Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனவெறி இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில காலங்களிற்கு முன் வீரச்சாவடைந்த பெண் போராளிகள் சிங்கள இனவெறி இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டது பற்றிய செய்தி சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது நினைவிலிருந்தால் அதன் இணைப்பை அறியத்தரமுடியுமா ( english description )

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில காலங்களிற்கு முன் வீரச்சாவடைந்த பெண் போராளிகள் சிங்கள இனவெறி இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்பட்டது பற்றிய செய்தி சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்டது நினைவிலிருந்தால் அதன் இணைப்பை அறியத்தரமுடியுமா ( english description )

நன்றி

http://www.tamilcircle.net/index.php?optio...-06-08-08-10-51

இந்த இணைப்பில் ஒரு செய்தி இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த அக்டோபர் மாதம் கிடைத்த செய்தி மற்றும் ஒளிப்பதிவு:

Just I received this video..... its not in any online forum....

Have a look at the cruel (or real) face of sinhala army in this video... ...... the Sinahala racist barbarians recorded these videos and spreading it to their own people ..... is this what Buddhism preaches them? .... now one can understand why the Tamil suicide bombers blowup their bodies into pieces, otherwise this is what would happen to them ..

As an Indian I feel ashamed for my own tax money is being used by the Indian government to aid these brutal acts......

If the international community didn't take any action regarding the human rights violation in Sri Lanka, they has to be ashamed of being a human.

Please dont upload in to online forums without shading the body parts using some software.

இங்கு இணைக்கப்பட்டுள்ள இந்த கொடூரமான வீடியோ பதிவினைப் பாருங்கள்.... மனித உணர்வு என்பது சிறிதேனும் இருக்கும் யாராவது இச்செயலை செய்ய இயலுமா என எண்ணுங்கள்..... இந்த இழிசெயலையும் பதிவு செய்து தங்கள் இன வெறியை வெளியுலகிற்கு பரப்பும் சிங்கள பேரினவாதிகளை அடையாளம் காணுங்கள்.... தற்கொலைதாரிகள் ஏன் தங்கள் உடல் கூட இந்த மனித மிருகங்களிடம் சிக்கிவிடாதவாரு சிதைத்துக் கொள்கின்றார்கள் என இதை பார்த்தபிறகு தான் விளங்கிற்று....

இலங்கையில், சிங்கள இராணுவத்தினர், புத்தரின் பெயரால் இச்செயலை செய்து விட்டு அதை மக்களும் அனுப்புகின்றனர்..... :unsure: ஈழ நண்பர் ஒருவரின் கைப்பேசியில்இருந்து இது அனுப்பப்பட்டது....

பிறப்பினால், ஒரு இந்தியக் குடிமகனாக முதன் முதலில் வெட்கித்தலைகுனிந்தேன், இந்த இழிசெயலுக்கு என்னுடைய வரிப்பணமும் உபயோகிக்கப்பட்டுள்ளதை எண்ணி....

காட்சிகள் மிக கொடூரமானவை..... அதனால், உரு மறைப்பு செய்யாமல் இணையத்தில் ஏற்றம் செய்ய வேண்டாம்....

http://www.ziddu.com/downloadfile/2450150/...of_SLA.3gp.html

தமிழர்களின் இன்றைய மவுனம் என்னை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. நான் இங்கே தமிழர்கள் என்று விளிப்பது நம் தாய் தமிழகத்தின் ஆறுகோடி மக்களைத்தான். அவர்களை ஆளும் அல்லது ஆண்ட அரசியல்வாதிகளை அல்ல. இத்தகையோரின் மௌனத்தையோ எழுச்சியையோ நாம் பொருட்படுத்தவேக் கூடாது என்பது கடந்தகாலம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஆனால் உலகத்திலேயே மிகுந்த குடும்ப பிணைப்பும் மனிதமும் கொண்ட நம் தமிழினம் இப்படி உணர்ச்சியற்ற கட்டைகளாக மாறிப்போனதை நினைத்து உண்மையில் பெரும் அச்சமாக உள்ளது.

