Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழில்,தமிழர்கள் பூசை செய்தால் பலனளிக்காது சமக்கிருதத்துக்குத் தான் மந்திரமும் மாயமுமுண்டெனப் பம்மாத்து விடுகின்றார் சங்கரன்கோயில் சைவசரபம் பட்டமுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-பட்டமுத்துக்களின் ஈழப்படையெடுப்பு. நந்தி என்ற பெயரில் நரித்தனம்-

சங்கரன் கோயில் சைவசரபம் பட்டமுத்து என்பவர் தமிழ்நாட்டுக் கோயில்களில் பிரசங்கம் செய்பவராம். இவ்வளவு நாளும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பிரசங்கம் செய்தவர், இன்று வலைப்பூக்களின் வழியாகவும், இளிச்சவாய் ஈழத்தமிழர் இணையத்தளங்களூடாக ஈழத்தமிழர்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளார்.

யார் எவ்வளவு தான் புலமையுள்ளவராக இருந்தாலும், அது சிவனாயிருந்தாலும் கூடப் பயப்படாது, ஒவ்வாத கருத்துக்கு எதிர்க்கருத்தைக் கூறுவது தான் தமிழ்மரபு. அது தான் என்னுடைய வழக்கமும் கூட, ஆனால் அவர் இன்று கூடாரமிட்டிருக்கும் உணர்வுகள் களத்திலுள்ள ஈனப்பிறவி, என்னுடைய நிதியுதவியில் உருவாக்கப்பட்டு, என்னால் வளர்க்கப்பட்ட களத்தில் அவருக்குப் பதிலெழுத முடியாமல் என்னைத் தடுத்து விட்டது.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழர்களின் ஆலயங்களில், தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்பதற்காக தமிழறிஞர்களும், தமிழ்த்தலைவர்களும், தமிழர்களும் போராடிப் பெற்ற பலன்களையெல்லாம் வீணாக்கித், தமிழர்களையும், தமிழையும் இரண்டாமிடத்தில் தமிழர்களின் ஆலயங்களிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் இவரது நோக்கம்.

இவரது கருத்தின்படி ஆலயங்களில் தமிழில் பூசை செய்யக் கூடாது, அது பாவம், அப்படிச் செய்தால் அது ஆகம விதிகளுக்கு அப்பாற்பட்டது. இந்தக் கருத்தில் இவருக்கும் தமிழெதிரி சோ ராமசாமிக்குமிடையே எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் பூசை செய்யலாம் என்பது தான் தமிழ்நாட்டின் சட்டம்.

அப்படியென்றால், தமிழில் கோயில்களில் பூசை செய்வது தவறு என்று பரப்புரை செய்வதன் மூலம், நந்தி என்ற புனைபெயரில் நரி வேலை செய்யும் பட்டமுத்து சட்டமறுப்பு போராட்டம் நடத்துகிறாரா என்பதை தமிழ்நாட்டு அரசும், மக்களும் தான் அவரிடம் கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்து சாதியினரும் பூசகர்களாக நியமிக்கப்படலாம் என்பது தமிழ்நாடு அரசின் அறிவிப்பு. அந்த அறிவிப்பு பட்டமுத்துவின் தூக்கத்தைக் கெடுத்து விட்டது, அதனால் தமிழர்களின் கோயில் கருவறைக்குள் தமிழன் நுழைந்து பூசை செய்தால் பாவம் என்று வாதாடுகிறார் இந்தச் சூத்திரன். இதற்கும் அவரது நொண்டிச்சாட்டு ஆகமங்கள் தான். ஈழத்தில் புகழ்பெற்ற சைவாலய்ங்களில் தமிழ்ச்சூத்திரர்கள் தான் பூசை செய்கிறார்கள், அந்தக் கோயில்களில் எல்லாம் சாநித்தியம் கிடையாதா? அங்குள்ள சைவக்கடவுளர் எல்லாம் கடவுள் இல்லையா. கதிர்காமக் கந்தனுக்கும், செல்வச்சன்னதி முருகனுக்கும் ஆகமமும், வேதங்களும் தேவையில்லை ஆனால் சைவசரபம் சட்டமுத்துவுக்குத் தான் தேவைப்படுகிறது.

இவரைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட தமிழர்களை, அவர்களின் தமிழ் முன்னோர்கள் கட்டிய கோயிலின் கருவறைக்குள்ளேயே நுழைய விடக் கூடாது என்பது தான். இவரது கொள்கைப்பரப்பலுக்கு உடந்தையாக இருப்பது ஒரு ஈழத்தமிழனின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஒரு இணையத்தளம், அது தான் கொடுமையிலும் கொடுமை.

ஆகமமும், தமிழர்களின் ஆலயத்தின் கருவறைப்பிரவேசமும் படும் பாடு:

ஆகமத்தைப் பற்றி ஈழத்தமிழர்களின் கருத்து, நந்தி என்ற பெயரில் உலாவும்சட்டமுத்துவின், கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்துச் சித்தாந்த சைவத்தின் கருத்துப்படி சிவாகமங்கள், சிவபெருமானால் தமிழில் தான் அருளிச் செய்யப்பட்டு, வடமொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன. அதனால் எத்தனையோ இடைச் செருகல்கள் நடைபெற்றிருக்கலாம். தமிழிலிருந்த ஆகமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டன. அதனால் தமிழர்கள் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யமுடியாது பூணூல் அணிந்தவ்ர்கள் தான் புகலாம் என்பது அவர்களாலேயே புகுத்தப்பட்டிருக்கலாம்.

ஆகமத்தில் ஐயப்பன்சாமி என்ற ஒரு சாமியே இல்லை. ஆனால் இன்று ஆகமத்துக்கு விரோதமாக ஐயப்பன் வழிபாடு நடக்கிறது. யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயப்பன் போன்ற சிறு தெய்வ வழிபாட்டை எதிர்த்தார். ஆனால் இன்று ஐயப்பன் கோயில்களே ஆகம விதிப்படி கட்டப்பட்டுப் பூசைகள் நடைபெறுகின்றன். எனவே ஆகமத்தைக் காரணம் காட்டி தமிழர்கள் தமிழர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய முடியாதென்பது சட்டமுத்துவின் குள்ளநரித்தனம். சாயிபாபாவின் படத்தை வைத்து சாம்பிராணி காட்டுவதற்கும் ஆகமத்தில் வழிமுறை இல்லை. இன்று புகழ் பெற்ற சைவாலயங்களில் கூட சாயிபாபாவின் படம் வைத்துப் பூசை நடக்கிறது. பணம் பண்ண முடியுமென்றால் ஆகமத்தில் இடமுண்டு போலும், ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட தமிழன் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யத் தான் இடமில்லை என்பது சைவசரபம் சட்டமுத்துவின் வாதம்.

ஆகமங்களையும் வேதங்களையும் விட தமிழ் நாயன்மார்கள் அருளிச் செய்த பன்னிரு திருமுறைகளும் ஈழத்தமிழர்களின் சடங்குகளிலும், ஆலயங்களிலும் முதலிடம் பெறுகின்றன. கண்ணப்பநாயனார் சமக்கிருதத்தில் பாடவில்லை, சைவத்தின் நாயன்மார்களும், வைணவத்தின் ஆழ்வார்களும் தமிழில் பாடித்தான் இறைவனையே தம்முன்னால் தோன்றச் செய்தார்கள். அப்படியென்றால் தேவாரம் பாடிச் செய்யும் பூசையை சிவபெருமான் ஏற்றுக்கொள்ள மாட்டார், சமக்கிருதத்தில் பூசை செய்தால் தான் பலனுண்டாகும் என்று புலம்பும் பட்டமுத்து சைவத்தின் நாயன்மார்களை, அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அவர்கள் தமிழர்களுக்குக் காட்டிய சைவநன்னெறியைக் பழித்து சிவநிந்தனை செய்கிறாரா?

