Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான பகிரங்க மடலுக்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் பதில்

Featured Replies

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான பகிரங்க மடலுக்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் பதில்

பிரித்தானியா, வடமேற்கு லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தமிழர் ஒருவர் அனுப்பிய பகிரங்க மடலுக்கு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அனுப்பியுள்ள பதில்....

அன்புடன் மாறன்.

உங்கள் திறந்த மடல் பார்த்தேன். மிகவும் சந்தோசம். என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையிலும் தேசியத்திலும் இருந்து விலகப்போவதில்லை. நான் அதில் உறுதியோடு இருக்கின்றேன். அத்துடன் எவரும் என்னை பகடைக் காயாக நடத்த முடியாது. ஏனெனில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். மக்களின் ஆணைக்கே நான் தலைவணங்குவேன்.

அதேவேளை என்னைப் பொறுத்தவரை நாடுகடந்த அரசில் இருந்து யாரையும் ஒதுக்குவதோ அல்லது ஓரங்கட்டுவதோ எனது நோக்கமல்ல. அவ்வாறான எண்ணம் என் மனதில் என்றுமே இல்லை.

இந்த நாடு கடந்த அரசாங்க அமைப்புப் பணியில் காலநேரம் பாராது உழைத்தவர் திரு.உருத்திரகுமார் என்பதும் எனக்குத் தெரியும்.

எனவே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், கொள்கையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலமே எமது இலட்சியத்தை இதன் ஊடாக அடைய முடியம். இதில் நான் உறுதியாக உள்ளேன்.

நன்றி

எஸ்.ஜெயானந்தமூர்த்தி

moorthymp@yahoo.com

நாடுகடந்த தமிழீழ அரசு உறுப்பினர் செ. ஜெயானந்தமூர்த்தி அவர்கட்கு ஒரு பகிரங்க மடல்

தமிழ் தேசியத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதுவதற்கு நினைத்திருந்தேன். ஆனால் எல்லோரும் உங்களுக்கு திறந்த மடல் எழுதுவது நன்றாக இருக்காது. அதற்காக உங்களுக்கு ஒரு பகிரங்க மடல் ஒன்றை எழுதுகிறேன்.

நாடுகடந்த அரச தேர்தலில் போட்டி இட்டு நீங்கள் வடமேற்கு லண்டனில் அதிக வாக்குகளை பெற்று தமிழீழ நாடாளுமன்றத்தில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள். மிகவும் சந்தோசம். தமிழ் தேசியத்திற்காக கடந்த சில வருடங்களாக அயராது உழைத்துவரும் உங்களுக்கு புலம் பெயர் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். தமிழீழ முதலாவது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் உங்களுக்கு கிடைத்ததை இட்டு மட்டக்களப்பில் பிறந்து புலத்தில் வாழ்பவன் என்ற அடிப்படையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனாலும் உங்களுக்கு சில விடயங்களை திறந்த மனத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1. எனது ஆயுத போராட்டம் கடந்த வருடம் மே மாதம் சர்வதேச சதிகார வலைப்பின்னலால் யாரும் எதிர்பார்க்காத முடிவுக்கு வந்ததை தொடர்ந்தது தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் சிந்தனைக்கு ஒரு செயல் வடிவம் கொடுக்கும் செயற்பாடாக நாடுகடந்த அரசை தமிழீழ தேசியத்தை விட்டுவிலகாத, தமிழீழ தேசியத்தை வைத்து பிழைப்பு நடத்தாத மிகவும் உறுதி கொண்ட ஒரு தேசிய தலைமையால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதை சிதறடிக்கும் நோக்குடன் ஒரு முகம் தெரியாத குழு தனது சதி வேலைகளை செய்துவருகிறது. தமிழ் தேசிய உணர்வலர்களாக புலம்பெயர் மக்கள் சிலருக்கும் சில புலம் பெயர் அமைப்புக்களிற்கும் தங்களை காட்டி கொள்ளும் இவர்கள் தொடர்பாக நீங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

