Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்

http://www.nerudal.com/nerudal.14322.html

* இவ் விடயம் 11. 03. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 12:51க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது.

இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மறு ஒளிபரப்பு எதிர்வரும் 14ஆம் திகதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப நேர மாற்றம் இடம் பெறலாம் எனவும் CNN அறிவித்துள்ளது..

இலங்கையின் 30 வருட உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்களின் குரலாக இந்த ஆவணப்படம் இருக்கும் எனவும், நாம் கற்பனை செய்ய முடியாத பல விவகாரங்களை இந்த ஆவணப்படம் வெளிக் கொண்டு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட அதிர்வுளை தமது குடும்பத்தவர்களை இழந்தவர்கள் ஊடாகவும், இடம்பெயர்ந்த மக்களின் ஊடாகவும் பலதரப்பட்ட பதிவுகளை Sara Sidner இந்த ஆவணப்படத்தின் மூலம் வெளிப்படுத்துவார் என நம்பப்படுகின்றது.

குறிப்பாக, இப்போரினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள், குடும்பங்கள் பிரிந்தமை, மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டமை மற்றும் உடல், உள ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இந்த ஆவணப்படம் பேசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இக்காலகட்டப்பகுதியில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் குறித்தும் இந்த ஆவணப்படம் பதிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திர சிறிலங்காவின் ஆட்சிக்குள் அரசியல் செய்ய தமிழ்த் தலைமைகள் அங்கிருந்து தமிழீழ மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததைப் பட்டியலிட்டால், இவர்கள் எதற்காக அங்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியே எஞ்சுகின்றது. நில ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை. சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்ட எண்ணற்ற இளைஞர்களை விடுவிக்க முடியவில்லை. தமிழர்கள் மீதான படுகொலைகள், கடத்தல்கள், பாலியல் வல்லுறவுக்கள், கப்பம் பெறுதல் என்று அத்தனையும் இன்று வரை பெருகி வந்துள்ளதே தவிர, அவற்றைக் குறைத்துவிடக் கூட இந்தத் தலைமைகளால் முடியவில்லையே.

அறுபது ஆண்டுகளாக நடந்து, இன்றுவரை தொடர்ந்தே செல்லும் இந்த தமிழின அழிப்பை இப்போதும் இவர்கள் கைகாட்டும் இந்திய தேசம் எப்போது தடுத்து நிறுத்த முயற்சித்தது? தந்தை செல்வா அவர்கள் தமிழ்த் தேசியத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை நகர்த்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த போராட்ட வடிவத்தினூடாக முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்துள்ளார். அந்தப் பேரழிவை முன்னரே கணிப்பிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அந்தத் தமிழ்த் தேசியத்தை மீட்பதற்கான போராடும் கடமையை புலம்பெயர் தமிழர்களிடமும், இளையோரிடமும் கையளித்திருந்தார். அவரது விருப்பப்படியும், சிந்தனைப்படியும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கான கடமைகளைத் தோளில் சுமந்துள்ளார்கள். அவர்களது போர்க் களம் மேற்குலகின் அரசியலில் பல அதிசயிக்கத் தக்க மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த மாற்றங்களினூடாக சிங்கள தேசத்திற்குக் கிலியூட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

“நாங்கள் திரும்பவும் தொடக்க புள்ளிக்கே வந்துவிட்டோம்” – ‘பிழைத்தவர்களின் சாட்சிங்கள்’

பொதுவான எல்லா இளம் வயதினரைப் போலவே – தனது எதிர்காலம் எப்படி இருக்கப் போகின்றது என்பது பற்றி தனக்கு இருக்கும் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது தவிக்கிறார் ரவீந்திரன் ஜெனதா.

அவருக்கு வயது 21. தனது எதிர்காலம் எப்படியானது என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்து இருக்கின்றது.

“ஒன்றுமே கிடையாது” என்கிறார் மென்மையாக.

அவருடைய கடந்த காலம் மற்றும் அவருக்கு நிகழ்ந்தைவைகள் காரணமாக – தனக்கு எதிர்காலம் என்று ஒன்று நிச்சயமாக இல்லை என்பதில் ரவீந்திரன் ஜெனதா உறுதியாக இருக்கிறார்.

“இப்போது என்னால் எதுவும் செய்ய முடியாது. அது தான் இருக்கின்ற ஒரே பிரச்சினை” எனச் சொல்கிறார் அவர்.

அப்படிச் சொன்னதன் பின்னர் அவரது இனிமையான சிரிப்பும் நம்பிக்கைத் தொனியும் உடைந்து சிதறுகின்றன. சோகத்திற்குள் மூழ்கிப் போகிறார்.

