Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறி லங்கா தேர்தலில் நடக்கப்போவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தேர்தலில் நடக்கப்போவது என்ன?

ராஜபக்ச அல்லது சரத் இருவரும் ஓரணியில் நின்று தமிழரை உயிரோடு கொழுத்த எரித்தவர்கள் தான்.

ஒருவர் சொன்னார்.: இது சிங்கள பௌத்தநாடு. இங்கு மற்றவர்களுக்கு இடமில்லை. அடிமைகள் தான். பொர் நடந்த வேளை சொன்னது.

மற்றவர் சொன்னார். புலிகள் கதை முடிந்ததது. தமிழர் பிரச்சனையைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் இனிஆமல் இல்லை என்று

மோதகம் கொழுக்கட்டை ஆனால் என்ன? கொழுக்கட்டை மோதகம் ஆனால் என்ன? இரண்டின் சுவையும் ஒன்றுதான்.

தமிழர்களுக்கு வடிவம் தாக் மாறுகின்றது. சுவை ஒன்றுதான்

ஆனால் தமிழர்களின் வாக்கு முக்கியம். தமிழர்கள் தங்கள் வாக்குகளை ஒருவருக்கு ஒட்டு மொhத்தமாக அளிப்பதன் மூலம் பல செய்திகளை உலகுக்கு உணர்த்தலாம். தமிழர் வாக்குகள் தான் ஆட்சியைத் தீர்மானிக்கப்போகின்றது. இது தமிழர்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக வாக்களித்தால் மட்டுமே நடைபெறும். அதுவும் ஒருவருக்கே போடவேண்டும்

தற்பொழுது ஆட்சியில் உள்ளவரை அகற்ற நினைத்தால் சரத்துக்கு வாக்கு அளிக்கலாம்.

இல்லை தற்பொழுது ஆட்சியில் உள்ளவரை ஆதரித்தும் வாக்கு அளிக்கலாம். இருவராலும் தமிழர்களுக்கு ஆகப்போவது எதுவும் இல்லை என்பதை மேற்கூறிய வசனங்கள் தெளிவுபடுத்தி இருக்கும் என் நம்புகின்றேன்.

எனது கருத்துப்படி வெளி உலகங்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, சீனாவுடன் நல்லுறவுகளை எப்போதும் கொண்டிருக்கக்கூடியவர் தான் ஆட்சிக்கு வரவேண்டும். அதுவே ஸ்ரீலங்காவை தனிமைப்படுத்துகின்ற ஒரு வழிக்கு வழிகோலியாக இருக்கும்.

தமிழருக்கு எதிரான போருக்குப் பிண்ணனியில் இருந்தவர்களை உதாசீனப்படுத்தி சினத்தை உருவாக்குகின்ற ஒருவர் ஆட்சிக்கட்டில் இருக்கன்றபோதுதான் தமிழர் நலன் சார்ந்த விடயங்கள்

வெளி உலகத்தினரால் சிறிதளவாவது கவனத்தில் எடுக்கப்படும்.

உலக அரங்கில் ஸ்ரீலங்காவின் நிலையை திரிசங்கு சுவர்க்கம்போல் வைத்திருப்பது தான் தமிழர் நலன்களை கிடப்பில் இல்லாது வைத்திருக்க உதவும்.

இதில் எவர் வந்தாலும் தமிழர் நிலை என்றும் மாறாது. ஆகையால் ராஜபக்சவே ஆட்சிக்கட்டில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது. அவர் கொடுக்கும் உதாசீனங்களால் மற்றவர்கள் (வெளிஉலகம்) எங்களைக் கொஞ்சமாவது திரும்பிப்பார்க்கச் செய்யும்.

எல்லோரையும் எதிர்க்கக்கூடியவரை தெரிவு செய்தால் தான் நாம் ஏதாவது பிடுங்கமுடியும். மேற்குலகத்தையும் இந்தியாவையும் அரவணைக்கும் சக்திகள் ஆட்சிக்கட்டில் இருக்கக்கூடாது என்பதை மனதில் வைத்து தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.

