Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உருக்கும் உண்மைகள் 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரக்தியே வாழ்வாய்போன விதுசன்

விதுசனிற்கு இப்பொழுது வயது 14 .கடந்த வருடம் வன்னியில் தன் 9 வயது தம்பியுடன் துள்ளித்திரிந்த பள்ளிமாணவன்தான் இவனும். வன்னியில் போரின் இறுக்கம் அதிகரித்த காலம் தைமாதம் ஒரு நாள்பொழுதில் எங்கிருந்தோ வந்து வீழ்ந்த செல் குண்டொன்று அவனது தாயாரை பலியெடுத்துப் போனது. தாயின் இழப்பு அவனது வாழ்வில் வீழ்ந்த முதலாவது இடி. தாயாரை இழந்தாலும் தந்தையின் அரவணைப்பில் தாயின் சேகத்திலிருந்து மெல்ல மீண்டெழுந்து கொண்டு வந்தாலும் கொடிய யுத்தம் கூடவே துரத்தியது. வன்னியின் வழமான வாழ்ககைகைள் அத்தனையையும் ஒரு நொடிப்பொழுதில் இழந்துவிட்டு ஓடிய அத்தனை மக்களுடனும் விதுசனின் குடும்பமும் ஓடிக்கொண்டிருந்தது.விதுசனும் தந்தையின் கையை பிடித்தபடி மறுகையால் தம்பியையும் பிடித்தபடி செல் வந்தபோதெல்லாம் வீ்ழ்ந்து படுத்தபடி ஓடிக்கொண்டேயிருந்தான். அப்படித்தான் கடந்த வருடம் பங்குனி மாதம் ஒரு காலையில் செல்கள் சீறிவரும் சத்தம் கேட்டது விதுசனும் பங்கரை தேடி ஓடமுதல் வீழ்ந்து வெடித்த செல்களின் சத்தங்களிடையே ..அய்யோ அம்மா என்றொரு சத்தத்துதடன் விதுசன் மயங்கிப்போனான்..

அவன் கண்விழித்துப்பார்த்தபொழுது செஞ்சிலுவைச்சங்க தற்காலிக மருத்தவ முகாம் ஒன்றில் படுத்திருந்தான் .அருகில் அவனது அப்பாவும் அழுதபடி தம்பியும் நின்றிருந்தனர்.. உடம்பின் இடப்பக்கம் ஒரே வலியாய் இருந்தது.இரு கைகளையும் ஊன்றி எழுந்திருக்க முயன்றான் அவனது வலக்கையை மட்டுமே ஊன்றக்கூடிதாகவிருந்தது..இடக்கையை ஊன்றமுடியவில்லை. அவனது இடக்கை முங்கைக்கு மேலே காணவில்லை..அந்த இடத்தில் ஒரு பந்தம் போல கட்டுப்போட்டிருந்தது..."அப்பா என்ரை கை என்று" அழுதான்..அவனது தந்தையும் அழுதார் அவனது தம்பியும் அழுதான் ..அவர்களால் அது மட்டுமே முடிந்தது..இது இவனிற்கு வீழ்ந்த இரண்டாவது இடி.. இராணுவம் முன்னேறிக்கொண்டேயிருந்தது மாத்தளனை நெருங்கிவிட்டார்கள்.ஒரு மாதமளவில் தற்காலிக மருத்துவ மனைகளையும் மூடிவிட்டு செஞ்சிலுவைச்சங்க வைத்தியர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். விதுசன் தங்கியிருந்த மருத்துவமனையும் மூடப்பட்டது. மிக மோசமான காயக்காரர்களை மட்டும் செஞ்சிலுவைச்சங்கக் கப்பலில் எற்றிக்கொண்டு புறப்பட்ட வைத்தியர்களிடம்..  "டொக்ரர் எனக்கு கை இன்னும் நோகுதுஎன்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ "என்றழுதான் அவர்கள் போய்விட்டார்கள்...புது மாத்தளன் பகுதியில் இறுதிப் பேரவலத்தின் முதலநாள் 16 ந்திகதி அதிகாலை 4' மணியளவில் இருளைக்கிழித்துக்கொண்டு மீண்டும் ஒரு குண்டுமழை... குண்டுச்சத்தங்களையும் மீறிய மனித ஓலம். இலட்சக்கணக்கான மக்கள் சில கிலோ மீற்றர் தூரத்தற்குள் பொறிக்குள் அகப்பட்டவர்களாய் யார் எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தனர். குண்டுச்சத்தத்தில் நித்திரையால் திடுக்கிட்டு விழித்த விதுசனும் அருகில் படுத்திருந்த தன் தம்பியின் கையை பிடித்தபடி தந்தைய தேடினான்.காணவில்லை

