Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் சம்பந்தர் மட்டும் தான் தமிழரா?

Featured Replies

தமிழர் தாயகத்தில் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலிலே திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் எல்லோரினதும் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியத்துக்கான மக்கள் முன்னணி போட்டியிடும் இரு மாவட்டங்களில் திருகோணமலையும் ஒன்று.

இந்நிலையில் தமிழ்மக்களிடத்தில் – குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர், ஆய்வாளரிடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது திருகோணமலை தேர்தல் மாவட்டம். காரணம், அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமற் போகப்போகிறது என்ற ஒரு வாதம்.

கடந்தமுறை மூவாயிரத்துச் சொச்ச வாக்குகளால் ஓர் ஆசனத்தை அதிகமாகப் பெற்றுக்கொண்டது தமிழர் தரப்பு. இந்தமுறை என்னதான் ‘ஒற்றுமை’ப் பூச்சாண்டி காட்டிப் போட்டியிட்டாலும் ஓர் ஆசனம் மட்டுமே தமிழர் தரப்புக்குக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதிருந்த அதே வாக்காளர் தொகைதான் தமிழர்தரப்பில் இருப்பதும், ஏனைய சமூகங்களில் – குறிப்பாக முஸ்லீம் சமூகத்தின் வாக்காளர் எண்ணிக்கை கணிசமானளவில் உயர்ந்திருப்பதும் இதற்கு முதன்மைக் காரணங்கள். இரண்டாம் பட்சக் காரணங்களாக, பிள்ளையானாலும் ஏனைய சுயேட்சைக் குழுக்களாலும் பிரியப் போகும் தமிழ்வாக்குகள். எப்படித் தான் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் சைக்கிள் சின்னக்காரர் போட்டியிலிருந்து விலகுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைக்கப்போவது அதிகபட்சம் ஓர் ஆசனம் மட்டுமே. அதற்குமேல் பெறவேண்டுமென்றால் மிகப்பெருந்தொகையில் கள்ளவாக்குப் போட்டால்தான் உண்டு.

ஆக, திருமலையில் தமிழர் தரப்புக்கு ஓர் ஆசனம் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நிலையைக் கருத்திற்கொண்டு மேற்கொண்டு நகரலாம். இப்போது திருமலை தொடர்பாக எழுதும் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் சொல்லும் ஒரு விடயம், ‘அங்கு தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்; எனவே கஜேந்திரகுமாரின் அணி தேர்தலிலிருந்து ஒதுங்க வேண்டும்’. திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்பது சரிதான். அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழர் பால் அக்கறை கொண்ட யாருக்குத்தான் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவது விருப்புக்குரிய காரியமாய் இருக்கக் கூடும்? இங்கே நாம் முரண்படும் விடயமென்னவென்றால், சம்பந்தர் ஐயா வெல்லவேண்டுமென்பதும் கஜேந்திரகுமார் அணி விலக வேண்டுமென்பதும் தான்.

திருமலையிலிருந்து நாடாளுமன்றம் போகும் தமிழன் கட்டாயம் சம்பந்தராகத்தான் இருக்கவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் முரண்டு பிடிப்பது ஏனென்றுதான் விளங்கவில்லை. இத்தனைக்கும் இவர்களில் பலர் சம்பந்தன் தவறான பாதையிற் செல்கிறார் என்ற விளக்கத்துடன்தான் இருக்கிறார்கள் என்பது ஒரு நகைமுரண். ஆனாலும் திருமலையில் வெல்லும் தமிழன் சம்பந்தராகத்தான் இருக்க வேண்டுமென்று மனப்பாடம் செய்துவைத்துக் கொண்டு செயலாற்றுகிறார்கள்.

