Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவக்கால நற்சிந்தனைகள்.....

Featured Replies

பகிர்ந்தளித்தல் இல்லையென்றால் தவக்கால நோன்பிலும் பயனில்லை

இறைவன் விரும்பும் நோன்பினை மேற்கொள்வது மிகவும் முக்கியம்

தவக்காலத்தில் பல கிறிஸ்தவர்கள் நோன்பிருத்தலை பக்தியாக ஆன்மீக வாழ்வின் ஈடேற்றத்திற்கு பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றார்கள்.

இயேசுவின் பாடுகள் நிறைந்த நாட்களில் நோன்பிருந்து இறையுணர்வுக்குள், இறையுறவுக்குள் வாழ்வது நல்லது. இது உடல், உள, ஆன்மீக வாழ்வை சீர்செய்வதுடன், இறைவனுடன் நெருங்கி வாழும் சலாக்கியத்தை தருகின்றது.

தவக்காலத்தில் பல நிலைகளில் நோன்பிருந்து ஜெப சிந்தையோடு தர்மம் செய்து வாழ்வதும் சிறப்பானது. மனுக்குலத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இயேசுவுக்காக நாம் செய்யும் நோன்பு ஓர் அடையாளமாகலாம்.

ஆனால் நோன்பு என்பது பழைய ஏற்பாட்டுக்காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆன்மாவை ஒடுக்க, உடலை ஒடுக்க, பாவங்களை நினைத்துப் புலம்ப, போரில் வெற்றிகொள்ள, வியாதியிலிருந்து சுகம் பெற, மனந்திரும்பி இறைவனிடம் வர, வேண்டுதல் நிறைவேற அன்றையவர்கள் நோன்பிருந்தார்கள்.

இயேசுவும் நோன்பிருந்து இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றினார். மணவாளன் எடுபடும் போது சீடர்கள் நோன்பிருப்பார்கள் என்று கூறினார். திருமுழுக்கு முனிவர் யோவானின் சீடர்கள் நோன்பிருந்தார்கள். சில நோக்கங்களுக்காகவும் நோன்பு மேற்கொள்ளப்பட்டது.

நோன்பை எப்படி மேற்கொள்ள வேண்டும், எப்படி மேற்கொள்ளக் கூடாது என்ற போதனையை இயேசு தருகின்றார்.

மத்தேயு 06:16-18ல் வெளிவேடக் காரரைப் போல முக வாடலாய் இருக்க வேண்டாம். மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்துகின்றார்கள். நோன்பு இருக்கும் போது தலைக்கு எண்ணை தேய்த்து முகத்தைக் கழுவுங்கள். இப்படியாக நோன்பிருந்தால்தான் இறைவனும் பதில் தருவார் என்கிறார்.

ஆனால் ஏசாயா இறைவாக்கினர் 58:06-07ல் நோன்பு என்ன என்று எட்டு சிந்தனைகளை சுட்டிக் காட்டுகின்றார்.

அவையாவன; அக்கிரமக் கட்டுகளை அவிழ்ப்பது, நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்ப்பது,

ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்குவது,

எந்த நுகத்தடியையும் உடைத்துப் போடுவது, பசித்தவனுக்கு உண்ணாகாரத்தை பகிர்ந்து கொடுப்பது,

தங்குமிடமில்லாத சிறுமையானவரை வீட்டிலே சேர்த்துக்கொள்வது,

ஆடையில்லாதவனுக்கு ஆடை கொடுப்பது,

உன் இனத்தானுக்கு உன்னை ஒழிக்காதிருப்பது. இதுதான் இறைவன் விரும்பும் நோன்பு எனக் காண்கின்றோம்.

சுருக்கமாகக் கூறினால், தன்னைப் பகிந்தளிக்க வேண்டும். பகிர்ந்தளித்தலில் பாதிப்பு இல்லையென்றால் தவக்காலத்தில் செய்யும் நோன்பிலும் பயனில்லை.

இன்று பகிர்ந்தளித்தல் இல்லாமல் மனுக்குலம் பல்வேறு செயல்களினால் பாதிக்கப்படுகிறது. சமயங்களின் பெயரால் நடக்கும் அநீதிகளை ஒழிக்க அரசியல், பொருளாதாரம், கலாசாரம் என்ற செயல்களினால் நடக்கும் வன்முறைகளை ஒழிக்க, பெண்ணடிமைத்தனத்தினால் ஏற்படும் அவலத்தை ஒழிக்க, சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களை ஒழிக்க, ஊழல் நிலை வாழ்வை ஒழிக்க, எங்கும் எதிலும் மனித நேயத்தை மனித மான்பைக் கொண்டுவர, தீமைகளை நன்மையால் வெல்ல உண்மையாக நோன்பிருக்க இந்நாட்களில் இறைவன் நமக்கு அறைகூவல் விடுக்கின்றார்.

