Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசும் அதன் செயற்பாடுகளும் யேர்மனியில் ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

Featured Replies

தணிகா சுப்பிரமணியம்

மத்திய யேர்மனி பகுதியில் (Nordrhein-Westfalen) போட்டியிடும் வேட்பாளர்களில் செல்வி தணிகா சுப்பிரமணியமும் குறிப்பிடத்தக்கவர்.

thaniga_subramaniam.jpg

இலக்கம் 5

26771_1380407704586_1063736895_1107302_3094204_n.jpg

இவரும் இளவயதில் புலம்பெயர்ந்தவர். யெர்மன் மொழியைக் கற்றுத் தேர்ந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார். தாயகம் சார்ந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுபவர். கடந்த காலங்களில் தாயகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்களில் தனது உழைப்பையும் கொடுத்தவர். இளவயதில் புலம்பெயர்ந்த காரணத்தால் தாயகத்தில் மக்கள் படும் துயரத்தை அனுபவபூர்வமாகக் கண்டறிந்தவர். விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்தவர். விடுதலைப் போராட்ட வரலாற்றைப் புரிந்துவைத்திருப்பதோடு, யெர்மனிய அரசியலில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர். யெர்மன் ஊடகங்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தெரியப்படுத்தும் முயற்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டவர். தமிழீழ விடுதலையின் பால் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். சோர்ந்து ஒதுங்கிப் போய் இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் தானாகவே முன்வந்து நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் பங்கெடுப்பவர். வெறுமனே மற்றவர்கள் மீது பழியைப் போட்டுக்கொண்டிராமல், நாம் நமக்கான கடமையை செவ்வனே செய்தால் தமிழீழ விடுதலைப் பயணம் தனது இலக்கை நிச்சயம் அடையும் என்பதில் உறுதியாக இருப்பவர். Nordrhein-Westfalen மாநிலத்தில் எனது இரண்டாவது தெரிவு இவராகத்தான் இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோர்மனியில் தேர்தல்தொகுதி 4 இற்கான வேட்பாளர்களின் விபரங்களை வழுக்கையாறான் இணைத்துவிட்டு அவர்கள்பற்றிய விமர்சனங்களை எதிர்பத்துக்காத்திருக்கிறாரென நினைக்கிறேன்.நானும் இதுநாள்வரை அவரவரும் தங்கள்பகுதி வேட்பாளர் விமர்சனங்களை இணைப்பார்களெனக்காத்திருந்தேன். வழுக்கையும் நானும் எதிர்பார்த்திருந்த தொகுதிவேட்பாளர்கள் (தொகுதி 4 )பற்றிய விபரங்களெதனையும் எவருமே இணைக்கவில்லை. எனக்குத்தெரிந்தவர்களின் விபரங்களுடன் தெரிந்துகொள்பவற்றையும் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். முதலில் நடராஜா இராஜேந்திரா-இவர் தமிழ் ஆங்கிலம் யேர்மன் என மும்மொழியாற்றல் படைத்தவர்.தமிழரசு காலனியாதிக்கத்தில் கரைந்ததிலிருந்து சிங்களப்பயங்கரவாதிகளின் தமிழிழ் இனப்படுகொலையடங்கலாக இறுதியில் முள்ளிவாய்காலில் சர்வதேசத்தின் சதிவரை எமது வரலாற்றை வேற்றினத்தவர்களிற்கு இலாவகமாகப்புரியவைப்பதில் வல்லவர்.இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதும் ஒரு மேலதிக தகைமையாகும்.இவற்றைவிட இவர் எம்மவர்கள் எல்லோருடனும் நல்லுறவைப்பேணுவதில் வல்லவர்.வேற்றினத்தவர்களுடனான உறவையும் நீண்டகாலமாகப்பேணிவருகிறார்.மொத்தத்தில் நா.க.அ.இற்குத்தேர்ந்தெடுக்க மிகவும் பொருத்தமான ஒருவர். எனவே எனது முதலாவது தெரிவு இவரே. இரண்டாவதாக ஆனந்தர் பூபதிபாலவடிவேல்கரன்... நாளைதொடர்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ஜேர்மனியில் நடைபெறும் நா.க.த.அரசிற்கான தேர்தலில் யார் தெரிவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை.

அடுத்த தேர்தல் வரைக்கும் அவர்கள் தமிழ் ஈழத் தேசியப் பணிகளை அவர்கள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றார்கள் என்பது தான் முக்கியம்.