சம்பந்தர் உட்பட்ட SMS அணி தவறான பாதையிற் செல்கிறது; உப்புச்சப்பற்ற ஒரு தீர்வுத்திட்டத்தை நோக்கி இவர்கள் நகர்த்தப்படுகிறார்கள்; தமிழ்மக்களின் போராட்டத்தின் நியாயத்தை, தியாகத்தை அர்த்தமற்றதாக்கும் சதிவலையில் தமிழினத்தைச் சிக்கவைக்கும் சதிகாரர்களின் கைப்பிள்ளையாக இவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்ற விமர்சனங்களை, குற்றச்சாட்டுக்களை இப்போது யாருக்கும் விளங்கப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. இந்த அணியின் முகமூடியைக் கிழித்த அண்மைய நிகழ்வுதான் நிருபமா ராவுடனான இவர்களின் சந்திப்பு.

இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ அமைப்பும் செல்வம் அடைக்கலநாதனும் இருக்கும் நிலையில், நிருபமாவுடனான சந்திப்புக்கு அவரைக் கடாத்திவிட்டு SMS அணிமட்டும் சென்று குசுகுசுத்துவிட்டு வந்துள்ளது. ஏன் செல்வம் அடைக்கலநாதன் அழைத்துச் செல்லப்படவில்லை என்ற கேள்விக்கான விடை மிகத் தெளிவானது. இந்த மூவரைக் கொண்ட அணி மிகப்பெரும் சதிநாடகத்தில் ஓரங்கமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் நம்புவது தவறன்று என்பதை அவர்களே நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று யாழ் மாவட்டத்திலே SMS அணியிலுள்ள இருவராலும் வாரி இறைக்கப்படும் பணம் எப்படி வந்ததென்று நாம் யோசித்தால் நிறைய விடயங்கள் புலப்படும் (கனடாவின் தானைத்தலைவன் தங்கவேலான் திரட்டிக் கொடுத்த பணமன்று).

இந்த SMS அணியின் ஓரங்கம்தான் இந்த சம்பந்தன் ஐயா. இவரையும் தோற்கடிப்பதன் ஊடாகத்தான் தமிழரின் அரசியல் உரிமைக்கான போராட்ட முன்னெடுப்புக்களைத் தொடர முடியும். எமது போராட்டத்தை ஒழிக்கவென இரண்டு கட்டமாகச் செயலாற்றிய இந்தியா முதற்கட்டத்தில் மே 19 உடன் வெற்றிபெற்றுவிட்டது. இப்போது இரண்டாம் கட்டம். இதிலும் இந்தியாவையும் எமக்கெதிரான சதிகாரக் கும்பலையும் வெல்லவிட்டோமானால் எமது கதி அதோகதிதான்.

இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்? எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.

இதுவொன்றும் சாத்தியப்படாத விடயமன்று. ஏதோ சம்பந்தர் அசைக்க முடியாத சக்தியாகத் திருமலையில் திகழ்கிறார் என்று கருதிக்கொண்டு யாராவது பேசுவார்களாக இருந்தால் அவர்கள் அங்குள்ள நிலைமை தெரியாமல் கதைப்பவர்களாகவே இருப்பர். சம்பந்தருக்குப் பின்னால் இருக்கும் பலமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு மாயையும் வீட்டுச் சின்னமும் தான். இதைச் சரியான முறையில் எதிர்கொண்டு அந்த மாயையைத் தகர்க்க முடியும். திருகோணமலையின் நகர்ப்புறத்தைத் தாண்டிப்பார்த்தால் சம்பந்தனுக்கு மிகப்பெரும் எதிர்ப்பலையொன்று ஏற்கனவே இருக்கிறது. மேலும் கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா போன்றவர்களுக்கு இருக்கும் செல்வாக்கும், ஆதரவும் அதிகமேதான். நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த சம்பந்தனைவிடவும் மக்களோடு நேரிலே களத்திலே நின்று பணியாற்றிய கெளரிமுகுந்தன், கண்மணி அம்மா குழுவுக்கு கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிக ஆதரவு உள்ளதென்பதே கள யாதார்த்தம். மிகக் கடுமையான போட்டியை சம்பந்தன் அணிக்கு அங்கே சைக்கிள் சின்னக்காரர் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால்தான் தொடக்கத்திலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் கெளரிமுகுந்தன் பற்றிய அவதூறுப் பிரச்சாரத்தைத் தொடங்கியிருந்தார். ஊடக, பண பலமின்றி களத்திலிறங்கி வேலைசெய்யும் கஜேந்திரகுமார் அணியைப் பலப்படுத்தி சரியான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்புவதே நாம் செய்ய வேண்டிய பணி. அஃதன்றி, சம்பந்தர் புராணம் பாடிக்கொண்டிருப்பது தவறு; அதற்கு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும், பிரதேசவாதத்தையும் (கிழக்கான் தலைமை தாங்குவதை வடக்கான் விரும்பவில்லை என்பது) துணைக்கழைப்பது மகாதவறு.

