Jump to content

உறவுகளிற்கு உதவுங்கள் உறுப்பினராகுங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

உறவுகளிற்கு உதவுங்கள் உறுப்பினராகுங்கள்

நேசக்கரம் அமைப்பு என்பது சுமார் மூன்று ஆண்டு களிற்கு முன்னர் யாழ் இணையத்தில் சில நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு உதவி அமைம்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கபட்ட எமது உறவுகளிற்கான உதவிகளை வழங்குதல்..அவற்றில்

1) போரினால் உறவுகளை இழந்த பின்னைகளை பராமரித்தல் மற்றும் அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்குதல்.

2)குடும்பத் தலைவரை இழந்து பொருளாதார வசதிகள் இன்றி தவிக்கும் பெண்களிற்கான சுய வேலைவாய்ப்பத் திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தல்

3)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்தோரிற்கான வைத்திய உதவிகளை வழங்குதல்.

4)பண வசதியின்றி உயர்கல்வியை தொடர முடியாது போயுள்ள மாணவர்களிற்குஉயர் கல்லவியினை தொடர உதவி செய்தல்.

இவை எமது முக்கிய நோக்கங்களாக இருக்கின்றது..

இதுவரை காலமும் தாயகத்திற்கான உதவித் திட்டங்களை வேறு பாரிய தழிழ் நிறுவனங்களும் செய்து வந்தபடியால் நாம் எமது நண்பர்கள் வட்டத்தினுள்ளேயே எமது நேசக்கரம் செயற்பாடுகளை தொடர்ந்து கொண்டிருந்தோம்..ஆனால் இன்றை சூழலில் பெரிய உதவி நிறுவனங்கள் உதாரணத்திற்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் போன்றவை நேரடி செயற் பாட்டினை இழந்து விட்ட நிலையிலும்..ஆனால் தாயகத்து மக்களின் உதவித் தேவைகள் அதிகரித்து விட்டகாரணத்தினாலும் நாங்கள் எமது நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகளையும் விரிவாக்கவேண்டிய தேவைகள் உள்ளது..எனவே நேசக்கரம் அமைப்பில் நீங்கள் இணைவதன் முலம் நீங்கள் ஒவ்வொருவரும் எங்கள் உறவுகளிற்கு உணவு.உடை.உறைவிடம்.கல்வி. கொடுப்பது மட்டுமல்ல அவர்கள்உயிர் கூட காப்பாற்றப்படுகின்றது.

நேசக்கரம் ஊடாக உதவும் உறவுகள் கட்டாயம் நேசக்கரம் அமைப்பில் உறுப்பினராகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை..அதே நேரம் நேசக்கரத்தில் உறுப்பினரான அனைவரும் தொடரச்சியாக தாயகத்திற்கு உதவவேண்டும் என்கிற கட்டாயமும்.இல்லை.ஆனால் தொடர்ச்சியக தாயகத்து உறவுகளிற்கு எங்கள் உதவிகள் சென்றடைய வேண்டும் எனபதே எங்கள் நோக்கமாகும்.. நேசக்கரத்துடன் ஆயிரம் உறுப்பனர்களை முதற்கட்டமாக இணைப்பதே எமது நோக்கமாக இருக்கின்றது உறவுகளே உங்கள் கரம் நீட்டுங்கள்.நன்றி

இங்கு அழுத்துவதன் மூலம் நீங்கள் நேசக்கரத்தின் உறுப்பினர் விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கி அச்செடுத்து அதனை நிரப்பிவிட்டு அதில் உள்ள நேசக்கரம் விலாசத்திற்கு அனுப்பிவைக்லாம்.

நேசக்கரத்தில் உறுப்பினர் ஆகாமல் உதவிமட்டும் செய்ய விரும்புபவர்கள் இங்கு அழுத்துவதன் மூலம் விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கி கொள்ளலாம்..

மற்றும் நேசக்கரம் அமைப்பானது சட்டப்படி பதியப்பட்ட அமைப்பு என்பதால் நேசக்கரத்திற்காக நீங்கள் அனுப்பிய பணத்தின் தொகையினை ஆதாரங்களுடன் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டுவதன் மூலம் வரிச்சலுகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி.

Posted

சாத்திரி அண்ணை உங்க தொடுப்புக்கள் வேலை செய்ய இல்லை. சரி பாருங்கோ.

Posted

திருத்தியுள்ளேன் மச்சான் நன்றி

  • 1 year later...
Posted

அங்கத்தவர்களாக விரும்புவோரை நேசக்கரம் அங்கத்தவர்களாகப் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.