Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேசக்கரங்களை நீட்டுங்கள் யாழ்கள உறவுகளே.

Featured Replies

  • Replies 94
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு போராளிக்குடும்பத்தின் கதை இங்கு அழுத்தி கேழுங்கள்..

தடுப்பில் உள்ள தனது கணவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துக் கண்ணீரோடு வாழும் தாயின் குரல் இது. அம்மாக்களின் கண்ணீரால் நிரம்பிக்கிடக்கிறது உலகம். யுத்தமும் அது தந்த பாதிப்புகளும் உலகில் குழந்தைகளையும் அம்மாக்களையுமே அனாதைகளாக்கிப் போகிறது. இன்று கதறல்களும் கண்ணீரும் நிறைந்து காணமல் போனோரின் வரிசை எண்ணுக்கணக்கின்றி நீண்டு கிடக்கிறது. எழுதப்படாத விதியாய் இவர்கள் வாழ்வு துயரங்களால் நிறைகிறது.

Edited by sathiri

இந்தக்கதைகளை நாங்கள் கேட்டு என்ன செய்கிறது. கேட்க வேண்டிய ஆக்கள் வேற ஏதோ செய்கிறதில மினக்கட்டுக்கொண்டு இருக்கறீனம் போல தெரிகிது.

உங்கள் மனித நேயப் பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனித நேயப் பணிகளுக்கு வாழ்த்துக்கள்.

ஆராவமுதன்,

நீங்களும் நேசக்கரத்துடன் இணைவதன் ஊடாக அந்த மக்களுக்கான தேவைகளை இன்னும் பூர்த்திசெய்யலாம். தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு நேசக்கரத்தை அறிமுகம் செய்யுங்கள். தங்களை நேசக்கரத்தோடு இணைய அழைக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இழப்புக்களுடன் மன அழுத்ததற்கும் உள்ளான ஒருவர் அல்லது இருவரை பார்த்திருப்பீர்கள்.ஆனால் இங்கு ஒரு பாடசாலையின் அதிபர் அதன் இருநூறிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இரண்டாயிரம் மாணவ மாணவியர் என்று ஒரு பெரிய கல்விச் சமுதாயமே இழப்புக்களுடனும் மன அழுத்தங்களுடனும் வாழ்ந்து வருகின்றனர்.இங்கு தற்சமயம் உள்ள அதிபரில் தொடங்கி ஆசிரியர்கள் கடைசி வகுப்பு மாணவர்கள் என்று அனைவருமே இறுதி யுத்தத்தில் அத்தனையையும் இழந்து தங்கள் கல்வியை மட்டுமே சொத்தாக எடுத்து வந்தவர்கள். அத்தனை இழப்புகள் சோகங்களிற்கு மத்தியிலும் கல்வியை தொடர விரும்பிய மாணவர்களிற்கு மட்டுமல்ல கல்வியை வளங்க முன்வந்த இடம் பெயர்ந்த ஆசிரியர்களிற்கும் வவுனியாவின் பிரபலமான 7 பாடசாலைகளின் கதவுகளும் பூட்டிக்கொண்டன.வந்தவரையெல்லாம் வாழவைத்த வளமான வன்னி மண்ணின் சொந்தக்காரர்களிற்கு வந்த இடத்தில் கிடைத்தெல்லாம் வசைச்சொற்கள் மட்டுமே.அத்தனையையும் தாங்கி அனாதையாய் நின்றவர்களிற்குக் கைகொடுத்தது காமினி மகாவித்தியாலம் மட்டும்தான். இங்கு தற்சமயம் தங்கள் உடல் அவயவங்களையும் பெற்றோர்களையும் இழந்துபோன 84 மாணவர்களிற்கான கல்வி அடிப்படை வசதிகளையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இன்று அந்த பாடசாலை மாணவர்களின் நிலைமைபற்றி அதன் அதிபர் திரு.ரங்கநாதன் அவர்களிடமே கேட்போம்.

ஆராவமுதன்,

நீங்களும் நேசக்கரத்துடன் இணைவதன் ஊடாக அந்த மக்களுக்கான தேவைகளை இன்னும் பூர்த்திசெய்யலாம். தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு நேசக்கரத்தை அறிமுகம் செய்யுங்கள். தங்களை நேசக்கரத்தோடு இணைய அழைக்கிறோம்.

திருமலையில், வவுனியாவில் இடம்பெயர்ந்த எனது உறவினர் சிலருக்கு சிறு உதவிகள் செய்து வருகிறேன். சில பொறுப்புக்களை நிறைவேற்றிய பின் உங்களுடன் இணையலாம். கூடிய விரைவில் உங்களுடன் இணைய முடியும் என நம்புகிறேன்.

