Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்து' என்.ராம் பேட்டி - இலங்கையில் பார்த்தது..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இந்து' என்.ராம் பேட்டி

இலங்கையில் பார்த்தது..!

போரினால் தன் சொந்த நாட்டிலேயே சொந்த பந்தங்களையும்வீடு வாசல்களையும் இழந்து அகதிகளாக மாறியிருக்கும் ஈழத் தமிழர்களை, அவர்கள் அடைபட்டுக் கிடக்கும் முகாம் களுக்குச் சென்று சந்தித்ததோடு, இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஷேவையும் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், 'இந்து' நாளிதழின் முதன்மை ஆசிரியர் என்.ராம். ''ஈழத் தமிழர்கள் அடை பட்டுக் கிடக்கும் முகாம்கள், இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான அகதிகள் முகாம்களைவிட மேம்பட்டதாக இருக்கிறது...'' என்று அவர் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

இதையட்டி அவர் வெளி யிட்டிருக்கும் படங்கள் மற்றும் கருத்து களை கடுமையாக விமர்சிக்க ஆரம் பிக்கின்றன, ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள். இணைய தளங்கள் வழியாகக் கடுமையான கருத்துகள் பரிமாறப்பட்டு வரும் சூழ்நிலையில், 'இந்து' ராமை அவருடைய அலுவலகத் தில் சந்தித்தோம்.

இலங்கைப் பயணத்தின் முன்னோட் டத்தை முதலில் பகிர்ந்து கொண்டார் ராம்.

''இலங்கையில் ராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்,

தமிழர் பிரதிநிதிகள் என்று பலரையும் பத்திரிகையாளர் என்ற முறையில் தொடர்புகொண்டு, தொடர்ந்து பேசி வந்திருக்கிறேன். அதேபோல இலங்கை ஜனாதிபதி மஹிந்தா ராஜ்பக்ஷே என்னுடைய தொடர்பில் இருக்கக்கூடிய ஒருவர்தான். அவ்வப்போது என்னுடன் அவர் தொலைபேசியில் பேசுவார். ஆஃப் தி ரெக்கார் டாகவும் அவ்வப்போது பல விஷயங்களைப் பேசு வார்.

பிரபாகரனின் மரணத்துக்குப் பிறகு, அங்கிருக்கும் நிலைமை குறித்து அறிந்துகொள்ள, நான் இலங்கை சென்றுவர விரும்பினேன். ஜூன் 30-ம் தேதி இலங்கை சென்று, இரண்டு நாள் தங்கியிருந்தேன். இரவு ஜனாதிபதி ராஜபக்ஷேவுடன் உணவு அருந்தினேன். அப்போது அவரைப் பேட்டி கண்டேன். ஜனாதிபதி ராஜபக்ஷேவின் பேட்டி, இரவு பதினொரு மணியைத் தாண்டியும் நீண்டது. அப்போது, 'தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு சென்று நேரில் பார்த்து வாருங்களேன். அதற்கு ஏற்பாடு செய்கிறேன்...' என்றார் அவர். எனக்கும் அதுகுறித்து அறியும் ஆர்வம் இருக்கவே, ஒப்புக்கொண்டேன். எத்தனை மணிக்கு கொழும்பிலிருந்து கிளம்பவேண்டும், எப்படிப் போக வேண்டும் என்று துவங்கி பல விஷயங்களை அவரே என்னிடம் விளக்கினார்.

அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு ஹெலிகாப்டரில் கிளம்பி னோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்தில் வவுனியா சென்றோம். வவுனியா முகாமில் சுமார் மூன்று மணி நேரம் இருந் தேன். இலங்கையின் பல்வேறு முகாம்களில் மொத்தம் மூன்று லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். சுமார் 1,500 ஏக்கருக்குப் பரந்து விரிந்திருக்கும் இந்த முகாமில் மட்டும் ஒரு லட்சம் பேர் தங்கவைக்கப் பட்டிருக் கிறார்கள். அங்கு நான் பார்த்த வரையில், ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த அதிகாரி கள் இருக்கிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், அங்கு தங்கி தமிழர்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கின்றன. ஏன், நம் நாட் டில் இருந்துகூட எட்டு டாக்டர்களும் நான்கு செவிலியர்களும் அங்கு சென்று சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த பத்திரி கையாளர்கள் அங்கு போக வேண்டும், போகக்கூடாது என்பதில் அரசுத் தரப்பினர் கவனமாக இருக்கிறார்கள். தற்போதுதான் போரிலிருந்து மீண்டிருக்கிறார்கள் அவர்கள். இந்தச் சூழ்நிலையில், முகாமில் தங்கவைக்கப் பட்டிருக்கும் மக்களை சந்திக்கச் செல்கிறோம் என்ற பெயரில், அங்கே மேற்கொண்டு எந்த குழப்பமும் யாரும் செய்துவிடக்கூடாது என்பதால்தான் அவர்கள் இத்தனை தூரம் கவனமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்'' என்றவரிடம் நம் கேள்விகளை வைத்தோம் -

''அந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலைமை மிகமிக மோசமாக இருப்ப தாகத்தானே செய்திகள் வருகின்றன?''

''அவை தவறானவை. ஒரே ஒரு பிரச்னை மட்டும் இருக்கிறது. அதுவும் தலையாய பிரச்னை... கழிவறைகள் போதுமான அளவுக்கு இல்லாததுதான் அந்தக் குறை பாடு. இதை ஜனாதிபதி ராஜபக்ஷே, என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அவரே சொன்னார். இந்த விஷயத்துக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் மிகமிக மெதுவாக செயல் படுவதால்தான் இந்த நிலைமை என்றும் சொன்ன அவர், 'அதற்கான நிதியை ஏனோ இலங்கைக்கு விரைந்து அனுப்ப ஏற்பாடு செய்யாமல் இருக்கிறார்கள்...' என்று சொல்லி வருத்தப்பட்டார்.''

''வவுனியா முகாம்களில் திறந்தவெளி சிறைச் சாலை மாதிரி - சொல்லப்போனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகளுக்குள்ளே அவர்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறதே..?''

''இந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள், அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்பது உண்மை. முகாமைச் சுற்றி வேலி இருப்பதும் உண்மை. அங்கே காவலுக்கு ராணுவம் இருப்பதும் உண்மை. ஆனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகள் என்ப தெல்லாம் வெறும் கற்பனை. இப்படிச் சொல்வதால் அங்கே வேறு பிரச்னைகள் வரவே வாய்ப்பில்லை என்று அர்த்தமில்லை. மழை வந்தால் அங்கே புது பிரச்னைகள் வரலாம். ஆனால், நம்மூரில் இருக்கும் அகதிகள் முகாம்களைவிட அவை பல மடங்கு மேம் பட்டதாக இருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்!''

''முகாம்களில் சாப்பாடு, தண்ணீர் வசதி எல்லாம் எப்படி இருக்கிறது? நீண்ட க்யூ வரிசையில் மணிக் கணக்கில் மக்கள் நிற்க வேண்டியிருக்கிறதாமே..?''

''சாப்பாட்டுக்குப் பிரச்னையில்லை. தண்ணீருக்கும் பிரச்னையில்லை.''

''முகாமில் இருப்பவர்களுக்கெல்லாம் போதுமான அளவுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறதா?''

''அவர்களுக்கு சாப்பாடு வழங்கும்போது நான் பார்க்கவில்லை...''

''முகாம்களில் இருக்கும் மக்களிடம் நீங்களே பேசினீர்களா?''

