Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்த அரசு, சமவுடமை பொருளாதார அரசா? முதலீட்டு பொருளாதார அரசா?

15 members have voted

  1. 1. வட்டுக்கோட்டை தீர்மானம் சமதர்ம, சமவுடமை பொருளாதார தமிழீழத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் முதலீட்டு பொருளாதார நாடுகள். அவை சமவுடமை பொருளாதார நாடுகடந்த அரசை ஏற்றுக் கொள்ள விரும்பும் சாத்தியம் குறைவு. ஆகவே நாடுகடந்த அரசு:

    • தன்னை முதலீட்டு பொருளாதார அரசாக அறிவிக்க வேண்டும்.
      10
    • சமவுடமை பொருளாதாரத்தையே தனது பொருளாதாரமாக கொள்ள வேண்டும்.
      2
    • இந்த விடயம் பற்றி பேசாது இருக்க வேண்டும்.
      2
    • வேறு கருத்து.
      1

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானம் சமதர்ம, சமவுடமை பொருளாதார தமிழீழத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் முதலீட்டு பொருளாதார நாடுகள். அவை சமவுடமை பொருளாதார நாடுகடந்த அரசை ஏற்றுக் கொள்ள விரும்பும் சாத்தியம் குறைவு. சமவுடமை, பொதுவுடமை நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவானவை. இந்த கருத்துக்கணிப்பு நாடுகடந்த அரசு தனது கொள்கையை சரியாக அமைத்துக்கொள்ள உதவக்கூடும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நான் அன்றிலிருந்து வலியுறுத்துவது இதுதான்..உலகில் இப்போது உள்ள இசத்தையோ(கம்னியுசம்இமர்கஸியம்இசோசலிசம்)ரசத்தையொ சாம்பாரையோ முதலில் முன் மொழிந்து போராட்டத்தை நடத்துங்கள்..அப்போது தான் அந்த ரசத்தை தழுவிய நாடுகளுடைய ஆதரவு கிடைக்கும்..புதிதாக ஏதாவது கண்டு பிடித்தாலும் மற்றவர் அதை ஏற்று கொள்ளவேண்டும்..எல்லோருக்கும் ஒருவன் நல்லவனாக இருந்துவிட முடியாது.. இன்று முதலளித்துவ நாடுகள் இந்தியாவின் பின்னாள் அணிவகுக்கின்றன.. இதை உடைக்கவேண்டுமானால் ஒன்று இந்தியாவை உடைக்கவேண்டும்.. அல்லது அதைவிட பெரிய மக்கள் சந்தையை காட்ட வேண்டும் இது இரண்டுமே எளிதில் நடக்காது.. வேறு கொள்கை கோட்பாடு உடைய நாடுகளின் ஆதரவை பெற வேண்டும்.. முதலில் ஈழம் என்ற கோட்பாடு உருவாக்க பட வேண்டும்.. நாடு அடைந்த பிறகு அதை மாற்றி கொள்ளலாம்... இங்கே நாட்டுக்கே தடையாக பல உள்ளன ..அதை தோழர்கள் சிந்திக்க வேண்டும்.. நன்றி புரட்சிகர தமிழ்தேசியன் திருவண்ணாமலை

முதலீட்டு/முதலாளித்துவம் பொருளாதார நாடுகள்

எமது தாயகம் என்றுமே திறந்த பொருளாதார முறையினை எப்போதும் முதன்மை படுத்தியது. இன்று புலம் பெயர் தமிழர்களில் பெரும்பான்யினோர் இந்த நாடுகளில் கணிசமான வளர்ச்சிஐடந்துள்ளனர். மேலும் நாம் இயற்கை வளத்தினை விட மூளை வளத்தையே முதலீடாக கொண்டுள்ளோம்.

குறையாத விளைபொருள், தக்கார், அழியாத செல்வம் ஆகிய மூன்றும் பொருந்தி இருக்கும் நாடே, நாடு என்று அழைப்பதற்குத் தகுதி வாய்ந்தது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலாச் செல்வரும் சேர்வது நாடு

(தள்ளா = குறையாத, தக்கார் = தகுதி வாய்ந்தவர், தாழ்வு = குறைவு அல்லது அழிவு).

இரண்டாவது உலகப்போரில், சப்பான்நாடும்,செர்மன்நாடும் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட நாடுகள். அதனால் அந்நாட்டினரின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தங்களது கடினமான உழைப்பால், உற்பத்திப் பெருக்கத்தால் அழியாச் செல்வம் படைத்த நாடாக, ஏனைய நாடுகளை எதிர்பார்க்காத வளமான நாடுகளாக மாறிவிட்டன.