Edited by ஆராவமுதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்

போக்குவரத்து 100ரூபாய்

உடை மற்றும் உள்ளாடைகள் 2400ரூபாய்

மொத்தம் 3000ரூபாய்

ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்

போக்குவரத்து 100ரூபாய்

உடை மற்றும் உள்ளாடைகள் 2400ரூபாய்

மொத்தம் 3000ரூபாய்

10 மாணவர்களுக்கான பணத்தினை நான் தருகின்றேன்

பிரான்சில் எங்கு கொடுக்கணும் என்று சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு உங்களிற்கு தனிமடல் போட்டுள்ளேன் பாருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பதின்மூன்று வயதில் எட்டாவது வகுப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு போராட்டத்திற்காக போனான். அவனது இருபத்தியொரு வருடப் போராட்டத்தில் அதிரடிப்பிரிவு. அரசியல்பிவு கரும்புலி உளவுப்பரிவு என பல பிரிவுகளிலும் பணியாற்றி பல தடைவைகள் காயமடைந்து உடல் ஊனமாகிப்போய் கடந்த வருடம் இறுதியுத்தத்தில் முள்ளிவாய்காலில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு ஒருவருடகாலம் கடும் சித்திரவதைகளுடன் சிறை வாழ்வை கழித்தவன் அவனது உடல் ஊனம் காரணமாக வெளியே விடப்பட்டான்.வெளியில் வந்தவனை அவனது தாயார் சகோதரர்களே ஏற்றுக்கொள்ளாமல் துரத்திவிட மன நினையில் பாதிப்படைந்து தற்கொலைக்கும் முயன்றான்..அதிலிருந்தும் தப்பி வவுனியா பஸ்நிலையத்தில படுத்துற்ங்கி வாழ்வை கழித்துக்கொண்டிருந்தவன் நேசக்கரத்துடன் தொடர்பை ஏற்படுத்தினான். நேசக்கரம் அவனிற்கான ஆரம்ப உதவிகளை வழங்கிருந்தது. ஆனால் மனஅழுத்தத்தால் பாதிக்கபட்டு தனக்கு வாழ விருப்பம் இல்லை எனவே தற்கொலை செய்யப்போகிறேன் என்று நேச்கரம் தொடர்பாளர் சாந்தி அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான்..உடனடியாகவே நேசக்கரம் அவனை பொறுப்பெடுத்து அவனிற்கான வைத்திய மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அவனது நிலையை அவனது குரலியே கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..

மீண்டும் தொடரும் யாழ் நேசக்கர அமைப்பை பார்த்ததில்

மிக்க மகிழ்ச்சி !!தொடரும் நேசத்தை கரங்கள் பற்றி தொடரும்

பணி தொடர நானும் இணைந்து கொள்கின்றேன் !!எனி எந்த சூழ்நிலையிலும்

முறிந்திடாது மெலும் மெலும் நீங்கள் வளர வேண்டும் என்று வாழ்த்துவதோடு

அடிக்கடி வர முடியாத படியால் தாழ்மையுடன் ஒர் விண்ணப்பம்

விபரத்தை தனிமடலில் தந்து உதவிசெய்யவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்

போக்குவரத்து 100 ரூபாய்

உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்

மொத்தம் 3000 ரூபாய்

ஆரம்பகட்ட உதவிகள் 84 மாணவ மாணவியரிற்குமான மொத்ததொகை 252000.00 ரூபாய்

5-1.jpg

6.jpg

7.jpg

8.jpg

DSC00358.jpg

1-2.png

DSC00369.jpg

tamilschool_vavunia03.jpg

உதவ விரும்புவர்கள் நேசக்கரத்துடன் மின்னஞ்சல் முலமாகவோ அல்லது தொ.பே மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்..

இங்குள்ள பிள்ளைகளின் விபரங்கள் மற்றும் படங்களை நேசக்கரத்தின் அனுமதியின்றி வேறு அமைப்புக்களோ அல்லது தனி நபர்களோ பயன்படுத்தி மேசடிகளில் ஈடுபட்டால் நேச்கரம் அமைப்பு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கும் என்பதனை அறியத் தருகின்றோம்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொடரும் யாழ் நேசக்கர அமைப்பை பார்த்ததில்

மிக்க மகிழ்ச்சி !!தொடரும் நேசத்தை கரங்கள் பற்றி தொடரும்

பணி தொடர நானும் இணைந்து கொள்கின்றேன் !!எனி எந்த சூழ்நிலையிலும்

முறிந்திடாது மெலும் மெலும் நீங்கள் வளர வேண்டும் என்று வாழ்த்துவதோடு

அடிக்கடி வர முடியாத படியால் தாழ்மையுடன் ஒர் விண்ணப்பம்

விபரத்தை தனிமடலில் தந்து உதவிசெய்யவும்

கஜந்தி,

மீண்டும் நேசக்கரத்தோடு இணைவதில் மகிழ்ச்சி. நேசக்கரம் 2010 இலிருந்து பதிவுபெற்ற அமைப்பாக விரிவாக்கம் பெற்றுள்ளது. உங்கள் தனிமடலுக்கு விபரங்கள் அனுப்புகிறேன். நேரம் கிடைக்கிற போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் தனிமலில் எழுதிவிடுங்கள்.

