Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத்தை தமிழர் நாட்டுக்குள் எப்படி தடுப்பது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத்தை தமிழர் நாட்டுக்குள் எப்படி தடுப்பது?

bharatma.jpg

ஜணகனமண

இது எதோ வங்களா மொழி பாடல் ... இதன் உள்ளர்த்தம் புரியாமல் இன்னும் நம்மவர் பாடி கொண்டிருப்பதை நம்மவர் முதலில் நிறுத்தவேண்டும்.. முதலில் இந்தியத்தின் பூர்வீக குடிகளான தமிழ் மொழியிலே இப்படி ஒரு தேசிய கீதம் பாடபட்டிருக்குமானால் நம்மவருக்கும் இந்த தேசியத்தின் மீது ஒரளவிற்காவது பற்று ஏற்பட்டிருக்கும்.. ஆனால் நிலைமை என்ன? சுதந்திர போருக்கு பாடுபட்ட நம்மவர் ஒரு சிலையாவது நாடாளுமன்றத்தில் இருக்கிறதா சொல்லுங்கள்?..அல்லது முதலாவது வேலூர் புரட்சியை வேறு எந்த் மாநிலத்திலாவது படிக்கிறார்களா சொல்லுங்கள்..

நீராரும் கடலுடத்த..

இதில் திராவிடம் எங்கே வருகிறது?.. நாம் நாய் போல் அடிபட்டு செத்த போதும் அண்டைய திராவிட தேசிய இனங்கள் ஒழிந்தான் தமிழன் என்று கைகொட்டு சிரித்தவர்கள் தானே.. நமக்காக ஒரு உண்ணாவிரதம் இருந்த செய்தியை நீங்கள் கேட்டதுண்டா?முதலில் தமிழன் திராவிடன் ஆனாலும் அல்லது திராவிடன் தமிழன் ஆனாலும் ஏனைய மற்ற தேசிய இனங்களை இங்கு விலக்க வேண்டும்.தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள்.. இங்கு தம்பியே நமக்கு உள்குத்து என்ற போது நாம் என்ன செய்வது? விலக்கிவிடுதலே நன்று..

காந்தி நோட்டு..

1000-rupees.jpg

இதுவும் இந்தியத்தின் ஒரு பாதிப்புதான்.. இதுவே இந்தியம் என்று தமிழர்களை ஒன்றினைக்க முக்கிய காரணியாகும்..நமக்கென ஒரு நாடு .. ஒரு ரூபாய் நோட்டு வரும் வரை .. குறைந்த பட்சம் நாம் இதை தவிர்க்கவேண்டும். நாம் ஏன் பண்டமாற்று முறையை குறைந்தபட்சம் பின்பற்ற கூடாது.. இவ்வாறான பண்டமாற்றுமுறை இன்றும் தமிழக கிராமங்களில் நிலவுகிறது என்பதை தோழர்கள் கவனிக்கவேண்டும்.. படித்த பல தோழர்கள் குறைந்த பட்சம் 1000 ரூபாய் நோட்டை புறக்கணிக்கவேண்டும்.. சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்..

கிரிக்கெட்டு..

majbowled_narrowweb__300x343,0.jpg

இதுவும் ஒரு வகையில் இந்தியத்தை ஒன்றிணைப்பது தான்.. நாலாம் ஈழ போர் தொடங்கியதும் பொந்தியா தமிழர்களை மழுங்கடிப்பதற்காக பொந்திய கிரிகெட்டு அணியை இலங்கைக்கு அனுப்பியதும். அதை நம்மவர்களில் சில ஈனபிறவிகள் கண்டு களித்ததும் நடந்த வரலாறே.. தமிழன் ஒருவரும் ஆடாத கிரிக்கெட்டுக்கு எதற்கு கடைவீதிகளின் கடைகளில் உள்ள தொலைகாட்சி பெட்டியை பார்த்து கைதட்டி ரசிக்க வேண்டும்?.. வேலை வெட்டிக்கு போகாது அப்படி என்ன இந்தியத்தின் மீது ஈடுபாடு?

