Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஷவை மீளத் தெரிவு செய்வது தற்கொலைக்கு சமமானது

Featured Replies

ஜனாதிபதித் தேர்தலானது தமிழர் களாகிய நமது வாழ்வில் மட்டு மல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.

இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட் டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித் தார். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்களில் அனுபவித்த துன்பங்கள் எமக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சம்பந்தன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது, முல்லைத்தீவில் இருந்து காயமடைந்தவர்கள் 800 பேர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது நான் திருமலையில் எனது வீட்டில் இருந்தேன். அவர்களை உடனடியாக சென்று பார்வையிடுவதற்கு விரும்பினேன். கடற்படை அதிகாரி கூறினார், நீங்கள் பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று. அவரிடம் பேசினேன், தயவு செய்து வைத்தியசாலைக்கு செல்ல மட்டும் அனுமதி கேட்க வேண்டாம் என்று அவர் எனக்கு கூறினார்.

அவ்வாறு எனில் ஜனாதிபதியிடம் நான் அனுமதி பெறுகின்றேன் என்று பாதுகாப்பு செயலாளருக்கு கூறினேன். அதற்கு அவர் கூறினார், ஜனாதிபதியாலும் அதற்கு அனுமதி தரமுடியாது என்று. அப்போதுதான் எனக்கு புரிந்தது ஜனாதிபதியையும் விட அரசாங்க அதிகாரியான பாதுகாப்பு செயலாளரின் அதிகாரம் எந்த நிலையில் உள்ளது என்பது. அந்த விடயத்திற்கு அவரே அப்போது எஜமான். இத்தகைய மனிதாபிமானமற்ற ஆட்சியை, அதன் ஆட்சித் தலைவரை தமிழ் பேசும் நாம் ஏன் தோல்வி அடையச் செய்யக் கூடாது.

தற்போது சிங்கள பேரினவாத தூண் மேலிருந்து கீழாக நீளமாக வெடித்துள்ளது.

அதன் அத்திவாரம் சீர்குலைந்து விட்டது. இப்போது நாம் ஒற்றுமையாக இருப்பதை தெளிவாக நிரூபிக்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதை தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு ஒற்றுமையான வாக்களிப்பும் முழுமையான வாக்களிப்பும் அவசியமானது.

இந்தியாவின் நிலைப்பாட்டில் கணிசமான மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத இந்த நிலைமையில் நல்ல ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அணுகுமுறை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.

வன்முறை போராட்டம் எமது இனத்தை மிக மோசமாக பாதித்துள்ளது. இனி வன்முறை எமக்கு வேண்டாம், இளைஞர்களின் தியாகத்தை நாங்கள் மதிக்கின்றோம்.

"கல்முனையில் வைத்து மாநகர சபையின் சார்பில் தமிழினத்தின் தலைமகன் என்று எனக்கு விருது வழங்கினார்கள். அது எனக்களிக்கப்பட்ட கௌரவம் அல்ல. அது தமிழரசுக் கட்சியை உருவாக்கிய தந்தை செல்வாவிற்கும் தமிழரசுக் கட்சி பாரம்பரியத்திற்கும் அன்று முதல் இன்றுவரை தமிழ் பேசும் இனங்களுக்கிடையில் இணக்க உறவைப் பேணிய பாரம்பரியத்திற்கும் வழங்கப்பட்ட விருதாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நாங்களும் நீண்டகாலமாக பேசி எம்மிடையே புரிந்துணர்வு ஒன்றை உருவாக்கி சமரச உடன்பாடு ஒன்றிற்கு வந்துள்ளோம். அதனடிப்படையில் நாம் பலவித விட்டுக் கொடுப்புகளுக்கும் சமரசங்களுக்கும் உட்பட்டு எமது சிறுபான்மையினங்களினது அரசியல் தீர்வு விடயங்களை அடைந்து கொள்வதில் பலமாக தற்போது இருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களாகிய நா·ம், முஸ்லிம் சகோதரர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் லம் இப்பிரதேசத்தின் சிறுபான்மைச் சகத்தின் அரசியல் எதிர்பார்ப்புகள் இலகுவாக நிறைவேற்றப்படும் என்ற கருத்தை இந்தியாவும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது.

