Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் வரலாற்று பிழை

Featured Replies

இந்திய தேசிய அரசியலில் நமது தமிழ் தேசியம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் ஊடக தர்மங்களில் ஒன்றாகும். நாம் நமது அடையாளத்தை நமது எதிர்காலத்திற்கு சொல்லி வைப்பதென்பது, நாம் வாழ்ந்ததை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். நமக்கான வரலாறு என்பது எவ்வாறெல்லாம் சிதைவு ஏற்பட்டு, இன்று நமது கையறுநிலை, கையேந்தி நிற்க வைத்திருக்கிறது. இந்திய தேசியத்தின் அடையாளமாய் நாம் இருக்கும்போதே, அந்த இந்திய இறையாண்மையின் அடிப்படை கட்டமைப்புகள் தமிழ் தேசியத்தை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சிதைவாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும்கூட என்ன செய்வது? நாம் எதிர்த்து நின்று குரல் எழுப்பி, போராடி, தெருவுக்கு வந்து, கொடியேந்தி நின்று கொண்டிருப்போம். இடையில் ஒரு அரசியல் புகுந்து நமது எண்ணங்களை, ஏக்கங்களை, நமது ஆளுமையை, போர் குணத்தை, நமது லட்சிய மாண்பை சிதைத்து, சின்னாபின்னமாக்கிவிடும். இதுதான் ஒவ்வொரு போராட்டத்தின் இறுதியிலும் நமக்கு கிடைக்கும் வெற்றியாகும். இப்படிதான் தமிழன் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருக்கிறான். மார்ச் 26, 2010 தினமணி நாளிதழில் ஒரு செய்தி. ஒகேனெக்கல் குடிநீர் திட்டம் குறித்து நடுவண் அரசிடம் கர்நாடகம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளதாக வந்திருக்கின்றது.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை இதை செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார். அவர் ஹூப்ளியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசின் கூட்டு குடிநீர் திட்டத்தை நடுவண் அரசு அனுமதிக்க வில்லை என்றும், அதைமீறி தமிழ்நாடு அரசு அதை நிறைவேற்ற கூடாது என தெரிவித்திருக்கிறார். ஒருவேளை தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை செயல்படுத்துமேயானால், இதை தடுக்க, தாம் நடுவண் அரசிடம் புகார் அளிக்கப்போவதாக கூறுகிறார். இதற்காக அவர் தில்லி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு பெட்டி படுக்கைகளை கட்டிக் கொண்டு புறப்பட தயாராகிவிட்டார். தமிழ்நாடு அரசு என்ன எதிர்வினை ஆற்றப்போகிறது என்று புரியவில்லை. அவர் தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை சந்தித்து, காவிரி ஆற்றில் ஒகேனெக்கலில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் குடிநீர் திட்டத்தை நிறுத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொள்வேன் என அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை உருவாகலாம். கன்னட வெறியர்கள் கொடியேந்தி வீதிகளுக்கு வந்து தமிழகத்திற்கு ஒகேனெக்கல் சொந்தமல்ல என்று போராட்டம் நடத்தலாம். இவை எல்லாம் நிகழ்வதற்கு வெள்ளோட்டமாக கர்நாடக அமைச்சரின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.2008 ஏப்ரல் மாதத்தில் ஒகேனெக்கல் பிரச்சனை தமிழ்நாட்டில் காட்டுத்தீயாய் பற்றி எரிந்தது. வழக்கறிஞர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என அனைவரும் தமிழ்நாட்டை வஞ்சிக்காதே என முழக்கம் எழுப்பி, அணிஅணியாய் களத்திற்கு வந்தார்கள். அந்த போராட்டத்தோடு நிச்சயமாக ஒகேனெக்கல் பிரச்சினை நிறைவுக்கு வந்திருக்கும். நடிகர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்தை நடத்தினார்கள். நடத்தினார்கள் என்று சொல்வதைவிட, நடித்தார்கள். அரைமணிநேரம், ஒருமணிநேரம் என இருந்துவிட்டு அவரவர் தமது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்கள்.