வழியும் கண்ணீருக்கு நடுவில் வார்தைகள் குளறியபடி வெளியாகின்றன: “எதைச் செய்வதானாலும் எனக்கு இப்போது உதவி தேவையாக இருக்கிறது” என்கிறார்.

சிறிலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு நடந்த கடுமையான கடைசிச் சண்டையின் இடையில் அகப்பட்டுக் கொண்ட 280,000 பேரில் ரவீந்திரன் ஜெனதாவும் ஒருவர்.

சண்டையில் இருந்து அவர் ஒருவாறு தப்பி வெளியேறி விட்டார். ஆனால் அதற்கு முன்பாக கால்களையும் கண்களில் ஒன்றையும் பறிகொடுத்து விட்டார்.

“எங்களுக்கு ஒரு பதுங்கு குழி கிடைத்திருந்தது. நாங்கள் தங்கி இருந்த அந்தப் பதுங்குழியின் உள்ளேயே எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அதில் என் உறவினர் இறந்து போனார். எனக்கு…? நான் என் இரு கால்களையும் இழந்தேன்” சோகத்துடன் வருகின்றன வார்த்தைகள்.

தனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லும் போது தன் கண்பார்வை போன விதத்தைச் சொல்வதற்கு அவர் மறந்து விடுகிறார்.

சில நிமிட சோகம் கப்பிய அமைதிக்குப் பின்னர் தொடர்கிறார், “எனக்கு இப்போது ஒரு கண்ணும் கிடையாது”.

இவ்வாறாக CNN நிறுவனத்திற்காகத் தயாரித்த ஒரு விவரணச் சித்திரத்தில் Sara Sidner எழுதியுள்ளார். அதனைப் புதினப்பலகை-க்காகத் தமிழாக்கியவர் ரி.ரேணுபிரேம்.

Sara Sidner தொடர்ந்து எழுதியுள்ளதாவது:

அந்த பயங்கரம் நிறைந்த சம்பவங்கள் இடம்பெற்ற போது ரவீந்திரன் ஜெனதாவும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவின் வட பகுதியில் உள்ள அவர்களது சொந்த ஊரில் வசித்து வந்தார்கள்.

அவர்களைச் சுற்றி அந்த இடத்தில் வசித்த ஏனைய குடும்பங்கள் ஒவ்வொன்றிடமும் நீண்ட போர்க் கதைகளும் சாவு பற்றிய செய்திகளும் உள்ளன.

சாவைத் தவிர்ப்பதற்காக அவர்கள் ஒரு பதுங்கு குழியில் இருந்த மற்றொன்றுக்கு என மாதக் கணக்காக ஓடிக் கொண்டிருந்த ஒரு பயங்கரமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள்.

போர் மிக மோசமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவின் தெற்கே கண்ணீர்த் துளி வடிவத்தில் அமைந்துள்ள அந்த தீவின் மீது உலகின் கவனம் திரும்பியது.

2009 ஆம் ஆண்டில் – கடுமையான இறுதிப் போர் நடந்த மாதங்களில் – போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானப் பேரவலங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாகின.

போரில் ஈடுபட்ட இரு தரப்புக்களுக்கு எதிராகவும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.

மோசமாகி வந்த சண்டைக் களத்தில் இருந்து வெளியேற விடாது தடுத்து மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று தமிழ்ப் புலிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனால், அதனை அவர்கள் மறுத்தார்கள்.

தாமே அறிவித்த பாதுகாப்பு வலயங்களில் இருந்த மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தின என சிறிலங்காப் படைகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

படைகளின் தளபதிகள் அவற்றை மறுத்தார்கள்.

இந்த போர் 2009 ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை அடைந்த போது – போர் பற்றிய செய்திகளை பக்கசார்பற்ற ஊடகவியலாளர்கள் சேகரிப்பதை சிறிலங்கா அரசாங்கம் தடுக்கத் தொடங்கியது.

போருக்குள் சிக்கிக் கொண்டுள்ள மக்களுக்கு உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது பற்றிய பல கேள்விகளை இந்தத் தடை எழுப்பியது.

போர் முடிவடைந்த மாதங்கள் கடந்த போதும், சண்டைக் களத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் அரசு நடத்திய முகாம்களிலேயே வாழ்ந்தார்கள்.

கடைசியில் ஒரு வழியாக, மக்கள் எங்காவது செல்லலாம் எனக் கூறி அந்த முகாம்களில் பலவற்றை அரசு திறந்து விட்டது.