2. நாடுகடந்த அரசு உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து அதை விரும்பாத நோர்வேயில் இருந்து செயற்படும் அந்த முகம் தெரியாத குழு நாடுகடந்த அரசின் இணைப்பாளராக இருக்கும் தமிழீழ விடுதலை புலிகளின் சட்ட ஆலோசகர் மீது வீண் பழி சுமத்தி அவரை அதிலிருந்து அகற்றுவதற்காக அவர்கள் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டனர். அதற்காக அவர்கள் உருத்திரகுமார் மீது பல்வேறு உண்மைக்கு புறம்பான வதந்திகளை வாரி தமது இணையத்தளங்கள் முலம் பறைசாற்றினர். அதுவும் தோற்றுப் போக வேறு வழி இன்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர எடுத்த சதிவலை தொடர்பாக நீங்கள் விழிப்பாக இருப்பீர்கள் என்று நினைகிறேன். அவர்களின் நாசகார தமிழ் தேசிய விரோத நடவடிக்கைகள் பலவும் தோல்வியில் முடிவடைய உங்களை வைத்து நாடுகடந்த அரசை குழப்புவதற்கு அவர்கள் மடல் எழுதுகிறார்கள். அது தொடர்பாக நீங்கள் மிகவும் விழிப்புடம் இருந்து தமிழ் தேசியத்தை முன்னெடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு வாக்குப் போட்ட என்னை போன்ற புலம் பெயர் மக்களின் உள்ளங்களில் இருந்து உங்களுக்கு விடுக்கும் செய்தி.

3. போர் ஒய்வு காலத்தில் விடுதலை புலிகளின் சட்ட ஆலோசகர் எத்தனை தடவைகள் வன்னிக்கு சென்றார் என்பதும் இடைக்கால நிர்வாக சட்ட வரைபை முன்னின்று யார் வரைந்தது என்பது தெரியாத அந்த முகம் தெரியாத குழு இன்று சட்ட ஆலோசகர் மீது புதுவிதமாக வன்னிக்கு செல்ல மறுத்தவர்கள் என்று புதுக் கதை ஒன்றை சொல்லுகிறார்கள். புலம் பெயர் தமிழ் மக்கள் என்ன யாதும் தெரியாத முட்டாள்கள் என்று அந்தக் குழு நினைக்கிறதா?

புலம் பெயர் நாடுகளில் செயற்படும் சில அமைப்புக்கள் மற்றும் சிலர் இந்த சதிகார கும்பலுக்கு தெரியாமல் துணை போயிருக்கலாம். தற்பொழுது தமிழீழ நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த சதிகார கும்பலின் நடவடிக்கைகளிற்கு துணை போயிருக்கலாம். ஆனால் லண்டன், பிரான்ஸ் மற்றும் கனடா நாடுகளில் இவர்கள் செய்த சதி வேலைத்திட்டங்கள் அம்பலமாகியதை தொடர்ந்து புலம் பெயர் அமைப்புக்களும் மக்களும் விழிப்படைந்துள்ளனர் என்பது தமிழ் தேசியத்திற்கு கிடைத்த வெற்றி.

தமிழ் தேசியத்தின் தேசியப் பற்றாளர்களாக தங்களை சித்தரித்து மக்களை முட்டாள் ஆக்கி தமிழ் தேசியத்திற்காக உறுதியுடன் உழைப்பவர்களை துரோகிகள் ஆக்க நினைக்கும் இவர்களை தமிழீழ மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் தொடர்பாக புலம் பெயர் மக்கள் விழிப்பாக இருப்பதோடு இவர்களின் நடவடிக்கைகளிற்கு தமிழீழ தேசியத்திற்காக அயராது உழைத்து வரும் ஜெயானந்தமூர்த்தி போன்றார் துணை போக மாட்டார்கள் என்று நம்புவோமாக! இல்லையேல் காலம் என்று ஒருநாள் தண்டிக்கும்.

maran80@hotmail.co.uk

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

எனவே இதற்காகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன், கொள்கையில் உறுதியுடன் செயற்படுவதன் மூலமே எமது இலட்சியத்தை இதன் ஊடாக அடைய முடியம். இதில் நான் உறுதியாக உள்ளேன்.

ஜெயானந்தமூர்த்தி அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது

வாத்தியார்

.............

ஜெயானந்தமூர்த்தி அவர்களின் கருத்து வரவேற்கத்தக்கது

வாத்தியார்

.............

பிரச்சினை ஒருந்தருக்கும் இல்லை... இங்கை பிரச்சினையே வெளியிலை இருக்கும் சிலருக்குதான்... உள்ளை குத்து வெட்டு நடப்பதாக காட்டி கொள்ள எடுக்கும் முயற்சியின் காரணம் கூட பட்டவர்த்தனமான வெளிப்படை...