கொடி நாள்..

indian-flag.jpg

இது உதவாத தேசியத்திற்கு நம்மவர்களால் வசூலித்து கொடுக்கபடும் தண்ட பணம்.. இன்று வரை தமிழகம் தான் கொடிநாள் வசூலில் முதலில் இருப்பது தோழர்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்..அதற்கான பொந்தியத்தின் நன்றிகடனை ஈழ போரிலும்.. தமிழக மீனவர்களை சுட்டு கொள்ள படும்போதும் பார்த்தாகிவிட்டது.. இன்னும் ஏன் நம்மவர் இவர்களுக்காக தெருமுக்கில் உண்டியல் குலுக்கவேண்டும்? போர்முனைகளில் அது கார்கிலாகட்டும் அல்லது வேறு பாகிஸ்தானுக்கு எதிராக போர்களாகட்டும்.. முன்னனி சண்டை முனைகளில்(FRONT LINE) நிறுத்துவது தமிழர்களையே எனபது தோழர்கள் நினைவு கொள்ளுதல் நன்று.. அது எவ்வளவு பெரிய அதிகாரியாயினும் தமிழர்கள் என்றால் அதுவே இந்தியத்தின் தேர்வு.. மேஜர் சரவணன் முதல் போரிட்டு மடிந்த அனைவரும் இதற்கு சான்று. அதே வேளை வடக்கத்தியர்கள் பெரும்பாலும் இந்தா பிடி .. முற்றுகையை உடை .. அப்படித்தான் இப்படித்தான்.. என்று கூவும் கட்டளை தளபதிகளாகவே இருப்பதும் நாம் கவனித்தில் கொள்ளூதல் நன்று..

தமிழ் சொந்தங்களை ஆதரித்தல்..

interview4.JPG

இது மிக கடினமான விடயம் என்றாலும்.. காலத்தில் கோலத்தால் இதை நாம் செய்தே தீர வேண்டியுள்ளது. அலுவலக நேர்காணல்களிம் சரி.. மற்ற நேர்காணல்களிலும் .. தமிழர்கள் என்று வந்தால் அவர்களை வெளியெ அனுப்புவதுதான் நம்மவர் பெரும்பான்மையோர் வாடிக்கை.. ஏன்? உள்ளுக்குள் ஊறும் ஒருவித .. அரிப்பு.. நம்மை விட இவன் ஒருவேளை? அதுதான் நம்மவர்களின் தனி சிறப்பு.. டெல்லி சவுத் பிளக்கில் மொத்தமும் மலையாளிகளே நிரம்பியுள்ளது ஏன் எப்படி ? என்பதை தோழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்..

தேர்தலுக்கான குவாட்டர் மற்றும் கோழி பிரியாணி.

om_bot_cup.jpg

304827771_53aaf4e1bf.jpg

ஆங்கிலத்தில் எலாஸ்டிக்கு பவர் என்று கூறுவார்கள் ஒரு ரப்பரை ஒர் அளவிற்கு தான் இழுக்க முடியும் அதற்கு மேல் இழுத்தால் அது அறுந்துவிடும்.. அது போலவே இந்தியத்தின் அரசியல் கங்காணிகளை மிக அதிக பொருட்செலவிற்கு உள்ளாக வேண்டும்.. இப்போதுதானே ஓட்டுக்கு 1000 ரூபாய் .. மற்றும் குவாட்டர் பிரியாணிவரை வந்துள்ளது.. இதை மேலும் அதிக படுத்தவேண்டும் .. மேலும் மேலும் கேட்க நம்மவரை உற்சாக படுத்தவேண்டும் பேரம் பேசும் தகுதியும் இங்கு முக்கியமானது .. ஐயோ நேற்றுதானே அந்த கட்சிகாரன் 500 குடுத்துவிட்டு போனார் .. தாங்கள் மேற்கொண்டு ஏதாவது கொடுத்தால் .. இதை சிறிது சிறிதாக வளர்தெடுக்க வேண்டும்.. மொத்ததில் இந்தியத்தின் தேர்தலில் நிற்பவன் போண்டியாதல் நன்று( காசை வாங்கி கொண்டு உண்மையான தமிழ் தேசியத்தின் ஆதரவாளர்களை.. தமிழ் உணர்வாளர்களை .. தேர்ந்தெடுத்தல் சிறப்பு)

