Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் இந்தியத்தின் தலையீடும் தமிழினத்தின் இன்றைய தேவையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் இந்தியத்தின் தலையீடும் தமிழினத்தின் இன்றைய தேவையும்.

காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை..

இந்தியா இலங்கை பெட்ரோலியம் கார்பரேசன்..

சம்பூர் அனல் மின் நிலையம்..

பசுமை புரட்சி திட்டம்..

மன்னார் எண்ணை அகழ்வாராய்ச்சி..

தமிழ்நாட்டில் இருந்து கேபிள் வழியாக சிங்களவனுக்கு மின்சாரம்..

இந்திராகாந்தி பல்கலை கழகம்..

யாழ்பாணத்தில் துணை தூதரகம்..

தொடர்வண்டி தொழிற்சாலை..

அசோக் லைடேண்டு..

காங்கேசன் துறை சிமெண்ட் தொழிற்சாலை

plant.jpg

காங்கேசன் துறை சிமெண்ட் பல வருடங்களாக பூட்டியே கிடந்தது..ஈழத்தின் சுண்ணம்பு வளத்தை பங்கு போட்டு விற்க பிர்லா குழுமத்தை சந்தியா களமிறக்கி உள்ளது.இன்று தடுப்பதற்கு புலிகள் இல்லை. இளிச்சவாயன் பொண்டாட்டி ஊருக்கெல்லாம் வப்பாட்டி என்ற ரீதியில் கேட்பதற்கு யாரும் இல்லை அவனவன் அதாவது இந்திய தொழில் அதிபர்கள் ஈழத்தில் தேவைபடும் வளங்களை சுரண்டுவதற்கு தயார் நிலையில் உள்ளார்கள்.

இந்தியா இலங்கை பெட்ரோலியம் கார்பரேசன்

lioc_logo.gif

இவர்கள் எடுப்பதோ அரபுநாடுகளிடம் பிச்சை .. அதில் பிச்சைகாரனுக்கும் பிச்சை காரனான இலங்கைக்கு உதவ போகிறார்களாம். ஒரு வேளை கஞ்சிக்கே ஈழத்தவர் வழி இல்லாத நிலையில் பெட்ரோல் பங்குகளை திறக்க போகிறார்கள்

.இதில் ஆரிய பார்வையை சிறிது கூர்ந்து நோக்குங்கள் .பல தெளிவுகளை பெறலாம்.. அதாவது அந்த இடங்களில் ஆரிய பங்காளிகளான சிங்களவர் குடியேற்றபடபோகிறார்கள் என்று அர்த்தம்.ஆரியர்களுக்கு தூர நோக்கு பார்வை அதிகம் எனபதை நாம் ஏற்று கொண்டே ஆக வேண்டும்.

சம்பூர் அனல் மின் நிலையம்..

2usftzq.jpg

சம்பூர் அனல் மின்நிலையம் அமையும் பகுதியானது சம்பூர், கடற்கரைச்சேனை, கூனித்தீவு, சூடைக்குடா ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கிய 10,000 ஏக்கர் வளமான நிலப்பரப்பாகும். இக்கிராமங்களைச் சேர்ந்த 1632 குடும்பங்கள் தெரு நாய்களை போல இந்தியத்தால் விரட்டியடிக்கப்பட்டு வாழ வழியற்றவர்களாக உள்ளார்கள்.சிங்கூரிலே விவசாயநிலங்களை கைப்பற்றி துப்பாக்கி சூடு நடத்திய அரசு, கோவாவிலே சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு அம்மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய அரசு..குஜாராத்தில் 1050 ஏக்கருக்கும் மேல் டாட்டா கம்பனியினருக்கு கார் தொழிற்சாலை தொடங்க வழங்கியிருக்கும் அரசு..அதே டாட்டாவுக்காக ஒரிசாவில் பழங்குடியினரை அடித்து வெளியெற்றிய அரசு.தண்ணீரே இல்லாத தாமிரபரணி நதி நீரை (நிலத்தடி நீர்) உறிஞ்சி கொள்ள கொகொலாவிற்கு அனுமதி அளிக்கும் பொந்திய அரசு.. இவ்வாறு இலவசமாக கிடைக்கும் வளங்களை விட்டு செல்வதற்கு என்ன இளித்த வாயர்களா?

பசுமை புரட்சி திட்டம்.

farm1.jpg

இந்தி தேசிய அடிப்பொடி சுவாமிநாதனை விட்டு பசுமை புரட்சி என்ற மண்ணின் வளத்தை மறக்கடிகின்ற ஒரு கேவலமான திட்டத்தினை முன்மொழிந்திருந்தது.. தமிழ்தேசிய தோழர்கள் எதிர்ப்பால் ஆசாமி அந்தர் பல்டி அடித்து விட்டார்..ஆனாலும் அவரது அடிபொடிகள் 14 பேர் கொண்ட குழு இந்த செயலை செவ்வனே செய்துவருகிறது.. அதில் கொடுமை என்னவென்றால் சிங்கள சிறைகைதிகளையும் வதைமுகாம்களில் இருக்கும் தமிழ்பெண்களையும் ஒன்றாக இத்திட்டதில் இறக்கவிட போகிறார்களாம்.. அதாவது புதியதாக ஒரு கலப்பினத்தை உருவாக்க போகிறார்கள்..நாய் கூட பசியால் தவிக்கும் இன்னோரு நாயை சேராது.. இவர்கள் தெரு நாயைவிட கேவலமானவர்கள்.