இந்தத் தெளிவு வந்த பின்னரே அடுத்த கட்டம்..

வாத்தியார்

................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்ச பிறகென்ன எப்படியாவது ஒரு கைபார்க்கிறது என்பதாகவே நடத்துகினமோ என்ற ஐயம் வலுக்கிறது. ஜேர்மன் நா.க.த.அரசினது தேர்தல் ஆணையகத்தினரின்மீது .....

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71786&st=0&gopid=587024&#entry587024

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோர்மனியில் தேர்தல்தொகுதி 4 இற்கான வேட்பாளர்களின் விபரங்களை வழுக்கையாறான் இணைத்துவிட்டு அவர்கள்பற்றிய விமர்சனங்களை எதிர்பத்துக்காத்திருக்கிறாரென நினைக்கிறேன்.நானும் இதுநாள்வரை அவரவரும் தங்கள்பகுதி வேட்பாளர் விமர்சனங்களை இணைப்பார்களெனக்காத்திருந்தேன். வழுக்கையும் நானும் எதிர்பார்த்திருந்த தொகுதிவேட்பாளர்கள் (தொகுதி 4 )பற்றிய விபரங்களெதனையும் எவருமே இணைக்கவில்லை. எனக்குத்தெரிந்தவர்களின் விபரங்களுடன் தெரிந்துகொள்பவற்றையும் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன். முதலில் நடராஜா இராஜேந்திரா-இவர் தமிழ் ஆங்கிலம் யேர்மன் என மும்மொழியாற்றல் படைத்தவர்.தமிழரசு காலனியாதிக்கத்தில் கரைந்ததிலிருந்து சிங்களப்பயங்கரவாதிகளின் தமிழிழ் இனப்படுகொலையடங்கலாக இறுதியில் முள்ளிவாய்காலில் சர்வதேசத்தின் சதிவரை எமது வரலாற்றை வேற்றினத்தவர்களிற்கு இலாவகமாகப்புரியவைப்பதில் வல்லவர்.இவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்பதும் ஒரு மேலதிக தகைமையாகும்.இவற்றைவிட இவர் எம்மவர்கள் எல்லோருடனும் நல்லுறவைப்பேணுவதில் வல்லவர்.வேற்றினத்தவர்களுடனான உறவையும் நீண்டகாலமாகப்பேணிவருகிறார்.மொத்தத்தில் நா.க.அ.இற்குத்தேர்ந்தெடுக்க மிகவும் பொருத்தமான ஒருவர். எனவே எனது முதலாவது தெரிவு இவரே. இரண்டாவதாக ஆனந்தர் பூபதிபாலவடிவேல்கரன்... நாளைதொடர்வேன்.

நாட்டுக்கட்டையவர்களுக்கு நன்றிகள். முழுமையான தகவல்களைக் கூடியவரை இணைப்பது பொருத்தமான காரியமாகும். ஏனெனில் ஒன்றாயிருந்து கட்டுக்கோப்பாக வளர்ந்தவர்களே காலைவாரியுள்ள சூழலில் மூண்டாண்டு பதவிக்காலமே போதுமானது தமிழ்த் தேசியத்தைச் சிதைக்க............! ஏனெனில், சமூக ஒற்றுமையைக் குலைக்கின்ற சக்திகளை இனம் காட்டுவதும் அவசியமானது.

என்னுடைய வாக்கு இளையோருக்கே. அவர்களிடம் மட்டுமே வஞ்சகமற்ற மனமுள்ளது என எண்ணுகிறேன்.

Edited by Valukkiyaru

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் நாடு கிழக்கு மேற்கு எனப் பிரிக்கப்பட்டது.

பனிப்போரினாலும் பாதிக்கப்படாமல் வெகுண்டெழுந்த நாடு.

அந்த மக்கள் போரின் வடுவினால் இன்னொரு போரை முழுமையாக மறுதலிக்கின்றவர்கள்.

ஆனாலும்

அங்கு வாழும் ஈழத்தமிழ் மக்களின் முடிவு இன்றைய நிலையில் மிகப் பெரும் தாக்கம் ஒன்றினை வெளிப்படுத்தும்.

