Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் போட்டியிட்ட சகலரும் படுதோல்வி

Featured Replies

மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5650

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர்.

எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

இதேபோல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.க்களான எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் இடதுசாரி முன்னணியின் குடைச் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்ட போதும் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.க்களான சிவநாதன் கிஷோரும் ரி.கனகரட்ணமும் இம்முறை வன்னி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவர்களும் படுதோல்வியடைந்தனர்.

இதேநேரம், கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான செல்வி கே.தங்கேஸ்வரி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும் அவரும் தோல்வியடைந்தார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்.மாவட்டத்தில் புதுமுகங்களாக ஈ.சரவணபவன், எஸ்.சிறிதரன் ஆகியோரும் மட்டக்களப்பில் பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் மகளின் அரசியல் சக்தியைப் பிரித்து வாக்குகளைப் பிரித்தவர்கள் தோற்றுப்போன பின்னர் வாக்கு வீதம் குறைவு அதனால் இது வெற்றியில்லை என்று உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.

இது தவறுகளை திருத்த உதவாது... இனி அடுத்த தேர்தல் வரும்வரை இதை ஏற்காமல் எதிர்த்துக்கொண்டிருங்கோ. அடுத்த தேர்தலுக்குள் மர்ரவேண்டியதேல்லாத்தையும் மகிந்த மாத்திடுவான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

சம்பந்த கூட்டமைப்பு துரத்தி விட்டவர்களின் இடத்தை பிடிப்பதில் தோல்வியைத் தான் தழுவியிருக்கின்றது 22 இலிருந்து 14 ஆக வந்திருக்கின்றது வென்ற மமதையில் எழுதுவதாகவே இது தெரிகின்றது

தமிழ் மகளின் அரசியல் சக்தியைப் பிரித்து வாக்குகளைப் பிரித்தவர்கள் தோற்றுப்போன பின்னர் வாக்கு வீதம் குறைவு அதனால் இது வெற்றியில்லை என்று உண்மையை ஏற்க மறுக்கிறார்கள்.

மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடைந்தனர்.

Ilankai Tamil Arasu Kadchi 65,119

United People's Freedom Alliance 47,622

United National Party 12,624

Akila Ilankai Thamil Congress 6,362

கயேந்திரனைத் துரோகி என்று பேசியவர்களின் வாதம் பொய்த்து விட்டது ததேமு வாக்குக்கள் கூட்டமைப்பிற்கு போட்டியாக இல்லை ஆனால்

Sooravali

எத்தினை வீதம் மக்கள் வாக்களித்தார்கள் என்பது முக்கியமில்லை என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். தனிப்பட்ட மனிதர்களின் வெற்றி தோல்வி பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. எங்கள் மக்கள் வாழ என்ன செய்யபோறம் அதுதான் முக்கியம்.

இதற்கு எழுதிய பதிலை நிழலி நீக்கிவிட்டார் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

சம்பந்தவாதிகள் இன்னும் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இப்போது எத்தனை பேர் வாக்களித்தார்கள் முக்கமில்லை என்று எழுதுகின்றார்கள் யாழ் மக்கள் என்ன புரியாத பாசை தான் பேசுகின்றார்கள் ?

இது தவறுகளை திருத்த உதவாது... இனி அடுத்த தேர்தல் வரும்வரை இதை ஏற்காமல் எதிர்த்துக்கொண்டிருங்கோ. அடுத்த தேர்தலுக்குள் மர்ரவேண்டியதேல்லாத்தையும் மகிந்த மாத்திடுவான்.
உங்கள் தலைவர்கள் மகிந்தாவிடம் சொல்லி மாற்றாமல் பாருங்கள்

