Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்! (திருமா)

Featured Replies

கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் ஈழத்துக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் ஆதரவான நிலை வகிப்பது, தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியிலும் கொந்தளிப்பைக் கிளப்பி இருக்கிறது.

லண்டனில் உள்ள தமிழ் நண்பர்கள் சிலர் நம்மிடம், ''பிரிட்டன்வாழ் 'பொங்கிடு தீவு நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக திருமாவளவனும், தமிழருவி மணியனும் லண்டனுக்கு வந்தார்கள். தமிழ் ஈழத்துக்காக உயிர்நீத்த திலீபன், சங்கர் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துவதும் விழாவின் திட்டம். சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதேசமயம், 'ஈழத்தை அழிக்க உதவிய கருணாநிதியுடன் ஏன் கூட்டு வைத்தீர்கள்? ஒரு எம்.பி. ஸீட்டுக்காக ஏமாந்துபோன உங்களை எப்படி நாங்கள் ஈழத்துக்கு ஆதரவான தலைவராக ஏற்றுக்கொள்ள முடியும்? காங்கிரஸின் களவாணித்தனத்தைப் பட்டியல் போட்டுப் பேசிய நீங்கள், சோனியா காந்தியுடன் எப்படி ஒரே மேடையில் நின்றீர்கள்?' என்றெல்லாம் திருமாவளவனிடம் பலரும் கேள்வி கேட்டார்கள்.

அதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட திருமாவளவன், 'யாருடன்

கூட்டணி அமைத்தாலும் ஈழ விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை மாற்ற முடியாது. என் நிஜமான உணர்வுகளை தயவுபண்ணி சிறுமைப்படுத்தாதீர்கள்' எனச் சொன்னார். அடுத்து குளோபல் டி.வி. என்கிறலோக்கல் சேனலின் லைவ் ஒளிபரப்பிலும் திருமாவுக்கு எதிராகப் பலமான கண்டனக் குரல் கொடுத்தார்கள் நேயர்கள்.

அப்போது, 'ஈழத்துக்காக இருபது வருடங்களுக்கும் மேலாக போராடி வரும் என்னை சந்தேகப்படுகின்றீர்கள்... ஆனால், தேர்தல் கூத்துக்காக ஒருநாள் உண்ணாவிரதம் உட்கார்ந்த ஜெயலலிதா உங்களுக்கு நல்லவராகத் தெரிகிறாரா?' என திருமா எதிர்க்கேள்வி கேட்டார். நேயர்களின் எதிர்ப்புக் கேள்வி அதன்பிறகும் வலுத்ததைத் தொடர்ந்து, அந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி அரைகுறையாகவே முடிந்தது..!'' என்றார்கள் லண்டன் தமிழ் நண்பர்கள்.

இதுகுறித்து நாக்பூரில் தீட்சாபூமி விழாவில் இருந்த திருமாவளவனிடமே கேட்டோம்.''லண்டன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் பேசிய கருத்துகளை, பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை. 'முதல்வர் கலைஞர் நினைத்திருந்தால் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்' எனக் கிளம்பும் அபவாதத்தை நம்பித்தான் உலகத் தமிழர்கள் சிலர் தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளிக்கிறார்கள். உலக நாடுகள்அத்தனையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் மட்டுமே தலையிட்டு எப்படி ஈழப் போரைத் தடுத்துவிட முடியும்? ஈழத்தின் விடிவுக்காக சிறுத்தைகள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், எங்களின் நிஜமான உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள்!'' என்றார் திருமா. கூடவே,

''ஈழப் போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த மே மாதம் 8-ம் தேதி வாக்கில் முள்ளிவாய்க்காலில் இருந்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான பா.நடேசனும், ஊடகப் பிரிவைச் சேர்ந்த சேரலாதனும் போனில் பேசி, 'உங்களோடு தலைவர் பத்து நிமிடம் பேச விரும்புகிறார்' என்றார்கள். 'கலைஞரையோ சோனியாவையோ தயவுபண்ணி திட்டாதீர்கள். இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் ஈழத்தை வென்றெடுக்க முடியாது. ஈழத்துக்கான போராட்டத்துக்குக் கைகொடுக்கும் விதமாகக் குரல் கொடுங்கள். யாரையும் வசைபாடி, எங்களின் பின்னடைவுக்கு வழிகோலாதீர்கள்' என்பதுதான் தலைவர் பிரபாகரன் எனக்கு சொன்ன தகவல்... அந்த கனத்த கணங்களை நினைக்கும்போதே என் நெஞ்சறுந்து போகிறது. அத்தனை விமர்சனங்களுக்கும் என் அழுத்தமான பதில் இது ஒன்றுதான்!'' - கொந்தளித்து அடங்குகிறது திருமாவின் குரல்!

அடேயப்பா..!

- இரா.சரவணன்

நன்றி: ஜூனியர் விகடன்

Edited by நிழலி

  • தொடங்கியவர்

இந்த கட்டுரைக்கு ஜூ.வியில் வந்த சில வாசகர் பின்னூட்டல்கள்:

ஹரிஹரன்:

சும்மா பிரபாகரன் போன் செய்தார் இவர் பீலா விட வேண்டியது. உடனே சீமான், ..கோ, இவங்க சொல்லுவாங்க பிரபாகரன் எனக்குதான் போன் செய்து ஜெ விடம் சரண் அடைய சொன்னாதாக சொல்வார்கள்.//நல்லா கிளப்புறாங்கயா. //கடைசி வரியை படித்தவும் எனக்கு நினைவிற்க்கு வந்தது வடிவேலு ஸ்டைலி "பீலிங்".