வாத்தியார்

.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் தெகுதி-4 ஆனந்தர் பூபதிபாலவடிவேல்கரன்-இவரும் மும்மொழி ஆற்றலுடையவர். அரசியலிலும் போதிய அறிவுள்ளவர். நாட்டில் மாணவர்பேரவை தொடக்கம் த.வி.கூ.வரை இணைந்து செயற்பட்ட முதிர்ச்சியுடையவர். எமது உரிமைப்போர் ஆயுதப்போராக உருவெடுத்த ஆரம்பகாலத்தில் இ.பி.ஆர்.எல்.எப். அனுதாபியாக இருந்தார். அதுதடம்புரண்டதும் தன்னை சுதாகரித்துக்கொண்டு மக்களுடன் இணைந்து வெகுஜனப்போராட்டத்தைத்தொடர்ந்தார்.சமகாலத்தில் உலகத்தலைவர்களிற்கும் ஊடகங்களிற்கும் தொடர்ந்து தமிழர்தரப்பு நியாயத்தை எழுதிவந்தார்.இவரை விமர்சிப்பவர்கள் பாதி வயதினரானாலும் புன்சிரிப்புடன் எதிர்கொள்வதே இவரின்சிறப்பு. இவைதவிர நாடிகனாகவும் எழுத்தாளனாகவும் அறியப்படுகிறார். இவரே எனது இரண்டாவது தெரிவு. உறவுகளே நானறிந்தளவில் சிறப்புத்தகுதியுள்ளவர்களென இவ்விருவரையும் மும்மெழிந்தேன்.இனி மூன்றாவதாக ஒரு இளையவரை நாம் கண்டிப்பாகத்தெரிய வேண்டும். அதுபற்றி நாளை தொடர்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கட்டையாரே, சுட்டுகைக்கு நன்றிகள்.

சரி பொதுவான ஒரு தளத்திலே நின்று அலசுவோம். அது மேலும் பயனுடையதாகவும் காத்திரமானதாகவும் இருக்குமென எண்ணுகிறேன்.

தகவல்களை எழுதுங்கோ. ஏனெனில் எந்தப் புத்துக்கை எந்தப் பாம்பு இருக்குமோ என்று தெரியாத நிலை. எனவே மக்களுக்கு இனங்காட்டுங்கள். மக்கள் முடிவெடுப்பார்கள். மக்களே அனைத்து இழப்புகளையும் சந்தித்தவர்கள். மக்களிடமே அதிகாரம் இருக்கிறது. வழுக்கையாரினது திரிக்கிசைவாக முழுமையாக வேட்பாளர் தொடர்பான தகவல்கள் இல்லை. குமாசாமியவர்கள் போல் யாராவது தெரிந்தவர்கள் வந்து, பக்கச் சார்பின்றிப் பொதுவான பார்வையில் நின்று நியாமான முறையில் எழுத வேண்டும். ஏனெனில் இது ஒரு முக்கியமான விடயமாகும். காலம் கடந்து சிந்திப்பதைவிட உரிய நேரத்தில் மக்களைத் தெளிவுபடுத்தும் விதமாகத் சரியானவர்களை இனங்காட்டுங்கள். அவர்களது கடந்கால சரி பிழைகளை முன்வையுங்கள்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யேர்மனியில் யாருக்கு வாக்குப் போடக் கூடாது என்பதே முக்கியமானது. ஒரு பட்டியலிடுவதாயின்...

முதலில் அவர்களது சமூக ஈடுபாடும் ஒற்றுமையை கட்டி வளர்ப்போராயும் பதவிமோகமற்ற நிதிக் கையாடலற்ற பக்கச் சார்பற்ற தேசியத்தின் மீது பற்றுக் கொண்ட..... நொச்சியாரே இப்படித்தான் வழுக்கையர் குறிப்பிடுகிறார்.

Edited by naaddukkaddai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

renuka_logeswaran.jpg

இவவை நல்லவடிவாய்த்தெரியும்.

கோயில்லை தேவாரம் படிக்கக்கண்டிருக்கிறன்

தெய்வ நம்பிக்கை கூடினவ எண்டு நினக்கிறன்

rajaratnam_jeyachandran.jpg

இவரை அடிக்கடி கண்டிருக்கிறன் ஆனால் கதைச்சுப்பழக்கமில்லை

சிலோன் றேடியோவிலை வேலை செய்தவராய் இருக்குமோ?

nadarajah_rajendra.jpg

இவருக்கு என்னை நல்லவடிவாய்த்தெரியும்

எனக்கும் இவரைப்பற்றி நல்லவடிவாய்த்தெரியும்

நல்லமனுசன்

rasiah_thanabalasundaram.jpg

:rolleyes:

படிப்பை பற்றி நான் எங்கும் குறிப்பிடவில்லை நுனாவிலான்.