Edited by tamilsvoice

2004 இல் கூட்டமைப்பிற்கு எப்படி 22 இடங்கள் கிடைத்தன என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. அப்போதைய யாழ் பல்கலைக்கழக வேந்தரே, கள்ளவோட்டுக கலாச்சாரத்தை மனம் நொந்து கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அதனால் அந்த வெற்றி கூட்டமைப்பின் உண்மையான வெற்றியல்ல. தற்போது கிடைத்த வெற்றி தான் கூட்டமைப்பின் உண்மையான வெற்றி. இதை சம்மந்தரும் பிபிசி பேட்டியில் ஒத்துக் கொண்டுமுள்ளார். சென்றமுறை கூட்டமைப்பில் வேட்பராளராக இலட்சக் கணக்கில் வாக்குகளைப் பெற்றவர்களால், இம்முறை கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்டு சைக்கிள் சின்னத்தில் வேட்பராளரான போது ஏன் நூற்றுக்கணக்கில் மட்டுமே வாக்குகள் பெற முடிந்தது?? இதுவே அவர்கள் எப்படிச் சென்றமுறை வாக்குகளைப் பெற்றார்கள் என்ற உண்மையை உடைத்து விட்டதே. இன்று கூட்டமைப்பு வெற்றி பெற்றதும், பொறுக்க முடியாமல் வாக்களித்த மக்களின் விகிதாசாரத்தைப் பற்றி புலம்புவோர், மாறாக சைக்கிள் சின்னத்திற்கு 5 இடங்கள் கிடைத்திருந்தால் மாறிக் கதையளந்திருப்பார்கள். எங்கே தவறு விட்டோமென்பதை தோற்றவர்கள் புரிந்து கொண்டு தம்மை மாற்ற முயல வேண்டுமேயொழிய, தோல்விகளுக்கு சப்புக்கட்டுக் காரணங்கள் சொல்லி கதையளப்பது என்றும் அந்த மக்களிடம் எனி எடுபடாது.

தாயகத்தில் மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். தமது எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டுமென்பதிலோ, எப்படியானவர்களை ஆதரிக்க வேண்டுமென்பதிலோ மிகத் தெளிவாகவே உள்ளார்கள். எனிமேல் அம்மக்களிடத்தில் உசுப்பேற்றிவிடும் அரசியலை எவரும் செய்து விட முடியாது. புலம் பெயர்ந்து "புலன்" பெயர்ந்த கூட்டங்கள் போடும் கூத்துகளையோ அறிக்கைகளையோ அவர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பதையும் பொட்டிலடித்தாற் போல் தெரி(ளி)ய வைத்துள்ளார்கள். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கூட்டமைப்பு வெற்றி பெற்றதும், பொறுக்க முடியாமல் வாக்களித்த மக்களின் விகிதாசாரத்தைப் பற்றி புலம்புவோர், மாறாக சைக்கிள் சின்னத்திற்கு 5 இடங்கள் கிடைத்திருந்தால் மாறிக் கதையளந்திருப்பார்கள். எங்கே தவறு விட்டோமென்பதை தோற்றவர்கள் புரிந்து கொண்டு தம்மை மாற்ற முயல வேண்டுமேயொழிய, தோல்விகளுக்கு சப்புக்கட்டுக் காரணங்கள் சொல்லி கதையளப்பது என்றும் அந்த மக்களிடம் எனி எடுபடாது. தாயகத்தில் மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். தமது எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டுமென்பதிலோ, எப்படியானவர்களை ஆதரிக்க வேண்டுமென்பதிலோ மிகத் தெளிவாகவே உள்ளார்கள். எனிமேல் அம்மக்களிடத்தில் உசுப்பேற்றிவிடும் அரசியலை எவரும் செய்து விட முடியாது. புலம் பெயர்ந்து "புலன்" பெயர்ந்த கூட்டங்கள் போடும் கூத்துகளையோ அறிக்கைகளையோ அவர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பதையும் பொட்டிலடித்தாற் போல் தெரி(ளி)ய வைத்துள்ளார்கள்.[/i] :lol::lol:

சரி

தாயக மக்களின் இந்த தீர்ப்பின்பால் கூட்டமைப்பு பற்றி தங்கள் நிலையென்ன...???

