Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணக் காடுகளில்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிணக் காடுகளில்.....

கவிதை - இளங்கவி....

பிணக் காடுகளில்

பேய்களின் ஊர்வலம் நடக்க.....

நாம் பிறந்த தேசம்

நாயின் வாயில்

கேவலமாய்க் கிடக்க.....

ஈழத்து வளங்களெல்லாம்

எதிரியின் காலடியில் நசுங்க....

எம் உறவின் எலும்புகளை

அவன் நாய்கள் திண்டு ருசிக்க....

ஆடுகிறான் பேயாட்டம்

அதை அடக்க இல்லை ஓர் கூட்டம்

உலகத்தின் அசிங்க அரசியலில்

அழிந்தது எம் உயிரோட்டம்....

அன்றொரு நாள் இரவில்....

ஓலைக்குடிசை இடுக்கினிலே

ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு

மயங்கிய பூவினிலே

மது அருந்தும் வன்னிவண்டு....

இன்றைய இரவினிலே.....

இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே

கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு

எதிரியின் கோரப்பசிக்கு

சிதையும் நம் மலர்கள் இன்று.....

இரவின் அமைதியை

நிரப்பும் அழுகுரல்கள்....

இந்தக் கொடுமைகலைக் கொன்றொழிக்க

எழுவாரா நம் புலிகள்....

வன்னியில் இரத்தத்தை

வேர்களால் உள் வாங்கி....

செந்நிறப் பழங்கள் தரும்

நம் விலாட்டு மாமரங்கள்.....

நம் சாம்பல்மேட்டில் ஊர்க்குருவி

தனியாகப் படுத்துக்கொண்டு

ஆள் அரவமின்றி

அமைத்தியாய் தூங்கிறது....

அன்று அறுந்த தொப்புள்கொடி.....

இன்று அறுக்கப்படும் நம் கழுத்து.......

எதிரியின் கோரப் பசிக்கு

குதறப்பட்ட பெண் மார்பகங்கள்........

அத்தனையும் சேர்த்து

அறுசுவை உணவாக.......

ஆளில்லா நம் நிலத்தில்

அனுபவிக்கும் காட்டு நரி....

இரவின் ராச்சியத்தில்

ஈழத்து ஆன்மாக்கள்.......

புனிதத்தின் மேடுகளில்

புன்னகைக்கும் பூட்ஸ் கால்கள்.......

ஆண்மையின் அடிமேட்டில்

அசிங்கமாய் அவன் கைகள்......

இதைக் கேட்டும் மகிழ்ந்திடுவார்

தமிழராம் சில பேர்கள்......

அரக்கக் கரங்களில்

அழுது நிற்கும் நம் தேசம்......

இதை நீக்க யார் வருவார்

என்று நீங்கும் நம் தோஷம்........

எதிரி எங்கள் கோட்டையை

பெருந்தணலில் எரித்தாலும்

அத் தணலையே சுவராக்கி

நம் தேசத்தை கட்டிடுவோம்.....

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,

நம்வர்க்கு நாம் கவிதையில் கத்தி.....கத்தி சொன்னால் என்ன........?தொண்டை தண்ணி வற்றககத்தி சொன்னால் என்ன.....அவர்கள் கொண்ட கோலத்தை மாற்ற ஏலாது..வடம்பிடிக்கிறதில் இருந்து எல்லாம் ஒழுங்காகத்தானே செய்கிறார்கள்.ஏதாச்சும் ஒண்டை செய்யாமல் விடுகிறார்களா....?அல்லது தள்ளிப் போடுகிறார்களா....சொல்லுங்கள் பார்க்கலாம்...?விழலுக்கு இறைத்த நீர் எங்கயோ போய் சேருமாம்.....அது மாதிரித்தான் எல்லாம்.....

ஓலைக்குடிசை இடுக்கினிலே

ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு

மயங்கிய பூவினிலே

மது அருந்தும் வன்னிவண்டு...

யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கக் கரங்களில்

அழுது நிற்கும் நம் தேசம்......

இதை நீக்க யார் வருவார்

என்று நீங்கும் நம் தோஷம்.....

..தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் வேஷ தாரிகளாய் இருப்பதால் தான் நமக்கு இவ்வளவு

சோகம்.திரண்டேளும் குரல் , வேடங்களை கலைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அண்ணா. எம் மக்களின் அவலத்தை சொல்லிய விதம் அருமை. ஒவ்வொரு வரியிலும்

எம் மக்களின் அவலங்கள் தெரிகிறது.

என்ன சொல்வதென்றே தெரியலை. வெறுமையைத்தான் உணருகின்றோம்.

