Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் ஏன் இப்போது கண்முன் தோன்றி காட்சி தருவதில்லை?

Featured Replies

வணக்கம்,

சமயபாடப் புத்தகங்களில் நாங்கள் பல்வேறு வகைகளில் மூளை சலவை செய்யப்பட்டோம். அதன் தாக்கத்தை இப்போது பள்ளிக்கூடம்விட்டு விலகி பல வருசங்களின் பின்னரும் உணரக்கூடியதாக இருக்கின்றது.

முன்பு நாயன்மார்கள் தேவாரம் படிக்க கோயில் கதவுகள் திறந்தன, செத்தவர்கள் மீண்டும் உயிர்த்தார்கள், ஊமைகள் பேசின..

உமாதேவியார் பால் கொடுத்தார் முருகன் ஒளவைப்பாட்டிக்கு நாவல்பழம் கொடுத்தார்... இப்படி பல விசயங்கள் நடந்திச்சிது.

இதுபோலவே.. புனிதர் யேசு கிறிஸ்து தோன்றினார்.. அதிசயங்கள் செய்தார். இவை எல்லா மதங்களிலும் இப்படி தொடர்கின்றன.

இப்ப கேள்வி என்ன எண்டால்.. முந்திமாதிரி இப்ப கடவுள் ஏன் முன்னால வாறதுக்கு பயப்படுகிறார் இல்லாட்டிக்கு வருவதில்லை?

இந்தக்கேள்வியை இப்ப கேட்கவேண்டி இருக்கிது. ஏன் என்றால் இன்னமும் ஒரு 3,000 வருசத்தால 2009ம் ஆண்டில நடக்காத பொய்களை நடந்ததாய் சொல்லியும்... கடவுள் 2010பத்தில பலருக்கு காட்சி குடுத்து இருக்கிறார் என்று சொல்லியும் சமயப் புத்தகங்களில் மூளைச் சலவை செய்யப்படலாம்.

சாய்பாபா கூட கடவுள் என்று இன்னமும் 3,000 வருசத்தால சொல்லப்படலாம்.

எனவே,

கேள்வி: கடவுள் ஏன் இப்போது கண்முன் தோன்றி காட்சி தருவதில்லை?

உங்கட கருத்துக்களை - சொந்த அனுபவங்களை சொல்லுங்கோ. நன்றி!

ShivaShakti_edited.jpg

மாப்பிள்ளை. சமய நூல்களை நான் பொய் என்று சொல்லவரவில்லை. அந்தளவுக்கு எனக்கு அறிவும் கிடையாது. இன்றும் அற்புதங்கள் அதிசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இல்லை என்று மறுப்பதற்கும் இல்லை. இருப்பினும் கீழ் உள்ள படத்தை நன்றாக பாருங்கள். இது சாத்தியமா? எனவே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மறுபடியும் வருவேன்.

  • தொடங்கியவர்

என்னடா விசர்த்தனமான தலைப்பு என்று யாராச்சும் யோசிக்கலாம். கனடாவில் ஐயப்பன் கோயில் கும்பாவிஷேகம் இப்ப நடக்கிது. சாமிக்கு எண்ணெய்க்காப்பு சாத்திறது எண்டால் மூண்டு மணித்தியாலம் வரிசையில நிக்கவேணுமாம். அந்தளவு பக்தகோடிகள்..!

யாராச்சும் கும்பிடுங்கோ.. நானும் சமயவேறுபாடு பார்க்காமல் இந்து, கிறிஸ்தவ கோயில் தேவாலயம் எல்லாத்துக்கும் போறதுதான். அங்கை போனால் ஒரு மன அமைதி கிடைக்கும்.

ஆனால்.. நிரம்ப புருடாவிட்டு எங்களை நல்லாய் மூளைச்சலவை செய்துபோட்டாங்களோ என்று இப்ப யோசிக்கவேண்டி இருக்கிது.

ஏன் எண்டால்.. கடவுள் பற்றி ஏதாச்சும் தப்பாய் சொன்னால் எங்களுக்கு கூடாமல் ஏதாவது நடக்குமோ எண்டு மனப்பயம் ஏற்படுகிது.

இதை எப்பிடி தொடர்புபடுத்தலாம் என்றால்... சிறீ லங்கா அரசுக்கு எதிராய் ஏதாச்சும் சொன்னால்.. அவங்கள் வெள்ளைவானில தூக்கிறது, மண்டையில போடுறது மாதிரி.

