Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனியில் வெளிநாட்டவர் சபைக்கான தேர்தலில்.சாந்தி ரமேஸ் போட்டியிடுகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா... :o

  • Replies 61
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா.

வாழ்த்துகள் தலைவியே.... உங்கள் ஊர் பக்கம் எப்பவாவது விசிட் அடித்தால், ஆடுவெட்டி கறிசமைத்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்.. சரியோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துகள் தலைவியே.... உங்கள் ஊர் பக்கம் எப்பவாவது விசிட் அடித்தால், ஆடுவெட்டி கறிசமைத்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்.. சரியோ

எங்கடையளுக்கு நித்திரையிலையும்

ஆடு வெட்டி படையல் போடுறதிலைதான் நினைப்பிருக்கும். :)

நிழலி!

இஞ்சை வந்து இதுகளுக்குத்தான் மவுசு

kumarasamayyinrai.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி!

ஒரு சந்தேகம் கேட்டதற்கு இப்படி என் மீது பாயத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

சாத்திரி "Rheinland Pfalz மாநிலத்திற்கான வெளிநாட்டவர் சபை" என்று எழுதியிருந்தார். மாநிலத்தில் உள்ள நகரங்களுக்கான வெளிநாட்டவர் சபை என்று எழுதியிருந்தால் எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்காது.

மாநிலத்திற்கான வெளிநாட்டவர் சபைக்கான தேர்தல் என்று எழுதியிருந்ததோடு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளர்களுடன் நிற்கின்ற படமும் போடப்பட்டிருந்தது எனக்கு மேலும் குழப்பத்தை தந்து விட்டது. Ausländerbeirat தேர்தல்களில் மாநில முதலமைச்சர்களுக்கு பொதுவாக எந்த அக்கறையும் இல்லை.

சபேசன் உங்களில் பாயவில்லை. நீங்கள் என்னவென்று புரியாமல் கேள்விக்குறியிடவில்லை. அது மட்டும் உண்மை. செய்தியை எழுதிய சாத்திரி உங்களுக்குப் புரியாமல் எழுதினாரா ? அதைவிடுகிறேன்.

Ausländerbeirat தேர்தல்களில் மாநில முதலமைச்சர்களுக்கு அக்கறையில்லையென்ற உங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை. எங்கள் மானில முதல்வர் இந்தத்தேர்தலில் அக்கறையுடன் அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்தார். மிகவும் அக்கறையுடன் தனது ஆதரவையும் வெளிநாட்டவர் அவையின் செயற்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்தார். மற்றும் குடும்ப சமூக சுகாதார அமைச்சர் பொருளாதார அமைச்சர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

15வருடம் முதல் அல்லது 10வருடம் வரை Ausländerbeirat இல் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்காதா ?

நீங்கள் ஓர் ஆய்வாளர் இந்த Ausländerbeirat பற்றி ஆய்ந்து அறிந்து ஒரு ஆய்வை எழுதுங்கள். பலர் பயனுறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக Auländerbeiratல் போட்டியிடுவது ஒரு பெரிய விடயம் இல்லை. Auländerbeiratல் 15ஆண்டுகளுக்கு மேலாகவே பல நகரங்களில் தமிழர்கள் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீங்கள் போட்டியிடுவதை படங்களோடு யாழ் களத்தில் இணைத்திருந்தது என்னுடைய சந்தேகத்தை அதிகரித்து விட்டது.

ஓம் பல நகரங்களில் Ausländerbeirat தேர்தலில் தமிழர்கள் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதை இல்லையென்று மறுக்கவில்லை. இத்தனையும் அறிந்த உங்களால் ஒரு சொல்லைப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றது உண்மையில்லை சபேசன்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கே இருக்கவில்லை. காரணம் துருக்கியர் றஸ்சியர் கூட வாழும் நகரத்தில் நாங்கள் வெல்லமாட்டோமென்ற எண்ணத்தை முடிவுகள் மாற்றியிருக்கிறது. எங்களால் இந்த பல்லின சமூகத்துடன் இயங்க முடியுமென்ற உண்மையை சொல்லியிருக்கிறது.

ஒரு இலங்கை மனிதவுரிமை மீறல் கலந்துரையாடலில் பங்கேற்கமாட்டேன் காரணம் புலிகள் நீங்கள் என்று மறுத்த நகரபிதாவின் கையால் வாழ்த்தும் வரவேற்பும் கிடைத்தது பெரிய வெற்றிதான் என்வரையில்.

