Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் பயங்கரவாதிகளா??? தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர்

Featured Replies

தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் "பயங்கரவாதம்" என்ற போர்வையில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் கூடிய மேற்பார்வையில் சிதைக்கப்பட்டது. இதனால், கண்முன்னே தெரிந்த தமிழர்களின் தேசவிடுதலை இன்று கேள்விக்குறியாக கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கேயோபோய் நிற்கின்றது.

இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்த்தியாகங்கள், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் விலைமதிப்பில்லாத உன்னத உயிர்க்கொடைகள் அனைத்தையும் "பயங்கரவாதம்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி, கேவலப்படுத்தி சிதைத்து நிற்கின்றது சர்வதேசம். சிங்கள வல்லாதிக்கம் தமிழர்களின் எதிரி. அது எப்பொழுதுமே எம்மை எதிரியாகவே பார்க்கும். அது தமிழர்களை பயங்கரவாதி எனும்... தீவிரவாதி எனும்... அதற்கு மேலேயும் சொல்லும். கொல்லபவனுக்கு சொல்லவதெல்லாம் சாதாரணம்!!! ஆனால் சர்வதேசம் எமக்கு செய்தது அநீதியிலும் அநீதி. இன்னமும் தமிழர் விடயத்தில் அதையே செய்துகொண்டிருக்கின்றது.

நடுநிலை, மனிதநேயம், மனித உரிமைகள் என வார்த்தைக்கு வார்த்தை தவறாமல் உச்சரிக்கும் சர்வதேசத் தலைவர்களும், மனித உரிமைகளைக் கட்டிக்காக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்பாளர்களும் ஈழத் தமிழர்களின் அவலங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் தவறவிட்டதேன்???

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களின் தலைமையில் நடக்கும் தமிழர்களின் போராட்டமும் பயங்கரவாதம். இது.... சிங்களதேசம் ஓதிய மந்திரம். ஆனால் அவர்களே மறந்தாலும் சர்வதேசம் அதை தாரகமந்திரமாக வரித்துக் கொண்டது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடான சமாதான காலத்தில் இலங்கையில் புலிகளுக்கான தடை அகற்றப்பட்டிருந்த போதிலும், சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பு மீது பல சர்வதேச நாடுகளில் புதிதாக தடைகள் விதிக்கப்பட்டன என்பது இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

தமிழர்கள் சர்வதேசத்திற்கு என்னதான் பாவம் செய்தார்கள்? ஏன் இவ்வாறு தமிழர்களை சர்வதேசம் தண்டிக்கவேண்டும்?? தமிழர்களை தண்டிக்க சர்வதேசத்திற்கு அருகதை இருக்கின்றதா???

உலகெங்கும் வாழும் தமிழர்களே!

ஒன்றைமட்டும் நன்கு விளங்கிக் கொள்ளுங்கள்! "தமிழனுக்கென்று இன்று ஒரு தேசம் இல்லை" என ஏங்குகின்றீர்களே!? இந்த இழிநிலையை உருவாக்கியதே இந்த சர்வதேசந்தான்! வரலாற்றின் முன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன் இலங்கையில் தமிழ் இராச்சியம், சிங்கள இராச்சியம் என தனித்தனியான தேசங்களே இருந்துள்ளன. அன்று தமிழர்களுக்கான தனியான தேசம் என இருந்துள்ளது.அதற்கு வரலாற்று ரீதியிலான ஆதாரங்களும் உள்ளன. இதே நிலைதான் இந்தியாவிலும். சோழ நாடு, பாண்டிய நாடு என தமிழருக்கான தனித்தனியான நாடுகள் இருந்துள்ளன. ஆனால், வெள்ளையர்களின் வருகைக்கு பின்னர்... குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியில் தமது நிர்வாக இலகுத்தன்மைக்காக அனைத்துப் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவாக்கப்பட்டன. தனித்தேசத்தில் தமது சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களின் சுதந்திர வாழ்வுரிமைக்கான அத்தியாயம் அத்தோடு நிறைவுக்கு வந்தது.