நீங்கள் எனது உதவியை கேக்காமல் உங்களின் பாட்டுக்கு ஒருவேலையை செய்தால் உங்களுக்கும் எனக்கும் வெட்டு குத்து எண்டோ அர்த்தம்...

நடந்து முடிந்து போன துரோகங்களின் பாதிப்பால் நான் உங்களுகளின் நடவடிக்கைகளை சந்தேக கண்ணோடை பார்த்தால்...??? உங்களை நான் துரோகி எண்று சொல்வதாக தான் அர்த்தமா....?? இல்லை நீங்கள் என்னை சந்தேக கண்ணோடு பார்த்தால் நான் துரோகி எண்றுதான் அர்த்தமா....??

எல்லா பிரச்சினையும் காலமும் ஒவ்வொருவரின் செயற்பாடுகளும், எடுத்து கொள்ளும் சிரத்தைகளும் எல்லாரையும் ஒண்று சேர்க்கும்...

உண்மைகள் அறியாது, திட்டமிட்ட சிலரின் செயற்பாடுகளால் சில இடங்களில் பலியாகி போனவர்களையும் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும்... அதுக்காக தன்னும் பொறுமை வேண்டும்...

சில புரிந்துணர்வுகள் ஏற்பட வேண்டுமே அதோடு இல்லாததை ஊதி பெரிதாக்கும் இந்த கூட்டத்தை அடையாளம் கண்டு பிடிக்க வேண்டும்...

Edited by தயா

பிரச்சினை ஒருந்தருக்கும் இல்லை... இங்கை பிரச்சினையே வெளியிலை இருக்கும் சிலருக்குதான்... உள்ளை குத்து வெட்டு நடப்பதாக காட்டி கொள்ள எடுக்கும் முயற்சியின் காரணம் கூட பட்டவர்த்தனமான வெளிப்படை...

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31733

:rolleyes:

முழுப்பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்கலாமா??????????

.... நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்பு ..... இதை உடைத்தெறிவதில் சிங்கள அரசை விட புலிகளின் சர்வதேச கட்டமைப்பு மும்முரமாக செயற்படுகிறது!!! மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நெட் இணையத்தளம் நடத்துபவர்கள் நாடு கடந்த அரசுக்கு எதிரான கருத்துகளை வருகிறார்கள். யார் தேசியத்தின் பெயரால் சுயலாபம் தேடுகிறார்கள் என்று இதிலிருந்து எமால் புரிந்து கொள்ளமுடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் மானம் உயிர் மக்களை பாதுகாக்க போராடியவர்கள் மாண்டு போனார்கள் மீதியோர் சிறைபட்டுலார்கள்.வேஷம் போட்டு கோசம் போடுபவர்கள் எஞ்சியிருக்கும் மக்களை வாழ விடமாடார்கள் போலதெரிகிறது.

தமிழ் நெட் இணையத்தளம் நடத்துபவர்கள் நாடு கடந்த அரசுக்கு எதிரான கருத்துகளை வருகிறார்கள். யார் தேசியத்தின் பெயரால் சுயலாபம் தேடுகிறார்கள் என்று இதிலிருந்து எமால் புரிந்து கொள்ளமுடிகிறது.

உவைதானாம் சோரமான் எண்ட பெயரில் குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக ஒரு செய்தி. நாடு கடந்த தமிழீழ அரசு நாசமாகப்போகவேணும் எண்டதுதான் அவையின்ர நோக்கமாம்.

ஒண்ணுமே புரியலேயாம் இவர்களுக்கு! :lol:

குழப்பம் ஏற்படுத்துவது தமிழ் நெற், ஆம்? :rolleyes:

Edited by kalaivani

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31733

:o

முழுப்பூசனிக்காயை ஒரு பிடி சோற்றினுள் மறைக்கலாமா??????????

.... நாடு கடந்த தமிழீழ அரசுக்கான கட்டமைப்பு ..... இதை உடைத்தெறிவதில் சிங்கள அரசை விட புலிகளின் சர்வதேச கட்டமைப்பு மும்முரமாக செயற்படுகிறது!!! மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை!

இங்கை யாரும் துரோகிகளும் அல்ல...