எதிர்காலத் தேர்தல்களில் குறிப்பாக பாராளுமன்றத் தேர்தல்களில் ·முஸ்லிம்களும் நாமும் ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வெற்றி பெறுவதன் லம் தமிழ் பேசும் சகத்தின் நீண்டகால குறைபாடுகள் தீர்க்கப்படும்.

இந்தத் தேர்தல் தமிழர்களாகிய நமது வாழ்வில் மட்டுமல்ல நமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இந்த அரிய சந்தர்ப்பம் மீண்டும் விரைவில் கிடைக்காது. இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவறவிடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்தவேண்டிய நிலை ஏற்படும்.

நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலை அதன் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளில் இப்போது உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 1 இலட்சம் அதிகப்படியான வாக்குகளால்தான் தெரிவு செய்யப்பட்டார். சென்ற தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்கள் அனுபவித்த துன்பங்கள் நமக்கு ஏற்பட்டிருக்காது. துரதிருஷ்டவசமாக வாக்களிக்காது இருந்து விட்டோம்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அல்லது கரு ஜயசூரிய போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அது மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்த ஒரு சவாலையும் உருவாக்கி இருக்காது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ கையில் எடுத்த யுத்த வெற்றி என்ற ஆயுதம் சரத் பொன்சேகாவிட·மும் இருந்ததால் அவர் சரியான சவாலை மஹிந்த ராஜபக்ஷவிற்கு கொடுக்கக்கூடியதாக இருந்தார்.

சமவலுக் கொண்ட இருவர் ஜனாதிபதித் தேர்தலில் இறங்கிய நிலைமையில்தான் தமிழ் மக்களின் முக்கியத்துவம் முதன்மை பெறத் தொடங்கியது. இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா ஆகிய அனைத்து தரப்பினரும் எம்·டன் பேசத் தொடங்கினர்.

அவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்கு அவசியமாக இருந்தது.

நம்மிடம் ஆதரவை எதிர்பார்த்த அனைவருக்கும் நாம் கூறினோம், தமிழ் மக்களை நாம் விற்க மாட்டோம். நாங்கள் யாருக்கும் அடிபணியவும் மாட்டோம். எமது இனம் நொந்து போயுள்ளது. தமிழர்கள் அனைவரும் சிறிது அளவிலாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாம் அவர்களுக்கு ஏதாவது விடிவை ஏற்படுத்துவோம் என்று நம்புகின்றனர்.

எனவே, அந்த நம்பிக்கையை நாம் அழித்து விட முடியாது. ஆகவே எமது மக்களின் எதிர்காலத்தை மட்டுமே கருத்திற் கொண்டு எமது முடிவு அமையும் என்று நாம் அவர்களிடம் கூறினோம்.

பல மாதங்களாக தடை முகாம்களில் மக்களை மூடி வைத்து விட்டு இப்போது அவர்களை நடுத் தெருவில் விட்டு விட்டு தமிழர்களை விடுவித்து விட்டோம் என்று கூறுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசிய போது அதி உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குங்கள். இப்போது விடுதலைப் புலிகள் இல்லை, ஆயுதங்கள் இல்லை, கேந்திர முக்கியத்துவமான இடங்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை. புலிகள் துப்புரவாக இல்லவே இல்லை என்று நான் கூறினேன். ஆனால் அதை நீக்கவும், மக்களின் இயல்பு வாழ்வுக்கும் அவர் அனுமதி வழங்க விரும்பவில்லை.

மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயரச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கூறினேன். தேர்தல் முடிந்த பின்னர் படிப்படியாக அதனைச் செய்யலாம் என்றார். அதற்கு முன்னர் செய்ய வேண்டும் என்று கேட்டேன், அதனை அவர் மறுத்தார்.

வன்னிப் பிரதேசத்தில் இராணுவ கட்டுமானங்கள் நடைபெறுகின்றது. அதனை சீன தேசத்தவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள் என்று நம்பத்தக்க தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளது.