எனவே திருமலையிலிருந்து நாடாளுமன்றம் செல்லப்போகும் அந்தத் தமிழ்மகனை/மகளை சரியான பக்கத்திலிருந்து தெரிவு செய்து அனுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. அதையுணர்ந்து அனைவரும் ஒன்றாக அணிதிரள்வதே சிறப்பு.

http://defeatsms.com/

தமிழ் மக்கள் அளிக்கப்போகும் வாக்குகள் ஒரு உறுப்பினரைத் தேர்வுசெய்யப் போதுமானது. ஆனால் அந்த வாக்குகளை கூட்டமைப்பு, தமிழ் காங்கிரசும் பிரித்தால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பதிவர், இரவு சம்பந்தம் தனது இந்திய பார்சி காந்தி குடும்பத்திற்கு திருகோணமலையில் சீனனின் கையிட்கு போகாமல் இடம் பிடித்துக்கொடுக்கும் ஒரு கடமை இருக்கிறது.

ஆனால், இன்னும் இந்த ஸ்ரீ லங்கா/இந்திய அரசியல்வாதிகளை நம்புவோரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இவர்கள் தான் தமிழரின் முதல் எதிரிகள்.

ஆனால் இப்போது முன்பு பிரபாகரனை சர்வதிகாரி என்று சொன்ன வெள்ளைவான் அமைச்சர் இப்போது யாழ்பாணத்தில் மற்றைய அரசியல் ஆயுத குழுக்களை பந்தாடுகிறார். புலி இல்லாமல் இவர்களது ஒற்றுமை சிதறிவிட்டது. ஹி ஹி ஹி :wub:

  • தொடங்கியவர்

இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்?

எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.

தமிழ் மக்கள் அளிக்கப்போகும் வாக்குகள் ஒரு உறுப்பினரைத் தேர்வுசெய்யப் போதுமானது. ஆனால் அந்த வாக்குகளை கூட்டமைப்பு, தமிழ் காங்கிரசும் பிரித்தால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

கட்டையில் போகும் வயதில் கதிரைக்கு சம்பந்தர் போட்டி போடுகின்றார் என்று ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை .

சம்பந்தர் விலகி கயேந்திரனுக்கு வாய்பளிவேண்டும் என்று கூட ஒப்புக்கு கூட ஒருவரும் ஊதவில்லை

கயேந்திரனில் பழி போட முற்படுவதிலிருந்து இவர்களின் சுயலாபம் வெளிப்படையாகத் தெரிகின்றது

தீர்வு என்று ஒன்று கிடைக்குமாமாக இருந்தால் அது இலங்கைக்கு வெளியில் இருந்து கிடைக்கும் அழுத்தத்தினால் தான் முடியும். அந்த வெளியளுத்தம் எதுவாகவும் இருக்கலாம் அதாவது நாடுகடந்த அரசியலுடாவும் இருக்கலாம் சர்வதேசத்தின் சுயநல அரசியலில் இருந்து தப்ப இரு நீதி முகமூடியாகவும் இருக்கலாம். அலாது இந்தியா தனக்கு சாதகமாக ஒரு நிலைமையையும் தோற்றுவிக்கலாம். அலாது போனால் மேற்கூறிய எலாக்காரனங்களின் சேர்க்கையாகவும் இருக்கலாம்.

வெளியளுத்தம் இல்லாமல் தமிழ் அரசியல் வாதிகளால் எதையும் செய்யமுடியாது.

