Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையிலே வாடும் பெண்புலிக் கூட்டங்கள்......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி அவர்களே!

உங்கள் கவிதை நன்றாக உள்ளது......பாராட்டுக்கள்

போற்றுவர் போற்றட்டும் துற்றுவர் துற்ரட்டும்

நீங்கள் உங்கள் வழியிலே செல்லுங்கள்

மனம் தளரதிர்கள்...

analai theevaan

மிக்க நன்றி.... உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நலீம்

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு....

ஒரு படைப்பாளியாய் இருந்தால் பல விமர்சனங்களையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும்... அதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக உண்மையாக உழைப்பவர்களிடமும் அந்தப் பழியைப் போட்டு அவர்களை நோகடிப்பது தான் வேதனைக்குரிய விடயம்.... இதற்கு ஓரே ஒரு தீர்வு படைப்பாளிகளின் படைப்புக்களை நன்கு அறிந்திருக்க வேன்டும் அவர்களின் படைப்புக்களின் உள் நோக்கத்தைப் புரிந்திருக்க வேண்டும்.... எந்த விமர்சனங்களையும் முன் வைக்க முதல்....

எப்படியோ அந்த நண்பர் இதை உணர்ந்தால் சந்தோசம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா

Nalim அண்ணா அவர்களின் கருத்தே எனது கருத்துமாகும்...

விமர்சனங்கள் உங்களை வீரியப் படுத்தணுமே தவிர... சோர்வடைந்து விடாதீர்கள்..

மிக்க நன்றி....

எல்லா விதமான விமர்சனங்களையும் ஏற்று சளைக்காமல் பதில் சொல்பவன் நான் ஆனால் எனது கவிதைக்கு அப்படியொரு கருத்தைப் போட்டது என்னையே சொன்னதுபோல் உணர்ந்ததாலேயே சற்றுக் குழப்பம்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தி அக்கா

இளங்கவி நலீம் சொன்ன இந்த வார்த்தைகளை எப்போதும் நினையுங்கள். மற்றவையெல்லாம் தூசு.

மிக்க நன்றி உங்கள் எல்லோரின் ஆதரவுக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3rd Eye

எழுத்துக்கள் மூலம் சாதிக்க கூடியதை வாய்ச்சொற்களால் சாதிக்க முடியாது.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eelamagal

இளங்கவி உங்கள் பணி தொடரட்டும். காய்க்கும் மரத்திற்கு கல்லெறி விழுவது சகஜம் தானே. உங்கள் கவிகளை ரசிக்க பலர் உள்ளனர். உங்கள் ஆக்கங்களுக்காக காத்திருக்கின்றோம். தொடரட்டும் உங்கள் பணி....

ஈழமகள்

உங்கள் எல்லோரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Jhansirany

உங்களுக்கு எனது நன்றிகள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்மாறன்

நீங்களெல்லோரும் என் மேலும் என் ஆக்கங்களின் மேலும் வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது....

அவசரப்பட்டு ஒரு படைப்பாளி மீதோ அல்லது படைப்பளிகள் மீதோ குறைசொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பதை அந்த நண்பர் புரிந்துகொண்டிருப்பார்......

பெரியவர்கள் சொல்லுவார்கள் சில வாசகங்கள் ' கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும் ' என்றும் மற்றொன்று ' கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய் ' என்று.....

எனவே இப்படிப்பட்ட குழப்பம் வந்ததால் தான் என் பக்க நியாயங்களையும் சொல்ல முடிந்தது...

உங்கள் விருப்பப் படி எனது ஆக்கங்கள் என்றும் எனது தாய் நாடு பற்றியதாய் இருக்கும்....

நன்றி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வைசகாரா அக்காவுக்கு

அனுபவம் தான் சிறந்த நண்பன், வலியை உணராமல் சாதனைகளைத் தொட முடியாது போன்ற உங்கள் கருத்து முற்றிலும் உண்மை....

