Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்?

Featured Replies

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை.

nymh1.jpg

Newcomer Youth Mental Health Youth Project க்கு நான் எடுத்த படம்

மரணங்கள் சாதாரணமானவையல்ல ஆனால் ஒராள் இயற்கையா மரணமெய்தினால் அதைக் கொண்டாட 31 நாள் கணக்கு வைச்சிருக்கிறம். அதே ஒரு அவச்சாவு என்டால் 3 மாதத்துக்கு துக்கம் கொண்டாடுறம். ஆனால் குடும்பம் குடும்பமா கிராமம் கிரமமா எங்கட சனம் செத்துப்போனதுக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்? எத்தின நாள் அழுதனாங்கள்? யாரைப்பார்த்தாலும் யாருக்கு போன் பண்ணினாலும் ஒரே மரணம் பற்றிய செய்திகள். கொஞ்சாக்காலத்தில யார் யார் செத்தது யார் யார் உயிரோட இருக்கினமெண்டதே மறந்திடும் அவ்வளவுக்கும் மனங்கொள்ளாத செய்திகள் தினம் தினம் கேட்டு முடிச்சாச்சு. மரணச்செய்திகள் வந்த மாதிரி இன்னாருக்கு காலி்லை இன்னாருக்கு கையில்லை என்ற செய்திகள் பெருசா வந்துசேரேல்ல. ஒரு கட்டத்தில நேரில் அவர்களைச் சந்திக்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். அப்பிடி ஒரு காலம் வருமா? கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம்.

அவர்கள் அங்கிருந்து அனுபவித்த அதே கொடுந்துயரை அவர்கள் அளவுக்கு இல்லாவிடிலும் நாங்களும் அனுபவித்திருக்கிறோம். முந்தின காலங்களில் நடந்த கொடூரமான போர் பற்றிய செய்திகள் படங்கள் காணொளிகள் மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் இப்ப அங்க இருக்கிற மக்கள் தெரிஞ்சுகொள்ள முதலே நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ எங்களை அவை வந்தடைகின்றன. யுத்தகள படங்களைப் பார்ப்பதால் அப்பிடி என்ன பாதிப்பு வந்திடப்போது என்று நானும் நினைச்சிருக்கிறன் ஆனால் ஒரு கட்டத்துக்குப்பிறகு செய்திகளைப் பார்க்காமல் ஒதுங்கியிருக்க முயற்சித்தபோதும் ஈமெயில் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் மரணங்களையும் இரத்தத்தையும் சதையையும் பார்த்துப்பார்த்து மரணங்கள் சாதாரணம் என்று மனம் பழகிப்போனாலும் அந்த வடுக்கள் எங்களுக்குள்ளேதான் இருக்கு.

வியட்நாம் போரிலிருந்து திரும்பிவந்த போர்வீரர்களின் குணமாற்றங்களைப் படித்தே நெருக்கீட்டுக்குப் பின்னான உளவடு (Posttraumatic stress disorder (PTSD))என்ற ஒன்றைக் கண்டுபிடித்தார்கள்.அது யாருக்கு இருக்கு யாருக்கில்லை என்று சொல்றது என்ர நோக்கமில்லை. ஆனால் எங்கட மனசில ஒரு கொடுந்துயருக்குப்பின்னான வடு இருக்குது என்டது மட்டுமுண்மை. உண்மையா துயர் இன்னும் முடியேல்ல அது தொடர்ந்துகொண்டேதான் இருக்கு. இருந்தாலும் கடந்த மாதங்கள் போல எப்பவும் சாவுச்செய்தியும் மரணங்களின் எண்ணிக்கைகளும் வாறதில்ல.

retraumatization என்று சொல்லப்படுகிற கொடுந்துயர் பற்றிய பழைய நினைவுகளால் வரும் மனவுளைச்சலும் ஒரு சிக்கல்தான். உதாரணமா எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நாங்கள் படிச்சது வளர்ந்தது எல்லாமே செல்லடிக்குள்ளயும் குண்டுச் சத்தத்திலயும்தான். பள்ளிச்சீருடையோட பங்கருக்குள்ள ஓடியிருக்கிறம் மேசைக்குக் கீழ விழுந்து படுத்திருக்கிறம். அதையே நாங்கள் காணொளிகளில " குத்தப்போறான் படுங்கோ " என்டு கதறிக்கொண்டு குழந்தைப்பிள்ளைகளைப் பாதுகாக்க முயற்சிக்கிற தாய்மாரைப் பார்க்கேக்க எனக்கு என்ர ரீச்சர்மாற்ற ஞாபகம் வாறது. அவையள் கனவிலயும் வாறவை. இது ஒரு சின்ன உதாரணம் தான். இலங்கையை விட்டு வரும்போது பாலியல் ரீதியா மனவுளைச்சலுக்கு்ள்ளாகி அல்லது வன்புணரப்பட்ட ஒரு பெண் இப்ப தடுப்புமுகாம்களில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்படும்போது அவளுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்து அவளுடைய அன்றாட வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