இங்கே அரை வேட்காட்டுத் தீர்வுபற்றி நீங்கள் அதிகம் வாதிப்பஈர்களாக இருந்தால் ஏன் இந்த ஒரு எடுகோளை நீங்கள் பார்ப்பதில்லை? அதாவது அரை வேட்காடுத்தீர்வு அல்லது ஒன்றும்மில்லை.

கடந்த கால அனுபத்திநூடே ஒன்றை நாம் புரிந்திருப்போம். அதாவது ஈழத்தின் பாதையை நீங்கள் எப்படி அமைக்கப்போரிங்கள் என்பது. என்னைப்பொறுத்தவரை அதுக்கு பல காய் நகர்த்தல்கள் பல நீண்டகால திட்டடங்கள் தேவை. இப்போது அதை பார்த்திருந்து இருக்கும் சூழலில் சிங்களத்திடம் முழுமையாக அழிந்துபோகாமல் இருக்க ஏதாவது ஒன்றை செய்யவேண்டும்.

நீண்டகாலத்துக்கு இப்படியே எந்த ஒரு தீர்வும் இல்லாமல் தனிய எதை செய்வது யார் செய்வதென்று நாங்கள் எங்களுக்குள் இழுபட அங்க சிங்களவங்கள் சங்க்கூதிடுவாங்கள்.

ஆக ஒன்றுபடுங்கள்... இன்று சம்பந்தர் ஒருதிர்வை அரைகுறையாக தந்திடுவார் என்று ஏன் பயப்படுவான்? அது அவரால் முடிமேன்ரா நினைகிறிர்கள்? அப்படி ஒரு தீர்வு வந்தால் அத்தோடு எல்லாம் முடிந்த்டுமா?

இப்போது பூச்சியத்தில் இருந்து தொடங்குவதிலும் பார்க்க அது நல்ல ஆரம்பமாக ஏன் பார்க்கக்கூடாது?

இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்?

எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.

கட்டையில் போகும் வயதில் கதிரைக்கு சம்பந்தர் போட்டி போடுகின்றார் என்று ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை .

சம்பந்தர் விலகி கயேந்திரனுக்கு வாய்பளிவேண்டும் என்று கூட ஒப்புக்கு கூட ஒருவரும் ஊதவில்லை

கயேந்திரனில் பழி போட முற்படுவதிலிருந்து இவர்களின் சுயலாபம் வெளிப்படையாகத் தெரிகின்றது

நீங்கள் இப்போது செய்வது தேர்தல் பிரச்சாரம்.

அதாவது சைக்கில் சின்னத்துக்கு வாக்களிக்க கேட்கிறீகள்.

யாருக்கு வாக்களிப்பதென்பது மக்களின் தெரிவு

திருகோணமலை மக்கள் சம்பந்தரை விட இன்னொருத்தரை தெரிவு செய்ய என்ன காரணத்தை நீங்கள் சொல்ல வருகிறீகள்? நீங்கள் சொல்வதுதான் சரி என்று மற்றவர்களை நம்ப வைக்க நீங்கள் செய்வது காணாது.

இந்தச் சம்பந்தரைத்தான் திருகோணமலையில் வெல்லவைக்க எமது புலத்து ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர் எனப் பலர் முயன்றுகொண்டிருக்கின்றனர். இதற்கு அவர்கள் வைக்கும் ஒரே சாக்குப்போக்கு: திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்.

தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டுமென்ற காரணத்தால் மிகப்பிழையான, மிகவும் ஆபத்தான ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப முடியுமா என்ன? அவரைத் தோற்கடித்து வேறொருவரை நாடாளுமன்றம் அனுப்புவதைப் பற்றி ஏன் யோசிக்க மறுக்கிறார்கள்?

எல்லோரும் திரண்டுநின்று காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் நிற்கும் அணியை ஆதரிப்பதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையும் காபாற்றியதாகிறது; அத்தோடு தவறான ஒருவரைத் தோற்கடித்ததும் ஆகிறது.