தாயகம் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு தமது தேர்தலில் ஏற்று போட்டியிட்டது

இது சம்பந்தமாக தங்களது நிலைப்பாட்டை அறியலாமா....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2004 இல் கூட்டமைப்பிற்கு எப்படி 22 இடங்கள் கிடைத்தன என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. அப்போதைய யாழ் பல்கலைக்கழக வேந்தரே, கள்ளவோட்டுக கலாச்சாரத்தை மனம் நொந்து கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அதனால் அந்த வெற்றி கூட்டமைப்பின் உண்மையான வெற்றியல்ல. தற்போது கிடைத்த வெற்றி தான் கூட்டமைப்பின் உண்மையான வெற்றி. இதை சம்மந்தரும் பிபிசி பேட்டியில் ஒத்துக் கொண்டுமுள்ளார். சென்றமுறை கூட்டமைப்பில் வேட்பராளராக இலட்சக் கணக்கில் வாக்குகளைப் பெற்றவர்களால், இம்முறை கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்டு சைக்கிள் சின்னத்தில் வேட்பராளரான போது ஏன் நூற்றுக்கணக்கில் மட்டுமே வாக்குகள் பெற முடிந்தது?? இதுவே அவர்கள் எப்படிச் சென்றமுறை வாக்குகளைப் பெற்றார்கள் என்ற உண்மையை உடைத்து விட்டதே. இன்று கூட்டமைப்பு வெற்றி பெற்றதும், பொறுக்க முடியாமல் வாக்களித்த மக்களின் விகிதாசாரத்தைப் பற்றி புலம்புவோர், மாறாக சைக்கிள் சின்னத்திற்கு 5 இடங்கள் கிடைத்திருந்தால் மாறிக் கதையளந்திருப்பார்கள். எங்கே தவறு விட்டோமென்பதை தோற்றவர்கள் புரிந்து கொண்டு தம்மை மாற்ற முயல வேண்டுமேயொழிய, தோல்விகளுக்கு சப்புக்கட்டுக் காரணங்கள் சொல்லி கதையளப்பது என்றும் அந்த மக்களிடம் எனி எடுபடாது.

தாயகத்தில் மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். தமது எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டுமென்பதிலோ, எப்படியானவர்களை ஆதரிக்க வேண்டுமென்பதிலோ மிகத் தெளிவாகவே உள்ளார்கள். எனிமேல் அம்மக்களிடத்தில் உசுப்பேற்றிவிடும் அரசியலை எவரும் செய்து விட முடியாது. புலம் பெயர்ந்து "புலன்" பெயர்ந்த கூட்டங்கள் போடும் கூத்துகளையோ அறிக்கைகளையோ அவர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பதையும் பொட்டிலடித்தாற் போல் தெரி(ளி)ய வைத்துள்ளார்கள். :lol::lol:

அரசியல்வாதிகளுக்கு வாக்கு சேகரிப்பதில் மட்டுமே கண்ணாயிருக்கும். வேறு எந்த மனிதாபிமானடமும் விளங்காது.

தாயாகப்பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வாக்களிக்கவில்லை, குறிப்பாக யாழ் குடாநாட்டில் பிரகடனப்படுத்தப்படாத ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது போல் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது என அங்குள்ள ஊடகவியலாளர்கள் செய்தி வெளியிட்டனர். இதனை சுரேஸ் பிரேமச்சந்திரனும் (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31521) ஏற்றுக்கொண்டுள்ளார். நீதியானதும் சுதந்திரத்திற்குமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தனது செய்திக்குறிப்பில் வடக்கில் குறைந்தளவில் வாக்கு பதிவானமையும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சில வாக்குச்சாவடிகளில் யாருமே வாக்களிக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறது. (http://www.caffe.lk/Low_voter_turnout_in_Northern_Province-5-2016.html)

ஒரு பாரிய இனப்படுகொலையை எதி்ர்கொண்ட மக்கள், தமது அன்றாட வாழ்வாதரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கையில், வழமைபோல் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என ஒரு முட்டாள் அரசியல்வாதி மட்டும்தான் சிந்திப்பான். இந்த இலட்சணத்தில் இப்போது நடந்த தேர்தல்தான் முறையான தேர்தல், இப்போது கிடைத்த வெற்றிதான் உண்மையான வெற்றி என்று சம்பந்தன் சொல்லியிருப்பார் என நான் நம்பவில்லை. கொள்கையளவில் சம்பந்தனை நான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவர் முட்டாள்த்தனமாக கருத்துச் சொல்லும் மனிதர் எனக்கருதவில்லை.