அந்த போராட்டத்தின்போது இயக்குநரும், நடிகருமான சேரன் ஒரு கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார். அதாவது, நெய்வேலியிலே காவிரிக்காக கூடிய நடிகர்கள், ஒரு திரைப்பட படப்பிடிப்பைப் போன்று ஒரு பிரம்மாண்டமான கூத்தை நடத்தி முடித்தார்கள். இந்த போராட்டம் நெய்வேலி போராட்டத்தின் நிகழ்வாக மாறிவிடக்கூடாது என்பதை வலியுறுத்தினார். ஆக, எந்த ஒரு போராட்டமும் உணர்வோடு அல்லாமல், உணர்ச்சியோடு நடைபெறுமேயானால் அது சில நிமிடங்களில் அடங்கிபோய்விடும். உணர்வோடு வருவதற்கு அந்த போராட்டத்தின் கருவை நாம் சரியாக உணர்ந்திருக்க வேண்டும். அந்த போராட்டத்தின் அடிப்படை தன்மைகளை நாம் விளங்கி இருக்க வேண்டும். மேலோட்டமான பார்வை என்பது உணர்ச்சிப் பூர்வமாகத்தான் இருக்குமேதவிர, அது அறிவுப்பூர்வமாக வழிநடத்தி செல்லாது. ஒகேனெக்கல் குடிநீர் திட்டத்தின் கடந்தகால நிலைப்பாடுதான் என்ன? ஏற்கெனவே பிற்கால சோழர் ஆட்சி காலத்திலும், நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்திலும், காவிரி நீர் பிரச்சினை குறித்தும், எல்லைப் பகுதி குறித்தும் பெரும் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

12ஆம் நூற்றாண்டில்கூட காவிரி நீர் தடுக்கும் முயற்சியில், அந்நாளைய கர்நாடக அரசன் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டது. கி.பி.1141 முதல் 1173 வரை கர்நாடக பகுதியை ஆண்ட போசன நாட்டு அரசனான முதலாம் நரசிம்மன், காவிரி போக்கை தடுக்க, செயற்கை மலைகளை ஏற்படுத்தி, தமிழ்நாட்டிற்கு வரும் நீரை தடுத்து வைத்தான். அதற்காக செயற்கையாக மலைகளை உருவாக்கி நீரை தமிழ்நாட்டிற்கு வரவிடாமல் பெரும் பணி ஆற்றினான். இதன் காரணமாக காவிரியில் நீர் குறைந்தது. காவிரியும் பொய்த்தது. வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி” செயற்கையாக பொய்த்துப் போவதற்கு போசன நாட்டு அரசன் செய்த முயற்சி, ஒரு போர் நடைபெற காரணமாய் அமைந்தது.அப்போது சோழ நாட்டை ஆண்ட, இரண்டாம் ராசராசன், போசன மன்னனை தோற்கடித்து, செயற்கை மலைகளை தகர்த்து, காவிரி தண்ணீரை மீண்டும் சோழ நாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தான்.

இதனால் இரண்டாம் ராசராசன் காவிரி கண்ட சோழன், பொன்னிக்கு வழிகண்டான் என்றெல்லாம் புகழப்பட்டான். இந்த பெரும் போருக்கான செலவை ஈடுகட்ட, காவிரிகரை விநியோகம் என்ற புதிய வரி விதிக்கப்பட்டது. கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடும், மைசூரும் மோதிக் கொண்டன. கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையை ராணி மங்கம்மாளும், தஞ்சையை மராட்டிய மன்னன் சகசியும் ஆண்டு கொண்டிருந்த போது, காவிரியின் போக்கை தடுத்து அணை கட்ட முயற்சி நடந்தது. இதன் விளைவாக மதுரையின் நாயக்க அரசியும், தஞ்சையின் மராட்டிய மன்னனும் எவ்வளவோ பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் தமக்குள் இருந்தபோதிலும் காவிரி பிரச்சனையில் இருவரும் ஒன்றுபட்டிருந்தனர். இரண்டு நாடுகளை சேர்ந்த படைகளும் மைசூருக்கு அனுப்பப்பட்டன. ஆனால் படை மைசூரை அடைவதற்கு முன்னர், காவிரியின் குறுக்கே மைசூர் மன்னன் கட்டிய அணை தானே உடைந்து சிதறிவிட்டது. காவிரியில் தடையின்றி நீர்வரத் தொடங்கியது.