ஈழத்தில் கதிர்காமத்து முருகனுக்குச் சமக்கிருத மந்திரமோதுவதில்லை, செல்வச்சன்னதியிலும் சமக்கிருதம் கிடையாது, அந்தக் கோயில்களிலுள்ள முருகன் அருள் பாலிக்கவில்லையா, செல்வச்சன்னதி முருகனுக்கு மீனவக்குருக்களும், கதிர்காமக் கந்தனுக்கு வேட்டுவக்குருக்களும் பூசை செய்கிறார்கள், செல்வச்சன்னதியில் மீனவசமூகத்துத் தமிழர்கள் பூசை செய்வதால் ஈழத்து முருகன் சைவமில்லையென்றாகி விடுவானா?

'கண்ணப்பனொப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னையுமாட்கொண்டருளி" என்று மாணிக்கவாசகர் கசிந்துருகும் கண்ணப்பநாயனார் சிவாகம விதிப்படியா பூசை செய்தார், அல்லது அவரென்ன தனக்குப் புரியாத சமக்கிருத மொழியிலா புலம்பினார். சிவபெருமான் கண்ணப்பனின் பூசையில் உருகவில்லையா, அப்படியிருக்க சட்டமுத்துக்கு மட்டும் ஏன் பூசைசெய்யச் சமக்கிருதமும், பூணூலும் தேவை.

ஆகமங்களிலோ, அல்லது தமிழர்களின் சைவசித்தாந்தத்திலோ சாதிப்பாகுபாடு பெருமளவில் காட்டப்படவில்லை, சாதிப்பாகுபாடு தமிழ்ச்சைவத்துக்கு வந்த காலம், சோழர்காலத்திலும், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு தமிழ்நாட்டையாண்ட தமிழரல்லாத அன்னியர்களின் ஆட்சியிலும் தான்.

சைவத்தின் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கும் சிவபெருமானுக்குச் சமமாக வணக்கத்துக்குரியவர்கள், சிவனருள் பெற்றவர்கள், அறுபத்து மூன்று நாயன்மார்களில் தமிழ்ச்சமுதாயத்திலுள்ள எல்லாச் சாதியினரும் அடங்குவர், அங்கு சாதிப்பாகுபாடு காட்டப்பட்டதில்லை.

பிராமணர்கள் மட்டுமல்ல, தமிழர்களனைவரும், கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யலாம், நாயன்மார் காலத்தில் தமிழர்கள் அவ்வாறு பூசை செய்தார்கள், அதிலும் தமிழில் பூசை செய்தார்கள் என்பது தேவார, திருமுறைகளில் நாயன்மார்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். பூணூல் அணிந்த சிவாச்சாரியார்கள் மட்டும் தான் கருவறையில் பூசை செய்யலாம், தமிழர்கள் பூசை செய்யமுடியாது என்பது வெறும் திட்டமிட்ட இடைச்செருகல் தான் என்பதற்கு ஆதாரம் தேவாரத்திலேயே உண்டு.

திருவீழிமிழலைத் திருத்தலத்தில் செந்தமிழர்கள் ஒருங்கு கூடி சிவபெருமானை அர்ச்சித்துப் பூசை செய்தனர் என்கிறார் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர். செந்தமிழர் ஒரு போதும் வடமொழியில் அர்ச்சனை செய்திருக்க முடியாது. செந்தமிழர் செந்தமிழில்தான் அர்ச்சனை செய்திருப்பார்கள் அல்லவா.

செந்தமிழர் தெய்வமறை நாவா செழு

நற்கலை தெரிந்த அவரோடு

அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்

செய்ய அமர்கின்ற அரனூர்

கொந்தலர் பொழிற்பழக வேலிகுளிர்

தண்புனல்வ ளம்பெருகவே

வெந்திறல் விளங்கிவளர் வேதியர்

விரும்பு வீழி நகரே. (மூன்றாம் திருமுறை)

நாயன்மார் காலத்தில் தமிழர்கள் சாதி வேறுபாடில்லாமல் கோயிலுக்குள் நுழைந்து பூசை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் திருநாவுக்கரச நாயானாரின் தேவாரத்திலுமுண்டு.

