Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி பேரழிவின் ஐந்தாம் ஆண்டு இன்று

Featured Replies

கொழும்பு புனர்வாழ்வு கழக அனுபவம்.. Tsunami.jpg

இதே நாள் 2004 இல் தமிழீழம் நத்தார் பூசைகளிற்காக தம்மை தயார்படுத்திக்கொண்டது, இந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் தற்போது உள்ளது போன்று கனத்த மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. எல்லா நிறுவனங்களும் குறிப்பாக சர்வதேச நிறுவனங்கள் நத்தார் புதுவருட லீவுகளுக்காக அதிகாரிகள் பணியாளர்கள் சென்றுவிட்டனர்.

அரச திகாரிகளும் அப்படித்தான் ஆனால் கிழக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு கழகம் மற்றும் சில உள்ளூர் நிறுவனங்களும் மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் சீசர் ( காயப்பட்டு சிறையில் உள்ளார்), அம்பாரை மாவட்ட புனர்வாழ்வு கழக பொறுப்பாளர் ஆதவன் ( முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிவாரணப்பணியின் போது சாவடைந்தார்) ஆகியோரின் தலைமையில் வெள்ள நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் காலை 8.27 கல்முனை கடல்பகுதியினை கடல் பெருக்கெடுத்து தாக்கியது பின்னர் திருகோணமலை, முல்லைதீவு, அம்பாரை, வடமராட்சி கிழக்கு, பருத்தித்துறை என அனைத்து கிழக்கு தமிழீழ கரையோர கிராமங்களும் சுனாமி பேரலைகளால் 50- 500 மீற்றர்வரை மூழ்கடிகப்பட்டன , 19 , 000 பேர் தமிழீழத்தில் காவுகொள்ளப்பட்டனர் , 200,000 பேர் இடம்பெயர்ந்தனர் , 45 வீடுகள் நாசமாக்கப்பட்டன. 23000 ஏக்கர் நிலம் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு தமிழீழம் என்றுமில்லாதவாறு பேரழிவில் சிக்கி தவித்து திக்கு முக்காடியது, சோகத்தில் மூழ்கியது.

இதே வேளை இலங்கையின் தென்பகுதியினையும் காலி மாவட்டம் அதிக சேதத்திற்கு உள்ளாகியது சிங்கள தேசத்திலும் 15,000 வரையான மக்கள் கொல்லப்பட்டனர். நான் கொழும்பு புனர்வாழ்வு கழகத்தில் பணி புரிந்தாலும் கொழும்பில் சுனாமி நடந்த இடத்தை பார்க்க போகவில்லை அதே நேரம் வடக்கு கிழக்கு பகுதிக்கும் கூட உடனடியாக செல்லமுடியவில்லை என்பது துரதிஸ்டம். ( இரண்டு கிழமையின் பின்னர்தான் சென்றேன்).

இந்த நாளில் அனைத்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்குமாக பிரார்த்தனை செய்கின்றேன் இன்று அம்பாரையிலும், கல்முனையிலும், வடமராட்சி கிழக்கிலும் புனர்வாழ்வு கழகத்தினால் கட்டப்பட்ட நினைவு தூபியில் வழிபாடு நடைபெறும் என கூறினார்கள் நானும் அதில் பங்கு கொண்டவனாக உணர்வடைகின்றேன்.

நான் கொழும்பில் இருந்தபடியால் சுனாமி ஏற்பட்ட அன்று நடந்தவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஏனெனில் அதில் பங்குபற்றிய வெளி நாட்டு தமிழ் மக்கள்,தென்பகுதி தமிழர்கள், வெளி நாட்டு வெள்ளை இன மக்கள் ஆகியோரை என்றுமே மறக்க மாட்டேன். அதே போன்று புனர்வாழ்வு கழக உறுப்பினர்கள் பணியாளர்களையும் மறக்க முடியாது இன்று பலர் உயிருடன் இல்லை, பலர் சிறையில் உள்ளனர் எல்லோரையும் நினைவு கூருகின்றேன்.