மன்னார் எண்ணை அகழ்வாராய்ச்சி.

petroleum.jpg

இதில் முந்தி கொண்டது சீனாதான் ..தாமதமாக விழித்து கொண்ட சந்தியா.. சிங்களவனிடம் காட்டி கொடுத்து கூட்டி கொடுத்து இதற்கான ஒப்பந்ததை பெற்று கொண்டது.அடிப்படையில் இந்த எண்ணெய் வளம் என்பது தமிழீழத்தின் சொத்து. இதை ஊரான் கொள்ளை அடிப்பது எந்தவிததில் நியாயம்?

தமிழ்நாட்டில் இருந்து கேபிள் வழியாக சிங்களவனுக்கு மின்சாரம்.

RSethu-Samundram_0.jpg

ஊரே இங்கு மின்பற்றாக்குறை மின்வெட்டு என்று தவித்து கொண்டிருக்க.. தமிழ்நாட்டின் மின்சாரத்தை சிங்களவனுக்கு அதாவது ஆரிய பங்காளிக்கு கடலுக்கு அடியில் கேபிள் வழியாக வழங்க போகிறார்களாம். நம்முடைய மின்சாரத்தை சிங்களவனுக்கு வழங்க இவர்கள் யார் என்ற சொரணை நம்மவர்களுக்கு வர வேண்டுமா? இல்லையா?

இந்திராகாந்தி பல்கலை கழகம்.

Indira-Gandhi.jpg

சிறிது கூர்ந்து நோக்கினால்.. எதற்காக இப்பல்கலை கழகம் தொடங்கபடுகிறது.? ஆரிய மேலாதிக்கத்தை நிறுவதற்கே என்பது புரியும். இப்பல்கலை கழகத்தின் மூலம் ராமர் புகழபடுவார்.. ராவணன் தூற்றபடுவார்.காந்தியின் அகிம்சை அன்னகாவடி என்று போதிக்கபட்டு இயல்பிலேயே போராடும் குணத்தை பெற்றிருக்கும் ஈழத்தவரை காயாடித்துவிடும் பல்கலைகழகம் இதுவே ஆகும்.

யாழ்பாணத்தில் துணை தூதரகம்

ambassador-chennai.jpg

யாழ்பாணத்தில் எதற்காக துணை தூதரகம் தொடங்க்படுகிறது என்பதற்கு முன் சென்னையில் எதற்கு இலங்கையின் துணை தூதரகம் தொடங்கபட்டது? இலங்கை அவ்வளவு பொன் பொருள் கொழிக்கும் நாடா?அனைவரும் அங்கு செல்ல முண்டியடிகிறார்களா? இல்லவே இல்லை.. இங்கு தமிழ்நாட்டில் இலங்கை துணை தூதரகத்தை பொந்திய அரசு அமைத்ததில் இருந்து அதன் செயல்பாடுகள் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.. இங்கு இலங்கை அரசுக்கு அத்தூதரகம் மாமா வேலை பார்ப்பது போன்று அங்கு ஈழத்தில் தற்போது நிலவும் இந்திய எதிர்ப்பை அணைக்கும் மாமா வேலைக்காக அமைக்கபட உள்ளது.

இன்னும் அசோக் லைலேண்டு.. தொடருந்து தொழிற்சாலை என்று பொந்தியாவின் தலையீடுகள் தொடர்கினறன..

ஈழத்தவர் இதை எப்படி எதிர்கொள்வது?

அவரை கொடி அரைநாண் கொடி என்று தமிழ் நாட்டு மாக்களை நம்பாது..ஆக்கபூர்வமாக களமிறங்க வேண்டும். தமிழீழ விடுதலை வேண்டும் என்று இப்போது போராடுவது முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியமானது ஈழத்தின் வளங்களை பொந்தியா உட்பட ஏனைய அல்லகைகள் சுரண்டாமல் தடுப்பதே ஆகும். எனவே தமிழீழ கோரிக்கைகாக குரல் எழுப்பும் அதே நேரம் பொந்தியா உட்பட ஈழத்தின் வளங்களை சுரண்டுபவர்கள் வெளியேற்ற பட வேண்டும் என குரல் கொடுத்தல் வேண்டும். வளங்கள் இல்லாமல் நாடு அடைந்து என்ன பயன்?

தமிழக தமிழர்கள் எப்படி உதவலாம்?