இப்படி வரலாற்றின் அடிப்படைகள், வரலாற்று சான்றுகள் எல்லாம் ஒகேனெக்கல் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்பதை அறுதியிட்டு கூறுகின்றன. தர்மபுரியிலும், கிருஷ்ணகிரியிலும் வாழும் தமிழ்மக்கள், குடிக்க நீரின்றி வறட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, நமக்கு சொந்தமான ஒகேனெக்கல் பகுதியிலிருந்து தண்ணீரை நாம் பெறுவதற்கு இப்போதுள்ள குடியரசு ஆட்சிமுறைக்குப் பின்னரும், கர்நாடகாவிடம் பேச்சு வார்த்தையின் மூலம் நாம் தண்ணீர் கேட்டுப் பெறுவோம். அதுவரை இத்திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்த தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் அறிக்கை, தமிழக வரலாற்றிலே, தமிழ்மக்களின் வாழ்வியலிலே பெரும் பிழையாக மாறிப்போனது. நமது நாட்டின் எல்லை என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

அதற்கான வரைபடங்கள் தமிழக அரசிடமும், கர்நாடக அரசிடமும், இந்திய அரசிடமும் இப்போதும் இருக்கின்றன. பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தின்போதே, காவிரி ஆற்றின் இரு கரைகளுக்கும் இடைப்பட்ட பகுதி, இரு மாநில மக்களுக்கும் சமமாக பிரித்தளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலணி ஆட்சி காலத்தில் வரைப்படம் அமைப்புகளின்படி, கன்னடர்கள் உரிமைகோரும் பகுதி தமிழக எல்லைக்குள் இருக்கிறது என்பதை நாம் உறுதிப்படுத்துகிறோம். 1997ஆம் ஆண்டு பெங்களூர் குடிநீர் திட்டத்திற்கு தடையில்லா சான்றிதழை நடுவண் அரசிடம் கர்நாடகத்திற்கு பெற்றது என்றும், அப்போது ஒகேனெக்கல் குடிநீர் திட்டமும், நடுவண் அரசின் பரிசீலனையில் இருந்தது என்றும், அதைத்தொடர்ந்து 1998ஆம் ஆண்டு நடுவண் அரசின் நீர்வள அமைச்சக செயலாளர் அருண்குமார் தலைமையில் குடிநீர் திட்டம், ஒகேனெக்கல் குடிநீர் கூட்டம் அனுமதிக்கும் என்றும், முறையான அனுமதி பெற்றப்பின் மீண்டும் கர்நாடகத்திடம் அனுமதிபெற தேவையில்லை என்றும் ‘தி சண்டே இந்தியா’ வாரப் பத்திரிக்கையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திருபாதி நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அப்படி எல்லா வழிமுறைகளும், வரலாறுகளும், செயல்திட்டங்களும் நமக்கு சாதகமாக இருந்தும்கூட, கர்நாடக தேர்தல் முடியும்வரை காத்திருப்போம் என்று கருணாநிதி கொடுத்த அறிக்கை, தமிழக மக்களின் தாகத்தை மேலும் அதிகமாக்கியதோடு, தமிழ் இனத்திற்கு அவர் அளவிட முடியாத துரோகத்தை செய்வதற்கு காரணமாகிவிட்டது. அன்று கருணாநிதி எதிர்பார்த்ததைப் போன்று எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக வர முடியவில்லை. எந்த அடிப்படை இன வாதத்தை வைத்து தேர்தல் பரப்புரைக்கு வந்ததோ, அதே அடிப்படை இனவாத அமைப்பான பாரதீய ஜனதாவே ஆட்சிக்கு வந்தது. அதனால்தான் இப்போது நாங்கள் கூட்டுக்குடிநீர் திட்டத்தை எதிர்க்கிறோம், அதை நிறுத்த கர்நாடக அரசின் சார்பாக நடுவண் அரசிடம் புகார் செய்கிறோம் என்று கர்நாடக அமைச்சர் ஊடகவியலரை அழைத்து பேசும் அளவிற்கு இந்த பிரச்சனை மிகவும் பின்னோக்கி சென்றுவிட்டது.

கருணாநிதியை பொருத்தமட்டில் தேர்தல் வெற்றி தோல்வி மட்டுமே அவருக்கு மிகவும் அவசியமான காரணமாக இருக்குமேதவிர, எந்தநிலையிலும் தமிழர்களின் வாழ்வோ, தமிழ்நாட்டின் வளமோ அவருக்கு முக்கியமானதாக இருந்தது கிடையாது, இருக்கப்போவதும் கிடையாது. காரணம் அவருக்கான அரசியல் என்பது அவரின் குடும்பவள அரசியல்தான். ஆகவே, 2008ல் ஏற்பட்ட அந்த எழுச்சியை சரியாக பயன்படுத்தி இருந்தோமேயானால் இந்நேரத்தில் மீண்டுமாய் ஒகேனெக்கல் குறித்து கர்நாடக அரசு பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். அன்று கருணாநிதியின் அறிக்கைதான், போர் குணம் மிக்க படையை பின்னுக்குத்தள்ளி போராட்டத்தை சிதைவடைய செய்தது. இந்த வரலற்று பிழையை இனி எந்த காலத்திலும் சமன் செய்ய முடியுமா? என்பது பெரும் கேள்விக் குறியாக இருக்கிறது.

