Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலமாளிகையை மக்கள் கைப்பற்றுவதற்கு முன் பொன்சேகாவை விடுதலை செய்யவும்- ஜே.வி.பி

Featured Replies

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்து, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தாமல் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், ஜனநாயக தியில் போராட்டங்களை ன்னெடுத்து மக்கள்அலமாளிகையை கைப்பற்றுவதற்கு முன்னர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி.

சூளுரைத்தது. ஜெனரல் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோ கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தின் போதே அக்கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு சூளுரைத்தனர்.

மக்கள் விடுதலை முன்னணி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் புஞ்சி பொரளை சந்தியில் நேற்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது. அவ்விடத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கறுப்பு கொடிகளை ஏந்தியும், அரசாங்கதிற்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.

கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமை தாங்க இந்த எதிர்ப்பு ஊர்வலம் புஞ்சி பொரளையில் ஆரம்பமாகி மருதானை, டீன்ஸ் வீதியூடாக மாலை லிப்டன் சுற்றுவட்டத்தை 4.15 மணியளவில் வந்தடைந்தது. மழையில் நனைந்து உடல் தோய்ந்த நிலையில் அங்கு அணிதிரண்ட ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் சுமார் 15 நிமிடங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஊர்வலத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றோர் பொன்சேகாவை விடுதலை செய்; பொன்சேகாவே உண்மையான ஜனாதிபதி; தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் பொன்சேகாவை விடுதலை செய், விடுதலை செய், விடுதலைசெய் நாட்டின் தளபதியை விடுதலை செய், ஜனாதிபதி கதிரை உனக்கு சொந்தமானது அல்ல, மக்கள் ஆணையை மாற்றிய பொய் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவோம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளுக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியது மட்டுமல்லாது, அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி தேர்தலுக்கும் எதிரான வாசகங்கங்கள் தாங்கிய பதõதைகளையும் கறுப்பு கொடிகளையும் ஏந்தியிருந்தனர். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டத்தினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டம் மற்றும் ஊர்வலம் பயணித்த வீதிகளிலும் அதனோடிணைந்த குறுக்கு வீதிகளிலும் பெரும் போக்குவரத்து நெ>சல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், சுற்றுவட்டம் மற்றும் ஊர்வலம் பயணித்த வீதிகளில் ·க்கிய இடங்களில் மேலதிக பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

எதிர்ப்பு ஊர்வலம் லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தவுடன் அங்கு தற்காலிகமாக மேடையொன்று அமைக்கப்பட்டு எதிர்ப்பு கூட்ட·ம் நடத்தப்பட்டது. இதில் மக்கள் விடுதலை ·ன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க மற்றும் ·ன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் லால் காந்த, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உரையாற்றினர்.

·ன்னாள் எம்.பி.யான லால்காந்த எதிர்ப்பு கூட்டத்தில் ·ன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்த உரையாற்றுகையில், இந்த அரசாங்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொன்சேகா கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டுள்ளார், அவரை விடுவிக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் மக்கள் விடுதலை ·ன்னணி போராட்டத்தை கைவிடாது.

அரசாங்கம் ஜனநாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் குழிதோண்டி புதைத்துள்ளது.

நாட்டில் இவ்விரண்டுமே இன்றில்லை மக்கள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ·யற்சிக்கவேண்டும். 47 இலட்சம் வாக்குகளை பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவே இந்த நாட்டின் உண்மையான ஜனாதிபதி. கணனியின் லம் பெறுபேறுகளை மாற்றியவருக்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை.

இந்த போராட்டம் இவ்விடத்தில் இன்றுடன் நின்றுவிடாது. ஜெனரலை விடுவிக்கும் வரை போராட்ட·ம் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தொடரும். மக்கள் அல>மாளிகையை கைப்பற்றுவதற்கு ·ன்னர் ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யவும்.

