Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு கே.பி. வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது – ரொஹான்

Featured Replies

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு கே.பி. வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது – ரொஹான்

25 May 10 01:40 am (BST)

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியதென சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இன ஒற்றுமையை ஏற்படுத்துவதில் குமரன் பத்மநாதனின் பங்களிப்பு முக்கியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குமரன் பத்மநாதன் தற்போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையிலான உறவுப் பாலத்தை வலுப்படுத்த குமரன் பத்மநாதன் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட மக்களை குமரன் பத்மநாதன் சந்தித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பல்வேறு பட்ட இன சமூகங்களுக்கு இடையில் ஒன்றுமையை ஏற்படுத்தும் முனைப்புக்களில் குமரன் பத்மநாதன் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும், நாட்டின் நன்மைக்காக பாடுபடும் ஒரு நபரை ஏன் சித்திரவதை செய்ய வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24843&cat=1

http://expressbuzz.com/world/kps-contribution-to-lankan-peace-immense/176067.html

http://www.colombopage.com/archive_10A/May24_1274716655CH.php

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த செய்தி நாடுகடந்த அரசை பலவீனபடுதுவதட்கும் புலம் பெயர் மக்களை பிளவுபட வைத்து ஈழ போராட்டத்தை சிதைக்க சிங்களத்தின் சூழ்ச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்திருங்கள் நண்பர்களே,

விரைவில் அவராகவே வெளிவந்து தான் செய்துகொண்டிருக்கும் இலங்கைமாதாவுக்கான சேவைபற்றி விளக்குவார்.

அவரை சந்தித்த மக்களும் விரைவில் சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே.பி நல்லவரா கெட்டவரா என்ற விடயங்களை இன்றுடன் மூட்டைகட்டிவைத்துவிட்டு முகாமுக்குள் இன்னும்இருக்கும் மக்களைபற்றியும்,சிறைக்கொடுமைக்குள் ரத்தம்சிந்திக்கொண்டிருக்கும் போராளிகள் பற்றியும் கவனம் எடுப்பதுதான் நல்லது.

புறம்போக்கு ரோகானுக்கெல்லாம் ஒரு நேரம்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி அரச உளவாளி? : உறுதிப்படுத்தும் ரோகான் குணவர்தன

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழ் சமூகத்திற்கும் ஏனைய சமூகங்களிற்கும் இடையேயான பாலமாக குமரன் பத்மநாதன் என்ற கே.பி தொழிற்படுவதாக சிங்கப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் “பயங்கவாத” ஆய்வு அமைப்பின் தலைவர் பேராசியர் ரோகான் குணரத்ன தெரிவித்துள்ளார். சமாதனத்திற்காக அளப்பரிய பங்களிப்பை அவர் செய்து வருகிறார் எனவும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நான்யங் தொழில் நுட்பப் பல்கலைகழகத்தில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் சர்வதேச அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான ஆய்வுமையம் என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைவரான ரோகான் குணவர்தன வன்னி இனப்படுகொலைகளின் போது மகிந்த அரசாங்கத்திற்குச் சார்பான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பிரதான பாத்திரம் வகித்தவர்.

கே.பி மலேசியாவிலிருந்து இலங்கை அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தனது பங்கு முதன்மையானது என சம்பவம் நடந்த காலகட்டத்தில் தெரிவித்தவர்.

நாடுகடந்த தமிழீழம் என்பது கே.பி உருவாக்கிய ஒன்றே என்பதும். பிரபாகரன் சரணடைவு தொடர்பில் முக்கிய பங்காற்றிய சர்வதேச ஆயுதக் கடத்தல்காரரான கே.பி இலங்கை அரச உளவாளி என்ற சந்தேகம் முன்னமே பலரால் எழுப்ப்பப்பட்டிருந்தது.

இலங்கை அரச படைகளால் கே.பி எப்போதுமே சித்திரவதை செய்யப்படவில்லை எனவும் எக்ஸ்பிரஸ்பஸ் என்ற செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச படைகளால் கே.பி எப்போதுமே சித்திரவதை செய்யப்படவில்லை எனவும் எக்ஸ்பிரஸ்பஸ் என்ற செய்திச் சேவைக்கு அவர் வழங்கிய தொலைபேசிச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளோடும், இனப்படுகொலைகளின் சூத்திரதாரிகளோடும், பாசிஸ்டுக்களோடும், போரின் பின்னர் வெளிப்படையாகவே இணைந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரில் கே.பியும் ஒருவர்.?

