Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் தோற்றது ஏன்?

Featured Replies

சுகன், அண்மையில் நுணாவிலான் புறநிலை அரசு சம்மந்தமாக இணைத்த ஓர் ஆங்கிலக்கட்டுரைக்கு எழுதப்பட்ட ஓர் பின்னூட்டலில் இதே கருத்து ஒன்று சொல்லப்பட்டு இருந்தது. அதாவது புறநிலை அரசு என்பதை தமிழ்மக்களுக்கான புனருத்தாரண அமைப்பு என்று உருவாக்கவேண்டும் என்று. குறிப்பிட்ட அமைப்பு வளர்ச்சி அடைந்தபின்னர் படிப்படியாக அதில் மாற்றங்களை ஏற்படுத்தி புறநிலை அரசுக்குரிய தோற்றத்தை கொண்டுவரலாம்.

  • Replies 98
  • Views 9.9k
  • Created
  • Last Reply

இப்படி தேவையான நடவடிக்கைகளுக்கே சொந்த வேலைகளை விட்டு பலர் உதவ முன் வரவில்லை... இப்படி இருக்கும் போது புலிகளின் உதவியாளர்களாகவா வேலை செய்யவா அலைமோதி இருப்பார்கள்...

அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் இருக்கிறீங்கள் தயா? ஆபத்துக்கு உதவ முன்வருகின்றார்கள் இல்லை என்றால் அதற்கான காரணம் என்ன? பழைய மனக்கசப்புக்களும் இதற்கு ஓர் காரணமாக இருக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீங்களோ? நீங்கள் மற்றவனை கால்நடையாக நடக்கவிட்டு நீங்கள்மட்டும் வண்டியில போய்க்கொண்டு இருந்துபோட்டு பிறகு வண்டி பஞ்சர் ஆகியதும் கால்நடையாக போனவனை பார்த்து வண்டியை தள்ளச்சொல்லிகேட்டு அவன் தள்ளமுடியாது என்று சொன்னதும் அதற்காக அவன்மீது கோபித்தால் அது யார் தவறு?

மீண்டும் சொல்கிறேன்..! ஈழத்தமிழன் ஒரு செல்லாக் காசு..! அவனைத் திரும்பிப் பார்க்க எவனுக்குமே நேரமில்லை..! அதற்கான தேவையும் இருந்ததில்லை..! புலிகளின் தோற்றத்துக்குப் பின்னர் இரண்டு நாய்களாவது திரும்பிப் பார்த்தன‌..! இன்று அதுவும் இல்லை..!

நான் சிலவேளைகளில் யோசிப்பது உண்டு என்ன என்றால்.. இந்த இந்தியா எங்களுடன் சும்மா சொறியாமல் தன்பாட்டுக்கு இருந்து இருந்தால் - அதாவது தமிழ் இயக்கங்களுக்கு ஆயுத உதவி, பயிற்சிகள் எல்லாம் வழங்கி ஊக்குவிக்காமல் மாலைதீவு போல இலங்கைக்கு just ஓர் அயல்நாடு என்று இருந்து இருந்தால்.. நாங்கள் தமிழ்மக்கள் இப்போது இருப்பதைவிட பலமடங்கு சிறப்பாக வாழ்ந்து இருக்கலாமோ என்று. இந்தியா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி இருக்கிது.

சோனியா, கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி, நாராயணன், ராம் என்று பல்வேறு கொள்ளிக்கட்டைகள் உள்ள இந்தியாவுடன் அரசியல் செய்யாமல், அவர்களிண்ட காலடியிலபோய் விழாமல் பேசாமல் மகிந்தவிண்ட காலடியிலபோய் விழுந்து இருந்தால் - பேசாமல் சிங்களவனுடன் சமரசம் செய்து ஒத்துப்போய் இருந்தால்.. நாங்கள் இப்போது இருக்கும் இந்த நிலமை நிச்சயம் வந்தும் இருக்காது, இந்த அழிவும் ஏற்பட்டு இருக்காது. இப்படி நான் சிந்திப்பது உண்டு.

என்னதான் நடந்தாலும் நாங்கள் சிங்களவனுடன் ஒரேவீட்டுக்குள் வாழப்போகின்றோம். இலங்கை என்ற சிறுதீவுக்குள் என்னதான் நடந்தாலும் தமிழரும் சிங்களவரும் சேர்ந்து இருக்கவேண்டும். அடிமைகளாக, நண்பர்களாக, எதிரிகளாக... இப்படி..

ஆனால்..