கடவுளுக்கு ஏன் பயப்படவேணும்? பக்தி என்பது பயம் காரணமாய்த்தான் வருகிதோ என்று எண்ணத்தோன்றுது. தவிர... இப்ப சாய்பாபா அவர் இவர் எண்டு பலர் பல சாமிகளை கும்பிடிறீனம். இவையளை பலர் விமர்சனம் செய்கிறது கிடையாது. ஏன் எண்டால்.. தங்களுக்கு தெய்வக்குற்றம் வந்திடிமோ எண்டு.

தெய்வக்குற்றம் என்று நாங்கள் உணர்வது தொடர்ச்சியான மூளைச்சலவையின் வெளிப்பாடே என்று சொல்லத்தோன்றுது.

ஒட்டுமொத்த சமுதாய நலனுக்காய் பெரியவர்கள் பல பொய்களை சொல்லி இருக்கலாம். கொஞ்சம் ஆழமாய் ஆன்மீகத்தில போய் நீண்டகால அனுபவம் பெற்றவர்களுக்கு.. இதன் உள்ளார்ந்தம் தெரியக்கூடும். ஆனால் அவையளும் சொல்லப்பட்டுள்ள பொய்கள் பற்றி வாய் திறப்பது இல்லை. அல்லது தன்னை மாதிரி மற்றவனும் துன்பத்தை அனுபவிச்சு தெளியட்டும் என்றோவும் தெரியாது.

நான் உலகம் ஓர் ஒழுங்கின் கீழ், விபரிக்கப்பட முடியாத ஓர் சக்தியின் கீழ் இயங்குவதை தனிப்பட ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால்.. எங்களை கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே மூளைச்சலவை செய்துவிட்டார்களோ என்று சிந்திக்கத்தோன்றுது.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை.. சாமி பற்றின பயம் நியாயமானதுதான்..! எனக்கு அந்தப் பயம் ஒருகாலத்தில இருந்திச்சு.. பிறகு கொஞ்சம் கொஞ்சமா கும்பிடுறதை விட்டிட்டன்..! ஆனால் கும்பிடுறதைக் குறைக்கக் குறைக்கத்தான் வாழ்க்கையில முன்னேற்றம் தெரிய ஆரம்பிச்சிது எண்டு சொன்னால் நம்பவே போறியள்? :unsure:

கடவுளுக்கு ஒருவர் பால் கொண்டு போய் ஊற்றிக் கொண்டிருந்தாராம்

அவர் அருகில் குழந்தை ஒன்று அவரின் கால்களைப் பிடித்தபடி

பசிக்கிறது தாகமாக இருக்கிறது என கதறியபடி இருந்ததாம்..........

அந்த குழந்தையை பக்தர் தன்காலால் தள்ளி விட்டு தொடர்ந்தும்

பாலை ஒற்றிக் கொண்டிருந்தாராம்.............

இப்படி இந்த மனித குலம் செய்யும் அனியாயங்களை அடுக்கிக் கொண்டே

போகலாம் நிலமை இப்படி இருக்கும் போது கடவுள் எப்படி அருள் தருவார்??????

ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது அவனுக்கு கை கொடுக்கும் போது அங்கே

கடவுளை காண்கிறோம்.........

டங்குவார் சொன்னது போல் கடவுளை வழிபடுவதை விட்டுவிட்டு

மற்ரவர்களை அன்பு செலுத்தும் போது எல்லாம் நல்ல படியாக நடக்கும்

கடவுளும் எங்களோடு இருப்பான்...............

எங்கள் இனம் மரண வேதனையில் தினம் தினம் துடித்துக் கொண்டிருக்கும் போது

தேர் இழுத்து தங்கட செல்வாக்கை காட்டவும்

இங்கே தெருவிலே தேங்காய் உடைக்கவும் ஆயிரக் கணக்கில் பணத்தை கொடுத்து

மற்ர இனத்தவன் பார்த்து ஏளனம் செய்யும் அளவிற்கு எங்கட நிலமை இருக்கு........

இப்படியான நிலமையால தான் கடவுள் வருவதே இல்லை!!!!!!!!!!

அவர் வரவும் மாட்டார்................

அதால சும்மா பணத்தையும் நேரத்தையும் வீண் செய்யாமல்

அமைதியான பிரார்தனையும் மற்ரவன் துன்பத்தில் பங்கு கொண்டு அவனை சந்தோசப்படுத்தும் போது கடவுள் கட்டாயம் வருவான்

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாரி சகோதரர்களே கொஞ்சம் பிசியாக இருந்திட்டன்......... விரைவில் உங்களுக்கு காட்சி தருவேன்...... காத்திருங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

சாரி சகோதரர்களே கொஞ்சம் பிசியாக இருந்திட்டன்......... விரைவில் உங்களுக்கு காட்சி தருவேன்...... காத்திருங்கள்....