“உண்மையாம் உபவாசம் எது உண்ணாமல் இருப்பதா அது” என்கிறது பாடல் வரிகள் சிந்திப்போம் செயற்படுவோம். இத் தவக்காலத்தில் இறைவன் விரும்பும் வகையில் செயற்பட்டு அவரது அருள் வரப்பிரசாதங்களைப் பெறுவோம்.

அருட்பணி

டீ.எஸ். மதியாபரணம்... -

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் கவனித்தேன். மிகவும் பயனுள்ள் பதிவு. பாராடுக்களும் நன்றிகளும். நான் மட்டும் தான் கிறிஸ்தவள் என் எண்ணியியிருந்தேன்.

  • தொடங்கியவர்

உறவுகள் புதுப்பிக்கப்படுவதற்கு தவக்காலம் வழிவகுக்கட்டும்!

தவக் காலத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளோம். திருப்பாடுகளின் புனித வாரம் அடுத்து வரும் குருத்தோலை ஞாயிறோடு ஆரம்பமாகிறது.

பெரிய வியாழன், புனித வெள்ளி, அல்லேலூயா சனி என அவ்வாரத்தின் திருநாட்களையடுத்து உயிர்ப்புப் பெரு விழாவைக் கொண்டாடுவதற்கும் நாம் இப்போதிருந்தே ஆயத்தமாகி வருகிறோம்.

திருப்பாடுகளின் வாரத்தில் பெரிய வியாழக்கிழமையில் வரும் பாதம் கழுவும் சடங்கு அன்புக்கும் சமத்துவத்துக்குமான புதிய பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றது.

இவ்வுலகில் சகலரும் சமம். உயர்வு, தாழ்வு என்று ஒன்றில்லை. தந்தையாம் ஆண்டவர் முன்னிலையில் அனைவரும் சகோதரர்கள். எவரும் எஜமானரோ எவரும் அடிமைகளோ அல்ல. அத்தகைய கர்வம் எவருக்கும் இருக்குமானால் அதனை மனதிலிருந்து எடுத்துப் போட வேண்டுமென்பதை பாதம் கழுவும் சடங்கு வெளிப்படுத்துகிறது.

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் பாடுபட முன்னர் தம் சீடர்களுக்கு இராப்போசனமொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் தம்மைக்காட்டிக் கொடுக்கப் போகும் யூதாசும் இருந்ததை அவர் அறிவார். எனினும் யூதாஸை அவர் எதிரியாகப் பார்க்கவில்லை. அந்த இராப்போசன பந்தியில் ஏனையவர்களுக்குச் சமமாக யூதாஸையும் அவர் கெளரவிக்கின்றார். யூதாஸை அவர் ஒதுக்கவில்லை.

இந்நிகழ்ச்சி நம் எதிரிகளையும் நமக்கு வேண்டாதவர்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர்களையும் மதிக்க வேண்டும். அன்பு செய்ய வேண்டும் என்பதை எமக்கு வலியுறுத்துகிறது.

நமக்குள்ள பெரிய பிரச்சினையே இது தான். நமக்கு வேண்டாதவர்களை ஒதுக்கியே வைப்பது. சிலர் நமது தாய், தந்தை, சகோதரர், நெருங்கிய உறவுகளைக்கூட இவ்வாறு ஒதுக்கிவைத்திருப்பதைப் பார்க்க முடிகின்றது.

மன்னிப்பதும் ஏற்றுக்கொள்வதும் ஒரு பக்கமிருக்க இத்தகைய நெருங்கிய உறவுகளுடன் வருடக்கணக்கில் பேச்சு வார்த்தைகள் கூட இல்லாமலுள்ள பல குடும்பங்களை பார்க்க முடிகின்றது.

இயேசு கிறிஸ்து தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகும் யூதாஸை ஏற்றுக் கொண்டு அவரையும் மன்னித்து அவருடனான உறவையும் தக்க வைத்துக்கொள்ள முற்படுகிறார். நாம் சிறு சிறு சில்லறைப் பிரச்சினைகளுக்காக சொந்த உறவுகளை நட்புகளைப் பிரித்துவைத்துள்ளோம்.