எங்களுக்கு இந்தியா பக்கத்துவீடு. பக்கத்துவீட்டில் தற்காலிகமாக தங்கலாம். ஆனால் பக்கத்துவீட்டில் எங்கள் நிரந்தர வாழ்க்கையை அமைக்கமுடியாது. எங்கள் நிரந்தர வாழ்க்கை எங்கள் வீட்டிலேயே அமையமுடியும் - அதுவும் சிங்களவனுடன். ஏன் என்றால் நாங்கள் பக்கத்துவீட்டில் தற்காலிகமாக தங்கினாலும் சிங்களவன் தனது வீட்டில் இருந்து ஒருபோதும்கூட - தற்காலிகமாகக்கூட அசையபோவதில்லை.

இந்தவகையில்.. பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டிவிடுகிற கொள்ளிக்கட்டை இந்தியாவைவிட சிங்களவன் எங்களுக்கு முக்கியமானவனாய் தெரிகின்றது.

இந்தியா தனது சுயநலத்துக்காக சிங்களரிடையேயும் தமிழரிடையேயும் விரிசல்களை ஏற்படுத்தி அதை ஊக்குவித்துவிட்டது. இந்தியா தனது சுயநலனுக்காக தமிழர்களிடையே விரிசல்களை மோதல்களை ஏற்படுத்தி அதை ஊக்குவித்துவிட்டது.

சிங்களவனைவிட மோசமான பேர்வழி - சிங்களவனைவிட மோசமான கொள்ளிக்கட்டை இந்தியாவே என்று நினைக்கத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா. அப்படி என்றால் ஏன் அங்கு இருந்து ஐயோ எங்களை காப்பாற்றுங்கோ என்று கூச்சல் போடுறீங்களாம்? உங்களுக்கு உங்கள் அலுவலுகளுக்கு மட்டும், உங்கள் தேவைகளுக்கு மட்டும் புலம்பெயர் மக்கள் வேண்டும். ஆனால் அவர்கள் விமர்சனம் மட்டும் செய்யக்கூடாது. அதாவது பொத்திக்கொண்டு அங்கிருந்து என்ன சொல்லப்படுகின்றதோ அதை இங்கு இருக்கும் மக்கள் செய்யவேண்டும்? இதைத்தானே சொல்லுறீங்கள் நாரதர்? புலிகள் தோல்வியை சந்தித்தமைக்கு முக்கிய ஓர் காரணங்களில் இதுவும் ஒன்று!

மரியாதையாகக் கதைத்துப் பழகுங்கள். என்ன கூச்சல். உயிரைக் காக்கவென்றும், இந்த விடுதலைப் போராட்டத்தைக் காட்டி அசலம் அடிச்சுப் பிழைப்புத் தேடுகின்ற ... வெட்கமே இல்லாமல் எப்படித் தான் பேச முடிகின்றதோ??

அங்கிருந்து இதைச் செய், அதைச் செய் என்று சொன்னாலே ஒன்றும் புடுங்கின்றதில்லை. அதிலை சுயமாகச் அசய்வோம் என்று பீலா வேறு..

நீங்கள் என்ன உருப்படியாக நாட்டுக்குச் செய்து கிழித்தீர்கள். சுயமாகச் சிந்தித்து....

( கருத்துக்கள் எதுவும் தனிநபர் சார்ந்தவையல்ல))

ஈழத்தமிழரின் கொடிய துன்பங்களில் இந்தியா மற்றும் சிங்கள போரினவாதம் இரண்டின் பங்கும் சம அளவில் எப்போதும் உள்ளது. இந்தியா போட்ட பல கணக்குகளை தவறிப்போக இறுதியில் ஈழத்தமிழனை காவுகொடுத்து இலங்கையின் நட்புறவை நாடி நிற்கின்றது இந்தியா. தமிழ்நாட்டு அரசியலை திருத்த முடியாது. தமிழ்நாட்hல் ஈழத்தமிழர் சார்பாக இந்தியாவை என்றைக்கும் மாற்ற முடியாது. தமிழீழம் என்ற ஒரு நிலைஅற்று இலங்கையர்களாக தமிழர்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இலங்கையர்கள் இந்தியனுக்கு எதிராக என்றைக்கும் இருக்க முடியும். அதாவது இலங்கையர்களில் கணிசமானளவு மக்கள் இந்தியனுக்கு எதிராக என்றைக்கும் இருப்பார்கள். இந்த நிலை இலங்கை இந்திய நட்புறவில் என்றைக்கும் பிரச்சனையான ஒன்றாகவே இருக்கும். இவ்வாறான பிரச்சனைகள் ஊடாகவே இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றங்கள் வர ஒரு சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் நாம் பலவீனமாகவே இருக்கின்றோம்.

இப்போது செய்து கொண்டிருக்கும் தவறுகளை இன்னும் 5 ஆண்டுகள் கழித்து அலசுவோம்..... அப்போது செய்யப்போகும் தவறுகளை இன்னும் 10 ஆண்டுகள் கழித்து அலசுவோம்...