'மாதர்ப் பிறைக் கண்ணியானை

மலையான் மகளொடும் பாடிப்

போதொடு நீர் சுமந்து ஏத்திப்

புகுவார் அவர் பின்புகுவேன்

யாதும் சுவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப்பிடியோடும்

களிறு வருவன கண்டேன்"

அழகிய பிறை மதியைத் தலைமாலையாக அணிந்தவர் சிவபெருமான். உமாதேவி இமவான்மகள் ஆவார். அச்சிவனை உமையோடு சிலர் பாடிச் செல்கிறார்கள். அவர்கள் பூவோடு நீரை ஏந்திக், துதித்துக் கொண்டும் போகிறார்கள். அவர்களுடன் நானும் கோயிலுக்குள் போவேன். அப்படிப்பட்ட நான், கால் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன். அப்போது அன்பு பொருந்திய இளம் பெண் யானை வந்து கொண்டு இருந்தது. அதனுடைய ஆண் யானையும் வருவதைப் பார்த்தேன். அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைப் பார்த்தேன் என்கிறார் நாவுக்கரசர்.

திருநாவுக்கரசர் காலத்தில் திருக்கோயில் கதவுகள் எல்லோருக்கும் திறந்து இருந்ததையும் அடியார்கள் நீரும் பூவும் சொரிந்து நேரடியாக இறைவனை தமிழில் வழிபட்டதையும் காணலாம். நாவுக்கரசர் தானும் அடியார்களும் பூவும் நீரும் கொண்டு சென்று நேரடியாக இறைவனைத் தொழுதார் என்கிறார். நாவுக்கரசர் பூணூல் அணிந்த சிவாச்சாரியார் குலத்துப் பிராமணரல்ல. அதனால்தான் சூலை நோயுற்ற போது 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" எனப் பாடுகிறார்.

நாயன்மார் காலத்தில் கருவறையில் நுழைந்து தமிழில் பாடி வழிபடவும், உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்களின் படையெடுப்பினாலும், அக்காலத்தில் தமிழ்நாட்டின் செல்வச் செழிப்பாலும் பெருவாரியான வடமொழிப் பார்ப்பனர்கள் வடநாடுகளிலிருந்து குடியேறியமை தான்.

தமிழில் பூசை செய்தால் பலனளிக்காதும் சமக்கிருதத்துக்குத் தான் மந்திரமும் மாயமுண்டெனப் பம்மாத்து விடுகின்றார் பட்டமுத்து. ஆனால் தமிழில் கோளறு பதிகத்தைப் பாடும் அடியார்களுக்கு நாளும், கோளும் எதுவும் செய்யாது சிவனருளே கிடைக்குமென்கிறார் நாளும் தமிழ்வளர்த்த ஞானசம்பந்தர்.

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரை செய்

ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே."

தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த் சிறந்த இந்தத் தமிழ்ச் சொல்மாலையை ஓதுகின்ற அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி.

16.jpg

http://unarvukall.blogspot.com/

தொடரும்.....

Edited by Aaruran

ஆரூரணை நீண்ட காலத்துக்கும் பின் இங்கு கண்டதில் மகிழ்ச்சி...

ஆனால் இங்கு கருத்து எல்லாம் எழுதும் மனநிலை பக்குவத்துக்கு இன்னும் நான் வரவில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரூரணை நீண்ட காலத்துக்கும் பின் இங்கு கண்டதில் மகிழ்ச்சி...

ஆனால் இங்கு கருத்து எல்லாம் எழுதும் மனநிலை பக்குவத்துக்கு இன்னும் நான் வரவில்லை...

உங்களைக் காண்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி. உங்களின் மனநிலை எனக்கும் புரிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது வாதம் சரியாகதான் உள்ளது.

ஆனாலும் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

1) இறைவனுக்கும் மொழிக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

2) மற்றவர்கள் எவ்வாறு வழிபடுகிறார்கள் என்பது நமது பிரச்சினையே அல்ல. நான் எவ்வாறு வழிபடுகிறேன் என்பதுதான் முக்கியம்.

3) நீங்கள் மகிழ்வாக இருக்க கற்றுகொள்ளுங்கள். ஏனெனில் உங்களின் உள்ளே ஏற்படும் கோபம் உங்களைத்தான் கொன்றுவிடும்.