ஏதோ நல்ல காட்சியா தாருங்கோ, தமிழ் சிறிக்கு பிடித்தமாதிரி..., கண்ணுக்கு குளிர்ச்சியா...இதமா...! முள்ளிவாய்க்கால் மாதிரி இல்லாமல்.... :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகன் பாடசாலையில் இருந்து தேர்வு முடிவுகளை எடுத்து வருகிறான். நீங்களும் “தேர்வு முடிவுகள் எப்படி” என கேட்கிறீர்கள். அதற்கு மகனும் “நான் தேர்வு அடைந்து விட்டேன், எல்லாமே மிக திறமாக உள்ளது” என கூறுகிறான். அப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? ரிப்போட் காட்டை காட்டு என்பீர்கள். உங்களது கண்களால் பார்த்தால் தான் உங்களுக்கு நம்பிக்கை உண்டாகிறது.

இவ்வாறு நாம் உலகத்து விடயங்கள் எல்லாவற்றையும் தொட்டு, பார்த்து, நுகர்ந்து உறுதி செய்து கொள்கிறோம். ஆனால் யாராவது கடவுள் உங்களின் உள்ளே உள்ளார் என்று கூறினால் “ஆமாம் கடவுள் என்னுள்ளே உள்ளார்” என்று கூறிவிடுகிறோம். அதற்கும் அப்பால் சென்று “கடவுள் என்னுள்ளே உள்ளார்”; என்றால் அவரை நான் தரிசிக்க வேண்டும், உணர வேண்டும் என்று கேட்பதில்லை.

“உள்ளம் பெரும் கோயில், ஊனுடம்பு ஆலயம், தௌ;ளத் தெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம் ” என்று கூறப்பட்டுள்ளது

கடவுள் எல்லா இடமும் நீக்கமற நிறைந்துள்ளார் என கூறுவது மிகவும் சுலபம். ஆனால் உள்ளத்திலே வீற்றிருக்கும் கடவுளை உணர வைப்பது மிகவும் எளிதான காரியம் இல்லை. ஆனால் மனிதனைப் பொறுத்த வரையில் எதுவரை அவன் அதனை அனுபவிக்கவில்லையோ, அதுவரை ஒன்றுமே நிறைவாக இருக்காது. ஒரு விடயத்தைப்பற்றி படிப்பதால், எழுதுவதால் நாம் அதனை கொள்கையளவில் அறிந்து கொள்ளலாம் ஆனால் அதன் மூலம்; அனுபவம் ஏற்படாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாபபிள்ளை உங்களுடைய தலைப்பே தவறானதாக இருக்கின்றது.

கடவுள் இப்போது ஏன் கண்முன்னே தோன்றுவதில்லை என்று கேட்கிறீர்கள். அதன் அர்த்தம் அவர் முன்பு கண்முன்னே தோன்றினார் என்பதா? அதுவெல்லாம் கட்டுக்கதைகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீரகளா, அல்லது அறிந்தும் ஒரு விவாதத் தலைப்பை நகர்த்துவதற்காக இப்படி எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

இல்லாத கடவுள் எப்படித் தோன்ற முடியும்? அது தோன்றியதுமில்லை. தோன்றப்பொவதுமில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான பாடல். அற்புதமான வரிகள். கிரகித்துக் கேட்டால் பலவிடயங்கள் தெரியவரும். புரியவரும்.

Edited by akathy

மாப்பிள்ளை உங்க சந்தேகம் இருக்கட்டும். கடவுள் முன்பு உங்களுக்கு காட்சி தந்தவரோ?? இப்ப தரவில்லையென்று பழி போடுவதற்கு. இறைவன் என்பது ஒவ்வொருவரினதும் நம்பிக்கையைப் பொறுத்தது. ஒருவர் எம் முன்னால் காட்சி தந்தால்த் தான் அது உண்மை என்பதல்ல அர்த்தம். அதனை எம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

ஒருமுறை வாரியார் பிரசங்கம் நடாத்திக் கொண்டிருந்த போது, ஒரு அப்பாவிப் பக்தன் அவரைப் பார்த்துக் கேட்டாராம். சாமி உங்க பிரசங்கங்களைக் கேட்டால் பாவம் செய்ய மாட்டோமென்கிறீங்களே எப்படி என்று? அதற்கு வாரியார் இப்ப 3 மணி நேரமாய் என் பிரசங்கத்தை நீ கேட்டுக் கொண்டிருப்பதால், இந்த 3 மணி நேரத்தில் வேறு எந்தப் பாவச் செயலையும் நீ செய்ய முற்படவில்லையே எனறு கேட்டதற்கு, அப்பாவியும் ஆமாம் சாமி என்றாராம். இது தான் அது என்றாராம் வாரியாரும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.