தமிழ் நெற் சொல்லும் விடயம் நாடு கடந்த அரசின் ஐரோப்பிய அமைப்பாளர்கள் பற்றியது... அது உண்மையும் கூட... நீங்கள் எல்லாம் சொல்வது போல நாடுகடந்த அரசின் இணைப்பாளர் உருத்திரகுமார் மீதானது கடுப்பு அல்ல...

எங்கை சுத்திப்பார்த்தாலும் இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் காரணமான அடிப்படை எண்றது ஒண்றில் தான் வந்து நிக்கிறது.... அது சந்தேகத்துக்குரிய நாடுகடந்த அமைப்பாளர்களை தெரிவு செய்த KP ...

KP பிடி பட்டதின் பின்னரும் இந்த அமைப்பாளர்கள் அவருடன் தொடர்பில் இருக்கிறார்கள் எண்டதும் உண்மையானது... இந்த விடயத்தில் சட்ட ஆலோசகர் உருத்திர குமார் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்பதும் , அவர் செய்ய விளைந்தால் வேண்டாத இன்னும் குழப்பமான நிலைக்கே தமிழர்களை கொண்டு செல்லும் என்பதுமே உண்மை...

அதுக்கு இருக்கும் இருந்த ஒரே தீர்வு தேர்தலின் பின்னர் தெரிவு செய்ய படும் உறுப்பினர்களால் அமைப்பாளர்கள் மாற்றம் செய்ய வேண்டும் என்பது...

ஆரம்பம் முதல் பிரச்சினை என்பது இண்று வரைக்கும் KP என்பவராலும் அவரினால் இயக்கப்படும் சிலராலும் நடக்கிறது... அவைகளை அடையாளம் கண்டு கொள்வது மட்டுமே பிரசினைக்கான தீர்வு...

KP யுடன் இணக்கமாக இருப்பவர்களை கூட துரோகிகள் பட்டியலில் இட முடியாது... KP திரித்த சில பல கதைகள் அப்படி இருக்கும் போது பலியானவர்கள் அவர்கள்... அவர்களையும் மீட்டு எடுக்க முடிந்தால் வெற்றியே...

மாட்டை வைக்கொல் இருக்கும் இடம் வரைக்கும் தான் கூட்டி போக முடியும் சாபிடிவதும் சாப்பிடாததும் மாட்டை பொறுத்தது...

Edited by தயா

பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டது தமிழ் நெற் ஆசிரிய குழுமத்தின் வன்மமும் வக்கிரமும்.

ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மேலும் மோசமான குழப்ப நிலை உருவாகியுள்ளது.

ஒரு சிறந்த தீர்மானத்தை எட்டுவதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் என்ற என்ற திடமான நம்பிக்கையில் இன்போ தமிழ் குழுமம் தமிழ் நெற் ஆசிரியர் பீடத்திடம் உரிமையோடு வேண்டுவது:

தமிழ் ஊடகத்துறை என்றும் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும் அழிவுபூர்வமானதாக இருக்கக் கூடாது! ஆனால் தமிழ் நெற் …..?

* நாடு கடந்த தமிழீழ அரசமைப்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள் மீது தொடர்ச்சியாக சேறடிக்கும் வேலை ஒன்றையே தனது தொழிலாக அது மேற்கொண்டு விட்டது போல் தெரிகிறது. ஆனால் ஒரு வித்தியாசம் அவர்களை இன்னமும் தமிழினத் துரோகிகள் என அழைக்காத குறை ஒன்றுதான் பாக்கி.

தொடக்கத்தில் அது ஒரு வயதான பாட்டியின் புரிந்து கொள்ள முடியாத தொண தொணப்புப் போன்று வட்டுக் கோட்டைத் தீர்மானங்களின் மீள் வாக்கெடுப்பின் சிறப்புகளை உயர்வாகவும் நாடு கடந்த தமிழீழ அரசின் தேவையைக் குறைவாகவும் மதிப்பிட்டும் இருந்தது.

ஆனால் புலம் பெயர் தமிழரிடையே அதன் பிரச்சாரத்துக்கு உரிய வரவேற்புக் கிடைக்காத காரலத்தால் நாடு கடந்த அரசு ஒரு குறுகிய 45 பாகை அரசியல் என்றும் சர்வதேச முதலாளித்துவங்களின் கைப் பொம்மை எனவும் பரிகசித்தது. இவை எல்லாம் எதிர்பார்த்த பலன்கள் தராத கையறு நிலையில் அது தனது விசமத்தனமான பிரச்சாரத்தை முடிவின்றித் தொடருகிறது. இந்த ஆசிரியர் பீடத்தின் அதிமேதாவிலாச சிந்தனையில் சிக்குண்டிருக்கும் சில அறிவிஜீவிகள் தாமே தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் புதிய தலைமை என்ற வறட்டுச் சிந்தனாவாதத்தில் மூழ்கித்தவிக்கின்றனர்.

