Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை வெளிப்படுவதை தடுக்கும் முயற்சி?

வன்னிப் பெருநிலப் பரப்பில் நடைபெற்ற போரின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அரச படை கள் நடத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக் குப் பொறுப்புக்கூறும் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. நாங்களுமா இதைச் செய்தோம் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஐக்கியநாடுகள் சபையுடன் அதன் செயலா ளர் நாயகம் பான் கீமூனுடன் முட்டிமோதிக் கொண்டு இருக்கிறது எமது நாட்டு அரசு.

எப்படியும், என்ன பாடுபட்டும், தலையைக் கீழாக வைத்தேனும் தாம் சுத்தவாளி என்ற நிலைப்பாட்டை ஸ்திரமாக்கி விட இலங்கை அங்கும் இங்கும் என்று ஓடி ஓடி ஆதரவு திரட்டி வருகிறது.

இத்தனைக்கும், ஐ.நா.வின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி மகிந்தராஜபக் ஷவுடன் பேச்சுக்கள் நடத்தியபின்னர் விடுத்த கூட்டறிக் கையில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே, இது விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை நியமிக்கப்போவதாக பான் கீ மூன் தெளிவு படுத்தி இருந்தார். அவ்வாறு செய்வதற்கு தனக்கு அதி காரம் ஆணை உண்டு என்பதனையும் மிக உறுதிபடத் தெரிவித்திருந்தார். இது விடயத்தை இனிமேல் நேருக்கு நேர் பான் கீமூனுடன் கையாள முடியாது என உணர்ந்து கொண்டு இப்போது ஓடிப்பிடித்து விளையாட இலங்கை அரசு முனைந்துள்ளது.

முன்னர் ஐ.நா.மன்றத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையைக் தோற்கடிக்கச் செய்த ""ருசி''யுடன், திமிருடன் செயலாளர் நாயகத்தின் முயற் சியை, நடவடிக்கையை மடக்கி விடுவதற்கு தலையால் நடக்கத்தொடங்கி உள்ளது.

வன்னியில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற் றங்கள் குறித்து சொந்தத்தில் விசாரணை நடத்துவதற் கும் இலங்கை அரசு முன்வருவதாக இல்லை. ஐ.நா. செயலாளர் நாயகம் தமக்கு ஆலோசனைகளை வழங்கி நிபுணர் குழுவை நியமிப்பதையும், அவரைப்பிடித்து இவரைப்பிடித்து தடுத்து விடுவதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கிறது.

ஐ. நா. பாதுகாப்புச் சபையில் கொண்டு வர இருந்த பிரேரணையைத் தோற்கடிக்கச் செய்தது போன்று இப் போதும் பான் கீமூனின் திட்டத்தைத் தடுத்துவிட வேண் டும் என்று ஆலாய்ப் பறக்கிறது எமது நாட்டு அரசு.

அந்த முயற்சியின் ஓர் அங்கமே அணிசேரா இயக்கத் தைக் கொண்டு ஐ.நா.செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு யோச னையை கண்டிக்கச் செய்த திருக்கூத்து.

ஆனால் அந்தக் கூத்து சர்வதேச மட்டத்தில் எடுபடாது என்பதனை இலங்கை இப்போது உணர்ந்து இருக்க வேண்டும். அணிசேரா நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று என பிரிட்டனில் ஐ.நா பிரதிநிதி தெரிவித்திருந்ததனை எப்படி சீரணிக்கப் போகின்றது மகிந்த அரசு?

இது விடயத்தில் இலங்கை அரசுக்கு ஐ.நா சபையின் உயர்மட்டங்களுடன் ஏற்பட்டு இருக்கும் முறுகல் நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இலங்கை அரசு அடம்பிடித்துக் கொண்டு இருப்பதனால், ஆகப் போவது ஒன்றும் இல்லை என்ப தனை ஏன் அதனால் உணர்ந்து கொள்ளமுடியவில்லை?

வளர்ந்து வரும் ஒரு சிறிய நாட்டின் விடயத்தில் ஐ.நா சபை அதன் செயலாளர் நாயகம் இவ்வாறு விடாப்பிடி யாக கயிறு போடுவது ஏன் என விளங்கவில்லை என்று ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப்பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன்ன தெரிவித்து இருக்கிறார். உலக நாடுகளின் இரக்கத்துக்கு உரியதாக இலங்கையை ""மாற்றும்'' புதிய தந்திரோபாயமாகவே இதனைப் பார்க்கலாம்.