பின்னூட்டம் ஒன்று..... :D

இனியொரு இணையத்தில் உங்கள் தகவல்களும் கட்டுரைகளும் எனக்கு உள்ளேயும் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. நான் முன்பு புலிகள் இயக்கத்தின் போராளி. பல ஆண்டுகள் புலிகளில் வேலை செய்து வேறு நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டவன். பொட்டம்மான் தான் என்னை இங்கு அனுப்பியிருந்தார். உண்மையில் பொட்டம்மானோ பிரபாகரனோ முன்னெடுத்த போராட்டம் தவறான பாதை என்பது இப்போது எனக்குத் தெரிய வந்துள்ளது. காலம் கடந்த சுடலை ஞானம் என்று கூட நீங்கல் நினைக்கலாம். இணையத் தளங்களைப் பார்க்க வாய்ப்பாக உள்ள நாடு ஒன்றில் வாழ்வதால் பலதையும் அறிந்து கொள்ள முடிகிறதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கே.பி பல குற்றங்களுக்காக உலகம் முழுவதும் தேடப்படுபவர். ஆனால் ஆயுதங்களைக் கடத்துவதே அவரின் நோக்கம். விடுதலைக்காகத் தான் எல்லாம் செய்தவர். பிரபாகரன் இறந்து போனதை முதல் முதலில் ஒத்துக்கொண்டவர்.

இங்கிலாந்தில் வாழும் அம்பலவாணர், கனடா இந்திரன் பத்மநாதன், நெடியவன் சிவா போன்ற பல பேரை சந்தித்து சுவிசில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் கே.பி கலந்து கொண்டார். இங்கு இருக்கும் புலிகளின் பணத்தைக் கையாடியவர்கள் லிபிரியாவில் புலிகளின் கப்பல்களை கிரீஸ் நாட்டவருக்கு விற்று மேலதிகமாகவும் பணத்தைச் சுருட்டினார்கள். கே.பி இதற்கு எல்லாம் கணக்குக் கேட்ட போது தலைவர் வந்தால் தான் பணத்தைத் தருவோம் என கூற ஆரம்பித்தனர். தலைவர் வரமாட்டார் அவர் இறந்து விட்டார். என்று கே.பி கூறியதும், தலைவர் உயிரோடு தான் இருக்கிறார், நாம் பணத்திற்குக் கணக்குக் காட்ட மாட்டோம் எனவும் கூறினர்.

ஏற்கனவே இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட போராளிகளை சுவிசிற்கும் பல நாடுகளுக்கும் கே.பி அனுப்பி பணத்தை செலவு செய்திருந்தார். பணத்தை வைத்திருப்பதற்கு மட்டுமே தலைவர் இருக்கிறார் என்று நெடியவன் மற்றும் பல கதைகளைப் பரப்பினர்.

கூட்டம்பெரும் சண்டையில் முடிவடைந்தது. கே.பி மலேசியாவிற்கு அகதியாக வந்திருந்த புலிப் போராளிகளைப் பார்க்கச் செல்லும் வேளையில் பணத்தைப் பற்றிப் பேச நெடியவன் குழுவையும் அழைத்திருந்தார். அவர்கள் போகவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறைக்கு கே.பி யை காட்டிக் கொடுத்தனர். இந்தியா விசேட விமானத்தில் இலங்கைக்கு அவரைக் கொண்டு சென்றது. மறு நாளே இலங்கைக்கு வந்த இரண்டு இந்திய வைத்தியர்கள் நர்சில்ஸ் முறை மூலம் கேபி ஐ விசாரித்து உண்மைகளைப் பெற்றனர், அதன் பிறகு கே.பி இற்கு ஒவ்வொரு நாளும் போதை மருந்தை கொடுத்து அதற்கு அடிமையாக்கினர். இப்போது கே.பி போதைக்கு அடிமை. சுய நினைவில் இல்லை. அரசாங்கம் சொல்வதைச் செய்கிறார்.

சிங்கப்பூரி வசிக்கும் ரோகான் குணத்திலக என்ற பயங்கரவாதி தான் கே.பியை சித்திர வதை விசாரணைக்கு இந்தியாவோடு சேர்ந்து ஒழுங்கு செய்தவன்.

