Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, சாகும் வரை இருக்கும் இந்த வலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்துறை என்று எல்லாவற்றிலும் தமிழ் இருந்தது.

கால்படை, கடற்படை, விமானப் படையுடன் தமிழர்கள் ஆண்ட அந்த மண்ணை நயவஞ்சக சகுனி காந்தி தேசம், பாகிஸ்தான், சீனா, மேற்கு நாடுகள் துணையுடன் சிங்களதேசம் ஈவு இரக்கமின்றி அழித்துக் கொண்டிருந்தது. மரங்களைத் தறித்தால் குற்றம் என்று சொல்லும் உலக நாடுகள் இங்கே குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட அனைவரும் கொன்று அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தன. வயது வேறுபாடின்றி சித்திரவதை செய்யப்பட்டு அங்கு தமிழர்கள் இறக்க, பெண்கள் சிங்களப் படைகளுக்கு இரையாகிப் போக அதைத் தடுக்க புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழக தமிழ் உணர்வாளர்களும் நியூயோக், சிட்னி, இலண்டன், பாரிஸ், சூரிச், தமிழகம் போன்ற இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என நடாத்தியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. முத்துக்குமார் தொடங்கி முருகதாஸ் வரை தங்களது உடலுக்கு தீ மூட்டி அழித்துக்காட்டியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. சரணடையுங்கள் என்று தமிழர் தரப்பை மட்டும் உலகம் கேட்டது. கபட நாடகதாரி கருணாநிதியோ, சோனியாவின் மடிப்பிச்சைக்காக 2 மணித்தியாலம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று தமிழகத்து மக்களின் எழுச்சியை திசை திருப்ப முயன்றார். கோமாளிகள் என்று சரத் பொன்சேகாவினால் பட்டம் பெற்றவர்களும் தேர்தல் வர ஈழத்துப்பிரச்சனையை தங்களின் அரசியல் இலாபத்துக்குப் பயன் படுத்தினார்கள். இந்நிலையில் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதி சிங்களம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சரணடைந்த தமிழர்கள் சிறைகளில் சித்திரவதைகள் அனுபவித்து இறந்து கொண்டிருக்க , தமிழர்களுக்கு பொலிப் புத்திமதி சொன்ன நாடுகள் இப்பொழுது இறந்த வீட்டில் என்ன பிடுங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 30 வருடங்களாக சிங்களம் தமிழனை அழிக்க உயிர்தப்பி ஓடி ஒளிந்து வெளினாடுகளுக்கு தப்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாத அரசின் நடவடிக்கைகளினால் பல தமிழர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், உறவுகள் எல்லாம் வெவ்வேறு நாடுகளிலும் சிறைகளிலும் பிரிந்து சிதறிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, எங்கு இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி, தொழில், காதல்,கல்யாணம்,பழக்க வழக்கம், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாதம் தான் தீர்மானித்தது. ஆனாலும் எங்களுக்கு ஒரு நிலம் இருக்கிறது என்று நம்பிக்கையோடு வாழ்ந்தோம். ஆனால் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதியுடன் சிறுசு சிறுசாகக் கட்டிய அந்தக் கோட்டை, கொத்தணிக்குண்டுகளினாலும், நச்சு வாயுக்களிலும் அழிக்கப்பட்டு விட்டது.

சென்ற வருடம் மே 18ம் திகதிக்குப் பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களில் பலர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். அந்த சம்பவங்களை மறக்க முயற்சித்தாலும் முடியாமல் தவிக்கிறார்கள். திரைப்படம்,சர்வதேச துடுப்பாட்டம், சுற்றுலா என்று வேறு விடயங்களில் ஆர்வம் காட்டி இந்த மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சித்தாலும் இடை இடையே ஊடகங்களில் வரும் செய்திகள், தெரிந்தவர்களுடன் கதைக்கும் போதும் மீண்டும் தவிக்கிறார்கள். நித்திரை கொள்ளும் போதும் இடையிடையே அந்த சம்பவங்கள் நினைவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கின்றன. இந்தத்தலைமுறையில் உள்ள ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, அவர்கள் சாகும் வரை இந்த வலி வந்து கொண்டே போகும்.

சென்ற கிழமை 18ம் திகதி சிட்னி மாட்டின் பிளேசில் நடைபெற்ற முதலாவது ஆண்டு கோர இன அழிப்பு கவனயீர்ப்பில் கலந்து கொண்டேன். பயங்கரக் குளிர், தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற அந்நிகழ்வில் கறுப்பு உடை அணிந்து பெரும்பாலும் எல்லாக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட தமிழர்கள் அங்கும் வந்திருந்தார்கள். பச்சைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் அங்கு உரையாற்றினார்கள். கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நின்ற மக்கள் தமிழ் மொழிக்காக இறந்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செய்தார்கள். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், தாயகத்துக்கு உதவுவதன் மூலம் இந்த மன அழுத்தத்தை ஒரளவு குறைக்கலாம்.

http://kanthappu.blogspot.com/2010/05/blog-post.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்ஸ் இதை அடிக்கடி பிரசுரிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கந்தப்பு! இப்பதான் இன்னொரு பக்கத்தில் என் மனக் குமுறலை கவிதையில்? கொஞ்சம் இறக்கி விட்டு இங்கு வந்தேன்! என்னதான் வெளியே சிரித்து திரிந்தாலும் நெஞ்சு வேகுது! :D:D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மிகவும் வலிக்குறது . மறக்க முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக துடுப்பெடுத்தாட்டம் விளையாடாமல் இருந்தேன். மீண்டும் விளையாடுகின்றேன். ஆனால் வலி மாறவில்லை.