தமிழர்களின் காணிகள் சிங்களவர்களால் அடாத்தாக பிடிக்கப்பட்டு வருகின்றது.

அமைச்சர் ஒருவரின் இணைப்பு உத்தியோகத்தரான பெண் ஒருவர் விளாங்குளத்தில் உள்ள தமிழர்களின் காணியை தற்போது பிடித்து வைத்துள்ளார். தம்பலகாமத்தில் தமிழர்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் காணி சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புல்மோட்டையில் தமிழர்கள் மற்றும்முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் வகை தொகையின்றி பறிபோய்க் கொண்டிருக்கின்றது.

நாட்டின் சிறுபான்மையினர் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் அங்கும் அவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசகர் இனியபாரதி ஆலையடிவேம்பு, அம்பாறை, அக்கரைப்பற்று பகுதிகளில் எமது ஆதரவாளர்களை பயமுறுத்தி, தாக்கி வருகின்றார். இந்நிலையில் அம்பாறையில் நீதியான தேர்தலை எப்படி நடத்த முடியும்.

மஹிந்த ராஜபக்ஷவை மீளத் தெரிவு செய்வது தற்கொலைக்கு சமமானது.

சரத் பொன்சேகா நல்லவர் என்றோ புனிதமானவர் என்றோ நான் சொல்லவில்லை.

ஆனால் மஹிந்தவை அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சரத்பொன்சேகா வெற்றி பெறச் செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் வாக்குகளால் சரத்பொன்சேகா வெற்றி பெறும் அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தார் என்ற செய்தி வெளி உலகிற்கு தெ>யப்படுத்தப்படல் வேண்டும்.

சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்த பின்னர் நாம் பல இடங்களுக்கு சென்றோம். அங்கெல்லாம் எமது மக்கள் கூறியது என்னவென்றால், இந்த முடிவை நீங்கள் எடுக்காதிருந்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் முற்றாக உங்களைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாது, உங்கள் முகத்தில் காறித் துப்பி இருப்போம் என்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்து சரத் பொன்சேகா வெற்றி அடைந்தால் ஒரு கதவு நமக்கு திறக்கப்படும். ஒரு வழி மீண்டும எமக்கு கிடைக்கும். தமிழர் வாழ்வில் மீண்டும் இயல்பு நிலை தோன்றும்.

எனவே இம்முறை நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழுமையாக வாக்களிக்க வேண்டும். திருகோணமலை நகர மக்கள் வாக்களிப்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்ற குறை நீண்டகாலமாக உள்ளது.

சல்லி, திரியாய் மக்கள் முழுமையாக வாக்களிப்பது வழமை. இம்முறை நகரம், கிராமம் என்றில்லாமல் அனைவரும் முழுமையாக வாக்களிப்பில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் சரத்பொன்சேகாவை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்

http://thinamurasam.com

Edited by இளைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி, உங்கள் இணைப்புக்கு நன்றி.

போன தடவை நட்ந்த தேர்தலில் கூட்டமைப்பை போலவே சிங்கள உறுமய தனித்து போட்டி இட்டது... அபோது கூட்டமைப்பு இலங்கை ரீதியில் வாங்கிய வாக்குகள் 6.3% சிங்கள உறுமைய வாங்கிய வாக்குகள் 5.7% ...

கூட்டமைப்பு சரத்துடன் ஒட்டிக்கொண்டு விட்டது... உறுமய மகிந்தவுடன்....

சென்ற காலத்தைப் பற்றி கவலைப் படாமல்,

வரும் காலத்தை பற்றி சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

சென்ற காலத்தைப் பற்றி கவலைப் படாமல்,

வரும் காலத்தை பற்றி சிந்திப்பதே புத்திசாலித்தனம்.

