Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு உக்ரைன் மற்றும் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வந்தன - கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகள் தமக்கான ஆயுதங்களில் பெரும்பாலானவற்றை உக்ரைன் நாட்டிலிருந்து பெற்றுக் கொண்டதாகவும், ஆசியா, ஆபிரிக்கா நாடுகள் பலவற்றிடமிருந்து ஆயுதங்கள் கிடைத்தபோதும் மிகமுக்கியமானது உக்ரைன் தான் எனவும் ஜப்பானின் கியோடோ நியூஸுக்கு அளித்த பேட்டியொன்றில் கருணா கூறியுள்ளார். வடகொரியாவிலிருந்து ஆயுதங்கள் பெறப்பட்டனவா எனக் கேள்வி கேட்டபோது, அங்கிருந்தும் ஆயுதங்கள் கொள்வனவு செய்ய பல முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவை எதுவும் ஒருபோதுமே வெற்றியளிக்கவில்லை என அவர் கூறினாராம்.

ஆனால் புலிகள் வடகொரியாவின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி சீனாவிடமிருந்து ஆயுதம் கொள்வனவு செய்ததாக கொழும்பின் நன்கு தகவலறிந்த ராணுவ அதிகாரி தமது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் கூறியதாக கியோடோ தெரிவித்துள்ளது. மேலும் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் பல ரஷ்யா மற்றும் சீனத் தயாரிப்புகள் என்றும் கருணா கூறியதாக அச்செய்தி கூறியுள்ளது.

http://www.paristamil.com/tamilnews/?p=43703

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளுக்கு உக்ரைன் மற்றும் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வந்தன - கருணா

எல்லா ஆயுதமும் ஸ்ரீலங்கா ஆமியிட்டயிருந்து அடிச்சுப்பறிச்து, உள்ளுக்க விட்டதே அடிச்சுப் பறிக்கத்தானெண்டு இவருக்குத் தெரியாதோ? சும்மா கதை விடுறார். :D

கஸ்ரப்படாமல் நீ வாழ்வதற்காய்..

‘கனம்” தங்கிய (அமைச்சர்) பதவியை

நீ பெறுவதற்குமாய், கறுத்த கோட்டும்

கறுத்த சூட்டும் நீ அணிவதற்காய்

‘கனம்”; சுமக்காமல் நீ காசு பிழைப்பதற்குமாய்..

கடன்பட்டு கடல் கடந்து சென்று

கனகாலமாய் கானகத்து வெய்யிலிலும்,

கடும் குளிரிலும் கஸ்ரபட்டு காசுழைத்து

தன் கஸ்ரங்கள் எல்லாம் தீர்ந்ததென்றெண்னி

கனவுகள் பல சுமந்து கொண்டு

கட்டுநாயக்கா விமானத்தளத்தில்

கால் பதித்து வந்தவர்களை

கள்ளத்தனமாய் ‘காவலாளி” களுடன் கூட்டுசேர்ந்து

கடத்திக் கொண்டு போய் கப்பம் வாங்கி

கருணையில்லாமல் கழுத்தறுத்து

கொலை செய்த கருணா அம்மானே!!

நீ கருணையுள்ளம் கொண்டவனாமே..!!

கண்ணிரண்டுமிருந்தும் புண்ணுடையார்;

கவிதை வடிக்கிறார்கள் உன் மீது கருணை கொண்டு..

கருணா அம்மானே!! எங்கள் கருணா அம்மானே!!

கருணையுள்ளம் கொண்ட கருணா அம்மானே!!

கடன் வாங்கி, பல கஸ்ரங்களின் மத்தியில்

கடை வைத்து, கால் கடுக்க நின்று

கண் விழித்து “கஸ்ரமர்களை” கவர்ந்திழுத்து

கஸ்ரப்பட்டுழைத்து காசுசேர்த்து

கண்ணியமாய் வாழ்ந்து வந்த

“கனவான்” களிடம் நீ கருணையில்லாமல்

உன் காடை குழு கூட்டங்களை ஏவிவிட்டு

கஸ்ரப்படாமல் கப்பமாய் காசு கறந்து

காரியங்கள் பல முடித்த கருணா அம்மானே

நீ கருணையுள்ளம் கொண்டவனாமே..!!