.அப்பா ..அப்பா ..என்று அலறியபடி தந்தையை தேடி ஓடிய விதுசனையும் தம்பியையும் யாரே ஒரு பதுங்கு குழிக்குள் இழுத்துப் போட்டார்கள்...சிலமணி நேர குண்டுச்சத்தம் புழுதியும் புகையுமாய் ஓய்ந்து போனது. மெல்ல சூரியவெளிச்சம் எழுந்தபொழுது ஒல்லோரும் சரணடையும்படி தமிழில் ஒலிபெருக்கி சத்தம கேட்டது அதைத்தொடர்ந்து சிங்களத்தில் கதைக்கும்சத்தங்கள்..இராணுவத்தின் நீட்டிய துப்பாக்கிகள் முன்னால் உடலில் உயிர் ஒட்டியிருந்த அனைவரும் கைகளை துக்கியபடி அவர்கள் காட்டிய பகுதியால் போய்க்கொண்டிருந்தனர்.விதுசனும் தன் ஒற்றைக்கையை துக்கியபடி தம்பியுடன் போய்க்கொண்டிருந்தான்..போகும் வழியெங்கும் பின்னர் அடுத்தடுத்து மாற்றப்பட்ட முகாம்கள் எங்கும் தன் தந்தையின் முகத்தை தேடினான்..காணவில்லை.. இது இவனிற்கான மூன்றாவது இடி....ஆறுமாதகால தடுப்பு முகாம் வாழ்க்கை முடிந்து தம்பியுடன் வடமராட்சி மணல்காடு இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பப்பட்டான்..அங்கு சென்ற அவனிற்கு மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. வடமராட்சி பகுதியில்தான் அவனது அம்மம்மா.(தாயின் தாயார்) வசித்துவந்தார்.முன்னர் தாய் தந்தையுடன் அவர்கள் வீட்டிற்கு போய்வந்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு தம்பியையும் அழைத்தபடி அம்மம்மாவின் வீட்டைத்தேடிப்போனான்.தன் மகளை இழந்து தவிக்கும் அம்மம்மா தங்களைக்கண்டதும் ஆசையில் ஓடிவந்து கட்டியணைப்பாரென தவிக்கும் கனவுகளுடன் அவர்களது கதவைத் தட்டியவனிற்கு ஏமாற்றமே.. 

» "என்ரை மகளே இல்லாமல் போட்டுது அது பெத்த நீங்கள் எனக்கென்னத்துக்கு அதிலை ஒரு சனியனிற்கு கைவேறை இல்லை உங்களை வைச்சு சோறு போட என்னாலை ஏலாது போய் தொலையுங்கோ" என்று துரத்தி விட்டாள்.ஆசையாசையாய் தேடிப்போன அம்மம்மாவும் துரத்திவிட்ட கவலையில் நான்காவது இடியையும் தாங்கியபடி தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மீண்டும் மணற்காட்டு முகாமிற்கு திரும்பிய அண்ணனும் தம்பியும். அங்கு முகாமில் தங்கியிருக்கு இன்னொரு தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் குடிசையில் முடங்கிப்போனார்கள்..இப்படியான நேரத்தில்தான் கடந்த மாதம்.(பங்குனி.2010.) எமது நேசக்கர உறுப்பினரான கமலாதேவி அவர்கள் மணற்காட்டு முகாமிற்கு சென்றவேளை விதுசனையும் அவனது தம்பியின் நிலைமைகளை தெரிந்து கொண்டு அவர்களிற்கான கல்வி உதவிகளை வழங்கி பாடசாலைக்கும் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் விதுசனின் எதிர்காலத்திற்காக வங்கியில் ஒரு தொகை பணமும் வைப்பிலடப்பட்டது.வழைமைபோல இந்த மாதம் குழந்தைகளிற்கான உதவிகளை வழங்குவதற்காக பாடசாலை சென்ற நேசக்கரம் உறுப்பினர்களிற்கு விதுசன் ஒரு வாரமாக பாடசலை வரவில்லையென்று அறிந்து அதிர்ச்சியடைந்தவர்களாய் அவனைத் தேடத் தொடங்கினார்கள். அவன் தங்கியிருந் வயதான பெண்ணின் வீட்டிலும் அவன் இல்லை அவனது தம்பிக்கும் அவன் எங்கு போனான் எனத்தெரியவில்லை. அவனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் தொடர்ச்சியான தேடுதலில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டான்.அப்பொழுதுதான் அவன் மீது விழுந்த 5 வது இடி பற்றிய விபரம் தெரியவந்தது..

