Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம்

Featured Replies

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விருப்பம்

பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்காவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவர் செனட்டர் பொன் கசே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அமெரிக்காவின் தென்ஆசிய பிராந்திய வெளிவிவகார உறவுகளுக்கான துணைக்குழுவின் தலைவராகிய நான் சிறீலங்காவில் நடைபெற்றுவந்த துன்பமான போரை ஆராய்ந்து வந்துள்ளேன்.

இடம்பெயர்ந்த மக்களின் நெருக்கடிகள் தொடர்பாகவும், போரின் பின்னரான அபிவிருத்திகள் குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். போருக்கு பின்னரான நடவடிக்கைகளில் சிறீலங்காவில் தொடர்ந்து ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்க நாம் ஆவலாக உள்ளோம்.

சிறீலங்கா போரில் இருந்து மீண்டு வருகையில், நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழ் சமூகம் அதன் முன்னேற்றங்களில் கணிசமான பங்களிப்பை வழங்கவேண்டும். சிறீலங்காவின் ஜனநாயக வழிகளுக்கு ஆதரவளிக்கும் உலகத் தமிழர் பேரவைக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.

குறிப்பாக நாட்டின் நெருக்கடியான சமயத்தில் அவர்கள் இதனை மேற்கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வன்முறைகள், அரசியல் அடக்குமுறைகள் போன்றவற்றை விடுத்து சிறீலங்கா மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவார்கள் என நான் நம்புகிறேன்.

அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டு சபையின் பணிகளையும் நான் பாராட்டுகிறேன். சிறீலங்காவில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து வெளியுலகின் கவனத்திற்கு அவர்கள் கொண்டுவந்துள்ளதுடன், அமெரிக்க கொள்கை வகுப்பளர்களுக்கும் அதனை உணர்த்தியுள்ளனர்.

நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும் என விரும்புகிறேன். பிரித்தானியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.pathivu.com/news/5697/54//d,view.aspx

ஆங்கில மூலம்

http://casey.senate.gov/newsroom/press/release/?id=09423EDC-AA53-492F-B19B-A5C364227677

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ஒருங்கிணைந்து இருந்தால் 50000மக்களையும் உயிரான அமைப்பையும் காத்திருக்கலாமே.

அதற்குபின்னர்தான் ஒருங்கிணைவது என்பது அமெரிக்கதமிழ் 'லொபி' யுடனான உடன்படிக்கையோ?

பலமற்றவர்களுடன் ஒருத்தனும் ஒருங்கிணையமாட்டான்.