இறுதியில், சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களின் சுதந்திரத்தினை மட்டும் பறித்துவிட்டுச் சென்றனர்.அன்று வெள்ளைக்காரப் பாட்டன்மார்கள் சொல்லிவிட்டு, செய்துவிட்டுப் போனதை இன்று சர்வதேசத்தில் நீதியினை நிலைநாட்ட முனைவதாய் காட்டிக்கொள்ளும் வெள்ளைக்காரப் பேரன்மார்களும் பின்பற்றி... அதையே தொடர முனைகின்றார்கள். வரலாற்று ரீதியிலான இந்தக் காரணங்களோடு தற்போதைய பிராந்திய வல்லாதிக்கம்,பொருளாதாரப் போட்டிகளும் முண்டியடித்து ஒட்டிக்கொண்டன. இவர்களின் சுயநலன்களுக்கு தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம் என்பவை பறிபோயுள்ளது.

உண்மையிலே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமே சர்வதேசம் தான். இவர்கள் தமிழர்கள் விடயத்தில் இழைத்த தவறினை இவர்களேதான் திருத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களை உள்ளடக்கிய சர்வதேச தலைவர்களுக்கு தமிழர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருக்கின்றது. ஆனால் இவர்களோ தமிழர்களின் நீதியான விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதச் சாயம் பூசுவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள்.

நாம் மாற்றான் மண்ணில் பங்கு கேட்கவில்லை! நாம் காலங்காலமாக வாழ்ந்து வந்த நமது பூர்வீக நிலத்தினையே நாம் கேட்கின்றோம்? எமது சுதந்திரமான வாழ்வுரிமையையே எதிர்பார்க்கின்றோம்! எமது தேவையெல்லாம் எமது சொந்த மண்ணில் அமைதியான சுதந்திரமான வாழ்க்கை என்பதுதான். அதைக் கொடுப்பதில் சிங்களவரைவிட இவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்?

எமது சுதந்திரத்துக்காக நாம் இழந்தவை மிகமிக அதிகம். இன்றும் இழந்துகொண்டே இருக்கின்றோம். எமது நியாயமான விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சொல்லும் சர்வதேசமே! உனக்கு மனச்சாட்சி என்று ஒன்றிருந்தால், எம்முன்னே வா! ஒரு நாளைக்கு மட்டும் தமிழனாய் வாழ்ந்துபார்! எமது வலிகளை ஒரேயொருநாள் மட்டும் அனுபவித்துப் பார்! அப்போது தெரியும்! அதன்பின் நீயே சொல்!... நாம் பயங்கரவாதிகளா என்று...?!

எத்தனை தியாகங்கள்! எத்தனை உயிர்க்கொடைகள்! எத்தனை இழப்புக்கள்! எத்தனை வலிகள்! எத்தனை வீரம்! வெற்றியிலும் தோல்வியிலும் நழுவாத போர்நெறி! எதிரியும் பாராட்டும் ஒழுக்கம்! எத்தனை தன்னம்பிக்கை! எத்தனை கோடி மக்களின் நம்பிக்கை! அத்தனையும் வீணானதே....! ஏன்....?

"பயங்கரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே எம்மை பயங்கரமாய் அழித்தீர்கள்!

ஒட்டுமொத்தமாய் அழிக்க சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து வந்தீர்கள்!

அன்று நாம் அழிக்கப்பட்டோம்! ஒட்டுமொத்த உலகத்தாலும் ஒதுக்கப்பட்டு சிதைக்கப்பட்டோம்!!

தமது சுதந்திர வாழ்வுக்கான விடுதலைக்காக வேற்றுவழியின்றி ஆயுத மேந்தியது பயங்கரவாதம் என சொல்லிச் சொல்லி ஒட்டுமொத்த இனத்தையுமே சிதைத்தீர்கள்.

அன்று களத்தில் எம்மை சிதைத்தீர்கள்... இன்று நீங்களே எம்மை உங்கள் மடியில் விதைத்திருக்கின்றீர்கள். பெரு விருட்சமாய் மீண்டும் எழுவோம்! உலகமே திரண்டாலும் நம் விடுதலை உணர்வை அடக்கமுடியாது. இப்போது நீங்கள் எம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லமுடியாது. உங்கள் கைகளில் உள்ள ஜனநாயக ஆயுதத்தினையே நாங்களும் இப்போது தாங்கி நிற்கின்றோம். அகிம்சை வழி நின்றோம்... பலனில்லை. மறவழி நின்றோம் ... கூடிவந்து சிதைத்தீர்கள். இப்பொழுது உங்கள் வழியில் நீங்கள் குறை கண்டுபிடிக்கமுடியாத அறவழியில் ஜனநாயக நெறியில் நாம் நின்று நம் உரிமையைக் கேட்கின்றோம். இப்பொழுது சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும். எம்மை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழர்களுக்கு நீதியான பதில் சொல்லாமல் ஒதுங்கவும் முடியாது!

