Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கிய ஆசியர்கள் ஏழு பேருக்கு பணியிட மாற்றத் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற யோகேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கியவர்களே தண்டனைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

ஒட்டுக்குழுத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையானின் கட்டளைக்கு அமைய கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச் சேனையைச் சேர்ந்த குறிப்பிட்ட ஆசிரியர்கள் கட்டுமுறிவு, வாகரை, கதிரவெளி ஆகிய பகுதிகளுக்கு மாற்றலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்டவர்களில் சிலர் பணியில் இணைந்து ஒருவருடமாகாத நிலையில் அவர்களுக்கும் பணியிட மாற்றல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் பிள்ளையானின் உறவினர்களான பலர் பத்து ஆண்டுகளைக் கடந்தும் ஒரே பாடசாலையில் பணியாற்றிவருகின்றமையையும் அப்பகுதித் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் பிள்ளையானின் கைப் பொம்மையாகச் செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய கல்விப் பணிப்பாளர் பதவியில் இருக்கும் குறித்த அம்மணியை மாகாணக் கல்வி அமைச்சரின் செயலராகத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக பிள்ளையான் அவருக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாகவும் இதனை அடுத்து பிள்ளையானின் அனைத்துக் கோரிக்கைகளையும் சிரமேற் கொண்டு அவர் செயற்பட்டுவருவதாகவும் மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.

.

நன்றி

ஈழநேசன்

________________________________________________

ஜனநாயகம் எண்டுசொல்லுறது இதைத்தானா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையானின் கட்டளைக்கு அமைய கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்ரவர்த்தி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச் சேனையைச் சேர்ந்த குறிப்பிட்ட ஆசிரியர்கள் கட்டுமுறிவு, வாகரை, கதிரவெளி ஆகிய பகுதிகளுக்கு மாற்றலாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றல் கொடுத்துள்ளார்களோ......

அங்கு இன்று கூட ஒரு மாணவி கடத்தப் பட்டு தப்பி வந்துள்ளார், அவர் கடத்தப் பட்ட இடத்தில் ஆறு மாணவிகள் மயக்கமான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படியான சம்பவங்களை தட்டிக்கேட்கவோ, வெளிச்சத்துக்கு கொண்டு வரவோ பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் துப்பில்லை. பணி மாற்றம் கொடுக்கிறதிலை தான் மும்முரமாய் இருக்கினம். :rolleyes:

தமிழ் சிறி உங்களுக்கு எல்லாம் இந்த செய்தி சந்தோசமாக இருக்குமே. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களை பழிவாங்குவதில் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமே. உங்களுக்கெல்லாம் எங்கே மட்டக்களப்பு மக்களின் தமிழ் உணர்வு தெரியப்போகிறது. நீங்கள் எல்லாம் யாழ்ப்பாண குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு பைத்தியக்கார கூட்ட கஜேந்திரன்

கூட்டத்திற்கு பின்னால் நின்று ஆடுகிற கூட்டமாச்சே . உங்களுக்கெல்லாம் எங்க மட்டக்களப்பு மக்களின் பிரச்சினை தெரியப்போகுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது முதல் வாணிங்காம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உது முதல் வாணிங்காம். :rolleyes:

அட உது தானோ கிழக்கின் விடி வெள்ளி செய்கிற வேலை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி உங்களுக்கு எல்லாம் இந்த செய்தி சந்தோசமாக இருக்குமே. தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்களை பழிவாங்குவதில் உங்களுக்கு சந்தோசமாக இருக்குமே. உங்களுக்கெல்லாம் எங்கே மட்டக்களப்பு மக்களின் தமிழ் உணர்வு தெரியப்போகிறது. நீங்கள் எல்லாம் யாழ்ப்பாண குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு பைத்தியக்கார கூட்ட கஜேந்திரன்

கூட்டத்திற்கு பின்னால் நின்று ஆடுகிற கூட்டமாச்சே . உங்களுக்கெல்லாம் எங்க மட்டக்களப்பு மக்களின் பிரச்சினை தெரியப்போகுது.

டாம், அப்ப தமிழ் கூட்டமைப்பு புத்திசாலித்தனமான வேலைகள் செய்யுது எண்டு கனவு காணுகிறியளோ.......

"இந்தியாவுடன் சிநேக பூர்வமான சந்திப்பு"

"மகிந்த கூட்டமைப்பை சந்திக்க ஆர்வம்"

"இந்திய துணத்தூதகர திறப்பு விழாவில் கூட்டமைப்பும் கலந்து கொண்டது"

மேற் கூறியவை அண்மையில் வந்த செய்திகள்.

தேர்தல் முடிந்து ஒருமாதமாகியும் கூட்டமைப்பின் இந்திய, சிங்கள நெருங்கிய உறவை வைத்து.....

கூட்டமைப்பு அகதிமுகாம் மக்களைப் பற்றியோ, சிறையில் உள்ளவர்களைப் பற்றியோ, வடக்கு, கிழக்கில் ஒட்டுக்குழுக்களால் நடத்தப்படும் களவு,கடத்தல், கொலை போன்றவற்ரை பற்றி வாய் திறக்காதவர்கள் தான் உங்களுக்கு புத்திசாலியாகத் தெரிந்தால்......

உங்களை போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது.

அவர்கள் அக்கறை காட்டுவதெல்லாம் இந்தியாவின் செயலுக்கு ஆமாம் போடுவதாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுபா சக்கரவர்த்தி ம்... கூம்

அரசியல் பழிவாங்கல் கடும் கண்டனத்துக்குரியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.