அப்படியாரும் சேர்ந்தால் அவன் தன்னுடைய கையின் ரத்தக்கறைகளை கழுவவே ஒருங்கிணைகிறான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர்தமிழர்களுடன் ஒருங்கிணைவதற்கு முதலில் அமெரிக்காவில் இன்னும் எஞ்சி இருக்கின்ற சிவப்பிந்தியமக்களுடன் அமெரிக்கா ஒன்றிணையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவன் போனவன் அவன் இவனுடனெல்லாம் ஒருங்கிணைய முடியுமென்றால் ஏன் எங்கள் உறவுகளெல்லாம் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைய முடியாது. ஐரோப்பாவில் எத்தனையோ ஜனநாயக முடியாட்சிகள் காலங்காலமாக முன்னுதாரணத்துடன் செயற்பட்டு அங்கு நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களெல்லாம் வாழ்ந்து வர எங்களுக்கு அவர்கள் கற்றுத்தந்ததெல்லாம்-தவறு நாங்கள் விரும்பி அவர்களிடம் கற்றுக்கொண்டதெல்லாம் ஜனநாயக சர்வாதிகாரம். கடந்த காலங்களில் ஆசியாவிலும் ஆபிரீக்கக்கண்டத்திலும் வரலாறுகண்ட தான்தோன்றித்தனமான காட்டுமிராண்டி சர்வாதிகாரிகளின் காலம் போய் இன்று ஜனநாயக கோட்பாடுகளை அனுசரிக்கும் நாடுகளாக தங்களை தங்கமுலாமிட்டு காட்டிக்கொண்டு உள்ளளவில் கொடிய அடக்குமுறையையும், இனவாதமும், இனஅழிப்பும், ஆட்சித் துஸ்பிரயோகமும், கஜானாவை கையாடுதலையும் இங்கு ஆட்சியிலிருக்கும் ஜனநாயக சர்வாதிகாரிகள் ஒழுங்காகவே நிறைவேற்றிக்கொண்டிருக்க ஐநாவும் - ஜனநாயகத்தைப்பற்றி கொக்கரிக்கும் இதர வல்லரசு நாடுகளும் கைகட்டி, கண்பொத்தி, வாய்மூடி அதற்கு காவலிருக்கிறார்கள். சிறிலங்காவிலும் மகிந்த உட்பட அனைவரும் ஜனநாயக சர்வாதிகாரிகளே. ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிப்பதாக சர்வதேச உடன்பாடுகளுக்கமைய ஜனநாய சலுகைகளையும் நிதியுதவிகளையும் பெற்றுக்கொண்டு யாராவது தட்டிக்கேட்டால் நடப்பது உள்நாட்டு விடயம் என்று சொல்லுவதும் அல்லது வல்லரசுகளை நண்பர்களாக்கி வைத்தக்கொண்டு காய்களை நகர்த்துவதையும் இந்த ஜனநாயக-சர்வாதிகாரிகள் இலாவகமாகவே கையாண்டுகொண்டிருக்கிறார்கள். இன்று இல்லையென்றால் இனி என்றுமேயில்லை - இதுதான் காலம் - உலகத் தமிழர்களே கைகோர்ந்து இணையுங்கள்- எங்கள் தலைவிதியை நாங்களே நிர்ணயிப்போம் வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகு தமிழர்கள் பக்கமும் சாய்வோம் என்பதை லேசாக சொல்லி வருகின்றது.இந்தியா பிரபாகரன் பொட்டம்மான் சாகவில்லை தலைமறைவாக இருக்கின்றார் என்று சொல்கின்றது.கோர்டன் பிறவுணின் சந்திப்பு.என்னுமொரு புறம் புத்த விகாரைகளை புனரமைக்க நிதியுதவி. அவ்வப்போது போற்குற்ற விசாரணை என்ற பேச்சு. ஒட்டுமொத்தமாக இலங்கை அரசை தம்பக்கம் வைத்திருக்க பலவகையில் முனைகின்றார்கள். தமிழர்கள் பக்கம் சாய்ந்து விடுவோம் என்று இலங்கை அரசை அச்சுறுத்துகின்றார்கள். தமிழர்களை தொடர்ந்து தமது சுயநலன்களுக்காக பயன்படுத்த முற்படுகின்றார்களே தவிர வேறொன்றும் இல்லை. ஒருவகையில் தமிழர்களை இவ்வாறு பயன்படுத்த முற்படுவது தான் தமிழர்களுக்கு கிடைக்கும் அதி உச்சமான வாய்பாகவும் கருத முடியும். இவ்வாறான சந்தர்ப்பங்களை தமிழர் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதே முக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ஒருங்கிணைந்து இருந்தால் 50000மக்களையும் உயிரான அமைப்பையும் காத்திருக்கலாமே.

அமெரிக்காவுக்கு தமிழ்மக்களிடம் ஏதோ ஒரு தேவை இருக்கிறது போல தெரிகிறது. அதனை கொடுப்பதற்கு தமிழ்மக்கள் முள்ளிவாய்க்காலுக்கு முதல் உடன்படாததனால் அமெரிக்கா தமிழ்மக்களை காப்பாற்ற செலவளிக்க முன்வரவில்லை.