இந்த வடுக்களிலிருந்து நாங்கள் விடுபடணும். மனசில ஏற்படுற மாற்றங்கள் எங்கட உடம்பையும் பாதிக்கும். மனசு பலவீனமாகேக்க உடம்பின் நோய் எதிர்ப்புச்சக்தியும் குறையும். அப்பிடிக் குறையிறதாலே சாதாரணமா வாற காய்ச்சல் தலைவலி கூட நீண்டநாட்களுக்குத் தொடரும். அதால மனசைப் பலவீனம் அடையாமல் வைச்சிருக்கிறது நல்லது. ஆனால் அது எப்பிடி என்டு எனக்கும் சரியாத் தெரியேல்ல.

சில நேரம் வேலையில ஒரு ஆலோசகரா மற்றாக்களுக்கு ஆலோசனை வழங்கிற எனக்கு எனக்கு ஆலோசனை தர யாருமில்லையா என்று யோசிச்சிருக்கிறன். யார் யாரையோ நீங்கள் எப்பிடியிருக்கிறீங்கள் என்று கேக்கிறம். ஆனால் ஒருநாள் எங்கட நெருங்கின நண்பர்களையோ எங்கட குடும்பத்தினரையோ மனசார உண்மையான அர்த்தத்தோட நீங்கள் நல்லா இருக்கிறீங்கிளா? மனசும் உடம்பும் நல்லா இருக்கா என்று கேக்கிறமா? மனசாட்சியைத்தொட்டு சொல்லுங்கோ பார்ப்பம். நான் அப்பிடிக் கேட்டதில்லை என்னையும் யாரும் கேட்டதில்லை.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களில் ஈடுபட்டதால நேரமின்மை ஒரு பிரச்சனை. அல்லது இருக்கிற நேரத்தையும் எப்பிடி அட்டவணைப் போட்டு பயன்படுத்தலாம் என்று தெரந்துகொள்ளாமல் இருக்கிறன். வீட்டிலுள்ளவர்களினதும் சரி வெளியிலுள்ளவர்களினதும் சரி அவர்களுடைப பிரச்சனைகளையும் என் தலையில போட்டுக்கொள்றது மிகப்பெரிய பிரச்சனை. எல்லாத்துக்கும் மேல "NO: இல்லை என்னால முடியாது என்று சொல்லத் தெரியாமலிருக்கிறது". இப்பிடியிருக்கிறதால மற்றவர்களின் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ற மாதிரி எனக்கென்ன பிரச்சனை என்ற தெளிவில்லாதது அப்பிடியே தெரிந்தாலும் அதை வெளிப்படையா பகிர்ந்துகொள்ளாமல் இருக்கிறது.

எல்லாருக்கும் ஏதொ ஒரு சுமை ஏதொ ஒரு பிரச்சனை. எங்களில எத்தினை பேர் பக்கத்தில இருக்கிறாளைப் பார்த்து நேசத்தோட கதைக்கிறம். ஏதோ கடமைக்கு hello how are you? என்டிட்டு எங்கட வேலையைச் செய்றம். நான் புலம்பிறனோ என்டு தோணுது ஆனால் ஒரு வேளை மற்றவர்கள் இப்பிடி நினைச்ச நேரத்தில நான் அவைக்கான இடத்தையோ நேரத்தையோ குடுக்காமல் இருந்திட்டனோ தெரியாது ஆனால் நான் யாரிட்டயும் மனம் விட்டுப்பேசோணும் என்று நினைக்கிற தருணத்தில சுற்றியிருக்கிறவர்கள் எல்லாமே தங்கட சுமைகளைச் சுமப்பதில் பிஸியாக இருக்கினம். யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ :

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது...

நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது...

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது...

பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது!

http://www.youtube.com/watch?v=7uq0DNFq26U

Edited by Snegethy

ஓ... நாங்களோ... நாங்கள் ஏற்கனவே மெண்டலாய்தான் இருந்தனாங்கள். இப்ப நிலமை ஆசுப்பத்திரியில கட்டிவைக்க வேண்டிய நிலமையில இருக்கிது. போகேக்க வரேக்க ஆசுப்பத்திரியுக்க எங்களைக்கண்டால்... அப்பிளும், தோடம்பழமும், கோர்லிக்சும் வாங்கிவாங்கோ சினேகிதி.

கட்டுநாயக்கா விமானநிலையத்தில் புலம்பெயர் தமிழ் மக்களால் நடத்தப்பட்ட கண்டன ஊார்வலங்கள் அனைத்தினுடைய ஒளிநாடாக்கள் ஒளிபரப்பப்பட்டு எங்களுடைய திருமுகங்கள் அந்த ஒளிநாடாக்களில் வருகிறதா என்று பார்த்துத்தான் நாட்டுக்குள் விடுகிறார்களாம்.