* இந்த மேதாவித்தன முட்டாள்களின் தவறான சிந்தனைப் போக்கை பின்பற்றும் புலிகளின் சில அதிகார பூர்வ ஊடகங்களும் தொடர்ச்சியாக தமிழ் நெற் இணையத்தளத்தின் மதியுரைஞர் என தன்னைத்தானே எண்ணிக்கொள்ளும் மாய மனிதரின் வழிகாட்டலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை அவரின் உயர்ந்த தியாகத்தை விலைபேசத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியே சங்கதி உட்பட சில பிழைப்புவாத ஊடங்களில் நாடுகடந்த அரசு சார்ந்தும் அதன் செயற்குழுவின் அறிக்கைகள் செயற்பாடுகள் சார்ந்தும் வெளிவந்த வக்கிரமான அறிக்கைகளும் வசைபாடல்களுமாகும். இதைத்தான் எனது மூதாதையர் சொல்வார்கள் பிள்ளியையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயலென்று….

உலகின் புகழ் பெற்ற பிரபலங்களும் கல்விமான்களும் ஆலோசனைக் குழுவில் இணைந்து விபரமாக விளக்கமாக ஆராய்ந்து நாடு கடந்த தமிழீழ அரசை விதந்து உரை செய்தமையானது ஒரு உலக அதிசயத்தையே ஏற்படுத்தி விட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசின் சாத்தியப்பாடும் அதற்கு உலக அளவில் கிடைக்கப் பெற்ற வரவேற்பும் கொழும்பு மற்றும் புது டில்லி அரசுகளை கடுமையாக எதிர்க்க வைத்துள்ளன. இதுவே தமிழ் மக்கள் தமது கரங்களில் எடுத்துக் கொண்டுள்ள புதிய ஆயுதத்தின் வலுவையும் அரசியல் சாத்தியப் பாட்டின் கனதியையும் உறுதிப்படுத்தும் ஆதாரமாக உள்ளது.

இலங்கை இந்திய அரசுகள் உடனடியாக ஏதாயினும் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டன. அதனால் அவர்களின் பயங்களின் வெளிப்பாடு ஊடகங்களை நிறைக்கத் தொடங்கின. இத்தகைய திடீர் திருப்பங்கள் தமது ஆசைகளுக்கு எதிராக அமைவதை தமிழ் நெற் போன்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே வேளையில் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற் பாட்டாளர்களுக்கு எதிராக பொது மக்கள் கருத்தைத் திருப்பவும் இவர்களால் முடியவில்லை.

* எப்படியிருப்பினும் தமிழ் நெற் ஆசிரிய குழுவின் கல்வித் திறனையும் நிபுணத்துவத்தையும் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

எனவே தான் அவர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் உள்ளங்களிலும் மிகப் பெரிதாக உள்ளது. தமிழ் நெற் இந்த உண்மையை உணர்ந்து எமக்கிடையே உள்ள கருத்து வேறு பாடுகளையும் முரண் பாடுகளையும் பரஸ்பரமாக தீர்ப்பது அவசரமும் அவசியமும் என ஏற்று தமிழீழத்தின் நலன் ஒன்றையே கருத்தாகக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயற்பட வேண்டும் என்பதே எமது பெரு விருப்பாக உள்ளது.

* நாடு கடந்த தமிழீழ அரசை தாம் தொடக்க முதலே ஆதரித்ததாகவும் ஆனால் சில காரணங்களால் முடியாது எனவும் தமிழ் நெற் கூறுகிறது. எவருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

அது இப்போது கூறும் காரணம் தேர்தல் முறை சரியில்லை என்பதாகும்.

ஆனால் என்ன குறை?

ஏன் கண்டிக்கிறது?

குறிப்பான காரணம் என்ன?

அதன் இசைவுக்கு அமைவாக இல்லை என்பதற்காகவா?

அவ்வாறு இல்லை என்றால்…..?