''முகாமில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் முன்னி லையில், அவர்களிடம் பேசும்போது இரண்டு பேருக் குமே தர்மசங்கடங்கள் ஏற்படலாம். அதனால், அங்கி ருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேச முடியவில்லை. இருந்தாலும், 'எங்கிருந்து வர்றீங்க. என்ன படிக்கறீங்க?' என்பது மாதிரி பொதுவான கேள்விகளைக் கேட்டேன். ஒருசிலர் தாங்களாகவே முன்வந்து அவர்களின் குறைகளை சொன்னார்கள். எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அங்கிருந்த படியே ஆசிரியர் பணியில் இருக்கும் சிலர், 'எங்களுக்கு சம்பளம் மட்டும்தான் கிடைக்கிறது. படிகள் எதுவும் கிடைப்பதில்லை' என்றார்கள். வயதான ஒருவரிடம் 'இங்கே உங்களை யார் பாத்துக்கறது?' என்று கேட்டேன். அதற்கு அவர் கொஞ்சம்கூட யோசிக்காமல், 'என் உழைப்பு என்னை பாத்துக்கும்...' என்றார். நான் அவர்களை வியந்து பார்த்தேன்...''

''நீங்கள் சென்ற முகாமில் இளைஞர்களைப் பார்த் தீர்களா? இளைஞர்களை எல்லாம் ராணுவம் பிரித்து, வதை முகாமுக்குக் கொண்டு போய்விட்டதாகச் சொல்கிறார்களே? அதே மாதிரி குடும்பங்களை குலைப்பது மாதிரி கணவன் ஓரிடம், மனைவி ஓரிடம், பிள்ளைகள் ஓரிடம் என்று தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்களே...''

''எனக்குக் கிடைத்த தகவலின்படி வெறும் ஒன்பது ஆயிரம் பேர்... அதாவது புலிகளின் சார்பாக இலங்கை ராணுவத்தோடு போரிட்டவர்களைத்தான், இலங்கை ராணுவம் தனி முகாமில் வைத்திருக்கிறது. அவர்களைகூட சரியாகவே ராணுவம் நடத்தி வருகிறது. நான் பார்த்த முகாமில் மக்கள் குடும்பம் குடும்பமாகத்தான் இருந்தார்கள். அங்கே ஒருவர்கூட அழுது, நான் பார்க்கவில்லை. அவர்கள் மிக தைரியமாக இருக்கிறார்கள். இத்தனை குறுகிய காலத்துக்குள் அவர் கள் தங்களை எப்படி போரின் பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தார்கள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. இன்னொரு விஷயம், பலர் தங்கள் வீடு வாசலை விட்டுவிட்டு ஓடிவந்த போதுகூட தாங்கள் சேமித்து வைத்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். இந்தப் பணத்தையும் தங்க நகைகளையும் பத்திரப்படுத்த இலங்கை அரசு, இந்த முகாமில் இரண்டு வங்கிகளை நடத்துகிறது. நான் போனபோது மாணவர்கள் பலர் பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தார்கள

போகிற போக்கைப் பார்த்தால் நாளைக்கு கறுப்பி அக்கா, மகிந்தா, டக்லஸ், சங்கரி, கருணா,சுப்பிரமணியம் சுவாமி, சோ போன்றவர்களின் பேட்டியையும் இணைப்பார் போல கிடக்குது. இந்து ராமின் பேட்டியை விட நமிதா ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியை இங்கு இணைத்தால் கருப்பி அக்காவுக்கு புண்ணியம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் உள்ள தடுப்பு முகாம்களில் ஒன்றை வெளினாட்டவர்கள் பார்ப்பதற்கு என்று வைத்திருக்கிறார்கள். முதலில் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு சென்ற மக்களில் பெரும்பாலும் இங்கேயே வைத்திருக்கிறார்கள். வெளினாட்டவர்கள் வந்து பார்ப்பதினால் இதனை ஒரளவு வசதி படைத்ததாக சிறிலங்கா அரசு வைத்திருக்கிறது. அத்துடன் மக்களோடு மக்களாக இருக்கும் எட்டப்பர்களும், இராணுவ உளவாளிகளும் இங்கே இருக்கிறார்கள். சிறிலங்கா அரசினால் முன்பு விருது கிடைத்த இந்து ராமின் பேட்டி என்றால் கெகலிய இரம்புக்கெல அல்லது ரோகித போகலகாமாவின் பேட்டி போலத்தான் கிடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் நாளைக்கு கறுப்பி அக்கா, மகிந்தா, டக்லஸ், சங்கரி, கருணா,சுப்பிரமணியம் சுவாமி, சோ போன்றவர்களின் பேட்டியையும் இணைப்பார் போல கிடக்குது. இந்து ராமின் பேட்டியை விட நமிதா ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியை இங்கு இணைத்தால் கருப்பி அக்காவுக்கு புண்ணியம் கிடைக்கும்.