புனர்வாழ்வு கழகத்தில் இரண்டு லொறிகளின் நிவாரணப்பொருட்கள் இரவிரவாக நாங்கள் ஏற்றிவிட்டு விடியப்புறம் திருமலை, மட்டக்களப்பிற்கு போவதற்காக இருந்தது. நாங்கள் மேசைமீது விடியப்புறம் தான் படுத்து உறங்கினோம். சிறிது நேரத்தில் அனைத்து தொலைபேசிகளும் அலறின நாங்கள் அலுப்பில் எடுக்கவில்லை என்றாலும் நிறைய நேரம் அடித்ததால் பார்த்தோம் சற்றெலைட் நம்பர், வெளி நாட்டு நம்பர், வன்னி தலைமை பணிமனை நம்பர் என விழுந்ததால் அடுத்த ழைப்புக்கள் வர கதைத்தோம்.

சூறாவளி அடிக்குது சனம் எக்கசக்கமா மாட்டுப்பட்டிட்டுதுகள் உடனடியாக சாமான் அனுப்புங்கோ என்றார்கள், அதன் பின்னர் தான் ராடியோ, டிவி ஆகியவற்றை போட்டோம் அப்போது செய்திகள் வரதொடங்கிவிட்டன அதன் பின்னர் துரிதமாக செயற்பட்டோம் வங்கி திறக்காது, அலுவலகத்தில் 50,000 ரூபவுக்கு மேல் பணம் இல்லை (இருக்காது) கடைகள் திறக்கவில்லை என்ன செய்வது? யோசித்து கொண்டிருக்கவே வன்னியில் இருந்தும், மட்டகளப்பு, திருகோணமலையில் இருந்தும் பொருட்களின் பட்டியல்கள் பக்சில் வந்துகொண்டிருந்தன.

இருந்த பொருட்களை அனுப்பிவிட்டு யோசித்து கொண்டிருக்கும் போது கொழும்பில் வதியும் ஒரு பெண் சட்டவாளர் அவர் புனர்வாழ்வு கழகத்திலும் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தார் உடனடியாக வந்தார் வந்து படபடவென கொழும்பில் உள்ள தமிழ் வர்த்தகர்களை சிலரை அழைத்து ( அவர்களுக்கு என்றென்றும் நன்றி) கடன்கேட்டோம் நன்கொடையாகவும் கடனாகவும் ஐந்து லோட் பொருட்கள் தந்தார்கள் அதனை காலை 11 மணிக்கு முன்பே அனுப்பிவிட்டோம். அதன் பின்னர் நாங்கள் இயக்கப்பட்டோம்..

புனர்வாழ்வு கழக பணிப்பாளர் வங்கி அதிகாரிகளுடன் கதைத்து ஒவ்வொரு வங்கிகளிலும் 5 மில்லியனுக்கு குறையாமல் மேலதிக பற்றுக்கு ஒழுங்குபடுத்தினார். அதன் பின்னர் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு இடையில் வன்னிக்கு 10 லொறி , மட்டக்களப்பிற்கு 10 லொறி, அம்பாரைக்கு மூன்று, திருகோணமலைக்கு ஐந்து என அனுப்புமாறு பணிப்பாளர் கூறினார் செய்தோம், அடுத்த நாள் 50 அம்புலன்ஸ் மாதிரியான வாகனம் ஒரு மாதத்திற்கு வாடகைக்கு எடுக்கும்படி கூறின்னர் , 50 கைத்தொலைபேசி, 10 சற்றலைட் தொலைபேசி, 50 லப்டொப் வாங்கும்படி சொன்னார் வாங்கினோம்.

உடனடியாக 24 மணி நேர அவசர முகாமை அலுவலகம், அவசர மருத்துவ பிரிவு, அவசர தகவல் பிரிவு, ஆகியன உருவாக்கப்பட்டன பின்னர் கொழும்பில் மூன்று பெரிய களஞ்சியம், வாகனப்பிரிவு,ஊடகபிரிவு என்பன ஒழுங்குபடுத்தப்பட்டன கப்பல் கிளியரிங், விமான சரக்குகள் கிளியர் பண்ணுதல் என்பன உருவக்கப்பட்டன கொழும்பு தமிழர்கள், வெளி நாட்டு தமிழர்கள் , வெள்ளை இன மக்கள் என 500 மேற்பட்ட பணியாளர்கள் தொண்டர்கள் 24 மணி நேரம் இயங்கினர்.

