Jump to content

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா??


Recommended Posts

மே 18 வரை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று சொன்னார்கள். இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் கொழும்பில் இருந்து செயற்படும் யாரோ தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று பேட்டியில் சொல்கின்றார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் என்பவர்கள் வாக்களிப்பு மூலமா இவ்வளவு காலமும் தெரிவுசெய்யப்பட்டு இருக்கின்றார்கள்? தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்ட குழுக்கள் தமது அரசியல், ஆயுத பலம் மூலம் வலுப்பெற்று தாமே மக்களின் பிரதிநிதிகள் என்று ஓர் சூழ்நிலையை உருவாக்கினார்களே ஒழிய எப்போதாவது சுத்தமான ஜனநாயக முறையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்களா?

தற்போது ஈபீடீபி அமைப்பு தமது அரசியல் பலத்தை (மற்றும் இதர பலங்களையும்) பாவித்து குடாநாட்டில் தமது செல்வாக்கை பெருக்கி வருகின்றார்கள். இவர்களை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்குமா?

பேட்டியின் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை. இதேபோல வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தற்போது ஏதோ செயலாற்றுபவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றும் தெரியாது. ஆனால்.. எனது கருத்து தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்பவர்கள் எல்லாக்காலத்திலும் தன்னிச்சையாக செயற்பட்டு அதிகாரங்களை பலங்களை தாமாக பெற்றுக்கொண்டவர்கள் ஒழிய ஜனநாயக முறையில் வந்தவர்கள் அல்ல என்பதை இங்கு கூறுவதே.

எனவே, தற்போது எவராது தன்னிச்சையாக செயற்பட்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னெடுப்பார்களாக இருந்தால் அதில் என்ன தவறு இருக்கின்றது என்றும் தெரியவில்லை [ஜனநாயக முறை என்று பார்த்தால் தமிழர் பிரதிநிதித்துவத்தின் ஆரம்பமே கோணல்.. இதில் வேறு புதிதாக என்ன இருக்கின்றது?].

Link to comment
Share on other sites

இதே குழப்பம்தான் பலரிற்கும்..

Link to comment
Share on other sites

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றைக்கு தமிழர் மத்தியில் ஜரோப்பாவில் பேசப்படுகின்றதொரு விடயம்..

இது நிறைவேற்றப்பட்ட பொழுது நான் பிறந்திருக்கவில்லை ஆயினும் பின்னர் அதுபற்றி படித்து அறிந்து கொண்டதில்..இந்தத் தீர்மானம் தமிழர் வரலாற்றில் முக்கியமானதொரு தீர்மானமாகும்..ஆனால் தற்சமயம் அதனை புலம் பெயர் நாடுகளில் முன்மெரிந்து அதன் மீது வாக்கெடுப்பு நடந்த விரும்புவர்களை இரண்டு குழுக்களாக பிரிக்கலாம்

1)கல்விமான்கள் குழு.... இவர்கள் தாங்களே தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கமுடியும் என்கிற நினைப்பில் இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தினை கையிலெடுத்துள்ளனர்..இந்தக் குழுவினர் வெளிநாடுகளிற்கு வந்து சுமார் இருபது வருடங்களிற்கு மேலாக வசித்துவருபவர்கள்.. இவர்கள் புலிகள் அமைப்பின் ஆதிக்கம் இருந்த காலங்களில் அரசியல் மற்றும் பொது நடவடிக்கைகளில் பெரும்பாலும் ஒதுங்கியிருந்து தம்மை நடு நிலையாளர்களாக காட்டிக்கொண்டவர்கள் இந்தக் குழுவில்இருக்கிறார்கள்..இவர்கள் பெரும்பாலும் ஈழவிடுதலைப்போராட்டம் பற்றி செய்திகளில் மட்டுமே அறிந்தவர்கள்..மக்களின் உணர்வுகள் மற்றும் அவர்களின் விருப்பங்கள் என்னவென்று அறியாதவர்கள்..அதுமட்டுமல்ல வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் பின்னர் அது வெற்றியடைந்தாலோ தோல்வியடைந்தாலோ அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று எந்தத் திட்டமும் இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை..

2)இரண்டாவது.குழு..இவர்கள் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள்..புலிகளின் கட்டைளையிடும் அதிகாரத்தலைமையில் இன்று யாரும் இல்லாது போனதால் இவர்கள் மக்கள் பேரவை என்கிற பெயர்களில் புதிய வடிவம் எடுத்துள்ளனர்..இவர்களுடைய பிரச்சனை 1)தொடர்ந்தும் மக்களை கட்டுப்படுத்தும் சக்தியாக தாங்களே இருக்கவேண்டும் 2)தாங்கள் இதுவரை வகித்து வந்த பொறுப்புக்கள் தங்கள் கைகளை நழுவி போய்விடக்கூடாது..3)எப்படியாவது எதையாவது செய்து மக்களிடம் நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தால்தான் இவர்களது வசதியான இருப்புக்களை காப்பாற்றல்.. இவர்களிற்கும் இதே வட்டுக்கோட்டை தீர்மானம்தான் கைகொடுக்கிறது..ஆனால் இந்தக் குழுவில் வட்டுக்கோட்டை தீர்மானம் என்றால் என்னவென்றே தெரியாத பலர்தான் உள்ளனர்.