சம்மந்தர் இப்போது நடந்த தேர்தல் தான் முறையான தேர்தல் என கூறியதாக நான் எழுதவில்லையே?? "சென்றமுறை பெற்ற வெற்றி கூட்டமைப்பின் உண்மையான வெற்றியல்ல. தற்போது கிடைத்த வெற்றி தான் கூட்டமைப்பின் உண்மையான வெற்றி. இதை சம்மந்தரும் பிபிசி பேட்டியில் ஒத்துக் கொண்டுமுள்ளார்" என்று தான் எழுதியுள்ளேன். போரீன் பாதிப்பினால்த் தான் தமிழ்மக்கள் பலர் வாக்களிக்கவில்லையென்றால், யாழில் விழுந்த வாக்குவீதத்தை விட வன்னியில் விழுநத வாக்கவீதம் அதிகரிக்கச் சந்தர்ப்பமில்லையே?? தமிழ் மக்களின் தேர்தல் புறக்கணிப்பிற்கு போரும் ஒரு காரணமேயொழிய, போர் மட்டும் காரணமல்ல. அதைவிட திருகோணமலைத் தேர்தல் முடிவுகளும் இன்னும் வரவில்லை. அங்கும் தமிழரசுக் கட்சிக்கு நிச்சயம் ஒன்று முதல் இரண்டு இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

சம்மந்தரின் பிபிசி பேட்டியை கேட்க விரும்பின்: http://www.bbc.co.uk/tamil/news/story/2010/04/100409_sambandanonpolls.shtml

சரி

தாயக மக்களின் இந்த தீர்ப்பின்பால் கூட்டமைப்பு பற்றி தங்கள் நிலையென்ன...???

தாயகம் சுயநிர்ணய உரிமையை கூட்டமைப்பு தமது தேர்தலில் ஏற்று போட்டியிட்டது

இது சம்பந்தமாக தங்களது நிலைப்பாட்டை அறியலாமா....???

சில சுயதம்பட்டங்களின் புலம்பல்கள் ஓயும்வரை பொறுத்திருந்தேன். உண்மையில் கூட்டமைப்பின் சமீபத்திய மாற்றங்களை மக்கள் சில எச்சரிக்கைகளுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தாயகம், சுயயநிர்ணய உரிமைகளென்பது தமிழர்களின் பிரிக்க முடியாத உரிமைகள். அதனை கூட்டமைப்பு ஒரே இலங்கைக்குள் தீர்வு என்பதின் அடிப்படைக்குள்ளேயே ஏற்றுக் கொண்டுள்ளது. தாயக மக்கள் எனி ஒரு போராட்டத்தையோ தமிழீழக் கோசத்தையோ போடும் நிலையையோ அல்லது அது பற்றி பேசுவோரையோ ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லையென்பதை தெளிவாகவே உணர்த்தியுள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் மக்கள் மீண்டும் உசுப்பேற்றும் கோசங்களை வைத்து தமது பிழைப்புகளைத் தொடருவதை விட்டுவிட்டு, தாம் வாழும் நாடுகளின் அரசுகள் மூலம் மகிந்த அரசிற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்து தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வொன்றை வைக்கும் நிலையை ஏற்பபடுத்தலாம். இதனை வெளிநாடுகள் அதிகார தோரணையில் அணுகாமல், நட்புரீதியாக அணுகி நிச்சயம் சாதிக்க முடியும். இதற்கு எம்மவர்கள் எமது அணுகுமுறைகளில் நிறைய மாற்றம் கொண்டு வர வேண்டும்.

நீங்கள் சொல்லுறது மாதிரித்தான் கூட்டமைப்பு செய்ய போகுது.... ஆனால் வேறை எதையோ புடுங்கிறதுக்கு கூட்டமைப்பு போடுகிற அடித்தளம் தான் இது எண்டும் இங்கையும் அங்கையும் கதை விட்டுதான் கூட்டமைப்புக்கு ஒரு 15% மான மக்களின் ஆதரவை தன்னும் இப்பவும் வைச்சு இருக்கினம்... இல்லை எண்டால் அந்தச்சனமும் வாக்கு போட போகாமல் இருந்து இருக்கும்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர்.

தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் மறுபடியும் தோற்றுள்ளது!? சிங்கள பேரினவாதமும், அடிவருடிகளும், ஒட்டுண்ணிகளும் வென்றுள்ளனர். இதை கொண்டாடுபவர்கள் கொண்டாடாடும்! நீதி, நியாயத்துக்கு காலம் வரும்வரை அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்போம்.

  • தொடங்கியவர்

அய்யா தமிழ் குரல்

நீங்கள் என்ன சொல்ல வாறீர்கள்? இந்த தேர்தலில் கூட்டமைப்பின் கொள்கையைத்தான் மக்கள் ஆதரித்தார்கள். அது இல்லையென்று நீங்கள் சொல்லும் காரணம் வெறும் பதினைந்து வீதமக்கள் தான் வாக்களித்தார்கள் என்று.

சரி வாக்களிக்காதவர்கள் எதிராகத்தான் இருக்கிறார்கள் என்று எப்படி அறுதியாகக் கூறமுடியும். கூட்டமைப்பின் கொளகைகளை அவர்கள் சொன்னார்கள்.. எதிராக கஜேந்திரக்குமார் நின்றார் அவரின் கொலகையையும் சொன்னார்கள்.

மக்கள் கூட்டமைப்பை ஆதரிக்கவில்லை என்றால் எதிர்த்திருக்கவேண்டும். ஏன் எதிர்க்கவில்லை?

வாக்களிக்காத எல்லாரையும் எதிர்க்கிறார்கள் என்று அன்ன அடிப்படையில் சொல்லமுடியும்?

எதிர்ப்பவர்கள் ஏன் கஜேந்திரனுக்கு வாக்களிக்கவில்லை?

அப்போ அவர்களையும் மக்கள் எதிர்க்கிறார்களா?

அப்படியானால் யாரை மக்கள் அதிகமாக எதிர்க்கிறார்கள்? கூட்டமைப்பையா? அல்லது கஜேந்திரனையா?

இறுதியாக சில விடயங்கள்..

நான் கூட்டமைப்பும் இல்லை வெல்லவும் இல்லை, வென்ற மமதையில் நான் இதை எழுதவும் இல்லை. ஒருவேளை நீங்கள் ஆதரித்த பக்கத்தினர் தோற்றதனால் சும்மா வந்து சொருகிரமாதிரி கிடக்கு? இந்த செய்தி வந்தது பேப்பர்ல.

கஜேந்திரனை மட்டுமல்ல எவரையும் நான் தொரோகிஎன்று சொன்னதில்லை

கஜேந்திரனந்து கொள்கைகள் தவறென்றும் நான் சொன்னதில்லை

கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் என்ன பெரிய கொள்கை வித்தியாசம்? இரண்டு பெரும் கிட்டத்தட்ட ஒன்றைத்தான் சொல்லினம்.

சரி எங்கேயாவது நான் சம்பந்தர் சொன்னதுதான் சரியென்று சொன்னேனா? அல்லது அவர்தான் என் தலைவன் என்று சொன்னேனா?

நீங்கள் நினைப்பதை மற்றவர்களும் நினைக்கவேண்டுமேன்று நீங்கள் நினைப்பதும் அப்படி இல்லதாவர்களை எதிரியாகப்பர்ப்பதும் உங்களில் உள்ள குறைபாடுதான் காரணம். எனக்கு கட்சியும் அரசியலும்தான் முக்கியமென்றால் நான் இங்கு வந்து உங்களுக்கு பதில் எழுதவேண்டிய தேவை இல்லை.

இருந்த அமைப்பை பிரிக்கும்போதே சொன்னேன் இது பிழை பிழையான முடிவுவேன்று அன்றில் இருந்து அந்தத் தவற்றை சுட்டிக்காட்டினேன்.

உங்களை போன்று கருதாதவர்களை ஒதுக்கியது உங்களைப் போன்ற ஆட்கள்தான்.