சந்தை மையங்களை அதிகபடுத்துதல்

2009112553430301.jpg

தமிழர் நாட்டில் சந்தையை பற்றி அறியாதோர் யாரும் இருக்கமுடியாது.நாம் முன்னர் குறிப்பிட்டதை போல பண்டமாற்று முறைக்கு இது அவசியமானதாகும். இதன் மூலம் உழைக்கும் திறன் சார்ந்த மதிப்பீடுகளே இங்கு பரிமாற்ற்ம் செய்யபடும். இதில் டாலருக்கு நிகரான பொந்திய ரூபாயின் மதிப்பு.. இன்னும் பல எழவுகள் உள்ளே வர வாய்ப்பே இல்லை..பெரு முதலளிகளின் அதாவது ரிலையன்சு .. போன்ற ஒருமித்த அங்காடிகளை (all in one place) படித்தவர்கள் தவிர்தல் சிறப்பு

--------------------------

இவைகள் எல்லாம் மேடை போட்டு வெட்டி முழங்க வேண்டிய அவசியம் இல்லை .. இதை நம் வீட்டில் இருந்தே செயல்படுத்த கூடிய ஒன்று..எனக்கு தெரிந்து சில ஆலோசனைகளை கூறி உள்ளேன் .. தமிழ் தேசிய தோழர்கள் மேற்கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் வழங்கலாம்

எது எப்படியோ தமிழர்களை காலி பண்ண வேண்டும் என முடிவு எடுத்து விட்டீர் போலுள்ளது உங்களின் கட்டுரை . எதோ இப்பதான் பிற மொழி கற்றுக்கொண்டு பிற மாநில மக்களுக்கு தமிழரின் பெருமையையும் பிரச்சினைகளையும் கொஞ்சமாவது புரிய வைக்க முடிகிறது. இதையும் காலி பண்ண வேண்டும் என்கிறீர்கள் . நடத்துங்க நடத்துங்க .

இதெல்லாம் ஏன் செய்யவேண்டும் என்பதற்கான காரணங்கள் எதுவுமே உங்கள் கட்டுரையில் இல்லை. எதோ பிறர் கவனம் தன்மீது பட வேண்டும் என எழுதியது போல உள்ளது

நீராரும் கடலுடுத்த பாரதியாரின் பாடலை எடுத்துவிட்டு கலைஞரின் பாடலை பாட சொல்றீரோ ?

வேலூர் புரட்சியை எந்த மாநிலத்தில் படிக்கவில்லை என கூறுங்களேன் பார்க்கலாம்.

பிற தென் மாநிலத்தவர் நமக்கு ஒன்றும் செய்யவில்லை என்கிறீர் . அப்படி போகுதா கதை.

மராட்டியர்கள் கன்னடர்களிடமிருந்து பிற பகுதிகளை இன்றும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள் . அதற்கு தமிழர் நாம் ஏதேனும் செய்தோமா?

இந்திய புள்ளியல் படி தென்னகத்தில் அதிக வெளிமாநிலத்தவர் வாழ்வில் தமிழனே முதலில் இருக்கிறான் . கர்நாடகாவில் வாழும் தமிழரின் எண்ணிக்கையில் பாதிகூட தமிழகத்தில் வாழும் கன்னடர் இல்லை .இதே கருத்து ஆந்திராவிற்கும் பொருந்தும்.

பிற மாநிலங்களில் தமிழில் படிக்கும் வசதியில் பாதி கூட தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவருக்கு இல்லை

ஈழ தமிழர்களின் துயர் விடை தெரியா வினாவாக இருக்கிறது . உண்மைதான் . அதற்கும் இந்திய வெறுப்புக்கும் என்ன சம்பந்தம் ?

ராணுவத்தை மட்டும் பார்க்கிறீர் . இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பிரதமர் பதவி தவிர அனைத்தையும் அனுபவித்து விட்டான் தமிழன் என்பது உமக்கு தெரியாதா?