3) நாடு கடந்த தமிழீழ அரசு குழுவினர்..இவர்கள் தாங்கள் உறுப்பினகளை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு ஒன்றினை அடுத்த வருடம் சித்திரை மாதம் வைத்துள்ள நிலையில்..அதற்கு முதல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடந்து வெற்றி பெற்றால் பின்னர் தங்கள் வாக்கெடுப்பினை மக்கள் நிராகரித்து விடுவார்களா என்கிற பயம்..

ஆனால் மேலே குறிப்பிட்ட மூன்று குழுவினருமே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட அமைப்பினை கொண்டவர்களல்ல..மூன்று குழுவினருமே தாங்களே மக்களின் பிரதிநிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்..அதே நேரம் இந்த மூன்று குழுவினருமே தனித்தனியாக மக்களிடம் வாக்கு கேட்டு போகப்பயப்படுகிறார்கள் என்பதுததான் உண்மையான நிலவரம்..சிலவேளை மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தங்களை நிராகரித்து விட்டால்..மூன்று குழுவும் மூக்குடைபட்டு போவார்கள்..அதனால்தான் இந்த மூன்று குழுவினரும்..ஒரு உடன்பாட்டிற்கு வந்து ஒன்றாக ஒரு தேர்தலை வைப்பதற்கு தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார்கள் ஆனால் எல்லாமே தோல்வியல் போய் இன்று தமிழர் உரிமைப்போராட்டம் என்பது மூன்று நாய்களிடம் அகப்பட்ட அழகான சட்டையைபோல கிழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது..

இதே நேரம் மாற்றுக்கருத்தாளர்கள் என்கிற அணியொன்று இன்னமும் இதற்குள்வாராது வெளியே நின்று வேடிக்கை பார்த்தபடியே நிற்கிறார்கள்.. ஆனால் தமிழீழம் என்பதற்கான அக..புற நிலை காரணிகள் ஒரு சதவிகிதம் கூட சாதகமாக கொண்டிருக்கவில்லை என்பது உண்மை..அதற்கு சான்றாக அமெரிக்கா தொடக்கம் ..ஜரோப்பா..இந்தியா என்று உலக நாடுகளே இலங்கை சட்டத்தை 13 வது தடைவை திருத்தி அதன் கீழ் தமிழர்களிற்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கை இணைத்து மாகாண சபை தீர்வை கொடுப்பதே நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன..அதற்கான அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்கள் படித்திருப்பீர்கள்..அதற்கு மேல் மேலைத்தேய நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியா விரும்பாது..அதை மீறி மேலைத்தேய நாடுகளும் உள்ளே போக விரும்பாது. தனித் தமிழீழம் என்பது இனி வெறும் கனவுதான்....(இதனை நான் சொன்னதற்காக என்றுடன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.).ஏனெனில் கனவு காண்பது அவரவர் விருப்பம்... அதே நேரம் தாயகத்தில் உள்ள மக்களும் தங்களை நிம்மதியாக வாழவிட்டாலே போதும் என்கிற நிலைமையும்..வெளிநாடுகளில் உள்ளவர்வர்களிற்கும்..அந்த மக்களிற்கு ஏதோ ஒரு நல்ல தீர்வு கிடைத்து விடுமுறை நாட்களில் பிரச்சனையிலாமல் நாங்களும் ஊரிற்கு போய்வந்தாலே போதும் என்கிற நிலைமைதான்..