இலங்கை அரசாங்கம் உசாரடைந்து நித்திரை விட்டெழும் முன்னர் அனைத்து கட்டமைப்புக்களும் புனர்வாழ்வு கழகத்தால் உருவாக்கப்பட்டன இதனால் அரசாங்கத்திற்கு வந்த பொருட்கள் , ஆளணிகள் எமது அணிகளால் கிளிய பண்ணப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களிற்கு அனுப்பபட்டன. முதல் ஒருவாரம் அனைத்து வெளி நாட்டவரும் அரசாங்கங்கள், ஐகிய நாடுகள் உட்பட அனைவரும் எமது அலுவலகம் வந்தே பின்னர் பிற இடங்களிற்கு சென்றனர். காரணம் நாம் எல்லாவற்றையும் விரைவாக ஒழுங்குபடுத்தியதால் வைத்தியர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஒரு நடமாடும் மருத்துவ வாகனம், தொலைபேசி, மருந்துகள், கணனி உட்பட அனைத்தும் கொடுத்து உடனடியாக களத்திற்கு அனுப்பினோம்.

பொருட்கள் வந்தவுடன் வாகன அணி உடன் செயற்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களிற்கு கொண்டு செல்லும் அத்துடன் உடனடியாக மாவட்டங்களிலும் நவீன வசதிகளுடன் ஆளனிகள் அனுப்பியபடியால் தகவல் பரிமாற்றம், போக்குவரத்து, தொலைதொடர்பு, வினியோகம் என்பன அரச கட்டமைப்பினை விட மிக வேகமாக செய்ய கூடியதாக இருந்தது. இதனாலேயே நாம் சுனாமியில் இருந்து மக்களை உடனடியாக மீட்கும் பணிகளில் வெற்றிபெற்றோம் எனலாம்.

மொத்தமாக 320 முகாம்களில் 292 முகாம்களை ஒரு கிழமை நாம் பராமரித்தோம் அதன் பின்னரே அரசாங்கம் உசாரடைந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள முகாம்களை அதிரடிப்படையினரை அனுப்பி பறிமுதல் செய்தது. எனினும் நாம் வேலைத்திட்டத்தினை வேகமாக முன்னெடுத்ததால் சந்திரிகா அரசிடம் சண்டைபிடித்து சில முகாம்களை அதிரடிப்படையினரிடம் இருந்து மீழ எடுத்தோம் அன்றில் இருந்து புனர்வாழ்வுக்கழகத்திற்கு பிரச்சினை வரத்தொடங்கியது வேறு விடையம்.

12 தடவைகள் விமான சரக்குகள், 162 கொள்கலன்கள், உடபட அனைத்து பொருட்களையும் உடனடியாக கிளிய பண்ண முயற்சிகள் எடுத்து செயற்பட்டோம் ஆனால் 12 கொள்கலன்கள் இறுதியில் ஒன்றுமே செய்ய முடியாது போனது, கைவிடப்பட்டன ( பெறுமதியினை விட செலவு கூட என்பதனால்).

வந்த பொருட்கள் தேவைபோக பிற இடங்களிற்கும் வழங்கப்பட்டது. உதாரணமாக மருந்துபொருட்கள் இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்கப்பட்டன. நிவாரணப்பொருட்களும் தென்பகுதியில் காலி மாவட்டம் மற்றும் சுனாமி பாதிக்கப்படாத மலையக மக்களுக்கும் கொடுக்கப்பட்டன.

இறந்த உடல்களை அடக்கம் செய்ய பொடிபாக் அனுப்புங்கோ என்றார்கள் 10,000 பொடி பாக் இந்தியா கொழும்பு எல்லா இடமும் தேடி 24 மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்தது ஆனால் கிளிய பண்ணீ எடுக்க ஒரு நாள் எடுத்தது அதனால் அரைவாசியே பயன்படுத்தப்பட்டது.