நல்ல நோக்கத்தோடு செய்யப்படும் காரியங்களை மக்கள் நிச்சயம் இனங்கண்டு கொள்வார்கள் என்பதற்கு இந்த விடயத்துக்கு வந்துகொண்டிருக்கும் விசனங்கள் விமர்சனங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது......

இந்த நண்பருக்கும் எனக்கும் தனிப்பட்ட கோவம் எதுவுமே கிடையாது.... பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி வேறாக இருக்கலாம்....!

உங்கள் கருத்துக்கும் நன்றி அக்கா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் மேலும் எனக்கு வெறுப்பில்லை

நான் என் மேல் வெறுப்புற்றுள்ளேன்.

எனது கருத்தின் பின்

பலர் அவர் கவிதையை ரசித்துள்ளார்கள்

பாராட்டியுள்ளார்கள்

அதுவரை?

சாவுகளை வைத்தே

சாவு நாற்காலிகளில் வாழ்வோரிடையே

கொண்ட கோபம் இது

அவர் கவிதை நல்லதாக இருக்கிறது

கவிதைக்காக பாராட்டுகள்

யாழில் கருத்தெழுதிய பலர்

தன் முகங்களை மாற்றிக் கொண்டு

உண்மையான சாயலை தெரியத் தந்துள்ளமை

என்னைப் போல் பலருக்கும்

தெரியவில்லையோ?

தலைவருக்கு

எங்களுக்கு நடந்துகொண்டிருக்கும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டோ, அல்லது சிலர் செய்யும் பிழைகளால் உங்கள் மேல் நீங்கள் வெறுப்படைந்து கொள்வதோ உங்களுக்கு ஆரோக்கியமான விடயமல்ல.... எல்லாச் சமூகங்களிலும் பிரச்சனைகள் இருக்கிறது அந்தப் பிரச்சனைகளுக்காக எங்கள் சமூகத்திலேயே வெறுப்புக்கொண்டு எங்கள் சமூகத்திலேயே வெறுப்பைக் காட்டுவதை தற்போது தவிர்த்து உங்கள் கோவங்களை எதிரிமேல் திருப்புங்கள் அது எங்கள் சுதந்திரத்துக்குப் பயன்படட்டும்...

அன்று அடக்குமுறையாளரில் ஏற்பட்ட கோவம் அடக்குமுறைக்கு எதிராக ஏற்பட்ட கோவம் ஓர் பிரபாகரனை உருவாக்கியது... எவ்வளவோ பெரிய சாம்ராஜ்ஜங்கலையெல்லாம் எதிர்த்துப் போரிட வைத்தது.... நீங்கள் கேட்கலாம் அதற்கெல்லாம் பலன் கிடைக்கவில்லையே என்று... எதுவும்நே முடிந்துவிடவில்லையென்று யோசியுங்கள்... மனதிலே தோன்றும் வெறுப்புணர்வை எங்களையோ எங்கள் சமூகத்தையோ சிதைக்காமல் எதிரியைச் சிதைக்க பயன்படுத்துக்ங்கள்....

முதலில் எங்கள் சுதந்திரம் கிடைக்கட்டும் பின் எங்கள் சமூகப் பிரச்சனைகளைச் செம்மைப் படுத்தும் வழி வகைகளை ஆராயலாம்...

உதாரணத்துக்கு சுரியச் சக்தியின் வெப்பமும் வெளிச்சமும் தாங்கமுடியாமல் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஏ.சி யும், வெளிச்சத்தின் அளவைக் குறைக்கும் கண்ணாடிகளையும் கண்டுபிடித்தவன் அத்துடன் நின்றுவிடாமல் சிலிக்கா செல்களையும் கண்டுபிடித்து தன்னைத் தாக்கும் சக்தியையே தன்னக்கான மின்சாரமாகவும் மாற்றப் பயன்படுத்திக் கொண்டான். எனவே கோவம் வெறுப்பு போன்றவற்றை எதிரியில் திருப்பி எங்கள் சுதந்திரத்துக்குப் பயன்படுத்துங்கள், சமூக நலம் , சமூக மேம்பாடு போன்ற நல்ல ஆரோக்கியமான எண்ணங்களை எங்களுக்காய் பயன் படுத்துங்கள்... எங்கள் சமூகத்தைத் திருத்துவதற்கான நேரம் இதுவல்ல....