^_^

சிறிலங்கா அரசினால் முன்பு விருது கிடைத்த இந்து ராமின் பேட்டி என்றால் கெகலிய இரம்புக்கெல அல்லது ரோகித போகலகாமாவின் பேட்டி போலத்தான் கிடக்கும்.

கெகலியவும் போகலகாமாவும் ராம் அளவுக்கு கேவலமாக நடக்க கூடியவர்கள் அல்ல.

கந்தப்பு,

விகடனில் கருத்து எழுதும் சத்தியமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும் என நம்புகின்றேன் ^_^

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைவராக நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?

* இந்துவுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி ராஜபக்ஜ

புலிகள் ஒருபோதும் ஆயுதங்களை கைவிடார்கள் என்பதை நாம் அறிந்திருந்தோம். ஆரம்பத்திலிருந்தே இராணுவ நடவடிக்கைகளுக்கு நான் தயாராக இருந்தேன் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்து பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என். ராமுக்கு ஜனாதிபதி அளித்த பேட்டியின் இரண்டாவது தொகுதி நேற்று செவ்வாய்க்கிழமை அப்பத்திரிகையில் வெளியாகியிருந்தது. அப்பேட்டி இங்கு தரப்படுகிறது.

என். ராம்: 2005 இல் நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட போது இந்த மோதல் தொடர்பாக உங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது? 2005 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனமான மகிந்த சிந்தனையில் இது தொடர்பாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ""எமது நாட்டின் விடுதலை உன்னதமானது. நான் எந்தவொரு பிரிவினைவாதத்திற்கும் அனுமதியளிக்க மாட்டேன். எமது நாட்டின் ஜனநாயகத்தை அழிப்பதற்கு எவருக்கும் நான் அனுமதியளிக்க மாட்டேன். நான் சகல இன, மத அடையாளத்துவங்களையும் மதிப்பேன். எவருக்கு எதிராகவும் படைப் பலத்தை பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்வேன். தனிப்பட்டவர்கள் மற்றும் சமூக சுதந்திரம் என்பவற்றை பாதுகாக்கும் புதிய சமூகத்தை கட்டியெழுப்புவேன்' என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த கொள்கைப் பிரகடன அறிக்கையில் பிரிக்க முடியாத நாடு, தேசிய கருத்தொருமைப்பாடு, கௌரவமான சமாதானம் என்பன பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறானால், உங்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது, நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்றபோது உங்கள் எதிர்பார்ப்பு என்ன? மோதலுக்கு செல்வதற்கு முன்னர் உங்களிடம் எந்தவொரு திட்டமும் இருந்ததாகத் தென்படவில்லை.

ஜனாதிபதி: பயங்கரவாதம் குறித்து நான் மிகவும் தெளிவாக இருந்தேன். தமிழர்களின் உணர்வுகளை நசுக்க நான் விரும்பியிருக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே பயங்கரவாதம் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருந்தேன். அதனாலேயே நான் வெற்றியடைவேன் என்று துரிதமாக எனக்கு தெரிந்திருந்தது. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்குமாறு கோத்தாவை (அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ஷ) வரவழைத்தேன். நீங்கள் போக முடியாது. இங்கு காத்திருக்க வேண்டும் என்று அவருக்கு கூறினேன். அதுவே ஆயுதப் படைகளின் தளபதிகளை நான் தெரிவுசெய்த முறைமையாகும். செய்வதற்கு தயாராக அவர்களை நான் தேர்ந்தெடுத்தேன். பின்னர் புலிகளுக்கு நான் செய்தியை அனுப்பினேன். ""வாருங்கள் நாங்கள் பேச்சுவார்த்தையை நடத்தலாம், ஆராயலாம்' என்று செய்தியனுப்பினேன். நான் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தேன். மிகவும் நடைமுறைச் சாத்தியமானவராக நான் இருந்தேன். ""நீங்கள் விரும்பிய எதனையும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், தேர்தல்களில் நீங்கள் ஏன் போட்டியிட முடியாது. இப்போது உங்கள் கைகளில் ஆயுதங்களை வைத்திருப்போராக நீங்கள் இருக்கிறீர்கள். மக்களை தெரிவுசெய்யுமாறு கேளுங்கள். மாகாண சபைக்கு தேர்தல்களை நடத்தலாம். அதன் பின்னர் நாம் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் மூலம் நான் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். ஆனால், ஆயுதங்களை வைத்திருப்போருடன் என்னால் பேசமுடியாது' அவர் (பிரபாகரன்) இழைத்த பாரிய தவறு இதுவாகும். நான் யதார்த்தவாதியாக நடைமுறைச்சாத்தியமான மனிதராக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