குடி தண்ணி பிரச்சினை, தண்ணி, தண்ணி சுத்திகரிக்கும் குளிசை, அனுப்புங்கோ என்றார்கள் 5 இலட்சம் குளிசை, 05 லோட் குடிதண்ணீர், அனுப்பபட்டன.பின்னர் அம்பாரைக்கு 10 ஆயிரம் லீட்டர் கொள்கலன் உடைய தண்ணீர் பவுசர் இரண்டு, மட்டகளப்பிற்கு இரண்டு, திருகோணமலைக்கு ஒன்று வன்னிக்கு இரண்டு அனுப்பபட்டன. பின்னர் தண்ணி ராங் தேவை என்றார்கள் ஆர்பிக்கோ ராங்க் 100 வாங்கி அனுப்பினோம்.

பின்னர் தண்ணீ சுத்திகரிக்கும் மெசின் வேணும் என்றார்கள். இலங்கை அரசாங்கத்திற்கு டென்மார்க் அனுப்பிய 14 மெசின்கள் விமான நிலையத்தில் இருந்தது அதனை அரசாங்கம் எடுப்பதில் இழுபறிகள் இருந்தது. உடனே விமான நிலையத்தில் நின்ற எங்களிணைப்பாளர் இந்த தகவலை தெரிவித்தார். உடனடியாக இலங்கை அரசாங்க அதிகாரிகள் போன்று ஆவணங்களை அங்கிருந்தவர்கள் தயாரித்து அந்த 14 மெசின்களையும் கிளிய பண்ணி கிழக்கு மாகானத்திற்கு அனுப்பி விட்டார்கள்.

அதன் பின் அடுத்த கிழமை அரச கூட்டத்தில் டென்மார்க் தூதுவர் தாம் அரசாங்கத்திற்கு 14 மெசின் கொடுத்ததாக கூறினார். அரசாங்கம் தமக்கு கிடைக்கவில்லை என்றார்கள். அதன் பின்னர் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டனர்.

ஒரு கிழமையாக முகாம் பராமரிப்பு வேலைகளுக்கான பொருட்கள் நிதிகளை அனுப்பி கொண்டிருந்தோம் அப்போது வன்னியில் இருந்து வந்த புனர்வாழ்வு கழகத்தினரின் பொறியியலாளர் குழு தற்காலிக வீட்டிற்கான திட்டத்தினை விளங்கப்படுத்தி 12,000 வீடுகளுக்கு இரும்பு குழாய்கள் மற்றும் பொருட்கள், 8000 கூடாரங்கள் ஆகியனவற்றின் மாதிரிகளை தந்தார்கள். உடனடியாக இந்தியாவில் இருந்தும் பிலிப்பைன்ஸ், சீனாவில் இருந்தும் விமான மூலம் கூடாரங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. உள்ளூரிலும் இந்தியாவிலும் இருந்து இரும்பு குழாய்கள் கொள்வனவு செய்து கொழும்பில் கிட்டதட்ட 10 பட்டறைகளில் வீடுகள் தயாரிக்கப்பட்டன. இலங்கையில் தற்காலிக வீட்டு வசதியினை முதலாவதாகவும், கூடுதலாகவும் அமைத்து கொடுத்தது புனர்வாழ்வு கழகம் இதற்காகவே சந்திரிக்காவின் பரிசும் கழகத்திற்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்காலிக மலசலகூடங்களும் ஆர்பிகோ விடம் டிசைன் கொடுத்து செய்யப்பட்டு அனுப்பபட்டது. எல்லாவர்ரையும் எழுதலாம் முடியவில்லை எப்படி எல்லாவற்றையும் செய்தோம் என்றால் சொல்ல முடியாது உண்மையில் எம் மக்களின் இழப்புக்கள் தான் இந்த வேகத்தினை தந்தது மாறாக வேறென்றும் இல்லை. ஒரு மாதம் திடீர் அனர்த்த முகாமைத்துவ பணிகள் முடிவுற்றது. அந்த ஒரு மாதமும் நாள்தோறும் மூன்று கூட்டங்கள், நூற்றுக்கணக்கான கட்டளைகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் .. என பரபரப்பாகவே இருந்தது. அரசாங்க அதிகாரிகள் உட்பட வெளி நாட்டு தூதரகங்கள், அதிகாரிகள் அனைவரும் எமது அலுவலகம் வந்து சென்றது இன்னமும் எமது பணிகளின் வேகத்தினை அதிகரித்தது.