தமிழ் மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் வரும் மே மாதம் 2ஆம் திகதி நடந்தேற இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்பென்பது நமக்கு நிச்சயம் அவசியமானது. கருத்துக் கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும் அவற்றினைத் திருத்தி தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரினதும் வரலாற்றுக் கடமை என்பது மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட. இதனை விமர்ச்சிப்பவர்களுக்கு சின்னச் சின்னதாய் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதனை ஆதரிப்பவர்களுக்கு நம் மாவீரர்கள் சுமந்த "தமிழீழ விடுதலை" என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே போதும். நமது மண்ணில் நிர்மாணிக்கப்பட்ட தமிழீழ அரசு இன்று சிதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் புலத்தில் நாம் அமைக்கப்போகும் தமிழீழ அரசினை சிதையவிடாமல் ஒற்றுமையோடு காப்போமானால் இது கடல் கடந்து தாயகமண் திரும்பி தமிழீழ தனியரசினை உருவாக்கும் என்பது நிச்சயம்!

எனவே, வருகின்ற மே 2 இல் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து செயற்திறன்மிக்க, என்றுமே தமிழருக்காகவும் தாயக மண்ணுக்காகவும் பாடுபடக்கூடிய தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்! நாம் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் அறவழியில் தொடர்ந்து போராடி நம் உரிமைகளை வென்றெடுப்போம்!

நாம் பயங்கரவாதிகளா???

தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோரே! எம்முன்னே வாருங்கள்!!

மிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

-பருத்தியன்-

நாங்கள் எப்போதுமே எங்களைப் பயங்கரவாதிகள் என்று ஏற்றுக் கொண்டதில்லை.. புலிகளையும் பயங்கரவாதிகள் என்று என்றும் ஏற்றுக்கொண்டதில்லை.

இன்றும் அநேகமான மக்களின் இதயங்களில் புலிகள் வாழுகிறார்கள்..

அப்படி இருக்க இப்படியான செய்திகள் எமக்கு திரும்பத் திருப்ப ஏன் எழுதப்படவேனும்?

எமக்கு நாமே கதைசொல்லி எம்மைநாமே ஆறுதல் படுத்தினால் எமது நோக்கம் நிறைவடையுமா?

இதை உணரவைக்க முடியுதோ இல்லையோ நிருபிக்க முயலவேணும்.

இப்போது எமக்குள் இருக்கும் வேற்றுமைகளைக் களைவதே எம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பருத்தியன். நீண்ட நாட்களுக்கு பின் சந்திப்பதில் அளவிலா மகிழ்ச்சி.எம்மை தோற்றவர்கள் ஆக்காமால் வெற்றி நோக்கி பயணிக்க அறை கூவும் ஒரு கட்டுரையாக பார்க்கிறேன்.

பௌத்த சிங்களவன், அவன் வால்கள் ... = பொய்யர், தமிழன் சொத்துக்களை, நிலங்களை, ..... பறித்து / அழித்து வாழும் கேவலமானவன், பயங்கரவாதிகள், .....

வட இந்தியன், அவன் வால்கள் ... = பயங்கரவாதிகள், தமிழின படுகொலையாளிகள், தமிழின விரோதிகள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், .......

  • கருத்துக்கள உறவுகள்

பிறிதொரு தலைப்பில் எழுதப்பட்டதாயினும் இந்தத் தலைப்போடு பெருந்தி இருப்பதால்.. கருத்து நிறைவை எதிர்பார்த்து இதனை இங்கிணைக்கிறேன்.

புலிகள் மீதான இந்திய - அமெரிக்க பயங்கரவாதப் பூச்சாண்டி நாடு கடந்த தமிழீழ அரசையும் அச்சுறுத்துமா..!!

MAP+001.jpg

//2005 இல் சர்வதேசத்தின் மத்தியதியஸ்தோடு விடுதலைப்புலிகள் வகுத்திருந்த தமிழீழத்திற்கான தற்காலிக எல்லைக்கோடுகள்.//

உலகில் பல நாடுகள் ஆயுதப் போராட்டம் மூலமும் அதனோடு இணைந்த அரசியல் - இராஜதந்திர நகர்வுகள் ரீதியாகவும் மக்களின் விடுதலையை சாத்தியமாக்கியுள்ளன.