விதுசனிற்கு நேசக்கரம் கல்வி உதவியுடன் பணஉதவி செய்த விபரம் அறிந்துகொண்ட அவனது சித்தப்பா முறையான ஒருவர். ஒருநாள் பாடசாலையால் வீடு திரும்பிக்கொண்டிருந்த விதுசனை அழைத்துப்போய் தன்னுடன் தங்கி இனி படிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறி நேசக்கரம் ஊடாக கிடைத்த பணத்தினை தன்னிடம் தரும்படியும் வேறு யாரிடமும் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுள்ளார்.ஆனால் நேசக்கரம் அவனிடமோ வேறு யாரிடமோ பணத்தினை கொடுத்திருக்கவில்லை அவனது பெயரில் வங்கி கணக்கு ஒன்றினை தொடங்கி அதில் நிதந்தர சேமிப்பாகவே அந்தப் பணத்தினை இட்டிருந்தது. அதே நேரம் விதுசன் 18 வயதான பின்னர்தான் அவன் அந்தப் பணத்தினை வங்கியிலிருந்து எடுக்கலாம்..இந்த விபரங்கள் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவனது சித்தப்பா கோபத்தில் விதுசனை அடித்து உதைத்திருக்கிறார். அவரிடம் இருந்து தப்பியோடி வந்த விதுசன் மீண்டும் சித்தப்ப்பா தன்னை தேடிவரலாம் என்கிற பயத்தில் பாடசாலைக்கும் போகாமல் முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கும் போகாமல் வேறொரு தெரிந்தவர்கள் வீட்டில் ஒழிந்திருந்தவேளை நேசக்கரம் உறுப்பினர்கள் அவனை மீண்டும் மீட்டெடுத்துள்னர்.தற்சமயம் அவனும் அவனது தம்பியும் வவுனியாவில் உள்ள நேசக்கர இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டு அவர்கள் அங்கிருந்தபடியே கல்வியினை தொடர்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன..

விதுசனின் குரலை கேட்பதற்கு இங்கு அழுத்துங்கள்..நன்றி

post-1260-12713633136657_thumb.jpg

Edited by sathiri

என்ன எல்லாக்கதையிலையும் அம்மா, அப்பா, அம்மம்மா, சித்தப்பா எல்லாருமே வில்லன்களாய் வருகினம். பொருளாதாரம் வாழ்வுக்கான ஆதாரம். அந்த வசதிகள் இல்லாத நிலையில எல்லாமே சூனியம்தானோ. உருக்கும் உண்மைகளில விரைவில ஆளையாய் பசியில கடிச்சு சாப்பிடுறதுமாதியான சம்பவங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை சாத்திரி அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாக்கதையிலையும் அம்மா, அப்பா, அம்மம்மா, சித்தப்பா எல்லாருமே வில்லன்களாய் வருகினம். பொருளாதாரம் வாழ்வுக்கான ஆதாரம். அந்த வசதிகள் இல்லாத நிலையில எல்லாமே சூனியம்தானோ. உருக்கும் உண்மைகளில விரைவில ஆளையாய் பசியில கடிச்சு சாப்பிடுறதுமாதியான சம்பவங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை சாத்திரி அண்ணை.