எல்லாரும் பதிவு செய்ய விரும்புற "பிரபாரகன் படிக்கல" எண்ட கருத்த பொதுக்கருத்தாக்கிறது தவறான முன்னுதாரணமாக போய் முடியும்.

இளைஞனின் கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

உயர் படிப்பு என்பது ஒருவரது ஒழுங்கமைக்கப்பட்ட முயற்சியின் அளவுகோல்.

"பட்டம்" என்பதைவிட, ஒருவரால் சவால்களை எதிர்கொண்டு சீராக சிலவற்றை செய்ய முடியும் என்பதை அவரது பல்கலைக்கழக உயர்படிப்பு உறுதிப் படுத்துகிறது.

முன்னேறிய நாடுகளில், எந்தவொரு வெற்றிகரமான ஒரு சிறுநிறுவனத்திலும் உயர்படிப்பு உள்ளவர்கள் கையிலேயே நிர்வாகப் பொறுப்பை கொடுப்பார்கள். ஒருபாரிய இனப்பிரச்சினைகளில், சரியான தீர்வை நோக்கிச்செல்ல பொருத்தமானவர்கள், படித்து தமது திறமைகளை வெளிக்காட்டியவர்கள் அவசியம். தேர்தல்களிலும் இத்தகையவர்களே அவசியம்.

எங்கும் விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகளை எடுத்துக்காட்டி விதண்டா வாதம் செய்வது தவறு. இதை உணர்வு பூர்வமான விடயமாக கொண்டும் விதண்டா வாதம் செய்வது தவறு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெற்கு ஜேர்மன் பகுதியில் போட்டியிடும்selvaratnamratnaroopan.jpg

திரு செ.இரத்தினரூபனவர்களும் தகுதியானவர்தானே. அவரையும் பல ஊர்வலங்களிலும் கண்டிருக்கிறேன். நீண்டகாலமாகப் பிராங்போட் தமிழாலய நிர்வாகியாக இருந்து தமிழ்த் தொண்டாற்றுகின்றவர். தமிழ்மன்றங்கள், ஆலயங்கள் என்று பல்வேறு சமூகத் தொண்டுகளிலும் ஈடுபடும் ஒருவராக இருப்பதால் அவரும் ஒருவராக எனது தெரிவில் இருக்கிறார்.

அறிந்தவர்கள் உங்களது கருத்தையும் தெரிவிக்கலாம்..........

எந்த அடிப்படையில் இவரை தெரிவு செய்யலாம் என்று கூறுவீர்களா? ஒரு பட்டியல் தரவா?

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அடிப்படையில் இவரை தெரிவு செய்யலாம் என்று கூறுவீர்களா? ஒரு பட்டியல் தரவா?

வழுக்கையாரே தகவல்களையும் எழுதுங்கள்.

ஏன்?

எதற்காக?

ஏன்ன செய்தார்கள்?

ஏன் ஏற்கமுடியாது?

ஏன் நிராகரிக்க வேண்டும்?

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தருக்கர் சிலர் செயலால் காலத்தில் நடக்க வேண்டிய தேர்தல் இழுத்தடிக்கபட்டு, சோர்வடைய வைத்த தேர்தல்வரும் ஞாயிறு 20/06/2010 நடைபெறுகிறது, தருக்கர் செருக்கொழிக்க தமிழின உணர்வாளர்கள் அலைகடலென திரண்டுவந்து, ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவிதியை எழுதபோகும் நாடுகடந்த தமிழீழ யாப்பை எழுதுவோரை சிறந்த முறையில் தேர்வு செய்து, தமிழர் தலை விதியை காப்போம்.

கொடுவாளினை எடடா கொடியோர் செயல் அறவே, தருக்கர் செயல் ஒழிக்க விரைவாய், விரைவாய் குகைவாழ் புலியே!!!

050410003.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

renuka_logeswaran.jpg

இவவை நல்லவடிவாய்த்தெரியும்.