நீங்கள் எழுதினதில எனக்கு மனவுளைச்சலை தந்தது இது தான் ஏனென்றால் நான் ஊருக்கு போக இருந்தனான் ஆனால் பயமாய் இருக்கு ,ஈழம் கிடைக்கும் என்ற துணிவில முன்னுக்குபோய் நின்று குரல் கொடுத்துபோட்டேன் இப்ப ஊருக்கு போக பயமாக இருக்கு,விமான நிலையத்தில என்ற பட்மும் இருக்கோ தெரியாது

  • 1 month later...

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.

கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ இருக்கிற கோவத்தை வருத்தத்தை வேறயாரிடமாவது அல்லது ஒரு சடப்பொருள் மேலயோ காட்டிக்கொண்டிருக்கிறம் இல்லையா? நீங்கள் எப்பிடியோ தெரியாது ஆனால் கொஞ்சநாளா நான் நடந்துகொள்ற விதம் எனக்குப் பிடிக்கவே இல்லை. கிட்டடில ஒருநாள் ஒரு நண்பனிட்ட ஏதோ கேட்டதுக்கு " உம்மோட பெரிய உபத்திரம்" என்று வெகு சாதாரணமா சொன்ன விசயம் நானே எதிர்பாராத அளவிலான வலியைத் தந்தது. உண்மையா கடந்த மாதங்களில் நடந்த விசயங்களால எங்கட மனங்கள் மரத்துப்போயிருக்கும் என்று நினைச்சன் நான். ஆனால் ஒரு சின்ன விசயத்துக்கே உடைஞ்சு போறளவுக்கு மனம் பலவீனமாயிருக்கு என்டதுதான் உண்மை.

யாராவது நீ எப்பிடி இருக்கிறாய் ? நல்லா இருக்கிறியா என்று கேக்க மாட்டினமா என்டு நான் நினைச்சன். பிறகுதான் தெரிஞ்சது இதே நிலையில மற்றாக்களும் இருக்கினமெண்டு.

நீங்களும் இப்பிடி உணர்ந்தால் இந்தப்பாட்டைக் கேளுங்கோ :

வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது...

நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது...

உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது...

பிறரை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது!

http://www.youtube.com/watch?v=7uq0DNFq26U

ம‌ன‌ச்சுமைக‌ள் வித்யாச‌மான‌வை...

அது அத‌ன் கார‌ண‌த்தை ஒட்டி...அது உள்ள‌ ம‌ன‌சின் தைரிய‌த்தை ஒட்டி இருகின்ற‌து.

சில‌ர் சில‌ சின்ன‌ விச‌ய‌த்துக்கே உடைவார்க‌ள். சில‌ர் அப்ப‌டி இல்லை..

சில‌நேர‌ம் அதை சிம்பிளாக‌ எடுத்து போக‌லாம் என்டு ம‌ன‌ம் நினைத்தாலும்...அதை முடியாம‌ல் மீண்டும் அதே புள்ளிக்கு வ‌ந்து சேர்ந்து விடுவோம்.

ம‌ற்ற‌வ‌ரின் ஆறுத‌லோ..இல்லை கார‌ண‌ம் ஆன‌வ‌ரின் ஆறுத‌லோ எல்லாவ‌ற்றிற்க்கும் ஆறுத‌ல் வ‌ரும் என்டில்லை. என்னைப் பொறுத்த‌வ‌ரையில் நாங்க‌ளே நாங்க‌ளாக‌ நினைத்து உண்ர‌ந்து...புரிந்து ம‌ன‌சை ச‌ரி ப‌ண்ணினால் தான் உண்டு. அது கூட‌ ந‌ட‌ப்ப‌து கால‌ ஓட்ட‌த்தில் தான்...

எதுவும் எப்பிடியான‌ க‌ஷ்ட‌மும் ம‌ன‌ உளைச்ச‌லும் கால‌த்தில் ம‌றைய‌லாம்..ம‌ற‌க்க‌லாம்...மாற

‌லாம்..

உங்க‌ ப‌திவுக்கு ந‌ன்றி சினேகிதியே! இப்போ தான் க‌ண்டேன்!

ந‌ல்ல‌ பாட‌லும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதினதில எனக்கு மனவுளைச்சலை தந்தது இது தான் ஏனென்றால் நான் ஊருக்கு போக இருந்தனான் ஆனால் பயமாய் இருக்கு இஈழம் கிடைக்கும் என்ற துணிவில முன்னுக்குபோய் நின்று குரல் கொடுத்துபோட்டேன் இப்ப ஊருக்கு போக பயமாக இருக்குஇவிமான நிலையத்தில என்ற பட்மும் இருக்கோ தெரியாது

Jil இந்த பெயரில் போனால் இங்க சிலதுகள் காட்டி கொடுத்தாலும் கொடுக்குங்கள் எதுக்கும் கவனமாக போங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.