தேர்தலுக்கும் ஜனநாயகத்திற்கும் பயமில்லை என்றால் ஜெனரலை உடனடியாக விடுதலை செய்யவும். இல்லையேல் ஜனநாயக ஙுதியில் போராட்டத்தை ·ன்னெடுத்து ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிப்போம் என்றார்.

·ன்னாள் எம்.பி.யான அனுரகுமார எதிர்ப்பு கூட்டத்தில் ·ன்னாள் எம்.பி.யான அனுர குமார திஸாநாயக்க உரையாற்றுகையில், தனிப்பட்ட குரோதங்களுக்காகவோ,ஜனநாயகத்திற்கு எதிராகவோ செயற்பட்டமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை. மக்களின் ஆணையை கோ>யமைக்காகவே அவரை கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.

58 வீதமான மக்கள் வாக்களித்தார்களாயின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏன்?

அச்சம் கொள்ளவேண்டும், மக்கள் ஆணையை களவெடுத்தவர் ஜனாதிபதி கதிரையில் இருக்க·டியாது. ஜனாதிபதி பெறுபேறுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளோம். வாக்குகளை மீள எண்ணவேண்டும். இல்லையேல் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும்.

கொள்கையில்லாதவர், பொய் கூறுபவர், நோக்கமில்லாதவர் மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளாதவர் ஜனாதிபதி கதிரையில் இருப்பதற்கு தகுதியற்றவர். மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மீது பொலிஸார் தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகைக்குண்டு தாக்குதல்கள் மேற்கொண்டனர். சீருடையணிந்த பொலிஸார் ஜனநாயகத்தை விளங்கிக்கொண்டமையினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்களை நடத்தமாட்டார்கள்.

தலைவர் சோமவங்ச இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் விடுதலை ·ன்னணியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க உரையாற்றுகையில், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இங்கு மட்டுமல்லாது ·ழு உலகிலும் நடத்தப்படுகின்றது.

எங்களுக்கு கணனி அறிவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் 2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ·தலிடம் பெற்றவர் செய்த கணனி விளையாட்டு உண்மை இல்லை என்பதனை மகாபோதியின் ·ன்னிலையில் சத்தியம் செய்ய·டியுமா? அவ்வாறு பொய்யாக சத்தியம் செய்தால் அவரது இதயம் நூறுதுண்டுகளாக சிதறும்.

பொய்யென்றால் எனது இதயம் ஆயிரம் துண்டுகளாக சிதறும்.

ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனால் மகாநாயக்க தேரர்களும் இந்த விடயத்தில் தலையிடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் ஜெனரலை விடுதலை செய்வதற்குமான மக்கள் போராட்டம் அவரை விடுவிக்கும் வரையில் தொடரும் என்றார்.

http://www.thinamurasam.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அலறி மாளிகையை மக்கள் கிட்டவும் நெருங்க முடியாது. சுட்டு பொசுக்கி விடுவாங்கள். ஜே வி பி சும்மா சவுண்ட் விடுத்தது. இல்லாட்டி யாருக்கு தெரியும் இப்படியும் ஒரு கட்சி சிலோனில இருக்கிறது?

அப்படியே இவர்கள் சென்று சூடு வாங்கினாலும், பரவாயில்லை. இதை வின் வின் சியுவேசன் எண்டு சொல்லலாம்.

என்னத்தை சொல்ல :):D

கண்டியில் கலவரம் உண்டாக்குவோம் என்றும் தமிழர்களின் உடமைகளை அழிப்போம் என்றும் அரச தூதுக்குழு மகானாயக்கருக்கு பயமுறுத்தி இருந்ததாக கேள்வி

Edited by சுனாமி

  • தொடங்கியவர்

ஜே.வீ.பி கலவரம் வந்தா நல்லா இருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினரான தமிழ்மக்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளாமலிருப்பதே நல்லது. ஏனென்றால் கலந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. தனிப்பட்ட இலாபங்களுக்காகச் சிலர் சேர்வதைத் தவிர்க்கமுடியாது.