ஐ.நா. சாசனத்தை மீறுவதற்கான முயற்சி என்பது ஒரு குற்றச்சாட்டு. நாடொன்றின் உள்விவகாரத்தில் தலை யிடுவது என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

இந்த இரண்டையும் ஒன்றை மற்றொன்றால் மூடி விவகாரத்தை தமக்கு சாதகமாக்கித் தணித்துவிடலாம் என்று இலங்கை கருதுவதாக நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் இந்த விவகாரத்தில் பான் கீ மூனைத் தமது பக்கத்துக்கு இழுத்துவிடவும் இலங்கை ""பெருமுயற்சி'' செய்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

இத்தனை ராஜதந்திரக் கூத்துகளும் ஏன்? உண் மைக்கு என்றும் அழிவில்லை. வன்னிப்பகுதியில் மனித உரிமை மீறல்களை அரசு மேற்கொள்ளவில்லை என்பது உண்மையானால், ஐ.நா செயலாளர் நாயகம் தமக்கென ஒரு நிபுணர்(ஆலோசனை) குழுவை நியமிப்பது குறித்து இலங்கை அரசு ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? அச்ச முற வேண்டும்? அரசின் கை சுத்தமானது எனின் இலங்கை அரசே வெளிநாட்டு நிபுணர்குழு ஒன்றை நியமித்து, தனது பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே?

தனக்கு எதிராக வரும் எந்தக் குற்றச்சாட்டையும் நிராகரித்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வது இந்த அர சுக்கு கைவந்த கலை. மூதூரில் 2008 ஓகஸ்டில் பிரெஞ்சு நாட்டின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பேரின் மரணங்கள் மறக்கப்பட்ட ஒன்றாகி விட்டது.

அதேபோன்று, வன்னிப்பகுதியில் மனிதஉரிமைகளும் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் ஐ.நா. உறுதியாக நின்று செயற்படும் என்று தமிழ் மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பது அழிக்கமுடியாத அல்லது மறக்கமுடியாத மந்திரம். இலங்கை அரசு வன்னிப் போரில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட வில்லை எனில், அது குறித்த விசாரணை என்றதும் அதற்கு ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டுப் பதறுவதும், தாம் சுத்தவாளிகள் என்று கூறுவதற்கு உலக நாடுகளின் ஆதரவை தேடுவதும் ஏன்?

உண்மை ஒரு போதும் அழியாது, என்றோ ஒரு நாள் அது வெளிக்கிளம்பும். தனது உருவத்தை காட்டும்.இது இயற்கையின் நியதி மட்டுமல்ல, அதன் நீதியுமாகும்.

இதனை உணர்ந்து கொள்ளும் மனப்பக்குவம் இலங்கை அரசினருக்கு எப்போது பிறக்கும்...? காலம் பதில் சொல்லாமலா விடும்?

நன்றி - உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவில் கொண்டு வந்த சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையை முறியடிப்பதில் இந்தியாவே பெரும் பங்காற்றியது.அந்த இந்தியாவின் துணை கொண்டு தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறும் ததேகூட்டமைப்பையும் அதன் தலைவரையும் ஆதரிக்கும் உதயன் நிர்வாகம் எப்படித் தமிழ் மக்களுக்கு சரியான வழிகாட்டப் போகிறது.

இதைச் சொல்லும் தகுதி உதயனுக்கு இருக்கின்றதா ? கயேந்திரன் அணி தொடர்பான செய்திகளை தடுக்கும் முயற்சி செய்து கொண்டு கூலிக்கு மாரடிக்கின்றது உதயன் அது பிறருக்கு புத்திமதி சொல்கின்றது

உதயன் முதலில் உண்மையாக இருக்கட்டும்

கீழுள்ளது உதயனின் செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை சக்தி பெறச்செய்வது தமிழர்களின் கடமை திகாமடுல்ல வேட்பாளர் ஹென்றி மகேந்திரன் கருத்து

"வரலாற்றில் எதிர்பாராத பொருத்த மான தலைவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது. அவரை நாம் நமது கண் போல் காப்பதுடன், அவ ரது கரத்தைச் சக்திபெறச் செய்வதற்குத் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்.

