Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாம்

Featured Replies

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள்

ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது.

ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பணத்தை அவர்கள் இருக்குமிடத்திலேயே வைத்திருக்குமாறும், அல்லது ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வதை மட்டுமாவது தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

அமைப்பின் தலைவர்களில் ஒருவரான திரு.செல்வன் இராசா அவர்கள் கூறுகையில், "நாம் ஸ்ரீலங்கப் பொருளாதாரத்தில் எந்த வகையில் பணத்தை இட்டாலும் அது எப்படியாவது ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்தைச் சென்றடைந்து தமிழர்களை வேரறுத்து அடிமைத்தளையில் தள்ளவே பயன்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

"பல நல்லுள்ளம் உள்ள சீரிய நோக்கம் கொண்ட தமிழர்களும் தாங்கள் அறியாமலேயே பல வழிகளில் சிங்கள இனவெறி அரசின் பொருளாதார பலத்தைப் பலப்படுத்த உதவி விடுகின்றனர்" என்றார் திரு. இராசா. "முதலீடு செய்வதற்கு நல்லவொரு இடமாக இப்போது ஸ்ரீலங்கா தோன்றினாலும் அவ்வாறு செய்வது சிலோனைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களுக்குப் பெருந்தீங்காக முடியும் என்ற உண்மையை எமது தமிழ் நண்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம்."

தமிழர்கள் செய்யாமல் தவிர்க்க வேண்டிய பல விடயங்களைத் திரு. இராசா தெரிவித்தார்.

"நாம் நமது பணத்தை ஸ்ரீலங்காவில் வைக்கக் கூடாது", என்றார் திரு. இராசா. "நாம் செய்யாமல் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் இதோ!"

►ஸ்ரீலங்காவிற்குப் பயணம் செய்ய வேண்டாம்

►கொழும்புவில் வீடுகள் வாங்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிலுள்ள வங்கி எதிலும் பணத்தை வைக்க வேண்டாம்

►ஸ்ரீலங்காவிலுள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம்

►ஸ்ரீலங்காவில் பங்குகளோ கடன் பத்திரங்களோ வாங்க வேண்டாம்

►"யாழ்ப்பாண வளர்ச்சி நிதி" அல்லது மட்டக்களப்பு புதுப்பிப்பு அறக்கட்டளை" அல்லது "மறுவாழ்வு" என்பதைப் பெயரில் கொண்ட எந்த கவர்ச்சிகரமான சொற்றொடர்களைக் கண்டும் மயங்கி விடாதீர்கள். சுனாமிக்காக ஸ்ரீலங்கா அரசு வசூலித்த பணம் எதுவும் பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சென்றடையவில்லை; அது கொழும்பிலேயே தங்கிவிட்டது என்பதை நினைவில் வைத்திருப்போம்.

►துணிமணிகள், பலசரக்குப் பொருட்கள், ஸ்ரீலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அல்லது வேறு எந்தப் பொருட்களையும் வாங்க வேண்டாம், மேலும்

சில்லறை வியாபாரியிடமும் (மொத்த விநியோகிப்பாளர் யாரென்று தெரிந்தால் அவரிடமும்) இப்பொருட்களை இனிமேல் விற்க வேண்டாம் என அறிவுறுத்துவோம்.

பின்னர் திரு. இராசா தனது வாதத்தை வெளிப்படையாக முன்வைத்தார். "உலகத்தை ஸ்ரீலங்காவிலிருந்து முதலீடு செய்யாமல் தடுக்க முதலில் நாங்கள் ஒரு முன்மாதிரியை உருவாக்க வேண்டியுள்ளது: வெளிநாட்டில் வாழும் தமிழர்களாகிய நாம் தான் ஸ்ரீலங்காவிலிருந்து பணத்தை அகற்றி வேறிடத்தில் வைப்பதில் முதலாவதாக இருக்க வேண்டும். நாம் முதலில் இதனைச் செய்யாத வரையில் மற்றவர்கள் அதைச் செய்ய முன்வர மாட்டார்கள்."

"தென் ஆப்பிரிக்காவில் உலக நாடுகள் முதலீடு செய்யாமல் தவிர்த்தது நல்ல விளைவைத் தந்தது. அதன் விளைவுகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வெள்ளை இனவெறி அரசு வளைந்து கொடுத்து இனஒதுக்கல் கொள்கையைக் கைவிட்டது. கொழும்பின் சிங்கள அரசாங்கம் தமிழர்களை அமைதியாகத் தங்கள் தாயகத்தில் எப்போது வாழ விடும் என்பது தெரியவில்லை, ஆனாலும் நாம் நமது கடமையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்" என்று கூறி திரு. இராசா முடித்துக் கொண்டார்

"ஒரு வாளியை நிரப்ப பல சிறு துளிகள் தேவைப்படுகின்றன, ஆனால் இறுதியில் வாளி நிறைந்து விடுகிறது"

http://www.donotinvestinsrilanka.com/PressRelease/Tamil_11112009.html

எங்கட காட்டேறிகளுக்கு இதி எங்க விளங்க போகுது. போட்டி போட்டு கொண்டு அகதியாய் உழைத்த காசை கொண்டு போய் விலாசம் காட்ட வேணுமே

  • 2 weeks later...