எது புத்திசாலித்தனம்....?? உங்களுக்கு உங்களுக்கு மனதுக்கு பிடித்தது எல்லாம் புத்திசாலித்தனமாக தான் இருக்கும்... எதுக்கும் இதுக்கான பதிலை ஒரு வருடம் களித்து உங்களுக்கு சொல்லுறதுதான் நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துக்கு எதிரான கருத்துக்கள் இங்கே மகிந்தவிற்கு ஆதரவானதாகப் பார்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. மகிந்தவும் சரத்தும் தமிழின அழிப்பின் சூத்திரதாரிகள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். சரத், ராணுவத்தில் பணியாற்றத் தொடங்கிய நாளிலிருந்து தமிழின அழிப்பை தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவன். மகிந்த அரசியலில் இறங்கியதிலிருந்து இனவாத விஷம் கக்கி வருபவன். ஆக, ரெண்டுபேரும் எமக்கு எதிரிகள்தான்.

சரத்தை நாமே தெரிவுசெய்வது அவன் செய்த இனவழிப்பை நாம் ஏற்றுக்கொண்டு, அவன் சொல்வதுபோல இனவழிப்பே நடைபெறவில்லை என்பதையோ அல்லது சிறிலங்கா ஒரு தூய பவுத்தச் சிங்கள நாடு என்பதையோ ஏற்றுக்கொள்வதாகிவிடும். அது எப்படி, எம்மில் ஒரு லட்சம் பேரை 9 மாதங்களுக்கு முன்னர் அழித்தவனை, எம்மால் தெரிவுசெய்ய முடிகிறது??

பல்வேறு வெளிநாட்டு அழுத்தங்கள் இருந்தபோதும் கனரக ஆயுதங்களைப் பாவிக்கத் தூண்டியவனை, பெரும் தமிழின அழிப்பினூடாகத்தான் புலிகளை அழிக்க வேண்டும் என்று நியாயப்படுத்தி அழித்தவனை, கைதுசெய்யப்பட்டிருக்கும் புலிகளை கொல்லவேண்டும் என்று தொடர்ந்து கூறி வருபவனை நாம் சனாதிபதியாக்கிப் பார்க்க விரும்புகிறோம். மகிந்தவை விட, இவன் எந்த விதத்தில் தமிழர்க்கு நல்லவனாகத் தெரிகிறான்? எம்மைப்பொறுத்தவரை இந்த இரு பேய்களுமே எமக்கு எதிரிகள்தான்.

ஆட்சிமாற்றம் ஒன்று தேவைதான். ஆனால், சரத் என்கிற பூதத்தை வெளியே வரப்பண்ணி இனி நடக்கவிருக்கும் சம்பவங்களை நாம் எப்படிக் கைய்யாளப் போகிறோம்?

கன விசுக்கோத்துக்களுக்கு இது ஒரு பிழைப்பு.... விட்டு பிடிக்கலாம்... அந்த நியாய படுத்தலுக்காக துரோகி எண்டு வேறை பட்டம் குடுக்கினம்...

இதிலை அதிக கேவலம் என்ன எண்டால் ஒரு சிங்களவனை ஆதரிக்காத நீ எல்லாம் மனிசனா தமிழர்களின் உனக்கு எல்லாம் அக்கறை இல்லை எண்டு எல்லோ சொல்லுகினம்....

நானும் பாக்கத்தான் போறன் இவர்களின் அக்கறை தமிழர்களை எங்கை கொண்டு போய் விடப்போகுது எண்டதை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத்துக்கு எதிரான கருத்துக்கள் இங்கே மகிந்தவிற்கு ஆதரவானதாகப் பார்க்கப்படுவது அதிகரித்து வருகிறது.

ஆட்சிமாற்றம் ஒன்று தேவைதான். ஆனால், சரத் என்கிற பூதத்தை வெளியே வரப்பண்ணி இனி நடக்கவிருக்கும் சம்பவங்களை நாம் எப்படிக் கைய்யாளப் போகிறோம்?

இதை என்ன மாதிரி எடுப்பது என்று எனக்கு தெரியவில்லை...தூங்குபவரை எழுப்பலாம் தூங்குவது .............. என்ற மாதிரி

சரத்திற்கு எதிர் என்பதும், தேர்தலை புறக்கணி என்பதும், சிவாஜிலிங்கத்திற்கு, காருனாரட்டன வோட் போடுங்கோ என்பதும், மகிந்தவிர்ற்கு போடுங்கோ என்பதும் ஒன்றுதான் என்பது ஏன் இன்னும் விளங்கவில்லை என்று சொல்ல முயல்கின்றோம்?