போனவாரம் சேனல் 4 ஒரு கானொளிப்பதிவை வெளியிட்டார்கள். இளகிய மனது படைத்தோர் கானக்கூட அஞ்சக்கூடிய ஒரு பதிவு அது. இலங்கை முகாமிலிருந்த கடத்தி செல்லப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, நிர்வாணமாக்கி, மைதானமொன்றில் கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் கொடூரக்காட்சி இது. காண்போரை கலங்கவைக்கும் இந்த கானொளிப்பதிவை கண்ட அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனம் ஏதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நிகழவில்லை. தமிழகத்திலிருந்து ஒரு சில மைல் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் பெருவாரியான தமிழக மக்களிடமிருந்தோ அல்லது ஊடகங்களிடமிருந்தோ இது குறித்த கண்டனமோ எதிர்ப்போ கானப்படவில்லை. சாருக்கான் அமரிக்காவில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வையும் அதனால் சல்மான்கான் அமரிக்க பயணத்தை கைவிட்டதையும் தலைப்பு செய்திகளில் வெளியிட்டு தன் நாட்டுப்பற்றை பறைச்சாற்றிக்கொண்ட நமது தமிழக ஊடகங்கள் இந்நிகழ்வை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த ஒரு நிகழ்வு குறித்து மாத்திரமல்ல மே மாதம் 18 ம் தேதிக்கு சற்று முன்பும் அதற்கு பிறகும் வன்னிப்பகுதியிலே சிங்கள படையினரால் அறங்கேற்றப்பட்ட கொடுமையான நிகழ்வுகள் குறித்தும் யாரும் இன்றுவரை வாய்திறக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் ஒரு சிறு நிலப்பரப்பில் மின்சார வேலிகளுக்கிடையில் மூன்றுமாத காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிற நிகழப்போகிற பயங்கரம் குறித்து அச்சப்பட்டு ஈனக்குரலில் அவர்கள் எழுப்பும் குரல் நம் காதுகளை எட்டாதது வியப்பை தருகிறது. இது குறித்து சிறிய பிரஞ்ஞையே யாருக்கும் இல்லாதது ஏன் என்று தெரியவில்லை.

இப்படி நிகழ்வது முதல்தடவையல்ல. எண்பதுகளில் தமிழீழத்தில் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை சிங்களர்கள் இது போன்ற பல அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்று சொல்லி இலங்கை பேரினவாத அரசு ஒரு திட்டமிட்ட இன அழிப்பை செய்கிறது அதற்கு என் காந்தி கண்ட தேசம் துணை போகக்கூடாது என்று கத்தினோம் கதறினோம். ஆனால் காந்தி பேரைச்சொல்லியே ஐம்பது வருடமாய் இந்தியாவை கொள்ளையடிக்கும் கும்பலின் காதுகளில் எங்கள் குரல் விழவில்லை. அதே போல அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக கட்சிகளின் காதுகளிலும் அது விழவில்லை. ஆனால் மனசாட்சியுள்ள நம் தமிழக மக்களும் அவர்கள் கொடுத்த இலவசங்களால் செவிடாகிப்போனதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலில்தான் இப்படி என்றால் தேர்தலுக்குப்பிறகும்

தன் சொந்த இனம் இப்படி அநியமாக அழிக்கப்படுவதை நம் தமிழகம் கண்டும் கானாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கொண்டாடி மகிழ்ந்தவர்கள் இன்னும் ஏன் தமிழர்களை இப்படி கொட்டடியில் அடைத்து வைக்கவேண்டும். ஐம்பது சதவீத ஈழத்தமிழினம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோரையும் வாழத்தகுதியற்ற நடைப்பினமாக மாற்றவேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ தாய் தமிழர்களாகிய நாம் உதவியாக இருக்கிறோம் என்பதை ஏன் தமிழக மக்கள் உணர மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. நமக்கும் நாளை இப்படி ஒரு நிலை வராது என்பது என்ன நிச்சயம்?

தன்னை மனித குல காப்பாளர்களாக காட்டிக்கொள்லும் உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள்சபை போன்ற சர்வதேச அமைப்புகள் எல்லாம் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள்தான் என்பதை இலங்கை விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. இந்த அமைப்புகள் போடும் சட்டதிட்டமெல்லாம் ஏழை நாடுகளை அதிகார நாடுகள் ஒடுக்கி வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகி இருக்கிறது. காந்தி கண்ட தேசமென்றும் அகிம்சையை உலகத்துக்கு போதித்தவர்கள் என்றும் வேசம் போடும் போலி கதர்சட்டைகளின் கோரமுகம் இன்று வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் நமது சொந்த தமிழினம் காட்டும் இந்த மௌனத்தின் பயங்கரம்தான் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை வடக்கத்தியர்கள் புரிந்து கொண்ட அளவிற்கு நாம் நம்மினத்தை புரிந்து கொள்ளவில்லையோ

இந்திய நண்பர் ஒருவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.