உண்மைதான் மச்சான் ஆளையாள் பிடிச்சு தின்கிறதுபோல வேதனையான கதைகள்தான்..30 வருடங்களாக ஒரு இனத்தின் விடிவிற்காக போராட்டம் நடத்திய எம்மவர்கள் தங்களிற்குள்ளேயே அதுவும் குழந்தைகளையே மனிதத் தன்மையற்று நடத்துவதும். ஒருத்தனின் தனிமனித உரிமையை பறிப்பதுமான விடயங்களே அதிகமாக நடக்கிறது.அதற்கு முக்கியமான காரணம் நீங்கள் சொன்னது போல பெருளாதார வசதி இல்லாமையால் யாரையாவது எப்படியாவது ஏமாற்றியோ அல்லது வன்முறையாலேயோ அதனை பெற்றுக்கொள்ள முனைகின்றனர்..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் வலிகள் வரலாம் ஆனால் வாழ்க்கையே வலியாகிப்போன இவர்கள் கதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த உதவிகளைசெய்வது தவிர்க்க முடியாதது.நன்றி சாத்திரி தொடர்ந்தும் அவலங்களை அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இப்படியும் மனிசரா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் 30 வருடங்கள் வாய் மூடி, கண் மூடி இருந்தததின் பலாபலன்கள் இவை.

இன்னமும் இது ஒரு 30 வருடங்கள் செல்லும் இந்த அவலங்கள் தீர.

சரி இதை அரைவாசியாக குறைக்க நீங்களும் நாங்களும் சேர்ந்து பணியாற்றலாம்தானே.பழசை மறந்து உறவுகளுக்கு உதவுவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் வலிகள் வரலாம் ஆனால் வாழ்க்கையே வலியாகிப்போன இவர்கள் கதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்த உதவிகளைசெய்வது தவிர்க்க முடியாதது.நன்றி சாத்திரி தொடர்ந்தும் அவலங்களை அறியத்தாருங்கள்.

வணக்கம் கண்மணியக்க நீண்ட நாட்களின் பின்னர் யாழில் கண்டது மகிழ்ச்சி உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் மச்சான் ஆளையாள் பிடிச்சு தின்கிறதுபோல வேதனையான கதைகள்தான்..30 வருடங்களாக ஒரு இனத்தின் விடிவிற்காக போராட்டம் நடத்திய எம்மவர்கள் தங்களிற்குள்ளேயே அதுவும் குழந்தைகளையே மனிதத் தன்மையற்று நடத்துவதும். ஒருத்தனின் தனிமனித உரிமையை பறிப்பதுமான விடயங்களே அதிகமாக நடக்கிறது.அதற்கு முக்கியமான காரணம் நீங்கள் சொன்னது போல பெருளாதார வசதி இல்லாமையால் யாரையாவது எப்படியாவது ஏமாற்றியோ அல்லது வன்முறையாலேயோ அதனை பெற்றுக்கொள்ள முனைகின்றனர்..

சாத்திரி உங்களுடைய கதையை /கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது தனியே பொருளாதார பிரச்சனையுன் மட்டும் இணைந்தது என கருதமாட்டேன். இது சமூக அடித்தளமே ஆட்டம் கொள்ளகிற/கொண்ட இடம், இப்படி எழுதுதினால் பலருக்கு பிடிக்காது...ஆனால் எனக்கு அப்படிதான் படுகிறது. உலகத்தில் நாங்கள் ஒரு பந்தைய குதிரைகள் போல் எல்லாவற்றையும் இழந்து/அடமானம் வைத்து போராடினோம்/போராட உந்தப்பட்டோம் ..விளைவுகளை/பலனை நோக்காமல் போராடினோம்...இன்று வெற்றியை தவிர எல்லாவற்ரையும் இழந்து அதை ஜீரணிக்க கடினமாய் உள்ளோம்.