நமது வாழ்வில் செபம் மிக முக்கியமானதாகிறது. குறிப்பாக இத்தவக்காலத்தில் ஒரு போதுமில்லாதவாறு நாம் செப தபங்களிலும் பல்வேறு ஒறுத்துதல்களிலும் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் அதன் பிரதிபலன் என்ன? எமது செயலும் செபமும் ஒன்றோடொன்று முரண்டுகின்றபோது அதற்கான பெறுமதி என்ன?

நாம் அனுதினம் செய்யும் செபத்தில் நம் ஆண்டவர்கள் பித்துத்தந்த பரலோக தந்தையை நோக்கிய செபம் முக்கியம் பெறுகிறது. எமது வேண்டுதலில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களையும் மன்னித்தருளும் என மன்றாடுகிறோம். இத்தகைய வேண்டுதல் வெறும் வார்த்தைகளில் மட்டும்தானா. அப்படியானால் எமது செபமும் ஒறுத்தல்களும் பெயரளவில் மற்றவர் காண்பதற்காக மட்டுமானதா? எல்லாத் தவக்காலத்திலும் இதுபற்றி நாம் சிந்திக்க மறந்தாலும் இம்முறை இதனை முக்கிய கவனத்திற்கொள்வோம்.

சிலுவைப் பாதை செய்வதற்காக பல மைல்களைக் கடந்து கல்வாரி மலைகளில் ஏறி எம் பாவங்களுக்குப் பிராயச் சித்தம் தேட முன் சில படிக்கட்டுகள் இறங்கி நம் அயலில் அல்லது நம் வீடுகளுக்குள்ளேயே நாம் ஏற்றுக் கொள்வதற்காக எங்கும் நம் உறவுகளைச் சந்திப்போம். அவர்களை தேடிச் செல்வோம். அவர்களோ அல்லது நாமோ யார் தவறிழைத்திருந்தாலும் அதனை நாம் மன்னிப்போம். ஏற்றுக்கொள்வோம். துண்டாடப்பட்டிருந்த உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வோம். இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடருவோம். அத்தகைய செயல்பாடுகளே நாம் செய்யும் சிறந்த ஒறுத்தலாகும்.

கிறிஸ்தவம் ஒருவரை ஒருவர் அன்பு செய்வதையும் மன்னித்து ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்துகிறது. குறிப்பாக இத்தவக்காலத்தில் நாம் எம்மையே திருப்பிப் பார்த்து திருத்திக் கொண்டு அதன்பின் இயேசுவோடு ஒன்றிப்பதுவே பொருத்தம்.

நீ செபம் செய்யும் போது உன் சகோதரனிடத்தில் உனக்கு மனத்தாங்கல் இருக்குமானால் அவனுடன் சமாதானம் செய்து கொண்ட பின் செபம் செய் எனவும் “உன்னை நீ நேசிக்குமாப் போலவே உன் அயவானையும் நேசி” எனவும் வேதம் கூறுகிறது.

நம்மில் ஆயிரம் தவறு இருந்தாலும் குற்றமிருந்தாலும் நம்மை நாம் ஏற்றுக்கொண்டு அன்பு செய்யத்தவறுவதில்லை. அப்படியானால் சிறு சிறு பிரச்சினைகள் தவறுகளுக்காக நம் அயலவரை நாம் ஏற்க மறுப்பது சரியா? இத்தகைய சிந்தனைகள் இம்முறை தவக்காலத்தில் நம்முள் எழட்டும். நம்மைப் புதுப்பிக்கட்டும். நமக்குள் மனந்திரும்புதல் இடம்பெறட்டும். நாம் மட்டுமன்றி நம்மைப் பிரிந்து நிற்கும் உறவுகளையும் சேர்த்துக் கொண்டு இம்முறை உயர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாட ஆயத்தமாவோம்.

நம் ஆண்டவராகிய இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவும் அளவிற்கு தம்மைத் தாழ்த்துகிறார். எமது இற மாப்புகளைத் தளர்த்தி விட்டு எம்மைத் தாழ்த்துவோம். இலவசமாக இறைவன் தரும் அன்பினை நம் எதிரிகளுக்கும் நாம் இலவசமாக வழங்குவோம். இத்தவக்காலம் நம் வாழ்வில் புது அர்த்தத்தை உண்டு பண்ணட்டும். புதிய அத்தியாயத்தைப் புரட்டட்டும்.

