Jump to content

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

4தமிழ்மீடியா இணையத்தில் அந்த நாரயணனுக்கே வெளிச்சம் என்ற கட்டுரையை வாசித்தபோது கிடைத்த தகவலைவைத்து இந்த இணையத்திற்குச் சென்று பார்த்தேன்.அதனை யாழ்க்களத்தில் பதிவதூடாக எம்மைக் கடந்து எமது எதிர்காலம் எப்படி இருளை நோக்கி நகர்கிறது என்பதை எல்லோரும் அறியக் கூடியதாக இருக்கும். விடயங்களை வாசிக்கும் உறவுகள் மற்றும் இது தொடர்பிலான பல்கலை ஆய்வுநிலை மாணவர்கள் ஆய்வுகளை செய்ய வேண்டியது அவசியமானது மட்டுமன்றி, எமதினத்தினது இருப்பை உறுதிசெய்வதற்கான தேவையுங்கூட. இவர்கள் இன்னும் ஒரு நூற்றாண்டின்பின் நடைபெற வேண்டிய திட்டங்களுக்காக இன்றே செயற்படத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் தமிழினமோ இன்றைய தனது பதவிகள் மற்றும் இதர சுயநலத் தேவைகளுக்காக மட்டுமே நகர்ந்து கொண்டிருப்பது எவளவு பரிதாபத்திற்குரியதாகும்.

மேலும் அறிய இங்கே......

http://sriravana.com/index.php?option=com_frontpage&Itemid=1

Siha udana Foundation

Founded specially to back up Sinhalese who is suffering from poverty, racism and heresy. We aid in many ways to Sinhala underage children to carry out their education enriched with patriotic thoughts.

We align our future generation to match with the fast developing world with new innovative ideas, researching attitudes, and exemplary characteristics.

Our Vision

“To develop ourselves to be the strongest nation in the world and make the whole world more beautiful place”

Projects

We are carrying out our projects based on three main criteria.

1. Strengthening the temple education with research attributes

2. Enrich nation with patriotic feelings and thoughts through “ Devaala” concept.

3. Strethening our people economically and rewarding achievers.

யாழ்க்கள உறவுகள் இதிலுள்ள விடயங்கள் தொடர்பாக புலமைசார்ந்து எழுதுவார்கள். அதனூடாகவேணும் உண்மைகள் வெளிவரட்டும். இவர்களது நோக்கமென்ன என்பதை புலப்படுத்த வாய்ப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புத்தரின் சீடனான இராவணனைப் பற்றி அறிந்துள்ளீர்காளா?

பாவம் மொக்கு மக்கள். புத்தரே தன்னை கடவுள் இல்லை என்றார். ஆனால் அவரது அடிபொடிகள் நோகாமல் பிச்சை எடுத்து தின்பதற்கும், பதவிகளில் இருந்து இலவசமாக காசு பார்பதற்கும் அவரை கடவுளாக்கி விட்டார்கள். ஒவ்வொரு புத்தர் சிலை அமைக்கும் போதும் இவர்கள் புத்தரின் வார்த்தையையே மீறும் சீடர் ஆகிறார்கள்.
Posted

இத் தலைப்பை இணைத்தவர் உண்மையான விபரங்களை தரவில்லை. எனினும் இதன் பின்னணி சுவாரஸ்யமானது.

6 வருடங்களின் முன் (2003-2005) சீகிரிய பகுதியை நவீன விஞ்ஞான முறைகள் (கார்பன் திகதிக் கணிப்பீடு, வெப்ப ஒளிர்வு திகதிக் கணிப்பீடு) முறைகளில் சிங்கள தொல்லியலாளர்கள் ஆய்வு செய்தனர். மீண்டும் மீண்டும் செய்த ஆய்வுகளில் ஓர் விபரீதமான முடிவு கிடைத்தது. சீகிரிய மேல்பகுதி கேணி அமைப்பு, செங்கல் படியமைப்பு, சுமார் 6000 வருடங்கள் (சரியான ஆண்டுகளை எங்கோ குறித்து வைத்துளேன்) பழமையானது என்பதுதான் அது.