லலித் வீரதுங்க: ஜனாதிபதி 2005 நவம்பர் 19 இல் நியமிக்கப்பட்டார். அவருடைய ஆரம்ப உரையில் இந்த மனிதருக்கு (பிரபாகரனை) அழைப்பு விடுத்தார். நவம்பர் 27 இல் பிரபாகரனின் மாவீரர் தின உரையில் ஜனாதிபதி யதார்த்தவாதி என்று குறிப்பிட்டிருந்தார். (புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது அமைப்புக்கு அறிவிக்கையில் புதிய ஜனாதிபதியின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான அணுகுமுறையை பொறுத்திருந்து அவதானிப்போம். சில காலத்திற்கு அதனை அவதானிப்போம். ஏனெனில், ஜனாதிபதி ராஜபக்ஷ யதார்த்தவாதி என்றும் நடைமுறைச் சாத்தியமான அரசியலில் ஈடுபட்டுள்ளவர் என்றும் கருதப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்). அவர் இதனை கூறியிருந்தார். ஜனாதிபதி தமது உரையில் நான் அந்த கடைசி எல்லை வரை செல்ல விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் டிசம்பர் 5 இல் அவர்கள் 13 அப்பாவி படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். தமது சகாக்களுக்கு உணவு எடுத்துச் சென்ற ஆயுதங்களற்ற படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவ்வாறே இது (அந்த மோதல்) ஆரம்பமானது.

ஜனாதிபதி: அச்சமயத்திலும் கூட நான் எதனையும் செய்யவில்லை. ஆனால், பின்னர் என்ன நடைபெறுகிறது என்பதை அறிந்துகொண்டேன். அதன் பின்னர் எனது பாதுகாப்பிற்காக ஆரம்பித்தேன். பிறகு எமது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டியிருப்பதாக கோதாபய கூறினார். சகலதும் அவர்களால் திட்டமிடப்பட்டது. ""நீங்கள் எதனை விரும்புவீர்கள். ஆரம்பிக்கத் தயாரா? என்று நான் கூறினேன். ஆயினும், அவர்களின் (புலிகள்) பின்னால் நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால், தெற்கில் ஆட்கள் வேலையை தொடங்கிவிட்டார்கள் என்று எனக்கு தெரியவந்தது. பின்னர் நான் புலிகளை எச்சரித்தேன். ""இதனைச் செய்யவேண்டாம், என்னை கடுமையான நிலைப்பாட்டிற்கு தள்ள வேண்டாம் என்று எச்சரித்தேன்.

லலித் வீரதுங்க: பின்னர் நீங்கள் அவர்களுடைய தலைவர்களில் ஒருவருடன் பேசுமாறு என்னை அனுப்பியிருந்தீர்கள்.

ஜனாதிபதி: நான் அவரை அனுப்பினேன். நான் ஜெயராஜை அனுப்பினேன். (கொழும்பு செட்டி சமூகத்தைச் சேர்ந்த தமிழ் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவரும் அரசியல்வாதியுமான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, அவர் 2008 ஏப்ரல் 6 இல் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்).

