Jump to content

ஒரே ஒரு கணம் ..........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரே ஒரு கணம் ..........

நகரத்தின் ஒதுக்கு புரமான் தொரு கிராமத்தில் , ஆச்சி யம்மாள் தன் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். அவளது நான்கு பிள்ளைகளில் கோவாலு தான் ஆண் மகன். கணவன் ஒரு பிரச்சினை காரணமாக் ஊருக்கு வருவதே இல்லை. கிட்ட தட்ட கைம்பெண் நிலையிலே இருந்தாள் ஆச்சியம்மாள்.

காலம் கடந்து போக பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். மூத்தவள் காயத்திரி ...மணப்பருவம் எய்தினாள் . ஆச்சியம்மாள் வாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்த பணத்தை எண்ணி சரிபார்த்து விட்டு . ஒரு கலியாண தரகரை பார்க்க போனாள். மறுவாரமே கலியாணமும் சரி வந்தது ........மாபிள்ளை ...பெண் பார்த்தபின் அடிக்கடி வரதொடங்கினார். வரும் கார்த்திகை மாதம் கலியாணம் என நிச்சயமாகியது . மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாகவே இருந்தனர். இவர்கள் ஒரு சிறு காணியை குத்தகைக்கு எடுத்து அதில் வரும் விலை பொருட்களை விபதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஐந்து ஜீவன்களும் காலத்தை ஓட்டினார்கள்.

கோவாலு ஆண் மகன் தான் அதிக பிரயாசை எடுத்து கொள்வான். சகோதரிகளும் களை பிடுங்குதல் நீர் இறைக்க் உதவுதல் என்று கை கொடுப்பார்கள். திருமணம் முடித்து எண்ணி எட்டாம் மாதமுடிவில் , மணப்பெண் காயத்திரி அழகான் ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். டாக்டார் கூற்று படி குழந்தை நிறைமாதம் எனவே குறிப்பிடார் . காலம் தன் வேலையை செய்ய ....ஒரு வருடத்தால் மீண்டும் கருத்தரித்தாள். மாபிள்ளை தன் தாய் வீட்டுக்கு போகிறவன் அங்கேய சில நாட்கள் தங்கி விடுவான் . இவள் காயத்திரியும் போய் கூபிடாள் இவளுக்காக வருவான். இப்படியாக காலம் செல்ல செல்ல மாபிள்ளை சில சமயம் சீறி சினத்து விழுவான். தோட்டத்தில் உள்ளதை விற்க சென்றால் காசு கணக்கும் குறைவாகவே காட்டுவான் . காயத்திரியும் எதுவுமே கேட்பதில்லை. இதனால் கோவாலு மிகவும் மனமுடைந்து போனான் . தோட்டத்தை கவனிப்பதுமில்லை .நன்றாக் குடிக்க தொடங்கினான். சாதாரண நிலையிலும் அமைதி அற்றவனாகவே காணப்பட்டான். .

ஒரு நாள் மாப்பிள்ளை தாய் வீடு போனவன் வரவே இல்லை. ஊரார் பலவாறு கதைக்க தொடங்கினர். வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் பேசிக்கொண்டனர். கோவாலு ,வருவான் மாபிள்ளை என பார்த்து கொண்டு இருந்தவன் இரு வாரங்களாகியும் வரவேயில்லை..........அவனை பார்த்து வரும்படி ஆச்சியம்மாள் கோவாலுவை அனுப்பினான். அங்கு மாபிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

விறகு வெட்டும் வேலைக்கு போயிருப்பான் போலும் . அருகில் கிடந்த கோடரியை எடுத்து "சதக் " என ஒரே வெட்டு . கழுத்தில் பட்ட வெட்டினால் மாப்பிள்ளை துடி துடித்து இறந்தான். அன்று மாலையிலே அவன் கோவாலு பொலிஸாரால் கைது செய்ய படான் . வழக்கும் நடந்தது தீர்ப்பாகும் நாள் , ஊரிலே மிகத்திறமையான் சட்ட தரணியை கொண்டு வழக்கு பேசினார்கள் முடிவு .................அவன் ஒரு மன நோயாளிஎன்றும் . அந்த நாள் பூரணை நாள் என்பதால் அதன் தாக்கம் அதிகமாய் இருக்குமென்றும் ...நோய் காரணமாகவும் அதிகம் உணர்ச்சி வசபாட்டதாலும்அவன் அந்த கொலையை செய்தான் என்று தீர்ப்பாகியது .........

.சகோதரி விதவை ஆனாள். இரு குழந்தைகளுக்கு தாயானாள். கணவனை..என்ன இருந்தாலும் சகோதரன், தன் வாழ்வை அழித்து விட்டான் என்று கோப படாள் . கோவாலுவின் ஆத்திரம் ஒரு உயிரை காவு கொண்டது .....ஒரு தாயை விதவை ஆக்கியது ...........அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க பட்டது ...........

நாட்டின் சில விழா காலத்தில் கைதிகளை மன்னிப்பு பெற்று விடுதலையாவார்கள். . அப்படியான ஒரு காலத்தில் கோவாலுவும் விடுதலையானான். சில நாட்கள் ஊரார் கண்களுக்கு தென்படாது இருந்தான் அந்த ஊர் மக்களும் ஆச்சியமாள் குடும்பத்துடன் உறவு வைக்க , தயங்கினர். அந்த மாதத்தின் பெளர்ணமி இரவொன்றில் .....கோவாலு தூங்கி இறந்து கிடந்தான். ஆத்திரமும் அவசரமும் அவன் கண்களை குருடாக்கி அவன் சகோதாரி வாழ்வையும் பறித்து ...........தன்னையும் மாய்த்து கொண்டான்.

அவன் ஒரே ஒரு கணம் சிந்தித்து .... இருந்தால் ...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே ஒரு கணம் உங்கள் கதை வாசித்தேன். நன்றாய் இருக்கிறது அம்மணி.

கதையினை சொல்லும் விதம் அழகு. அற்புதம்.

வாழ்த்துக்கள்.

Posted

ஒரு கண நிதானம் எத்தனையோ சிக்கல்களைத் தீர்த்துவிடும் என்பதற்கு உதாணமாக நிலாமதி கதையமைந்திருக்கிறது.

கதையோட்டத்தினுள் வாசகரை வைத்திருக்க சற்றுச் சீர்படுத்தல் செய்யுங்கள். எதிர்காலத்தில் உங்கள் எழுத்துக்கள் செழுமை பெறும். பாத்திரப்படைப்புகள் வாசகரோடு வாழும்வகை அமைந்தால் சிறப்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி ........உங்கள் கருத்துக்கு நன்றி

.....சாந்தி...........உங்கள் அறிவுரையை கருத்தில் எடுக்கிறேன். வரும் காலங்களில் ,

தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை எதிர பார்க்கிறேன்.மிக்க நன்றி..

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.