நம்பிக்கை மட்டும் தளரவில்லை. எங்கள் வாழ்விலும் ஒளி வீசும் வசந்தம் வரும். என் தேசத்து வீர உறவுகளுக்காக வன்னி மண்ணில் வணக்கம் செலுத்தும் காலம் மிக விரைவில் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்ஸ் இதை அடிக்கடி பிரசுரிக்கவும்.

உங்களின் கருத்துக்கு நன்றிகள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கந்தப்பு! இப்பதான் இன்னொரு பக்கத்தில் என் மனக் குமுறலை கவிதையில்? கொஞ்சம் இறக்கி விட்டு இங்கு வந்தேன்! என்னதான் வெளியே சிரித்து திரிந்தாலும் நெஞ்சு வேகுது! :rolleyes::o

இப்படி நடக்கும் என்று நினைத்தோமா?. இந்த 30 வருடங்களாக எத்தனை அவமானங்கள், சோதனைகள், வேதனைகள் என்பவற்றுக்குள் மத்தியில் எமக்கு ஒரு நிலம் இருக்கிறது என்று மகிழ்வுடன் இருந்தோம். ஆனால் இனிமேல்???

சென்ற வாரம் வேலையில் நாங்கள் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான கூட்டம் நடந்ததது. அந்த வேலைத்திட்டத்தால் சில பிராணிகள் (dormice - ஒரு வகை எலி, slow worm - மண் புளு இனம், 4 grace snake - பாம்பு இனம்) வாழ்விடங்களை இழக்க வேண்டி வரும். அப்பிராணிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கோ அல்லது ஒரு புதிய நிலம் வாங்கி அப்பிராணிகளை பராமரிப்பதற்கோ முடிவேடுதுள்ளர்கள். பாவப்பட்ட எம் இனத்தை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மிகவும் வலிக்குறது . மறக்க முடியவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக துடுப்பெடுத்தாட்டம் விளையாடாமல் இருந்தேன். மீண்டும் விளையாடுகின்றேன். ஆனால் வலி மாறவில்லை.

நம்பிக்கை மட்டும் தளரவில்லை. எங்கள் வாழ்விலும் ஒளி வீசும் வசந்தம் வரும். என் தேசத்து வீர உறவுகளுக்காக வன்னி மண்ணில் வணக்கம் செலுத்தும் காலம் மிக விரைவில் வரும்.

எனக்கு இருந்த நம்பிக்கையும் போய் விட்டது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வாரம் வேலையில் நாங்கள் செய்யும் வேலைத்திட்டம் தொடர்பான கூட்டம் நடந்ததது. அந்த வேலைத்திட்டத்தால் சில பிராணிகள் (dormice - ஒரு வகை எலி, slow worm - மண் புளு இனம், 4 grace snake - பாம்பு இனம்) வாழ்விடங்களை இழக்க வேண்டி வரும். அப்பிராணிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கோ அல்லது ஒரு புதிய நிலம் வாங்கி அப்பிராணிகளை பராமரிப்பதற்கோ முடிவேடுதுள்ளர்கள். பாவப்பட்ட எம் இனத்தை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. :(

மரங்களைத் தறித்தால் குற்றம் என்று சொல்கிறது மேற்குலம். சிட்னியில் ஒருவர் பூனையினைத் துன்புறுத்தியதாக தண்டனை பெற்றார் என்று செய்தி சில மாதங்களுக்கு முன்னால் அவுஸ்திரெலியா ஊடகங்களில் வந்தது. ஆனால் ஈழத்தமிழனாக பிறந்ததினால்.....

ஈழத்தமிழனாகப் பிறப்பது குற்றமா?

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2010ல் இப்பதிவினை இங்கு பதிந்தேன். யாழ் இணையம் உட்பட பல ஊடகங்களில் செய்திகள் வாசிக்கும் போதும், தெரிந்தவர்களுடன் கதைக்கும் போதும் இந்த வலி அல்லது கவலை வந்து வந்து போகின்றது. இப்பொழுது 3 வருடங்களாகிவிட்டது. இந்த வலி அல்லது கவலை எப்பொழுது குறையும்?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்டையில் முள்ளுடன்

எத்தனை காலம் வாழப்போகிறோம்?

  • 4 weeks later...

ஆம் அண்ணா, சரித்திரக்கதைகள் பலவற்றில் வாசித்துள்ளேன். அவ்வளவு தேசத்தையும் ஆண்ட எம் இனத்திற்கு இன்று இருக்க ஒரு இடம் இல்லை. :( :(

இவை அன்றைய பெயரில் உள்ள சோழர் ஆண்ட இடங்கள். இதில் மாலைதீவை காணவில்லை, எனினும் மாலை தீவையும் சோழர்கள் ஆண்டார்கள்.

535116_308927339175364_115109758557124_710109_297655024_n.jpg

- மூலம்: google -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.