இப்போது நீங்கள் ஆதரித்த ஆட்கள் வெல்ல முடியாமல் போனதுக்கு எங்கள் மீது எரிப்பய்வதுக்கு என்ன காரணம்?

Edited by Sooravali

2004 இல் கூட்டமைப்பிற்கு எப்படி 22 இடங்கள் கிடைத்தன என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. அப்போதைய யாழ் பல்கலைக்கழக வேந்தரே, கள்ளவோட்டுக கலாச்சாரத்தை மனம் நொந்து கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அதனால் அந்த வெற்றி கூட்டமைப்பின் உண்மையான வெற்றியல்ல.

2004ல் கள்ளவோட்டு இல்லாவிட்டால் டக்லஸ் இன்னும் அதிக தொகுதியில் வென்றிருப்பார் என்று சொல்லுகிறீர்களா?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2004 இல் கூட்டமைப்பிற்கு எப்படி 22 இடங்கள் கிடைத்தன என்பது ஒன்றும் புரியாத புதிரல்ல. அப்போதைய யாழ் பல்கலைக்கழக வேந்தரே, கள்ளவோட்டுக கலாச்சாரத்தை மனம் நொந்து கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அதனால் அந்த வெற்றி கூட்டமைப்பின் உண்மையான வெற்றியல்ல. தற்போது கிடைத்த வெற்றி தான் கூட்டமைப்பின் உண்மையான வெற்றி. இதை சம்மந்தரும் பிபிசி பேட்டியில் ஒத்துக் கொண்டுமுள்ளார். சென்றமுறை கூட்டமைப்பில் வேட்பராளராக இலட்சக் கணக்கில் வாக்குகளைப் பெற்றவர்களால், இம்முறை கூட்டமைப்பால் வெளியேற்றப்பட்டு சைக்கிள் சின்னத்தில் வேட்பராளரான போது ஏன் நூற்றுக்கணக்கில் மட்டுமே வாக்குகள் பெற முடிந்தது?? இதுவே அவர்கள் எப்படிச் சென்றமுறை வாக்குகளைப் பெற்றார்கள் என்ற உண்மையை உடைத்து விட்டதே. இன்று கூட்டமைப்பு வெற்றி பெற்றதும், பொறுக்க முடியாமல் வாக்களித்த மக்களின் விகிதாசாரத்தைப் பற்றி புலம்புவோர், மாறாக சைக்கிள் சின்னத்திற்கு 5 இடங்கள் கிடைத்திருந்தால் மாறிக் கதையளந்திருப்பார்கள். எங்கே தவறு விட்டோமென்பதை தோற்றவர்கள் புரிந்து கொண்டு தம்மை மாற்ற முயல வேண்டுமேயொழிய, தோல்விகளுக்கு சப்புக்கட்டுக் காரணங்கள் சொல்லி கதையளப்பது என்றும் அந்த மக்களிடம் எனி எடுபடாது.

தாயகத்தில் மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளார்கள். தமது எதிர்காலத்தை எப்படி தீர்மானிக்க வேண்டுமென்பதிலோ, எப்படியானவர்களை ஆதரிக்க வேண்டுமென்பதிலோ மிகத் தெளிவாகவே உள்ளார்கள். எனிமேல் அம்மக்களிடத்தில் உசுப்பேற்றிவிடும் அரசியலை எவரும் செய்து விட முடியாது. புலம் பெயர்ந்து "புலன்" பெயர்ந்த கூட்டங்கள் போடும் கூத்துகளையோ அறிக்கைகளையோ அவர்கள் கணக்கில் எடுக்கப் போவதில்லை என்பதையும் பொட்டிலடித்தாற் போல் தெரி(ளி)ய வைத்துள்ளார்கள். :lol::)

ஏழு வாக்கு மட்டும் பெற்று அமைச்சரான டக்கிளசு எப்படி அதிகூடிய விருப்பு வாக்கை இந்த முறை பெற்றார், அதன் சூச்சுமமும் உங்களுக்கு தெரியுமோ? :rolleyes::):lol:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.