இப்படி கடந்த கால பிழைகளை அலசுவதில் தமிழனை மிஞ்ச முடியாதோ???

ஏன் இந்த 30 ஆண்டு கால போராட்ட வரலாற்றில் சிறப்பான சர்வதேச தமிழர் கட்டமைப்பை உருவாக்கா தவறினோம்!

அப்படி ஒன்றை உருவாக்கியிருந்தால் .... இப்போது இவ்வளவு குழப்பங்கள் ஏற்பட்டிருக்காதே

இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கைகளில் வன்னி மக்கள் வாழும் வதை முகாம்கள் சேர வேண்டும் அதற்கும் அழுத்தம் கொடுத்து நம்மால் சாதிக்க முடியுமா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா. அப்படி என்றால் ஏன் அங்கு இருந்து ஐயோ எங்களை காப்பாற்றுங்கோ என்று கூச்சல் போடுறீங்களாம்? உங்களுக்கு உங்கள் அலுவலுகளுக்கு மட்டும், உங்கள் தேவைகளுக்கு மட்டும் புலம்பெயர் மக்கள் வேண்டும். ஆனால் அவர்கள் விமர்சனம் மட்டும் செய்யக்கூடாது. அதாவது பொத்திக்கொண்டு அங்கிருந்து என்ன சொல்லப்படுகின்றதோ அதை இங்கு இருக்கும் மக்கள் செய்யவேண்டும்? இதைத்தானே சொல்லுறீங்கள் நாரதர்? புலிகள் தோல்வியை சந்தித்தமைக்கு முக்கிய ஓர் காரணங்களில் இதுவும் ஒன்று!

இப்படி அருவருப்பான கருத்துக்களை ஒருவரால் எப்படித்தான் எழுத முடிகிறதோ தெரியவில்லை. இவரின் கருத்துக்கள் புலிகள் ஏதொ தங்கள் தேவைக்குப் போராடினார்கள் என்பது போலவும் அதற்கு தான் உதவி செய்தது போலவும் இருக்கிறது. இப்படி இருப்பவர்களால் தான் எமது போராட்டம் தோற்றது. தமிழீழம் என்பது புலிகளுக்கல்ல. தமிழருக்கு என்பதைப் புரிந்திருந்தால் நிச்சயம் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றிருக்கும்.

Edited by தமிழ் மறவன்

இப்போது சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கைகளில் வன்னி மக்கள் வாழும் வதை முகாம்கள் சேர வேண்டும் அதற்கும் அழுத்தம் கொடுத்து நம்மால் சாதிக்க முடியுமா???

ஒரு கட்டத்தில் யுத்த நிறுத்தம் கோரியும் படுகொலைகளை நிறுத்தக்கோரியும் நடத்தப்பட்ட உச்சக்கட்ட ஆர்பாட்டங்கள் போல் தொடர் போராட்டங்கள் செய்தால் இது கவனத்தில் நிச்சயம் எடுக்கப்படும் ஏனெனில் இதில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உலகம் கணிசமானளவு செவிசாய்க்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதுவே முக்கியமானது. மீண்டும் படுகொலைகளை நிறுத்து என்ற ஆர்வமுடன் செயற்பட்டது போல் வதைமுகாம் மக்களின் பாதுகாப்பு மறுவாழ்வு குறித்து போராடும் முயற்சியை அதே வேகத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.

மரியாதையாகக் கதைத்துப் பழகுங்கள். என்ன கூச்சல். உயிரைக் காக்கவென்றும், இந்த விடுதலைப் போராட்டத்தைக் காட்டி அசலம் அடிச்சுப் பிழைப்புத் தேடுகின்ற ... வெட்கமே இல்லாமல் எப்படித் தான் பேச முடிகின்றதோ?? அங்கிருந்து இதைச் செய், அதைச் செய் என்று சொன்னாலே ஒன்றும் புடுங்கின்றதில்லை. அதிலை சுயமாகச் அசய்வோம் என்று பீலா வேறு.. நீங்கள் என்ன உருப்படியாக நாட்டுக்குச் செய்து கிழித்தீர்கள். சுயமாகச் சிந்தித்து....