கோயில்லை தேவாரம் படிக்கக்கண்டிருக்கிறன்

தெய்வ நம்பிக்கை கூடினவ எண்டு நினக்கிறன்

rajaratnam_jeyachandran.jpg

இவரை அடிக்கடி கண்டிருக்கிறன் ஆனால் கதைச்சுப்பழக்கமில்லை

சிலோன் றேடியோவிலை வேலை செய்தவராய் இருக்குமோ?

nadarajah_rajendra.jpg

இவருக்கு என்னை நல்லவடிவாய்த்தெரியும்

எனக்கும் இவரைப்பற்றி நல்லவடிவாய்த்தெரியும்

நல்லமனுசன்

rasiah_thanabalasundaram.jpg

:rolleyes:

:o

இதன் அர்தம் என்ன நீங்கள்தான் இவரோ?

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை தேர்தல் 20/06/2010

050410003.jpg

வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்...

1. Ringlebs Str. 12, 59821 Arnsberg

2. IBZ, Teutoburger Str. 106, 33607 Bielefeld

3. Wallbaumweg 108, 44894 Bochum

4. Christian-Lassen-Straße 6, 53117 Bonn

5. Pfarrheim St- Josef, Duesberg Str. (Ecke)+ Josef Str. (Ecke), 46325 Borken

6. CAFE – BISTRO, Königswall 18, 44137 Dortmund

7. Flachmarkt 15, 47051 Duisberg (Mülheim, Oberhausen)

8. Roncalli Haus, Bius str-40, 52349 Düren

9. Talstr. 65 , 40217 Düsseldorf

10. Haus Ennepetal, Gasstr 10, 58256 Ennepetal

11. Friedrich Elbert Str. 88, 50374 Erftstadt

12. Omm Str.32, 45143 Essen

13. SERVICE-PUNKT.EU, Hindenburgstr. 17, Citypassage gegenüber Saturn, 51643 Gummersbach

14. Horsthauserstr 171, 44628 Herne

15. Freizeit Zentrum 85 Süd, Kölner Str. 190, 47805 Krefeld (Meerbusch)

16. Danziger str 1, 57223 Kreuztal (Siegen, Olpe)

17. Pauluskirche, Römer str 61, 45772 Marl

18. Stiftplatz 2, 59372 Meschede

19. Josef Schule, Nierenburger Str.31, 49497 Mettingen

20. Luisen Straße 129, 41061 Mönchengladbach

21. Geschäftsstelle Ausländerbeirat, Stadthaus 2 ,Ludgeriplatz 4-6, 48151 Münster (Warendorf)

22. AWO, ADOLF str.76, 41462 Neuss

23. Centro s, Antonio , Ludwigstr. 9, 48429 Rheine

24. Jugendheim, Weinhard-3, 53937 Schleiden

25. Alterschlachthof, Ulrichertor 4, 59494 Soest (Hamm)

26. Blumenstr 41, 42665 Solingen

27. Rektorat str 78, 41748 Viersen

28. St-Cyriakus Pfarrheim, Kirchplatz 6, 47652 Weeze

29. St.Joseph-Gemeinde, Stockumer Str.13, 58453 Witten-Annen

30. Wupperhalle, Hünerfeld Str 63B, 42285 Wuppertal

31. Linden Platz, Inwinkel 2, 52146 Würselen

1.Solingen

tamilischer kulturverein Solingen e.V

Blumenstr 41

42665 Solingen

2.Viersen

Rektorat str 78

41748 Viersen

3.Herne

Horsthauserstr 171

44628 Herne

4. Ennepetal

Haus Ennepetal

Gasstr 10

58256 Ennepetal

5.Siegen / Olpe

Danziger str 1

57223 Kreuztal

7.Neuenrade

?????

8.Ratingen

????

9.Wuppertal

Wupperhalle

Hünerfeld Str 63B

42285 Wuppertal

10.Leverkusen

Grund shule

shul str.4

51371, Leverkusen

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் தொகுதி 4 - தெற்கு ஜேர்மனி: Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland

தேர்தல் நடைபெறும் நாள் 27.06.2010 - வாக்களிப்பு நேரம் 9.00-18.00

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz, Saarland மாநிலங்களில் (தேர்தல் தொகுதி 4) 20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும்.

இத் தேர்தல் தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் மூன்று பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள். இத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை அளிக்கலாம். ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கினை மட்டுமே அளிக்க முடியும்.