இதனைச் செய்வதற்கான அருட்கொடையை நம் ஆண்டவர் பொழிவாராக!

எல். செல்வா

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

இணைப்பிற்கு நன்றி குமாரசாமி அண்ணா....!

  • தொடங்கியவர்

இன்று பெரிய வியாழன்

ஏப்ரல் 01,2010,00:00 IST

உலகில்'கடவுள் மாம்சத்தில் வெளிப்பட்டார்' என்ற வசனப்படி மனுஷக் குமாரனாக இயேசு கிறிஸ்து கி.பி.34ம் ஆண்டு உலகில் வாழ்ந்தார். அவர் தனது சீடர் யூதாஸ் காரியோத் என்பவனால் காட்டிக் கொடுக்கப் படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், தனது 12 சீடர்களுடன் கடைசியாக 'பஸ்கா' என்ற புளிப்பில்லா அப்பம் புசிக்கும் விருந்தில் பங்கேற்றார். அப்போது சீடர்கள் மூலம் மனுக்குலத்துடன் புதிய உடன்படிக்கை ஏற்படுத்திய நிகழ்ச்சியே பெரியவியாழன் (மான்டி தேர்ஸ்டே) என்று அழைக்கப்படுகிறது.

'கம்யூனியன், திருப்பலி, ஐக்கிய பந்தி' என பல பெயர்களுடன் இன்றும் உலகமெங்குமுள்ள அனைத்து சர்ச்சுகளிலும் இது அனுசரிக்கப் பட்டு வருகிறது. ''நான் திரும்பி உலகை நியாயம் தீர்க்க வரும்வரை என்னை நினைவு கூற இதைச் செய்யுங்கள்,'' என்றார் இயேசு. கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாமிலிருந்து 60வது தலைமுறையில் பிறந்த, கிறிஸ்து இயேசு தனது 30வது வயதில் யோர்தான் நதியில் ஞானஸ்நானம் பெற்றார். 12 சீடர்களை தனது பணிக்கென தேர்வு செய்தார். இயேசு தனது 30வது வயதிலிருந்து, மூன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நாடு முழுவதும் சுற்றி, நோய்களை குணமாக்கியும், மரித்தோரை எழுப்பியும், புயலால் சீற்றமடைந்த கடலை அமைதிப் படுத்தியும், குஷ்டரோகிகளை சொஸ்தமாக்கியும் உள்ளிட்ட பல்வேறு அற்புதங்கள் மூலம் மக்களுக்கு நற்பணிகளை செய்தார்.

'மனந் திரும்புங்கள், கடவுளின் அரசு சமீபமாயிருக்கிறது' என பிரசங்கம் செய்தார். இயேசுவின் அற்புதச் செயல்களாலும், ஆற்றல் மிக்க சொற்பொழிவாலும் யூதமதக் குருக்கள் கலங்கியதுடன், அவர் மீது பொறாமை கொண்டு கொல்ல வகை தேடினர். அப் போது தனது சீடரான யூதாஸ் காரியோத், மதக்குருக்களிடம் இயேசுவைக் காட்டிக் கொடுப்பதாக 30 வெள்ளிக் காசுக்கு பேரம் பேசினான். பஸ்காவில் உடன்படிக்கை: இந்நிலையில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தை நினைவு கூறும்படியாக 'பஸ்கா' என்ற பண்டிகையில் புளிப்பில்லா அப்பம் புசித்தனர். இதனை ஆசரிக்க சீடர்களுடன் எருசலேம் வந்த இயேசு, ''நான் பாடுபடுகிறதற்கு முன்னே இந்த பஸ்காவை உங்களுடன் புசிக்க ஆசையாயிருந்தேன், ஆனாலும் கடவுளின் அரசாட்சி வரும்வரை புசிக்க மாட்டேன்,'' என்றார்.''உங்களில் ஒருவன் என்னை காட்டிகொடுப்பான்,'' என்று கூறி சீடர்களுக்கு தாழ்மையை கற்பிக்கும் படியாக, ஒவ்வொருவரின் கால்களை கழுவின பின்பு பஸ்காவை துவக்கினார்.