ரவீந்திரன் ஜெனதாவுக்கு, போர் இல்லாத ஒரு வாழ்வு பற்றித் தெரியவே தெரியாது.

ஏனையவர்களைப் போலவே அவரது கதையும், கண்ணீர் வெள்ளத்தால், அல்லது கோபத்தால், அல்லது தனக்கும் தன் அன்புக்குரியவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை விளக்குவது, அல்லது புதிய யதார்தத்தை எப்படிச் சமாளிப்பது என்ற எண்ணங்களால் நிறைந்து கிடக்கின்றது.

“நாங்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னைச் சந்தோசமாக வைத்திருக்கவில்லை” என்று தனது துண்டாடப்பட்ட கால்களைக் கவனமாக மறைத்துக் கொண்டு சொல்கிறார் அவர்.

“ஆனால், எவ்வளவோ எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்ட பின்னால், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்த போரின் பின்னர், பெரும் அழிவுகளின் பின்னர் அவற்றால் ஏற்பட்ட பயன் என்ன? இவை எல்லாமும் எதற்காக…?

நாங்கள் திரும்பவும் தொடக்கப் புள்ளிக்கே வந்துவிட்டோம்.” என்கிறார் ஜெனதா.

யார் இந்த சாரா சின்டர்?

சி.என்.என் நிறுவனத்தின் வட ஆசியா செய்தி நிருபராக செயற்பட்டு வரும் சாரா சின்டர். சி.என்.என். க்கு இலங்கையில் நடைபெறும் யுத்தம் பற்றி செய்திகளை வழங்கி வருகிறார். இவர் தமிழ் மக்கள் படும் இன்னல்களை வெளிக்கொண்டுவருவது போல் விவரணங்களை வழங்கும் இவர் தன்னுடைய ஒவ்வொரு விவரணங்களிலும் விடுதலைப்புலிகளை மிக கொடிய பயங்கரவாத இயக்கமாக குறிப்பிட தவறுவதில்லை.

1. வேறு எந்த வெளிநாட்டு செய்தி நிறுவனங்களை சுயேட்சையாக பாதிக்கப்பட்ட வன்னி மக்களை பேட்டி காண அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசு சாரா சின்டரை அனுமதித்தது ஏன்?

2. தாங்கள் ஒரு சோதனை சாவடிகளிலும் நிறுத்தப்படவில்லை என்றும், தாங்கள் ஏ9 பாதை ஊடாக தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்தை அடைந்தோம் என்று ஏன் குறிபிடுகிறார்?

3. வெளிநாட்டு செய்தியாளர்களுடன் தனது பொலிஸாரை சிவில் உடையில், இராணுவத்தை, புலனாய்வு பிரிவினரை அனுப்பும் இலங்கை அரசு சாரா சின்டருடன் அனுப்பாதது ஏன்?

4. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பபாணத்தில் எங்கு தங்கியிருக்கிறார்கள் என்று எப்படி இவருக்கு தெரியும் ? எந்த இடம் என்றும் குறிப்பிடவில்லை?

5. மொழி பெயர்ப்பாளரை ஒளிப்பதிவில் காட்டப்படவில்லை?

கடைசி யுத்தத்தில் மக்கள் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அகப்பட்டு தான் இவ்வாறாக பொதுமக்களுக்கு இழப்புகள் ஏற்பட்டன என்றும், சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படக்கூடிய தோரணையில் கூறுகிறார்.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு யுத்தத்தினால் தான் என்றும், சிங்கள இராணுவத்தால் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை எனவும் சுட்டிக் காட்ட விரும்புகிறார்.

தமிழ் மக்களுக்கு சார்பாக கதைப்பது போல் நடித்துக் கொண்டு, தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழர்களின் தேசிய இராணுவத்தை உலகுக்கு பயங்கரவாதிகளாக சித்தரித்துக் காட்டிக் கொண்டிருக்கும் இவர் யார்?

உண்மையை எடுத்துரைப்பதே ஊடக தர்மம், சரி உண்மையை வேண்டாம் பக்கச்சார்பில்லாமல் ஆவணங்கள் வெளியிட வேண்டும். இவர் அதையும் செய்யவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளால் மட்டும்தான் மக்களுக்கு இவ்வளவு அழிவென்று இலங்கை இனவாத அரசு போல தெரிவித்துக் கொண்டிருக்கும் இவர் யார்? இலங்கை இனவாத அரசின் கைக்கூலியா?

http://namthesam.com/?p=2097

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.