இத் தேர்தலில் Baden-Württemberg, Bayern, Hessen, Rheinland-Pfalz அல்லது Saarland மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள் மட்டுமே வாக்களிக்கலாம்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்கள் பின்வருமாறு:

1. Herr Paramu Ananthasingam

திரு பரமு ஆனந்தசிங்கம்

2. Herr Rajivan Arunasalam

திரு றஜீவன் அருணாசலம்

3. Herr Ananther Boopathy – Balavadivetkaran

திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்

4. Frau Piriyatharsieni Manoharan

செல்வி பிரியதர்சினி மனோகரன்

5. Herr Nadarajah Rajendra

திரு நடராஜா இராஜேந்திரா

6. Herr Selvaratnam Ratnaroopan

திரு செல்வரட்னம் இரட்னரூபன்

வாக்காளருக்கான தகுதி ...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்கான பிரதிநிதிகளினைத் தெரிவுசெய்யும் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் ஒருவர் குறிப்பிட்ட தேர்தல் நடைபெறும் நாளன்று தனது வயதின் 17வது ஆண்டினைப் பூர்த்தி செய்திருப்பதோடு ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஊடாக இணைந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தோடு தேர்தல் ஆணையத்தினரைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் தனது ஈழத்தமிழ் அடையாளத்தை நிறுவக்கூடியவரும் இதில் உள்ளடங்குவர். இவ் வகையினரின் தகுதி அவரவர் நிலைக்கேற்பத் தீர்மானிக்கப்படும். வாக்காளர் ஜேர்மனியை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். தான் வாழும் தேர்தல் தொகுதியில் மட்டுமே அவர் வாக்களிக்க முடியும்.

வாக்குச்சாவடியில் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் ...

- ஜேர்மன் அடையாள அட்டை (Personal Ausweis)

- ஜேர்மன் வதிவிட உரிமை அத்தாட்சியைக் கொண்ட இலங்கைக் கடவுச்சீட்டு

- ஜேர்மன் வெளிநாட்டவர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள வேறு ஆவணங்கள்

(deutscher Reisepass மற்றும் deutscher Führerschein ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்...

விரைவில் அறியத்தரப்படும் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்...

