Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகால சட்டம் தேவை இல்லை; 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் - பொன்சேகா

Featured Replies

அவசரகால சட்டம் தேவை இல்லை; 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் - பொன்சேகா

வவுனியா நிருபர்

புதன்கிழமை, மே 5, 2010

இந்த நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை, ஆகையால் அவசரகால சட்டம் தேவை இல்லை அத்துடன் 11ஆயிரம் தமிழ் இளைஞர்களும் விடப்படவேண்டும், அரசியல் தீர்வு காணவேண்டும். இவ்வாறு பாராளுமன்றில் சரத் பொன்சேகா கூறினார். முள்ளிவாய்க்காலில் தமிழர்களை கொன்றவர்களில் இரண்டாம் கட்ட தலைவராக இருக்கும் பொன்சேகாவே இவ்வாறு கூறினார் என்றாலும் ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் இளைஞர்கள் பற்றியோ, அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்பது பற்றியோ பெரிதாக எதனையும் கூறாததும் கவனிகப்படவேண்டியவை. பொன்சேகா கூறியவை வருமாறு;

நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட் டிருக்கும் தமிழ் இளைஞர்கள் 11 ஆயிரம் பேரின் விசாரணை களைத்துரிதப்படுத்தி அவர்களை விரை வில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

அவசரகாலச்சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

ஜனாதிபதித் தேர்தலில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சிக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்தனர். அத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் 98 ஆயிரம் விருப்பு வாக்குகளை எனக்கு வழங் கினர். அவர்கள் அனவைருக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், என்மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, என்மீது சேறு பூசி என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் நன்றி.

படையினரின் அர்ப்பணிப்புக் காரணமாக 30 வருட கால யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட முடிந்தது. அந்த வெற்றியை வேறு எவரும் அபகரிக்க முடியாது. படையினருக்கும், படையினரின் உறவினர்களுக்குமே அந்த வெற்றி உரித்தாகிறது.

பாதுகாப்புக்கு ஆபத்தில்லை ஆகையால் அவசரகாலம் சட்டத்தை நான் விரும்பவில்லை, இப்படியானதொரு நிலையில் இந்த நாட்டில் தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் இருப்பதை நான் விரும்பவில்லை. ஒரு வருடகாலமாக இந்த நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் வகையில் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

அல்குவைதா அமைப்பால் அமெரிக்காவுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருக்கின்றபோதிலும், அந்நாடு அவசரகாலச் சட்டத்தால் ஆளப்படவில்லை. ஆனால், எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத இந்நாடு மட்டும் அவசரகாலச் சட்டத்தால் ஆளப்படுகின்றது.

நாட்டில் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும். மக்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டம் உருவாக்கப்படவேண்டும்.

இந்த நாட்டில் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை. இதனால், மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இராணுவத்தினர் கூட மிரட்டப்படுகின்றனர். சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் காரணமின்றி பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். யுத்தத்தை வென்று கொடுத்த படையினருக்கு எவ்வித வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

யுத்தம் வெல்லப்பட்டாலும் சமாதானத்தை ஏற்படுத்த நடவடிக்கை இல்லை, யுத்தத்தைப் படையினர் வென்றுகொடுத்துள்ளபோதிலும், அந்த யுத்த வெற்றியின் ஊடாக இனங்களிடையே ஒற்றுமை மற்றும் சமாதானம் போன்றவற்றைக் கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். அவர்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-11-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE

  • கருத்துக்கள உறவுகள்

11.000 தமிழ் இளைஞர்களை விடுவிக்க இந்த ஓ நாய் அழுவது அதற்கு முதல் தன்னை விட வேண்டும் என்பதற்காகவே.

சிங்கள இனவெறியர்கள் யார் குரல் கொடுத்தாலும் நடைபெறப் போவது ஒன்றுமில்லை.

மாகாணசபைத் தேர்தலின் முன்னர் தேவைப்படும் வாக்குக் கொள்ளைக்காக சிலர் விடுதலை செய்யப்படலாம்.

வாத்தியார்

...............

தனக்கு ஒன்று வந்த பின்புதான் புரிந்திருக்கிறது இது போல கொத்தபாயவுக்கும் ராஜபக்சவுக்கும் வரும்....... செய்த பாவம் சும்மாவிடாது....

பொன்சேகாவோ இல்ல பொட்டசேகாவோ வந்து எமது இளையோரை விடுவியுங்கள்.....

  • தொடங்கியவர்

பொன்சேகாவோ இல்ல பொட்டசேகாவோ வந்து எமது இளையோரை விடுவியுங்கள்.....

ஏன் கூட்டமைப்பு செய்யாதோ....??

ஏன் கூட்டமைப்பு செய்யாதோ....??