நாம் தலைநகர் என்று உரிமை கொண்டாடும் இடத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு இரு சிங்களவரும் இரு முஸ்லீம்களுமே தெரிவாக எமது பிளவு வாய்ப்பைப் கொடுத்திருக்கிறது.

இந்தமுறை வாக்களிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு மட்டும் வாக்களத்தாலே ஒரு தமிழ் பிரதிநித்துவம் கிடைக்கும் மற்றயவை முஸ்லீம்கள் சிங்களவர்களிற்கே.

சம்பந்தர் பிழையானர் அவர் நாடாளுமன்றிற்கு வரக்கூடாது. சரி அவர் திருமலையில் தோற்றுப்போனால் இது சாத்தியமாகுமா?

இல்லையே!

சம்பந்தர் திருமலையில் தோற்றாலும் அவர் நாடாளுமன்றிற்கு தேசியப்பட்டியல் மூலம் போகப்போறாரே?

சம்பந்தருக்கு எதிரான முயற்சியும் தோற்று திருமலையில் தமிழ் பிரதிநிதித்துவமும் பறிபோகவும் போகிறதே!!!

ஒருகாலத்தில் திருமலையிலிருந்து தமிழர் மட்டும் பாராளுமன்றம் சென்ற நிலை மாறி , ஓரிரண்டு ஆசனங்களுக்கே அல்லாடுவதற்கு

காரணம் எமது தமிழ் அரசியல்வாதிகளின் கையால்லாகாதனம்தான். இந்திய இலங்கை அரசுகள் ஒன்றுமில்லாத ஒரு திர்வுதிட் டத்தை முன்வைத்து அதனை சம்மந்தர் மூலமாக தமிழர் கைகளில் திணிக்கக்கூடும். ஆக தமிழர் பிரதிநிதித்துவம்மென்று சொல்லி பிழையான ஒருவரை தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பாமல் யாரும் செல்லாமல் இருப்பது நலம். ஏன்னென்றால் தற் போதிய நிலை நீடித்தால் இன்னும் சில வருடங்களில் சிங்களவர் திருமலை முழுவதுமாக குடியேறி தமிழர் பிரதிநிதித்துவம் முழுவதுமாக இல்லாமல் போகும். அப்போது சம்மந்தருக்காக வாதாடுவோர் யாருக்காக வாதடபோகிறார்கள். இவர்களை நம்மித்தானே நான்கில் இரண்டை ஏற்கனவே இழந்துவிட்டோம். தேசியத்துக்கு அதரவானவர்களை தெரிவு செய்வதன் மூலம் இந்த உலகுக்கு எமது விருப்பை, தேசியத்தின் மீதுள்ள உறுதியை தெரிய்யப்படுத்தலாம்.

திருகோணமலை மக்கள் சம்பந்தரை விட இன்னொருத்தரை தெரிவு செய்ய என்ன காரணத்தை நீங்கள் சொல்ல வருகிறீகள்? நீங்கள் சொல்வதுதான் சரி என்று மற்றவர்களை நம்ப வைக்க நீங்கள் செய்வது காணாது

அதுதானே ......சம்மந்தர் சரியல்லை என்றா அதுக்கு சரியான ஆளைச் சொல்லுங்கோ நாங்க வாக்களிக்க...........சைக்கிளிலை கேட்க்கும் ஆட்கனைப்பற்றி இஞ்சை வந்து சனத்தை கேட்டுப் பாக்கவேணும்.............. முகுந்தன் புஞ்சிநிலமையோடை சேர்ந்து அடிக்கும் கூத்துகள் தெரியும் சும்மா கNஐந்தனுக்காண்டி .. கதைக்க திறணியற்ற அட்களை திருகோணமலையிலை இருந்து தெரிவு செய்யறத்துக்கு மக்கள் தயாராக இல்லை தமிழ் வேட்டை பிரிக்கிறத்துக்கெண்டுதான் மகிந்தாவால் முகுந்தன் பிள்ளையான் அணிகள் திருமலையில் கேட்பது எண்டு இங்குள்ள மக்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கியிருக்கு இப்பவே சிங்களவன் நாட்டாமை காட்ட வெளிக்கிட்டுட்டான் இனி தேர்தலிலை பெரும்பாண்மை கிடைக்காமை போணால் ஏறி மிதிச்சுத்தான் போவான்கள்...........................