நாங்கள் கோழைகளே. உயிரைக் காக்க அங்கிருந்து ஓடித்தப்பி இங்குவந்து அசைலம் அடிச்சு, பிழைப்புத்தேடி.. வெட்கமே இல்லாமல் பேசுகின்றோம். இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத புலம்பெயர் மக்களாகிய எங்களை இனி விட்டுவிடுங்களேன். பிறகு ஏன் புறநிலை அரசு மண்ணங்கட்டி என்று வெளிநாடுகளில் இங்கு இருந்து கழுத்து அறுக்கின்றீர்கள்? ஆயுதம் தூக்கி போராடி உயிரைக்கொடுக்கக்கூடிய தைரியசாலிகள் அங்கு போகவேண்டியதுதானே. நாங்கள் சுயமாகச் சிந்தித்து நாட்டுக்கு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால்... ஆகக்குறைந்தது பல்லாயிரம் மைல்கள் மரதன் ஓட்டம் ஓடி எங்கள் உயிரையாவது காப்பாற்றி இருக்கின்றோம். ஆனால்.. அங்கு உயிர்கள் எல்லாம் போய்விட்டதே!

சரி சுயமாக அங்கிருந்து சிந்தித்து நீங்கள் என்ன செய்தீர்கள்? 50,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டது, 50,000 இற்கும் மேற்பட்ட மக்களின் அவயவங்கள் துண்டாடப்பட்டது, 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அவர்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டது.

தைரியசாலிகளாக இருந்து உங்கள் சுயசிந்தனைமூலம் சிந்தித்து செய்யப்பட்ட காரியங்கள் மூலம் வந்த இந்த பேரரழிவைவிட... எங்களைப்போல் கோழைகளாக சுயமாக சிந்திக்க தெரியாமல் பொத்திக்கொண்டு குத்துக்கல்லாக இருந்து இருந்தால் எவ்வளவோ மேல்.

இதை நீங்கள் செய்வீர்கள் என்று நானும் இத்தனை நாள் காத்து இருந்தேன்....

இந்தியாவில் இருந்து கொண்டு எங்களால் ஒன்றையும் புடுங்க முடியாது....

ராணுவ வண்டியை தாக்கிய உணர்வாளர்களுக்கே இப்போது தான் பிணை கிடைத்துள்ளது... இனி அவர்கள் நீதிமன்றம் .. வழக்கு என்றே காலம் கழிக்க வேண்டிய நிர்பந்தம்...

இனி நீங்கள் வீதியில் இறங்கி போராடினால் .... புலிகள் சார்பான போராட்டமாக அதை திரிக்க முடியாது... உங்கள் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டிய கட்டயம் ஏற்படும்!

இந்தியா இலங்கையின் போர்க்குற்றக்களுக்கு துணை நின்றதையும் பிரசாரம் செய்து ... அதன் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் ஆகும் ஆசையில் மண் விழச்செய்ய வேண்டும்..

இதை எல்லாம் செய்யாமல் இருந்து கொண்டு சும்மா கதை விடுவதால் என்ன பயன்?????

இப்படி அருவருப்பான கருத்துக்களை ஒருவரால் எப்படித்தான் எழுத முடிகிறதோ தெரியவில்லை. இவரின் கருத்துக்கள் புலிகள் ஏதோ தங்கள் தேவைக்குப் போராடினார்கள் என்பது போலவும் அதற்கு தான் உதவி செய்தது போலவும் இருக்கிறது. இப்படி இருப்பவர்களால் தான் எமது போராட்டம் தோற்றது. தமிழீழம் என்பது புலிகளுக்கல்ல. தமிழருக்கு என்பதைப் புரிந்திருந்தால் நிச்சயம் இந்தப் போராட்டம் வெற்றிபெற்றிருக்கும்.

இப்படி அருவருப்பாக கருத்துக்களை எப்படி என்னால் எழுதமுடிகின்றது என்றால் இப்படியான நிலமையை பார்த்தபின்னர்: http://www.yarl.com/forum3/index.php?showforum=144

புலிகளுக்கு நான் உதவி செய்யவில்லை. ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக.. மனிதப்பேரவலம் நிகழும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என்று இல்லைத்தானே? புலிகளுக்கு உதவிசெய்தவர்கள் மட்டுமே மக்கள் அவலம்பற்றி பேசவேண்டும் என்று ஒரு விதிமுறையும் இல்லைதானே? இங்கு நான் கருத்து எழுதுவது.. வெற்றி தோல்விகளுக்காக அல்ல. எதிர்காலத்தில் இப்படியான அழிவுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக!

புலிகளைவிட... இப்படி மற்றவன் கருத்துச் சொல்லும்போது அவனது தொண்டையை திருகுகின்ற உங்களைப் போன்றவர்களாலேயே இப்படியான பேரவலம் ஏற்பட்டது. புலிகள் தோற்றமைக்கு உங்களைப்போன்ற தொண்டை திருகிகளும் காரணம். நீங்கள் மக்களின் பின்னூட்டல்கள் புலிகளுக்கு போய்ச்சேருவதற்கு தடையாக இருந்து இருக்கின்றீர்கள்.

இப்போதுள்ள வன்னி மக்களின் துன்பத்தை போக்க என்ன செய்யலாம் மாப்பிள்ளை?????