............. :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாயினிக்கு

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

எங்கள் அவலங்கலைச் சொல்லி முடியாது.... அந்த அளவுக்கு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்காவுக்கு

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

எல்லோரும் தங்கள் வரலாற்றுக் கடமைகளை தவறாமல் செய்யவேண்டிய நேரமிது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

ஒவ்வொரு தமிழனும் விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.... அந்த அளவுக்கு எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்க உலகத்தின் பாராமுகம் மேலும் எங்களை விரக்தியடைய வைக்கிறது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகளிற்கு நன்றி இளங்கவி

எம் தமிழர் அவலமெல்லாம் உலகுக்கு உணர்த்தும் மொழியில்

கூறும் ஆற்றல் உங்களிடம் உள்ளது.

எம்மவர் அவலமெல்லாம் எழுதும் உறவே,

தொடர்க உமது பயணம் வையமெல்லாம் மெய்யுணர்த்த

ஓயாத தாகமதாய் ஓங்கி ஒலித்திடுக - இன்று வழிதெரியா

புலம் பெயர் உறவுகளை ஒன்றாய் இணைத்திடுக

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இளங்கவி, உலகில் எமக்காகக் குரல் கொடுக்க விரும்புகிறவர்கள்கூட எதிரிமீது இனக்கொலை விசாரனையை கோருபவர்கள் கூட முள்ளிவாய்க்காலில் அந்தரித்து தப்ப முயன்ற தமிழ் மக்கள்மீது தக்குதல் தொடுத்த அரசை யும் போராளிகளையும் மன்னிக்கத் தயாரில்லை. இது தொடர்பாக நாங்கள் உலகத்துக்கு பதில் சொல்லாமல் நாம் தொடர்ந்தும் உலகைக் குற்றம் சொல்வதில் பயனில்லை. எனது மக்களின் கண்ணீரும் இரத்தமும் தோந்த சிங்கக்கொடியை மட்டுமல்ல எந்தக் கொடியையும் உலகின் முன் என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. மேற்படி கொடிகளின் பின் அணிதிரண்டு உலகின் ஆதரவை திரட்டும் சாத்தியமும் இல்லை. எதிரியின் இனக்கொலைக்கு முகம் கொடுக்கும்எங்கள் மக்களைக் காப்பாற்றுவதா அல்லது கொடியைக் காப்பாற்றுவதா எது முக்கியம் என்று கேட்டால் எனது பதில் மக்கலைக் காப்பாற்றுவது என்பதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தன் தமிழன்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்...

மேலும் எனது எழுத்து என்றுமே எனது தாய் நாட்டு சார்ந்த உணர்வுகளையே கொண்டிருக்கும் அத்துடன் எங்கள் ஒற்றுமையை வளர்க்க பாடு படும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

நீங்கள் சொன்ன சில விடயங்களில் எனக்கு துளியளவும் உடன்பாடு இல்லை....

இலங்கையரசு பிராந்திய வல்லரசுகளுடன் சேர்ந்து எம்மவரின் துணைகொண்டு இந்த இனப்படுகொலையை இலகுவாக மூடிமறைத்தது... முள்ளிவாய்க்காலில் எம்மக்களைக் கொன்றுகுவித்தது..

ஆனால் தமிழ் மக்களைக் கொன்ற இராணுவத்தையும் புலிகளையும் என்று நீங்கள் குறிப்பிட்டுதுதான் மிகவும் நெருடலாகத் தோன்றுகிறது...

புலிகள் இறுதி நாட்களில் உலகின் முக்கியமான பல நாடுகளுடனும் போரை நிறுத்துவது சம்மந்தமான தொடர்பாடல்களை மேற்கொண்டிருந்த சமயமும் இந்தியத் தேர்தல் முடிவுகளையும் பார்த்துக்கொண்டிருந்த சமயமும் வன்னியில் 250,000லட்சம் மக்கள் தங்கியிருந்த போதும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது போல 70,000 மக்களின் மீட்புப்பணி என்று சொல்லி மிகுதி மக்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மக்கள் ராணுவப்பகுதிகளை நோக்கி புறப்பட ஆயத்தமான போது புலிகள் தடுத்தது உண்மையாக இருந்தாலும் அதற்கு பலமான காரணமுண்டு, ஏனென்றால் ஒரு பேச்சுக்குச் சொன்னால் அரசாங்கம் பொய்யாக சொல்லிக்கொண்டிருந்த 70,000 மக்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றுவிட்டால் எதிரி உலகுக்குச் சொல்லிக்கொண்டிருந்த கணக்கு முடிந்துவிடும் எனவே புலிகளின் பகுதியிலிருக்கும் அனைவரையும் சாட்சியில்லாமல் கொல்ல ஏதுவாயிருந்திருக்கும் அந்த நிலை ஏற்படாமல் தடுக்கவே இந்த மக்களைப் புலிகள் தடுத்திருக்கலாம்..