  • தொடங்கியவர்

இது சம்பந்தமான வேறு பகுதியில் எழுதியது இதற்கும் பொருந்தும்

சம்பந்த மூவேந்தர்கள் யாரையும் கேட்பதாக இல்லை யாரையும் அனுசரித்துப் போகவும் விரும்பவுமில்லை

தான் தோன்றித்தனமாகச் செயல்படுகின்றார்கள்

இது மிகச்சரியானது. இங்கு சம்பந்தர் அல்ல முக்கியம்.

அதுக்கு தேவை ஒட்டுமொத்த தமிழர்களையும் இணைத்து செல்லக்கூடிய சக்திகள் ... புலம்பெயர்ந்தவர்கள் உட்பட மற்றவர்களை மதிக்க கூட தயாராக இல்லாத சம்பந்தன் அல்ல...

இதுக்கு உங்களிடம் பதில் இராது.. ஏன் யாரிடமும் இராது. இருந்தும் ஒரு தரப்பில் மாத்திரம் குறை கூறுவது தவறு.

பிரிந்துநிற்காமல் சேர்ந்து செயற்படுவோம் வாருங்கள் - அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கு இரா சம்பந்தன் அழைப்பு

யாழ் தேர்தலில் வெற்றிலை சுயேச்சை :lol: வென்றால் அரசு தமிழருக்கு செய்த கொடுமைகள் மறைக்கப்படும்

இவை சம்பந்தர் எவ்வள்வு நரியர் கருனாநிதியை விஞ்சிய மகா நடிகன் என்று இதைவிட என்ன சாட்சியம் வேண்டும்

இவ்வளவிற்கும் பின்னர் சம்பந்தரை நம்ப முடியுமா ? சம்பந்தர் புலம்பெயர்ந்தவர்களிடம் பணம் வேண்டும் ஆனால் நீங்கள் எங்களுக்கு சொல்ல யார் என்று கேட்கின்றார்

ஆக எமக்கு இப்போது எல்லாத் தமிழர்களுடனும் அனுசரித்துப் போகும் தமிழ்த்தேசிய உணர்வுள்ளவர்கள் தான் தேவை அது தான் கயேந்திரன் கூட்டணியாக இருக்கின்றது

இப்போ நாங்களும் செய்ய வேண்டியது அதுதான்... இந்தியாவை இலங்கையில் தோற்கடிக்க வேண்டும்... தமிழர்களின் எதிர்ப்பை இந்தியாவுக்கு புரியவைக்க வேண்டும்.. இந்தியாவை இலங்கையில் வேறு வளிவகைகளை கையாளும் அளவுக்கு தள்ளிவிட வேண்டும்...

இந்தியாவால் ஏதும் ஆவதற்கு இல்லை என்றபின்.......... சார்புநிலை அரசியல் என்ற சிர்த்தாந்தத்தில் என்ன உள்ளது? இதையேன் இவர்கள் போhட்டு குழப்புகிறார்கள் என்பதுதான் புரியாமலிருக்கின்றது. இந்தியா எத்தனை அழிவுகளை கொடுத்தாலும் நாம் இந்தியாவை எதிர்த்து நிற்கமாட்டோம் என்ற துணிவுகூட இந்தியாவை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்.

இந்தியாவை சார்ந்த எமது நிலைப்பாடு என்பது மற்றைய நாடுகளுக்கு எம்முடனான உறவு என்பதில் சந்தேகங்களை உண்டுபண்ணி தடுத்திருக்கலாம்.