அதற்குபின்னர்தான் ஒருங்கிணைவது என்பது அமெரிக்கதமிழ் 'லொபி' யுடனான உடன்படிக்கையோ?

லொபி தகவல்களை பரிமாறி உறவுகளை ஏற்படுத்த பயன்படுகிறது. இருபகுதியும் ஒருவரின் தேவைகளை மற்றவர் புரிந்துகொண்டு உறவுகளை உறுதிப்படுத்தி வளர்த்து கொள்வது முக்கியமானது.

பலமற்றவர்களுடன் ஒருத்தனும் ஒருங்கிணையமாட்டான்.

பலம் பல துறைகளில் இருக்கலாம். உதாரணமாக, தமிழ்மக்களிடம் இன்று ஆயுதபலம் சிங்களவர்களிலும் பார்க்க மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் அரசியல், தொழில்நுட்ப, பொருளாதார பலத்தில் சர்வதேச அளவில் தமிழ்மக்கள் சிங்களவர்களிலும் பார்க்க மேலோங்கி இருக்கிறார்கள். இந்த பலங்களில் சில அமெரிக்காவுக்கு உதவியாக இருக்கலாம். அதை அமெரிக்காவும் எதிர்பார்க்க கூடும். இதை தெளிவாக அறிந்து செயற்பட வேண்டும்.

ஜூட்,

தமிழரிடம் எந்தப் பலமும் இல்லை.பலம் இருப்பது சீனாவிடம்.அதற்காகத் தான் இந்தக் கூத்தெல்லாம்.தமிழர்கள் இந்தியா எது செய்தாலும் நாம் அதன் காலடியில் தான் என்று காலாம் காலமக நிரூபித்து வருவதால் தான் தமிழரை இந்தியாவும் அதன் கூட்டாளிகளான மேற்குலகமும் அவ்வப் போது கறிவேப்பிலையாகாப்பாவித்து வருகின்றன.என்று தமிழன் சிங்களவரைப் போல் சர்வதேச பிராந்திய வல்லதிக்கப் போட்டியைத் தனக்குச் சாதகமாகாப் பாவிக்கிறானோ அபோது தான் அவனால் தனக்கான வெற்ரியைப் பெற்றுக் கொள்ள முடியும். நீங்கள் எவ்வளவு தான் எங்களுக்கு விரோதமாகாச் செயற்பட்டாலும் நாங்கள் உங்கள் காலடிகளைத் தழுஇத் தன கிடப்போம் என்று சொல்லும் எந்த இனமும் இந்தியாவின் காலடியில் தான் கிடக்கும்.சிங்களவன் எவருக்கும் அஞ்சாமால் எவருடனும் உறவைப்பேணுகிறான்,அதனால் தான் அவனால் எந்தப்பெரிய வல்லாதிக்கச் சக்தியையும் எதிர்க்க முடிகிறது. நாங்கள் இந்திய மேற்குலக மாயையில் இருக்கும் மட்டும் எப்போதுமே அவர்களின் கறிவேப்பிலை தான்.

நாம் இதனைப் புரிந்து கொண்டு எங்களை மாற்றா விட்டால் நாம் என்றும் விடுதலை அடையப்போவதில்லை.தமிழர்களில் ஒரு பகுதியினராவாது சீனாவுடனும் இந்தியாவில் இயங்கும் பல்வேறு இனக் குழுக்களுடனும் மாவோக்களுடனும் இணைத்து போராட வேண்டும்.அதனைக் கண்டு இந்தியாவும் மேற்குலகமும் பயப்பிட வேண்டும்.இராஜதந்திரம் என்பது அது தான்.