ஆனால் வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது நல்தொரு தீர்மானம் அதனை உலகநாடுகளின் உதவியுடன் ஒழுங்காக வழிநடத்தி அநதத் தீர்மானம் பற்றிய விளக்கங்களை அந்ததந்த நாட்டு அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளிற்கு புரியவைத்து அவர்களின் அங்கீகாரத்துடன் வெளிநாட்டு பத்திரிகைகளிலும் அதன் முக்கியத்துவத்தை புரியவைத்து அவை பற்றி பத்திரிகைகளும் தங்கள் நாட்டு மக்களிற்கு செய்திகளை கொண்டு சென்று சேர்த்தபின்னர்.. இலங்கையில் இருக்கின்ற தமிழ்கட்சிகளின் ஆதரவுகளையும் பெற்று ஈழத்தில் யாரிற்கு தீர்வு வேண்டு மென்று இத்தனையும் நடக்கின்றதோ அவர்களின் ஆசிகளுடன் இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்தி இதுதான் தமிழ் மக்களின் விருப்பு உங்கள் தீர்வுகளை எங்கள் மீது திணக்கவேண்டாம் என்று இந்த சர்வதேசத்திற்கு சொல்லவேண்டும்....ஆனால் அது நடக்காது..அதுவும் வெறும் கனவே...காரணம் இவை அத்தனையையும் ஒன்றிணைக்கின்ற சக்தி வாய்ந்த ஒரு அரசியல் தலைமை இன்று எங்களிடம் இல்லை..ஓரு பெரிய அரசியல் வெற்றித்தில் நாங்கள் நிற்கிறோம்..தற்சயம்..அதிகார போட்டிகளும்..குழிபறிப்புக்களும்..பணசுருட்டல்கள் மட்டுமே நடக்கின்றது..

ஆனால்..இங்கு கி.பி.அரவிந்தன் அவர்கள் அந்த தீர்மானத்தை நிராகரிப்பதும்...இப்படியானதொரு தனிப்பட்ட அரசியல் காரணமாகவே எனக்கு படுகின்றது..அவரை இந்தத் தீர்மானங்களை கையிலெடுத்தவர்கள் ஒதுக்கியிருக்கலாம்...அதன்காரணமாகவே அவரும் இதனை எதிர்க்கிறார்போல் தெரிகின்றது...ஆனால்..இங்கு அவருடன் கலந்துரையாடிய சாத்திரியண்ணா..சாந்தி ஆயியோரும்..கி.பி அரவிந்தன் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறார்களா..அல்லமு அதனை அவர்களும் சேர்ந்து அந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்களா என்று அவர்கள்தான் புரிய வைக்கவேண்டும். அப்ப நான் வரட்டா

Link to comment
Share on other sites

ஆனால்..இங்கு அவருடன் கலந்துரையாடிய சாத்திரியண்ணா..சாந்தி ஆயியோரும்..கி.பி அரவிந்தன் அவர்களின் கருத்தை ஆமோதிக்கிறார்களா..அல்லமு அதனை அவர்களும் சேர்ந்து அந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்களா என்று அவர்கள்தான் புரிய வைக்கவேண்டும். அப்ப நான் வரட்டா

சுமங்களா,

இதுவொரு உரையாடல். அரவிந்தன் அவர்கள் உரையாடியிருக்கிறார். தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இதில் சாத்திரி ,சாந்தி கலந்து கொண்டுள்ளோம். மற்றும்படி ஏற்பு மறுப்பு என்று எதுவுமில்லை.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று இப்போ கிளம்பியுள்ளவர்களின் முரண்பாடுகளுக்கான தெளிதலாக கி.பி.அவர்களின் இந்த உரையாடல் இருக்கிறது. தொடர்ந்து உரையாடுவதன் மூலம் நாம் தெளிவடைந்து கொள்ளலாம். வட்டுக்கோட்டையில் சொன்னதுதான் தமிழீழம் மற்றதெல்லாம் துரோகம் என்று பட்டம் வழங்கும் பரப்புரையாளர்கள் புரிதலுக்காகவும் இவ்வுரையாடல் பயன்படலாம்.

இது ஒரு முன்னாள் போராளியின் கருத்து. அவர் தான் சொன்னது யாவும் சரி அதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லைத்தானே. ஆகவே நாமும் இதுபற்றி உரையாடுவோம்.

எனவே, தற்போது எவராது தன்னிச்சையாக செயற்பட்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னெடுப்பார்களாக இருந்தால் அதில் என்ன தவறு இருக்கின்றது என்றும் தெரியவில்லை .

ஆக ஆளாளுக்குத் தீர்மானங்களைக் கொண்டு வருவது சரியென்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