ஆக வாழ்வானாலும் சாவானாலும் இந்தியா எமது முதன்மை எதிரி என்ற உறுதியான நிலைப்பாடு பல மாற்றங்களுக்கு வழிசமைக்கும். இந்தியாவை நம்புங்கள் என்று கூறுபவர்களின் வார்த்தையில் எந்த உண்மையுமில்லை என்பது தமிழ் சிறுவர்களுக்கே தெரிந்த ஒன்றாக இருக்கும்போது. அதை கூறும் சம்மந்தரை நீங்கள் எந்த நிலையில் தூக்குகின்றீர்கள்?

ஒற்றுமை என்பது தேவையான ஒன்றுதான் அதற்காக கூடாதார் கூட்டம் கூடுவதால் விழைய இருக்கும் துயரங்களை எந்தஅடிப்படையில் புறம் தள்ளுங்கள் என்று சொல்லுகின்றீர்கள்?

இது மிகவும் வரவேற்கத் தக்கதே

இதை நமது புத்தி இல்லாத புத்திஜீவிகள் இல்லை இந்தியா தான் என்று உச்சரிக்கின்றனவே இவற்றை மக்களிடம் கொண்டும் செல்வது எப்படி ?

அனைவரையும் அரவணைத்து, கொள்கை உறுதியுடன் அறிவார்ந்து செயற்படும் ஒரு தலமை கூட்டமைப்புக்கு வேண்டுமெனில், சம்பந்தர் அகற்றப் பட வேண்டும்.அதற்காகத் தான் சொல்கிறோம் அவர் திருகோண்மலையில் தோற்கடிக்கப்பட வேண்டும்.

:wub:

சம்பந்தர் என்ற தமிழினசாபக்கேடு தோற்கடிப்பட வேண்டும்

நாம் தலைநகர் என்று உரிமை கொண்டாடும் இடத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு இரு சிங்களவரும் இரு முஸ்லீம்களுமே தெரிவாக எமது பிளவு வாய்ப்பைப் கொடுத்திருக்கிறது.

இந்தமுறை வாக்களிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு மட்டும் வாக்களத்தாலே ஒரு தமிழ் பிரதிநித்துவம் கிடைக்கும் மற்றயவை முஸ்லீம்கள் சிங்களவர்களிற்கே.

சம்பந்தர் பிழையானர் அவர் நாடாளுமன்றிற்கு வரக்கூடாது. சரி அவர் திருமலையில் தோற்றுப்போனால் இது சாத்தியமாகுமா?

இல்லையே!

சம்பந்தர் திருமலையில் தோற்றாலும் அவர் நாடாளுமன்றிற்கு தேசியப்பட்டியல் மூலம் போகப்போறாரே?

சம்பந்தருக்கு எதிரான முயற்சியும் தோற்று திருமலையில் தமிழ் பிரதிநிதித்துவமும் பறிபோகவும் போகிறதே!!!

தேர்தலில் தோற்று தேசியப் பட்டியல் மூலம் வருவதற்க்கு சம்ப்ந்தர் சுயமரியாதை அற்றவர் என்று நான் கருதவில்லை.அத்தோடு தேர்தலில் மக்களாஅல் நிராகரிக்கப்பட்ட ஒருவர் தலைவராக இருப்பதற்க்கு எந்தத் தகுதியும் அற்றவராகக் கணிக்கப்படுவார்.ஆனால் திருமையில் இருக்கும் மக்களுக்கு அவரின் தலமைத் துவத்தில் இருக்கும் குறைபாடுகள் விளங்குமா? இந்தியாவின் நாடகம் புரியுமா? என்பதெல்லாம் கேள்விக் குறிகளே.சம்பந்தரின் அடிப்படைப் பிரச்சினை அவர் காலம் காலமாக அறிந்து வந்த இந்தியப் பிராந்திய அரசியல்.இந்த பின்னணியில் வந்தவர்களுக்கு நாளும் மாறி வரும் சர்வதேச நலன் சார் அரசியல் பற்றிய போதிய வாசிப்போ புரிதலோ இல்லை.மேலும் தமக்குத் தெரியாததை மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் போக்கும் கிடையாது அதற்கான வயதும் இல்லை.தமிழரின் தலையெழுத்து என்று நோவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.