என் கவிகளை பாராட்டியதற்கு மிக்க நன்றிகள்.... உங்கள் கருத்துக்களால் மக்கள் என் கவிதையைப் பாராட்டினார்கள் என்று சொல்லி அதுவரை? என்றொரு கேள்விக்குறியுடன் முடித்தது எனக்குப் புரியவில்லை... அதுவரை மக்கள் எனது கவிதைகளைப் படிக்கவில்லை என்ற கருத்துப் பட்டால் எனது முந்தைய ஆக்கங்கலில் இருந்து புரிந்து கொள்வீர்கள் எனது கவிதைகலை அனேகர் விரும்பிப் படிப்பார்கள் என்று....

இறுதியாக... எனது படைப்புக்கள் பணத்துக்காகப் படைக்கப்படுவன அல்ல.. அது எங்கள் தாய் நாட்டு உணர்வுகளைத்தான் என்றுமே பிரதிபலிக்கும்...... என் முதல் கவிதைத் தொகுப்புக்கூட அனேகரின் வேண்டுகோளுக்கிணங்கவே வெளியிட்டேன் அதிலும் எனக்கு நட்டமே ஏற்படும் தருவாயில் உள்ளது நண்பரே... அது எந்தவிதத்திலும் பணம் பெரும் நோக்கத்துக்காக வெளியிடப்பட்டதல்ல....

நன்றிகள்

யாரையும் தூற்றினால்தான்

படையெடுத்து பலர் வருவார்கள் என்று தெரியும்.

எனவே எனக்கான தாக்குதலை

இனியாவது தவிர்த்து விட்டு

நல்ல படைப்புகளை வரவேற்க முயலுங்கள்.

நல்ல படைப்புகளை

யாராவது கண்டு கொள்ளாவிட்டால்

இப்படி சிலுமிசம் செய்து பாருங்கள்

அந்த படைப்பை பார்க்கிறார்களோ இல்லையோ

விமர்சித்தவனை எதிர்க்க தடி கொண்டாவது

ஓடி வருவார்கள்.

இங்கே எழுதிய

அனைவரும்

இனியாவது

படைப்புகளுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.

அதுவே தேவை.

இந்த திரியில் படைப்பை விட

படைப்பு குறித்து அவதூறு கூறியவனையே

கருத்துகளால் கடிந்துள்ளீர்கள்?

பின்னூட்டங்களை கவனியுங்கள்.

படைப்பை எதிர்த்தவனுக்கு கல் வீசுவதை இனியாவது விட்டு தள்ளுங்கள்.

படைப்பையும் , படைப்பாளியையும்

அதில் உள்ள கருத்துகளையும் குறித்தும் எழுதுங்கள்.

அதுவே இன்றைய தேவை.

நன்றி.

Edited by Thalaivan

இங்கே எழுதிய

அனைவரும்

இனியாவது

படைப்புகளுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்.

அதுவே தேவை.

பின்னூட்டங்களை கவனியுங்கள்.

படைப்பை எதிர்த்தவனுக்கு கல் வீசுவதை இனியாவது விட்டு தள்ளுங்கள்.

படைப்பையும் , படைப்பாளியையும்

அதில் உள்ள கருத்துகளையும் குறித்தும் எழுதுங்கள்.

அதுவே இன்றைய தேவை.

நன்றி.

:) தலைவனே நீங்களும் அந்த செயலை செய்தால் நல்லம் :D

:) தலைவனே நீங்களும் அந்த செயலை செய்தால் நல்லம் :D

எனது செயலை பின்னால் நகர்ந்து பாருங்கள். தெரியும்.

என்னை எதிரியாக நினைப்பவன் கூட சிறந்தவன் என்றால்

வாழ்த்த இவன் தயங்க மாட்டான்.

எமக்கு எதிரிகளே இல்லை.