சுமங்களா இவ்வளவு தூரம் புலம்பெயர் தமிழர் அரசியலைப்புரிந்து எழுதுவீர்கள் என்று நான் நினைத்திருக்கவில்லை.அதே நேரம் கி.பி.அரவிந்தன் அவர்களின் எல்லா கருத்துக்களுடனும் நான் உடன்பட வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் பின்னால் நின்று துரோகிப்பட்டம் வழங்காமல் கருத்தாடுதல் என்பது ஆரோக்கியமானதுதானே.அதே போல் எனக்கும் தற்சமயம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது அவசியமற்றது என்பதே என்னுடைய கருத்துமாகும்.தற்சமயம் அதனை கையிலெடுத்திருப்பவர்களால் அது நடை பெற்றாலும் தமிழர் அரசியலில் எவ்விதமானதொரு சிறு பயனையும் தரப்போவதில்லை என்பது உண்மை.அதே நேரம் இங்கிலாந்தில் இது சம்பந்தமாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியாமல் வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.பிரான்சிலும் வாக்கெடுப்பு நடக்குமா??என்பது சந்தேகத்திறகிடமாகவே உள்ளது.அப்படி நடந்தாலும் எத்தனை வீதம் தமிழர் வாக்களிப்பார்கள் என்பதும் கேள்விக்குறிதான்.ஏனெனில் அது பற்றிய போதிய விளக்கம் எந்தத் தரப்பாலும் மக்களை அணுகி தெளிவு படுத்தப்படவில்லை.அதே நேரம் பிரான்ஸ்சில் அனைத்து நகரங்களிலும் அது நடத்தப்படவில்லை.முன்னர் போலவே வாக்கெடுப்பு நடத்துகிறோம் வந்து ஓட்டுபோடுங்கள் என்கிற போக்கிலேயே அரசியல் தொடர்கிறது.இதுபற்றி மக்களுடன் நேரடி கலந்துரையாடல்கள்,கூட்டங்கள் எதுவுமே நடத்தப்படவில்லை.தொ.காட்சியில் விளம்பரம் மட்டும்தான் போகிறது விளம்பரத்தைப் பார்த்து ஓட்டு போடலாமா???

Link to comment
Share on other sites

ஜயையோ நான் முதல் எழுதிய கருத்திற்கு கத்தி போட்டிட்டாங்கள்..வாழ்க.. வட்டுக்கோட்டை தீர்மான பிரித்தானி வாக்கெடுப்பிற்கு தொலைக்காட்சி விளம்பரமாவது குடுத்தார்கள் ஆனால் பிரான்சிலை அதே விளம்பரத்தை வைத்து இலவசமாகவே வாக்கெடுப்பு நடத்துவதற்கு பிரான்ஸ் தமிழர் பேரவை நினைத்து லண்டனில் நடக்கும் அதே நாள் பிரான்சிலும் வாக்கெடுப்பு நடக்கும் என்று பாரிஸ் லாசப்பலில் மட்டும் பிரசுரம் கொடுத்தார்கள். லாசப்பலிற்கு மிளகாய்தூள் தமிழ் டிஸ்க் வாங்க வருகிறவர்கள் மட்டும் வாக்கு போட்டு ஈழத்தமிழர் தலைவிதியை நிச்சயித்தால் போதும் என்று *** நினைத்தாரோ தெரியாது.இலண்டனிலை வாக்கெடுப்பு பிற்போடப்பட்ட படியால் பிரான்சிலை என்ன நிலைமை என்று தெரியாது.அடித்த நோட்டீஸ் காசு நட்டம்.

Link to comment
Share on other sites

நோர்வேயில் நடைபெற்ற மக்களவைக்கான தேர்தல் முடிவுகள்.

இதற்குமுன் வட்டுக்கோட்டைக்கு வாக்களித்த விபரமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.வாக்குகளின் அடிப்படையை வைத்துப்பார்த்தால் நோர்வே மக்களவையை நோர்வே வாழ் தமிழர்கள் நிராகரித்துள்ளனர்.

Norway Election Results(2).pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெற் இப்படிச் சொல்கின்றது..

The Norwegian Council of Eelam Tamils (NCET) attracted enough number of participants in the poll that took place Sunday in 16 centres of the different regions of Norway, in which 2767 voters turned out to elect 5 members under a national list and 10 under regional lists. Noticeable of the results was Mr. Bjønar Moxnes topping the national list polling 1864 votes. Mr. Vijayshankar from Tamil Nadu is elected to the Council topping the list of Western Region. Considering the electoral history of Eezham Tamils, who have hitherto been imposed with constitutions and were voting in elections conducted by others, this is their first ever country-wide elections, conducted by them on their own, to form a political body of their own, based on their own constitution. The eight-member Election Commission performed the task with professional perfection, observers said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30616

Link to comment
Share on other sites

நோர்வேயில் நடைபெற்ற மக்களவைக்கான தேர்தல் முடிவுகள்.

இதற்குமுன் வட்டுக்கோட்டைக்கு வாக்களித்த விபரமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.வாக்குகளின் அடிப்படையை வைத்துப்பார்த்தால் நோர்வே மக்களவையை நோர்வே வாழ் தமிழர்கள் நிராகரித்துள்ளனர்.

ஏன் நிராகரித்தவர்கள்?

Link to comment
Share on other sites

ஏன் நிராகரித்தவர்கள்?

இது கேள்வி????

Link to comment
Share on other sites

இது கேள்வி????

கேள்விக்கு விடை தெரியாட்டி தெரியாதெண்டு சொல்ல வேணும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.