இயேசு, அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் செய்து, அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து ''இதைப்புசியுங்கள், இது உங்களுக்காக கொடுக்கப் படும் எனது சரீரமாயிருக்கிறது,'' என்றார். அதன்பின் திராட்சைப்பழ ரசப் பாத்திரத்தையும் கொடுத்து, ''இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காக சிந்தப்படுகிற புது உடன் படிக்கைக்குரிய என்னுடைய ரத்தமாயிருக்கிறது,'' என்றார். பின் சீசர்களை நோக்கி, ''நான் உங்களுக்கு பணிவிடைக் காரனாக இருக்கிறேன். அது போல உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரன் போலவும் இருக்கக்கடவன்,'' என்றார். பஸ்காவை முடித்ததும் யூதாஸ்காரியோத் தவிர மற்ற சீடர்களுடன் 'கெத்சமனே' தோட்டத்திற்கு வந்து ஜெபித்தார். அப்போது இயேசுவை சிலுவையில் அறையும்நிகழ்ச்சிக்கு(பெரிய வெள்ளி) துவக்கமாக, யூதாஸ் காரியோத் இயேசுவை ரகசியமாய் காட்டிக் கொடுக்க ஆசாரியர்கள், யூத குருமார் களுடன் வந்து இயேசுவை அடையாளம் காட்டும்படியாக அவருக்கு முத்தம் கொடுத்து காட்டிக் கொடுத்தான். இந்த சம்பவம் நடந்த நாளே பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது.

நன்றி: தினமலர்

இன்று பெரிய வியாழன் இறுதி இராப்போசன நாள்

April 1st, 2010

உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்கள் கிறீஸ்தவர்களினால் இன்று பெரிய வியாழன் எனப்படும் புனித வாரத்தின் யேசுக்கிறிஸ்துவின் இறுதி இராப்போசன நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகின்றது.

நற்கருணை அன்பின் வெளிப்பாடு; அருள் வாழ்வின் ஒற்றுமையின் சின்னம்; வாழ்வின் மையம், ஆன்மீக உறவு என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

உலகின் மீது அன்பு கொண்ட இறைவன் தன் ஒரே மகனை உலகின் மீட்புக்காக உலகிற்கு அனுப்பினார். அன்பே உருவான இயேசு தம் வாழ்வாலும் வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினார். இவ்வுலக மனிதர்கள் நாம் செய்யும் பாவங்களுக்காக யேசு இறைவனின் சித்தத்தை ஏற்று தன்னையே பலிக்கடாவாக்கினார்.

;இயேசு ஒருவரே சொன்னதை செய்தவரும் செய்ததை சொன்னவராகவும் திகழ்கின்றார்.

உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு கூட இருப்பேன் என்று சொன்னவர், இறுதியில் அன்பின் சின்னமாக தமது இருப்பின் அடையாளமாக நற்கருணையை ஏற்படுத்தினார். இது பெரிய வியாழன் அன்று நடைபெற்ற புனிதமான நிகழ்ச்சியாகும்.

மனிதம் மலர வேண்டும் மானுடம் வாழ வேண்டும் என்பதே இறை மகன் இயேசுவின் இலட்சியக் கனவு. கூடி வாழவும் பகிர்ந்து கொள்ளவும் பணித்தார். யேசுகிறிஸ்துவின் பிரசன்னமே நற்கருணை பிரசன்னம். உலக இறுதி வரை வாழ்வோம்.

அனைவரும் மீட்புபெற நற்கருணையை உண்டாக்கினார். அநீதியும் அடக்குமுறையும் அதிகார அத்துமீறல்களும் ஒடுக்குவதும் ஓதுக்குவதும் அறவே இல்லாத ஒரு புதிய சமுதாயத்தைப் படைக்கவே இயேசு தன்னை அர்ப்பணித்தார்.

இயேசு தன்னுடைய மூன்றாண்டு காலப் பணிவாழ்வில் தன்னோடு இணைத்துக் கொண்ட பன்னிரு நண்பர்களோடு கடைசி இராப்போசனத்தை உட்கொண்டார். வாக்களித்தபடியே தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று இயேசு அறிந்திருந்தார். இராப்போசனம் நடைபெறலாயிற்று.

இயேசுவைக் காட்டிக் கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கவே பசாசு தூண்டியிருந்தது.

