Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலகங்கள் – ஆயுதக் குழுக்களை உருவாக்கும் இந்திய உளவு நிறுவனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலகங்கள் – ஆயுதக் குழுக்களை உருவாக்கும் இந்திய உளவு நிறுவனங்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‘எழும் தமிழ் ஈழம்’ என்ற தலைப்பில் நடத்திய இன விடுதலை அரசியல் மாநாட்டில் விளம்பர பேனர்களில் பிரபாகரன் படம் இருந்ததால் காவல்துறையே அந்த பேனர்களை அகற்றியது. மத்திய உளவுத் துறையினர் மாநாட்டை சீர்குலைக்கவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்றும், தி.மு.க ஆட்சிக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் தாம் தெளிவாக இருப்பதாகவும் தொல். திருமாவளவன் பேசியிருக்கிறார். மத்திய அரசை எதிர்த்தால் தமது அரசை எதிர்ப்பதைவிட கடுமையாகக் கோபம் கொண்டு செயல்படக் கூடிய ‘தமிழின’ ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதே உண்மை. எனவே தான் தொல் திருமாவளவன் பேசிய அடுத்த நாளே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசினால், 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத (தடுப்பு) நடவடிக்கைகள் சட்டம் பாயும் என்று தமிழக அரசு அவசர அவசரமாக அறிவித்து விட்டது. 50000 தமிழர்களை சிங்கள ராணுவம் ஒரே நாளில் பிணமாக்கியபோது, அதற்கு உடந்தையாக இருந்த காங்கிரசுக்கு, சிவப்புக் கம்பளம் விரித்த ஆட்சி, இதே ஆட்சிதான். தேர்தல் கூட்டணிக்காக தொல். திருமாவளவன் கூட இதை சகித்துக் கொண்டார். தி.மு.க. தலைவர் காங்கிரசின் துரோகத்தை எந்த நிலையிலும் எதிர்க்கத் தயாராக இல்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதியாகி வருகிறது. மத்திய அரசு உளவு நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களை தடுத்து நிறுத்தும் “தேச பக்தர்களும்” அல்ல; பல நாடுகளில் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்கியதே இந்த “உளவு” (Raw) நிறுவனம்தான். விடுதலை இராசேந்திரன் எழுதிய “தமிழ் ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி” நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

தீவிரவாத இயக்கங்களை மத்திய அரசும் – உளவுத் துறை நிறுவனங்களுமே உருவாக்கி வளர்த்து வருகின்றன. பலருக்கு இது வியப்பாக இருக்கலாம். ஆனால், மறுக்கப்பட முடியாத உண்மை.

பஞ்சாபில் பல்வேறு சீக்கியர் அமைப்புகள் ஆயுதப் போராட்டம் நடத்திய போது, உளவுத்துறையே, ஆயுதமேந்திப் போராடும் குழுவை உருவாக்கி பயிற்சி அளித்து, அவர் களுக்குள்ளே மோதல்களை உருவாக்கியது. அண்டை நாடான இலங்கையில் இந்திய அரசே, சில போராளிக் குழுக்களுக்குப் பயிற்சி அளித்து ‘சகோதர யுத்தத்தை’ ஊக்குவித்தது! இப்போது பொடா சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு அமைப்பு ‘போடோ (Bodo) தேசிய ஜனநாயக முன்னணி’ என்பதாகும். அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடி மக்கள் வாழும் பகுதியை தனி மாநிலமாக்கக் கோரி, ஆயுதமேந்திப் போராடிய அமைப்பு இது. இந்த அமைப்பு எப்படி உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? இதன் பின்னணி என்ன?

பொடா சட்டம் கொண்டு வரப்பட வேண்டி யதின் தேவையை வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையம், ஒரு அறிக்கை வெளியிட்டிருக் கிறது அல்லவா? அதே அறிக்கை, போடோ தீவிரவாதிகள் அசாமில் நிகழ்த்திய வன்முறைத் தாக்குதல்களையும் விவரித்திருக்கிறது.

“1997 இல் பொடோ தீவிரவாதிகள் 178 தாக்குதல்களில் 215 பேரைக் கொன்றனர். 1996 இல் 213 தாக்குதல்களில் 260 பேரைக் கொன்ற னர். 1997 இல் 10 பகுதிகளில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து 22 பேரை சாகடித்தனர். 1998 இல் இந்தத் தீவிரவாத நடவடிக்கைகள் மேலும் அதிகரித்தன.”

என்கிறது சட்ட ஆணையத்தின் பரிந்துரை. பொடா சட்டத்தின் தேவையை வலியுறுத்த, சட்ட ஆணையம் இந்த வாதத்தை முன் வைக்கிறது. ஆனால், இந்த போடோ தீவிரவாத அமைப்பை உருவாக்கி பயிற்சி அளித்ததே மத்திய அரசும் அதன் உளவுத்துறையும் தான்.

மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த திரு.வேத்மார்வா இந்தியாவின் தீவிரவாத இயக்கங்கள் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார், ‘Uncivil Wars: Pathology of Terrorism in India’ என்பது அந்நூலின் தலைப்பு. அதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் செயலாற்றுவதற்கான பயிற்சிகளை, போடோ தீவிரவாதிகளுக்கு முதன் முதலாக அளித்ததே, இந்தியாவின் சிறப்புப் பாதுகாப்புப் பிரிவுதான்! (SSB – Special Security Bureau) வெளியிலிருந்து வரும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக, போடோ மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தப் பயிற்சி தருவதாகக் கூறி னார்கள். சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் இந்தத் திட்டத்துக்கு அப்போதே எதிர்ப்புகள் வந்தன. குறுகிய கண்ணோட்டத்தில் எடுக்கப்படும் இந்த முடிவால், போடோ மக்களிடையே தீவிரவாதம் பரவப் போகிறது என்று, அப்போதே எச்சரித் தார்கள். 1980களின் பிற்பகுதியிலிருந்து போடோ தீவிரவாதம் வளரத் துவங்கியது” என்று எழுதி யிருக்கிறார், மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர்.

இப்படி மத்திய அரசின் நிறுவனங்களே உருவாக்கும் தீவிரவாத அமைப்புகள், ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராகவே திரும்புகின்றன. ஆனால் பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு வருவதற்கு இவர்களே உருவாக்கிடும் தீவிரவாத அமைப்புகளையே காரணமாக காட்டுகின்றன, இந்த ஆட்சிகள்! இவை மட்டுமா?

(1) வங்க தேசத்தைப் பிரித்தது:

பாகிஸ்தானில் வங்க மொழி பேசும், கிழக்கு பாகிஸ்தானை தனி நாடாக்கியதில் ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு பெரும் பங்கு உண்டு.

1970களின் முற்பகுதியில் பாகிஸ்தான் ராணு வம் பங்களாதேஷ் விடுதலை கோரிய மக்கள் மீது, கடும்தாக்குதலை நடத்தியது. இலட்சக் கணக்கில் மக்கள் அகதிகளாக, இந்தியாவுக்கு ஓடி வந்தனர். போராடிய பங்களாதேஷ் மக்களுக்கு ஆதரவாக தனி நாட்டை உருவாக்கி, பாகிஸ்தானை கூறு போட ‘ரா’ முடிவெடுத்தது. ‘முக்திவாகினி’ என்ற படையை ‘ரா’ உருவாக்கி, அதன் பெயரில் வங்க மொழி மக்கள் வாழும் கிழக்கு பாகிஸ்தானில் ஊடுருவி, கொரில்லா தாக்குதல் நடவடிக்கைகளில், ‘ரா’ நிறுவனம் இறங்கியது. பாகிஸ்தானின் உடைமைகள் நசுக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர், கிழக்கு பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு பாதைகளை அழித்தார்கள். இறுதி யில் பாகிஸ்தான் தோற்றது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ.ஏ.கே. நிசாரி, இந்திய ராணுவ தளபதி ஜெக்ஜித் சிங் அரோராவிடம், பாகிஸ்தான் ராணுவத்தை சரணடையச் செய்யும் ஒப்பந்தத் தில், 1970 டிசம்பர் 16 இல் கையெழுத்திட்டார்.

(2) ‘சிரிக்கும் புத்தர்’ நடவடிக்கை :

1974 மே 18 ஆம் தேதி இந்தியா – பொக்ரானில் முதன்முதலாக அணுகுண்டு வெடித்தது. அத் திட்டத்தை மிகவும் ரகசியமாக பாதுகாக்கும் பொறுப்பை ‘ரா’ நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இந்த அணுகுண்டு வெடிப்புக்கு சூட்டப்பட்ட பெயர் ‘சிரிக்கும் புத்தர்’ (டீயீநசயவiடிn ளுஅடைiபே க்ஷரனாய) என்பதாகும்.

(3) சிக்கிம் இணைப்பு:

இமயமலையின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடு சிக்கிம். சிக்கிமைச் சுற்றி, திபேத், நேபாளம், பூட்டான் நாடுகளும், மேற்கு வங்க மாநிலமும் அமைந்துள்ளன. சிக்கிமில் நடந்த மன்ன ராட்சியை இந்தியா அங்கீகரித்து, மன்னருக்கு ‘சோக்கியால்’ (தர்மராஜா) என்ற கவுரவப் பட்டத்தையும் வழங்கியிருந்தது. சிக்கிமில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு, இந்தியாவுக்கு ஆதரவான ஒரு ஜனநாயக ஆட்சியமைப்பை உருவாக்கும் பொறுப்பு 1972-ல் ‘ரா’ அமைப் பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கேற்ற சதித் திட்டங்களை ‘ரா’ உருவாக்கி, அரங்கேற்றியது மூன்றே ஆண்டுகளில் சிக்கிம், இந்தியாவின் 22வது மாநிலமாக, 1975 ஏப்.26 இல் இணைக்கப்பட்டது.