இன்னுமொரு கருத்து, எனது வங்கிகள், தனிமனித வாழ்க்கை கோலங்கள் பற்றிய அறிவு பூரணமற்றது என்று தெரியும் என்றாலும்...என்ன காரணத்துக்காய் இத்தகைய சிறுவர்களின் பெயரில் வங்கிகளில் வைப்பில் இடுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? ஏனெனில் ஒன்று இலங்கையில் போடும் பணம் 5 அல்லது 10 வருடத்துக்கு பிறகு எந்தளவிர்ற்கு அதன் பெறுமதியை வைத்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது, மற்றது இத்தகைய சிறுவர்களுக்கு பெரிய அளவிலான உதவி இப்போதே தேவைபடுகிறது...எனவே அதை இப்போதுதே பயன்படுத்த கூடிய முறையில் செய்தாலே நன்று ...நடைமுறை பிரச்சினைகள் உண்டு...6 மாதத்தில் முழுப் பணத்தையும் சிலவளித்தால் என்ன செய்வது என்ற கேள்விகள்..ஆனால் 10 வயது பிள்ளைக்கு 18 வயதில் வரும் பணத்தால் -இலங்கையில் பெரிதாக பயன் இல்லை...(5 வகுப்பு புலமைபரிசு காசு போல)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி உங்களுடைய கதையை /கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது தனியே பொருளாதார பிரச்சனையுன் மட்டும் இணைந்தது என கருதமாட்டேன். இது சமூக அடித்தளமே ஆட்டம் கொள்ளகிற/கொண்ட இடம், இப்படி எழுதுதினால் பலருக்கு பிடிக்காது...ஆனால் எனக்கு அப்படிதான் படுகிறது. உலகத்தில் நாங்கள் ஒரு பந்தைய குதிரைகள் போல் எல்லாவற்றையும் இழந்து/அடமானம் வைத்து போராடினோம்/போராட உந்தப்பட்டோம் ..விளைவுகளை/பலனை நோக்காமல் போராடினோம்...இன்று வெற்றியை தவிர எல்லாவற்ரையும் இழந்து அதை ஜீரணிக்க கடினமாய் உள்ளோம்.

இன்னுமொரு கருத்து, எனது வங்கிகள், தனிமனித வாழ்க்கை கோலங்கள் பற்றிய அறிவு பூரணமற்றது என்று தெரியும் என்றாலும்...என்ன காரணத்துக்காய் இத்தகைய சிறுவர்களின் பெயரில் வங்கிகளில் வைப்பில் இடுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? ஏனெனில் ஒன்று இலங்கையில் போடும் பணம் 5 அல்லது 10 வருடத்துக்கு பிறகு எந்தளவிர்ற்கு அதன் பெறுமதியை வைத்திருக்கும் என்று யாருக்கும் தெரியாது, மற்றது இத்தகைய சிறுவர்களுக்கு பெரிய அளவிலான உதவி இப்போதே தேவைபடுகிறது...எனவே அதை இப்போதுதே பயன்படுத்த கூடிய முறையில் செய்தாலே நன்று ...நடைமுறை பிரச்சினைகள் உண்டு...6 மாதத்தில் முழுப் பணத்தையும் சிலவளித்தால் என்ன செய்வது என்ற கேள்விகள்..ஆனால் 10 வயது பிள்ளைக்கு 18 வயதில் வரும் பணத்தால் -இலங்கையில் பெரிதாக பயன் இல்லை...(5 வகுப்பு புலமைபரிசு காசு போல)