துன்பத்தை போக்க நாங்கள் என்ன செய்யலாம் என்பது ஒருபுறம் இருக்க... அவர்களுக்கு நாங்கள் மேலும் துன்பம் ஏற்படுவதற்கு காரணமாக இல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்று நீங்கள் சொல்லுங்கோ வேலவன்.

புலம்பெயர்ந்த நீங்கள் அத்தனை பேரும் மீண்டும் தாயகம் திரும்பி விடுங்கள்.....

அவர்களுக்கு துன்பம் கொடுக்க வேண்டும் என்பதே சிங்களன் நோக்கம்.....

நீங்கள் சும்மா இருப்பதால் அவன் நோக்கம் எளிதாக நிறைவேறுகிறது...

சர்வதேச நாடுகளும் நீங்களே சும்மா இருப்பதால் நமக்கென்ன என்று இருக்கின்றனர்.....

முகாம்களை சர்வதேச கண்காணிப்புகளுக்கு உட்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டாமா???

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்!!!

உங்களுக்கும் தமிழக தமிழனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விட்டது ........

சன் வெளியிடும் படங்கள் பார்த்து நன்றாக இருங்கள்....

உங்களை எல்லாம் புத்திசாலிகள் என நம்பும் தமிழகத்தில் சிலரது புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும்!

நிச்சயமாக... கொன்று போட்டால் கூடத் தப்பில்லை...

இன்றைக்கு எங்களின் குரல் ஒங்கியொலிக்காததால் தான் எதிரி தன் இஸ்டத்திற்கு மக்களைப் போட்டுத் துன்புறுத்துகின்றான். ஆனால் அதை யாருக்கும் வெளியில் தெரியாமல் இருட்டடிக்கின்றான். நாங்களும் அமைதியாக இருப்பதன் ஊடாக எதிரியின் செயலை மறைக்கத் துணை போகின்றோம்.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

புலம்பெயர்ந்த நீங்கள் அத்தனை பேரும் மீண்டும் தாயகம் திரும்பி விடுங்கள்.....

அதாவது எல்லாரும் ஆளையாள் கட்டிப்பிடிச்சுக்கொண்டு சேர்ந்து சாகலாம் என்று சொல்லுறீங்களோ?

அவர்களுக்கு துன்பம் கொடுக்க வேண்டும் என்பதே சிங்களன் நோக்கம்.....

சிங்களவனின் நோக்கம் தமிழருக்கு துன்பம் கொடுக்கவேண்டும் என்பது - அடக்கி ஒடுக்கவேண்டும் என்பது. ஆனால் நாங்களும் அதே நோக்கத்தை கொண்டு இருக்கலாமோ? அதாவது எங்கள் நோக்கமும் அங்குள்ள தமிழ்மக்களுக்கு துன்பம் ஏற்படுத்துவது என்பதாய் இருக்கலாமோ?

இங்கிருந்து ஐந்தாம் ஈழப்போர் செய்யலாம், புறநிலை அரசு அமைக்கலாம் என்று எல்லாம் சொல்லுறீனம். இதன் அடிப்படை அங்கிருக்கும் மக்களை இங்கிருந்து கட்டுப்படுத்துவது என்பதாயும் கொள்ளப்பட முடியும்தானே?

நாங்கள் சாதாரண மனிதர்கள் ஐயா. வலிகளை எங்களால் தாங்கமுடியாது. நீங்கள் தாராளமாக ஆயுதம் ஏந்தி போராடுங்கள். நீங்கள் தாராளமாக தமிழீழ தனி அரசை உருவாக்குவதற்காக பாடுபடுங்கள். புலிகளின் தலமை தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுக்கட்டும். எங்களுக்கு பிரச்சனை இல்லை.

ஆனால்...

மீண்டும் ஒரு சுடுகாட்டை இதுதான் தமிழீழம் இதுதான் போராட்டம். இதுதான் சுதந்திரம் என்று ஓர் மயானபூமியை சுட்டிக்காட்டி விடாதீர்கள்.

நான் ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். இந்த பாரிய மனிதப்பேரவலத்தை எங்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. இப்படித்தான் எதிர்காலத்தில் மீண்டும் அழிவு நடக்கப்போகின்றது என்றால் அப்படியான ஆபத்தான ஓர் வேலைத்திட்டத்தை கைவிடுவதே சிறப்பானது என்பது எனது கருத்து.

வெற்றி, தோல்விகள் மாறி , மாறிவரலாம். நாளைக்கு புலிகள் மீண்டும் ஓர் பாரிய தாக்குதலை நடாத்தலாம். ஆயிரக்கணக்கில் இராணுவங்கள் கொல்லப்படலாம். ஆனால்... இந்த மனிதப்பேரவலம் எப்போதும் நிலைத்து இருக்கப்போகின்றது. இந்த மனிதப்பேரவலமே எனக்கு எல்லாவற்றிலும் பெரிய தோல்வியாக தெரிகின்றது.