சமூகத்திற்காகக் குரல் கொடுப்பவர் யாரெனத் தெரிந்து வாக்களியுங்கள் கல்முனையில் பேரியல் அஷ்ரப் கருத்து

தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் பெய ரைச் சொல்லி, அமரரின் உருவப்படத்தை போஸ்டர்களிலும், கட்அவுட்டுகளிலும் இட்டு தலைவரின் வழியிலேயே வந்துள்ளோம் என்று சொல்லி உங் களது வாக்குகளைப் பெற்று நாடாளுமன் றப் பிரதிநிதியாக வும், அமைச்சர்க ளாகவும் வந்துள்ள வர்கள் இன்று வர

புதுமாத்தளனில் கஞ்சிக்காக கையேந்தி நின்ற குழந்தைகள் இரையானதை எப்படி மறப்பது? சிந்தித்து வாக்களியுங்கள் என்கிறார் கூட்டமைப்பு வேட்பாளர் ஸ்ரீதரன்

புதுமாத்தளனில் பசி, பட்டினியுடன் வாடிய நிலையில் கஞ்சிக்காகக் கையேந்தி வரிசையில் நின்றவேளையில், கொத்துக் குண்டுகளுக்கு இரையாகியதை எப்படி மறப்பது? ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளை ஞர்கள் குண்டுகளுக்கும், ஷெல்களுக் கும் இலக்காகி துடிதுடித்துப் பலியானதை மறந்து

கூட்டமைப்புக்கே வாக்கை வழங்குங்கள்; தவறினால் அரசு தனது கையாள்களுடன் மட்டும் பேசி தீர்வு எனக் கூறித் தமிழரை ஏமாற்றிவிடும் சட்டத்தரணி சுமந்திரன் இப்படி

தமிழ் மக்கள் தமது வாக்குப் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கு வழங்க வேண்டும். இல்லையேல் இந்த அரசு, தனது கையாள்களுடன் மட்டும் பேசிவிட்டு அர சியல் தீர்வு வழங்குவதாகக் கூறி எமது மக் களைத் தொடர்ந்தும் ஏமாற்றி அழித் தொழிக் கும் நடவடிக்கையில்தான் ஈடுபடும்.

புனர்வாழ்வுபெற்று வரும் இளைஞர், யுவதிகளை இயல்பு வாழ்க்கைக்குத் திருப்ப வேண்டும் பேரம்பேசும் சக்திக்கான ஆணையைக் கோருகிறார் ஸ்ரீ கஜன்

யுத்தத்தையடுத்து புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் பேராளி களை துரித கதியில் விடு வித்து அவர்களுக்கு உரிய வகையில் தொழில் களை வழங்கி அவர் களை இயல்பு வாழ்க் கைக்குத் திருப்பவேண்டும்.

தமிழீழம் என்பது எமது தாயகத்தின் பெயர்; அது தனிநாடு என்று அர்த்தப்படாது நல்லூர்க் கூட்டத்தில் சீ.வி.கே. சிவஞானம்

தமிழீழம் என்பது எமது தாயகத்தின் பெயர். அதற்குத் தனிநாடென்பது அர்த்தமல்ல. தனித்தமிழீழம் என்பதுதான் தனிநாடாகும்.

எனது சகோதரர் மகேஸ்வரன் போன்று நானும் அர்ப்பணிப்புடன் மக்களுக்குச் சேவை புரிவேன் வல்வெட்டித்துறையில் வைத்து துவாரகேஸ்வரன்

யாழ். குடாநாட்டு மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தல் மூலம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனக்கும் எனது கட்சியின் வேட்பா ளர்களுக்கும் வாக் களித்து அந்த மாற் றத்தைக் காணலாம்.

எமது மக்களை ஏமாற்றுவதே பலரின் அரசியல் மூலதனமாகவுள்ளது அமைச்சர் டக்ளஸ் கூறுகிறார்

எமது மக்களின் வாக்குகளை அபக ரிக்க வரும் நபர்கள் இன்னமும் மக்களை ஏமாற்றுவதை மட்டுமே தங்களது அரசி யல் மூலதனமாகக் கொண்டிருக்கின்ற னர். இவ்வாறு தெரிவித்தார் சமூகசேவை கள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரு மான கே.என். டக்ளஸ் தேவானந்தா.

தமிழ் மக்களின் அவல வாழ்வு தொடராமல் இருக்க கூட்டமைப்பின் அரசியல் பலத்தை உறுதிசெய்வோம் பேராசிரியர் சிவசந்திரன் கூறுகிறார்

எமது மக்களின் அவல வாழ்வு தொட ராமல் இருப்ப தற்கு எங்களுக்கான அரசியல் பலத்தை பொருத்தமானவர் களைக் கொண்டு உறுதிசெய்ய வேண்டிய தேவை அனைவரின் கைக ளிலுமே உள்ளது.