* தமிழ் நெற் ஆசிரிய குழு நேரடியாகத் தேர்தலில் பங்கு பற்றி பொது மக்களின் ஆதரவுடன் தான் விரும்பிய படி செய்வதைச் செய்யலாமே?

இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த அல்லது அவர்களின் பரம்பரையைக் கொண்டுள்ளதை ஆதாரப் படுத்தும் எவரும் தேர்தலில் பங்கு பெற முடியும். தேர்தல் முறையானது வெளிப்படைத் தன்மையும் ஜனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் அமைவாக நடைபெறுகிறது.

* சிறீ லங்காவின் ஜனநாயக விழுமியங்களல்ல மாறாக மேற்கத்தைய சட்டப் பதங்களின் முழுமையான அர்த்தம் கொண்ட தேர்தலை நடத்தத் திடசங்கற்பம் கொண்ட தேர்தல் 2010 மே இரண்டாம் திகதி நடைபெறப்போகும் தேர்தலாகும். இதில் எவராவது தடுக்கப் பட்டாலோ அல்லது பாரபட்சத்துக்கு ஆளாக்கப் பட்டாலோ அவர் பகிரங்கமாக குற்ற வாளிகளை உலக சமூகத்தின் முன் நிறுத்தி நியாயம் பெற முடியும்.

எதனைச் செய்யவேண்டுமோ அதனைச் செய்யாது இந்தப் படித்த எழுதும் கூட்டம் வீணான சொற் போரில் ஈடுபட்டு ஏற்கனவே வரலாறு காணாத வகையில் புண்பட்டு நொந்து போயிருக்கும் மக்களை மேலும்; குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

தனது வலுவிழந்து காணும் வாதப் போரை நியாயப் படுத்த ஐ.நா. சீனா போன்ற சர்வ தேசசக்திகளைப் பற்றி நிறையக் கூறி வருகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு முற்றிலும் ஈழத் தமிழரையும் அவர்களின் விடுதலை தொடர்பானதுமான விடையமாகும்.

நிச்சயமாக எமக்கு மற்றவர்களின் ஆதரவு தேவையானது.

பிச்சை எடுப்பவனுக்கு வேறு தெரிவு கிடையாது.

ஆயினும் நினைவில் இருத்திக் கொள்ளுங்கள்.

* இது முற்றிலும் எமது விடையம் அல்லாது வேறு எவருடையதும் அல்ல.

* எமக்கு தவறான வழிகாட்டலைச் செய்யவோ நல்லன அல்லாதன செய்யவோ வேறு எவருக்கும் உரிமை கிடையாது.

* இது எம்மை எதிர்க்கும் எம்மவருக்கும் வெளியாருக்கும் பொருந்தும் விடையமாகும்.

* இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கும் எவருக்கும் எம்மோடு சேர்ந்து பங்காற்ற உரிமை இருக்கும்.

எவராலும் விளங்கிக் கொள்ள முடியாத வாதம் ஒன்று முன்வைக்கப் பட்டுள்ளது.

அது இப்படியாக உள்ளது.

* ' ஈழ மக்களுக்கு இரு தெரிவுகள் உள்ளன. ஒன்றில் உலகெங்கிலும் அரசுகளுக்கு எதிராகப் போராடும் ஒடுக்கப் பட்ட மக்களுடன் கரம் கோப்பது, அல்லது ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் முதலாளித்துவ குடியேற்ற வாதத்துக்குள் பங்காளி முறையில் தமிழீழத்தின் தேசிய நலன்களை பெறுவது அல்லது இரண்டு முறைகளையும் கடைப்பிடித்து பூகோள இயங்கியலில் இருந்து வழிகாட்டலைப் பெறுவது." பட்டவர்த்தனமான இத்தகைய பார்வையானது கள நிலைகள் பற்றிய மிகவும் இலகு படுத்தப்பட்டதும் அர்த்தமற்றதுமான ஒன்றாகவே இருக்கிறது.

இதுபோன்றே தொடர்பற்ற பல வாதங்கள் மூலம் வாசகரைக் குளப்பத்தில் ஆழ்த்தி முடிவில்லாத மயக்க நிலைக்குக் கொண்டு செல்வதை ஒருவர் அவதானிக்க முடியும்.

அவர்களின் வாதங்களைப் படிக்கும் எவரும் நாடு கடந்த தமிழீழம் என்பது அவர்களின் கருத்தாக்கத்தில் இருந்து உருவாகவில்லை என்பதால் அது உருவாகாது போவதைக் காண விரும்புகின்றனரோ என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது உள்ளது.