01. Aalen: Westliche stadtgraben 4 ,73430 Aalen

02. Backnang: Aspacher Str-32, 71522 Backnang

03. Bad Friedrichshall: Johan Halle, Badstr-01, 74177 Bad Friedrichshall

04. Bruchsal: Tunnelstrasse 27, 76646 Bruchsal

05. Dillingen: Odilien-Grundschule ,Friedrich Ebert str 69, 66763 Dillingen

06. Frankfurt : Saalbau Gallus, Frankenallee 111, 60326 Frankfurt am Main.

07. Freiburg: Caritas Verband Freiburg, Komturstraße 36, 79106 Freiburg

08. Germersheim: Sandstr. ,76726 Germesheim

09. Gunzenhausen: Otto Dietrich Str. 3, 91710 Gunzenhausen

10. Homburg: Maria von Frieden,Westring-27 , 66424 Homburg

11. Kaiserslautern: Mehrgenerationenhaus, Kennelstr. 7, 67659 Kaiserslautern

12. Karlsruhe: Forsstr 3, 76131 Karlsruhe

13. Kassel: Leipziger Straße 145, 34123 Kassel-Bettenhausen

14. Kirchheim/Teck: Lindehalle-Alleel-Str. 90, 73230 Kirchheim/Teck

15. Konz-Roscheid: Gemeindehaus, Echternachweg-4, 54329 Konz-Roscheid

16. Landau: Danziger platz 18, 76829 Landau

17. Ludwigsburg: Marstall Center M11, 71634 Ludwigsburg

18. Mannheim: Bürgerhaus Neckarstadt, Lutherstr. 15 – 17, 68169 Mannheim

19. Mühlacker: Enzstr-22, 75417 Mühlacker

20. München: Wahllokal 1: Untere Grasstraße 16, 81541 München

Wahllokal 2: Bewohnerzentrum ,Schneeheideanger 6-8, 80937 München

21. Neustadt: Kindergarten St. Nikolaus, Konrad-Adenauer-Straße 58, 67433Neustadt

22. Nürnberg: Alexanderstraße 23, 90459 Nürnberg

23. Ravensburg: Weinbergstr.12, 88214 Ravensburg

24. Saarbrücken-Malstatt: St,Josef Kindergarten , Pfarrer-Bungarten str-50b, 66115 Saarbrücken-Malstatt

25. Schwenningen: Erzbergerstr. 54, 78054 Schwenningen

26. Sindelfingen: Kath. Pfarramt Dreifaltigkeitskirche, Bleichmühlestr. 11, 71065 Sindelfingen

27. Sinsheim: Siedlerschule, Jahn 11, 74889 Sinsheim

28. Stuttgart: Turmforum im Hauptbahnhof , Arnulf-Klett-Platz 2, 70173 Stuttgart

29. Sulzbach: Alte Feuerwehr, Sulzbachtal str-83, 66280 Sulzbach

30. Tuttlingen: Chritophstr.2, 78532 Tuttlingen

31. Weiterstadt: Schloßgartenstraße 2 a, 64331 Weiterstadt

32. Wiesbaden: Norderneyer Str 17, 65199 Wiesbaden

33. Würzburg: Matterstockstraße 39, 97080 Würzburg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல. 1. திரு பரமு ஆனந்தசிங்கம்

இல. 2. திரு றஜீவன் அருணாசலம்

இல. 3. திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்

இல. 4. செல்வி பிரியதர்சினி மனோகரன்

இல. 5. திரு நடராஜா இராஜேந்திரா

இல. 6. திரு செல்வரட்னம் இரட்னரூபன்

இல. 1 இல. 2 இல. 3 இல. 4 இல. 5 இல. 6

Aalen 39 15 32 28 31 8

Augsburg 38 27 4 25 6 4

Bad Friedrichshall 132 126 102 134 147 35

Bruchsal 14 1 14 2 14 1

Dillenburg 75 19 78 24 70 21

Dillingen 27 4 31 4 32 1

Frankfurt 100 87 252 116 106 171

Freiburg 38 46 18 67 20 13

Gunzenhausen 33 4 28 4 28 0

Homburg 60 11 63 10 99 5

Kaiserslautern 37 6 35 4 51 0

Kassel 17 13 28 22 16 7

Kirchheim/Teck 46 50 43 44 46 20

Konz-Roscheid 11 5 11 13 25 5

Landau 27 31 52 48 63 43

Ludwigsburg 33 48 39 54 21 7

Mannheim 18 12 28 25 22 13

Mühlacker 61 35 52 38 48 8

München 1 175 117 31 125 18 14

München 2 44 27 5 30 6 8

Neustadt 18 1 19 7 55 4

Nürnberg 69 18 71 32 69 9

Ravensburg 32 39 16 46 22 11

Saarbrücken-Malstatt 98 2 97 9 112 2

Schwenningen 20 30 28 40 17 11

Sindelfingen 41 64 15 87 22 9

Sinsheim 41 15 48 16 57 6

Stuttgart 148 120 132 129 144 13

Sulzbach 59 22 61 29 61 14

Tuttlingen 32 29 14 56 19 16

Weiterstadt 29 8 45 11 25 8

Wiesbaden 20 15 77 23 29 9

Würzburg 38 2 40 1 39 0

1670 1049 1609 1303 1540 496

தேர்தல் தொகுதி 4 க்கான தேர்தல் வாக்களிப்பு 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை 33 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. 33 வாக்குச்சாவடிகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்தல் முடிவுகளுக்கமைய முதல் மூன்று இடங்க‌‌‌ளைப் பெற்ற திரு பரமு ஆனந்தசிங்கம் (1670 வாக்குகள்), திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன் (1609 வாக்குகள்), திரு நடராஜா இராஜேந்திரா (1540 வாக்குகள்) ஆகியோர் நாடு கடந்த அரசாங்கத்தின் ஜேர்மன் தென் மாநிலப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்!

இத் தேர்தல் தொகுதியில் ஒரு குழுவாகத் தேர்தலில் நின்ற வேட்பாளர்களுக்குத் தேர்தல் விதிகளுக்கு மாறாகத் தேர்தல்நாள் அன்றும் பல வாக்குச்சாவடிகளில், அவ் வேட்பாளர்களை நிறுத்தியவர்களால் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாகச் சாட்சிகளுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செயற்பாடுகளைத் தடுக்க முடியாத கையறு நிலையிலேயே நாமும் பொது மக்களும் இருந்தோம் ‌என்பதை மனவருத்தத்துடனும் கூச்சத்துடனும் தெரிவித்துக் கொள்வதோடு, இச்சூழலில் நடந்த தேர்தலின் முடிவுகளையும் இதனூடாகவே பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