இதில் என்ன விபரீதம்?

சிங்களவனால் புனையப்பட்ட மகாவம்சம் (மகா பொய் வம்சம்) சீகிரியாவை காசியப்பனுடன் தொடர்புபடுத்தி கி.பி. 477 - 495 காலத்தில் கட்டப்பட்டதாக மிக தெளிவாக பதியப்பட்டுள்ளது. (http://www.mysrilanka.com/travel/history/seegiriya.htm) இப்ப விஞ்ஞானம் உறுதியாக "மகா வம்சத்தை" "மகா பொய்வம்சம்" என நிரூபித்தது தான் அந்த விபரீதம்.

குழம்பிப்போன சிங்களவன் உடனடியாக அது காலத்தால் முற்பட்ட புத்த துறவிகளின் பயிற்சிக்கூடம் என பல கட்டுரைகளை 2008 ம் ஆண்டுகளில் இலங்கை பத்திரிகைகளில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதித்தள்ளினான். 6000 வருடங்களின் முன் புத்தரை கொண்டு போக முடியாது என உணர்ந்ததும், அடக்கி வாசிக்க தொடக்கிவிட்டார்கள். (http://discover.lankanest.com/index.php?option=com_content&task=view&id=104&Itemid=77).

http://sigiriya.org/damsels.htm

2007-2008 இல் இருந்து சிகிரியாவை ராவணனுடன் தொடர்புபடுத்தி, ராவணனை சிங்களவனாக காட்டும் முயற்சியில் தற்போது மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் புதிய பொய்வம்சத்தை தயாரித்து பல ஆண்டுகளின் பின்னர் அவற்றை உண்மை போல் காட்டுவதில் சிங்களவன் வெற்றியடைந்துவிடுவானா?

துரதிஸ்டவசமாக தமிழ் தொல்லியலாளர்கள் (யாழ், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்) ஒன்றிணைந்து உறுதியான தமிழ் வரலாற்றை படைக்காமல், தனித்தனியாக முரண்பாடான கருத்துக்களை சுயலாபம் கருதி புத்தகங்களாக வெளியிட்டு - தமிழ் வரலாற்றை கேலிக்கூத்தாக மாற்றிவருகின்றனர்.

இன்னுமொரு அடக்கி வாசிக்கப்பட்ட வரலாற்று திரிபு:

UNESCO நிதி உதவியுடன் அனுராதபுரம் ஜெடவனராமைய விகாரை புணரமைப்பின் போது 18 அடி ஆழத்தில் கிடைத்த நடராஜர், நந்தி சிலைகளும், கோமுகி அமைப்புக்களும். இதுபற்றிய செய்தி 2004 daily news பத்திரிகையில் படங்களுடன் வெளிவந்தது. பின்னர் அவை மறைக்கப்பட்டு, சிலைகள் கொழும்பு நூதனசாலைக்கு எடுத்துச் சென்று மறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையும் பார்க்கவும்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=68643

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

Posted

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

:D:lol::)

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இராவணன் புத்தரின் சீடராக இருந்திருக்கலாம்....மணிமேகலை பெளத்த மதத்தை சேர்ந்த

தமிழர் என்றால் இதுவும் சாத்தியம் தான்....சிங்களவர்களிளும் சைவர்கள் இருந்திருக்கலாம்....

சைவம் தென் மண்டலம் பூராவும் பரவியிந்திருக்கலாம்...

அய்யா, தமிழ், சைவ வரலாறு பல மதங்களாலும், இனத்தவராலும் திரிக்கப்பட்டு விட்டது.

சைவம் இலங்கயில் இருந்த காலப்பகுதி பெளத்த மததிற்கு முற்பட்டது.

விஜயன் இலங்கைக்கு வந்தபோதே சைவம் இருந்தது, அதிலும் அவனும் சைவனே.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
    • சீமானை  எல்லா இடங்களிலும் நான் வரவேற்பதில்லை. ஆனாலும் திராவிட பொய்கள்,சுத்துமாத்துகளை விட அவர் பரவாயில்லை.
    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.