மக்கள் அழிந்த நிலையில் நிலம் பிடித்து என்ன... அதிகாரம் கிடைச்சு என்ன.. உயிரோடு உள்ளபோது சித்திரவதை செய்துவிட்டு உயிர் இல்லாத நிலையில் கவலைப்பட்டு என்ன செய்வது?

மக்களை காப்பாற்றுங்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். இதை அடிப்படையாக வைத்து அடுத்த படிகளுக்கு செல்லுங்கள்.

மக்களின் நிரந்தரமான பாதுகாப்புக்காக என்று சொல்லி இனியும் இருக்கும் கொஞ்ச நஞ்ச உயிர்களையும் பலிகொடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி அருவருப்பாக கருத்துக்களை எப்படி என்னால் எழுதமுடிகின்றது என்றால் இப்படியான நிலமையை பார்த்தபின்னர்: http://www.yarl.com/forum3/index.php?showforum=144

புலிகளுக்கு நான் உதவி செய்யவில்லை. ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக.. மனிதப்பேரவலம் நிகழும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என்று இல்லைத்தானே? புலிகளுக்கு உதவிசெய்தவர்கள் மட்டுமே மக்கள் அவலம்பற்றி பேசவேண்டும் என்று ஒரு விதிமுறையும் இல்லைதானே? இங்கு நான் கருத்து எழுதுவது.. வெற்றி தோல்விகளுக்காக அல்ல. எதிர்காலத்தில் இப்படியான அழிவுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக!

புலிகளைவிட... இப்படி மற்றவன் கருத்துச் சொல்லும்போது அவனது தொண்டையை திருகுகின்ற உங்களைப் போன்றவர்களாலேயே இப்படியான பேரவலம் ஏற்பட்டது. புலிகள் தோற்றமைக்கு உங்களைப்போன்ற தொண்டை திருகிகளும் காரணம். நீங்கள் மக்களின் பின்னூட்டல்கள் புலிகளுக்கு போய்ச்சேருவதற்கு தடையாக இருந்து இருக்கின்றீர்கள்.

Edited by விசுகு

நாங்கள் கோழைகளே. உயிரைக் காக்க அங்கிருந்து ஓடித்தப்பி இங்குவந்து அசைலம் அடிச்சு, பிழைப்புத்தேடி.. வெட்கமே இல்லாமல் பேசுகின்றோம். இப்படிப்பட்ட ஒன்றுக்கும் உதவாத புலம்பெயர் மக்களாகிய எங்களை இனி விட்டுவிடுங்களேன். பிறகு ஏன் புறநிலை அரசு மண்ணங்கட்டி என்று வெளிநாடுகளில் இங்கு இருந்து கழுத்து அறுக்கின்றீர்கள்? ஆயுதம் தூக்கி போராடி உயிரைக்கொடுக்கக்கூடிய தைரியசாலிகள் அங்கு போகவேண்டியதுதானே. நாங்கள் சுயமாகச் சிந்தித்து நாட்டுக்கு உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால்... ஆகக்குறைந்தது பல்லாயிரம் மைல்கள் மரதன் ஓட்டம் ஓடி எங்கள் உயிரையாவது காப்பாற்றி இருக்கின்றோம். ஆனால்.. அங்கு உயிர்கள் எல்லாம் போய்விட்டதே!

சரி சுயமாக அங்கிருந்து சிந்தித்து நீங்கள் என்ன செய்தீர்கள்? 50,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்டது, 50,000 இற்கும் மேற்பட்ட மக்களின் அவயவங்கள் துண்டாடப்பட்டது, 350,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அவர்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டது.

தைரியசாலிகளாக இருந்து உங்கள் சுயசிந்தனைமூலம் சிந்தித்து செய்யப்பட்ட காரியங்கள் மூலம் வந்த இந்த பேரரழிவைவிட... எங்களைப்போல் கோழைகளாக சுயமாக சிந்திக்க தெரியாமல் பொத்திக்கொண்டு குத்துக்கல்லாக இருந்து இருந்தால் எவ்வளவோ மேல்.

தப்பி ஓட ஏன் சுயமாக சிந்திக்க வேண்டும்? :icon_idea::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சொல்வார்கள்

பிணமாக இருந்தாலும் மாலை எனக்குத்தான் என்று.

