குள் நிற்ப்தாற்கு முயற்சி செய்துகின்றது.

இப்படியான கருத்துக்களை வாசித்தபோது.......

எனக்கு இதை வைத்தே அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆராய்ச்சிகளை

வரலாற்று சான்றுகளை

வரலாற்றுப்படிப்பினைகளை

வென்றவர்களை

எம்மைப்போல் தோற்றவர்களை ...........

நாம் அறிந்தாலென்ன.....?என்று பட்டது

அதற்காகவே இதனை தனியாக இணைக்கின்றேன்

குர்திஸ்தான்

கம்பூச்சியா

சூடான்

இஸ்ரேல்

கிழக்குதீமோர்

வியட்னாம்

ஏன்

கொரியா

ஐப்பான்

அமெரிக்கா

குவைத்

ஈராக்

ஈரான்..................

வரலாற்றை அறிவதே நோக்கம்

விமர்சிப்பதல்ல.......

கைநீட்டுவதல்ல.....

பிழை கண்டுபிடிப்பதல்ல........

நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை உணர.....அடுத்து என்ன செய்யலாம்

எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்பதை உணர்த்த உணர

எமக்கு முன் இவ்நிலையை அடைந்தோரை அறிந்து கொள்வோம்

முடியுமாயின் அவர்களை சந்திப்போம்

மன்னிக்கவும்

தங்கள் அனுமதியின்றி

தங்கள் ஆக்கங்களை வெட்டி ஒட்டியதற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு வயதான பிரெஞ்சு பெண்மணியுடன் மிகவும் தர்க்கமாக வரும்வரை கதைக்கவேண்டிவந்தது

அவர் சென்றுவிட்டார்

மீண்டும் ஒருநாள் வந்து

நான் நிதானமாக இருக்கின்றேனா என பார்த்துவிட்டு

என்னுடன் சில நிமிடம் கதைக்கமுடியுமா? என்று கேட்டு

நான் ஆம் என்றவுடன் கதைக்த்தொடங்கினார்

மிகவும் ஆணித்தரமான கருத்துக்கள்

வரலாற்றுச்சான்றுகள்

எம்மைப்போல் பலர் எவர் எவரையோ நம்பி ஏமாந்த வரலாறுகள்

இந்த உலகத்தை

சர்வதேசம் என்று சொல்லப்படுகின்ற இந்த தலைவர்கள் செய்த துரோகங்கள்

உலகத்தலைவர்களால் ஏமாற்றப்பட்ட பெருவாரியான சிறிய இனக்குழுமங்கள்

என ஏளாளம் கதைகள் வரலாறுகள்................???

ஏன் இவற்றை படிக்கமறந்தோம் முதலில்..........???

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, இரண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கிறோம். நானும் நினைத்தேன். (ஆனால் எனது பட்டியல் மிகவும் குறுகியது, எங்கள் நிலையோடு ஒப்பிடக் கூடிய ஐரிஷ், கிழக்குத் திமோர் போன்றவை மட்டுமே). பல தடவைகள் வரலாறு அறியாதவர்கள் ராஜதந்திரிகளிடமோ, சாதாரண ஆர்வலர்களிடமோ பேசத் தலைப்பட்ட நிகழ்வுகள் இங்கே சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. சிலர் அறிந்து இனி என்ன ஆகப் போகுது என்றும் அலுத்துக் கொள்கிறார்கள். நான் இவற்றை ஏற்கனவே அறிந்து கொள்ளும் வாசிப்புத் தேடலைத் தொடங்கி விட்டேன். இயலுமான போது இங்கே பதிவிடுவேன். பயனிருந்தால் தொடரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு உங்களின் சிந்தனை நியாயமானது.ஜஸ்ரினும் கருத்தொருமிக்கிறார். என்னுடன் இரு எரித்திரியப்பெண்களும் ஒரு குர்திஸ்வயதானவரும் வேலைசெய்கிறார்கள். இவ்விரு நாட்டவர்களின் போராட்டமும் ஓரளவு எம்மையொத்ததுதான். எமது இன்றையநிலை ஏறபடும்வரை எரித்திரியப்போராட்டத்துடன் எமது போராட்டவடிவத்தை ஒப்பிட்டு எமது உட்கட்டுமானங்களை எண்ணி வியந்திருக்கிறேன். எரித்திரியர்கள் இராணுவக்கட்டமைப்பில் எங்களுடன் ஒப்பிடுகையில் ஆளணியிலும் ஆயுதவலிமையிலும் மேல்நிலையிலேயே இருந்தார்கள்.( ஆயுதங்களை இரசியா முதலிலும்பின்பு அமெரிக்காவும்கொடுத்தது வேறுவிடயம்) ஆனால் உட்கட்டுமானங்களை நிர்மாணிப்பதில் அவர்கள் விடுதலைபெறும்வரையில் பெரிதாக நாட்டம்கொள்ளவில்லை.இதனால் விடுதலையின்பின் பெரும்சிரமங்களை எதிர்கொண்டார்கள்.எப்படியோ இன்று சுதந்திரக்காற்றைச்சுவாசிக்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தங்கள் இருவரதும் கருத்துக்களுக்கு

அதேநேரம்

எனக்கும் மனச்சோர்வாலும் நேரம்போததால் தொடர்ந்து எழுதமுடியவில்லை

ஆனாலும் நாம் இப்படியே ஒதுங்கிவிடமுடியாது

அத்துடன் தோல்வியைப்போல்

அனுபவம் அல்லது படிப்பினை இல்லையென்பர்

எனவே தொடர்ந்து எழுதுங்கள்

நேரம் கிடைக்கும்போது நானும் எழுதுகின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாடாக.....

