Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சிதா சேவை செய்த போது நான் சமாதி நிலையில் இருந்தேன்: நித்தியானந்தா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விடியோ படம் எடுக்கப்பட்டபோது உண்மையில் நான் உடல் நலமற்று... 'சமாதி' நிலையில் இருந்தேன்.

எடியேய் முனியம்மா கதையை கேட்டியோ இதுதானாம் சமாதி நிலை அப்ப நானும் ஒவ்வொருநாளும் இரவிலை சமாதி நிலையிலைதானே இருக்கிறனான். இப்ப விளங.குதோ சமாதி நிலை எடுக்கிறது எவ்வளவு கஸ்ரமெண்டு

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஓ இதைத்தான் சமாதி நிலை எண்டு சொல்லுறதோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆன்மிகம் வாங்கல்லையோ ஆன்மிகம்

குற்றம் சாட்டப்பட்ட எல்லா சாமியார்களுமே தப்பானவர்கள்தான் என்று தீர்மானமாக நம்மால் சொல்ல முடியவில்லை. படித்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே சொல்வதானால் அப்படிச் சொல்லலாம். ஆனால் அப்படிச் சொல்வது அறிவுடைமை ஆகாது. ஆகவே, நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் காத்திருப்போம். நீதி இன்னும் இந்த நாட்டில் சாகவில்லை.

ஆனால் ஒரு விஷயம் ரொம்ப துரதிஷ்ட வசமானது.

‘நிச்சயம் இவர் இப்படிச் செய்திருக்க முடியாது’ என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிற நிலையில் தங்களை யாரும் வைத்துக் கொள்ளவில்லை. அதற்குக் காரணங்கள் பல.

கோவணத்தை எலி கடிக்கிறது என்பதற்காக பூனை வளர்க்க ஆரம்பித்த சாமியார் எப்படி சம்சாரி ஆனார் என்பது பழைய கதை.

முதல் deviation எப்படி முற்றிலும் deviation ஆக ஆக்கும் என்கிற தத்துவத்தை அந்தக் கதையிலிருந்து நாம் உணரவில்லை.

துறவி என்கிறவர் யாசித்து உண்ண வேண்டும் என்பது பெரியவர்கள் சொன்னது.

ஏன் அப்படிச் சொன்னார்கள்?

முதற் காரணம், நாளை என்கிற நாளுக்காக எதையும் சேமிக்கக் கூடாது. செல்வம் சேர்ந்து விட்டாலே அதைக் காக்கிற கவலை, பெருக்குகிற ஆசை, அவசியமில்லாதவைகளை வாங்குதல் என்று நிறைய deviation கள் வந்து விடும். இந்த நாட்டில், நான் அறிந்த எந்தத் துறவியும் யாசித்து உண்டதில்லை.

முதன் முதலில் துறவிகள் பால் அன்பும் மதிப்பும் இருந்தவர்கள் நில புலன்களையும் பணத்தையும் மடத்தின் பேரில் எழுதி வைத்தது முதல் தவறு என்றால், துறவிகள் அதை ஏற்றது அதை விடப் பெரிய தவறு.

சரி, என் பேரில் என்ன இருக்கிறது, எல்லாமே ட்ரஸ்ட் தானே என்றால் அந்த ட்ரஸ்ட் நல்ல முறையில் இயங்குகிற பொறுப்பு உங்கள் தலையில் ஏறிக் கொண்டு விட்டதே! நல்ல காரியங்களுக்குத்தான் செலவழிக்கப் போகிறோம் என்றால், மேலும் நல்ல காரியம், மேலும் சேகரிப்பு என்று தொடர்கிறதே! நேரடியாகவோ, மறைமுகமாகவோ செல்வத்தின் பால் கவனம் போய் விட்டதே! பணப்புழக்கம் ஆரம்பித்து விட்டாலே பனைமரத்தின் கீழ் பால்தான். செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள சில நட்புகள், சில விரோதங்கள், சில வியாபாரங்கள்…. ம்ம்ஹூம் பாதி ஆன்மிகம் கோவிந்தா.

அடுத்தது பிரம்மச்சரியம்.

பிரம்மச்சரியம் என்பது பிளாஷ் பாயிண்ட் இல் இருக்கும் எண்ணை போன்றது. அதனருகில், சிறிது தூரத்தில் கூட ஒரு சின்ன தீப்பிழம்பு கூட வரக் கூடாது. வந்தால் ப்ளக் என்று பற்றிக் கொண்டு விடும். பெண்களின் வாசனையே கூடாது. ஆனால் அவர்கள் விட்டால்தானே.

சாமியார்களுக்கு முதல் ஓட்டே பெண்களுடையதுதான். அதிலும் வாழ்வில் தோல்வியைச் சந்தித்த பெண்கள் ரொம்பத் தீவிர பக்தைகள். புருஷன் கொஞ்சம் முரடனாக இருந்து விட்டால் போதும். உடனே நான் ஆன்மிகத்தில் கலந்து விட்டேன் என்று போய் விடுகிறார்கள்.

