Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அணில் ஏறவிட்ட நாய் போல் பார்த்து நின்றதை நாம் மறக்க முடியாது - வடகிழக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு - இரா.துரைரத்தினம்

Featured Replies

தமிழர்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆயுதப்போராட்டம் கடந்த வருடம் மௌனிக்கப்பட்ட நிலையில் சிந்திய இரத்தங்கள் துன்பங்கள் விம்மல்கள் நீங்குவதற்கு முன்னரே தமிழ் மக்கள் முன் சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் திருவிழா ஆரம்பமாகியிருக்கிறது. இலங்கையின் வரலாற்றில் வடக்கு கிழக்கில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஈசல்கள் போல் சுயேச்சை அணிகளும் களமிறக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப்பெற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக திகழந்த தமிழரசுக்கட்சி இம்முறை தனது வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளுமா? கடந்த பொதுத்தேர்தலில் ஒற்றுமையாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று பல துருவங்களாக பிரிந்து நிற்பதன் மூலம் நன்மை அடையப்போவது யார்? குறிப்பாக 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு மாகாண தமிழர்கள் சந்தித்த மிகக்கசப்பான முடிவுகளைத்தான் இம்முறையும் சந்திக்கப்போகிறார்களா என்ற கேள்விகளே இப்பொழுது எழுந்துள்ளன.

வடக்கை விட கிழக்கில் தமிழர்களின் சனத்தொகை வீதத்தில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி இடப்பெயர்வு என்பன தமிழ் கட்சிகளின் வாக்குவங்கிகளில் சரிவு ஏற்பட்டு வரும் அதேவேளை தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பதால் வாக்குகள் சிதறிப்போவதை கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளை சேர்ந்தவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தனர். அந்த அனுபவத்தின் ஊடாக பாடம் கற்க மறுப்பவர்கள் போல இன்றும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுவதற்கு சில தமிழ் தரப்பினர் துணைபோகின்றனர் என்பதே பெரும்பாலான தமிழ் மக்களின் ஏக்கமாகும்.

2000ஆம் ஆண்டில் இருந்த சூழலை ஒத்ததாகவே இன்றைய தேர்தல் அமையப்போகிறது என்றே தேர்தல் களநிலவரங்களை அவதானிக்கின்ற போது உணரமுடிகிறது. 2004ஆம் ஆண்டில் இருந்த சூழல்கள் இப்போது இருக்க போவதில்லை

இந்த இரண்டு ஆண்டுகளுக்கும் இடையில் உள்ள சூழலில் அப்படி என்ன மாறுதல்கள் இருந்தன என்ற கேள்வி உங்களில் சிலருக்கு ஏற்படலாம். 2000ஆம் ஆண்டு தேர்தல் என்பது கிழக்கு மாகாணத்தமிழர்களுக்கு கசப்பான படிப்பினைகளை தந்த தேர்தல் என்று கூட சொல்லலாம்.

அந்த கசப்பான தேர்தல் முடிவுகளையும் இம்முறை எவ்வாறான முடிவை தமிழர்கள் பெறப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் தமிழர்களின் தலைநகரம் திருகோணமலை என்று தமிழர்களால் பெருமையாக சொல்லிக்கொள்கின்ற போதிலும் 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரு ஆசனங்களை பெற வேண்டிய தமிழர்கள் ஒரு ஆசனத்தைக்கூட பெற முடியாமல் அணில் ஏறவிட்ட நாய் போல் பார்த்து நின்றதை நாம் மறக்க முடியாது.

அந்த தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி 53860 வாக்குகளைப்பெற்று மூன்று ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 46700 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

இந்த தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ரெலோ ஈ.பி.டி.பி மற்றும் இரு தமிழ் சுயேச்சை அணிகள் என வாக்குகளை சிதறடித்தன் விளைவாக தமிழர்களின் தலைநகரம் என்று பெருமை பேசிக்கொள்ளும் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதியை கூட பெற்றுக்கொள்ளவில்லை. அரசியல் கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் என 20 அணிகள் அங்கு போட்டியிட்டிருந்தன.