நண்பர் என்ற சொல்லுக்கு அர்த்தங்கள் ஆயிரம். நாம் இயேசுவை மறுதலித்தாலும் அவரை விட்டுப் பிரிந்தாலும் அவர் நம்மை வெறுப்பதில்லை. மாறாக அவர் நம்மை என்றும் தம் குழந்தைகளாகவே வாழ்விக்கின்றார். வழிநடத்துகின்றார். இறைமகனுக்கு ஏற்ற வாழ்வு நம்மிடம் இருக்கிறதா…? நாம் வாழும் சமூகத்தில் மற்றவர்களை நம்மிடம் பழகுபவர்களை எத்தனை இடர்ப்படுத்தியிருக்கின்றோம்..? நிந்தனை செய்திருக்கின்றோம்…….? மறுதலித்திருக்கின்றோம்…..? இவற்றை எல்லாம் நாம் விட்டுவிட வல்ல தேவன் நமக்கு மன்னிப்பு அளித்து நமக்கு புதுவாழ்வு தந்திடுவார்.

இன்றைய இராப்போசன நிகழ்விலே யேசு தம் சீடரின் பாதங்களை கழுவிக் கொள்கின்றார். தன்னையே தாழ்த்தி தன் சீடர்களுக்கு பணிவிடை செய்கின்றார் மனுமகன்.

நம்மவர்களில் எத்தனை பேர் இந்தத் தாழ்மையை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் வாழ்கின்றோம். நவநாகரீகமான உலகிலே நம்மை நமது ஆளுமையை பணத்தை செல்வாக்கை காட்டி உலகில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இவற்றை எல்லாம் நாம் விட்டு விடக்கூடிய மனவலிமையையும் தேவையுள்ளோருக்கு பணி;விடை செய்யக்கூடிய மனத்தாழ்ச்சியையும் இறைமகன் யேசுவிடம் வேண்டி நிற்போம்.

இன்றைய காலகட்டத்தில் குருத்துவத்திற்கான அழைப்பு நிலைகள் அருகி வரும் நிலையையே நாம் காணக்கூடியதாக உள்ளது. லௌகீக வாழ்வை மறுத்து இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய குருக்கள் கன்னியாஸ்திரிகளுக்கான அழைப்பின் தேவை உலகிலே பெருகி வருகின்ற நிலையில் இந்தத் தேர்வுகளுக்கு ஏற்ற பணியாளர்கள் உலகில் அழைக்கப்பட வேண்டி நிற்போம்.

அத்துடன் இந்த இறைபணியில் இதுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கும் ஆயர்கள்;, அருட்தந்தையர், அருட்சகோதரிகள் தத்தம் பணியினை செவ்வனே ஈடுபடக்கூடிய உடல் உள வலிமையை அவர்களுக்கு அளித்தருள வேண்டுமென்று வேண்டிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய பெரியவியாழன் நாளில் இறைமகன் எமக்கு உணர்த்தி கடப்பாடுகளை நாம் செவ்வனே உணர்ந்தவர்களாக நமது கடமைகளை முன்னிறுத்தி நம் முன்னுள்ள தேவைகளுக்காக அவரிடம் இரந்து மன்றாடுவோம்.

http://www.youtube.com/watch?v=WXnY8c5LLVc

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம் – உன்னதத்தின் ஆறுதல்!

April 2, 2010

உன்னதத்தின் ஆறுதல்!

(பெரிய வெள்ளி – சிலுவைத் தியாகம்)

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம். (எசாயா 53:5)

உலகம் முழுவதும் யேசுவின் மரணத்தை பல கோணங்களில் நினைவு கூர்வதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இன்று தேவன் உன்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீ எப்படி எனது மரணத்தை நினைவு கூருகிறாய்? இதற்கான பதிலை நீயறிய இந்த எசாயாவின் புத்தகம் 53ம் அதிகாரம் முழுவதையும் மிக அமைதியாகவும், தியானத்தோடும் வாசித்து தியானிப்பாய் ஆகில் இந்த சிலுவையின் தியாகத்தை உன்னால் அறிய முடியும். அதின் மறைவில் மறைந்திருக்கும் தியாகத்தின் அன்பை உன்னால் மறக்கவோ, மறைக்கவோ முடியாது. 2010 ஆண்டுகளுக்கு முன்னர் உலகம் இப்படியான ஒரு நாளைக் கண்டிராவிட்டால் மனுக்குலத்தின் கதி இன்று எப்படியிருக்கும் என்று நீயே சிந்தித்துப்பார்.