==============

பிரபு:

திருமா ஒரு உண்மையான தமிழ் உணர்வாளர்.பதவிக்கும், பணதிர்க்காகவும் விலைபோகாதவர். இந்திய இறையாண்மை என்ற அலுக்கு போர்வைக்குல் போலியாய் மூல்கிதவிக்கும் உண்மையான தமிழ் உணர்வாளனின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு திருமவளவன்.

==================================

அப்பன்:

/'கலைஞரையோ சோனியாவையோ தயவுபண்ணி திட்டாதீர்கள். இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் ஈழத்தை வென்றெடுக்க முடியாது../ இது பிராபகரன் சொன்னாரோ இல்லையோ இதுதான் உண்மை. இந்த மீதமுள்ள அடிப்படை புலி உருப்பினர்கள், ஈழ அனுதாபிகள் இதை மனதில் கொண்டு செயல் பட்டால் ஈழம் மலரும். இல்லை மனம், வாய் கூசும் படி முகா, சோனியாவை துதி பாடினால் மீதமுள்ள ஈழ மக்கள் பெருந்துயரம் அடைவர்கள். இணைய தளத்தில் புலிகள் இந்தியா, முகா, சோனியா, காங்கிரஸை பற்றி பதிவு செய்யும் எழுத்துக்களை பாருங்கள். சகிக்க முடியாது. பின் எப்படி இவர்கள் ஈழம் பெருவார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு, சூழ்நிலை அறிதல் .. இல்லாமல் இப்படி தாந்தோன்றித்தனமாக நடந்தால் எப்படி ஈழம் மலரும். இவர்களே இவர்களின் மேல் மண்ணை வாரிதூற்றுகிரார்கள். இவர்களுக்கு விவேகம் வருமா ? ஈழ துயரம் முடியுமா ?. காலம் தான் பதில் சொல்லும்.

======================================================

சுலைமான் சவூதி அரேபியாவில் இருந்து:

எல்லாம் போச்சு, கடைசியாக "கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்!" இதை சொல்ல திருமாவளவனுக்கு இவ்வளவு நாலாகியதா? எதோ காலத்திற்க்கு தகுந்தார் போல் வேசம் போடுவது போல் இருக்கிறது இவர்களின் சரவெடிகள்..என்னவெல்லாம் இன்னும் பேசி, பேசி மக்களை முட்டாளாக்க முடிமோ அதை எதாவது வகையில் செய்துக் கொண்டுதான் இருக்கிரார்கள், வீழ்ந்ததை பற்றி பேசாமல், அழிந்தி வரும் தமிழினத்தை காக்க என்ன வழி என்பதை செய்ய பாருங்கள்!!

===================================

ரமேஸ்:

திருமா சேர்ந்திருக்கும் இடம் அப்படி, இனிமேல் கனவில் வந்து பேசினார் என்று மு.க மாதிரியே பீலா விட்டாலும் விடுவார். சரி, அவர் பிழைக்கத் தெரிந்தவர், பிழைத்துக் கொள்வார்.

================================

ராஜேந்திரன்:

புரியாத மரமண்டைகளுக்கு இனியாவது புரிந்தால் சரி. திருமா இந்த நன்றி கெட்டவர்களை தள்ளி விட்டு இந்தியத்தமிழர்களுக்கு அதுவும் அன்றாடங்காச்சிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்

============================

சிறீதர்:

இன்னும் எத்தனை பேரோ........ is this a fashion now in TN.??!! prabakaran called me personally......... if you have a computer & photoshop software you can make photos as if u r standing with anyone....

==================================

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விவகாரத்தில்...

மக்கள் ஆதரவில்லாமல் உறுதியான நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் எடுக்க முடியாது..! உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் மக்கள் ஆதரவை ஒன்று திரட்டவும் முடியாது.. பிடி 22 (Catch 22) நிலமைதான்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டங்குவார், பிடி22 என்ற சொல்லை (எனக்கு) அறிமுகப்படுத்தியதுக்கு.சினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை என்ன சொல்லவாறார் எண்டால் தானும் தலைவரும் அப்பிடியாம், தலைவர் மே மாதம் 8 ம் திகதிக்குப்பிறகு தன்னோட தொடர்புகளை ஏற்படுத்தேலயாம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிஞர் அண்ணா நேற்றைய தினம் எனக்குக் கனவில் வந்து தமிழ்நாட்டில் அரசியல் வியாபாரிகள் (வி...ரிகள்) சொல்வதையும் ஆடும் நாடகங்களையும் புலம் பெயர் தமிழர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அவ்;;;;;;;;;;;வ்வ்வ்வ்வ்வ்வ்வ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை இந்தியாவிற்க்கு எதிரானது என எடுக்க வேண்டாம்,

இந்தியாவில இருக்கிற தமிழ் பத்திரிகையாளர்களும், செய்தி வாசிப்பவர்களும் எங்கள் ஊர்களின் பெயர்களை சரியாக சொன்னால் நல்லா இருக்கும். முந்தி அமைதிப்படை காலத்தில் செய்தி வாசிக்கிறவை தெல்லிப்பாளை என்று சொல்லுகிறவை..இப்ப இவை பொங்கிடு தீவு என்று சொல்லுகினம். திருமாவிற்க்கும் தெரியுமோ தெரியாது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.