தென்னாபிரிக்காவில் இருந்து செச்னியா வரை உலகின் அணுகுமுறைகள் பல வகையில் வேறுபடுகின்றன. இன்றைய உலகில் அமெரிக்காவின் ஆயுத பலமே உலகின் போக்கை தீர்மானிக்கின்றன. அமெரிக்காவின் கண்களுக்கு தனக்கு சாதகமல்லாத அனைத்து வன்முறைகளும் பயங்கரவாதமாகும். அமெரிக்காவின் முத்திரையிடல்களை மற்றவர்கள் அச்சுப் பிசகாது பின்பற்றும் ஒரு மந்தையாட்டு இராஜதந்திரமே இன்று உலகில் நிலவுகிறது.

மனித உரிமைகள் கூட அமெரிக்காவின் ஆயுதப் பிரயோகத்தேவைகளுக்கு ஏற்பவே உச்சரிக்கப்படுகின்றன.

எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும்.. தமிழ் மக்களிற்கு இலங்கையில் பிரச்சனை இருக்கிறது என்பதை உலகம் அங்கீகரிக்கச் செய்திருக்கிறது. அதுமட்டுமன்றி தமிழ் மக்கள் பிற இனங்களுக்கு சமனாக உரிமை பெற்று வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றும் உலகம் சொல்லச் செய்திருக்கிறது. இது எமது ஆயுதப் போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே சொல்லலாம். குறிப்பாக இதனை அமெரிக்க சார்பு உலகம் சொல்கிறது. ஆனால் அவர்கள் வலியுறுத்தும் முக்கிய விடயம்.. ஐக்கிய இலங்கை என்பதுதான்.

இந்த ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சம உரிமை பெறப்பட முடியாது என்பதையும் அதனை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் சொல்ல வேண்டும். அதைச் செய்யாமல்.. சம்பந்தனும்.. இதர ஒட்டுக்குழுக்களும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒத்திசைய கருத்துச் சொல்லி வருவது சர்வதேசத்தின் நிலைப்பாடு தமிழ் மக்களின் விருப்புக்கு அப்பால் மையம் கொண்டிருக்கவே வகை செய்யும்.

எமது ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி அதன் கட்டுக்கோப்பு, தலைமைத்துவம் கண்டு உலகம் அஞ்சியது. அது தனது கொள்கைகளுக்கு சவாலாகி வருவதை உணர்ந்து கொண்டது. அதனாலேயே அதனை பயங்கரவாதமாக்கி சர்வதேச ஆதரவைத் திரட்டி அடக்கிக் கொண்டது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் இன்னொரு ஆயுதப் போராட்டம் முளைவிடுமோ என்ற அச்சமும் இந்த உலகிடம் இன்னும் இருக்கிறது. அப்படி ஒன்று இருந்தே ஆக வேண்டும். இன்றேல் இந்த உலகம் எம்மை அடித்து உதைத்துப் பந்தாடுமே அன்றி எமக்கு உரிமை பெற்றுத்தராது.

நாம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டதாக இந்த உலகிற்கு காட்டிக் கொள்வதும் ஆபத்தானது. ஆயுதங்களை மெளனிக்க வைத்திருப்பது என்பதற்கும் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டோம் என்பதற்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு. நாம் இன்றைய தருணத்தில் இந்த உலகிற்கு சொல்ல வேண்டியது.. நாம் ஆயுதங்களை மெளனிக்க வைத்துவிட்டு.. ஜனநாயக வழியில் எமது உரிமைகள் பெற விரும்பி நிற்கிறோம் என்பதையே. அத்தோடு எமது உரிமைகள் என்னென்ன அதனை அடைய நாம் விரும்பும் தீர்வுகள் என்ன அதற்கான நியாயங்கள் என்னென்ன என்பதைச் சொல்ல வேண்டுமே தவிர.. அதுவும் ஏகோபித்த குரலில் சொல்ல வேண்டுமே தவிர.. உலகம் பயங்கரவாதம் என்று அடையாளம் தந்துவிட்டது என்று அதனை ஏற்றுக் கொண்டு வாழாதிருப்பின் அமெரிக்காவின் மற்றும் பிராந்திய வல்லரசுகளின் எளிமையான அந்த குள்ளநரி இராஜதந்திரத்திற்கு நாம் பலியானதாகவே முடியும்.

தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் பயங்கரவாதியாக முத்திரையிடப்பட்ட நெல்சன் மண்டேலாவிற்குத்தான் நோபல் பரிசும் அளித்து வெள்ளைமாளிகையில் விருந்தும் அளித்து லண்டனில் வெண்கலச் சிலையும் வைத்துள்ளனர்.

வெள்ளையனே வெளியேறு என்று பிரிட்டிசாருக்கு எதிராகப் போராடிய காந்தியை விரட்டி அடித்த பிரிட்டிஷ்காரர்கள் தான் இன்று பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் தோறும் காந்தி சிலையை நிறுவி அழகு பார்க்கிறார்கள்.

பயங்கரவாதம் என்ற உலகின் கணிப்பை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அதுவும் இன்று எமது ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பயம் எம்மவருக்கு அவசியமில்லை. இன்றைய தேவை இந்த உலகை நோக்கி எமது கோரிக்கைகளின் நியாயத்தையும் அதன் பின்னால் அனைத்துத் தமிழர்களும் ஒன்று திரண்டுள்ளனர் என்பதைச் சொல்வதுமே ஆகும். அதற்கு நாடு கடந்த அரசு என்ற புதிய அணுகுமுறையை ஒரு பரீட்சார்த்த அம்சமாக கொண்டு செல்ல முயல்வது அவசியமும் கூட. நாம் எமது போராட்டத்தில் ஆயுதங்களை மெளனிக்க வேண்டிய நிலைக்கு உலகின் போக்கு மாறி இருக்கும் நிலையில் பிறிதொரு strategy யின் கீழ் தான் எமது உரிமையை நாம் விரும்பும் வடிவில் வெல்ல நகர்த்திச் செல்ல வேண்டும். உலகம் தனது strategy ஐ மாற்றும் போது நாமும் அதற்கு ஏற்ப எமது strategy ஐ மாற்றாவிட்டால் எம்மால் எமது நீண்ட கால இலக்கை வெற்றி கொள்ள முடியாது போகும்.

மற்றும்படி இந்தப் பயங்கரவாத பூச்சாண்டிக்கு எனி நாம் பயப்பிட எம்மிடம் எதுவும் இல்லை. இருப்பது எமது உரிமைக்கான தேவை ஒன்றே. அதனை இந்த உலகம் அங்கீகரிக்கும் வடிவில் நின்று முன்வைத்துப் பார்க்கும் அதேவேளை இந்த உலகம் எம்மை ஏமாற்றாமல் இருக்க இந்த உலகிடம் எமக்கு மீண்டும் ஆயுதம் தூக்கவும் வழி தெரியும் என்பதையும் சொல்லியாக வேண்டும். அதனை நிராகரிக்கவே கூடாது. நாம் முற்றாக பலவீனமானவர்களாக ஆக்கப்பட்டால் எமது நியாயமான கோரிக்கைகளையும் இந்த உலகம் புறக்கணித்து தனது கொள்கை வெற்றியையே முதன்மைப்படுத்திப் பார்க்க விளையும்.

அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் கொள்கை அளவில் தோற்று நிற்கிறது. ஆனால் அதற்கு ஒரு ஆறுதலாக இலங்கை மாறி வரும் நிலையில்.. அது அதனை தனது கொள்கை வெற்றியாக்கிக் காட்டவே முனையும். பஞ்சாப்பில் சீக்கியர்களின் போராட்டத்தை அடக்கி கொள்கை வெற்றிகண்ட அதேவகையில் தான் இந்தியா எம்மையும் அடக்கிக் காட்ட முனைகிறது. நாம் இந்தக் கொள்கை வெற்றிகளுக்கு இடமளிப்போமாக இருந்தால் அது எமது அடிப்படை உரிமைகளையே ஆளும் வல்லாதிக்க.. பிராந்திய.. பேரினவாத சக்திகள் நிராகரித்து நிற்கவே வகை செய்யும்.

நாம்.. எந்த வடிவிலும் போராட்டத்தில் இருந்து ஓயக்கூடாது. அதேவேளை உலகின் கொள்கை வெற்றி இறுமாப்பை தகர்க்கக் கூடியதும்.. எமது உரிமைகளை உலகிற்கு சொல்லக் கூடியதுமான strategy யை வகுத்து அதன் படி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழ் மக்களின் புதிய strategy இன் ஆரம்ப செயல்வடிவம் என்று கொள்ளலாம் என்றே நினைக்கிறோம். அதற்குள் உலகின் பயங்கரவாத பூச்சாண்டியை காட்டி பயங்காட்டுவதை நிறுத்தி எல்லா தமிழ் மக்களும் ஒருமித்து இயங்கும் குரல்கொடுக்கும் நிலைக்கு வர வேண்டும். அதுவே அவசியம்.

ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்தோடு இருப்பின்... அது எம்மை இந்த உலகம் பலவீனப்படுத்தி.. பிரித்தாண்டு.. எமது உரிமைக்குரலை வெற்றிகரமாக அடக்கி அதை தமது கொள்கை வெற்றியாகக் காட்டி இறுமாந்து நிற்கவே வகை செய்யும்.

Edited by nedukkalapoovan

தமிழரின் பயங்கரவாதமென்பது வெறும் ஆயுதத்தோடு பொருத்திப் பார்க்கப்பட்ட விடயம். விடுதலைப் பொராட்டத்தின் தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்தை அடக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகளில் அது ஒன்று. பயங்கரவாதம் என்னும் கோஷம் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதோடு முற்றுப் பெற்றது. நாடு கடந்த அரசு அதன் வெளிப்படைத் தன்மையைப் பேணுகின்ற முறையிலேயே இந்த நடவடிக்கை தங்கியிருக்கும். இலங்கையரசு இன்னமும் இத்தகைய நடவடிக்கையைப் பயங்கரவாதமாகவே சித்தரிக்க முயலும்.

  • தொடங்கியவர்

தங்களின் கருத்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். :D

பொருத்தமான இன்னொரு இணைப்புக்கு மிக்க நன்றி நெடுக்ஸ் :wub:

எம் இனத்தினையும் எமது விடுதலைப் போராட்டத்தினையும் அழிக்க முழு உலகமுமே ஒன்றிணைந்தது. இந்தியா பாகிஸ்தான் கூட தமக்குள் உள்ள பகையினை ஓரந்தள்ளி வைத்துவிட்டு எம் போராட்டத்தினை சிதைக்க கைகோர்த்தனர்.

ஆனால் இவ்வளவு இழப்புக்களை சந்தித்த பின்னரும் நாம் மட்டும் கருத்து வேற்றுமைப்பட்டு பிரிந்து பிரிந்து ஒற்றுமையில்லாமல் நிற்கின்றோமே!!!!

ஏன்.....?

நாம் ஒற்றுமைப்பட்டே ஆகவேண்டிய காலகட்டம் இது. அதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நமது ஒற்றிமையினை பலத்தினை இந்த உலகுக்கு காட்டுவதன் மூலம் சர்வதேசத்தினை நம் வழிக்கு கொண்டுவர முடியும்.

நாடுகடந்த தமிழீழ அரசென்பது எனது கண்ணோட்டத்தில் சர்வதேச மட்டத்தில் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஆளுமையுள்ள அமைப்பாக நிச்சயம் அமையும் என்றே தோன்றுகின்றது.

எனவே எம்மேல் குத்தப்பட்டிருந்த பயங்கரவாதிகள் என்ற பொய்முத்திரையை கிழித்தெறிந்துவிட்டு சர்வதேசத்திற்கு நம் ஜனநாயக பலத்தினைக் காட்டுவோம்.

"பயங்கரவாதம்" என்றால் என்ன அர்த்தம் என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். ஆனால் இதுவரை நாங்கள் அதை பின்பற்ற நினைத்ததில்லை.

தமிழன் உண்மையிலேயே பயங்கரவாதியாக மாறினால் அன்றைக்குத்தான் இந்த உலகத்திற்கு "பயங்கரவாதம்" என்றால் என்ன என்பது புரியும் போல்.....தெரிகின்றது.

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் அர்த்தம், தற்போதுள்ள வெற்றிடத்திற்கான காரணங்கள்,நடைமுறையில் உள்ள ஜனநாயக போராட்ட வழிமுறைகள் எல்லாம்.... தீர்க்கதரிசனமான முடிவுகளாகவே எனக்கு தோன்றுகின்றது.

வரும் மே 2இல் அனைவரும் வாக்களிப்போம்!

தகுதியான வாக்காளர்களை தேர்வு செய்வோம்!

ஒற்றுமை என்பதே நமது தற்போதைய போராட்டத்திற்கான அடிப்படைத் தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.