அன்பே சிவம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எதிரியாக நினைப்பவன் கூட சிறந்தவன் என்றால்

வாழ்த்த இவன் தயங்க மாட்டான்.

எமக்கு எதிரிகளே இல்லை.

அன்பே சிவம்.

அன்பே சிவம் என்று அன்பை நேசிக்கின்ற நீங்கள் ஏன் தலைவன் வளரும் ஒரு கவிஞனை முளையில் முறித்துவிடும்படி வார்த்தைகளால் கருக்கினீர்கள் ? இளங்கவியின் கவிதைகளை இங்கு படிக்கும் யாவரும் கருத்து எழுதுவதில்லை. அது அவரது எழுத்தை பாராமையோ அல்லது விரும்பாமையோ அல்ல. சில விமர்சனங்களை மின்னஞ்சல் மூலம் இதே களத்தில் உள்ள பலர் பரிமாறிக்கொள்கிறார்கள். இதில் உங்களை எல்லாரும் தாழ்த்திக்கருத்து எழுதியுள்ளார்கள் என்றால் நீங்கள் இளங்கவிக்கு எழுதிய சொற்களுக்காகவே அன்றி உங்களை யாரும் எதிர்ப்பதாக அர்த்தம் இல்லை. ஒரு முதிர்ந்த கருத்தாளனான நீங்கள் இப்படி ஒரு துளிரை கிள்ளிவிடுதல் நியாமில்லைத்தானே தலைவன்.

எனது செயலை பின்னால் நகர்ந்து பாருங்கள். தெரியும்.

:)

Edited by shanthy

புலிகளாக இருந்து , புலிகளுக்கே வசை பாடுவோர் இங்கு அடிக்கும் குட்டிக் கரணம் அனைவரும் அறிந்ததே.

( எழுதியதை தூக்கியது ஏன்?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கவி உங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள் வழமை போல உங்கள் கவிதை யதாhத்ததை தொட்டு நிற்கின்றது. விடுதலைப்பாதையில் வீறுநடை போட்ட அந்த வீராங்கணைகளுக்கு இன்று கிடைத்திருக்கும் வாழ்வு துரதிஸ்டமானது. அவர்களின் விடிவு என்பது தூங்கி கிடக்கும் புலம் பெயர் சமூகத்தின் கையில் கண்டிப்பாக இல்லை.......என்பது வேதனையான வெட்கப்பட வேண்டிய விடயம்.

அவர்களது ஒரு சில முகாம்கனை பற்றி அறிந்த வகையில் படுக்க பாயின்றி... மாற்றுடையின்றி இருந்த காலத்தை நெஞ்சில் காயத்தை தந்தது. இன்று நிலமைகளை மாற்றப்பட்டுள்ளன. அவர்களைப்பற்றி அக்கறை உள்ளவர்களின் அவர்களுக்கான உதவியில் இயன்றவரை பங்கெடுத்துக்கொள்வோம்....

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளாக இருந்து , புலிகளுக்கே வசை பாடுவோர் இங்கு அடிக்கும் குட்டிக் கரணம் அனைவரும் அறிந்ததே.

( எழுதியதை தூக்கியது ஏன்?)

தேசியத்தின் காவலரண் தாங்குசுவர் தலைவன் உங்கள் தேசியத்தாங்கும் பலத்துக்கு மண் அணை சுமக்க எங்களால் முடியவில்லை. கவனம் கரணம் தப்பினால் மரணம் என்று சொல்வார்கள்.

அன்பே சிவம் என்றால் அவன் கையில் வேலாயுதமும் சூலாயுதமும் எதற்கு ஒரு நாத்திகன் சொன்ன முத்து போன்ற வரிகள் ஞாபகம் வருகின்றது :lol:

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

வேலாயுதம்,சூலாயுதம்,எல்லாம் பாவிக்கிறதுக்கு வேறு ஒரு பகுதியை ஆரம்பித்தால் நன்று..இந்தப் பகுதியை கவிதைக் களமாகவே விட்டு விடுங்கள்.வால்,வில்,வேல்,கத்த

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.