நான்கு தமிழ் பிரதிநிதிகளையும் ஒரு முஸ்லீம் பிரதிநிதியையும் தெரிவு செய்யப்பட வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணி 54448 வாக்குகளைப்பெற்று இரு பிரதிநிதிகளையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் 53646 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி 29165 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பொதுஜன ஐக்கிய முன்னணி 16510 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

ஈ.பி.டி.பி ரெலோ புளொட் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுயேச்சை அணி என தமிழ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததன் விளைவாக தமிழர்களுக்கு வரவேண்டிய பிரதிநிதித்துவம் முஸ்லீம்களை சென்றடைந்தது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற அலி சாகிர் மௌலானா தமிழர்களின் வாக்குகளினாலேயே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் கூட பொதுஜன ஐக்கிய முன்னணி நான்கு ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 2 ஆசனங்களையும் சுயேச்சைக்குழு ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் என 23 குழுக்கள் போட்டியிட்ட வன்னி மாவட்டத்தில் ரெலோ 21765 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களையும். தேசிய ஐக்கிய முன்னணி 15837 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக்கட்சி 11545 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பொதுஜன ஐக்கிய முன்னணி 7837 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி ஈ.பி.டி.பி புளொட் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் மற்றும் நான்கு சுயேச்சைக்குழுக்கள் தனித்தனியாக போட்டியிட்டதன் விளைவாகவும் ஐக்கிய தேசியக்கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகியவற்றிற்கு தமிழர்கள் வாக்களித்ததன் விளைவாகவும் தமிழர்களுக்கான இரு பிரதிநிதித்துவத்தை சிங்களவர்களும் முஸ்லீம்களும் பங்கு போட்டுக்கொண்டனர்.

20 அணிகள் போட்டியிட்ட யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பி 41671 வாக்குகளைப்பெற்று 4 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக்கூட்டணி 32852 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 11431 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 10648 வாக்குகளைப்பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.

மிக நீண்டகாலத்திற்கு பின் தென்னிலங்கை கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது . எது எப்படி இருந்த போதிலும் இம்மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பதால் தமிழரின் பிரதிநிதித்துவம் வேறு ஒரு இனத்தவர்களுக்கு செல்லவில்லை.

ஆனால் யாழ். மாவட்டம் தவிர்ந்த வன்னி திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டிருந்தது. தமிழ் கட்சிகள் தங்களுக்குள் மோதிக்கொண்டு தனித்தனியாக போட்டி போட்டதன் விளைவாகவும் பேரினவாத கட்சிகளான பொதுஜன ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றிற்கு தமிழர்கள் வாக்களித்தன் விளைவாகவும் இந்த அவலம் ஏற்பட்டிருந்தது.

இதன் விளைவாகவே 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பின்னர் ஊடகவியலாளர் சிவராம் தலைமையிலான சிலர் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாகவே தமிழர் விடுதலைக்கூட்டணி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகள் இணைக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு 2001ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்ற போதிலும் 2004ஆம் ஆண்டு தேர்தலிலேயே அதன் முழுமையான அறுவடையை பெற முடிந்தது.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழாகி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக போய் விட்டதோ என்ற ஏக்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்தை வேண்டி நின்ற அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தமிழர் விடுதலைக்கூட்டணி புளொட் இணைந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி சிவாஜிலிங்கம் தலைமையிலான இடதுசாரி முன்னணி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஜே.வி.பியின் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சுயேச்சைக்குழுக்கள் என பல முனைப்போட்டியாக இருக்கப்போகும் வடக்கு கிழக்கு தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படுமா? வௌ;வேறு இனக்குழுக்களைக்கொண்ட கிழக்கு மற்றும் வன்னி மாவட்டங்களில் தமிழர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தை மற்றவர்களுக்கு தாரை வார்க்கப்போகிறார்களா? 2004ஆம் ஆண்டு தேர்தலை போலன்றி இம்முறை இக்கேள்விகளை பலமாக கேட்கவேண்டியிருக்கிறது.