நீங்கள் மாப்பிள்ளை

உங்களுக்குத்தான் எல்லாமே

போட்டுத்தாக்குங்கள்

எங்களுக்கு நேரம் சரியில்லை

என்னவோ எல்லாம் கேட்கவேண்டியுள்ளது

கூடுதலாக எழுதவிரும்பவில்லை

எல்லோரையும் அனுசரிக்க முயற்சிக்கிறேன்

நன்றி

இப்படி அருவருப்பாக கருத்துக்களை எப்படி என்னால் எழுதமுடிகின்றது என்றால் இப்படியான நிலமையை பார்த்தபின்னர்: http://www.yarl.com/forum3/index.php?showforum=144

புலிகளுக்கு நான் உதவி செய்யவில்லை. ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக.. மனிதப்பேரவலம் நிகழும்போது பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் என்று இல்லைத்தானே? புலிகளுக்கு உதவிசெய்தவர்கள் மட்டுமே மக்கள் அவலம்பற்றி பேசவேண்டும் என்று ஒரு விதிமுறையும் இல்லைதானே? இங்கு நான் கருத்து எழுதுவது.. வெற்றி தோல்விகளுக்காக அல்ல. எதிர்காலத்தில் இப்படியான அழிவுகள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காக!

புலிகளைவிட... இப்படி மற்றவன் கருத்துச் சொல்லும்போது அவனது தொண்டையை திருகுகின்ற உங்களைப் போன்றவர்களாலேயே இப்படியான பேரவலம் ஏற்பட்டது. புலிகள் தோற்றமைக்கு உங்களைப்போன்ற தொண்டை திருகிகளும் காரணம். நீங்கள் மக்களின் பின்னூட்டல்கள் புலிகளுக்கு போய்ச்சேருவதற்கு தடையாக இருந்து இருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்லஇ யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார். யூதர்களையும் தமிழர்களையும் ஒப்பிட்டு பிரபாகரன் தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் பேசியதாக கடந்த 08-07-2009 ஜூ.வி. இதழில் அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதி அன்றுஇ 'யுனைடெட் ஸ்டேட்ஸ் தமிழ் ஈழம் ஆக்ஷன் கமிட்டி' என்ற அமைப்பு ஈழ விடுதலைக்கான முன்னோட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புக்கு தலைவராக யூத இன மருத்துவரான இலைன் ஷாண்டர் என்ற பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

தயா, இங்கு நாங்கள் கருத்துக்களை பகிர்வது யார் மீதாவது பழிபோடுவதற்காக அல்ல. இனிவரும் பாதை அழிவுகள் குறைவானதாய் அல்லது அற்றதாய் இருப்பதற்கு முன்பு ஒரே மனநிலையில் இருப்பவர்களால் ஒன்றுபட்டவர்களாக இருக்கமுடியும். ஆயுதம் தூக்கி போராடி சாகவேண்டும் என்று நினைப்பவர்களும் ஆயுதம் தூக்கி போராடி சாவதற்கு முன்வராதவர்களும் ஒரே மனநிலையில் இருப்பவர்களாக கொள்ளப்பட முடியாது. புலிகள் மக்கள் என்பது உண்மை. ஆனால் புலிகள் மட்டுமே மக்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். புலிகள் அல்லாத மக்கள் அதாவது புலிகள்போல் போராடி சாவதற்கு முன்வராத மக்களும் இருக்கின்றார்கள். மேலும், இந்த இரண்டாவது வகையிலேயே பெரும்பான்மை தமிழ்மக்கள் அடங்குகின்றார்கள். எனவே, புலிகளாகியுள்ள மக்களும் புலிகள் அல்லாத மக்களும் ஒன்று என்று கூறுவது மிகவும் தவறானது.

இப்போ தமிழர்கள் ஆயுத போருக்கு வர வில்லையே தவிர அந்த ஆயுத போரை வர வேற்க்காதவர்களோ அல்லது வெற்றிகளை கொண்டாடாதவர்களோ கிடையாதே...

புலிகளின் வெற்றி செய்திகளை மட்டும் கொண்டாடியவர்கள் தங்களின் சுய நலனுக்காக தனது குடும்பம் உறவுகளை எல்லாம் போராட்ட பக்கம் போய் விடக்கூடாது எண்றுதானே விரும்பினார்கள்...

புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வந்த போது , மட்டக்களப்பை விட்ட போதும் இல்லை வன்னியின் பல பகுதிகளை விட்டு வந்த போதும் சரி புலிகள் திருப்பி அடிப்பார்கள் பிடிப்பார்கள் எண்றுதான் பெருண்பாண்மை தமிழர் விரும்பினார்களே அண்றி ஆயுதத்தை கீழே போட சொல்லி விரும்பவில்லையே...

நீங்கள் சொல்வது போல புலிகளால் முடியாது எண்று தமிழர்கள் நினைக்க கூட தலைப்பட்டு இருக்க வில்லை.... இதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா...???