தொலைபேசியிலக்கம் - 06781 70723.

வங்கி விபரம் - வங்கியூடாக பங்களிக்க

NESAKKARAM E.V.

55743 Idar-Oberstein,

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

வங்கியூடாக வெளிநாடுகளிலிருந்து பங்களிக்க

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code - 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code - PBNKDEFF

Postbank Stuttgart

Germany

இணைய முகவரி - http://nesakkaram.org/

  • கருத்துக்கள உறவுகள்

காமினி மகாவித்தியாலத்தில் போரால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களான 84மாணவர்களுக்கான உதவித்திட்டத்தில் தமது பங்களிப்புகளை வழங்கியோர் பெயர் விபரங்கள் வருமாறு

றதினி (பிரான்ஸ்) 100€

சுவி (யாழ் இணையம்) 20€

முரளி (யாழ் இணையம்)14.06€

சஜீவன் (யாழ் இணையம்) 32.91€

Alfons 23.67€

நேசன் (ஒஸ்ரேலியா) 200.22€

விஜயரட்ணம் அருள்முகன் சாய்பாபா(யேர்மனி) -100€

இதுவரை கிடைத்த பங்களிப்பு - 490.86€

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமினி மகாவித்தியலய மாணவர்களிற்கான உதவித் திட்டத்திற்கான தொகை யுரோவில் 1799.09

இதுவரை கிடைக்கப்பெற்றது யுரோ 390.86

  • கருத்துக்கள உறவுகள்

காமினி மகாவித்தியலய மாணவர்களிற்கான உதவித் திட்டத்திற்கான தொகை யுரோவில் 1799.09€

இதுவரை கிடைக்கப்பெற்றது யுரோ 490.86€

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புலன் செவிப்புலனற்ற பிள்ளைகளைப் பராமரித்து வரும் இனியவாழ்வு இல்லத்திற்கு நேசக்கரம் வழங்கிய நிதிக்கான நன்றிக் கடிதம் இனியவாழ்வு இல்லத்தின் தலைவரான ராஜ்குமாரினால் அனுப்பப்பட்டுள்ளது. அதனைக் கீழே இணைக்கிறோம். நேசக்கரத்துக்கு தங்கள் உதவிகளை வழங்கும் அனைவருக்கும் எமது நன்றிகள்.

02.jpg

01.jpg

கடந்தமாதம் இனிய வாழ்வு இல்லம் பற்றி ராஜ்குமார் நேசக்கரத்துடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் இணைப்பு கீழே உள்ளது.

audio.gifஇனியவாழ்வு இல்லத்தை யார் மீட்கப்போவது ? இசையாலும் நம்பிக்கையாலும் நிறைந்த இனியவாழ்வு இல்லம் இன்று சிதைந்து போயுள்ளது. இந்த இல்லத்தை தற்போது பொறுப்பேற்று நடாத்தும் பல்கலைக்கழக மாணவரான ராஜ்குமார் நேசக்கரத்தை நாடியிருக்கிறான். எல்லாம் இழந்து போனபின்னும் நம்பிக்கை தளராது உள்ள இந்த இளைஞனின் குரலைக்கேளுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தினால் வன்னிக்கிராமங்களிலிருந்து இடம்பெயரந்து தற்சமயம் வவுனியா நகரில் முகாம்களிலும் வெளியேயும் தங்கியிருந்து வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் உடல்அவயவங்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் கல்வியை தொடரும் 84 மாணவர்களிற்கான அடிப்படை தேவை மற்றும் கல்வி உதவி கோரப்படுகின்றது

ஒரு மாணவன் அல்லது மாணவிக்கான உதவி

படசாலை உபகரணங்கள் 500 ரூபாய்

போக்குவரத்து 100 ரூபாய்

உடை மற்றும் உள்ளாடைகள் 2400 ரூபாய்

மொத்தம் 3000 ரூபாய்

யுரேவில் ஒருவரிற்கு அண்ணளவாக 22 யுரோக்கள்.

உதவித் திட்டத்திற்கான மொத்தத் தொகை யுரோவில் 1799.09

இதுவரை கிடைக்கப்பெற்ற உதவி விபரங்கள்.

றதினி (பிரான்ஸ்) 100€

சுவி (யாழ் இணையம்) 20€

முரளி (யாழ் இணையம்)14.06€

சஜீவன் (யாழ் இணையம்) 32.91€

அல்போன்ஸ் 23.67€

நேசன் (ஒஸ்ரேலியா) 200.22€

விஜயரட்ணம் அருள்முகன் சாய்பாபா(யேர்மனி) -100€

விசுகு (யாழ் இணையம்) 220€

சுவி நண்பர்கள் (யாழ் இணையம்)40€

இதுவரை கிடைத்த உதவி மொத்தம் 750.86

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.