பகவத்கீதையில் சொல்லியிருந்தது போல ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு ஊரை இழக்கலாம்,ஒரு ஊரைக்காப்பார்ற ஒரு கிராமத்தை இழக்கலாம், ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்த இழக்கலாம், ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தில் ஒரு ஆளை இழக்கலாம்' என்பது போல இத்தனையாயிரம் மக்களைக் காப்பாற்றும் நோக்குடன் அரச பகுதிக்கு செல்லவிருந்த மக்களைத் தடுக்கும் நோக்குடன் தமிழ் மக்களின் காவலர்களாகிய புலிகள் இதைச் செய்திருந்தாலும் கூட அது நல்ல நோக்கத்துடனேயே செய்யப்பட்ட செயலாக இருக்கிறது....

கொட்டும் மழைபோலக் குண்டுகளின் மத்தியிலிருந்து ஒவ்வொரு கணமும் தங்கள் உயிரை ஆகுதியாக்கிய அந்த வீரர்களை நாம் என்றுமே மறந்துவிடக்கூடாது அப்படி அவர்களின் தியாகங்களை நாம் மறந்துவிட்டோமென்றால் நாமும் எங்களினத்துக்கு துரோகம் இழைத்தவர்களாகவே இருப்போம் .

பின் லாடனின் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா தன்னைக் காக்கும் முயற்சியில் எத்தனையாயிரம் ஈராக்கிய மக்களைக் கொன்று குவித்தது, இதே நிலைதான் இரண்டாம் உலக உத்தத்தின் போதும் யப்பானில் அமெரிக்கா செய்தது... ஆனால் புலிகள் தங்கள் மக்களைக் காப்பார்ற தங்கள் மக்கள் சிலபேரைச் சுட்டிருந்தாலும் அது பெரிய தப்பாகப் படுகிறதல்லவா...

உலக ஜன நாயகதின் காவலர்கள் என்று கூறும் அனைத்து நாடுகளின் கைகளிலுன் இரத்தக் கறைகள் உள்ளபோது அவர்களுக்கு அவர்களுக்கு நான் எந்தப் பதிலும் சொல்லவேண்டியதில்லை.. இந்தக் கருத்தை மலையளவு குற்றம் செய்தவன் துணிந்து சொல்லிக்கொண்டிருக்கிறான் ஆனால் நாங்கள் எங்கள் குற்றங்களையே தூக்கிப்பிடிப்பதில் மும்மரமாக நிற்கிறோம்... இந்த நிலை மாறி எதிரியின் யுத்தக்குற்றங்களை நாங்கள் வெளிக்கொணர்ந்து முகாமிலிருக்கும் எங்கள் மக்களை முதலில் விடுதலை செய்ய வேண்டும் அதன் பின்னர் எங்கள் விடுதலையை நோக்கி எங்கள் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்....

மற்றும் மக்கள் தான் புலிகள் ,புலிகள் தான் மக்கள் என்பதை உணர்த்த எங்கள் தேசியக்கொடி நாங்கள் முன்னெடுக்கும் எல்லாப் போராட்டத்திலும் கட்டாயம் இருக்கவேண்டும் காரணம் அது எங்கள் தேசியக்கொடி... எங்களுக்காக ஒரு வெள்ளை பெண்மணி போராடி எங்கள் தேசியக்கொடி பறக்க அனுமதி எடுத்துத் தருகிறாள் ஆனால் நாங்கள் ....?

நான், எனது நாடு, எனதுமொழி என்று எங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் எங்களை நாங்களே தமிழனாக ஏற்றுக்கொண்ட பின்புதான் எங்களுக்கு விடுதலை சாத்தியம் அதுவரைக்கும் நாங்கள் எதிரியிடம் மண்டியிட்டு அடிமைவாழ்வு வாழத்தான் லாயக்கானவர்கள்...

நடந்துமுடிந்த துயரங்களில் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது தரப்பினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்... எங்களை நாங்கள் யாரென்று உணர்ந்து தான் எங்கள் விடுதலையை வென்றெடுக்கவேண்டும்.

இந்தியக்காரர்களுக்கு ஓர் மகாத்மா காந்தி,ஓர் சுபாஸ் சந்திரபோஸ், கியுபாக்கு பிடல் காஸ்ரோ, சவுத்தாபிரிக்கா நெல்சன் மண்டலோ, தமிழருக்குத் தலைவர் பிரபாகரன், ஓர் திலீபன்...ஏன் மொத்தத்தில் தமிழருக்கு புலிகள்....

மேற்குறிப்பிட்ட விடயங்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள் இவை உங்களையோ எவரையோ எந்த விதத்திலும் பாதித்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்....

நேற்று நோர்வே தமிழ் வானொலி தமிழ்முரசத்தில் உங்களின் இந்தக் கவிதை மனே என்பவரால் வாசிக்கப்பட்டது. மனதைத் தொட்டது. வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசகன்

மிக்க நன்றிகள் அறியத்தந்ததற்கும் உங்கள் பாராட்டுக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.