Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களைக் கொண்டு இயங்கும் யாழ்ப்பாணம் வங்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 24, ஆகஸ்ட் 2009 (20:59 IST)

தமிழர்களைக் கொண்டு இயங்கும் யாழ்ப்பாணம் வங்கி

இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் அனைத்து ஊழியர்களையும் தமிழர்களாகவே கொண்டு இயங்கும் கிளை ஒன்றை திறக்க கொழும்பு சம்பத் வங்கி முடிவு செய்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த பிறகு வட பகுதியில் வங்கிக் கிளையை திறக்கும் முதல் வங்கி இது.

இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது இந்த வங்கி.

வங்கிக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சுமார் 2000 மனுதாரர்களிடம் நேர்முகப் பேட்டி நடத்தி தகுதிவாய்ந்த 27 பேரை வேலைக்கு தேர்வு செய்துள்ளது வங்கி நிர்வாகம். இந்த 27 பேரில் 16 பேர் பட்டதாரிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருந்த நேரத்தில் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் ஈழ வங்கி என்ற பெயரில் வங்கிகள் செயல்பட்டன. ஆனால் விடுதலைப் புலிகளை ராணுவம் ஒடுக்க ஆரம்பித்ததும் ஈழ வங்கி இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடபகுதி நகரான யாழ்ப்பாணத்தில் அனைத்து ஊழியர்களையும் தமிழர்களாகவே கொண்டு இயங்கும் கிளை ஒன்றை திறக்க கொழும்பு சம்பத் வங்கி முடிவு செய்துள்ளது.

ஹ்ம்ம் ....... யாழ்ப்பாண வங்கி கிளையில் எல்லா ஊழியர்களும் தமிழர்களாக இருந்தால் , அதுவே செய்தி ஆகிற அளவுக்கு , எங்கடை நிலைமை இப்பிடியாப் போட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வங்கியின் ஊழியர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ளது இந்த வங்கி.

தேர்த்தல் நடாத்த மட்டும் தெற்கில் இருந்து ஆட்கள் கொண்டுவரப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்த்தல் நடாத்த மட்டும் தெற்கில் இருந்து ஆட்கள் கொண்டுவரப்படுகிறார்கள்.

இதன் கொள்கையே சிங்கள புத்த மத வங்கி.

தற்போது எல்லொரும் தமது சேமிப்புகளை வங்கிகளில் இருந்து எடுக்க தொடங்கி விட்டர்கள்.

இனி தமிழனிடம் இருந்து சுரண்ட வேண்டியதுதான். நாங்கள் இளிச்ச வாயல் என்று உலகத்துக்கே தெரியும்.

80 களில் என்று நினக்கிறேன் சுன்னாகம் இலங்கை வங்கிதான் இலங்கையில் உயர் சேமிப்பை கொண்ட வங்கியாக தெரிவு செய்தவர்கள்.

வடபகுதிகளில் வேலை செய்யும் வங்கி அதிகாரிகள், தமது பகுதி அபிவிருத்திக்கு என்று எதுவித உதவியும் செய்ய மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு கமிஸன் அதிகமாக கிடைக்கும்.

தென்பகுதிகளில் இவர்கள்.

வீதி பராமரிப்பு

வைத்திய சாலை க்கு உபகரணங்கள் வழங்கள்

பாடசாலை அபிவிருத்தி என்று செலவு செய்பவர்கள்

இப்படித்தான் செலான் வங்கியும் இருந்த இடம் தெரியாமல் போனது. அதுபோல் இதுவும் வருமா?

யாழ்ப்பாண மக்களுக்கு தெரியுமா த பினான்ஸ் கொம்பனி கதை.

Board of Directors :

Mr. I W Senanayake (Chairman)

Mr. Sunil G Wijesinha (Deputy Chairman)

Mr. Mohan A Abeynaike

Mr. Prasantha Lal De Alwis

Mr. Jayampathi D Bandaranayake

Mr. Denzil J Gunaratne

Mr. Ernest A Gunasekera

Mr. Lakshman J K Hettiaratchi

Dr. Saman Kelegama

Mr. Aravinda Perera - Executive Director/Chief Operating Officer

Mr. K D D Perera

Mr. Harris Premaratne - Executive Director/Chief Executive Officer

Mr. Ranjith Samaranayake_- Executive Director/Group Chief Financial Officer

Edited by Mullaimainthan

  • கருத்துக்கள உறவுகள்

100% தமிழ் பேசும் மாணவர்களை உள்வாங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கே இப்ப 20 தொடக்கம் 30% சிங்கள மாணவர்கள் வாறாங்க. இதை.. மொரட்டுவ.. பேராதனை.. கொழும்பு.. கிழக்கு.. தென் கிழக்கை.. பல்கலைக்கழகங்களைத் தவிர ஏனைய பல்கலைக்கழகங்களில் சிங்கள அரசால் ஏற்படுத்த முடியுமா..??! முடிந்தாலும் செய்யாது..!

சிறீலங்காவில் எனி தமிழருக்கு தாயகமும் இல்ல கோட்பாடும் இல்ல. லண்டனில.. ரொரண்டோவில.. எப்படி அகதியாய் போய் " பெருமையா" வாழினமோ.. அப்படி யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்திட்டு போக வேண்டியதுதான். இதுதான் தமிழர்களின் இனப்பற்றுக்கு சரியான பரிசு. இதே அதிகம். தமிழர்களைப் பொறுத்தவரை..! :D

Edited by nedukkalapoovan

சிங்களவரால் Buddhist bank என பார்க்கப்படும் வங்கி இது. இங்கு அறிவிப்பு பலகைகளிலோ , விண்ணப்ப படிவங்களிலோ தமிழ் இருக்காது,

சில படிவங்கள் தனி சிங்களத்தில் தான் இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.