யேசு சிலுவையில் மரித்தார் என்பதல்ல பெரிய வெள்ளி. தேவன் தாம் படைத்த மக்கள் தன்னைமறந்து, தன்னுடைய வழிகளை விட்டு அவனவன் தன்தன் வழியிலே போய், தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து, தேவமகிமையைக்காண முடியாமல் இருந்த பாவம் என்ற அந்த தடைச்சுவரை சிலுவை மரணத்தின் முPலம் தகர்த்து மனுக்குலத்திற்கு விடுதலையைத் தந்தநாள். பிரிவும் உறவும் மீண்டும் சந்தித்த நாள். இத்தனையும் நடந்து முடிய ஓர் தியாகம் நடக்க வேண்டியிருந்தது. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்.

வசனம் 10. ஒரு விசேசித்த பலி ஒன்றை செலுத்த வேண்டியிருந்தது. காரணம் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்று வேதம் மிகத்தெழிவாக கூறுகிறது. பிரிவும் உறவும் சந்தித்த இடத்திலே, பிரிந்திருந்த உறவை மீண்டும் சீர்படுத்த இரத்தம் சிந்தப்படவேண்டியதாக இருந்தது. அந்த இரத்தத்தினால் நமக்கு நித்திய ஜீவன் அருளப்பட்டது. யேசு தமது ஆத்துமா, சரீரத்தை உலக மக்களின் விடுதலைக்காக வருத்தப்படுத்த வேண்டியிருந்தது. காரணம் வசனம் 11 இவ்வாறு கூறுகிறது. அவர் தமது ஆத்தும வருத்தத்தின்பலனைக் கண்டு திருப்தியாவார்.

அவர் எவ்வாறன தனது ஆத்தும வருத்தத்தின் பலனை உன்னிடத்தில் காணவிரும்புகிறார்? அவர் கொடியசவுக்கினால் அடிக்கப்பட்டு, முள்முடி தரிக்கப்பட்டு, ஆணிகளால் கடாவப்பட்டு இரத்தம் தோய்ந்த கண்களுடன் சிலுவையில் தொங்கியவராக ஏதோவொன்றைக் காணவிரும்புகிறார். வெளிப்படுத்தல் 7:9,14 இவ்வாறு கூறுகிறது. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்@ இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். இந்த கூட்டத்தில் நீயும் ஒருவனாக இருக்கிறியா? அல்லது இந்தத்தியாகத்தை உணராதவனாக, அறியாதவனாக நீ இருக்கிறியா? சற்று சிந்தித்துப்பார். மேலே வாசித்த 9,14 ம் வசனங்களில் சொல்லப்பட்டவனாக, அதாவது யேசுக்கிறீஸ்த்துவின் இரத்தத்தால் பாவங்கள், சாபங்களிலிருந்து கழுவிப் பரிசுத்தமாக்கப்பட்டு தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக நீ நிற்பதைக் யேசு காணும்போது தனது ஆத்துமவருத்தத்தின் பலனைக் உன்னில் கண்டு; அவர் திருப்தியாவார். மாறாக அங்கு உன்னைக் காணவிட்டால் துக்கத்தோடு உன்னைப்பார்ப்பார். காரணம் நித்தியம் நித்தியமாக தேவனுடன் வாழும் வாழ்கையை உதாசீனம் செய்துவிட்டு, நித்திய நரக வாழ்க்கையை நீ அனுபவிக்கப் போகிறாய் என்று.

பிரியமான சகோதர சகோதரிகளே, கடவுள் மனிதர்களைப் படைத்தது, தம்மை நாம் அறிந்து நேசித்து சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவுமே என்று நாம் சிறுபிள்ளைகளாக இருந்த போது பாடசாலைகளில் சொல்லித்தந்ததை உங்களுக்கு இன்று நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று தேவன் தம்மையும், தமது தன்மையையும் அறிந்து கொள்ளும் படியான ஓர் வேளையை உங்கள் முன் வைக்கிறார். அந்த வேளையை நீ உனதாக்கிக்கொள்ள விரும்பினால், உனக்கு அறிமுகமான கிறீஸ்த்தவர்களுடன் தொடர்புகொண்டு ஆலயத்திற்குப் போய் உன்னை ஒப்புக்கொடுத்து, தேவனை ஆராதிக்கிறபிள்ளையாகமாறு. அப்போது கர்த்தர் உன்னை பரிசுத்தப்படுத்தி புதுவாழ்வு தருவார்.