யாழ்.மாவட்டத்தைப்பொறுத்தவரை வாக்குகள் பிரிக்கப்பட்டு பல கட்சிகளும் ஆசனங்களை பங்கு போட்டுக்கொண்டாலும் அதில் தெரிவு செய்யப்படப்படுபவர்கள் தமிழர்களாகத்தான் இருக்கப்போகிறார்கள். ஆனால் சிங்களக்கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி ஐக்கிய தேசியக்கட்சி போன்ற பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழர்களின் உரிமைகளைப்பறித்தெடுத்த சிங்கள தலைமைகளை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படலாம்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் பத்மினி சிதம்பரநாதன் சிறில் சிவாஜிலிங்கம் சிறிகாந்தா ஆகியோர் யாழ். மாவட்டத்தில் தாங்கள் தனியாக போட்டியிடுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப்பிரித்து தமிழ் பிரநிதித்துவத்தை இல்லாமல் செய்து அதை சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வழங்குவதற்கு துணைபோவதென்பது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்யும் வரலாற்றுத்துரோகமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் வடக்கு கிழக்கில் இடது சாரி முன்னணிக்கு தலைமை தாங்கும் சிவாஜிலங்கத்திற்கும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணிக்கும் கிழக்கு மாகாணத்தில் தாங்கள் ஒரு ஆசனத்தைக்கூட பெற மாட்டோம் என நன்றாகத்தெரியும்.

இதேபோன்று பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் வி;டுதலைப்புலிகள் கட்சிக்கும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் தமக்கு ஒரு ஆசனம் கூட கிடைக்காது என தெரிந்தும் தமிழ் வாக்குகளை பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கிறது.

இம்முறை சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டியிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் உண்மையில் வடக்கு கிழக்கு இணைப்பையும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் வேறு இனத்தவர்களுக்கு செல்லாது தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற இனப்பற்றும் இருக்குமாக இருந்தால் நிட்சயமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதிநிதித்துவதற்திற்கு வேட்டு வைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதித்துவத்தை பறித்து சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கொடுப்பதற்கு துணைபோயிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கம் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என பேசுவதற்கான அருகதையை இழந்துவிட்டார். இது கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு செய்யும் வரலாற்றுத்துரோகமாகும்.

ஜி.ஜி பொன்னம்பலம் மலையகத்தமிழர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கு துணைபோன துரோகத்தை வரலாறு இன்றும் சுட்டி நிற்பது போல அவரின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பறிப்பதற்கு இன்று முற்பட்டிருப்பதை கிழக்கு மாகாண மக்கள் வரலாற்றில் மன்னிக்க மாட்டார்கள். இந்த வேளையில் ஜி.ஜி.பொன்னம்பலம் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு செய்த ஒரு நன்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியது எமது கடமையாகும். 1970ம் ஆண்டுகளுக்கு முதல் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வடபகுதியில் தமிழரசுக்கட்சியுடன் போட்டியிட்டு வந்த போதிலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தனது கட்சி சார்பில் கிழக்கில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் தமிழரசுக்கட்சியும் ஒரேதொகுதியில் போட்டியிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டு வேறு ஒரு இனத்திற்கு சென்று விடும் என்ற காரணத்தினாலேயே அந்த வேளையில் அவர் அரசியல் விவேகத்துடன் நடந்து கொண்டார். அவரின் விவேகம் அவரின் பேரனான கஜேந்திரகுமாருக்கு வரவில்லையா அல்லது அது தெரிந்திருந்தும் கிழக்கு மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஆப்பு வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்தாரா என்பதற்கு அவர்தான் பதில் தர வேண்டும்.