ஆனால் தமிழர்கள் மத்தியில் பெட்டிக்கு வெளியால் சிந்திக்கும் திறன் கிடையாது என்பதே காலா காலமாக தமிழர் தலமைகள் விட்டு வரும் பெரும் பிழையாக் இருந்து வந்துள்ளது. நாம் உலக அரசியலைப் பார்க்காது பிராந்திய அரசியலைப்பார்க்காது, சிங்களவன் அடிக்கிறான் என்று மட்டுமே பார்த்துக் கொண்டு நிற்பதலையே எம்மால் தந்திரோபாயமாகச் செயலாற்ற முடியாமால்,எப்போதுமே யாரேனும் தயவில் நின்று அரசியல் செய்ய விழைகிறோம்.சம்பந்தரும் கூட்டமைப்பும் அதே பிழைகளேயே மீண்டும் மீண்டும் விட்டு வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

தமிழரிடம் எந்தப் பலமும் இல்லை.பலம் இருப்பது சீனாவிடம்.

...

தமிழர்களில் ஒரு பகுதியினராவாது சீனாவுடனும் இந்தியாவில் இயங்கும் பல்வேறு இனக் குழுக்களுடனும் மாவோக்களுடனும் இணைத்து போராட வேண்டும்.அதனைக் கண்டு இந்தியாவும் மேற்குலகமும் பயப்பிட வேண்டும்.இராஜதந்திரம் என்பது அது தான்.

எந்த பலமும் தமிழரிடம் இல்லாவிட்டால், சீனாவுக்கு தமிழரை எதற்கு தேவைப்பட போகிறது? நமது பலங்களையும், பலவீனங்களையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் இந்திய மேற்குலக மாயையில் இருக்கும் மட்டும் எப்போதுமே அவர்களின் கறிவேப்பிலை தான்.

இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து வெளிப்படையாகவே சிறிலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன. தென்னாபிரிக்க பிரதிநிதியை சீனா குறிப்பாக தனது முதலீகளையும், வணிக உறவுகளையும் காட்டி மிரட்டி போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் தான் முன்னின்று போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையை இன்றும் கோரி வருகின்றன. இறுதி யுத்தத்தில் சீனாவும், இந்தியாவும் ஒன்றாக நின்று, சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொல்ல உதவின. மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதங்களோ, வெடிபொருட்களோ வழங்கவில்லை. மாறாக பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் டேவிட் மில்பிராண்ட், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் கொழும்புக்கு சென்று போரை நிறுத்துமாறும், தாம் முள்ளிவாய்க்காலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்றும் கோத்தபாயவுடன் வாக்குவாதப்பட்டனர்.

சீனா நமது நேசசக்தியாக செயற்படும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமாக எனக்கு தோன்றவில்லை. இந்தியாவும் சீனாவும் ஒன்றாக நின்று மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் போட்டி நாடுகளாக பார்ப்பதாகவே தெரிகிறது.

Edited by Jude

quote name='Jude' date='28 February 2010 - 02:28 PM' timestamp='1267367324' post='571436']

எந்த பலமும் தமிழரிடம் இல்லாவிட்டால், சீனாவுக்கு தமிழரை எதற்கு தேவைப்பட போகிறது? நமது பலங்களையும், பலவீனங்களையும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து வெளிப்படையாகவே சிறிலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எதிராக வாக்களித்திருந்தன. தென்னாபிரிக்க பிரதிநிதியை சீனா குறிப்பாக தனது முதலீகளையும், வணிக உறவுகளையும் காட்டி மிரட்டி போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எதிராக வாக்களிக்க வைத்தது. மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் தான் முன்னின்று போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையை இன்றும் கோரி வருகின்றன. இறுதி யுத்தத்தில் சீனாவும், இந்தியாவும் ஒன்றாக நின்று, சிறிலங்காவுக்கு ஆயுதங்களை வழங்கி மக்களை கொல்ல உதவின. மேற்கு நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதங்களோ, வெடிபொருட்களோ வழங்கவில்லை. மாறாக பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் டேவிட் மில்பிராண்ட், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் ஆகியோர் கொழும்புக்கு சென்று போரை நிறுத்துமாறும், தாம் முள்ளிவாய்க்காலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்றும் கோத்தபாயவுடன் வாக்குவாதப்பட்டனர்.