மற்றது உங்களைப் பொறுத்தவரை Ausländerbeirat தேர்தல் என்பது பெரிய விடயமேயில்லை. சரி. ஏனெனில் நீங்கள் அஞ்சலா மெயாகல் லெவலில் சிந்திக்கிறபடியால் சிம்பிள்தான். ஆனால் Ausländerbeirat தேர்தல் எங்கள் மானிலத்தில் எமக்குப் பெரியவிடயமாக உள்ளது. ஏனெனில் நாங்கள் சமான்ய குடிமக்கள். அதையும் விடவும் ஒரு சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று அந்தச் சமூகத்துடன் இணைந்து எமக்கான வேலைத்திட்டங்களைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையிருக்கிறது. அட இது பெரியவிடயமே இல்லையென்று ஒதுக்கியதையெல்லாம் இப்போ தேடித்தேடிப் போகிறோம். ஏனெனில் தேவையுள்ளதால்.

நீங்கள் தெரிவானதைப் பயன்படுத்தி

பரப்புரை நிகழ்வுகளுக்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்ய உதவுங்கள்

உங்கள் நகரில் நடக்கக் கூடிய தமிழர் கலாச்சார நிகழ்வுகளுக்கு நிதி பெற உதவுங்கள்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

சபேசன் ,

ஆக Ausländerbeirat ஊடாக

1)தமிழர்களுக்குக் கிடைக்கும் நன்மை மண்டபம் ஒழுங்கு செய்யும் உரிமையா ?

2) தமிழர் கலாசார நிகழ்வுகளுக்கு நிதி சேர்த்தல் மட்டுமா ?

அப்போ ஆகக்கூடியளவு தமிழர்கள் இதுவரை Ausländerbeirat ஊடாக மண்டபங்கள் எடுக்கத்தான் பயன்படுத்தியுள்ளார்களா ? (எனக்கும் புரயவில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்

இனியாவது மேய்ப்பு ஆலோசனைகளை நிறுத்திக் கொண்டு நீங்களும் இதுபோன்ற பக்கங்களில் உங்கள் பங்களிப்புகளை செய்யுங்கள் சபேசன்.

உங்கள் நகரில் நடக்கும் அடுத்த Ausländerbeirat தேர்தலில் நீங்கள் நில்லுங்கள். அதிக பட்சம் Ausländerbeirat பற்றிய ஒரு ஆய்வையாவது செய்து தாருங்கள். யேர்மனியில் பல்லாயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் திருமண பிறந்தநாள் விழாக்களையாவது Ausländerbeirat புண்ணியத்தால் கொண்டாடட்டும்.

இதையும் உங்களில் பாய்தல் என்று அர்த்தம் கொள்ளாமல் புரிந்து கொள்ளுங்கள்.

அல்லது சபேசன் குறிப்பிட்டதைப்போன்று பரப்புரை நிகழ்வுகளுக்கு மண்டபங்கள் ஒழுங்கு செய்யவும்

உங்கள் நகரில் நடக்கக் கூடிய தமிழர் கலாச்சார நிகழ்வுகளுக்கு நிதி பெற உதவவும்

மாநில முதலமைச்சர் போன்றவர்களுடன் தொடர்புகள் கிடைத்தால் மேற்கொண்டு உங்கள் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உதவவுமே மட்டும் பயன்படக்கூடியதா?

சகாரா இதற்கு சபேசன் தான் பதில் தர வேண்டும். எனக்கு சபேசன் சொன்ன ஆலோசனைகள் பற்றி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றியை நீங்கள் எவ்வகையில் உபயோகப்படுத்தலாம்? உங்களுக்கான அதிகாரங்கள் என்று பிரத்தியேகமாக ஏதேனும் உள்ளதா? மேலதிகமாக எவற்றையெல்லாம் உங்களுக்குக் கிடைத்த இவ்வெற்றியைப் பயன்படுத்தி நீங்கள் செய்யமுடியும்?

சாந்தி நீங்கள் வாழும் நாட்டில் இருக்கும் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது. அறிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்.

சகாரா,

அரைமணித்தியாலம் ரைப்பண்ணினது அழிஞ்சிட்டுது.

இதைப்பயன்படுத்தி எமக்கான விடயங்களை செய்யலாம். பல்லின மக்களுடனான தொடர்புகள் அரசியலாளர்கள் மற்றும் நகர நிர்வாக சபைகளில் நாம் சொல்ல விரும்புபவற்றை சுதந்திரமாக சொல்லலாம். நமக்கான ஆதரவுகளைத் திரட்டிக்கொள்ளலாம்.