திருகோணமலையில் தமிழர்களின் வாக்காளர் வீதம் வீழ்ச்சியடைந்து வருகிறது. 1963ஆம் ஆண்டில் தமிழர்கள் 36 வீதமாகவும் முஸ்லீம்கள் 29.4 வீதமாகவும் சிங்களவர்கள் 28.8 வீதமாகவும் காணப்பட்டனர். ஆனால் 2007ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் 45.4 வீதமாகவும் தமிழர்கள் 28.6 வீதமாகவும் சிங்களவர்கள் 25.4 வீதமாகவும் காணப்படுகின்றனர். தற்போது மூதூர் இடப்பெயர்வு ஈச்சலம்பத்தை இடப்பெயர்வு சிங்களவர்களின் குடியேற்ற அதிகரிப்பு காரணமாகவும் முஸ்லீம்களின் சனப்பெருக்கம் காரணமாகவும் தமிழர்களின் வீதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக போட்டியிடுவதும் சிங்கள கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிப்பதும் கடந்த தேர்தலைப்போல இரு ஆசனங்களைப்பெறுவது என்பது முடியாத காரியமாகும்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு தமிழ் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்கும் பட்சத்திலேயே ஒரு ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியும். 2001 2004 ஆம் ஆண்டுகளில் இந்த ஒற்றுமை பேணப்பட்ட காரணத்தாலேயே தமிழர் ஒருவர் இம்மாவட்டத்தில் தெரிவாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இம்முறை தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு மேலதிகமாக சிவாஜிலிங்கத்தின் இடதுசாரி முன்னணி ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக்கூட்டணி என பல கட்சிகள் போட்டியிடுவது தமிழர் பிரதிநிதித்துவத்தை கேள்விக்குறியாக்கிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு புளொட் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இடதுசாரி முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் உட்பட பல கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

2000ஆம் ஆண்டில் தமிழ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு வாக்குகளை பிரித்ததாலும் ஐக்கிய தேசியக்கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி போன்ற கட்சிகளுக்கு தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாகவும் தமிழருக்கு கிடைக்க வேண்டிய இரு ஆசனங்களை அவர்கள் இழக்க நேரிட்டது. அத்தேர்தல் முடிவை ஒத்த அபாயம் ஒன்றே சிவாஜிலிங்கம் மற்றும் சிங்கள கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களின் செயல்களால் தோன்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழர்கள் போட்டியிடுகின்ற போதிலும் அக்கட்சியில் போட்டியிடும் ஹிஸ்புல்லா மற்றும் அமிர்அலி போன்றவர்களே அதிக விருப்பு வாக்குகளை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அக்கட்சியில் போட்டியிடும் தங்கேஸ்வரி கணேசமூர்த்தி போன்றவர்களால் முஸ்லீம் வேட்பாளர்களை விட அதிக விருப்புவாக்குகளை பெறுவது என்பது இயலாத காரியம். தமிழ் வேட்பாளர்களால் வாக்குகளை எடுத்து முஸ்லீம் வேட்பாளர்களை வெல்ல வைக்க முடியுமே அன்றி வெற்றிபெறுவது என்பது நடக்காத காரியம். காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவுக்கு 25ஆயிரம் வாக்குகளும் ஓட்டமாவடியில் அமிர் அலிக்கு 20 ஆயிரம் வாக்குகளும் கிடைக்க கூடிய நிலையே காணப்படுகிறது. அவர்களை விட அதிக வாக்கை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களால் பெற முடியாது.

எனவே நடைபெறப்போகும் தேர்தல் என்பது கிழக்கு மாகாண மக்களுக்கு பல படிப்பினைகளை தரப்போகிறது என்பது மட்டும் உண்மை. வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என பெரிதாக பேசிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கம் ஆகியோர் கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதித்துவத்தை பறித்து சிங்களவர்களுக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ கொடுப்பதற்கு துணைபோவது கிழக்கு தமிழ் மக்களுக்கு செய்யும் வரலாற்று துரோகமாகும்.

கடந்த கால வரலாற்றை உணர்ந்து கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் ஒற்றுமையோடு செயற்பட்டு தங்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்ப்பிரதிநிதித்துவம் என்பது பிரச்சனைகளைத் தீ|ர்ப்பதற்கோ,எமது மக்களை விடுவிப்பதற்கோ ஆன ஒரு பாதை என்பதுபோல இங்குசிலர் எழுதியும் கனவுகள்கண்டும் வருகின்றனர்.கிழக்கில் முழுக்கவும் தமிழர்பிரதிநித்துவம் கிடைத்தால்மட்டும் இவர்கள் என்னத்ததைச் செய்துகிழித்துவிடப் போகிறார்கள்.