சீனா நமது நேசசக்தியாக செயற்படும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமாக எனக்கு தோன்றவில்லை. இந்தியாவும் சீனாவும் ஒன்றாக நின்று மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் போட்டி நாடுகளாக பார்ப்பதாகவே தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இந்தியாவுக்கு ஏன் தமிழர் தேவைப்படுகிறதோ, அதே தேவைகள் சீனாவுக்கும் உண்டு.இந்தியாவை நெருக்கடிக்குள் வைத்திருக்க சீனாவுக்கு தமிழரின் உதவி தேவை.

இந்தியாவை நெருக்கடிக்குள் வைத்திருக்க தமிழரை பயன்படுத்த வேண்டிய தேவை சீனாவுக்கு இருந்திருந்தால் சீனா தமிழருக்கு எப்போதோ உதவியிருக்கும். அவ்வாறான தேவை சீனாவுக்கு இருப்பதாக தெரியவில்லை.

எல்லா வழிகளாலும் பார்த்தாலும் எல்லோரும் தமிழரைப் பாவிப்பது சீனாவை அடக்க.இந்த நிலையில் தமிழர் தமது நலங்களைப் பாதுகாக்க சீனாவுடன் கூட்டுச் சேர்வதன் மூலம், எமது நலன் சார் அரசியலை முன் நகர்த்தலாம்.சீனாவுடன் நாம் நட்புறவை வளர்க்க வெளிக்கிட மேற்குலகம், இந்தியாவை மேலும் அழுத்ததுக்கு உள்ளாக்கும்.

சீனாவுடன் உறவை வளர்க்க நாம் முயல்வது இந்தியாவுக்கும் நெருக்கடிகளை உருவாக்கும்.இத்தகைய நகர்வே தமிழரின் நலன் சார் அரசியலை முன் நகர்த்தும்.

சீனாவுடன் கூட்டு சேர்ந்து செயற்பட சிறிலங்கா அரசே தயாராக இருக்கும் நிலையில், சிறிலங்கா அரசுடன் இணங்கி வேலை செய்யும் டக்ளஸ் சீனாவுடன் சீன மொழியில் தொடர்புகளை பேணிவரும் நிலையில், சீனாவுக்கு வேறு தமிழர்கள் தேவைப்படுவதாக தெரியவில்லை.

சீனா சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றது,இந்தியாவ்சி எதிர்பார்த்து சீனாவின் நகர்வுகளுக்குப் பதில் நகர்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.சினாவை நோக்கி மகிந்தவே சென்றார், முன்னைய அரசுகளை விட இதனை அவர் மிக அவதானமாகவே மேற்கொண்டார்.எமக்கானா சாதகமான் சூழலை நாமே ஏர்படுத்த வேண்டும்,அதனையே இங்கு வலியுறுதுகிறேன்.

நாடு கடந்த தமீழழ அரசாவது இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.சீனாவின் தாக்கம் எத்தகையது என்பதை நேபாளத்தில் இருந்து கற்றுக் கொள்ளலாம். நாம் இந்திய மேற்குலக மாயையில் இருந்து விடுபடும் போதே எம்மால் உண்மையான நலன் சார் நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.இந்தியா அன்றி நாம் ஒன்றும் செய்ய முடியாது என்னும் கருதுகோளுடன் ஆரம்பிக்கும் எந்த நகர்வும், கடைசியில் இந்திய நலன் சார் நிலைக்குள்ளாகவே தமிழரைத் தள்ளும்.அது என்றுமே தன்னாட்ச்சி, தேசியம் சுயனிர்ணயம் என்பதன் அடிப்படையில் அமையப் போவதில்லை.சம்பந்தர் கூடடம் இன்று வந்தடைந்திருக்கும் நிலை இதுவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.