பெண்ணின் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத சாமியார்களுக்கு இவர்களின் நேசம் போதையளிப்பதாக இருக்கிறது.

அந்த போதையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக நுகர ஆரம்பிக்கிறார்கள்.

மெதுவாக முன்னேறுகிற எதிலுமே மாற்றம் நடந்து கொண்டிருப்பது சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரியாது.

கொதிக்கிற நீரில் ஒரு தவளை குதித்தால் சூடு தாங்காமல் உடனே வெளியே குதித்து விடும். ஆனால் குளிர்ந்த நீர் இருக்கும் ஒரு அண்டாவில் தவளை நீந்திக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், தண்ணீரை சூடு பண்ண ஆரம்பியுங்கள். அதன் கத கதப்பை ரசிக்கும். முன்னை விட ஒரு டிகிரி. அதை விட ஒரு டிகிரி என்று சூடு ஏறிக் கொண்டிருப்பதே தெரியாமல் பொரிந்து செத்துப் போகுமே ஒழிய மெதுவாக நடைபெறும் இந்த மாற்றத்தை அது அறியவே அறியாது.

அது போலத்தான் பெண்களோடு பழக ஆரம்பிக்கிற சாமியார்களின் கதையும்.

அடுத்தது விளம்பர ஆசை.

போஸ்டரில் முகம், டிவியில் நிகழ்ச்சி, அந்த குரு இந்த குரு என்று பட்டங்கள்…. பத்திரிகைகளில் பேட்டிகள்…

இதெல்லாம் இருக்கிற எவருமே துறவிகளோ, சேவை நோக்கமோ கொண்டவர்கள் அல்ல.

இது மாதிரி பலஹீனமான ஆசாமிகள் மாட்டும் போது ஆன்மிகமே பம்மாத்து, இந்து மதமே டுபாக்கூர் என்று எண்ணத் தேவையில்லை. இந்து மதம் ஒரு மிகப் பெரிய கடல். இவர்களெல்லாம் அதிலிருக்கும் தண்ணீரின் ஒரு மாலிக்யூல் கூட கிடையாது.

தன்னை சாமியார் என்றோ குரு என்றோ அறிவித்துக் கொள்ளாத, மடம் இல்லாத, ட்ரஸ்ட் இல்லாத சாதாரண குடும்பஸ்தர்கள் எத்தனையோ பேர் ஆன்மிகத்தை சொல்லித்தர இருக்கிறார்கள். மறைந்த பல மகான்களின் நூல்கள் இருக்கின்றன.

பலஹீனமான, ஆன்மிக வியாபாரிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை விட்டு விலகுகிற தீர்மானத்துக்கு உங்களில் எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்?

நன்றி:

இதயம் பேத்துகிறது

http://kgjawarlal.wordpress.com/2010/03/07/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/

சாரு நிவேதிதா எழுதிய

சரசம், சல்லாபம், சாமியார்.

புதிய விறுவிறு தொடர்

1

18.03.10 தொடர்கள்

அவந்திகா ஆசிரமத்தில் இருந்தபோது என்னை பல பத்திரிகைகளிலிருந்தும் பேட்டி கேட்டார்கள். நானோ வாயே திறக்கவில்லை. வாயைத் திறந்தால் அவந்திகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். என் இரண்டு கைகளையும் கட்டிப் போட்டது போல் உணர்ந்தேன். ‘சாமியாரிடமிருந்து பணம் வாங்கி விட்டாய்; அதனால்தான் மௌனமாக இருக்கிறாய்’ என்றெல்லாம் அவதூறு எழுதினார்கள். அப்போதும் என்னால் வாயைத் திறக்க முடியவில்லை. என் மான அவமானத்தைவிட அவந்திகாவின் உயிர் முக்கியமாயிற்றே? பிறகு எப்படி அவந்திகா ஆசிரமத்திலிருந்து தப்பினாள்?அது ஒரு துப்பறியும் கதைபோல் இருக்கும். அடுத்த இதழில் சொல்கிறேன்

கதை நல்லாத்தான் இருக்கு பாஸ்....நம்புற மாதிரி சொல்லுங்க....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

reporter210310_01.jpg

reporter210310_02.jpg

reporter210310_03.jpg

reporter210310_04.jpg

reporter210310_05.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சாமியா

அல்லது

தங்கள் ஆசாமியா??? :lol::lol::wub:

:(:lol: :lol:

முற்றும் துறந்தவனுக்குச் சொத்துக்கள் இருக்கமுடியாது.

ஆனால் நித்தியானந்தா முற்றும் திறந்தவர் ஆயிற்றே

  • கருத்துக்கள உறவுகள்

reporter210310_04.jpg

எனக்கும் வரவர பக்தி கூடுற மாதிரி தெரியுது. நாங்களும் ஆராய்ச்சி செய்யலாமோ? :wub:

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.