தமிழர்களின் யுக்திகளும் கால்த்திக்கேற்ப மாறவேண்டும். புலிகளை அழிக்க தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளையும் தடைசெய்த நாடுகளே அரசாங்கத்திற்கு கொடுத்து மௌனமாக இருந்து தமிழரை அழிக்க உதவவில்லையா? இவற்றை தானாக உற்பத்தி செய்யும் சக்தி ஸ்ரீலங்காவிற்கு இல்லை. இவற்றை இனாமாகக் கையளித்ததும் இந்தியாவும் மேற்குலகங்களும் தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.

நாங்களும் சார்பில்லாத ஒன்றிங்கு வாக்களிப்பதன் மூலம் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும்

சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

இதில் தமிழர் வாக்கு எப்படி முக்கியம் என்பதைத் தமிழர்கள், முள்ளிவாள்க்கால் உறவுகளின் படுகோரக்கொலைகளை நினைவு கூர்ந்து படுகொலை செய்தவர்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக்கூடிய முறையிலேயே தமிழர்களின் வாக்குகள் அமையவேண்டும். இது இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்கு நாம் எடுக்கும் முடிவிலேயே தங்கியுள்ளது.

வாழ்க தமிழ் வளர்க தமிழினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் யுக்திகளும் கால்த்திக்கேற்ப மாறவேண்டும். புலிகளை அழிக்க தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளையும் தடைசெய்த நாடுகளே அரசாங்கத்திற்கு கொடுத்து மௌனமாக இருந்து தமிழரை அழிக்க உதவவில்லையா? இவற்றை தானாக உற்பத்தி செய்யும் சக்தி ஸ்ரீலங்காவிற்கு இல்லை. இவற்றை இனாமாகக் கையளித்ததும் இந்தியாவும் மேற்குலகங்களும் தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.

ராஜ் லோகன் அண்ணா, சரியா சொன்னனீங்கள். இந்தியா 300 இராணுவ அதிகாரிகளையும் 20000 துருப்புகளையும் சிங்களவனுக்கு குடுத்து இந்த தடை செய்யப்பட்ட இரசாயன தொடுப்பு குண்டுகளை போட திட்டம் போட்டு கொடுத்து உதவியது.

பல தொடுப்பு குண்டு இந்திய போர்க்கப்பல்களில் இருந்தே ஏவப்பட்டது. அஹிம்சவாத நடிகர்களுக்கு மேலும் நாம் வழக்கு போடவேண்டும். அப்ப தான் கள்ள நாராயணன் யோசிச்சு யோசிச்சு எங்களுக்கு தடி போடமாட்டான்.

இந்திய நேரு குடும்பம் தான் எங்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிரதுக்கு நிறையா காசு குடுத்து உலகம் பூர பிரச்சாரம் செய்தவன். அவன்ட வாய்க்கு முதல்ல பூட்டு போடோணும்.

இந்திய நேரு குடும்பம் தான் எங்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிரதுக்கு நிறையா காசு குடுத்து உலகம் பூர பிரச்சாரம் செய்தவன். அவன்ட வாய்க்கு முதல்ல பூட்டு போடோணும்.

வட இந்திய காங்கிரஸ் பயங்கரவாதிகள் ஈழ தமிழரை கொன்றொழிக்க 25,௦௦௦ இந்திய பயங்கரவாதிகளையும், தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும், பல டாங்கிகளையும், பல போர் விமானங்களையும் கொடுத்து உதவியது.

இந்த இந்திய பயங்கரவாதிகள் ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளுடன் இணைந்து ஐந்து மாதங்களில் 30,000 க்கு மேலான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்தனர்.

தற்போது இந்திய பயங்கரவாதிகள் தொடர்ந்தும் தமது ஜனநாயக போலி முகத்திற்கு ஏமாந்த நாடுகளின் உதவியுடன் சர்வதேசத்தின் போர் குற்ற விசாரணையை முடக்க முயன்று வருகின்றனர்.

எனவே இத் தேர்தலில், மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு தமிழர் பாடம் புகட்ட வேண்டியது அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்கா தேர்தலில் நடக்கப்போவது என்ன?

அங்கையென்ன நடக்கப்போகுது?

றோட்டிலை நிக்கிற குட்டைநாய் வழமையாய் நடக்கிறமாதிரி கெந்திக்கெந்தி நடக்கப்போகுது.

அமைச்சராய் வரப்போறவை..

வழமை போல ..