கடந்த தேர்தலில் மகிந்த வென்றது நாங்கள் மகிந்தவிற்கு வோட்பண்ணியல்ல ரணில்க்கு நாங்கள் வோட்போடாமல், தேர்தலை புறக்கணித்தாலே....

ஆட்சிமாற்றம் தேவையென்று கருதினால் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும், சரத்போன்செககாவிர்க்கு வோட்டு போடவும் வேண்டும்..இதைதவிர வேறு என்னமாதிரி சொல்லாம் என்று எனக்கு தெரியாது....

"சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு ஒருமண்ணாங்கட்டீயையும் தராது" தராக்கி சிவராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சிங்களப் பேரினவாதம் தமிழருக்கு ஒருமண்ணாங்கட்டீயையும் தராது" தராக்கி சிவராம்.

அது புலம் பெயர்ந்த (வாய்சவடால்) தமிழருக்கு...

ஆனால் யாழ்ப்பாணத்தில், வன்னியில், திருகோணமலையில், மட்டக்களப்பில், கொழும்பில் மற்ற மற்ற இடங்களி்ல், இப்பவும் சிங்களவரின் ஆட்சியில்தான் சாப்பிடுகிறார்கள், படிக்கிறார்கள், உத்தியோகம் பார்கிறார்கள், கலியாணம் கட்டுகிறார்கள், பிள்ளை பெறுகிறார்கள், வருத்தம் வந்து ஆஸ்பத்திரிக்கு போகிறார்கள், வருத்தம் மாறாமல் சாகிறார்கள், செத்தவீடு கொண்டாடுகிறார்கள் சிலவு...அந்திரட்டி ..திவசம் .....எல்லாம் நடக்குது, நடக்க வேணும்...

தாரகி சிவராம் கொழும்பில இருக்கேக்க ஆட்சி செய்ததும் சிங்களவன் தான், அவரை சுட்டுக்கொன்றதும் அவர்கள்தான் அல்லது அவர்களின் ஆட்கள்தான் , பின்னர் யார் சுட்டது என்றுதேடித்திரியுறதும் அவங்கள்தான்... இதுல என்ன மண் யாருக்கு இல்லை...எல்லாருக்கும் அந்த மண்ணும் வேண்டாம் என்றால் சாகவேண்டும் இல்லாட்டி வெளிநாடுதான் போகவேண்டும்...யாருக்கு அதெல்லாம் ஏலும்? சும்மா நாங்கள் கதைப்பம் ஆனால் அங்கே எண்ணை சட்டிக்குள் இருப்பவர்களையும் கொஞ்சம் யோசித்தால்,

இதுதான் இப்ப/ எப்பவும் உள்ள இலங்கை அங்கேதான் தமிழர்கள் வாழவேண்டும், அது தமிழர்களாகவோ ...வேற என்ன (ஈனப்) பிறவியாகவோ.

தராக்கி சிவராம் சொன்னதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழரின் வாழ்க்கை எப்போதும் இலங்கையரசியலில் சீரழிந்துதான் காணப்படுகிறது. இப்போது தரப்படும் உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்படுமா? மீண்டும் ஏமாற்றப்படுவோமா? என்பதுதான் எல்லோரது ஏக்கமும். ஆனால் ஏமாற்றப்படுவோம் என்பதுதான் உண்மை. மேலே சொன்னீர்களே அந்த சராசரி வாழ்வுதான் தமிழனுக்கு. ஆனாலும் தமிழர் பலம் என்பது ஒன்றுபடுத்தப்பட வேண்டும். தற்காலிகமேனும் கூட்டமைப்புத்தான் இப்போதைக்கு தமிழரை வழிநடத்தும் ஒரு அமைப்பு. ஆனால் அவர்கள் பேரம் பேசும் பலமற்றவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.