4) நீங்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்வீர்கள் என உங்கள் டாக்டர் கூறினால், எது உங்களுக்கு முக்கியமானதாக இருக்குமோ, அவை மட்டுமே உண்மையில் முக்கியமானவை.

இவை சரி என்று சொல்லவில்லை. எனது கருத்து மட்டுமே...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது வாதம் சரியாகதான் உள்ளது.

ஆனாலும் சில முக்கியமான விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

________

2) மற்றவர்கள் எவ்வாறு வழிபடுகிறார்கள் என்பது நமது பிரச்சினையே அல்ல. நான் எவ்வாறு வழிபடுகிறேன் என்பதுதான் முக்கியம்.

3) நீங்கள் மகிழ்வாக இருக்க கற்றுகொள்ளுங்கள். ஏனெனில் உங்களின் உள்ளே ஏற்படும் கோபம் உங்களைத்தான் கொன்றுவிடும்.

4) நீங்கள் இரண்டு மாதங்கள் மட்டுமே உயிர்வாழ்வீர்கள் என உங்கள் டாக்டர் கூறினால், எது உங்களுக்கு முக்கியமானதாக இருக்குமோ, அவை மட்டுமே உண்மையில் முக்கியமானவை.

இவை சரி என்று சொல்லவில்லை. எனது கருத்து மட்டுமே...

நல்ல ஒரு கருத்து அகதி.

மதம் எல்லாவற்றையும் தாண்டி .....

ஒரு மாதத்தில் முப்பதாயிரம் சனம் , ஒரு சவப் பெட்டியும் இல்லாமல் சிவலோகம் போனதே ......

அதனைப் பற்றியும் யோசிப்போம்.

Edited by தமிழ் சிறி

ஆரூரன் நல்ல கருத்துக்களை தந்தீர்கள். எங்கள் வாயினாலேயே எங்கள் சகோதரர்களை தீண்டத்தாகாதவர்கள் எனச் சொல்லி ஒதுக்க வைத்தவர்கள் பார்ப்பனர்கள். இதில் கவலைக்குரிய செய்தி என்னவென்றால் ஒதுக்கப்பட்டவர்களும் ஒதுக்குபவர்களுடன் இணைந்து பார்ப்பனர்களுக்கு ஆமாம் போடுவதுதான்.அண்மையில் ஒரு பிராமணத் தாயாரை சந்தித்தேன். பொதுவாக தங்கள் குலப் பெண்கள் மனதுக்கு விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று வேதனையுடன் சொன்னார். காரணம் வருணாச்சிரமம். பிராமணர் அல்லத ஆண்களை விரும்புகின்றபோது, அப்பெண் இறந்து விட்டதாக சொல்லி சடங்குகளை முடித்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் மற்ற எல்லோருமே சூத்திரர்கள். வெள்ளாளரை சற்சூத்திரர் என்பார்கள். எல்லோருமே ஒன்றுதான் அவர்களுக்கு.இது எங்கட சனத்துக்கு விளங்காது.

கடவுளுக்கு மொழி ஒரு பிரச்சினயா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை அந்தக் கடவுளே உண்மயாக இருக்குதா இல்லையா என்பது தான் தற்போதுள்ள பிரச்சினை. அன்பு ஒன்றுதான் தமிழர்களுக்குக் கடவுள். கடவுள் அன்பானவன் என்ற கொள்கை பணம்பண்ண பார்ப்பனனுக்கு ஒருவேளை சோறுபோடக்கூடும். ஆனால் தமிழா நீ அன்பானவனாக இருந்தால் மற்றுமொரு தமிழனுக்கு நிச்சயம் நீ சோறுபோடக்கூடும். மந்திரங்கள் தந்திரங்கள் எல்லாம் சொல்லி, சொல்லவைத்து உள்ள கடவுளரிடம் எல்லாம் தலைகீழாக நின்றுதான் பார்த்தோமே. கல்லுக்கு காது கேட்குமோ இல்லை கண் பார்க்குமோ?

மதமுமல்ல, மொழியுமல்ல, அன்பே கடவுள். (சிவமுமல்ல) அன்பே கடவுள். கடவுள் என்று ஒன்றில்லை மேலாக தன்னையே தரும் அன்பே கடவுள். :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.