வெள்ளத்துக்கை நடந்து போறாக்கள் மாதிரி

வேட்டியை தூக்கி கு-----------கு பாதுகாப்பு குடுக்குறமாதிரி நடந்து போகப்போகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்தகவின் படி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களின் வாழ்வு மேலும் சின்னபின்னமாக்கப்படும். சிங்கள குடியேற்றம் அசுர கதியில் நடைபெறும்.

மேற்குலக தமிழரின் பணத்தை வைத்தே சிங்களவன் வாழ்க்கை நடாத்தி விடுவான்.இதற்கு பல தெற்கில் இல்லாத வங்கிகள் யாழில் முளைப்பதே சான்று.

சிங்களவர் யாரும் போர்குற்றத்துக்காக ஒரு நீதிமன்றத்துக்கும் செல்ல மாட்டார்கள். காரணம் அரசியல் எதிரியானலும் அவர்கள் தங்களை காட்டி கொடுப்பதில்லை. இது வரலாறு. உ+ம் சந்திரிகா மற்றது ஐ.நா தொடக்கம் அமெரிக்கா வரை அவர்களை தமது நலனுக்காக பாதுகாத்துள்ளன. பாதுகாக்கும்.

தமிழர்கள் தம்மை தாமே பாதுகாத்தால் சரி. யாரும் எமக்கு இப்பொதைய நிலையில் கை கொடுக்க மாட்டார்கள். இதற்காக புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//ஆகையால் ராஜபக்சவே ஆட்சிக்கட்டில் இருப்பது தமிழர்களுக்கு நல்லது. அவர் கொடுக்கும் உதாசீனங்களால் மற்றவர்கள் (வெளிஉலகம்) எங்களைக் கொஞ்சமாவது திரும்பிப்பார்க்கச் செய்யும்.//

//தமிழர்களின் யுக்திகளும் கால்த்திக்கேற்ப மாறவேண்டும். புலிகளை அழிக்க தடைசெய்யப்பட்ட கொத்தணிக்குண்டுகளும், பொஸ்பரஸ் குண்டுகளையும் தடைசெய்த நாடுகளே அரசாங்கத்திற்கு கொடுத்து மௌனமாக இருந்து தமிழரை அழிக்க உதவவில்லையா? இவற்றை தானாக உற்பத்தி செய்யும் சக்தி ஸ்ரீலங்காவிற்கு இல்லை. இவற்றை இனாமாகக் கையளித்ததும் இந்தியாவும் மேற்குலகங்களும் தான். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.//

உங்கள் கருத்துகளே முரண்பாடாய் இருகிறது உங்களை நான் சந்தேகப்படுகிறேன். :)

தமிழர் பலமுடையவர்களாய் இருந்தபோது சிங்களதேசம் ஒற்றுமையாய் தமிழரை அழித்தது. இன்று தமிழர் பலம் குன்றியபோது, தமக்குள் மோதிக் கொள்கிறார்கள். இது இலங்யரசின் தேவையோ? சர்வதேசத்தின் தேவையோ? எதுவாகவிருப்பினும் தமிழன் இன்று இலங்கை அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட்டிருக்கிறான்.

போர்க்காலமாக இல்லாத நிலையில் இன்று ஒரு தேர்தல் நடக்கிறது. இச்சந்தர்ப்பம் தமிழர்களால் தவறவிடப்படக் கூடாது. முழுமையாகப் பகிஷ்கரித்தலோ, அல்லது சரத், மகிந்த எவர் ஒருவரையோ ஆதரப்பதன் மூலம் தமது அரசியல் இருப்பை வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும். தேர்தலுக்குப் பின் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகிந்தவிற்கு எதிராக பொன்சேகாவிற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது இந்தியாதான் என்பது எனது முடிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் பலமுடையவர்களாய் இருந்தபோது சிங்களதேசம் ஒற்றுமையாய் தமிழரை அழித்தது. இன்று தமிழர் பலம் குன்றியபோது, தமக்குள் மோதிக் கொள்கிறார்கள். இது இலங்யரசின் தேவையோ? சர்வதேசத்தின் தேவையோ? எதுவாகவிருப்பினும் தமிழன் இன்று இலங்கை அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட்டிருக்கிறான்.