ஒரு மாதத்தில் 1200 இற்கு மேற்பட்ட லொறி லோட் பொருட்கள் அனுப்பபட்டன ஒவ்வொரு நாளும் அதிகாலையும் மாலையும் இந்த கொன்வே செல்லும். இந்த ஒருமாத காலப்பகுதியில் எங்களின் செயற்பாட்டினால் அதிருப்தியுற்ற அரசாங்கம் அவதூறுகளை திட்டமிட்டு இனவிரோத பார்வைகுள் கொண்டுவந்தது சிங்கள மக்கள் கூட எமது களஞ்சியங்களை முற்றுகையிடுவது, லொறிகளை தாக்குவது, இராணுவத்தினர் எமது கொன்வேய்களை மறிப்பது போன்ற சேட்டைகளில் ஈடுபட தொடங்கிவிட்டனர். களஞ்சியங்களை உடன் காலிசெய்யும் படி கேட்டனர் வாடகை வாகனங்களை திரும்ப பெற்றனர். பொருட்களுக்கு வரிவிதிக்கப்பட்டன.

இதனால் சோர்வடையவில்லை சிங்களவர்களின் கண்ணில் இருந்து தப்புவதற்காக ` புனருஸ்தாபன சங்விதானைய` என வாகன தொடரணிகள் சிங்களத்தில் மாற்றப்பட்டன வாகனங்கள், பவுசர்கள், உழவு இயந்திரங்கள், என அனைத்தும் சொந்தமாக உடனடியாக வாங்கப்பட்டன. வாகரை, அம்பாரை, மட்டகளப்பு ஆகிய இடங்களிற்கு புதிய பஸ் வண்டிகள் வாங்கி சுனாமி கிராமங்களுக்கு இலவசசேவையில் ஈடுபடுத்தப்பட்டது. மாவட்டங்களில் களஞ்சியங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன அனைத்து பொருட்களும் மாவட்டங்களிற்கு மாற்றப்பட்டன. சுனாமி நிவாரண நிதியம், சுனாமி நிவாரண அமைப்பு என்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அதனூடாக திட்டங்களை நகர்த்தினோம். இதனால் பல அழுத்தங்களை குறைக்க கூடியதாக இருந்தது.

சுனாமி நடந்து இரண்டு மாதத்தின் பின்னர் சுனாமி பேரனர்த்த மீழ் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது இது புனர்வாழ்வு கழகத்தின் மூன்றாம் கட்டம். இந்த மூன்றாம் கட்டத்தின் செயற்பாடுகள் வன்னி, மட்டகளப்பு என்ற இரு பிராந்திய கட்டமைப்புக்களுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் நான் பிரதான கணக்கு பகுதிக்கு மாற்றப்பட்டதால் நேரடி வேலைத்திட்டங்களை செய்ய முடியவில்லை.

இந்த நேரத்தில் உயிரிழந்த எம் தேசத்து உறவுகளுக்கும், பின் நாளில் போரில் உயிரிழந்த என் சக பணியாளர்கள் பொறுப்பாளர்களிற்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள். அதே வேளை வெளி நாடுகளில் இருந்து வந்து உதவி செய்த தமிழ் உறவுகள், கொழும்பு தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

எவ்வளவோ விமர்சனங்கள் பலராலும் முன்வைக்கப்படுகின்றது ஆனால் அந்த நேரத்தில் யாருமே எதிர்பாராத வேளையில் பேரனர்த்தம் ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டவிதம் ஒரு பணியாளன் என்ற வகையில் பெருமைப்படுகின்றேன். அனர்த்தம் நடந்த இடத்தில் செயற்பட்ட பணியாளர்கள், பொதுமக்கள், போராளிகள் ஆகியோருடன் ஒப்பிடுகையில் நான் செய்தது ஒரு சிறு பங்கு மட்டுமே. நன்றி இராம் http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாசமாய்ப்போன சுனாமியும் எங்கடை போராட்டத்துக்கு பின்னடைவுதான் :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாசமாய்ப்போன சுனாமியும் எங்கடை போராட்டத்துக்கு பின்னடைவுதான் :o

ஒம் தாத்தா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.