இப்போதுபோலவே டெல்லிக்கு காவடி எடுத்து கொஞ்சம்கொஞ்சமாக மக்கள்அழிப்புக்கு துணைபோக போகிறார்கள்.அல்லது

சிங்களவனுக்கு கூசாக்காவியே பா.உ பதவிக்காலத்தை கழித்துவிட்டுபோய்விடுவார்கள்.

குச்சவெளிபோய்விட்டது..அன்புவழிபுரம் போய்க்கொண்டு இருக்கிறது...பாலையுற்றின் மக்கள் திருமலைநகரை நோக்கி குடிபெயர்ந்து வருகின்றனர்.இப்போது இருக்கும் --- சம்பந்தனுக்கு இதைப்பற்றி பேசவோ(பேசி என்ன --) கண்டிக்கவோ நேரம் இல்லை.

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதப்பட்டது நீக்கப்படுகின்றது

2004ஆம் ஆண்டு 22 ஆசனங்களைப்பெற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மூன்றாவது பலம்பொருந்திய கட்சியாக திகழந்த தமிழரசுக்கட்சி இம்முறை தனது வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்ளுமா? கடந்த பொதுத்தேர்தலில் ஒற்றுமையாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று பல துருவங்களாக பிரிந்து நிற்பதன் மூலம் நன்மை அடையப்போவது யார்? குறிப்பாக 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு மாகாண தமிழர்கள் சந்தித்த மிகக்கசப்பான முடிவுகளைத்தான் இம்முறையும் சந்திக்கப்போகிறார்களா என்ற கேள்விகளே இப்பொழுது எழுந்துள்ளன.

ஒற்றுமை பற்றி வெற்றுக்கோசம் போடும் கட்டுரையாளர் கடந்த வருடம் ஒரு தொலைக்காட்சியில், தொலைபேசி நிகழ்ச்சியூடாக புலத்து அமைப்புகளிடையே முடிச்சுப்போட்டு, நெருப்பு மூட்டி குழு நிலைவாதிகளுக்குத் துணைபோணதை நாம் மறக்கவில்லை,

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் எழுதியவை அனைத்தும் உண்மை.

ஆனால் கூட்டமைப்புக்கு குறிப்பாக சம்பந்தருக்கு

இதைப்பற்றி யோசிக்க நேரம் இருக்கவில்லையா?

கண் கெட்ட பின்னர் சூரிய உதயும்............

இந்தக்கட்டுரை சம்பந்தருக்கே அர்ப்பணம்.

வாத்தியார்

*************

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளர் ஏதோ ஒருவகையில் தமிழர் பிரதினித்துவத்தை அறவே ஒழிக்க திட்டமிடுகிறார் போல் தெரிகிறது. ஏனெனில் கூத்தமைப்பு அடித்த

குத்துக்கரணம் தமிழன் வாழ்வில் மறக்க முடியாத கரும்புள்ளி.மாவீரர் தியாகத்தையே மண் தோண்டிப் புதைத்த கயவர் கூட்டம்.சுயநலத்தையே முன்நிறுத்தி தமிழர் வாழ்வையே சீரழித்த சுயனநலக் கூட்டம் அவர்களுக்கு இவர் வக்காலாத்து வாங்குவது ஏனென்று விளங்கவில்லை.மக்கள் தீர்ப்பு எதுவோ அதை ஏற்போம்.பம்பந்தர் ,சோனாதியின் பட்டு வேட்டி நடிப்பு விரைவில் கிழியும்.

கூட்டமைப்பின் தான் தோன்றித்தனம் இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவிலாறுமுதல் முள்ளிவாய்க்கால்வரை நடந்த கொலைகளுக்குப் பிறகும் இந்தியாதான் விடுதலையை எடுத்துத்துரும் என்று எழுதியும் செயற்பட்டுவரும் துரைரெத்தினம் சம்பந்தருக்கு சார்பாக எழுதுவது சம்பந்தர் இந்தியாவின்ஆள் என்பதாலேயே.

துnரைரெத்தினம் கடந்தவருடம் இனப்படுகொலை இருந்தபோது ஊடகங்களில் அடித்தகுத்துக்கரணங்களுக்கும் கணக்கில்லை.

இப்ப இது வேறை....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.