லலித் வீரதுங்க: 2006 இல் சோதனைகள் இன்றி பல சோதனைச்சாவடிகளின் ஊடாக சென்றேன். ஜனாதிபதி கூறினார். ""இப்போது செல்லுங்கள் உங்களை அடையாளம் காட்ட வேண்டாம்' பின்னர் அவர் அவர்களுக்கு ""நான் ஒருவரை அனுப்புகிறேன். அவர் யார் என உங்களது ஆட்களால் கண்டுபிடிக்க முடியாது' என்று அவர்களுக்கு அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி: பாதுகாப்புத் துறையினருக்கு நான் கூறினேன் ""அங்கு ஒருவரை என்னால் அனுப்ப முடியுமாக இருந்தால் உங்களின் பாதுகாப்பு என்னமாதிரி' பல மாதங்களுக்கு பின் நான் அவர்களுக்கு கூறினேன் அவர் (லலித் வீரதுங்க) அவர்தான் அங்கு சென்றவர். உங்களுக்கு அதனைத் தெரியுமா என்று கூறினேன்.

லலித் வீரதுங்க: அதற்கு அப்பால் அவர் சென்றிருந்தார்.

என். ராம்: பலவீனத்தை பார்க்கவா?

லலித் வீரதுங்க: இல்லை. பேச்சுவார்த்தைக்கு

ஜனாதிபதி: பேச்சுவார்த்தை நடத்தவும் பலவீனத்தை பார்ப்பதற்குமாகும். பின்னர் நான் ஜெயராஜை அனுப்பினேன். சிங்களத்திலுள்ள சில உண்மைகளை அவர் கூறியிருந்தார். அதனை அவர்கள் விளங்கிக்கொண்டனர். நீங்கள் கொல்லப்படுவீர்கள் (தொடர்ந்து இந்தப் பாதையில் அவர்கள் சென்றால்)

என். ராம்: பின்னர் மாவிலாறு சம்பவம் ஆரம்பமானது.

ஜனாதிபதி: அதுவே அவர்கள் எனக்கு பச்சை விளக்கு காட்டிய நேரம்.

என். ராம்: ஆனால், ஆகஸ்ட் 2006 இலேயே நீங்கள் நன்கு ஆயத்தமாக இருந்துள்ளீர்கள்?

ஜனாதிபதி: ஆம். அதற்கு முன்பே, அவர்கள் இராணுவத் தளபதியை கொல்வதற்கு முயன்றார்கள்.

லலித் வீரதுங்க: ஏப்ரல் 2006 இல் இராணுவத் தளபதியை அவர்கள் கொல்வதற்கு முயன்றனர். பின்னர் ஒரு சுற்று குண்டுவீச்சு நடத்த ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிபதி: ஆம். நான் கூறினேன். நாம் ஒருதடவை செல்வோம். நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். பேச்சுவார்த்தை ஊடாக எம்மால் முடிந்தளவுக்கு வழியைக் கண்டுபிடிக்க முயன்றோம்.

லலித் வீரதுங்க: ஜெனீவாவிலும் வேறு இடங்களிலும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவர்கள் (புலிகள்) பேச்சு நடத்தக்கூட விரும்பியிருக்கவில்லை.

ஜனாதிபதி: பேச்சுவார்த்தை இன்றியோ அல்லது எந்தவொரு காரணமுமின்றியோ இந்த இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே அதற்கு (இராணுவ நடவடிக்கைகளுக்கு) நான் தயாராக இருந்தேன். எனக்கு தெரிந்திருந்தது ஏனென்றால், எனக்கு அனுபவம் இருந்தது. அவர்கள் ஒருபோதுமே ஆயுதங்களை கைவிடமாட்டார்கள் என்பதை நாம் அறிந்திருந்தோம். நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருந்தோம்.