அன்பின் பரலோக பிதாவே, இன்று இந்த நல்ல தீர்மானத்தை எடுத்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. அவர்கள் எடுத்த தீர்மானத்தில் நிலைத்திருந்து, எசாயா 53:5இல் உள்ளபடி உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் என்பதற்கிணங்க பாவம் என்கிற மரணத்தில் இருந்து நித்தியஜீவன் என்கிற புதுவாழ்வைப் பெற்று உம்மிலே நிலைத்திருந்து வாழ உதவி செய்யும் பிதாவே, ஆமேன்

http://www.alaikal.com/news/?p=35219

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

உன்னதத்தின் ஆறுதல்!

April 4, 2010

பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்;, அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை. இதோ, அவரை வைத்த இடம்.

அனைவருக்கும் உயிர்த்த யேசுவின் நாமத்தில் புது நம்பிக்கையுடன் கூடிய புது வாழ்க்கை, உங்கள் வாழ்வில் மலர வாழ்த்துகிறேன்.

யேசு உயிர்த்தெழுந்தார், உண்மையாகவே உயிhத் தெழுந்தார். அவர் உயிர்த்தெழுந்த போது மரணத்தின் கூர் ஒடிந்தது. பிசாசின் வல்லமை அழிக்கப்பட்டது. உலகம் இதுவரை கண்டிராத, இனிமேலும் காணமுடியாத அதிசயம் நடந்த நாள். இந்த (அதிசயம்) உயிர்த்தெழுதல் நடந்திராவிட்டால் இன்று உலகத்தின் நம்பிக்கை என்ன? நமது வாழ்விற்கு நம்பிக்கைதான் ஏது? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? (1கொரிந்தியர் 15:32). மனித வாழ்விற்கு மரணம் முடிவல்ல, மனிதன் ஒவ்வொருவருக்கும் மரணத்தின் பின் நித்திய வாழ்வு உண்டென்ற நிச்சயத்தை யேசு தனது உயிர்த்தெழுதலினால் நம்பிக்கையுட்டியுள்ளார்.

இன்று நீங்களும் நானும் அவதானிக்கவேண்டிய முக்கிய விடையம் என்னவென்றால், அவர் உயிர்த்தெழுந்தபின்னர் யாருக்குத் தரிசனமானார் என்பதுதான். அவரை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தவர்கட்கோ, ஏளனம் செய்து கூக்குரலிட்டவர்கட்கோ, நிந்தித்து பரிகாசம் பண்ணியவர்கட்கோ அல்ல. மாறாக தம்மை அன்புசெலுத்தியவர்கட்கு, தனக்காக துன்பத்தை வேதனையை அனுபவித்தவர்கட்கு, தம்மைத்தேடியவர்கட்கு, தன்னுடன் இருந்து தனது மரணத்தின் பின் பயந்து ஒழித்துக்கொண்டவர்கட்கு மட்டும் தான் அவர் தன்னை மறைக்காமல் வெளிப்பட்டார். காரணம் அவர்கள் இழந்து போயிருந்த நம்பிக்கையை அவர் புதுப்பிக்க மறக்கவில்லை.

இதைவாசித்துக் கொண்டிருக்கும் பிரியமானவர்களே, இன்று நீ நம்பிக்கை இழ்ந்து கண்ணீரேடும் கலக்கத்தோடும் ஆறுதலற்ற நிலையில் வாழ்கிறாயா? உன் எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தோட உன் உள்ளத்தை புட்டி பாரிய சுமையுடன் இருக்கிறாயா? உனக்கொரு செய்தி யேசு உயீர்த்தெழுந்துவிட்டார் என்பதுதான். அவர் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் உனக்கு புதுவாழ்வு தரும்படியாக. நீயும் அவரைத் தேடு. அப்போது உன்னுடைய வேதனை நிறைந்த பழைய வாழ்க்கை மாறி, மகிழ்ச்சியுடன் கூடிய நம்பிக்கை நிறைந்த பதிய வாழ்க்கையை நீ அடைந்துகொள்வாய்.

இன்று இந்த நல்ல தீர்மானம் எடுத்த அத்தனை பேருக்காகவும் உமக்கு நன்றி அப்பா. நம்பிக்கை இழந்து தவிக்கும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் புதிய நம்பிக்கையின் ஒளியாக நீர் இருந்து வழி நடத்தும் படியாக வேண்டுகிறேன் பிதாவே, ஆமேன்.

http://www.alaikal.com/news/?p=35219

http://www.youtube.com/watch?v=W_15dgT39dg

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள் உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.