இறைமை எல்லா இன மக்களுக்கும் சொந்தமானது இந்தத் தேர்தல் மூலம் தமிழினம் அதனை நிரூபிக்கும் அல்வாய்க் கூட்டத்தில் சம்பந்தன்

இறைமை எல்லா இன மக்களுக்கும் சொந்தமானது. தமிழ் மக்கள் தமது இறை மையை இத்தேர்தலில் பயன்படுத்தி தமிழி னம் தனித் தேசிய இனம் என்பதை ஆட்சியாளர்களுக்கு மீண்டும் சொல்லிவைக்கவேண்டும்.

சுயேச்சைக் குழுக்கள் பணத்திற்காகவே களத்தில் குதித்துள்ளன எனக் கூறுவது பொறுப்பற்றதாகும் இப்படிக் கூறுகிறார் தணிகாசலம்பிள்ளை

சுயேச்சைக் குழுக்கள் எல்லாமே பணத் திற்காகவே களத்தில் குதித்துள்ளன என்ற பிரசாரம் எம்மைப் போன்ற நேர்மையா னவர்களையும் பாதிக்கின்றது. இவ்வாறு கூறுவது பொறுப்பற்றதாகும். எமது மக்கள் புத்திசாலிகள், எந்தச் சுயேச்சைக் குழுக்கள், எந்தக் கட்சிகள் விலை போயுள் ளார்கள்

கூட்டமைப்பைப் பலப்படுத்துவதன் மூலமே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் வேட்பாளர் அருந்தவபாலன் தெரிவிப்பு

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் எம்முன் வந்து நிற்கிறது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முத லில் சாத்வீக போராட்டத்தை நடத்தி னோம்.

சலுகைகளுக்காக, பொய்வாக்குறுதிகளுக்காக வாக்களிப்பது புதிய வகையான அரசியல் அடிமைத்தனத்திற்கே வழிவகுக்கும் சுயேச்சைக்குழு வேட்பாளர் கதிர்காமநாதன் உரை

தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத்தேர் தலில் வெறும் சலுகைகளுக்காவும், பொய் வாக்குறுதிகளுக்காகவும் வாக்களிப்பது புதிய வகை அரசியல் அடிமைத்தனத் திற்கே வழி வகுக்கும் என்பதை உணர வேண்டும்.

சிலரின் மூளையை சீமெந்தால் பூசிவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.முதலில் ஜனநாயகத்தை மதியுங்கள்.உதயனுக்கு சம்பந்தரப் பிடிக்கலாம் உங்களுக்கு கஜேந்திரனை பிடிக்கலாம் எதோ நாங்கள் சொல்லவதைத்தான் எல்லோரும் கேட்க வேணுமென்ற அரசியல் செய்யாதையுங்கோ.நீங்கள் செய்வது சரியென்றால் தொடர்ந்து செய்யுங்கள் ஒருநாள் வெற்றி பெறுவீர்கள். அதைவிட்டு மற்றவனை துரோகியாக்குவதிலேயே குறியாய் இராதீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் மூளையை சீமெந்தால் பூசிவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.முதலில் ஜனநாயகத்தை மதியுங்கள்.உதயனுக்கு சம்பந்தரப் பிடிக்கலாம் உங்களுக்கு கஜேந்திரனை பிடிக்கலாம் எதோ நாங்கள் சொல்லவதைத்தான் எல்லோரும் கேட்க வேணுமென்ற அரசியல் செய்யாதையுங்கோ.நீங்கள் செய்வது சரியென்றால் தொடர்ந்து செய்யுங்கள் ஒருநாள் வெற்றி பெறுவீர்கள். அதைவிட்டு மற்றவனை துரோகியாக்குவதிலேயே குறியாய் இராதீர்கள்

ஒரு பச்சை போட்டுள்ளேன்

நான் நேற்று யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் உரையாடினேன்

அங்கு அவர் சொன்னது

அவர் ஒரு நிரந்தர பு...

கூட்டமைப்புக்குத்தான் வாக்கு

வேறு எவன் எல்லாமோ புலம்பிக்கொண்டு திரியுறாங்கள்

சனம் கேட்பதும் இல்லை பார்ப்பதும் இல்லை

அப்போ நான் கேட்டேன் அவர்கள் புலிகள் வைத்த கேரிக்கைகளையே முன் வைக்கின்றனர்

நீங்கள் இப்படி சொல்கின்றீர்களே என்று.

அதற்கு அவர் சொன்னது

வேலுப்பிள்ளையின் மகனால் ஏலாது என்றால் எவனாலும் முடியாது.