கருத்தரித்த போது கட்டுக்கடங்கா மகிழ்சி கொண்டு

கருத்தரித்தது கனிந்து வருவதற்காய்

ஐயிரண்டு பத்து மாதம் அலுங்காமல் குலுங்காமல்

அல்லம் பகலும் கண்விழித்து காத்திருந்து

அடைகாத்து பொரித்தெடுத்த குஞ்சுகளை

கண்ணே மணியே என் கற்பகமே

என்றழைத்து கண்ணின் இமைபோல்

கட்டி காத்து கஸ்ரங்கள் பல மத்தியில்

எங்கள் கண்மணிகள் கால்கள் முழைத்து

கல்வி கற்கசென்ற போது.. நீ

கடைத்தெருக்களில் கழுகுபோல் காத்திருந்து

எங்கள் கண்மணிகளை கடத்தி

கண்களை கட்டி கவர்ந்து சென்று..

கட்டிக்காத்தவர்கள் கதறி, கதறியழுது

கண்ணீர் சிந்துகையில்.. நீ

கவலைகளேதுமின்றி கருணையில்லாமல்

கடத்திக் கொண்டு போய்

‘காலனவன்” பிரபாகரனிடம் களப்பலிக்காய்

காலம் காலமாய் எங்கள் கண்மணிகளை

களவாய் கூட்டிசென்று கதைமுடித்தாய்..

கனவில் கூட நாமதை மறக்கமாட்டோம்

கருணா அம்மானே..

கள்ள இதயங்கள் கொண்ட கயவர்கள்

உன்மீது கருணை கொண்டு கவிதையெழுதுகிறார்கள்

நீ கருணையுள்ளம் கொண்டவனாம்..?

நீ காவிய நாயகனாம் தங்களின் மனதில்

நீ என்றும் கதாநாயகன் தானாம்;

நீ கண்ணீர் வடிக்கும் மக்களை காப்பாற்றுகிறாயாம்

என்று உன்னை புகழ்ந்து தள்ளி

உனக்கு கவிதை வடித்து கற்பூரம் காட்டுகிறார்கள்

கதைதானே.. இது வெறும் கதைதானே..?

உன்னால் கண்ணீர் வடித்த

மக்கள் எத்தனை எத்தனை பேர்

அவர்கள் அழுது வடித்த கண்ணீர்

எங்கள் மனதில் இன்னும் வற்றாமல் தேங்கி நிற்கிறது..

காலம் உமக்கு பதில்சொல்லும் என நாம் காத்திருக்கிறேம்

கருவேப்பிலையாய் உன் ‘கனம்” தங்கிய பதவியை

கசக்கி எறிவார்கள்.. அன்று நீ காணாமல் போய்விடுவாய்

உன் மீது கருணை கொண்டு கவிதை வடிப்பவர்களும்

உன் காலத்தோடு காணாமல் போய்விடப் போகிறார்கள்

காட்டிக்கொடுத்ததற்காய்

கறுத்த கோட்டும் சூட்டும்

‘கனம்” (அமைச்சர்) தங்கிய பதவியை

கச்சிதமாய் பெற்றுக்கொண்ட

கண்ணியம் தவறிய கருணா அம்மானே

“கருணா அம்மான”; என்ற பதவியை

உன் கழுத்தில் அணிந்து விட்டவனையே

கைகழுவி விட்டுவிட்டவன்.. நீ

கருணா அம்மான் எனற பதவியை மட்டும்

இன்னுமேன் நீ கட்டிக் காக்கின்றாய்?

கருணா அம்மானே!! எங்கள் கருணா அம்மானே!!

கருணையுள்ளம் கொண்ட கருணா அம்மானே!!