Edited by akootha

புலம் பெயர்ந்த தமிழர்கள் செய்யக் கூடியது:

அ) சர்வதேச தமிழர் பொருளாதார பேரவை ( Global Tamileelam Economic Forum) ஒன்றினை அமைத்தல்

ஆ) புலம் பெயர்ந்த நாடுகளில் தமிமீழ கடன் (Tamileelam Credit Union) அமைப்புக்களை கட்டமைத்தல்

இ) கணிசமான மாணவர்களை பொருளாதாரம் சம்மந்தமாக படிக்க ஊக்குவித்தல்

ஈ) முதலீட்டு கொள்கைகளை புலம் பெயர்ந்த நாடுகளில் ஊக்குவித்தல்

உ) புதிய கண்டுபிடிப்புக்களை புலம் பெயர்ந்த நாடுகளில் ஊக்குவித்தல்

தமிமீழ கடன் வங்கி (Tamileelam Credit Bank)

அ)இதன் மூலம் எம் தாயக உறவுகளுக்கு பணம் அனுப்பலாம் (சிறிலங்கா வங்கிகளை தவிர்க்கலாம்)

ஆ) எமது வீட்டு அடைமான கணக்குகளை இவற்றில் பதியலாம்

இ) எமது வியாபார கணக்குகளை இவற்றில் பதியலாம்

ஈ) இதில் வரும் இலானங்களால் எமது மக்களின் அபிவிருத்திக்கு முதலிடலாம்

http://www.brama.com/diaspora/credit.html

http://www.greecefcu.com/

Edited by akootha

சீனா பொதுவுடமையை முழுமையாக கடைப்பிடிக்கும் அரசா..? அல்லது முதலீட்டு பொருளாதார அரசா...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனா பொதுவுடமையை முழுமையாக கடைப்பிடிக்கும் அரசா..? அல்லது முதலீட்டு பொருளாதார அரசா...??

தமிழீழ அரசு எந்தவிதமான பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்க இருக்கிறது என்பதிலும் பார்க்க, எந்தவிதமான நாடுகளுடன் தன்னை அடையாளம் காண்கிறது என்பதே இராஜதந்திர உறவுகளுக்கு முக்கியமானது. வட்டுக்கோட்டை தீர்மானம் தெளிவாக சமதர்ம சமவுடமை பொருளாதாரத்தை தமிழீழநாட்டின் பொருளாதார கொள்மையாக அறிவித்திருக்கிறது. இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் மீண்டும் 98 வீதத்துக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்த மக்களால் கடந்த வாரங்களில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மறுவளமாக பார்த்தால், 98 வீதமான புலம்பெயர்ந்த மக்கள், முதலீட்டு பொருளாதாரத்தை ஒரு தவறான கொள்கை என நிராகரித்திருக்கிறார்கள். இவ்வாறாக மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்று சொல்வதிலும் பார்க்க, மக்களை வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்ட தலைவர்கள், மக்களுக்கு திருத்தப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் ஒன்றை மாற்றீடாக வழங்காமல், இந்த சமவுடமை பொருளாதார கொள்கைக்கு கட்டாய வாக்களிப்பு செய்ய வைத்திருக்கிறார்கள் என்பதே சரியானதாக இருக்கும்.

கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் எமது மக்கள் ஏதிலிகளாக வந்து வாழ்க்கையை கட்டியெழுப்ப முடிந்திருக்கிறது. இதற்கு காரணம் இந்த நாடுகளின் பொருளாதார கொள்கைள். இந்த நாடுகளே எமது மனித உரிமைகள், சமூகஉரிமைகள், அரசியல் உரிமைகளுக்காக குரல் கொடுத்திருக்கின்றன, சமவுடமை பொருளாதார நாடுகளோ இந்த உரிமைகளை பறித்து மக்களை கொல்லவே துணை போயிருக்கின்றன. ஆகவே, இன்னமும், முதலீட்டு பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடுகளை, தமிழீழ மக்கள் 'தவறான கொள்கைகளை கொண்ட நாடுகள்' என்று கருதுவது எவ்வளவு தூரம் சரியானது? என்பது கேள்விக்குரியது.

தமிழீழ மக்களுக்கு இன்றுவரை ஒரு நாடு கூட வெளிப்படையாக ஆதரவளிக்கவில்லை. அப்படி ஓரளவுக்கேனும் ஆதரவளித்த நோர்வே தெளிவான முதலீட்டு பொருளாதார நாடு. தமிழீழ மக்களை ஒரு நாடும் வெளிப்படையாக ஆதரிக்க முன்வராததற்கு தமிழீழ மக்களும் ஒரு நாட்டையும் தமது தெளிவான நட்புநாடாக ஏற்றுக்கொள்ளாததும் ஒரு காரணமாக அமைகிறது.