எல்லாமே தவறாகப் போய்விட்டது. இப்போது நாங்கள் புதிய பாதைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் புலிப் பினாமிகள் சுருட்டிய பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வீடுகளுக்கு முன்னால் போராட்டம் நடத்த வேண்டும். இப்படியாவது மக்கள் போரட்டம் தொடங்கட்டும். எம் மக்கள் விடுதலை பெறட்டும்

http://inioru.com/?p=13152

சிங்கள பயங்கரவாதி ரோஹான் குணவர்தன சிங்கப்பூரில் இருந்து கொண்டு இனப்படுகொளையாலருக்கு, போர்குற்றவாளிகளுக்கு ஆதாரவான பக்கச்சார்பான கருத்தை வெளியிட்டு வருவதை எமது புலம்பெயர் உறவுகளால், நாடு கடந்த அரசால் தடுக்க முடியாதா?

தமிழர் வாழும் சிங்கப்பூரில் இந்த சிங்கள பயங்கரவாதி இந்திய பயங்கரவாதிகளின் துணையுடன் சுதந்திரமாக இயங்குவது ஆச்சரியம். சிங்கப்பூரின் தலை சிறந்த பல்கலைக்கழகம் இனப்படுகொளையாலருக்கு, போர்குற்றவாளிகளுக்கு தளம் கொடுப்பதை தடுத்து நிறுத்த, பல்கலைக்கழகத்துக்கும், சிங்கபூர் அரசுக்கும் இந்த பயங்கரவாதியின் ஒருபக்கச்சார்பான கருத்துக்கான ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம்.

இனப்படுகொலையாளர், போற்குற்றவாளிகள் வெளிநாடுகளில் சுதந்திரமாக இயங்குவதை தடுக்க புலம் பெயர் ஈழத்தமிழர் செயலில் இறங்குவார்களா?

சிங்கள பயங்கரவாதி ரோஹான் குணவர்தன சிங்கப்பூரில் இருந்து கொண்டு இனப்படுகொளையாலருக்கு, போர்குற்றவாளிகளுக்கு ஆதாரவான பக்கச்சார்பான கருத்தை வெளியிட்டு வருவதை எமது புலம்பெயர் உறவுகளால், நாடு கடந்த அரசால் தடுக்க முடியாதா?

நாடு கடந்த அரசு என்னை ஐக்கிய அமெரிக்காவா ?? :D:D:D

  • தொடங்கியவர்

பின்னூட்டம் ஒன்று..... :D

இனியொரு இணையத்தில் உங்கள் தகவல்களும் கட்டுரைகளும் எனக்கு உள்ளேயும் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. நான் முன்பு புலிகள் இயக்கத்தின் போராளி. பல ஆண்டுகள் புலிகளில் வேலை செய்து வேறு நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டவன். பொட்டம்மான் தான் என்னை இங்கு அனுப்பியிருந்தார். உண்மையில் பொட்டம்மானோ பிரபாகரனோ முன்னெடுத்த போராட்டம் தவறான பாதை என்பது இப்போது எனக்குத் தெரிய வந்துள்ளது. காலம் கடந்த சுடலை ஞானம் என்று கூட நீங்கல் நினைக்கலாம். இணையத் தளங்களைப் பார்க்க வாய்ப்பாக உள்ள நாடு ஒன்றில் வாழ்வதால் பலதையும் அறிந்து கொள்ள முடிகிறதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கே.பி பல குற்றங்களுக்காக உலகம் முழுவதும் தேடப்படுபவர். ஆனால் ஆயுதங்களைக் கடத்துவதே அவரின் நோக்கம். விடுதலைக்காகத் தான் எல்லாம் செய்தவர். பிரபாகரன் இறந்து போனதை முதல் முதலில் ஒத்துக்கொண்டவர்.

இங்கிலாந்தில் வாழும் அம்பலவாணர், கனடா இந்திரன் பத்மநாதன், நெடியவன் சிவா போன்ற பல பேரை சந்தித்து சுவிசில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் கே.பி கலந்து கொண்டார். இங்கு இருக்கும் புலிகளின் பணத்தைக் கையாடியவர்கள் லிபிரியாவில் புலிகளின் கப்பல்களை கிரீஸ் நாட்டவருக்கு விற்று மேலதிகமாகவும் பணத்தைச் சுருட்டினார்கள். கே.பி இதற்கு எல்லாம் கணக்குக் கேட்ட போது தலைவர் வந்தால் தான் பணத்தைத் தருவோம் என கூற ஆரம்பித்தனர். தலைவர் வரமாட்டார் அவர் இறந்து விட்டார். என்று கே.பி கூறியதும், தலைவர் உயிரோடு தான் இருக்கிறார், நாம் பணத்திற்குக் கணக்குக் காட்ட மாட்டோம் எனவும் கூறினர்.