எப்படியும் உதவ முடியாது என்பதே நிதர்சனம். சிறிது யோசித்து பாருங்கள்.. பாகிஸ்தானிலும் சீக்கியர்கள் இருக்கிறார்கள் வங்கதேசத்திலும் வங்காளிகள் இருக்கின்றனர். ஆனால் அங்கு மேற்கூறிய தலையீடுகளை பொந்தியா செய்யமுடியுமா? அந்த இனத்தை சார்ந்த இங்குள்ளோர் கிளர்ந்து எழுவார்கள் .. மத்திய அரசை ஸ்தம்பிக்க செய்வார்கள்.. அதற்கும் மேல் தலையிட்டால் பாகிஸ்தான்காரனின் குண்டு ஒன்று பொந்தியவில் வைத்து எத்தனை பேர் இறந்தார்கள் என்று பரிசோதனை செய்யபடும்.ஆனால் நாம் முதலில் போராடுகிறோமோ? அதுவும் நமக்கான உரிமைகளுக்காக என்று.. மனசாட்சியை தொட்டு யோசித்துபாருங்கள்!

அடுத்து ஈழத்தவர் மேல் பொந்தியாவிற்கு ஏன் கரிசனை? போராடாத நம்மவர்களையும் உள்வாங்கி தமிழினம் என்ற ஒற்றை போர்வைக்குள் ஈழத்தவரையும் பொந்தியா உள்வாங்குவதுதான் இங்குள்ள சிக்கல்.நன்றாக யோசித்து பாருங்கள் ஈழத்தவர் வெள்ளை இனத்தவரின் கிளை பிரிவினராகவோ அல்லது வேறு எதோ ஒரு நாட்டினுடைய இனத்தின் கிளையாகவோ இருந்திருந்தால் ஈழத்தவருக்கு இவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்குமா? சம்பந்த பட்டவர் சுளுக்கு எடுத்திருப்பார்களா? இல்லையா? நாம் குறைபட்சம் கேட்பது.. ஈழத்தவரை தனி தேசிய இனமாக கோருவதுதான்.. அதாவது தமிழக தமிழர் தனி தேசிய இனம் ...ஈழத்தவர் தனி தேசிய இனம் .. ஒவ்வொருவர்க்கும் தனித்தனி நாடுகள் அதை ஏற்று கொள்ள நம்மவர்கள் முதலில் முன்வரவேண்டும் .

870feb1750d6719784d6fb689dc970c8.jpg

புலிகள் வென்றால் "ஆக நம்மவர் பின்னி பெடலெடுக்கிறார்கள்.." தோற்றால் அது அடுத்த நாட்டு பிரச்சைனை..அல்லது அப்படி செய்திருக்கலாம் இப்படி செய்திருக்கலாம்.. நொன்னை நொட்டை சொல்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் நம்மவர்கள் எப்போதும் டீகடை பெஞ்சில் தயாராகவே உட்கார்ந்திருப்பார்கள் ஆனால் நீங்கள் உங்கள் விடுதலை என்ன செய்தீர்கள்? என்று கேட்டு பாருங்கள் பேச்சு மூச்சு வராது. அதாவது இனம் என்ற போர்வையில் அடுத்தவன் பெற்ற பிள்ளையை தனது! என்று கூறும் மொள்ளமாறித்தனம்!.அயோக்கியதனம்!..

14_07_06_human_chain_front.jpg

ஈழத்தவருக்காக நானும் போராடுகிறேன் என்ற போர்வையில் தெரு முக்கில் கத்துவது! .. பேரணி என்று சாலைகளை அடைத்து கொண்டு போவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத போராட்ட முறைகளை கையாண்டு நம்மை போன்றே அவர்களையும் அடிமைபடுத்த வேண்டுமா? இனம் என்ற போர்வையில் இன்னும் நம்மை வைத்து கொண்டு அவர்கள் மேலும் துன்பட வேண்டுமா? தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் அவர்களை மேலும் அடிமைபடுத்தவேண்டுமா?எதற்கெடுத்தாலும் இந்தியதிற்காக தனது அக்கா தங்கைகள் உட்பட அனைத்தையும் விற்க தயாராக இருக்கும் 'அரசியல்வியாதிகளிடம்' கோரிக்கை வைக்கும் நமக்காக அவர்கள் தொடர்ந்து அடிமைபடவேண்டுமா?என்பதை நாம் மனசாட்சியுள்ளவர்களாக சிந்தித்து பார்க்க வேண்டும்

எனவே மூத்த தமிழினம் என்று ஈழத்தவரை தனியே போராட விடுவதே சிறந்தது.. இந்தியத்தால் உள்வாங்கபட்ட நாம் "இந்திய டமிலர்கள்" அதாவது அடிமை தமிழினம். என்பதை ஏற்று கொண்டு நாம் நம்முடைய விடுதலைக்கு போராட வேண்டும்... அதுவே சிறந்த வழிமுறையாகும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர் குத்தினாலும் அரிசியாகட்டும் விடுங்கோப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர் குத்தினாலும் அரிசியாகட்டும் விடுங்கோப்பா.

ஆர் குத்தினாலும் அரிசியானா சந்தோசந்தான். ஆனா குத்தின அரிசிய குத்தினவன் தன்ட வீட்டுக்கு எடுத்திட்டு போய் சோறு சமைக்க விடுறது பிழையல்லே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.