நாடு கடந்த அரசாவது ஒரு தெளிவான வெளிநாட்டு கொள்கையை வகுத்துக் கொண்டு, குறிப்பிட்ட நாடுகளுடன் தெளிவான இணைபிரியாத உறவை பேணி, சரியான முறையில் ஈழத்தமிழரை வழிகாட்ட வேண்டும். முதலீட்டு பொருளாதார நாடுகளின் பணத்திலே ஏதிலிகளாக வாழ்ந்து வாழ்கையை வளப்படுத்திக்ககொண்டு, அவர்களின் அடிப்படை பொருளாதார கொள்கையையே தவறு என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, அவர்களை எமது இணைபிரியாத நட்புநாடுகளாக இருக்குமாறு எதிர்பார்ப்பது மிகவும் குழப்பமான ஒரு வெளிநாட்டு கொள்கையாக தெரிகிறது. நாடு கடந்த அரசு இதற்கு விரைவாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Edited by Jude

தனி மனித சுதந்திரங்கள் இல்லாத சீனாவில், மக்களை அமைதியாக வைத்திருக்க அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி தேவைப் படுகிறது. ஆனால் எத்தனை நாளைக்கு என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்க படும் கேள்வி -சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும்.

1970 வரை சீன கம்யூனிச தலைவர்களுக்கும் மேலை நாடுகளுக்கும் சரியான உறவில்லை. ஆனால் மா.சே.துங்கிற்கு பிறகு சீனாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது.

பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் பெரும் நிறுவனக்களின் லாபம் அதிகம் இருக்கும்.ஆனால் சாதாரண மக்களிடம் வளர்ச்சியின் முழு பயனும் செல்லாமல் முதலீட்டாளர்களிடம் பெரும் பங்கு செல்ல வேண்டும்.சாதாரண மக்கள் இதனால் அதிகம் பாதிப்படையாமல் இருக்க அவர்கள் வாங்கும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும்.

அதற்கு பொருட்களை மலிவாக உற்பத்தி செய்ய வளரும் நாடுகளின் உதவி தேவை பட்டது.அப்போது அமெரிக்க அரசு மற்றும் பன்னாட்டு கம்பெனிகளின் கண்ணில் பட்டதுதான் சீனா. சீனாவில் சர்வாதிகாரம் கம்யூனிசத்தின் பெயரில் வலுவாக இருந்ததால் ஒரு முடிவை எடுத்து பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் விரைவில் செயல் படுத்துவது வசதியாக இருந்தது. சீனாவும் அதிக மக்கள் தொகையை விவசாயத்திலிருந்து உற்பத்தி துறைக்கு மாற்ற வேண்டிய கட்டயத்தில் இருந்ததால், அந்நாட்டு விவசாயிகளை அமெரிக்காவிற்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய தொழிற் துறைக்கு மாற்ற தொடங்கியது. இதன் மூலம் நாட்டின் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் அதிகரித்தது.

சீனாவின் வளர்ச்சியை பாராட்டுபவர்கள் அமெரிக்க அரசாங்கமே சீனாவை நம்பி தான் உள்ளது. எனவே சீனா தான் மிக பெரிய பொருளாதார சக்தி என்பார்கள். ஆனால் இந்த வளர்ச்சியின் மறுபுறத்தையும் பார்க்க வேண்டும். சீனா அமெரிக்காவிடம் நடை பெரும் வாணிபத்தை பார்த்தால், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதியை விட மிக அதிகமாக உள்ளது. சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பை சந்தையின் காரணிகளால் கட்டுபாடற்ற முறையில் நிர்ணயிக்க பட்டால் (floating exchange rate), அதன் மதிப்பு மிக அதிகமாகி இருக்கும்.அவ்வாறு யுவானின் மதிப்பு அதிகமானால் அமெரிக்காவிடம் இவ்வளவு மலிவாக பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாது.தற்போது சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்றுமதியின் பங்கு 40 சதம் உள்ளது.சீனாவின் ஏற்றுமதி குறைந்தால் உள் நாட்டில் மாபெரும் வேலையில்லா திண்டாட்டம் உண்டாகி , பெரிய சமூக பிரச்சனைகளை உருவாக்கும்.

இதை சீனா தடுத்தே ஆக வேண்டும். அதற்கு யுவானின் மதிப்பை ஓரளவு கட்டுபாடன முறையில் நிர்ணயித்துள்ளது. இவ்வாறு குறிபிட்ட மதிப்பை பராமரிக்க சந்தையில் குவியும் டாலர் சொத்துக்களான அமெரிக்க அரசு பத்திரம் போன்றவற்றை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சீனாவின் சேமிப்பு செல்வத்தில் 70 சதவிதம் டாலர் சார்ந்த சொத்துக்களாக உள்ளது.டாலரின் மதிப்பு குறைந்தால் அது அந்நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கும்.

சமவுடமை பொருளாதார அரசென்றால் சீனாவுக்கு சந்தோசம் முதலீட்டு பொருளாதார அரசென்றால் பெரியண்ண மாருக்கு சந்தோசம் மொத்தத்தில இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறதே நலம்.

நாடுகடந்த அரசு, சமவுடமை பொருளாதார அரசா? முதலீட்டு பொருளாதார அரசா?

மே 19 பின் நாம் உருவாக்கி இருக்கவேண்டிய அமைப்பு, தமிழர் மனித உரிமை அமைப்பே, அரசு அல்ல!

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.