உன் கரங்களில் படிந்திருந்த

கறைகளையெல்லாம் நீ கழுவியதால்

அவைககள் எல்லாம் உன்னிடமிருந்து

கழுவுண்டு காணாமல் கரைந்து போய் விட்டதுவாமே..?

உன்மீது படிந்த கறைகள் எல்லாம்

கரையுண்டு காணமல் போனதால்

நீ மக்களை காத்தருளும் கடவுளாகி விட்டாய்யாமே..?

கவிதை வரைகிறார்கள் உனக்கு காக்கா பிடிக்கும்

உன் புகழ்பாடும் ஆஸ்தான கவிஞர்கள்..

நல்லிணக்க “அமைச்சர்” என்ற

நல்ல பதவியுமக்கு ஏன் அளித்தார்கள்..?

நல்லிணக்கமாய் வாழ்ந்து வந்த

நம்மினத்தை நயவஞ்சகாமாய்

யாழ்பாணத்தானென்றும், மட்டக்கிளப்பானென்றும்

வன்னியனென்றும் வகை வகையாய்

நம்மினத்திடையே பிரதேசவாதத்தை

நீ பிரித்து பிளவுபடுத்தி வைத்ததால்

நல்லிணக்க அமைச்சராக பதவி பெற்றாயோ..?

நீ செய்த வினையும் செய்யும் வினையும்

உன்னை சூழ்ந்து கொள்ளும்

நல்மனம் கொண்டோரின் சாபங்கள்

உன்னை வந்தடையும் - உன்

உடலும் உயிரும் வதைபட்டு ஊசலாடி

இவ்வுலகத்தை விட்டு சென்றடையும்

அன்று நம்மினம் நல்லிணக்கம் கொண்டு

என்றென்றும் சந்தோசம் கொண்டு ஐPவிப்போமாக.. நன்றி.

மட்டக்களப்பு மைந்தன்.. சுதாகரன்.

Thnaks Nitharsanam.net

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஆயுதமும் ஸ்ரீலங்கா ஆமியிட்டயிருந்து அடிச்சுப்பறிச்து, உள்ளுக்க விட்டதே அடிச்சுப் பறிக்கத்தானெண்டு இவருக்குத் தெரியாதோ? சும்மா கதை விடுறார். :D

அது சரி சிறிலங்கா அரசோடு இருப்பவர்கள் எல்லாம் கதை விடுபவர்கள் என்று நன்றாகவே உங்களுக்கு தெரிந்திரக்கின்றது... ***

Edited by இளைஞன்
தனிநபர் தாக்குதலை தவிர்க்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி சிறிலங்கா அரசோடு இருப்பவர்கள் எல்லாம் கதை விடுபவர்கள் என்று நன்றாகவே உங்களுக்கு தெரிந்திரக்கின்றது... ***

கதை விட்டது விடாதது கண்டுபிடிக்க 18 நாள் இருக்கு, நேற்றும் இந்தியா அறிக்கயில வருவார் எண்டு இருந்தது. :D

  • கருத்துக்கள உறவுகள்

காதில வந்த செய்தி........

கேணல் ராம் இப்போது பனாகொடை ராணுவ முகாமில் கோத்தாவின் செல்லப்பிள்ளையாக இருக்கிறாராம்.கருணா அம்மானுடன் சேர்ந்து அவர் அடிக்கும் கூத்துக்கள் அமோகமாம். இவர் எழுதியதாகக் கூறப்பட்டு வந்த "புலம்பெயர் தமிழர்க்கான கடிதங்கள்"எந்த அடிப்படையில் எழுதப்பட்டன என்பது இப்போது புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதயை சூழ்நிலையில் நவம்பர் 27 இல் தலைவர் கட்டாயம் வர வேண்டும் என்றில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை விட்டது விடாதது கண்டுபிடிக்க 18 நாள் இருக்கு, நேற்றும் இந்தியா அறிக்கயில வருவார் எண்டு இருந்தது. :(

அதுவரை உங்க பாடி கண்டிஷன் தாங்குமா? மாரிகால குளிர்வேறை :D:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.