போர்க்காலமாக இல்லாத நிலையில் இன்று ஒரு தேர்தல் நடக்கிறது. இச்சந்தர்ப்பம் தமிழர்களால் தவறவிடப்படக் கூடாது. முழுமையாகப் பகிஷ்கரித்தலோ, அல்லது சரத், மகிந்த எவர் ஒருவரையோ ஆதரப்பதன் மூலம் தமது அரசியல் இருப்பை வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும். தேர்தலுக்குப் பின் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகிந்தவிற்கு எதிராக பொன்சேகாவிற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தது இந்தியாதான் என்பது எனது முடிவு.

என்ன இந்தியா பொன்னனை ஆதரிகிறதா? மகிந்தனையும் , இந்தியாவையும் எதிர்பதே எனது கொள்கை, அப்ப மகிந்தன் வென்றாலும் எனக்கு வெற்றி, தோற்றாலும் எனக்கு வெற்றி யாரோ ஒருத்தன் தோற்கிறான் எல்லோ :lol: என் மக்கள் எடுக்கும் முடிவு ராச தந்தந்திரம் நிரைந்தது, எனது வெற்றி இப்போதே நிச்சயிக்கபட்டு விட்டது. :):lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையைப் பொறுத்தவரையில் போட்டி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தான். இந்த இரண்டு தரப்பும் தான் வெளியுலகத்துக்கு சீனாவை இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் சக்தி போல் காட்டாப்பு காடுகின்றன. அதன் ஒரு வடிவம் தான் மகிந்தவை சீனாவின் பொம்மை போல் இந்திய மேற்கத்தேய ஊடகங்கள் வர்ணிப்பது.

இலங்கை மீது இந்திய அமெரிக்க ஆதிக்கப் போட்டி பற்றி தமிழ்நெட்டில் வெளியான நல்லதொரு ஆக்கம்:

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=30681

அதில் சீனா குறித்து சொல்லப்பட்டிருப்பதாவது.

China is only a convenient scarecrow shown to the gullible by both of them. China might have made use of the situation for its own benefits and to settle scores with India, but China knows the weaknesses of its leverages in the island and it is not the core culprit.

என்னைப் பொறுத்தவரை அடித்துச் சொல்வேன் மகிந்த இந்தியாவின் கைப்பொம்மை என்று. அதை உறுதிப் படுத்துவதற்கான சில சான்றுகள்:

1. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம். (எவ்வாறு இந்தியாவொடு ஒத்துழைக்காத அரசோடு அவ்வாறானதொரு கனகச்சிதமான நாடகத்தை மேற்கொள்ள முடியும்?)

2. காங்கிரஸ் + திமுக குழுவின் இலங்கைப் பயணம்

3. இந்தியாவின் தேர்தல் சமயத்தில் நாராயணன் மேனனனால் அடிக்கடி நிகழ்த்தப் பட்ட இலங்கை பயணங்கள்.

4. மக்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் புல்மோட்டையில் இந்தியாவின் இராணுவ வைத்தியர்கள் வந்திறங்கியமை.

என்ன இந்தியா பொன்னனை ஆதரிகிறதா? மகிந்தனையும் , இந்தியாவையும் எதிர்பதே எனது கொள்கை, அப்ப மகிந்தன் வென்றாலும் எனக்கு வெற்றி, தோற்றாலும் எனக்கு வெற்றி யாரோ ஒருத்தன் தோற்கிறான் எல்லோ :huh: என் மக்கள் எடுக்கும் முடிவு ராச தந்தந்திரம் நிரைந்தது, எனது வெற்றி இப்போதே நிச்சயிக்கபட்டு விட்டது. :wub::lol::lol:

இந்தியாவின் நடவடிக்கைதான் இருவரையும் மோதவைத்துள்ளது. இருவரும் ஒன்றாயிருந்தால் போரின் வெற்றி அவர்களை மிகப்பெரிய வெற்றியொன்றைப் பெறச் செய்துவிடும். யார் தோற்றாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவிற்கும் பாதகமில்லை. யார் வென்றாலும் எங்களுக்கு ஒன்றுமில்லை. இந்தியாவிற்கும் பாதகமில்லை. :lol::lol::lol:

தமிழர் ஒன்று சேர்ந்து நின்றோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.