லலித் வீரதுங்க: இது தொடர்பாக சொல்ஹெய்முடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வம் காட்டியது குறித்து நான் உங்களுக்கு கூறுகிறேன். மார்ச் 2006 இல் நான் அங்கிருந்தேன். சொல்ஹெய்ம் ஜனாதிபதியை சந்திக்க வந்தார். ""பிரபாகரன் இராணுவ ரீதியில் திறமையானவர் நடவடிக்கையின் போது நான் அவரை பார்த்துள்ளேன்' என்று அந்த இந்த விடயங்களைக் கூறினார். ஜனாதிபதி தெரிவித்தார் ""அவர் வடக்கின் காடுகளுக்குள் இருக்கின்றார். நான் தெற்கின் காட்டுக்குள் இருந்து வந்துள்ளேன். யார் வெற்றியடைவார்கள் என்று நாம் பார்ப்போம்' பின்னர் நியூயோர்க்கில் ஜனாதிபதி அமைச்சர் சொல்ஹெய்மை சந்தித்தார். இராணுவ ரீதியில் திறமையானவர் என்பது தொடர்பான உரையாடலை சொல்ஹெய்முக்கு ஞாபகப்படுத்தினார். 2007 இல் கிழக்கு வெற்றிகொள்ளப்பட்டிருந்தது. இப்போது பாருங்கள் வடக்கில் என்ன நடக்கப்போகின்றது என்று ஜனாதிபதி கூறியிருந்தார்.

என். ராம்: புலிகள் பலவீனமான நிலையில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்ட பின்னர் அவர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அது உங்களை கடுமையாக பாதித்ததா?

ஜனாதிபதி: படையினருக்கு உரிய அறிவுறுத்தல்களையும் அவர்களுக்கு அவர்கள் விரும்பியவற்றையும் கொடுத்தால் எமது ஆட்கள் அவர்களை தோற்கடிப்பார்கள் என்ற உணர்வு ஆரம்பத்திலிருந்தே எனக்கு இருந்தது. அவர்கள் (புலிகள்) வெளிக்காட்டுவது யதார்த்தபூர்வமானதல்ல என்ற உணர்வை நான் எப்போதும் கொண்டிருந்தேன். ஆனால், நாங்கள் மேற்கொண்ட முறைமையில் தவறு இருந்தது. அவர்களிடம் ஆட்கள் இருந்தார்கள், ஆயுதங்கள் இருந்தன. இலங்கையை மட்டுமல்ல தென்னிந்தியாவையும் அவர்கள் தாக்கியிருக்கக்கூடும். அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் இலங்கை மீதான தாக்குதலுக்கு மட்டுமல்லாமல் அதிகளவில் இருந்தன. எமது ஆயுதப்படைகள் கண்டுபிடித்த ஆயுதங்களின் தொகை நம்பமுடியாத அளவு இருந்தது. எமது புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் 15 ஆயிரம் போராளிகள் இருப்பதாக கூறியிருந்தனர். ஆனால், அதுதான் எண்ணிக்கை அல்ல என்று எனக்கு தெரிந்திருந்தது. நான் ஒரு வட்டாரத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. புலிகளிடம் இவற்றிலும் பார்க்க அதிக தொகை இருப்பது எனக்கு தெரிந்திருந்தது. புலிகளை குறைத்து மதிப்பிட்ட வேலையை நான் ஒருபோதும் செய்திருக்கவில்லை.

என்.ராம்: அப்படியானால் அவர்கள் உலகில் மிகவும் இரக்கமற்ற, சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பென்று நீங்கள் கூறுகிறீர்கள்.

ஜனாதிபதி: ஆம். உலகிலேயே மிகவும் கொடூரமான வளம் நிறைந்த பயங்கரவாத அமைப்பாகும். நன்கு ஆயுத தளவாடங்களும், சிறந்த பயிற்சியும் பெற்றிருந்தனர்.