(4) பாகிஸ்தான்-பஞ்சாபில்:

பஞ்சாபில், காலிஸ்தான் தனிநாடு கோரும் போராட்டத்தை, சீக்கியர்கள் தீவிரமாக நடத்தியபோது, ‘ரா’ உளவு நிறுவனம், ஒரே நேரத்தில், இரண்டு ரகசிய முறியடிப்பு குழுக்களை உருவாக்கியது. ஒரு குழுவுக்குப் பெயர் – Counter Intelligence Team X(CIT-X); மற்றொரு குழுவுக்குப் பெயர் Counter Intelligence Team J(CIT-J) – முதல் குழு பாகிஸ்தானிலும் – இரண்டாவது குழு – காலிஸ்தான் போராட்டக் குழுவினரிடையேயும் ஊடுருவியது. காலிஸ்தான் போராட்டக் குழு ஒன்றை வழி நடத்திய ரபீந்தர்சிங் என்பவர். ‘ரா’ விரித்த வலையில் வீழ்ந்தார். பஞ்சாப் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கடத்தல் தொழில் நடத்தி வந்தவர் களைப் பயன்படுத்தி, அவர்கள் வழியாக ஆயுதங்களையும், நிதியையும், பாகிஸ் தானுக்கும், பஞ்சாபுக்கும் ‘ரா’ கொண்டு வந்தது. பஞ்சாபில் சீக்கியர் போராட் டத்துக்கு உதவி செய்த பாகிஸ்தான் உளவு நிறுவனமான ‘அய்.எஸ்.அய்.’யும், இதே வழியில்தான், ஆயுதத்தை – காலிஸ்தான் குழுவினருக்கு அனுப்பியது. காலிஸ்தான் கோரிக்கைக்கு போராடிய பல்வேறு குழுக்களே, ‘ரா’ உளவு நிறுவனத்தின் நடவடிக்கைகளால், தங்களுக்குள் மோதி, அழித்துக் கொண்டனர். இதில் ‘ரா’ நிறுவனத்துக்கு உதவிய ரபீந்தர்சிங் – 2004-ல், அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து விட்டார். “பஞ்சாபில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் தலையீட்டால் நடந்த காலிஸ்தான் கிளர்ச்சியை ஒடுக்குவதில் ‘ரா’வின் இந்த முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்தது” என்று, ராணுவ ஆய்வாளர் பி.இராமன் எழுதினார். இந்த நடவடிக்கை களுக்கு ‘ரா’ செலவிட்ட தொகை மிக மிக அதிகம். அய்.கே. குஜரால், பிரதமராக வந்தபோது, “இந்த நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று நிறுத்தினார்.

(5) மாலத்தீவு:

1988 இல் மாலத் தீவில், ஈழ விடுதலைக் குழுக்களில் ஒன்றான ‘புளோட்’ அமைப்பைப் பயன்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஏற்பாடு செய்த ‘ரா’ பிறகு, முயற்சி தோல்வியுற்றவுடன் கப்பல் மற்றும் விமானப் படைகளை அனுப்பி, கலகக் காரர்களைக் கைது செய்து, அப்துல் க்யூம் அரசை மீண்டும் நிலை நிறுத்தியது. இந்த நடவடிக்கைக்கு ‘ரா’ சூட்டிய பெயர் ‘ஆபரேஷன் கேக்டஸ்’ (Operation Cactus) என்பதாகும்.

(6) பர்மா:

அடர்ந்த காட்டுப் பகுதிகளைக் கொண்ட மியான்மர் நாடு – எப்போதுமே, இந்திய உளவு நிறுவனத்துக்கு கவலை தரும் பகுதியாகும். வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த பல ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்களுக்குப் பயிற்சித் தளமாக இப்பகுதி விளங்குகிறது. எனவே, இந்தப் பகுதியில் நடக்கும் அரசு, இந்தியாவுக்கு ஆதரவான அரசாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ‘ரா’ செயல்பட்டு வருகிறது. இதற்காகவே – பர்மிய கலவரக்குழு ஒன்றை ‘ரா’ உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ‘கச்சின் சுதந்திரப் படை’ என்பதும் ‘ரா’ உருவாக்கிய அமைப்பு என்று கூறப்படுகிறது. ‘கே.அய்.ஏ.’ எனும், இந்தக் குழுவுக்கு ஆயுதங்கள் தந்து உதவுவதோடு, இந்திய எல்லைக்குள், வைரம் போன்ற விலை உயர்ந்த கற்களைக் கடத்தி வர்த்தகம் நடத்தவும் ‘ரா’ உளவு நிறுவனம் அனுமதி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பின் தலைவர் மாறன் பிராங்சீய்ன் (Maran brangsein) என்பவர் ‘ரா’வின் தலைவரை, இரண்டு முறை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.

- நன்றி புரட்சிப்பெரியார் முழக்கம் -

http://www.meenagam.org/?p=8280

  • கருத்துக்கள உறவுகள்

"தன்வினை தன்னைச் சுடும்" என்பதை ஒருநாள் இந்தியா உணரும்போது கிந்தியாவென்ற தேசமும் அதுபோன்று மொழிவாரியான பல தேசங்கள் உருவாகுவது தவிர்க்க முடியாதுபோல் தோன்றுகிறது."றோ"வே வேகமாகத் தொடர்க உனது பணியை, ஏனெனில் எமது அழிவிலிருந்தாவது இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் மலரட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.