Edited by விசுகு

arjun, on 22 March 2010 - 08:33 PM, said:

சிலரின் மூளையை சீமெந்தால் பூசிவிட்டார்களோ என எண்ணத்தோன்றுகிறது.முதலில் ஜனநாயகத்தை மதியுங்கள்.உதயனுக்கு சம்பந்தரப் பிடிக்கலாம் உங்களுக்கு கஜேந்திரனை பிடிக்கலாம் எதோ நாங்கள் சொல்லவதைத்தான் எல்லோரும் கேட்க வேணுமென்ற அரசியல் செய்யாதையுங்கோ.நீங்கள் செய்வது சரியென்றால் தொடர்ந்து செய்யுங்கள் ஒருநாள் வெற்றி பெறுவீர்கள். அதைவிட்டு மற்றவனை துரோகியாக்குவதிலேயே குறியாய் இராதீர்கள்

சபையில் சொதி கேட்பது போல் உங்களுக்கு சம்பந்தரை மட்டும் தான் பிடிக்கும் என்று உதயனுக்கு பிடிப்பதாகச் சொல்லுகின்றீர்கள் உங்களுக்கு பச்சை குத்த ஒரு விசுகு

நாங்கள் சொல்லவதைத்தான் எல்லோரும் கேட்க வேணுமென்ற அரசியல் செய்யாதையுங்கோ

இதைத் தான் நானும் சொல்லுகின்றேன் உங்களுக்கும் உதயனுக்கும்

விசுகு

ஒரு பச்சை போட்டுள்ளேன்

நான் நேற்று யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் உரையாடினேன்

அங்கு அவர் சொன்னது

அவர் ஒரு நிரந்தர பு...

கூட்டமைப்புக்குத்தான் வாக்கு

இதை எத்தனை தடவை தான் இப்படி சொன்னதையே சொல்லுவீர்கள் நீங்கள் கூட்டமைப்புக்கு தொலைபேசியில் கதைத்தீர்கள் போலும் <_<

அப்போ நான் கேட்டேன் அவர்கள் புலிகள் வைத்த கேரிக்கைகளையே முன் வைக்கின்றனர்

நீங்கள் இப்படி சொல்கின்றீர்களே என்று.

அதற்கு அவர் சொன்னது

வேலுப்பிள்ளையின் மகனால் ஏலாது என்றால் எவனாலும் முடியாது.

அப்ப சம்பந்தரால் ஏலும் என்றா அவர் கூட்டமைப்புக்கு ஓட்டு போடுகின்றார் :lol:

தீர்வு வழங்கத்தவறினால் வேறு விளைவு; இரா. சம்பந்தன்!

:D என்னமாம் உங்கள் தலைவர் இப்படிச் சொல்லுகின்றார் என்ன அப்ப கூட்டமைப்பு ஆயுதம் ஏந்துமா ? :lol:

Edited by tamilsvoice

தமிழர் பலத்தை சிதைத்து பதவிக்காய் அலையும் "ஊடகப் பிதாமகனும்" "உதயன் நாளிதழும்"..?

த.தே.கூட்டமைப்பில் போட்டியிட சில ‘காசு பிசாசுகள்” இழுபறியில் நிற்கின்றன என்று குறிப்பிட்டிருந்தேன். இக் காசு பிசாசுகளில் ஆபத்து மிக்கவர் ‘உதயன்” நிர்வாக இயக்குனர் சரவணபவன். ‘சப்றா” நிறுவனத்தின் மூலம் நிதியை மக்களிம் திரட்டி நிறுவனத்தை முடக்கிய அவர், அந்நிதியை மக்களிடம் திருப்பிச் செலுத்தாமல் பெற்றெடுத்த குழந்தையே ‘உதயன்” என்பது யாழ் அறிந்த உண்மை.

இறுதி புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் ‘தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் தமது பத்திரிகையை படிக்கிறார்” என்ற மகா விளம்பரத்தை செய்து பிழைப்பு தேடிய சாதனையும் சரவணபவனையே சாரும்.

<_<ஆகவே செருப்பு என்றால் ‘பாட்டா” சக்லேட் என்றால் ‘கன்டோஸ்” போன் என்றால் ‘டயலக்” இப்படியே பழமை வியாதியில் ஊறியிருக்கும் எம் சனத்தின் மனம் மாறாமல் இருந்தால் பத்திரிகை என்றால் ‘உதயன்’ என்பதை மட்டுமே அறியும் வாய்ப்பு உள்ளது.

பழமை வியாதி என்ற பலவீனத்தின் வழியே அரசியல் பிரவேசம் செய்ய உள்ளோருக்கு மக்கள் தகுந்த பாடம் கொடுக்க வேண்டும்.

அரசியலில் புகுந்துவிடும் அவர்கள் நாளை தமது கையில் தலைமையை எடுப்பதற்கும் இவ் பழைமை வியாதியே காரணமாக இருக்கும்.

Edited by tamilsvoice

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.