ஒவ்வொரு தலைவராக.....

ஒவ்வொரு தனிநபராக....

ஆராய்ந்து பார்க்கலாம்

எனக்கும் குர்திஸ் போராளி சிலருடன் பழக்கமுண்டு

அவர்கள் எமது வழியை சரியென்றே சொல்லிவந்தனர் (அதாவது பின்னோக்கி நகர்வதை)

ஏனெனில் தாங்கள் ஒரு கட்டத்தில் துருக்கிய இராணுவத்தின் சதியை அறியாது தொடந்து எதிர்த்து நின்று போராடியதால்தான் தாம் பெரும் அழிவைச்சந்தித்ததாக சொல்வார்கள்

உங்கள் தலைவரின் திட்டம் நல்லதுதான் என்றார்கள்

ஆனால் இன்று ஏற்பட்டநிலை பற்றி இன்னும் நான் அவர்களுடன் கதைக்கவில்லை

ஏனெனில் எனக்கே உண்மை தெரியாதபோது.....

எனக்கு தெரிய தோல்விக்கு காரணம் வேறு யாருமே இல்லை... தமிழர்கள் மட்டுமே காரணம்... சிங்களவர்களை ஆதரிக்க முற்பட்ட ஒரு பகுதி தமிழர்கள் ஒரு புறம் விட்டு விட்டாலும்.. முக்கியமாக போராட்டத்தை நடு ஆற்றில் விட்டு போட்டு வேற முக்கியமான வேலைகளிலை ஈடு பட்ட மக்கள் தான் காரணம்...

யாரோ சில போராளிகள் போராடி தனி நாடு அமைக்கட்டும் நாங்களும் எங்களின் பிள்ளைகளும் படித்து நல்ல வேலையிலை இருக்க வேண்டும்.. எண்று சிங்கள தேசம் நோக்கி புறப்பட்டவர்கள் வெளி நாடு நோக்கி புறப்பட்டவர்கள் எண்று எங்களது மக்கள் 35 லட்ச்சம் பேரில் 90% க்கும் மேலை வெளியில் இருந்து பார்வையாளர், அல்லது விமர்சகர்கள் எனும் வட்டத்துக்கை இருந்தனர்... இதில் ஆதரவு கொடுத்த மக்களில் முழு நேர போராட்ட ஆதரவாளர் என்பது வெறும் 1 % க்கும் குறைவு...

தமிழீழம் எண்று அமைந்தால் அதில் படித்தவர்கள் வேண்டாமா எண்று தூர நோக்கோடு எல்லாம் பார்த்தவர்கள் அதிகம்...

ஆனால் அப்படி ஒண்றை அமைக்க எல்லாருமாக 100% தமிழரும் சேர்ந்து ஒரு 2 வருடம் போராடி இருந்தால் இந்த சுந்ததிரத்தை பெற்று இருக்க முடியும்...

அதுக்காக புலிகள் பல தடவைகள் வேண்டினார்கள்... வேண்டினார்கள் எண்று சொல்வதை விட வீதி வீதியாக பாடசாலை பாடசாலைகளாக போய் கெஞ்சினார்கள் எண்று சொல்வது மிகையானது அல்ல...

எங்களவர்கள் பாஸ் எடுத்து கொழும்பு போவதற்கு காட்டிய வேகத்தையும் அர்ப்பணிப்பையும் சிங்களவனை விரட்டுவதில் காட்ட முயற்சித்து இருந்தால் சிங்களவன் எப்போதோ விரட்டி அடிக்க பட்டு இருப்பான்....

ஆனாலும் இளைவர்களுக்கு பாஸ் கொடுக்காது காலத்தை இழுத்து அடித்து உணர்வை ஊட்டலாம் எண்று புலிகளால் முயற்சிக்க மட்டுமே முடிந்தது... அதிலையும் பாஸ் தராமல் வதைத்தார்கள் புலிகள் எண்று குற்றம் சொல்ல முடிந்த தமிழன் சிங்களவனோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டான்... எண்று சொல்வது மிகையும் அல்ல...

ஆக மொத்தம் விடுதலை மீது ஆர்வம் இல்லாத ஒரு இனம் என்ன நிலையை அடைய வேண்டுமோ அந்த நிலையை அடைந்து இருக்கிறது... இதை சொல்ல எனக்கு எந்த கவலையும் இல்லை...

இதிலை இன்னும் கேவலம் எல்லாம் இருக்கிறது அது முக்கியமாக தமிழர்களின் தோல்விக்கு பழியை தூக்கி போடுவதுக்கு ஆள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது...

நன்கு திட்டமிடப்பட்டு இப்போது புலிகள் மீதும், தலைவர் மீதும் தோல்விக்குக்க் காரனம் போடப்படுகிரத்து, இதை எல்லா உறுப்பினரும் செய்வதில்லை நன்கு திட்டமிடப்பட்டு ஒரு சில கள உருப்பினர்களால் செய்யப்படுகிரது. அவ்ர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.