கூட்டமைப்பால் முடியும்.. ஆனால் சில விட்டுகொடுப்புகள் செய்ய வேண்டும்...அது சில வேளை சிலரால் துரோகத்தனம் எனப்படும்...சரியா...

நான் நினைக்கின்றேன் சைக்கிளோடிய தமிழர்கள் வென்றிருந்தால் ஐயகோ !!! இன்நேரம் அடைக்கப்பட்ட போராளிகள்..தமது வீட்டில் இருப்பார்களோ...

a_broken_bike_b.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எநத அவசரகால சட்ட விதிகளின் படி தமிழர்களைக் கொன்று குவித்தாரோ இதே அவசரகாலச் சட்டம் அவர் மீது பாய்ந்ததன் பின் தான் அந்தச் சட்டங்களின் கொடுமைகள் புரிகிறது போலும்.

அனுபவி நாயே அனுபவி

  • தொடங்கியவர்

கூட்டமைப்பால் முடியும்.. ஆனால் சில விட்டுகொடுப்புகள் செய்ய வேண்டும்...அது சில வேளை சிலரால் துரோகத்தனம் எனப்படும்...சரியா...

நான் நினைக்கின்றேன் சைக்கிளோடிய தமிழர்கள் வென்றிருந்தால் ஐயகோ !!! இன்நேரம் அடைக்கப்பட்ட போராளிகள்..தமது வீட்டில் இருப்பார்களோ...

a_broken_bike_b.jpg

எவ்வளவு காலத்துக்கு உந்த விட்டு கொடுப்பு...?? இன்னும் ஒரு ஐஞ்சு வருசம் போதுமோ...?? இந்திய இராணுவ காலத்துக்கும் முன்னம் இருந்து விட்டு கொடுப்பு தானே செய்யுறீயள்...

இது வரை செய்யாத விட்டுக்கொடுப்புக்களையா இனிமேல் செய்ய போகிறார்கள்... விட்டுக்கொடுப்பு செய்யாமல் MP யாக இருந்த கனகரத்தினத்தாரை கண்ணை மூடிக்கொண்டு உள்ளை போட்ட காலத்திலை, வாகனங்களிலை இராணுவ காவல் அரண்களை எந்தவித கெடுபிடியும் இல்லாமல் கடந்து போய் வந்தவை விட்டு கொடுப்பு செய்யாமலோ அப்படி பல சலுகைகளை பெற்றவை...???

யாழ்ப்பாணத்திலை இந்திய தூதரகம் திறக்க பாராளுமண்றம் போக கொழும்பிலை நிண்ட உங்கட ஆக்கள் எப்படி யாழ்ப்பாணம் அடுத்தநாள் போனவை எண்டாவது தெரியுமோ...?? சொந்தக்காசை செலவளிச்சு பிளேனிலையா..??

புலியை கிண்டுறதை விட்டு போட்டு நீங்கள் ஏதாவது செய்ய முடியுமே எண்டு பாருங்கோ...

Edited by தயா

புலிகளை வைச்சுப்பிழைக்கிற போக்கிலிகளே . இன்னும் சனம் அழிய வேணும் எண்டு நினைக்கிறியளோ. ஊங்களுக்கு கூட்டமைப்பை பிழைசொல்லாட்டி உங்களுக்கு நித்திர வராது. ஏனெண்டா நீங்கள் மகிந்தவட்ட வாங்கின காசுக்கு கூட்டமைப்பை ஏதாவது பிழைசொல்லிக்கொண்டு இருக்கத்தானே வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தாள் ஜனாதிபதியா வந்திருந்தா தமிழீழமே தந்திருக்கும்போல கிடக்கு .... :rolleyes:

  • தொடங்கியவர்

புலிகளை வைச்சுப்பிழைக்கிற போக்கிலிகளே . இன்னும் சனம் அழிய வேணும் எண்டு நினைக்கிறியளோ. ஊங்களுக்கு கூட்டமைப்பை பிழைசொல்லாட்டி உங்களுக்கு நித்திர வராது. ஏனெண்டா நீங்கள் மகிந்தவட்ட வாங்கின காசுக்கு கூட்டமைப்பை ஏதாவது பிழைசொல்லிக்கொண்டு இருக்கத்தானே வேணும்.

கூட்டமைப்புக்கு வால் பிடிக்கிற பன்னாடையளே கூட்டமைப்பு இது வரைக்கும் தமிழருக்காக என்னத்தை கிளிச்சது எண்டு சொல்லுமன்...???

இலங்கை அரசாங்கத்தின் நிதியிலை வாகனங்களிலை சொகுசா போறவங்கள் என்னதை செய்து போடுவாங்கள் எண்டு நம்புறீர்...??