ஏற்கனவே இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட போராளிகளை சுவிசிற்கும் பல நாடுகளுக்கும் கே.பி அனுப்பி பணத்தை செலவு செய்திருந்தார். பணத்தை வைத்திருப்பதற்கு மட்டுமே தலைவர் இருக்கிறார் என்று நெடியவன் மற்றும் பல கதைகளைப் பரப்பினர்.

கூட்டம்பெரும் சண்டையில் முடிவடைந்தது. கே.பி மலேசியாவிற்கு அகதியாக வந்திருந்த புலிப் போராளிகளைப் பார்க்கச் செல்லும் வேளையில் பணத்தைப் பற்றிப் பேச நெடியவன் குழுவையும் அழைத்திருந்தார். அவர்கள் போகவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறைக்கு கே.பி யை காட்டிக் கொடுத்தனர். இந்தியா விசேட விமானத்தில் இலங்கைக்கு அவரைக் கொண்டு சென்றது. மறு நாளே இலங்கைக்கு வந்த இரண்டு இந்திய வைத்தியர்கள் நர்சில்ஸ் முறை மூலம் கேபி ஐ விசாரித்து உண்மைகளைப் பெற்றனர், அதன் பிறகு கே.பி இற்கு ஒவ்வொரு நாளும் போதை மருந்தை கொடுத்து அதற்கு அடிமையாக்கினர். இப்போது கே.பி போதைக்கு அடிமை. சுய நினைவில் இல்லை. அரசாங்கம் சொல்வதைச் செய்கிறார்.

சிங்கப்பூரி வசிக்கும் ரோகான் குணத்திலக என்ற பயங்கரவாதி தான் கே.பியை சித்திர வதை விசாரணைக்கு இந்தியாவோடு சேர்ந்து ஒழுங்கு செய்தவன்.

எல்லாமே தவறாகப் போய்விட்டது. இப்போது நாங்கள் புதிய பாதைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கும் ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போர்க் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் புலிப் பினாமிகள் சுருட்டிய பணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் வீடுகளுக்கு முன்னால் போராட்டம் நடத்த வேண்டும். இப்படியாவது மக்கள் போரட்டம் தொடங்கட்டும். எம் மக்கள் விடுதலை பெறட்டும்

http://inioru.com/?p=13152

நான் குறிப்பிட்ட விடயங்கள் மிகவும் பொய் என்பதுக்கு என்னிடம் காரணங்களும் ஆதாரங்களும் இருக்கின்றன...

அனேகமாக மதிவதனன்ஜீ தான் புலநாய்வு புலி எனும் பெயரில் எழுதிய ஒரு பின்னூட்டம் போலதான் இருக்கிறது...! இதை ஒருவேளை inioru.com உறுப்பினர்களே எழுதியும் இருக்கலாம்...

inioru.com இன் வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போண்ற புலி எதிர்ப்பு வாதம் பிரபாகரன் எதிர்ப்பு வாதம் வெளிப்பட இன்னும் நீண்ட காலம் பொறுக்க வேண்டியது இல்லை போல...

KP யை நியாயப்படுத்த எப்படி எல்லாம் எழுத வேண்டி இருக்கிறது... ஆனால் KP யோடு வேலை செய்தவர்கள் யாரும் இப்போ KP தமிழர்களின் நலனில் அக்றையாக இருப்பதாக சொல்வது கிடையாதே இதை inioru.com அறியவில்லையோ இல்லை சொல்ல விரும்பவில்லையோ...??

Edited by தயா

  • தொடங்கியவர்

இந்த செய்தி நாடுகடந்த அரசை பலவீனபடுதுவதட்கும் புலம் பெயர் மக்களை பிளவுபட வைத்து ஈழ போராட்டத்தை சிதைக்க சிங்களத்தின் சூழ்ச்சி

KP க்கும் நாடு கடந்த அரசாங்கத்துக்கும் என்ன சம்பந்தம்...?? அதை உருவாக்க நினைத்து பரிந்துரை செய்தவரும், உருத்தின குமார் அண்ணை தானே....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.