நாம் கலைஞரிடம் கேட்கிறோம், போராட்ட களத்தில் நின்ற தமிழ் உணர்வாளர்களை, வழக்குறைஞர்களை, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை கலந்தாலோசிக்காமல், தாங்கள் கொடுத்த ஒரு அறிக்கை, தமிழ்நாட்டிற்கு எந்த அளவிற்கு கேட்டினை கொண்டு வந்திருக்கிறது என்பதை அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலாவது நீங்கள் சிந்திக்கிறீர்களா? என்பது மட்டும்தான்.

பின்குறிப்பு: 2008ஆம் ஆண்டு ஒகேனெக்கல் பிரச்சனை உச்சத்தில் இருந்த போது தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த அறிக்கைகளின் சுருக்கங்களை மறுவாசிப்பு செய்யுங்கள்.

1. ஒகேனெக்கல் குடிநீர் திட்டம் தொடர்பாக சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பேரவைக் கூட்டம் நடக்கும்போது அமைச்சரவையைக் கூட்டி கலந்துரையாடாமல், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி கலந்து பேசாமல், தற்காலிகமாகத் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். கர்நாடக தேர்தலுக்கும், ஒகேனெக்கல் திட்டத்திற்கும் என்ன தொடர்பு. இதில் பேச்சே தேவை இல்லை. தேர்தல் வரை நிறுத்தி வைப்பதில் எந்த நியாயமும் இல்லை. தமிழக உரிமையை முதலமைச்சர் விட்டுக் கொடுத்துவிட்டார்.

-செல்வி.ஜெயலலிதா, அதிமுக பொதுச்செயலாளர்.

2. ஒகேனெக்கல் விவகாரத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பு அரசியல் முறையில் சரியாக இருக்கலாம். ஆனால் என்றுமில்லாத வகையில் ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சிக்குப் பெரும் பின்னடைவையும், முட்டுக்கட்டையையும் ஏற்படுத்தியிருக்கிறது. கன்னடர்கள் இந்த அறிவிப்பைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் கருத்தில் நியாயம் இருப்பதாகவும் இதை மறைமுகமாக ஒப்புக் கொள்வதைப் போலவும் முதல்வரின் அறிவிப்பு அமைந்துவிட்டது.

-திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள்.

3. உள்ளுர் பிரச்சனைகளுக்கெல்லாம் அனைத்துக் கட்சி கூட்டம் போடும் முதல்வர், இத்தகைய முக்கியமான முடிவு எடுப்பதற்கு முன் அனைத்துக் கட்சி தலைவர்கள், உண்ணாவிரதம் இருந்த கலைத்துறையினர், வழக்கறிஞர்கள் போன்றோரை கலந்து பேசியிருக்க வேண்டாமா?

-விஜயகாந்த், தேமுதிக.

4. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சட்டப்படி உரிமை இருந்தும், கர்நாடக தேர்தல் முடியும்வரை திட்டத்தை தள்ளி வைக்கும் அறிவிப்பு அரசியல் கட்சிகள், பொது மக்களிடையே ஐயத்தை எழுப்பியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசுடன் கலந்து பேசி, ஒகேனெக்கல் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்ற முதல்வரின் அறிவிப்பு தமிழகத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர்.

5. வெகுநாட்களாக தமிழக மக்களிடையே எழுச்சி இல்லையே என்ற எண்ணம் இருந்த நிலையில், ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினையில் அனைவரும் ஒன்று திரண்டு வந்தனர். ஆனால் தற்போது திடீரென்று கர்நாடகத்தில் தேர்தல் முடியும் வரை ஒகேனெக்கல் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது? ஒகேனெக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சனையில் இரு மாநில மக்களிடையே பகை வளரும் என்பது நியாயம் இல்லை. நம்முடைய தண்ணீரைப் பங்கிடுவதற்கு நமக்கே உரிமையில்லையா? தொடர்ந்து ஒவ்வொரு உரிமையாக நாம் இழந்து வருகிறோம். முதல்வர் கருணாநிதி சொந்த லாபத்துக்காக தமிழக மக்களை வஞ்சித்துவிட்டார்.

-வைகோ, மதிமுக.