12 ஆயிரம் தமிழ், இளைஞர் யுவதிகள்; பதில் கூறாமல் அரசு ஒளித்தது ஏன்?

போர் முடிவுற்ற வேளையிலும், அதன் பின்னரும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட மற்றும் தாமாகச் சரணடைந்த தமிழ் இளைஞர்களின் எண் ணிக்கையை அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் வெளியிடவேண்டும் சமர்ப்பிக்கவேண்டும்.

இவ்வாறு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவ சரகாலச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்கா வலியுறுத்தினார்.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களிலும் அவசரகாலச் சட்டத்தை நீடிக் கும் பிரேரணை மீதான விவாதத்தின் போது, அனுர குமார திஸநாயக்கா மட்டுமன்றி, ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவும், விவாதத்தில் பங்குபற் றிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனை வரும் குறிப்பிடப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளின் நிலை பற்றி எடுத்துச்சொன்னார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

போரைத் தொடர்ந்தும் அதன் பின்னரும் மட்டு மன்றி போருக்கு முன்னரும் ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் என்ற போர்வை யுடன் கைதுசெய்யப்பட்டு, மனிதச் சித்திரவதைக் கூடங்களென சர்வதேச ரீதியில் முத்திரையிடப் பட்ட இராணுவ வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை நீதிமன்றங்களில் நிறுத்தி உண்மை, பொய், சந்தேகங்களை வெளிக்கொணரும் எண் ணம் தானும் அரசுத் தரப்புக்கு இல்லை. உத்தேச மாக 12 ஆயிரம் இளைஞர், யுவதிகள் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்குப் பதிலாக அவர்கள் நரகத்தில் உழலும் ஜந்துக்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டிருக்கின்றன.

ஆனால், அந்த இளைஞர், யுவதிகள் எத்தகைய நிலையில் உள்ளார்கள் என்பதனை வெளிச்சப் படுத்தும் எண்ணந்தானும் அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை. அவர்களும் மனிதர்களே என்று கருதிச் செயற்படும் நோக்கும் போக்கும் தென்படவே இல்லை.

அதன் பிரதிபலிப்பே, முழுக்க முழுக்க மனிதாபி மான உணர்வுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களும் சரி சிங்கள எம்.பிக்களும் சரி சரணடைந்த மற்றும் படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகளை விடுவிக்குமாறு நாடாளுன் றில் கோரிக்கை விடுத்தமையாகும்.

தடுப்புக் காவலில், சிறைச்சாலைகளில், புனர் வாழ்வு நிலையங்கள் என்ற பெயரில் இயங்கும் சித்தி ரவதைக் கூடங்களிலுள்ள தமிழ் இளைஞர், யுவதி களை அரசு தனது நல்லெண்ணத்தைக் காட்டி விடு விக்குமாறு கேட்டிருந்தனர். அவர்களின் உண்மை யான எண்ணிக்கையை வெளியிடுமாறு வலியுறுத் தினார்கள்.

ஆனால், அரசாங்கத் தரப்பினர், மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, கோரிக்கைகளுக்கு பதில் சொல்லத் திராணியற்றவர்களாக, விரும்பாதவர்களாக வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டு, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரே ரணையைத் தங்களது எண்ணிக்கைப் பலத்தை கையில் எடுத்து தமிழ் இளைஞர்களின் நிலை குறித்து எதுவுமே தெரிவிக்காமல், கடையை மூடி விட்டார்கள். மக்களின் ஜன நாயக உரிமைகளையும் அவற்றோடு ஒன்றிய மனித உரிமைகளையும் துச்சமென மதித்துச் துவம்சம் செய்யும் அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சி முறைக்கு பழக்கப்பட்ட வர்கள், அதில் ருசி கண்ட பூனையாக மாறிவிட்ட வர்கள், இனிமேல் ஜனநாயக விழுமியங்களையும் கோட்பாடுகளையும் பேணுவார்கள், ஏன் மதிப்பார் கள் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்பதற் கான முதலாவது சமிக்ஞை காட்டப்பட்டிருக்கிறது!

இலங்கையில் ஜனநாயக ஆட்சிமுறை என்ற பதம் துட்டுக்கு எந்தளவு என்ற நிலை மிகவிரைவில் ஏற்படும் என்பதற்கான குறியீடு ஒன்றை ஏழாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் அரச தரப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வளவுதான்! இதற்கு மேல் இந்த நாட்டின் பிரஜைகள், அவர்கள் சிறுபான் மையினராக இருப்பினும் சரி, பெரும்பான்மையின ராக இருப்பினும் சரி ஜனநாயக மாண்புகள், மனித விழுமியங்கள் என்று எதனையும் உச்சரிக்க முடி யாது போகினும் ஆச்சரியம் இல்லை.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.