தேசிய இனப் பிரச்சனையை ஜேவிபி போன்ற இனவாதக் கட்சிகள் அணுகும் முறையைப் பார்த்தால் இப்போதுள்ள ராஜபக்ஸ அரசைவிட நிலைமைகள் மிகமோசமாகவே போய்விட வாய்ப்புண்டு.

எமது தாயகக் கோட்பாட்டை எதிர்த்து அரசியல் அதிகாரங்கள் எதுவுமற்ற சிறுபான்மையினராகத் தமிழர்களை வைத்திருக்க வேண்டுமென்று முழுமூச்சோடு பாடுபட்டு அரசை எமக்கெதிரான யுத்தத்திற்குத் தூண்டியவர்கள் ஜேவிபியினரே.

இரண்டு தரப்பும் நன்றாக முட்டிமோதுவதைப் பார்த்து ரசிக்கவேண்டியதே இன்று நாம் செய்யவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிறப்பில் நான்ரசித்த கேட்ட நல்ல திறமான கனமான பகிடி.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாகாணசபை தேர்தல்களில் இருந்த இடங்களையும் கோட்டைவிட்ட ஜே.வி.பி அலரிமாளிகையை கைப்பற்றும் பகிடி விடுகினம்.இதை சிங்களமக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

பேரினவாதத்துக்கு கூஜா தூக்கியவர்களை அந்த பேரினவாதம் தனது மக்கள் என்றுகூடப் பார்க்காது அழிக்கும்.

71,87ல் நடந்தவைகளை இவர்கள் மறந்துவிட்டார்களா??????

  • கருத்துக்கள உறவுகள்

2004 ஏப்பிரலில் லக்ஸ்மன் கதிர்காமரைப் பிரதமர் ஆக்குவதையே அப்போதைய யனாதிபதி சந்திரிகா அம்மையார் விரும்பினார். ஆனால் இந்த ஜேவிபி இனவாத அரசியல் கோமாளிகளின் அழுத்தங்களின் காரணமாகவே அப்போது டி. எம். ஜயரத்ன போன்ற சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் இருந்தும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக விருப்பம் இல்லாமல் சந்திரிகா நியமித்தார். (இங்கு கதிர்காமரை பிரதமர் ஆக்கியிருக்க வேண்டும் என்பது எனது கருத்தல்ல. கதிர்காமர் போன்று சிங்களத்துக்கு விசுவாசத்துடன் அதியுச்ச சேவகம் செய்த தமிழர் யாரும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகளை சர்வதேசம் தடைசெய்ய வேண்டி முழுமூச்சுடன் இறுதிவரை போராடிய எட்டப்பன் கதிர்காமர். அன்று கதிர்காமர் ஓடிஓடி விதைத்ததையே இன்று முள்ளிவாய்க்காலில் வெற்றியாக அறுவடை செய்தது சிங்களம். தமிழர்படை தோற்கடிக்கப் பட்டபின் கதிர்காமரை சிங்களம் நினைவுகூர்ந்ததா? தூக்கி வீசிவிட்டு வெற்றிக்கு தாமே காரணம் என பலதரப்பு உரிமை கோரியது.) தற்போது மகிந்தவுக்கு எதிராக இந்தக் கோமாளிகள் விடும் அறிக்கைகள் கேலித்தனமானவை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி காவாலி தங்கள் கருத்துக்கு..

அகதிமுகாம் ஒன்றுக்கு கதிர்காமரின் பெயர் இடப்பட்ட சூத்திரமும் அறிவோம் யாம்....

படம் நன்றாக இருக்கின்றது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் போராடம் இலங்கையில் போராடம் நாம் அனுபவித்ததை இப்போது சிங்களவர்கள் அனுபவிகிரர்கள். கணவனை கைது செய்த பொழுது அனோமா அழுதார்.

எத்தனை தமிழ் தாய்மார் தங்கள் பிள்ளைகழுகாக அழுத்திருபினம். இதை தான் முற்பகல் செயின் பிற்பகல் விளையும் எண்டு சொல்லுவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.