6. காங்கிரஸ் கட்சியுடன் வைத்துள்ள தேர்தல் கூட்டு முறிந்து விடுமே என்பதற்காக தமிழக மக்களின் நலனை முதல்வர் கருணாநிதி பலி கொடுத்திருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தமிழகம் வந்துள்ள நேரத்தில் முதல்வரின் அறிவிப்பு இதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. கன்னடர்களால் தாக்கப்பட்டு கர்நாடகத் தமிழர்கள் சிந்திய ரத்தம் உலர்வதற்கு முன் கன்னடர்களுக்கு பணிந்து ஒகேனெக்கல் திட்டத்தைக் கிடப்பில் போட்டு, தமிழர்களுக்குத் துரோகம் புரிந்துள்ளார். தமிழகத்தில் வரலாறு காணாத வகையில், கன்னட இனவெறியர்களுக்கு எதிரான போராட்டங்கள் பொங்கி எழுந்திருக்கும் இந்த நேரத்தில் அதை அணைப்பதற்கு முதல்வர் முயற்சி செய்கிறார். போராடும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையைச் செய்துள்ள முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது.

-பழ.நெடுமாறன், த.தே.இயக்கம்.

ஆக, கலைஞர் செய்த வரலாற்று பிழையை எத்தனை அரிதாரம் பூசினாலும் மறைக்க முடியாது. இது தமிழின வரலாற்றில் கருப்பு சுவடாகவே காட்சி தரும்.

http://meenakam.com/?p=11181

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய அரசியலில் நமது தமிழ் தேசியம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் ஊடக தர்மங்களில் ஒன்றாகும். நாம் நமது அடையாளத்தை நமது எதிர்காலத்திற்கு சொல்லி வைப்பதென்பது, நாம் வாழ்ந்ததை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். நமக்கான வரலாறு என்பது எவ்வாறெல்லாம் சிதைவு ஏற்பட்டு, இன்று நமது கையறுநிலை, கையேந்தி நிற்க வைத்திருக்கிறது. இந்திய தேசியத்தின் அடையாளமாய் நாம் இருக்கும்போதே, அந்த இந்திய இறையாண்மையின் அடிப்படை கட்டமைப்புகள் தமிழ் தேசியத்தை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சிதைவாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும்கூட என்ன செய்வது? நாம் எதிர்த்து நின்று குரல் எழுப்பி, போராடி, தெருவுக்கு வந்து, கொடியேந்தி நின்று கொண்டிருப்போம். இடையில் ஒரு அரசியல் புகுந்து நமது எண்ணங்களை, ஏக்கங்களை, நமது ஆளுமையை, போர் குணத்தை, நமது லட்சிய மாண்பை சிதைத்து, சின்னாபின்னமாக்கிவிடும். இதுதான் ஒவ்வொரு போராட்டத்தின் இறுதியிலும் நமக்கு கிடைக்கும் வெற்றியாகும். இப்படிதான் தமிழன் ஒவ்வொரு முறையும் தோற்றுக் கொண்டே இருக்கிறான். மார்ச் 26, 2010 தினமணி நாளிதழில் ஒரு செய்தி. ஒகேனெக்கல் குடிநீர் திட்டம் குறித்து நடுவண் அரசிடம் கர்நாடகம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளதாக வந்திருக்கின்றது.

ஆக, கலைஞர் செய்த வரலாற்று பிழையை எத்தனை அரிதாரம் பூசினாலும் மறைக்க முடியாது. இது தமிழின வரலாற்றில் கருப்பு சுவடாகவே காட்சி தரும்.

http://meenakam.com/?p=11181

"வரலாற்றில் பிழையாய்ப் பிறந்த கருணாநிதி" என்று தலைப்பிடுவதே சரியானது.

தமிழகத்தின் கோவணத்தையும் உருவி அதில் தனது வாரிசுகளுக்கு பட்டயம் எழுதிவைக்கு சாணக்கியரல்லவா? அவருக்கு தண்ணீர் தேவையென்றால் போகுமிடமெல்லாம் ஒரு பாரவண்டி தண்ணீரோடு போனால் சரி. விவாசாயிகளாவது மக்களாவது சும்மா போங்க மக்களே.

  • 3 weeks later...

ஒட்டு மொத்த தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமானால் இந்த துரோகி கருணாநிதி.........?????

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழரின் உரிமைகளையும் உணர்வுகளையும் ஒட்டு மொத்தமாக வட இந்தியரிடம் தன் குடும்ப அரசியலிற்காக விலை பேசி விற்றுவிட்ட கருணா நிதி

இன்னும் பல ஆண்டு உயிர் இருந்தும் பிணமாய் வாழ வாழ்த்துக்கள்!

வாத்தியார்

...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.