‘அமைச்சர்களதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதில்கள் சாதகமாக அமைந்தது’ புலம்பெயர் புலி ஆதரவுக் குழுவின் இலங்கை விஜயம்

≡ Category: ஜெயபாலன் த, லண்டன் குரல் | ≅

நவம்பர் முற்பகுதி வரை நான்கு வாரங்களாக இலங்கைப் பயணத்தை மேற்கொண்டிருந்த புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் குழு தற்போது நாடு திரும்பியுள்ளது. ‘அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதகமாகப் பதிலளித்தனர்’ என இலங்கைக்கு விஜயம் செய்த குழுவின் சார்பில் சட்டத்தரணி கெ பத்மநாதன் தெரிவித்தார். சட்டத்தரணி கெ பத்மநாதன் (லண்டன்), ஆர் சோமஸ்கந்தன் (ஜேர்மனி), ரி தர்மகுலசிங்கம் (டென்மார்க்), ஆர் இலங்கைத் தேசியமன்னன் (லண்டன்) ஆகியோரே இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் விஜயத்தின் போது அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்த, விநாயகமூர்த்தி முரளீதரன் உட்பட பல அமைச்சர்களையும் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து உரையாடி உள்ளனர்.

இக்குழுவில் பயணித்த சட்டத்தரணி கெ பத்மநாதன் ‘Stop Genocide’ பிரச்சாரத்திற்காக அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பெயினை வரவழைத்து பல்வேறு கூட்டங்களை லண்டனில் ஏற்பாடு செய்தவர். நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் இயக்கத்தின் பிரித்தானிய இணைப்பாளராகவும் இவர் இருந்துள்ளார். ஆர் இலங்கைத் தேசியமன்னன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட இளைஞர் பேரவையின் தலைவராக இருந்தவர். தற்போது வெண்புறா அமைப்பின் அறங்காவலராக உள்ளார். ரி தர்மகுலசிங்கம் டென்மார்க்கில் கவுன்சிலராக உள்ளார். வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை முன்னெடுக்கும் கி பி அரவிந்தனின் ‘அப்பால்தமிழ்’ ஊடாக இலக்கிய நூல்களை வெளியிட்டு உள்ளார்.

இவர்களை விடவும் தமிழீழத் தேசியத் தலைவருடன் படம் எடுத்துக் கொண்ட கிழக்கு லண்டன் வர்த்தகப் பிரமுகர் திலகராஜாவும் (திலக் - Tilko property) அண்மையில் இலங்கை சென்று திரும்பியுள்ளார். முன்னர் புலிகளுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்பாட்டை தற்போது அமைச்சர் டக்ளஸ் ஊடாக அவர் செய்துகொள்ள முயற்சிப்பதாகத் தெரிகின்றது. இலங்கை அரசுடன் இணங்கிப் போக வேண்டும் என்று தற்போது கருத்து வெளியிட்டு வருகின்றார்.

1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டமே தற்போதுள்ள அரசியல் சூழலில் சாத்தியமான தீர்வு என இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட குழு கருதுகின்றது. Center for Peace and Social Development என்ற டென்மார்க்கில் இயங்கும் அமைப்பே இவ்விஜயத்தை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டது, அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது, பாதுகாப்பு வலயங்கள் என்பன பற்றிப் பேசியதாகத் தெரிவித்துள்ளனர். இனவாத பேச்சுக்கள் அறிக்கைகள் குற்றமாக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேட்டதாகவும் அதற்கு அமைச்சர்கள் உடன்பட்டதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்துவதற்கு அமைச்சர்கள் சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இக்குழுவினர் வடக்கு கிழக்கு பொலிஸ் பிரிவில் 90 வீதமான பொலிஸார் தமிழர்களாக இருப்பார்கள் என்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இக்குழுவினர் மன்னார், மாந்தை, வவுனியா, செட்டிகுளம் - மனிக் பாம், மாங்குளம், துணுக்காய், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு உள்ளனர். சில அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ள இக்குழுவினர் மாந்தையில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு போக்குவரத்து, பாடசாலை போன்ற அடிப்படை விடயங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் முகாம்களை விட்டு வீடுகளுக்கு செல்லவே விரும்புவதாகத் தங்களிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ள இக்குழு வரும் ஜனவரி மாத்த்திற்குள் முகாம்கள் மூடப்பட்டு விடும் என்ற உறுதியை ஓய்வு பெற்ற ஐஜிபி - அரச ஆலோசகர் சந்திர பெர்னான்டொ தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இறுதியான யுத்தம் நடந்த பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்களில் மீள்குடியேற்றம் இடம்பெறும் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதாக இக்குழு தெரிவிக்கின்றது.

பூந்தோட்டம் முகாமில் 12000 போராளிகளும் 2000 சிறுவர் போராளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தென்பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் காயப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் இக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிறுவர்களைப் பாராமரிக்க முன்வரும்பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். துணுக்காயில் 15 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள இக்குழு புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கிழக்கில் 46 000 விதவைகள் இருப்பதாகவும் அதேயளவு எண்ணிக்கையில் வடக்கிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இக்குழு இவர்களுக்கும் இவர்களது குழந்தைகளுக்கும் மிகுந்த உதவிகள் வழங்கப்பட வேண்டி உள்ளதாகவும் அதற்கு அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லையென்று குற்றம்சாட்டி உள்ளது.

இக்குழுவினர் இம்மாத முடிவில் மற்றுமொரு விஜயத்தையும் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

http://thesamnet.co.uk/?p=17581

இதைத்தான் சொல்வதோ .. "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி மகளே"!

Edited by Bond007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.