தேர்தல் ஆணையகம்,‌ ஜேர்மனி, 02.07.2010

இல. 1. திரு பரமு ஆனந்தசிங்கம்

இல. 2. திரு றஜீவன் அருணாசலம்

இல. 3. திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன்

இல. 4. செல்வி பிரியதர்சினி மனோகரன்

இல. 5. திரு நடராஜா இராஜேந்திரா

இல. 6. திரு செல்வரட்னம் இரட்னரூபன்

இல. 1 இல. 2 இல. 3 இல. 4 இல. 5 இல. 6

Aalen 39 15 32 28 31 8

Augsburg 38 27 4 25 6 4

Bad Friedrichshall 132 126 102 134 147 35

Bruchsal 14 1 14 2 14 1

Dillenburg 75 19 78 24 70 21

Dillingen 27 4 31 4 32 1

Frankfurt 100 87 252 116 106 171

Freiburg 38 46 18 67 20 13

Gunzenhausen 33 4 28 4 28 0

Homburg 60 11 63 10 99 5

Kaiserslautern 37 6 35 4 51 0

Kassel 17 13 28 22 16 7

Kirchheim/Teck 46 50 43 44 46 20

Konz-Roscheid 11 5 11 13 25 5

Landau 27 31 52 48 63 43

Ludwigsburg 33 48 39 54 21 7

Mannheim 18 12 28 25 22 13

Mühlacker 61 35 52 38 48 8

München 1 175 117 31 125 18 14

München 2 44 27 5 30 6 8

Neustadt 18 1 19 7 55 4

Nürnberg 69 18 71 32 69 9

Ravensburg 32 39 16 46 22 11

Saarbrücken-Malstatt 98 2 97 9 112 2

Schwenningen 20 30 28 40 17 11

Sindelfingen 41 64 15 87 22 9

Sinsheim 41 15 48 16 57 6

Stuttgart 148 120 132 129 144 13

Sulzbach 59 22 61 29 61 14

Tuttlingen 32 29 14 56 19 16

Weiterstadt 29 8 45 11 25 8

Wiesbaden 20 15 77 23 29 9

Würzburg 38 2 40 1 39 0

1670 1049 1609 1303 1540 496

தேர்தல் தொகுதி 4 க்கான தேர்தல் வாக்களிப்பு 27.06.2010 ஞாயிற்றுக்கிழமை 33 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. 33 வாக்குச்சாவடிகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்தல் முடிவுகளுக்கமைய முதல் மூன்று இடங்க‌‌‌ளைப் பெற்ற திரு பரமு ஆனந்தசிங்கம் (1670 வாக்குகள்), திரு ஆனந்தர் பூபதி பாலவடிவேற்கரன் (1609 வாக்குகள்), திரு நடராஜா இராஜேந்திரா (1540 வாக்குகள்) ஆகியோர் நாடு கடந்த அரசாங்கத்தின் ஜேர்மன் தென் மாநிலப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்!

இத் தேர்தல் தொகுதியில் ஒரு குழுவாகத் தேர்தலில் நின்ற வேட்பாளர்களுக்குத் தேர்தல் விதிகளுக்கு மாறாகத் தேர்தல்நாள் அன்றும் பல வாக்குச்சாவடிகளில், அவ் வேட்பாளர்களை நிறுத்தியவர்களால் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாகச் சாட்சிகளுடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்செயற்பாடுகளைத் தடுக்க முடியாத கையறு நிலையிலேயே நாமும் பொது மக்களும் இருந்தோம் ‌என்பதை மனவருத்தத்துடனும் கூச்சத்துடனும் தெரிவித்துக் கொள்வதோடு, இச்சூழலில் நடந்த தேர்தலின் முடிவுகளையும் இதனூடாகவே பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

தேர்தல் ஆணையகம்,‌ ஜேர்மனி, 02.07.2010

அண்ண நீங்கள் சொன்னமாதிரி நீங்கள் வென்று விட்டியள், உவ்வளவு மெதுவாக இழுபறிபட்டு உந்த தேர்தலை நடத்திய இருவரையும்தூக்கி வெளியே கடாசவும் அப்பத்தான் ஜேர்மனியில் செயற்பாடுகள் விரைவாக வீறு நடை போடும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.