இந்நிலையானது

* யூலிஸ் சீசரின் மரணச் சடங்கின்போது முற்ரிக் அந்தனி ஆற்றிய உரையின் புகழ் பெற்ற தொடக்க வரிகளை நினைவு படுத்துகிறது.

அவன் சொன்னான்,

* 'நான் சீசரை நல்லடக்கம் செய்ய வந்தேனேயன்றிச் சீசரின் புகழ் பாட வரவில்லை" என்று. ஆனால் அவனது பேச்சு நிறைவுற்ற போது அவன் நேர்மாறான பலனையே ஏற்படுத்தினான். ஓன்று பட்டால் அனைவரும் வாழ்வோம் அன்றேல் பிரிந்தால் அனைவரும் மாழ்வோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் ஏற்கனவே எமது உறவுகளின் எண்ணற்ற சடலங்களைக் கண்ட பின்னரும் ஒரு இனமாக ஒன்றுபட வேண்டிய அறிவை படிக்க முடியாது தவிக்கிறோம்.

* நிச்சயமாக தமிழ் நெற் ஆசிரிய குழுவின் அறிவாற்றல் இந்த பொன் மொழி புகட்டும் பாடத்தைப் புரிந்து கை யோடு கை சேர்த்து ஆக்க பூர்வமாக உழைக்க முன்வர வேண்டும்.

இன்போ தமிழ் குழுமம்

கடந்த வருடம் மேமாதம் தாயகத்தில் நிகழ்தேறிய பேரழிவின் பின்னர் புலத்துவாழ் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்கள் புதியதோர் பரிணாமத்தில் பிரவேசிக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவ்வாறான மாற்றமானது தமிழீழ தேசிய தலைமையின் விருப்புகளுக்கு அமைய – அவரின் வழிகாட்டலுக்கு அமையவே – நிகழ்த்தப்பட்டது. அதன்படி புலத்து வாழ் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக கட்டமைப்புக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு படிமுறையாக, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து நிறைவுபெற்று, இன்னும் சில நாடுகளில் நடைபெறவும் இருக்கின்றன. இந்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற புதிய முயற்சியை கண்டுகொண்ட சிங்கள பேரினவாத அரச இயந்திரம் அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளதொடங்கிவிட்டது.

இவ்வாறான சிறிலங்கா அரசின் முயற்சிக்கு துணைசெய்வது போன்று, முன்னர் தமிழ் தேசியத்திற்காக பயணித்த ஊடகங்களும் கைகோர்த்திருப்பதுதான் வேதனையானது. இன்று தமிழ்நெற் இணையதளத்தில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில், நாடு கடந்த தமிழீ அரசு தொடர்பான பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து – நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான – தமது நிலைப்பாடு என்ன என்பதை அந்த இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் மீதும் அதனை நெறிப்படுத்துகின்ற திரு. உருத்திரகுமார் அவர்கள் மீதும் மதிப்பு வைத்து புலத்துவாழ் தமிழ்மக்கள் முழு வீச்சுடனும் எழுச்சியுடனும் இன்று தமது அரசியல் – ஜனநாயக கட்டமைப்பை கட்டியெழுப்புவதில் முனைப்பு பெற்றிருக்கின்ற வேளையில் -

தமிழ்நெற் போன்ற இணையங்கள் இவ்வாறு சேறு பூசும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பது ஏன் என்ற வினாவுக்கு பதில்தேடும் காலகட்டம் நெருங்கியுள்ளதாகவே கருதுகின்றோம்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற எண்ணக்கருவானது தாயகத்திலும் புலத்திலும் இழந்துபோன உரிமைக்குரலை நிலைநிறுத்துவதற்கான கடைசி ஆயுதமாகவே தற்போதைய நிலையில் இருக்கின்றது.

இதன் உருவாக்கமானது தனியே திரு.உருத்திரகுமாரன் அவர்களால் மட்டும் பிரசவிக்கப்பட்டதல்ல. அதன் படிநிலை உருவாக்கமானது 1985 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே முன்னிறுத்தப்பட்டதாகும். அவ்வேளையில் தாயகத்தில் நடைமுறையிலிருந்த நிழல் அரசும் அதனை நிலைநிறுத்திய போராட்டமும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேவையை அவசியமற்றதாக்கியிருந்தது.