அப்படி நினைக்க தலைப்பட்டவர்கள் பங்களிப்பை மட்டும் செய்ய முன் வரவில்லை எனும் உண்மை தெரிகிறதா...???

பலர் தங்களால் போராடும் துணிவை கொண்டு இருக்காதவர்கள்.. அவர் போராட போன உறவுகளுக்கு சொல்லும் அறிவுரை என்னவாக இருந்தது...?? தம்பி ( தங்கச்சி) செய்தது போதும் விட்டு போட்டு வா... இப்படித்தான் இருந்தது அறிவுரை... எல்லாமே தனது இயலாமையை மறைக்க மற்றவரும் போராடாது இருந்தால் தனது கௌரவத்தை காத்து கொள்ள முடியும் எனும் நப்பாசை...

இப்படி கெடுத்தவர்கள்தானே பலர்...

போராட போன பலரை உறவினர் வந்து நீ விட்டு போட்டு வராட்டால் நான் மருந்து குடுச்சு செய்து போவன் எண்று மிரட்டி கூட்டி வந்த பலர் இருக்கிறார்களே... நீங்கள் அறிந்து இருக்க இல்லையா...?? இல்லை பிள்ளை போராட்டத்தில் கொஞ்சம் அக்கறையாக இருக்கிறான் எண்று தெரிந்து கொண்டு கடன் வாங்கியாவது குடும்ப சுமையை தூக்கி அவன் தலையில் வைத்து வெளிநாட்டுக்கு பிடித்து அனுப்பிய பெற்றோரை நீங்கள் அறிந்து இருக்க இல்லையா...??

எல்லாமே சரியாகத்தான் இருந்தது... அதை கெடுத்தது யார்...??

Edited by தயா

ஊரில் சொல்வார்கள் பிணமாக இருந்தாலும் மாலை எனக்குத்தான் என்று. நீங்கள் மாப்பிள்ளை உங்களுக்குத்தான் எல்லாமே

போட்டுத்தாக்குங்கள் எங்களுக்கு நேரம் சரியில்லை என்னவோ எல்லாம் கேட்கவேண்டியுள்ளது கூடுதலாக எழுதவிரும்பவில்லை

எல்லோரையும் அனுசரிக்க முயற்சிக்கிறேன்நன்றி

குகதாசன் அண்ணா எனது எழுத்துக்கள், உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும். என்னைப் பொறுத்தளவில் இது ஓர் கருத்தாடல் தளம். நாங்கள் சில விசயங்களை பொத்தி வைக்காமல் மனம் திறந்து வெளியே சொல்லும்போது அதன்மூலம் பல்வேறு விடயங்கள் பற்றி சிந்தித்துப் பார்க்க முடியும். சிந்தனைகள் எங்களுக்கு சிந்தனைகளாகவே மட்டும் இருக்கலாம். ஆனால் அந்தந்த பொறுப்பில் பணியில் இருப்பவர்களுக்கு எங்கள் சிந்தனைகள் அவர்கள் எடுக்கப்போகின்ற எங்கள் அனைவரையும் பாதிக்கின்ற எதிர்கால முடிவுகளில் - தீர்மானங்களில் ஏதாவது ஓர் வழியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ செல்வாக்கு செலுத்தலாம். எனது நோக்கம் மேலே நான் கூறிய ஆயிரம் வரிப்புலம்பல்களில் ஏதாவது ஒரு வரியாவது குறிப்பிட்ட பொறுப்புக்களில் உள்ளவர்கள் தீர்மானங்கள் எடுக்கும்போது ஆக்கபூர்வமான வழியில் உதவவேண்டும் என்பதே.

மற்றும்படி மாலை ஆசை எதுவும் எனக்கு இல்லை. என்னைப்போன்ற விளக்குமாற்றுக்கு குஞ்சம் தேவை இல்லை என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். அவனவன் தாயகத்திற்காக உயிரைக் கொடுத்து இருக்கிறாங்கள். ஆனால்.. நான் ஆகக்குறைந்தது தாயகத்தில் இருந்தபோது ஓர் இரத்ததானமாவது கொடுக்கவில்லை என்பதை நினைத்து வெட்கப்படுகின்றேன். ஆனால்.. அதற்காக.. இப்போது எனது கருத்துக்களை கூறாது அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கவேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் நண்பரே

கவனமாக

கவுரமாக

கடமை உணர்ந்து

தமிழன் தலைவிதியை மாற்ற

எழுதுங்கள்

உங்கள் எழுத்துக்கள் ஒருவரை எம்முடன் இணைக்காவிடினும்

எவரையேனும் எம்மைவிட்டு பிரியாதிருக்க உதவட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.