உங்கள் கட்டுரை அழிவுப்பாதையில் தமிழரை குறிப்பாக தமிழ்நாட்டவரை அழைத்து செல்கிறது

பிற மாநில ஆளுமையையும் பிற மொழி ஆளுமையையும் தமிழ் நாட்டில் தடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை . ஆனால் நீங்கள் கூறும் யோசனைகள் ஏற்று கொள்ள முடியாதவைகளாக உள்ளது .

தயவு செய்து ஆக்க பூர்வமான அறிவுப்பூர்வமான யோசனைகள் ஏதேனும் இருந்தால் கூறுங்கள் . உணர்வு பூர்வமாக சூடேற்றி விட்டு ஈழ தமிழரை கொன்று குவித்தது போதும் . தமிழ் நாட்டு தமிழனையும் கொன்று விடாதீர்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் வேலூர் புரட்சியை பற்றி தாங்கள் கூறிய பிறகுதான் சிபிஎஸி சிலபசில படிக்கிறார்கள்... என்பது தெரியவந்தது தோழரே.... அத்தோடு இந்த ஒக்கலிக கவுடா கோஸ்டிகள் தமிழ் நாட்டில் குறைவு என்பதை தாங்கள் சொல்லித்தான் தெரியும் தோழரே....அதுவும் எம்.எல்.ஏ எ.ம்பி போன்ற பதவிகளில் இல்லாமல் கஸ்டபடுவதாகவும் தெரியவந்தது அதே நேரம் பெங்களூர் விதான சுவுதாவில்.... கெஜிஎ.ப் சார்பாக 1 எம்.எல்.ஏவும் மற்றும் பெங்களூர் அல்சூர்1 சிறீராமபுரம் 2 என மொத்தம் 3 எம்.எல்.ஏ சிட்டுகளை வழங்கிய கன்னடன்களின் பெருந்தனைமையை பார்த்து வியந்து போனான் தோழர்.... நம்மவருக்குதான் பாவம் அறிவில்லை....

தோழரே... என்னுடைய ஆக்கங்கள் பல இதே திரியில் இணைக்கபட்டுள்ளன.. அதை படித்து ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்பதற்கான காரணங்கள் உள்ளன ... அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...வடிவேல் கணக்காக மறுபடியும் முதல் இருந்து ஆரம்பிக்க இயலாது... நீர் இந்தியனாக இருந்து கொல்லும்... நான் தமிழனாக இருந்தால போதும் இந்த இரண்டுக்கும் வேறு பாடு உண்டு தோழரே.... வடநாட்டானுக்கு கூஜா தூக்கமுடியாது...

ஈழ தமிழர்களின் துயர் விடை தெரியா வினாவாக இருக்கிறது . உண்மைதான் . அதற்கும் இந்திய வெறுப்புக்கும் என்ன சம்பந்தம் ?

இதில் இருந்தெ தெரிகிறது பிரச்சனைகளில் தங்களுக்கு உள்ள தெளிவு....

நான் என்னுடைய நேரத்தை ஆக்க பூர்வமாக செலவிடலாம் என்று எண்ணுகிறேன்..

புரட்சிகர தமிழ் தேசியன் - திருவண்ணாமலை..

தமிழகத்தார் வளம் எல்லாம் இந்தியாவால் சுறண்டப்படுகிறது என்பதுக்கப்பால் தமிழர்கள் பெரிய அளவான நன்மைகளை அடையவில்லை என்பதுதான் உண்மையானது...

குறிப்பாக இந்தியாவின் பூகோழ நலனுக்காக கன்னியா குமரி முதல் நாகர் கோயில் வரை உள்ள தமிழர்கள் படும் பாடுகள் நல்ல உதாரணம்.... அவுஸ்ரேலியாவில் இந்தியர்களுக்கு எறுப்பு கடிச்சால் கூட கிளம்பிவிழுபவர்கள் சேதுசமுத்திரத்தில் நடப்பவற்றை கண்டு கொள்வதில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.