ஆனால், இன்றைய நிலையில் அது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.நாடு கடந்த தமிழீழ அரசு என்பது காலத்தின் தேவையாக வளர்ந்திருக்கிறது.

அதன் தேவை என்ன?

அதன் உருவாக்கம் எவ்வாறானது?

அதன் கட்டமைப்பு எத்தகையது?

அதற்குரிய ஆலோசனைகள் என்ன?

அது பயணிக்கவுள்ள பாதை எது?

அதில் பங்கெடுக்கப்போகின்றவர்கள் யாவர்?

- போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளுடனும் திரு. உருத்திரகுமார் அவர்களும் அவருடன் கூடிய தேசிய பற்றாளர்களும் பேசி இந்த நாடு கடந்த தமிழிழ அரசு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு விதையிட்டு வளர்த்தெடுக்கப்படவேண்டிய மரத்தை முளையிலேயே கருவறுக்க துணைபோகும் தமிழ்நெற் போன்ற இணையங்களும் அதன் ஊடாக தமிழினத்தை தவறான பாதையில் இட்டுச்செல்ல துடிப்பவர்களையும் தட்டிக்கேட்க வேண்டிய நிலையில் ஈழத்தமிழினம் இன்றுள்ளது.

உள்ளக கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு கண்டு அதன் ஊடாக நாடு கடந்த தமிழீழ அரசை பலமாக்குவதை விடுத்து, எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது போல சிறிய சிறிய விடயங்களை சுட்டிக்காட்டி பிழைபிடிக்க முற்படுவது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே சாபக்கேடானது.

ஒன்றுபட்ட புலம்பெயர்வாழ் தமிழ்மக்களின் ஒருமைப்பாட்டினால் பிரசவிக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசு கட்டமைப்பு மீது அவ்வப்போது சேறடிக்கும் பிரசாரங்களை இந்த இணையங்கள் மேற்கொண்டுவந்தபோதும், அவர்கள் திருத்திக்கொள்வார்கள் என பல மாதங்களாக எதிர்பார்த்து அதற்கான விமர்சனங்களை முன்வைக்காது இருந்தோம்.

ஆனால் அவ்வாறு மௌனமாக நாங்கள் இருப்பதனை தமக்குரிய சம்மதமாகவும் – தங்களது நடவடிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் – கருதி இன்னும் பல கேடுகளை விளைவிக்கும் அபாயம் தற்போது எழுந்துள்ளதை தெளிவாக அவதானிக்ககூடியதாகவுள்ளது.

தாயகவிடுதலை போராட்டத்தில் சிந்தப்பட்ட குருதியும் அதற்கான அர்ப்பணிப்புகளும் விலைமதிக்கமுடியாதவை. அதனை விலைபேச முற்படும் சக்திகளை வழிப்படுத்தாமல் மௌனமாகவிருப்பது தமிழீழ தேசிய தலைமையின் வழிகாட்டலில் இதுவரைகாலமும் செயற்பட்டதற்கே அர்த்தமற்றதாக்கிவிடும்.

எனவே அனைத்து தமிழர்களும் – குறிப்பாக புலத்துவாழ் ஈழத்தமிழர்கள் – உடனடியாக செயற்படவேண்டியது அத்தியாவசியமானது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு, சேறு பூச முற்படும் தமிழ்நெற் போன்ற இணையதளங்களையும், அதன் ஊடாக ஊடக சண்டித்தனம் செய்யும் ”எமது தேசப்பற்றாளர்களையும்” கண்டித்து வழிப்படுத்த முன்வரவேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே ஆரம்பிப்போம்.

தமிழ் நெற் ஒரு ஊடகம், அது தன் கருத்தை முன்வைத்து, வருகின்றது.

அந்த ஊடகம் முன்வைக்கும் கருத்திற்கு, பதில் கருத்தை முன்வைப்பது ஏற்புடையதாக இருக்கும்.

தமிழ் நெற் தனது கருத்தை, தமிழிழ் முன்வைக்க முயற்சிக்கவேண்டும் என்பதே எனது கருத்து.

மே 19 இன் பின்பு ஏக பிரதிநிதிகளாக, தலைவனாக யாரையும் ஏற்கும் நிலையில் செயற்பாடுகள், அமையவில்லை.

Edited by kalaivani

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.