வெல்கனோ அந்தச் சிறுவனிற்கான கல்வி மற்றும் வேறு தேவைகனிற்கான உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டுதானிருக்கின்றோம்..ஆனால் அவனிற்கு முழங்கைக்கு மேலே கை இல்லாது போனதால் செயற்கை கை பொருத்த முடியாதது மட்டுமல்ல அவன் வளர்ந்து வரும் சிறுவன் என்பதால் அவன் வளர்ச்சிக்கு ஏற்ப அவனது கை எலும்பும் இயற்கையான வளர்ச்சியை செய்துகொண்டிருக்கும்..எனவே ஆறு மாதங்களிற்கொரு தடைவையாவது வளர்ந்து வரும் அவனது கை எலும்பினை சத்திர சிகிச்சை மூலம் வெட்டி எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் இல்லா விட்டால் வெறும் எலும்பு மட்டும் வெளியே வளந்து நிற்கும்..அடுத்தது அவனிற்கு வங்கியில் பணம் போடப்பட்டதன் காரணம்..நீங்கள் சொன்ன அதே காரணம் தனியாக பொருளாதார பிரச்சனை மட்டும் எமது சமூகத்தின் பிரச்சனையல்ல .எமது சமூகம் மற்றவனது ஊhனத்தை உற்று நோக்குகின்ற மோசமானதொரு ஊனமுற்ற சமுகக் கட்டமைப்பு எம்முடையது..எனவே அவன் வளர்ந்து பெரியவன் ஆனதன் பின்னர் கல்வியை முடித்த பின்னரோ அல்லது கல்வியை தொடரமுடியாது ஏதும் தொழில் செய்ய நினைக்கிற பொழுது அந்தப் பணம் அவனிற்கு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கையில்தான் பணம் வைப்பிலடப் பட்டது...ஆனால் அவன் வளர்ந்து அந்தப் பணத்தை எடுத்து உருப்படியாக எதுவும்செய்யாமல் வெறுமனே செலவளித்தால் என்ன செய்வீர்கள் என்றும் கேள்விகள்..கேட்கலாம்..அப்படியும் நடக்கலாம் ..ஆனால் அப்படித்தான் நடக்கும் என்று நினைத்து விட்டு பேசாமல் நாங்களும் வெந்ததை தின்று வேகின்ற உடம்பென்று பிறந்தமா செத்தமா என்றுதான் இருக்கவேண்டும்..எங்கள் போராட்டம் இப்படி சிதறும் என்று நினைத்தா அன்று பலர் உயிரை கொடுத்தார்கள்??இல்லையே நாடு கிடைக்கும் என்றொரு நம்பிக்கைதானே..அதேபோல் இந்த சிறுவனும் இந்தச் சமூகத்தில் நன்றாக வருவான் என்கிற நம்பிக்கையில்தான் செய்கிறோம்.. இதற்காக நாங்கள் ஒன்றும் உயிரை கொடுக்கப்போவதில்லையே ..எங்கள் நேரத்தையும்..பணத்தையும் மட்டுமே கொடுக்கப்போகின்றோம்..நன்றி

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி நன்றி உங்கள் பதிலுக்கு

என்னால் இப்போது தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அந்த சிறுவனுக்கு வங்கியில் உள்ள பணம் ஏன் (பிற்காலத்தில்) தேவை என்பது. என்னுடைய முதல் பதிலில் நான் குறிப்பிட்டிருந்தது, இன்று வங்கியில் ஈடுவதிலும் பார்க்க அவரது இன்றைய தேவைகளை நிறைவு செய்வதே நல்லம் என்று சொல்ல வந்தேன், தவிர வங்கியில் ஈடுவது முற்றிலும் தவறானது என்று சொல்லவில்லை (அவ்வாறான கருத்தை தந்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்). அதேநேரத்தில் உங்களுடைய பதிலில் முழு விளக்கத்தை தந்ததிற்கும் நன்றி....

போராட்டம் பற்றி நான் சொல்லவந்தது அதனுடைய பாதிப்புகள் பற்றித்தான். அதனுடைய நோக்கம், எதிர்பார்ப்புகள் பற்றியல்ல. நான் இங்கே அமெரிக்காவிலும் சில ஒய்வு பெற்ற/காயமடைந்த படையினர் சிகிச்சை பெறும் இடங்களுக்கு சென்றுள்ளேன் (தாயகத்தில் சொல்லவில்லை என்றில்லை....) ஆனால் போரின் விளைவுகளை இவர்களே தாங்க கடினபடுகிரார்கள் என்பது எனது கருத்து....அதே நேரத்தில் பேர் இன்றி ஒருவரும் அல்லது நாடும் இல்லை என்பதும் உண்மையே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இப்படியும் மனிசரா :lol:

என்ன செய்ய 30 வருட ஆயுதப்போராட்டம் கூட இவர்களை மாற்றவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபரங்கள் தெரியவந்ததும் ஆத்திரமடைந்த அவனது சித்தப்பா கோபத்தில் விதுசனை அடித்து உதைத்திருக்கிறார்.

என்னடா உலகம் இது

சாத்திரியார் முன்னர் எழுதினமாதிரி சிரிக்கிறமாதிரி அல்லது கிளுகிளுப்பாய் ஏதாவது எழுதுவதை விட்டிட்டு சும்மா சொந்தக் கதை சோகக்கதை எழுதிக்கொண்டிருகிறீர்.வேறை வேலை இல்லை இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா உலகம் இது

புத்தனிற்கே இந்த நிலைமையா?? ஒவ்வொரு உறவுகளிடமும் தெலைபேசியில் கதைக்கும்பொழுது அவர்கள் நிலையை கேட்கும்பொழுது என்மனதிலும் இப்படித்தான் தோன்றும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.