என்.ராம்: அவர்களின் இறுதித் தந்திரோபாயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கரையோர பகுதியில் சிறிய நிலப்பரப்பில் புலிகளின் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் இருந்தனர். இது உலகிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்கள் எதனை எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் துணிச்சலான பதில் தாக்குதல் மேற்கொள்ள விரும்பியிருந்ததாக எமக்கு எழுதும் பி.பி.எஸ். ஜெயராஜ் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி: அவர்கள் தப்பிச்செல்லவே விரும்பியிருந்ததாக நான் நினைக்கிறேன். இறுதிக் கட்டத்தில் தம்மை யாரோ வந்து கொண்டுசெல்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இல்லாவிடில், அவர்கள் அங்கே சென்றிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கடற்புலித் தளம் இருந்தது. கப்பலை, ஏன் நீர்மூழ்கியைக் கூட மிகவும் நெருக்கமாக கொண்டுவருவதற்கான ஒரேயொரு இடமாக அது இருந்தது. அவர்கள் தமக்கென சிறப்பான இடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். ஒருபுறம் கடல், மறுபுறம் வாவி இதற்கிடையில் சிறிய நிலப்பரப்பு இருந்தது. ஆனால், பின்னர் உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இடமாக அது அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் தெரிவுசெய்திருந்தனர். ஆனால், ஆயுதப்படைகள் அவர்களை அங்கு செல்ல வைத்தனர். மோதல் சூனியப் பகுதிகள் ஆயுதப்படைகளால் அறிவிக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சிக்குப் பின்னர் மோதல் சூனியப் பகுதிகளுக்கு செல்லுங்கள் என்று கூறியிருந்தனர். ஆதலால், சகலரும் அங்கு சென்றனர். இந்தப் பகுதி ஐ.நா. வால் வரையறை செய்யப்பட்ட பகுதிகள் அல்ல. அவை எமது படையினரால் வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். அவர்களை ஓரங்கட்ட முழுத் திட்டமும் எமது படையினரால் தீட்டப்பட்டது. இராணுவம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கிலிருந்து வடக்கிற்கும் சகல பக்கமாகவும் முன்னேறியது. ஆதலால், எமது உபாயம் வகுப்போரால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர் என்று என்னால் கூறமுடியும்.

லலித் வீரதுங்க: 2009 ஜனவரி 1 இல் கிī

ஜனாதிபதி: சரணடைந்த பெண் ஒருவர் அவர்கள் 6 அல்லது 7 பெண்கள் (புலிகளின் பெண் போராளிகள்) தீர்மானித்திருந்தார்கள் அந்தப் பெண் தனது அறிக்கையில் கூறியிருந்தார்; இறுதியில் 2 அல்லது 3 பேர் சயனைட்டை அருந்தி தங்களை தாங்களே கொன்றனர்; பின்னர் 3, 4 பெண்கள் கூறினார்கள் ""சரி. நாங்கள் கற்பழிக்கப்படுவோமா அல்லது எம்மை நாமே கொல்வோமா அல்லது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவோமா என்பதை நாம் பார்ப்போம், இந்த ஆபத்தான வேலையை நாம் எடுத்துக்கொள்வோம்' பாடசாலை ஆசிரியர் ஒருவர் சரணடைந்திருந்தார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை. அவரால் இதனை நம்ப முடியவில்லை. எம்முடன் போராடுவதற்காக அரசாங்கத்தால் அவருக்கு ஊதியம் வழங்கப்பட்டிருந்தது. அதேசமயம், நாங்கள் இப்போது சகல அரசாங்க ஊழியர்களுக்கும் (வடக்கின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த) எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்தகாலத்தை மறந்துவிடுங்கள். இந்த அமைப்புகளுடன் நீங்கள் பணிபுரிந்துள்ளீர்கள். இப்போது அங்கு காத்திருக்க முடியாது. நாங்கள் உங்களுக்கு ஊதியத்தை வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்று நான் அவர்களுக்கு கூறப்போகிறேன். இப்போது ஆசிரியர்கள் அவசியம் செல்ல வேண்டும். ஏனையவர்கள் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வந்த பொதுமக்கள் முதல் நாள் வங்கியில் வைப்புச் செய்த பணம் 450 மில்லியன் ஆகும். மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகியவற்றில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. கணிசமான அளவு தங்கமும் வைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. இராணுவம் மிகவும் ஒழுக்கமுடையதாக உள்ளது.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.