அரசியல் சக்திகளை மாற்றியமைத்து உரிமைகளை எடுத்துக் கொள்ளும் எந்த அதிகாரமும் இல்லை. நாம் இதன் ஊடாக மேலதிகமாகச் செய்ய விரும்புபவற்றை இந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையச் செய்வதில் தடையில்லை. ஆனால் இதைத்தான் செய்யப்போகிறேன் என்று கொள்கை விளக்கம் சொல்லிக் கொண்டு போனால் எதுவும் செய்ய முடியாது. இதில் தேர்வானவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்களோ அப்படி பயன்கள் உண்டு.

அரை மணித்தியாலம் ரைப்பண்ணியது அழிஞ்சு போச்சு. இது தொடர்பான விபரங்கள் நாளை எழுதுகிறேன் சகாரா.

  • கருத்துக்கள உறவுகள்

alvaiyooraan

arjun

கறுப்பி

குமாரசாமி

தயா

கந்தப்பு

தமிழ் சிறி

marumakan

Nellaiyan

Pulukan

sagevan

அனிதா

கிறுக்குபையன்26

அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தலைவியே.... உங்கள் ஊர் பக்கம் எப்பவாவது விசிட் அடித்தால், ஆடுவெட்டி கறிசமைத்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும்.. சரியோ

தலைவா ,

ஆடுமாடு வெட்டெல்லாம் நமக்குச் சரிவராது. ஓன்லி மரக்கறிதான். வரேக்க இலை குழை தளைகளில் சமையல் தரப்படும்.ஆரோக்கிய உணவு சரியோ. :)

:lol:

நிழலி!

இஞ்சை வந்து இதுகளுக்குத்தான் மவுசு

kumarasamayyinrai.jpg

குளோபஸ் கடைக்குக் கமராவோடை போய் வந்தமாதிரியிருக்குப் படம். நிழலிக்கு உந்த இரகசியங்களைச் சொல்லிவிட்டீங்களெண்டா பிறகு யேர்மனியில் குடியேற வந்திடுவார் குடும்பமாக. :D

வெளிநாட்டவர் அவையின் தேர்தல் பற்றி 10 விபரங்கள் எனக்குத் தரப்பட்டதை இங்கு இணைக்கிறேன். வாசித்துப் பாருங்கள். முடியுமாயின் தமிழில் மற்றவர்களுக்கு விளங்க மொழிமாற்றம் செய்து விடுங்கள்.

Bild7.jpg

சபேசன் நீங்கள் குறிப்பிட்ட எந்த ஆலோசனையும் இந்தக் குறிப்பில் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வென்று தமிழர்களுக்கு நல்ல காரியங்களைச் செயற்படுத்த வாழ்த்துக்கள் சாந்தி அக்கா.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தேர்தலில் பல வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தனர்.அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.வென்றவர்கள் தங்களை வளர்த்துக் கொண்டது மட்டுமே நடந்தது. அவுஸ்ராண்ட பைறாற் உரிய தேர்தலே அது .வெளிநாட்டவர்களுக்கான ஆலோசனைச்சபையே அது.

புலவரின் கருத்து நியாயமானதே. யேர்மனியில் பல நகரங்களில் தமிழர்கள் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள்.தங்களுக்குள் போட்டி போட்டுமிருக்கிறார்கள். ஆனால் தமிழருக்கு என்று பொதுவாக எதுவும் செய்தது கிடையாது. தங்களையும் தமது உறவுகளையும் தமக்குத் தெரிந்தோரையும் மட்டுமே அவர்களுக்கு வெற்றியின் பின் தெரியும்.

சில வருடங்களுக்கு முன் லண்டோ என்ற நகரத்திலும் ஒருதர் போட்டிபோட்டியிட்டு வெண்டவராம். தமிழரும் போட்டிச்சினம் ஆனால் ஒண்டுமே நடந்ததாகத் தெரியவில்லையென அந்த நகரத்துத் தமிழ் வாசிகள்(வாக்காளர்கள்) பேசிக் கொண்டார்கள். எங்கட தமிழரது பிறவிக்குணமான சுயநலப் போக்கு மாறாதவரை தமிழினத்துக்கு நன்மைகள் விளையப் போவதில்லை. விமர்சனத்தைக் கண்டு சன்னதம் கொள்வினமேயன்றிச் சரியாகச் சிந்திக்க மாட்டினம்.

தமிழ் பாடசாலையள் வழிய கூட உந்த வெளிநாட்டுப் பிரிவெண்டு இருக்கும். அவை என்ன செய்வினமெண்டால் ஏதாவது பிள்ளையளுக்கான விடயங் நடந்தா உடன தங்கட பிள்ளையளைத்தான கொண்டுபோறது. அத நிர்வாகத்தோட கலந்து எல்லாப் பிள்ளையளுக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கிறேல்லை. இந்த லட்சணத்திலை......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.